Small Point

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  334
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Small Point last won the day on June 5 2011

Small Point had the most liked content!

Community Reputation

32 Neutral

About Small Point

 • Rank
  உறுப்பினர்
 • Birthday புதன் 06 டிசம்பர் 1989

Profile Information

 • Gender
  Male
 • Location
  யாதும் ஊரே
 1. பலே கில் லாடிதான் இந்த புல்லர்கட்டில் ரித்திஷ்குமார். தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் அக்கம்பக்கம் குடியிருப்பவர்களுக்கு தெரியாமல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான் மாபாவி. Mother and daughters were strangled View Photo Press Association - Police outside a flat in Chadwell Heath where the bodies of a mother and her two daughters were found A mother and her twin daughters died from strangulation before their father was found hanged near a reservoir, post-mortem examinations have found. Twins Niya and Neha Rethishkumar, 13, were found dead at a house in Grove Road in Chadwell Heath, east London, on Tuesday afternoon, with their mother Shighi Kotuvala, a 37-year-old social worker. The girls' father, Pullarkattil Rethish Kumar, 44, was found hanged near a reservoir in Forest Road, Walthamstow, on Wednesday morning. Post-mortem examinations at East Ham mortuary yesterday found that the females - who police had said were found with no visible signs of injuries - were strangled to death. The post-mortem on Mr Kumar confirmed death by hanging. Officers first went to the property on Monday evening after concerns were raised about the welfare of those living there, but they did not enter because there was no response or any sign of disturbance. Police finally forced their way in at 1.10pm on Tuesday, when they found the bodies of Ms Kotuvala and her two children. The matter was referred to the Independent Police Complaints Commission and the Met's directorate of professional standards is reviewing the police response. Scotland Yard said inquiries continue to trace any next of kin. https://uk.news.yahoo.com/mother-daughters-were-strangled-081523969.html#zsxn47I
 2. இப்படியான நிலைமையில் என்னுடைய காலஞ்சென்ற அப்பா, அப்பப்பா சொன்ன நன்னெறிகளை மற்றும் பழமொழிகளை நினைத்து ஆறுதலடைவேன். எல்லோரும் திருக்குறளை ஆதாரம் காட்டி கதைப்பினம். ஆனால் எல்லாக் குறள்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இதற்காக வள்ளுவரை குறை சொல்ல இங்கு நான் வரவில்லை. அந்த தத்துவ ஞானி, தான் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ அக்கறையோடு சொல்லப்பட்ட நல்ல அறிவுரைகள் அவை. எனக்கு உடன்பாடு இல்லாத குறள்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு குறள்களை எழுதுகிறேன். ஒன்று "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்!" இது ரோஷமுள்ள ஒரு மானஸ்தனுக்கு வள்ளுவர் சொல்லுறார் உன்னுடைய மானத்துக்கு பங்கம் வந்தால் "கவரிமானை" போல் செத்துப் போடா. இன்னும் ஒன்று.. "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" உன்னை நெருப்பால் சுட்டால் ஓகே ஆனால் யாரவது உன் மனது நோகும்படி சொன்னால் மறக்காமல் இரு. இந்த மேலே குறிப்பிட்ட குறள்களுக்கு உள்ளர்த்தம் யாதெனில் "அடுத்தவன் செய்கின்ற பிழைகளுக்காக உன்னை நீயே நோகடிச்சுகோ " இதற்கு என்னால் உடன் பட முடியாமல் உள்ளது. அதற்கு மாறாக, வள்ளுவரின் மேற்குறிப்பிட்ட குறள்களுக்கு நேரெதிராக மேற்கத்தையர்களின் பழ மொழி ஒன்று இக்காலத்து நடைமுறைக்கு பொருந்துவதாக இருக்கிறது. Sticks and stones may break my bones but words will never hurt me. something that you say which means that people cannot hurt you with bad things they say or write about you. Criticism has never bothered me. Sticks and stones may break my bones, and all that. "நீ என்ன சொன்னாலும் பரவாயில்லை. சொல்லிப்போட்டிரு. ஆனால் உன்னுடைய வன்முறையை நிச்சயமாக தாங்கிக் கொள்ள மாட்டேன்." என்ற கருத்துப்பட உள்ளது. இல்லையா? இதே போல் என்னுடைய அப்பா உயிரோடு இருந்த காலத்தில் ஒரு நீதிக் கதை சொல்வார். நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். "மலம் தின்னும் பன்றியை வீதி ஓரத்தில் பார்த்த புனிதமான கோயில் யானை, பத்தடி விலத்தியே நடந்து சென்றதாம். இதனை பார்த்த பன்றி யானையின் பலம் என்னெவென்று தெரியாமல், தனக்கு பயந்துதான் யானை எட்டத்த போகுது என்று நினைத்ததாம்." யானை தனது பலத்தை நிரூபிப்பதற்க்காக பன்றியை தூக்கி கடாசிவிட்டுப் போகலாம். இதனால் அழுக்குப்படுவது யார்? அப்படியானால் நீங்கள் சொல்லும் பொய் களவு செய்வோரை எப்படித் திருத்தலாம் என்ற உங்கள் ஆதங்கத்துக்கு பதில் என்ன? தானாக உணர்ந்து திருந்தினால் ஒழிய யாரையும் குற்றம் சொல்லித் திருத்த முடியாத காலம். அது மட்டும் அல்ல அவ்வையாரின் கொன்றை வேந்தன் சொல்லும் "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்னும் நல்லுரையில் ஒரு படிப்பினை உண்டு. அந்த படிப்பினையை பட்டறிந்தவர்கள் இங்கே அர்ஜுனும், நிழலியும் (அவர்களே தமது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்).
 3. கிரிக்கட் batம் ballம் போல ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்காம ஒத்துமையா இருங்க. இல்லன்னா இப்பிடித்தான் ஊரே கைகொட்டி சிரிக்கும். Rows of guests are sat in front of a big TV screen with the match on live with surely little hope of anyone else attempting to grab the attention. The crunch clash between the two rivals reportedly attracted a billion-strong TV audience and these wedding guests were not going to let themselves miss out. It may have been difficult persuading those organising the wedding to get the cricket on, but it certainly would have only added to the celebrations as India won by 76 runs. https://uk.eurosport.yahoo.com/blogs/world-of-sport/5-crazy-things--photo-of-india-v-pakistan-wedding-distraction-goes-viral-115231375.html
 4. கருத்துக்கள் எழுதிய உறவுகள் எல்லோருக்கும் நன்றி. இவர்களது இந்த முயற்சியை ஆதரிக்கிறேன். அதற்க்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன். பிபிசி தமிழில், தமிழ்நாட்டை சேர்ந்த இனப்பெருக்க மருத்துவர் பாண்டியன் அவர்கள் சொன்ன கருத்து கேட்டேன். அவற்றிலிருந்து நான் புரிந்து கொண்டது. 1. உண்மையில் இது டிசைனர் குழந்தைக்கான முயற்சி அல்ல. 2. மூன்று பேரின் குழந்தை என்று சொல்வது தவறு. 3. எல்லோருக்கும் இந்த தெரிவு கிடையாது. தேவையும் இல்லை.பரம்பரை பரம்பரையாக பாரதூரமான ஜெனற்றிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பெற்று கஸ்ரப்படும் ஆக்கள் மட்டும் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். 4. பாதிக்கப்பட்ட தம்பதியரின், முட்டையில் காணப்படும் முக்கியமான நியுக்ளியஸ் மற்றும் ஆணின் விந்தும் பாவிக்கப் படுவதால் அவர்கள் சாயலில்தான் குழந்தை பிறக்கும். ஆனால் இதில் சம்பத்தப்படும் மூன்றாவது பெண்ணின் முட்டையிலிருந்து ஆரோக்கியமான mitochondria எனப்படும் பதார்த்தம் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. இந்த mitochondria இல் பரம்பரை ஜீன்ஸ் தகவல்கள் ஏதும் கிடையாது. இது ஒரு ஊக்கி மாத்திரமே. எனக்கு இது எப்படி விளங்கியது என்றால்... நியுக்கிளியஸ் என்பது மஞ்சள் கருவும் mitochondria என்பது வெள்ளை கருவும் போல. எனது இந்த விளக்கம் பிழை என்றால் யாழ் களத்தின் ஆஸ்தான மருத்துவர் வந்து விளக்கம் தரும்படி கேட்கிறேன். நான் இதனை ஏன் ஆதரிக்கிறேன் என்றால்.,, இந்த பரம்பரை குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மேற்கு நாடுகள் என்றால் இந்தப்பிள்ளை களைப் பெரும் அக்கறையுடன் அரசாங்கமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எல்லா வசதிகள் செய்து பார்த்துக் கொள்ளும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சூப்பர் சிங்கரில் பாடிய செந்தில் நாதனைக் கைவிட்ட பெற்றோரைப் போல் குப்பைத் தொட்டிக்குள் போடுவார்கள்.
 5. ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா? 3 பிப்ரவரி 2015 பகிர்க ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல் என்கிறார்கள் மருத்துவர்கள்மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள். மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி செய்யும் பேட்டரிகளைப் போன்றவை. செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை அளிப்பது தான் இவற்றின் முதன்மையான பணி. மனித செல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கருமுட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப்போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். சிலபெண்களின் கருமுட்டைகளில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோகாண்ட்ரியாக்கள் இருக்கும் கருமுட்டையில் இருந்து உருவாகும் குழந்தைகளின் செல்களில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அது அந்த குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அளவுக்கு மோசமான மரபணு நோய்களை உண்டாக்கும். இயற்கையின் இந்த மோசமான சிக்கலுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார்கள். இந்த மரபணு மருத்துவ தீர்வு பல கட்டங்களில் நடக்கிறது. மரபணு நோய்களை முறியடிக்க முடியும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கைஇதன் முதல்கட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டையில் இருக்கும் சேதமடைந்த மைடோகாண்ட்ரியாக்களை அகற்றிவிடுவது. அந்த கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து, வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து பாதிக்கப்படாத ஆரோக்கியமான மைடோ காண்ட்ரியாக்களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது. இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை, முதல் பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்துவது மூன்றாவது கட்டம். இதன் நான்காவது கட்டம் என்பது, இப்படி ஒரு பெண்ணின் நியூக்ளியஸையும், மற்ற பெண்ணின் மைடோகாண்ட்ரியாக்களையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த கருமுட்டைக்குள் விந்தணுவை சேர்த்து கருவுறச்செய்வது. இந்த நடைமுறையையே கொஞ்சம் மாற்றி, மைடோகாண்ட்ரியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொண்டிருக்கும் பெண்ணின் கருமுட்டைக்குள் இருக்கும் நியூக்ளியஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த முதல் பெண்ணின் நியூக்ளியஸை பதியவைத்து அந்த கருமுட்டையை கருவுறச்செய்யும் நடைமுறையும் செய்யப்படுகிறது. இப்படி இரண்டுவிதமாக செய்யப்படும் நடைமுறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பிறக்கவைக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் சோதனைச் சாவடியில் விலங்குகளைக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக மனிதர்கள் மத்தியில் இந்த பரிசோதனைகளை நடத்த உலக நாடுகளின் அரசுகள் எவையும் இதுவரை அனுமதியளிக்கவில்லை. அப்படியான சட்டரீதியிலான அனுமதியை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது. Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. null இந்த விஞ்ஞான முயற்சியின் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் சென்னையில் இருக்கும் செட்டிநாடு மருத்துவமனையின் இனப்பெருக்கத்துறையின் தலைமை மருத்துவர் என் பாண்டியன். மைட்டகொண்ட்ரியா நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து மோசமாக பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த மருத்துவ முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார் பாண்டியன். இந்த நடைமுறையை மூன்று பெற்றோருக்கான குழந்தை என்பதாக இதை சொல்வதே தவறு என்று கூறும் பாண்டியன், இதில் ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொடுப்பவரின் குழந்தையாக இதை கருத முடியாது என்றும் கூறினார். சாதாரணமாக ரத்த தானம் செய்வதைப் போலத்தான் இவர் மைடோகாண்ட்ரியாக்களை தானம் செய்கிறார் என்றும், எனவே பிறக்கும் குழந்தையானது அவரது மரபணுக்கூறுகளை கொண்டிருக்காது என்றும் பாண்டியன் தெரிவித்தார். இந்த குழந்தையின் தோற்றம் உள்ளிட்ட அனைத்துவகையான மரபணுக்கூறுகள் அனைத்துமே அதனது கருமுட்டையின் நியூக்ளியசை கொடுத்த உண்மையான தாய் மற்றும் அதை கருவுறக்காரணமான விந்தணுவைக் கொடுத்த தந்தையிடம் இருந்து மாத்திரமே வருவதால் இந்த குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்பது தவறான கருத்து என்றும் பாண்டியன் கூறினார். http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F02%2Femp%2F150203_tamilsciencefeb32015.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta http://www.bbc.co.uk/tamil/science/2015/02/150203_sciencefeb32015
 6. Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. மூவரின் மரபணுக் குழந்தைக்கு பிரிட்டன் அனுமதி - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேரின் மரபணுக்களிலிருந்து குழந்தைகளை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை பிரிட்டனின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உலகிலேயே மூன்று பெற்றோரின் மரபணுக்களில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கிய முதல் நாடாக பிரிட்டன் வருகிறது. அதாவது தாய், தந்தையுடன் மூன்றாவதாக குறித்த சில மரபணுக்களை கொடையாக வழங்கும் இன்னுமொரு பெண்ணும் இதில் சம்பந்தப்படுவார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பரம்பரை நோய்களை தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு கடத்துவதில் இருந்து தடுக்கவே இந்த உத்தி. இதன் மூலம் வருடாந்தம் சுமார் 150 தம்பதியினருக்கு உதவலாம். இந்த அனுமதி கிடைத்தால், அதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து முன்னதாக ஆராய்ந்த ஒரு காணொளி. http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150203_3babies
 7. இங்கிலாந்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் வராமல் தடுக்க ஒரு மருத்துவ புரட்சி. மூன்று பேர்களிடமிருந்து பெறப்படும் டிஎன்ஏ இனைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குவதற்கும் இதன் மூலம் பரிதாபத்துக்குரிய பரம்பரை நோய்கள் வராமல் தடுக்கவும் மருத்துவர்களை அனுமதிக்க புது சட்டமூலத்திற்க்கான விவாதம் இன்று பிற்பகல் 2மணியளவில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. மூன்று பேரின் பங்களிப்போடு குழந்தைகளை உருவாக்க சட்டம் இயற்றிய உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்ற பெருமையை பெறுகிறது. 1) Two eggs are fertilised with sperm, creating an embryo from the intended parents and another from the donors 2) The pronuclei, which contain genetic information, are removed from both embryos but only the parents' are kept 3) A healthy embryo is created by adding the parents' pronuclei to the donor embryo, which is finally implanted into the womb 1) Eggs from a mother with damaged mitochondria and a donor with healthy mitochondria are collected 2) The majority of the genetic material is removed from both eggs 3) The mother's genetic material is inserted into the donor egg, which can be fertilised by sperm. http://www.bbc.co.uk/news/health-31069173
 8. இது ஒரு இக்கட்டான நிலை. பாவம் கணவனிடம் என்ன துன்புறுத்தலுக்கு ஆளானாலோ? பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணிற்கு கவுன்ஸிலிங் உதவி கிடைக்க வேணும்.
 9. சிவாஜி படத்தில் ரஜனி இதனைத்தான் செய்தார். கறுப்பு பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வரும்போது வெள்ளையாக்கி... ஐடியா கொடுத்த அவர் ஹீரோ... கைதட்டல்... காப்பி யட்டித்த சிறிஸ்கந்தாவுக்கு சிறை...
 10. என்ன செய்வது? ஹாட்லிக் கல்லூரியின் தொடர்பு அற்று 25 ஆண்டுகளுக்கு மேல்... இடையிடையே வரும் ஒன்று கூடலுக்கான‌ ஈமைல் அழைப்புக்கள்.. இருந்தும், முதல்கரும்புலி மில்லரின் பயின்ற பள்ளி... வீரம் இல்லாது போனாலும்.. பொது நல வாதிகள் உறைவிடமாய் இருக்காதா? என்றோர்... அங்கலாய்ப்பு... அதிபர் சாமுவேல் சேரினதும் வல்லிபுரம் சேரினதும் கண்டிப்புக்கள்... காதில் இன்றும் ரீங்காராம்... ராஜரட்னம் சேரின் கேள்விக்கான‌... சரியான பதிலைத் தேடும் மாணவர்களது பதற்றமான அடுத்தாள்... அடுத்தாள்... எனும் எதிர் ஒலிகளும்... செல்லத்துரை டீச்சரின் விநோதமான விஞ்ஞான விளக்கங்கள்... செல்வராஜ் டீச்சரின் இங்கிலீசு டோச்சர்கள்... இன்னும் எக்ஸேவியர் சேரினது புகழ் 'தொலைப்பண்டா ராஸ்கல்'... ஆனந்தலிங்கம் சேர், கார்த்திகேசு சேரின் பகிடிகள்.. ஜோதிரவி சேரின் கிரிக்கட் பயிற்சியும் சமூகவியல் பாட நேர 'யூ சீ'' 'யூ சீ''... யார் எவரை உயிருடன் தேடுவேன்?
 11. பெண்களில் விருப்பம் இல்லாதவர்கள், பெண் தோஷம் உள்ளவர்கள் வாழைக்கு தாலி கட்டினால் தோஷம் நீங்கி விரைவில் திருமணமாக வாய்ப்பு உள்ளது. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் இருக்கிறது.
 12. குமாரசாமி அண்ணரின் துயரில் பங்கு கொள்வதோடு, பிரிவுத் துயரில் வாடும் அவருக்கு இறைவன் துணை நிற்க வேண்டும் என பிரர்திக்கிறோம்.