Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  30995
 • Joined

 • Days Won

  143

கிருபன் last won the day on November 25

கிருபன் had the most liked content!

3 Followers

Contact Methods

 • Website URL
  https://kirubans.blogspot.com/
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  முடிவிலி வளையம்
 • Interests
  போஜனம், சயனம்

கிருபன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • First Post
 • Posting Machine Rare

Recent Badges

6.8k

Reputation

 1. ஆம். MON 28 NOV 2022FIFA WORLD CUP - GROUP H Portugal2Uruguay0 Bruno Fernandes (54'minutes, 90'+3minutes pen) FTHT 0-0
 2. சீமானை சுற்றி வளைத்ததாம் ராணுவம்!: பேச்சை கேட்டு ‛மண்டை கிறுகிறுத்த’ தம்பிகள்… டில்லி விமான நிலையம் சென்றபோது ராணுவம் தன்னை சுற்றி வளைத்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த ‛கதை’யை கேட்ட அவரது தம்பிகள் என்றழைக்கப்படும் கட்சி தொண்டர்கள் கிறுகிறுத்துபோயினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடை ஏறினாலே ஏதேனும் ஒரு கதையை தன் ‛தம்பிகளுக்கு’ (அவரது கட்சி தொண்டர்களுக்கு) சொல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களாக அவர் தம்பிகளிடம் பகிர்ந்துகொள்கிறார். இலங்கை சென்றது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது, அவருடன் ஆமைக்கறி விருந்து சாப்பிட்டது என அவர் வெளிப்படுத்திய ‛கதை’களை கேட்டு இருக்கும் கட்சியினர் புளகாங்கிதம்’ அடைவர். அதேபோல், டில்லி விமான நிலையம் சென்றிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துக்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: நானும் கட்சியில் உள்ள பிரபு, மூத்தவர் ஆகியோர் ஒரு முறை டில்லி விமான நிலையத்திற்கு காரில் சென்றோம். பிரபு, காரை பின்னாடி எடுத்து விட்டுவிட்டு வரேன் என கூறிவிட்டு சென்றார். மூத்தவர் ‛தம்’ அடிக்க சென்றுவிட்டார். நான் முன்னாடி போய்விட்டேன். திடீரென பார்த்தா, என்னை ராணுவம் சுத்தி வளைச்சுட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியவில்லை. தம்பி பிரபுவும் ஒன்றும் புரியாமல் பதறிட்டான். எனக்கும் எதுவும் புரியாம, என்ன சார் விஷயம் என கேட்பதற்குள் அந்த ராணுவ வீரர்கள் என்கிட்ட ஓடி வந்து, கட்டிப்பிடித்து, அண்ணா ஒரே ஒரு செல்பி எடுக்கலாமா, உங்களை ரொம்ப பிடிக்கும் என கேட்டார்கள். உடனே மூத்தவர், ‛ஏம்ப்பா கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டீங்களே’ என்றார். போட்டோ எடுத்துக்கொடுத்த பிறகு அவர்கள் கிளம்பும்போது மூத்தவரிடம் அண்ணனை பத்திரமாக பார்த்துக்கோங்க என கூறிவிட்டு சென்றனர். பின்னர் விமானத்தில் ஏறும்போது ஒருவர் சல்யூட் அடித்துவிட்டு சென்றார். அதற்கு மூத்தவர், ‛தம்பி இதனாலதான் இந்த பயலுங்க பதவியை விட்டு கீழே இறங்கவே மாட்டேங்குறாங்க. நமக்கு 10 நிமிஷத்துல என்னா பரபரப்பு ஏற்படுத்திட்டாங்க’ என்றார். 70, 80 வயது ஆட்கள் எல்லாம் என்னை சீமான் அண்ணா என ஆசையாக அழைக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு, ‘உன் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இருந்தான்’ என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், கண்ட கண்ட தறுதலைகள் எல்லாம் தலைவன் ஆகிவிடும். உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், ஆளாளுக்கு பெரியவர், சின்னவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சைக் கேட்டு அவரது அன்புத் தம்பிகள், தலை கிறுகிறுத்துப்போயினர். https://akkinikkunchu.com/?p=231614
 3. கடற்றொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு சீனத் தூதுவர் பச்சைக் கொடி By T. Saranya 29 Nov, 2022 | 11:49 AM கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழில் நடவடிக்கைகளுக்கு கணிசமானளவு மண்ணெண்ணை தேவைப்படுகின்றமையினால், மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சீனாவினால் வழங்கப்பட்ட, அண்ணளவாக சுமார் 90 இலட்சம் லீட்டர் டீசலை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக்கொண்ட நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் டீசலை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக்கொள்ளும் நிகழ்வில், கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில், "சீன அரசாங்கம் தற்போது 90 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளமை எமது மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. சீனா வழங்கியுள்ள இந்த உதவிக்காக சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது கிடைத்துள்ள 90 இலட்சம் லீற்றர் டீசலில் ஒரு பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வழங்கி அவர்களிடம் இருந்து மண்ணெண்ணையைப் பெற்று மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனவும் தெரிவித்தார் https://www.virakesari.lk/article/141598
 4. ஈழத்து சிதம்பரம் காரைநகர் ஆலய பாலஸ்தாபனத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு! ஈழத்து சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிதம்பர ஆலயத்தில் பாலஸ்தாபனத்திற்கு ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின் திருவம்பாவை உற்சவ காலத்தில் ஆலய தர்மகத்தாக்களில் ஒருவர் டிசம்பர் நாலாம் திகதி பாலஸ்தாபனத்தை செய்யப்போவதாக அறிவித்ததால் ஆலய பக்தர்கள் உள்ளிட்டோர் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகியது. திருவெம்பாவை உபயகாரர்களும் ஆலயத்தினுடைய பக்தர்களும் திருவம்பாவை உற்சவம் நடைபெறாமல் பாலஸ்தாபனம் செய்வது தமது ஊருக்கு உகந்ததல்ல என்ற ரீதியிலே அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நிலையில், பாலஸ்தாபன நிகழ்வை எதிர்வரும் நாலாம் திகதி செய்யக்கூடாது என தடை உத்தர ஒன்றிணை கோரி திருவெம்பாவை உபயத்தை மேற்கொள்கின்ற ஐந்து திருவிழா உபயகாரர்கள் மற்றும் ஆலயத்தினை வழிபடுவர்கள் சார்பில் ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வை தடை செய்வதாக ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டளை வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையிலே எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வானது நீதிமன்ற கட்டளை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது நீதிமன்றத்திலே வழங்கப்பட்ட கட்டளை தொடர்பில் எதிராளிகளுக்கு கட்டளை அனுப்பப்படவுள்ளது. அத்தோடு இந்த வழக்கு எதிர்வரும் 12ஆம் தேதி வரை திகதியிடப்பட்டுள்ளது http://www.samakalam.com/ஈழத்து-சிதம்பரம்-காரைநகர/
 5. ஓமானுக்கு பெண்கள் கடத்தல்: ஈ.குஷான் கைது! ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(29) அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓமானுக்கு பணிப் பெண்களாக செல்வோரிடம் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, பாலியல் ரீதியாக அச்சுறுத்தியமை, ஆட்கடத்தல், இலங்கை பணிப்பெண்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஈ.குஷான் மீது சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஈ.குஷானிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்வதாக பொலிஸார் கூறினர். http://www.samakalam.com/ஓமானுக்கு-பெண்கள்-கடத்தல/
 6. உண்மையாகச் சொன்னால் ஹிட்லர் மீது ஒரு அபிமானம் பல தமிழர்களுக்கு இருக்கின்றது. ஆனால் இருக்கும் நாடுகளில் ஹிட்லரையும் அவரின் நாஜிக் கொள்கைகளையும் வெளிப்படையாக ஆதரித்து வம்பை விலைக்கு வாங்கப் பயம்!. அதுதான் மாண்புமிகு பூட்டின், கிம் யொங் உன் வகையறாக்களை நேட்டோவை எதிர்க்கின்றோம், ஏகாதிபத்தியத்தை எதிர்கின்றோம், அமெரிக்காவின் வல்லாதிகத்தை எதிர்க்கின்றோம் என்று சாட்டுச் சொல்லி ஆதரிக்கின்றோம்.
 7. நாளை செவ்வாய் (29 நவம்பர்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED எதிர் QAT 20 பேர் நெதர்லாந்து வெல்லும் எனவும், ஒரே ஒருவர் கட்டார் வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கட்டார்: நிலாமதி நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU எதிர் SEN 05 பேர் எக்குவடோர் வெல்லும் எனவும், 14 பேர் செனிகல் வெல்லும் எனவும், இருவர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர். எக்குவடோர்: தமிழ் சிறி புலவர் நிலாமதி பையன்26 குமாரசாமி செனிகல்: ஈழப்பிரியன் சுவி வாத்தியார் பிரபா முதல்வன் கந்தையா ஏராளன் சுவைப்பிரியன் நுணாவிலான் கல்யாணி அகஸ்தியன் எப்போதும் தமிழன் கறுப்பி நீர்வேலியான் சமநிலை: கிருபன் வாதவூரான் நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL எதிர் ENG 19 பேர் இங்கிலாந்து வெல்லும் எனவும், இருவர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர். ஒருவரும் வேல்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை! சமநிலை: வாத்தியார் கந்தையா நாளைய மூன்றாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN எதிர் USA 8 பேர் ஈரான் வெல்லும் எனவும், 09 பேர் ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனவும், நால்வர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர். ஈரான்: ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் நுணாவிலான் தமிழ் சிறி புலவர் பையன்26 குமாரசாமி ஐக்கிய அமெரிக்கா: வாத்தியார் பிரபா ஏராளன் கல்யாணி கிருபன் அகஸ்தியன் நிலாமதி கறுப்பி நீர்வேலியான் சமநிலை: முதல்வன் கந்தையா வாதவூரான் எப்போதும் தமிழன் நாளைய நான்காவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
 8. சீனர்கள் கட்டாரில் நடக்கும் உலகக்கோப்பைக் கால்பாந்தட்டத்தைப் பார்த்து பார்வையாளர்கள் எல்லாம் மாஸ்க் இல்லாமல் நெருக்கி நிற்பதைக் கண்டு தாம் வேறு உலகில் இருப்பதை அறிந்துகொண்டார்கள். அதனால்தான் எதிர்ப்புணர்வு அதிகரிக்கின்றது. இப்ப காண்பிக்கப்படும் போட்டிகள் எல்லாம் சில நிமிடங்கள் பிந்திக் காட்டுகின்றார்களாம். பார்வையாளர்களின் குளோசப் எல்லாம் வெட்டி மைதானத்தைக் காட்டுகின்றார்களாம்
 9. இன்று இடம்பெற்ற நான்காவது ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி உருகுவே அணியை 2-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: போர்த்துக்கல் 2 - 0 உருகுவே போர்த்துக்கல் வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்! இன்றைய நான்கு ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 தமிழ் சிறி 20 2 புலவர் 20 3 கிருபன் 19 4 வாதவூரான் 19 5 நீர்வேலியான் 18 6 ஈழப்பிரியன் 17 7 முதல்வன் 17 8 ஏராளன் 17 9 சுவைப்பிரியன் 17 10 கல்யாணி 17 11 பையன்26 17 12 எப்போதும் தமிழன் 17 13 சுவி 16 14 நுணாவிலான் 16 15 அகஸ்தியன் 16 16 நிலாமதி 16 17 குமாரசாமி 16 18 பிரபா 15 19 கந்தையா 14 20 கறுப்பி 14 21 வாத்தியார் 12
 10. இன்று இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் கமரூன் அணியும் சேர்பியா அணியும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. முடிவு: கமரூன் 3 - 3 சேர்பியா ஆட்டம் சமநிலையில் முடியும் எனக் கணித்த மூவருக்கு பேருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்! ----------------------------------------------------------------------------------- இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கானா அணி தென்கொரியா அணியை 3-2 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: தென்கொரியா 2 - 3 கானா கானா வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்! ----------------------------------------------------------------------------------- இன்று இடம்பெற்ற மூன்றாவது ஆட்டத்தில் பிரேசில் அணி சுவிட்சர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: பிரேசில் 1 - 0 சுவிட்சர்லாந்து பிரேசில் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்!
 11. கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம் ; ஊடகவியலாளர் கைது By T. Saranya 28 Nov, 2022 | 09:59 AM சீனாவில் கொவிட் -19 பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன. கொவிட் பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாகவே உலக அளவில் பெரும் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு தற்போது சீராகி வரும் நிலையில் கொவிட் வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான சீனாவில் அண்மையில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் மேற்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு காரணம் கடுமையான கொவிட் கட்டுப்பாடுதான் என்று அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க துவங்கினர். இப்படி நாட்டின் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கள் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை கவலை அளிப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், "ஷங்காயில் நடந்த போராட்டங்களில் செய்தி சேகரிக்கும் போது கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட எங்கள் ஊடகவியலாளர் எட் லாரன்ஸ் நடத்தப்பட்ட விதம் கவலை அளிக்கிறது. அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பொலிஸாரால் தாக்கப்பட்டார். அவர் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராக பணிபுரியும் போது குறித்த சம்பவம் நடந்தது" என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/141441
 12. அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு! By Digital Desk 2 28 Nov, 2022 | 10:57 AM யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது "பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது" போலாகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம். எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன. இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது. இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள். தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம். எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/141447
 13. 'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் - சி.வி. கோரிக்கை By Digital Desk 2 28 Nov, 2022 | 11:10 AM 'தாய் நிலம்' எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (நவ. 28) அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் 'தாய்நிலம்: நில அபகரிப்பு - இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing - The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவண படம் வெளியிடபட்டுள்ளது. வரலாற்று ரீதியாக தமிழ் மக்களின் காணிகள் எவ்வாறு அபகரிக்கப்பட்டன என்பது பற்றியும் தமிழர் தாயகத்தின் இன்றைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றியும் இந்த ஆவணப்படம் விளக்குகின்றது. தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஆவண படம் இதுவாகும். இந்த ஆவண படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றபோதிலும் தமிழ் மொழியில் கணிசமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆவண படத்தை அவசியம் பாருங்கள் என கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/141450
 14. வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் தமிழீழத்துக்கான வாய்ப்புக்களும் ! - மாவீரர் நாள் செய்தியில் வி.உருத்திரகுமாரன் By Rajeeban 28 Nov, 2022 | 11:08 AM மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் உருவாக்கம் என்பது, அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால், அனைத்துலக அரங்கில் வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து இத்தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும் கோரியுள்ளார். தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு இவ்வுலகில் அமைய வேண்டும் என்பது விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல. மாறாக சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை எனப்பதனை வரலாறு காட்டி நிற்கின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை என்பதனையும் இடித்துரைத்துள்ளார். ரஸ்யா – உக்ரேய்ன் போரின் தொடர்ச்சியாக ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து தற்போதைய உலகம் விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ள நிலையில், பலமிக்க அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும் என்பதோடு, இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ள பிரததமர் வி.உருத்திரகுமாரன், இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும் என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவின் சமகால அரசியல், உலக அரசியல், தமிழர்களின் அரசியல் செயல்வழிப்பாதை என பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையின் முழுவிபரம் : இன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள். தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த நமது வீரமறவர்களின் நினைவுகளை நாம் நமது இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கும் நாள். தமிழீழ மக்கள் தேசிய விடுலையையும் சமூக விடுதலையையும் அடைந்தவர்களாய், தமது தாயகப்பூமியில் சிங்களத்தின் இனவழிப்புக் குறித்த அச்சம் அற்றவர்களாக, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றில் இன்புற வாழவேண்டும் என்ற கனவுடன் களமாடி வீரச்சாவடைந்த நமது தேசப்புதல்வர்களின் நினைவு நாள். நமது சிறிய தமிழீழத் தேசத்தினை உலகவரைபடத்தில் நிலைநிறுத்தி, நமது தேசத்தின் சுதந்திர வேட்கையை தமது வீரத்தாலும், ஈகத்தாலும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற உத்தமர்களின் திருநாள். மாவீர்கள் தமிழீழ மக்களின் மூச்செங்கிலும் நிறைந்துள்ளார்கள். தமிழீழ மண்ணெங்கும் விதைந்துள்ளார்கள். தமிழீழ கடலெங்கும், வான்பரப்பெங்கும் நீக்கமறப் பரந்துள்ளார்கள். தமிழீழ தேசத்தின் காவல் வீரர்களாய், நமது தேசத்தினை எதிரிகள் எவரும் அடிமை கொண்டு விடாதவாறு சுதந்திரக் கனலை மூட்டி விட்டவர்களாய் எம்முடன் அவர்கள் இறுகப் பிணைந்துள்ளார்கள். தமது வீரர்களை வழிபடும் மரபினைக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நமது வீரர்களைத் தாம் தமது வாழ்வில் கண்ட தெய்வங்களாக உருவகித்து வழிபடுகின்றனர். சங்ககால மரபு கண்ட நடுகல் வழிபாட்டுக்கு சமகால எடுத்துக்காட்டாக நமது தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மாவீரர் வழிபாடு அமைகிறது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய நாளில் நாம் மாவீரர்களின் கனவுகளை நம் மனதில் இருத்தி, அவர்தம் கனவுகளை நனவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நம் மனதிலிருத்த வேண்டியது மிக அவசியமானதாகும். நமது தேசத்துக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி அவர்கள் நம் தேசத்துக்காக செய்த பணிக்கு, ஈகத்துக்கு வணக்கமும் நன்றியும் தெரிவிக்கும் நாளாக மட்டும் இன்றைய நாளை நாம் அணுகக்கூடாது. மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு செய்யும் வணக்கத்துடன் நமது தேசத்துக்கான, நமது மாவீரர்களுக்கான கடமைகளை நாம் ஆற்றி விட்டோம் எனத் திருப்தி அடையவும் முடியாது. ஆடி அமாவாசை நாளில் தந்தையினையும், சித்திரை பௌர்ணமியில் அம்மாவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பதுபோல், மாவீரர் நாளில் மாவீரர்களை நினiவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டும் நாம் இந்நாளைக் கருதி விடக்கூடாது. நாம் மாவீரர்களை வணங்குவது, போற்றுவது ஒரு சடங்கு வழிப்பட்ட நடைமுறையாக மட்டும் குறுகி விடக்கூடாது. மாறாக மாவீரர் கனவுகளை நனவாக்குவது குறித்த சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மையடைச் செய்யும் நாளாக மாவீரர் நாளை நாம் நமக்குள் வரித்துக் கொள்ள வேண்டும். மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்;கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற பொறுப்புணர்வுடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வை மாவீரர் நாள் நமக்குள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய நாளில் நாம் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் நாமே உறுதி பூண்டு கொள்வோம். இந்த உறுதியுடன், உலகில் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மக்களுடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலைசாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்பான மக்களே, இன்றைய மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும். மாவீரர்களின் கனவு என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தமிழீழத் தாயகப்பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்பதே. இக் கனவு உலகில் தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு அமைய வேண்டும் என்ற விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல. சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத் தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை என வரலாறு காட்டி நின்ற வழியே தமிழீழத் தனியரசினை அமைப்பதற்காக 60,000 க்கும் மேற்பட்ட மாவீரர்கள் தம்முயிரை ஈகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தது. இன்றைய சூழலிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழீழத் தனியரசைத் தவிர வழியேதுமில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை. தமிழீழ மக்களின் தாயகப்பிரதேசத்தைக் கபளீகரம் செய்து, தமிழீழ மக்களின் தேசிய தனித்துவத்தை சிதைத்து, தமிழீழ தேசத்தை இனவழிப்புக்கு உள்ளாக்கும் தனது திட்டத்தை தடுக்கக் கூடிய எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் சிங்கள பௌத்த இனவாதம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால், ஈழத் தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கானதொரு ஏற்பாட்டை சிங்கள சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடாத்தி, அதன் சம்மதத்துடன் அடைந்து விடலாம் என எவரும் எதிர்பார்ப்பின் அது இலகு காத்த கிளியின் கதையையே நமக்கு நினைவூட்டும். தமிழீழ மக்கள் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடான தமிழீழத் தனியரசானது உள்ளுர் நிலைமைகளில் இருந்து மட்டும் உருவாகக் கூடியதல்ல. மாறாக, இது அனைத்துலக அரசியற்சூழல், மற்றும் இந்து மகாசமுத்திரத்தினதும், தென்னாசியப்பிராந்தியத்தினதும் புவிசார் அரசியற்சூழலிருந்து ஊற்றெடுக்க வேண்டியது. தற்போது நம் முன்னால் உள்ள கடமையானது புவிசார் அரசியல் சூழல் எவ்வாறு எமது அரசியல் நலன்களுக்கு இசைவாக அமைவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும் அனைத்துலகச்சூழல் உருவாகும் போது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கக்கூடிய சூழலை பேணுவதும் அதனைத் தக்க வைப்பதுமாகும். இதற்கு, தமிழீழ தேசம் தனது தேசத்தகமையைப் பாதுகாப்பது மிகவும் அடிப்படையானதாகும். தமிழீழத் தாயகத்தை கபளீகரம் செய்தும், அதனைத் துண்டாடியும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும் தமிழர் தாயகத்தின் தொடர்ச்சியை இல்லாதொழிப்தற்குச் சிங்கள இனவாதப்பூதம் பகீரத முயற்சிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழர் தாயகத்தின் வடக்கு, தெற்குப் (தென் தமிழீழம் - கிழக்கு மாகாணம்) பகுதிகளை இரு கூறாக்குவதில் சிங்களம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. 1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து 'சுதந்திரம்' அடைந்த போது கிழக்கு மாகாணத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை இன்று 30 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தை நிலரீதியாக மட்டுமன்றி அரசியல்ரீதியாகவும் ஆக்கிரமிப்பதற்கும் சிங்களம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் திட்டமிட்ட முறையில் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. தமிழ் - முஸ்லீம் முரண்பாட்டைத் தூண்டி விடுவதன் ஊடாக சிங்கள அரசுடன் இணைந்து மற்றத் தரப்பை வெற்றி கொள்ள முடியும் என்றதொரு மாiயையை இரண்டு தரப்பின் மத்தியிலும் ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஊடாக, தமிழத் தேசிய அரசியலை கிழக்கு மாகாணத்தில் பலவீனப்படுத்தி, சிங்கள தேசியக் கட்சிகளின் கீழ் தமிழ் , முஸ்லீம் மக்களைக் கொண்டு வரும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. இதேபோல, வடக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கள பௌத்த இனவாதம் செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சிங்கள அரசின் சூழ்ச்சி குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குரங்கு அப்பம் பிரித்த கதையில் வரும் குரங்கு போலத்தான் சிங்கள அரசு செயற்படும் என்ற விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தமிழீழ மக்கள் ஒரு தேசமாக நன்கு வலுப்பட்டு, உருத்திரண்டு நின்று தமிழீழ மக்களின் அரசியற்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்பதே அனைத்துலகச்சூழல் எமக்குச் சாதகமாக அமையும் காலத்தில் நமது விடுதலையை வென்றெடுக்கத் துணை நிற்கும். அன்பான மக்களே, தமிழீழத் தனியரசின் உருவாக்கம் அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால் அனைத்துலக அரங்கில் நமக்கான வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும் நாம் இத் தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும். 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால்; தமிழினவழிப்பின் ஊடாகத் தமிழீழ மண் சிங்களத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளான காலத்தில் உலகம் ஒற்றை அதிகாரமைய உலக ஒழுங்கின் கீழ் இருந்தது. ஓற்றை அதிகாரமைய அரசியல் ஒழுங்கில் அரசற்ற தேசங்களுக்கான அனைத்துலக அரசியல் வெளி மிகவும் மட்டுப்பட்டதாகவே பொதுவாக இருக்கும். அரசியல் ஒழுங்கைத் தலைமை தாங்கும் வல்லரசுகளோடு அரசற்ற தேசங்களது நலன்கள் ஒத்துப் போகாதுவிடின் அத் தேசங்களின் போராட்டங்கள் தோற்கடிக்கப்படுவது இயல்பானதொன்றாக அமைந்து விடும். 1991 ஆம் ஆண்டின் முன்னே உலகம் இரட்டை அதிகார மையம் கொண்டதாக இருந்த காலத்தில் போராடும் சிறிய தேசங்களுக்கு பல்வேறுவகையான வாய்ப்புகள் இருந்தன. அனைத்துலக அரசுகள் தமது அதிகாரத்துக்காக இரட்டை மையமயப்பட்டு போகும்போது இவற்றுக்கிடையே கிடைக்கும் சில வெளிகளைப் போராடும் தேசங்கள் பயன்படுத்தும் வாய்புகள் இருந்தன. தற்போது உலகம் ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ளது. ரஸ்யா – உக்ரேய்ன் போரின் தொடர்ச்சி இப் போக்கை மேலும் வளர்த்து விடக்கூடிய நிலைமைகளைக் கொண்டுள்ளது. அனைத்துலகரீதியாகவும், பிராந்தியரீதியாகவும் உருவாகி வரும் இரட்டைமைய வலுப்பரீட்சைக்கான உதாரணங்களாக இலங்கையில் அமெரிக்கா- இந்தியா எதிர் அணியிலும் சீனா, உக்ரெய்ன் யுத்தத்தில் ரஸ்யா எதிர் மேற்குலகம், தென்சீனக்கடலில் அமெரிக்கா எதிர் சீனா போன்றவற்றைக் கூறமுடியும். ஒற்றை அதிகார மையம் வலுவிழந்து இரட்டை அதிகார மையம் ஏற்படும்போது பலமிக்க அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும். இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும்.இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும். தற்போதைய சூழலில் தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஒன்றுபட்ட அரசியல் தலைமை இல்லாதுள்ளமை தமிழீழ மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்துலக நாடுகளை தமிழர் நலன் சார்ந்து கையாள்வதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின்பாற்பட்டு தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும்; செயற்பட்டு வரும் அமைப்புகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் வழிநின்று ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் செயற்படும் அரசியல் அமைப்புகள் அரசியல் முடிவுகளை ஒன்றுபட்டு எடுப்பதற்காக ஒன்றுபட்ட உயர் தேசிய அரசியல்பீடமொன்றை அமைத்தல் பயன் தரும். தாயகத்தின் அரசியற் சூழலும் புலம் பெயர் அரசியற்சூழலும் அரசியல் வெளி சார்ந்து வேறுபட்டதாக உள்ளமையால் இத் தேசிய அரசியல் உயர்பீடம் தாயகத்துக்கும் புலம் பெயர் நாடுகளுக்கும் தனித்தனியாக அமையலாம். இவ்விரு அரசியல்பீடங்களும் தமக்குள் புரிந்துணர்வான உறவைப் பேணித் தமிழ் மக்கள் சார்பில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம். தாயகத்தில் தனித் தமிழீழம் கோருவதற்கான அரசியல்வெளி சிங்களத்தால் மறுக்கப்படுவதால் திம்புக் கோட்பாடுகளையும், விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் அரசியல் வழிபாட்டுக் கோட்பாடுகளாகக் கொள்ளலாம். இத்தகைய ஒற்றுபட்ட தேசிய உயர் அரசியல்பீடம் அமைக்கப்படுவது குறித்து தமிழ் அரசியல் அமைப்புகள் தமக்குள் உரையாடலை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுதலை இன்றைய மாவீரர் நாளில் முன்வைக்கிறோம். மேலும், தமிழர் தேசத்தை வலுவாக்கும் பொருட்டு தமிழர் தேசிய நிதியம் ஒன்றை நம்பகத் தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆரம்பித்துச் செயற்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது. சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதன் விளைவாக ராஜபக்ச சகோததர்கள் உத்தியோகபூர்வமாக ஆட்சிப்பீடத்தில் இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் நடைமுறையில் அவர்களது ஆட்சியே நடைபெற்று வருகிறது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி இப்போது சற்றுத் தணிந்தது போலத் தோன்றினாலும் இந் நெருக்கடி ஆழப் புரையோடியுள்ளது என்பதும் அது நீண்டகாலம் தொடரும் என்பதும் பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. இந் நெருக்கடிக்கு தமிழின அழிப்புப் போரின் போதும் அதன் பின்னரும் மேற்கோள்ளப்பட்ட இராணுவச் செலவுகள் முக்கிய பங்கு வகித்தன என்பதனை சிறிலங்கா அரசு மறைத்தே வருகிறது. இதனை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் . இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அனைத்துலகப்பொறிமுறையொன்றின் ஊடாக அவற்றை நேரடியாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.அன்பானவர்களே, இவ்வாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://www.virakesari.lk/article/141460
 15. மகிந்தவும் சர்வதேச சதியும் 28 Nov, 2022 | 08:17 AM இலங்கையின் பிரச்சினைகளுக்கு சர்வதேச சக்திகளின் சதி காரணம் என்று கூறுவது ராஜபக்சாக்களுக்கு கைவந்த கலை.அதை அவர்களின் சுபாவம் என்றும் கூறலாம். பாராளுமன்றத்தில் வரவு -- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கடந்தவாரம் (நவ.22) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னால் சர்வதேச சக்தியொன்று இருக்கிறது என்று குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. " பொருளாதார நெருக்கடியின் பின்னால் உள்ள சர்வதேச சக்தி இன்னமும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறது. நாட்டில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த சக்தி அதன் உள்நாட்டு முகவர்கள் ஊடாக அனுசரணை வழங்குகிறது.அவர்களது நடவடிக்கைகள் மீட்சிபெறத் தொடங்கியிருக்கும் சுற்றுலாத்துறையை பாதிக்கின்றன.பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது பற்றி சிலர் கேள்வியெழுப்புகிறார்கள்.வேறு எதையும் விட நாட்டின் பாதுகாப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை " என்று அவர் குறிப்பிட்டார். தங்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய மக்கள் கிளர்ச்சியை சர்வதேச சக்திகளின் தூண்டுதலில் நடந்த ஒன்றாக ஏற்கெனவே ராஜபக்சாக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கு பின்னாலும் ஒரு சர்வதேச சதியை அவர்கள் காண்பார்கள். சிங்கள தேசியவாத சக்திகளை தங்களுக்கு ஆதரவாக எப்போதும் வைத்திருப்பதற்கு அவர்கள் கையாளுகின்ற ஒரு அரசியல் தந்திரோபாயம்தான் அது. மீண்டெழுவது குறித்து பேசும் ராஜபக்சாக்களுக்கு அந்த தேசியவாத சக்திகளின் ஆதரவு அவசியம்.ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டியதை கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளினால் ஜீரணிக்கமுடியவில்லை.தவறான ஆட்சிமுறையின் விளைவான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதுங்கியிருக்கும் இந்த தேசியவாத சக்திகள் மீண்டும் வெளியில் வந்து தங்களது நச்சுத்தனமான அரசியலை முன்னெடுப்பதற்கு தருணத்துக்காக காத்திருக்கின்றன. மீள் எழுச்சிக்காக ராஜபக்சாக்கள் கையாளக்கூடிய அரசியல் அந்த சக்திகளுக்கு வாய்ப்பைக் கொடுக்கக்கூடும்.ஆனால், ராஜபக்சாக்கள் கிளப்பக்கூடிய கடும் தேசியவாதப் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் இனிமேல் முன்னரைப் போன்று எடுபட வாய்ப்பிருக்குமா என்பது ஒரு கேள்வி. தங்களது தவறான ஆட்சிமுறையின் காரணமாகவே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தோன்றியது என்பதை ராஜபக்சாக்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளத்தயாராயில்லை. நாட்டு மக்கள் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு விசித்திரமான எண்ணத்தை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக தாங்கள் எதைச் செய்தாலும் அதை பொறுத்துக்கொண்டு தங்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்ற என்ற எண்ணம் ராஜபக்சாக்களிடம் வேரூன்றியிருந்தது. போர் வெற்றியைக் கூட அவர்கள் தங்களைச் சுற்றி தனிநபர் வழிபாட்டையும் குடும்ப ஆதிக்க அரசியலையும் வளர்க்கவே உச்சபட்சத்துக்கு பயன்படுத்தினார்கள்.மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கே ராஜபக்சாக்கள் போர் வெற்றியை பயன்படுத்தினார்கள் ; மக்களை ஒரு மாயையில் மூழ்கடித்து வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப ஆதிக்க அரசியலுக்கும் அதன் விளைவான தவறான ஆட்சிமுறைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டியவர் மகிந்த ராஜபக்சதான்.அவர் இல்லையென்றால் அவரின் குடும்பம் சுமார் இரு தசாப்தங்களாக அரசியலில் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கமுடியாது. இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.ஆனால் மகிந்த அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் நாடும் மக்களும் வெறுக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதைப் போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை.ராஜபக்சாக்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்ததைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும் மக்கள் செய்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரப் போக்கைப் படிப்படியாக அதிகரித்துவந்திருக்கின்ற போதிலும், ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்தான் அது உச்ச அளவுக்குப் போனது.மட்டுமீறிய ஆதிகாரங்களை குவித்துவைத்திருப்பது ஏதோ தங்கள் பிறப்புரிமை என்பது போன்று அவர்கள் நடந்துகொண்டார்கள்.ஆட்சிமுறையின் கெடுதியான போக்குதள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக அவர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் முன்னைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் சகலரையும் விட ( 20 வது அரசியலமைப்பு திருத்தம் மூலமாக ) கோட்டாபய ராஜபக்சவே கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவராக விளங்கினார். ஆனால், அவரே பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவியில் இருந்து இறங்கிய முதல் ஜனாதிபதியாகவும் மக்கள் கிளர்ச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முதல் ஜனாதிபதியாகவும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறார்.மட்டுமீறிய அதிகார வேட்கையே ராஜபக்சாக்களுக்கு அபகீர்த்தியைக் கொண்டுவந்தது. 2005 தொடக்கம் இதுவரையான 17 வருடங்களில் இடையில் ஒரு நான்கு வருடங்களை தவிர எஞ்சிய காலப்பகுதியில் ராஜபக்சாக்களே அதிகாரத்தில் இருந்தார்கள்.2005 -- 2015, 2019 --2021 காலகட்டங்களில் அதாவது 11 வருடங்கள் மகிந்தவே நிதியமைச்சராக இருந்தார்.சகோதரர் பசில் ராஜபக்ச முதலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தது மாத்திரமல்ல, கோட்டாபய ஆட்சியில் இறுதியாக நிதியமைச்சராகவும் பதவிவகித்தார்.அதனால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு காரணமான தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்கு ராஜபக்சாக்களே பெரும் பொறுப்பு. அதனால், மகிந்த செய்திருக்கக்கூடிய மிகப்பெரிய ' அரசியல் பாவம் ' அதிகார முறைகேட்டுக்கு வழிவகுத்த குடும்ப ஆதிக்க அரசியலை வளர்த்தெடுத்தமையாகும். அவரினதும் பிறகு சகோதரர் கோட்டாபயவினதும் ஆட்சிகளில் முக்கியமான அமைச்சுக்களும் வரவு -- செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூன்றில் இரண்டு பங்கும் அவர்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தன.தங்கள் குடும்பத்தவர்கள் மாத்திரமல்ல, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், கையாட்களும் ஊழல் முறைகேடுகளினால் பயனடையக்கூடியதாக ஒரு ' புரவு கலாசாரத்தை ' ( Patronage ) யும் அவர்கள் வளர்த்தெடுத்தார்கள்.பசில் ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்க திரண்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,ஆதரவாளர்கள் கூட்டம் இதற்கு உதாரணமாகும். மகிந்த ராஜபக்ச அண்மையில் ( நவ. 18) தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இந்த பிறந்த தினத்துக்கு பிறகு அவர் மீண்டும் தீவிரமாக அரசியல் பணிகளில் இறங்கப்போகிறார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு ஆரவாரமான ஏற்பாடு எதையும் உடனடியாக காணமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் ' மீண்டும் ஒன்றாக எழுவோம் ' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஓரிரு பொதுக்கூட்டங்களை நடத்தியது. அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதனாற்போலும் இப்போது அத்தகைய பொதுக்கூட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. மகிந்தவைப் பொறுத்தவரை, இனிமேல் அவர் தனது சகோதரர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தளவுக்கு அக்கறை செலுத்துவாரோ தெரியவில்லை.ஆனால் தனது மூத்த புதல்வன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால வாய்ப்புக்களை தான் அரசியலில் இருக்கும் காலத்தில் உறுதிசெய்வதில் அதீத கவனம் செலுத்துகிறார்.தான் இல்லையென்றால் மகன் ஓரங்கட்டப்பட்டுவிடுவார் என்ற அச்சமும் அவருக்கு இருக்கக்கூடும். மக்கள் கிளர்ச்சி தீவிரமடையத்தொடங்கியபோது ஏப்ரில் பிற்பகுதியில் பிரதமராக இருந்தவேளையில் டெயிலி மிறர் பத்திரிகைக்கு விசேட நேர்காணல் ஒன்றை மகிந்த வழங்கியிருந்தார்.அதில் அவரிடம் " தற்போதைய நிலைவரம் உங்கள் மகனின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " அதுவெல்லாம் மகனில் தான் தங்கியிருக்கிறது. அவர் அரசியலில் இருப்பதற்கு தனது தந்தையின் பெயரையோ அல்லது சிறியதகப்பன்மாரின் பெயர்களையோ அல்லது பாட்டனாரின் பெயரையோ விற்கமுடியாது.மக்களுடன் சேர்ந்துதான் அவர் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் " கூறினார். மகிந்தவின் பதில் வேறு ஒரு அர்த்தத்தில் இருந்தாலும், அவர் கூறியதில் ஒரு பெரிய உண்மை இருந்தது.அதாவது தனது பெயரையோ அல்லது தனது சகோதரர்களின் பெயர்களையே சொல்லிக்கொண்டு நாமலினால் அரசியலில் ஒருபோதும் முன்னுக்குவர முடியாது.மக்கள் கிளர்ச்சி காலத்தில் அரசாங்கத்தின் தவறுகளில் இருந்து தன்னை தூரவிலக்கிக்கொள்ளும் வகையில்தான் அவர் கருத்துக்களை வெளியிட்டார்.மூத்த ராஜபக்சாக்களின் தவறுகள் இளம் நாமலின் எதிர்கால அரசியல் பயணத்தில் பெரிய சுமையாகவே இருக்கப்போகிறது. சர்வதேச சக்திகளின் சதி என்ற பல்லவியைப் பாடிக்கொண்டிராமல், மக்களை பெரும் அவலத்துக்குள்ளாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தங்களது தவறுகளை மகிந்த ராஜபக்சவும் சகோதரர்களும் மக்கள் முன் ஒத்துக்கொண்டு ஒரு குறைந்த பட்ச அரசியல் நேர்மையையாவது வெளிக்காட்டத் தயாராயில்லை.சர்வதேச சதி பற்றி பல்லவி பாடுகிறார்கள். ராஜபக்சாக்களின் அரசியல் மரபு என்று ' சிதைந்துபோன - வங்குரோத்து தேசத்தைத்' தான் மக்கள் எதிர்காலத்தில் நினைவுகூருவார்கள். https://www.virakesari.lk/article/141435
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.