Jump to content

லிசான்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1591
  • Joined

  • Last visited

Posts posted by லிசான்

  1. வணக்கம்! நான் 2 மாதமாக யாழில் உறுப்பினராக உள்ளேன். நானும் களத்தில் கருத்துகளை பரிமாறி கொள்ள அனுமதி கொடுப்பீர்களா?

    நன்றி.

    பாபு, இதுதான் உங்கள் முதல் பதிப்பு.

    யாழில் அறிமுகப் பகுதிக்குச் சென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள், அனுமதி கிடைக்கும்.

  2. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவரால் நமக்கு என்ன பயன் ? எம்மால் அவருக்கு என்ன பயன்?

    நோய் வந்தால் கடவுள் காப்பாற்றியவர்களை விட மருந்து சாப்பிட்டு குணமடைந்தவர்கள் ஏராளம். (மருந்து மூலம் கடவுள்தான் காப்பாற்றினார் என்ற வாதம் வேண்டாம்).

    கவனமாகப் படித்த மாணவன் அதிக பக்தியுடைய மாணவனைவிட பரீட்சையில் சித்தியடைவது ஆச்சரியமல்ல.

    சிறு வயதிலிருந்தே கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று உலகின் உலகில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

    விரதங்கள் பிடித்து, தியானங்கள் செய்து வாழ்பவர்களை விட, மது அருந்தி புலால் உண்டு ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளினுடனும் வாழ்பவர்கள் ஏராளம்.

    அதிகமான கடவுள் நம்பிக்கையுடைவர்களைக் கொண்ட நாடுகளைவிட, கடவுள் நம்பிக்கையைக் கைவிட்ட நாடுகளே இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளது.

    கடவுள் நம்பிக்கை அதிகமாகவுள்ள இலங்கை இந்தியாவில், பல நூற்றாண்டு காலமாக மக்கள் விடுதலை இன்றியும் அடிமைகளாகவும், வாழ்க்கைத் தர வளர்ச்சியின்றி துன்பங்களை அனுபவித்து வருவது ஏன் ?

    கர்ம வினைதான் ஒரு மனிதனின் துன்பத்துக்குக் காரணமென்றால், இவை பாவப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாடுகளா ?

    18 ஆயிரம் மாவீரர்களின் இரத்தத்தினால்தான் ஈழத்தின் விடுதலைப் பாதை திறக்கப்படுகிறது. இங்கு கடவுளின் பங்கு என்ன ?

    ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கிழக்கு மக்கள் கதறியழ ஆழிப்பேரலை அடித்துச் சென்றபோது எனக்குள் எழுந்த கேள்வி, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது.

    இக்கேள்விக்கு எனக்கு நானே கூறிக்கொள்ளும் பதில் - கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, அப்படி ஒன்று எனக்குத் தேவையில்லை என்பதாகும்.

  3. 01) இரண்டாம் உலக மகா யுத்தம் நடை பெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் யார்?

    02) அவர் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர் ஆவார்?

    பிராங்லின் றூஸவெல்ற் (Franklin Delano Roosevelt) 32 ஆவது அதிபர்.

  4. 01) ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கடல் வழி போக்குவரத்து பாதையை கண்டுபிடித்த நாடு காண் வீரனின் பெயர் என்ன?

    02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

    03) அவர் எத்தனையாம் ஆண்டு இந்தியாவில் தரையிறங்கினார்?

    04) அவர் இந்தியாவில் எந்த இடத்தில் தரையிறங்கினார்?

    வஸ்கொட கமா, போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர். 1498 மே 20 இல் கலிடட் (Calicut = கோழிக்கோடு ?) என்ற இடத்தில் தரையிறங்கினார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.