தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ?
(What is data decentralization?)
மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல்.
உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும்.
இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்?
அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாதுகாத்து இருக்கலாம்.
சரி இப்பொழுது தான் மின் நூல்கள் மற்றும் மின் மயப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றனவே, ஆம் இருக்கின்றன! ஆனால், இப்பொழுதும் தகவல் எல்லாம் ஒரு அமைப்பின் வழங்கல் கணினியிலோ அல்லது தனிநபர்களின் கணினியிலோதான் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. பதிவேற்றப்பட்ட வழங்கல் கணினி (Server) தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தாலோ அல்லது பதிவேற்றப்பட்ட தகவல்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டாலோ அல்லது மூலப்பிரதி மாற்றப்பட்டு போகவோ வாய்ப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் தகவல் மையப்படுத்தப்படுவதே (ஒரே இடத்தில் குவிக்கப்படுவதே).
இன்னும் நாம் தமிழ் ஓலைச்சுவடி திருட்டு என்று தினமும் கேள்வி பட்டு கொண்டு தான் இருக்கின்றோம். இதை தடுக்க என்னவழி? ஒரே வழி தகவல் பரவலாக்கம்.
கல்லேடு/பேரேடு தொழில்நுட்பம் மூலமாக நாம் தகவலை பரவலாக்கி (தமிழ் மின் ஆவணங்கள், இந்த செயல்திட்டத்தில் பங்குபெரும் உறுப்பினர்களின் கணினியில் பதிவேற்றப்பட்டு பாதுகாக்கப்படும்) இந்த இழப்புகளை தவிர்க்கலாம். எமது Tamil Crypto செயல்திட்டம் இதை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.
ஒரு மொழிக்காக ஏன் இவ்வளவு சிரமப்பாடு?
மொழியின் நீட்சியே இனத்தின் நீட்சியாகும். ஒரு மொழி அழிவடையும் போது இனம் அதன் அடையாளத்தை இழக்கின்றது. மற்றைய மொழிகள் போலல்லா. எமது அன்னைத்தமிழ் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
தீ, கடல் , எதிரிகள் துரோகிகள் அழித்தது போக இன்னும் மிச்சம் இருக்கும் எமது இனத்தின் சொத்துக்களை கணினிமயப்படுத்தி, தகவலை பரவலாக்கி அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே எமது நோக்கம்.
மொழி வாழ்ந்தால் தான் இனம் வாழும்.
நமது மொழிக் கடன்
நமது மொழி காலம் காலமாக தனது தனித்தன்மையாலும் பலரது தியாகத்தாலும் தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு டிஜிட்டல் உலகிலும் முன்னணி மொழியாக வலம் வருகின்றது. இந்த தன்னிகரில்லாத தமிழ் மொழி வளர்சிக்கு நாம் என்ன செய்து இருக்கின்றோம் என்ற கேள்வி எல்லா தமிழர்களிடத்திலும் வர வேண்டும், இதுவே எமது மொழியை அடுத்த தலைமுறைக்கு வீரியத்துடன் எடுத்து செல்ல உதவும். டிஜிட்டல் தளத்தில், கட்டச்சங்கிலி தொழில்நுட்பத்தின் ஊடாக இதை நாங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க முடியும். இதற்க்காகத்தான் Tamil Token இயங்குதளம் உருவாக்கப்பட்டது.
இந்த செயல்திட்டத்தில் நீங்கள் எப்படி பங்குபெறுவது.
நீங்கள் TamilToken.org இல் கணக்கு திறந்து செயல்திட்டங்களை பார்வையிடலாம் மற்றும் பங்குபெறலாம்.
Tamil Crypto Token எப்படி வாங்குவது.
https://stellarterm.com அல்லது https://interstellar.exchange போன்ற மெய் நிகர் நாணய சந்தைகளில் (Crypto Exchanges) வாங்கலாம்.
Tamil Token வாங்கும் முறை
Interstellar exchange => https://stellarterm.com
Stellarterm exchange => Stellarterm
தனியார் விற்பனை நேரத்த்தில் வாங்கும் பொது ஆரம்பகால ஆதரவாளர்கள் என்றவகையில், உங்களுக்கு இனாமாக மேலதிக தமிழ் மெய் நிகர் நாணயங்கள் (Tamil Token) கிடைக்கும்.
செயல்திட்ட நிர்வாகம் (Governance)
Tamil Token வைத்திருப்பவர்கள், வாக்கு செலுத்தும் தகுதி பெறுவார்கள். ஒரு செயல்திட்டம் ஆரம்பிக்கும் பொது நீங்கள் Tamil token மூலமாக ஆதரவு செலுத்தலாம் மற்றும் நீங்கள் குறைந்தது 10 TAMIL token வைத்திருந்தால் நீங்கள் சமூக செயல்திட்டங்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவீர்கள்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை உள்வாங்கல்
வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகக்கருத்துக்களை உள்வாங்குதல் என்பன இந்த Tamil Token செயல்திட்டத்தை விரிவுப்படுத்த உதவும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யாவரும், தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த பின்னூட்டங்கள்/பதிவுகள் சமூக வாக்கெடுப்புக்கு விடப்பட்டு. 80% மான Tamil Token சமூக வாக்குகள் சேர்ந்தபின் நடைமுறைப்படுத்தப்படும்.
தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken
Twitter => https://twitter.me/tamiltoken
Download Whitepaper