Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  30156
 • Joined

 • Days Won

  129

Posts posted by கிருபன்

 1. கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா?

  புருஜோத்தமன் தங்கமயில்

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்‌ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார்.

  சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார்.

  இதனை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் மறுத்த போதும், அவர் அதனை நிராகரித்து, தமிழ் மக்களின் நலனுக்காக சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அவர்கள் யாரென்பது தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

   ஜனாதிபதித் தெரிவுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் என்ன தீர்மானத்தினை எடுப்பது என்பது தொடர்பில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ரணிலுக்கு வாக்களிக்க முடியாது என்ற ஒரே நிலைப்பாட்டில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிப்போம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்கள். ஆனால், நாட்டு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, ராஜபக்‌ஷர்கள் இல்லாத ஆட்சிக்கான நிலைப்பாடு எனும் நோக்கில், டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு இறுதியில் தீர்மானித்தது.

  அதனை டலஸ் – சஜித் பிரேமதாஸ கூட்டோடு இணைந்து படம் எடுத்து ஊடகங்களிடம் அறிவிக்கவும் செய்தது. ஆனால், அந்தப் படங்கள் வெளிவந்த சில நிமிடங்களிலேயே ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில், ரணில் அணியை கூட்டமைப்பின் பங்களிக்கட்சியின் தலைவர் ஒருவரும் அவரின் கட்சி உறுப்பினர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெளிவந்துவிட்டது. 

   ஜனாதிபதி தெரிவு என்பது, இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும் ஏற்பாட்டை தமக்கு சாதகமாகக் பயன்படுத்திக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அதில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது, வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னாலேயே தெரியவந்துவிட்டது.

  கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி, அதன் உறுப்பினர்கள் சிலர் வாக்களிக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி பரவியதும், கூட்டமைப்பின் தலைமை அஞ்சத் தொடங்கிவிட்டது. ஆனாலும், அவ்வாறான நிலையொன்று இல்லை என காட்டிக் கொண்டது.

  வாக்கெடுப்பு முடிந்து, ரணில் வெற்றிபெற்றதும் கூட்டமைப்பின் தீர்மானத்தை, அதனை கூடி எடுத்த உறுப்பினர்களில் குறைந்தது நான்கு பேராவது மதிக்காமல், ரணிலை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதனை, ரணில் அணியின் ஹரீன் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியைத்தான் ரணில், கூட்டமைப்பினருடனான கடந்த வாரச் சந்திப்பின் போதும் செய்தார். 

   தமிழ் மக்களின் பிரதான கட்சியாக ஒரு கட்டம் வரையில் தன்னை நிரூபித்து வந்த கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான தரகு அரசியலை செய்வதாக குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உண்டு.

  கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் என்று எந்தக் கட்சியும் எந்தப் பாகுபாடும் இன்றி, தரகு அரசியலின் பங்காளிகாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியலை கூச்சமின்றி செய்து வருகிறார்கள். அதுதான், கடந்த பொதுத் தேர்தலில் மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கவும் காரணம். தேர்தல் முடிவுகளைப் பார்த்தாவது, கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களைத் திருத்திக் கொண்டு மக்களை நோக்கிய அரசியலுக்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்று நம்பினால், அதில் அவர்களே நாளாந்தம் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

  கூட்டமைப்பு இரா. சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழரசுக் கட்சி என்கிற ஒற்றைக் கட்சிக்குள் சுருங்கிவிடும் கட்டமும் வந்துவிட்டது.

  மாறாக, பங்காளிக் கட்சிகளுக்கு இடையில், ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை தொடர்பிலான ஒழுக்கம் ஏதும் இல்லை. அதனை, ஆரம்பித்து வைத்ததில் தமிழரசுக் கட்சியே பிரதான பங்கை வகித்தது. ஒரே கூட்டணிக்குள் இருந்து கொண்டே, பங்காளிக் கட்சியின் உறுப்பினரை திருடி, தங்களின் கட்சி வேட்பாளராக அறிவித்தது முதல், தமிழரசுக் கட்சி கசடுத்தனமான அரசியலை செய்து வந்திருக்கிறது. அதனை, மாவை சேனாதிராஜா அரசியல் நெறியாகவே முன்னெடுத்து வந்திருக்கிறார். தங்களை விட்டால் யாரும் இல்லை என்ற நினைப்பில் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கு அந்தக் கட்சி சற்று பின்னடைவைச் சந்தித்ததுமே பங்காளிக் கட்சிகள் ஆட்டங்காட்டத் தொடங்கியிருக்கின்றன. 

  இன்றைக்கு, தமிழரசுக் கட்சி ஒரு பக்கத்திலும் டெலொவும் புளொட்டும் இன்னொரு பக்கத்திலும் நின்று கூட்டமைப்பின் அரசியலைச் செய்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே குறைந்தது மூன்று அணி இருக்கின்றது.

  இப்படியான நிலையில், கூட்டமைப்பினை மக்களை நோக்கி மீண்டும் நகர்த்திச் செல்வது என்பது, எவ்வளவு அபத்தமான நம்பிக்கை. ரணில் - ராஜபக்‌ஷ கூட்டினை ஆதரித்து, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அதற்கான சன்மானங்களை பெற்றுக் கொண்டதான தகவல், மக்களிடம் பரவியிருக்கின்றது.

  இந்த நிலையில், ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கு வெள்ளையடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தனக்கு வாக்களித்ததாக அவர்களின் முன்னாலேயே ரணில் கூறும்போது, அமைதியாக இருந்துவிட்டு வந்த சிலர், இன்றைக்கு ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நின்று,, தாங்கள் புலிகளின் வாரிசுகள் என்ற தோரணையில் முழங்குவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. 

  சமாதானப் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் விடுதலைப் புலிகளை ரணில் துண்டாடினார். அதுதான், புலிகளை ராஜபர்ஷர்கள் அழித்து ஒழிக்க காரணமானது என்ற உணர்நிலையொன்று தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அதனால்தான் ரணிலை ‘நரி’ என்ற அடையாளப்படுத்தல் பலம்பெற்றது.

  கூட்டமைப்பினை பிரித்தாளுவதற்காக ரணில் இப்போது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் எண்ணெய் ஊற்றி அனுப்பியிருக்கிறார் என்ற வாதம் வைக்கப்படுகின்றது.

  பௌத்த - சிங்கள அடிப்படைவாத அரசியலில் ஐம்பது ஆண்டுகளாக பயணிக்கும் ரணிலுக்கு, கூட்டமைப்பினை பிரித்தாளும் தேவை இருக்கிறது. ஏனெனில், தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வது என்பது எப்போதுமே பௌத்த - சிங்கள பேரினவாதத்துக்கு சிக்கலானது.

  அப்படியான நிலையில், ரணில் கூட்டமைப்பை பிரித்தாள நினைப்பார் என்பது தர்க்கரீதியிலானது. ஆனால், ரணில், அதைச் செய்வதற்காக கூட்டமைப்பினருடனான சந்திப்பை பயன்படுத்திய போது, கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அமைதி காத்தது ஏன் என்பதுதான் முக்கிய கேள்வி.

  அத்தோடு, ரணில் பிரித்தாளும் கட்டத்தை முன்னெடுக்க முன்னரேயே கூட்டமைப்பு பல முனைகளில் துருத்திக் கொண்டு நிற்கத் தொடங்கிவிட்டது. அப்படியான நிலையில், ரணிலின் தந்திரத்துக்கு கூட்டமைப்பு ஆளாகக் கூடாது என்று மேம்போக்காக பேசிக் கடக்க முடியாது. 

  கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களுக்குள் யார் யார் விலை போனார்கள் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், அதனை அவர்கள் முழுமையாக வெளிப்படுத்தவோ, கூட்டமைப்புக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளை களை எடுக்கவோ விரும்பமாட்டார்கள்.

  ஏனெனில், கூட்டமைப்பின் தலைவர்களில் பலரும் ஒவ்வொரு கட்டத்தில் கறுப்பு ஆடுகளாக வலம் வருபவர்கள். தற்போதையை கறுப்பு ஆடுகளை பகிரங்கப்படுத்தினால், பகிரங்கமாக்கப்பட்டவர்கள் வெளியே வந்து மற்றவர்களையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பது நிலை. ஏனெனில், கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளுக்கு காட்டிக் கொடுத்தல் என்கிற கடந்த கால கறுப்பு வரலாறு உண்டு.

  அப்படியான நிலையில், மக்களை ஏமாற்றும் கூத்துகளை மாத்திரம் மேடைகளைப் போட்டு நிகழ்த்துவார்கள். தமிழ்த் தேசிய அரசியலை அயோக்கியர்களின் கூடாரமாக்கிவிட்டு, கூட்டமைப்பு கலைந்து போகும் காலம் தொலைவில் இல்லை. 

   

  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பு-கைக்கூலிகளின்-கூட்டு-ஆகிறதா/91-302133

   

 2. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா?

  என்.கே. அஷோக்பரன்

  Twitter: @nkashokbharan

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். 

  ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும்.

  வழமைபோல, எதிர்க்கும் கட்சியான ஜே.வி.பி, இதனை எதிர்த்து நிற்கிறது; இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நாட்டை ஆளும் எண்ணத்தில், அரசியல் செய்யும் பல கட்சிகள் இருந்தாலும், காலம் முழுவதும், எதிர்ப்பரசியல் செய்யும் எண்ணத்தில் இயங்கும் கட்சிகளும் உள்ளன. ஜே.வி.பி. இதில் இரண்டாவது ரகம்.

   மக்களின் எதிர்ப்பை, கொதிப்பை, சினத்தை தமக்குச் சாதகமாக்கி, தமது வாக்குவங்கியை அதிகரிப்பது பற்றித்தான் ஜே.வி.பி சிந்திக்கிறது என்றே தோன்றுகிறது. மூன்றாக இருக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை, 2004இல் தமக்கிருந்ததைப் போல, 39 பாராளுமன்ற உறுப்பினர்களாக அதிகரிக்கும் கனவில் ஜே.வி.பி இயங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஜே.வி.பியாகத் தனித்துப் போட்டியிட்டு, அந்த 39 ஆசனங்களும் ஜே.வி.பிக்குக் கிடைக்கவில்லை.

  சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூர முகமாக ஜே.வி.பி இருந்தபோது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் பங்குதாரராக, அந்தத் தேர்தலில் போட்டியிட்டே ஜே.வி.பிக்கு 39 ஆசனங்கள் கிடைந்திருந்தன.

  மறுபுறத்தில், சரத் பொன்சேகா உட்பட்ட சிலர், சர்வகட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதன் காரணமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நீண்டகாலத் திட்டமாகத்தான் இருக்கமுடியும். ராஜபக்‌ஷர்கள் பிரபல்யம் இழந்திருக்கும் இன்றைய நிலையில், அரசியலில் அந்த இடைவௌியை நிரப்ப, டளஸ் அழகப்பெரும மட்டுமல்ல, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றோரும் கனவு காண்கிறார்கள். 

  சுதந்திர இலங்கையின் சாபம் என்பது, சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் ஆகும். இலங்கையை மிக மோசமான ரீதியில் கூறுபோட்டு, ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றைக் கட்சியெழுப்ப முடியாதவாறு, சிங்கள-பௌத்த பேரினவாதம், இலங்கை அரசியலைப் பீடித்திருந்தது. 

  அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான போட்டியென்பது, யார் மிகப்பெரிய சிங்கள-பௌத்த பேரினவாதி என்ற போட்டியாகவே மாறிப்போனது. பண்டாரநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர்., சந்திரிகா, மஹிந்த, கோட்டா என, சிங்கள-பௌத்த இன-மதத் தேசிய வாக்குவங்கியைக் கவர்வதற்காக, சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக எதையும் செய்யத் துணிந்தவர்களே, பலமான தலைவர்களாக, பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றார்கள். இதுதான், இலங்கையின் கறுப்பு வரலாறு. 

  இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், 1983 ஜூலை 11 ஆம் திகதி, ‘லண்டன் டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அளித்திருந்த ஒரு குறுஞ்செவ்வி ஆகும். அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அன்று தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது. 

  அந்தக் குறுஞ்செவ்வியில், “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”.

  1990களில், தமது மாக்ஸிஸப் புரட்சி தோற்கடிக்கப்பட்டபின்னர், தம்மை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டு வந்த ஜே.வி.பி, மக்களாதரவைப் பெறுவதற்காக, சிங்கள-பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தது.

  2000களில் மிகப்பெரிய, சிங்கள-பௌத்த பேரினவாத சக்தியாக ஜே.வி.பியே திகழ்ந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான மனநிலையை, சிங்கள-பௌத்த மக்களிடையே விதைத்தில், ஜே.வி.பியின் பங்கு அளப்பரியது. 

  மஹிந்த ராஜபக்‌ஷ, யுத்த வெற்றியை நோக்கி பயணித்து, அதை நெருங்கும் வரை ஜே.வி.பியே, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் குத்தகைக்காரராக இருந்தது. யுத்த வெற்றி, சிங்கள-பௌத்த மக்களின் மாவீரனாக மஹிந்தவை ஆக்கிய பின்னர், அரசியலில் தப்பிப் பிழைப்பதற்காக தனது பாதையை மாற்ற வேண்டிய தேவை, ஜே.வி.பிக்கு ஏற்பட்டது. அவர்கள், அநுர குமார தலைமையில் தாராளவாத முகமூடியை அணிந்துகொண்டார்கள். நிற்க!

  image_451bd39842.jpg

  அண்மையில், தனது முதலாவது சிம்மாசன உரையில், ஜனாதிபதி ரணில் சொன்ன ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. “நான் அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்தே, இன, மத, மொழி, சாதி பிரிவினைகள் இல்லாத இலங்கை அடையாளத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு தாயின் குழந்தைகள், ஒற்றுமையாக வாழக்கூடிய தேசத்தை உருவாக்க வேண்டும். இந்தச் செயற்பாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டதால், அரசியல் தோல்விகளைச் சந்தித்தேன். இது தீவிர கொள்கை உடையவர்களால் விமர்சிக்கப்பட்டது. இனவெறி மற்றும் மதவெறிக்கு எதிரான எனது தொடர்ச்சியான நிலைப்பாட்டின் காரணமாக, சில அரசியல் கட்சிகள் என்னை இனவாதி என்று அவதூறு செய்தன. எனினும், எனது கொள்கையிலிருந்து நான் விலகவில்லை. அந்தக் கொள்கையில் இருந்து நான் விலக மாட்டேன்” என்று ஜனாதிபதி ரணில் கூறயிருந்தார். 

  இது பட்டவர்த்தனமான உண்மையும் கூட! ரணில் மீது பல விமர்சனங்களைப், பலரும் முன்வைக்கலாம். ஆனால், ரணில் இனவாதியல்ல; அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல. ரணில் மீது அநேக தமிழர்கள், முஸ்லிம்கள், உள்ளிட்ட சிறுபான்மையினரிடம் ஒருவகை நல்லெண்ணம் உள்ளமைக்கு இதுதான் காரணம்.

  அரசியல் காய்நகர்த்தல்களில் ரணில், தனது மாமா ஜே.ஆரைப் போல ‘நரி’யாக இருக்கலாம், ஆனால், ஜே.ஆரைப் போல, ரணில் இனவாதத்தை அரசியலுக்கு பயன்படுத்தியவர் அல்ல. இனவாதம் பேசினால், பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியைக் கவரலாம் என்ற போதிலும் கூட, அதைச் செய்யாதவர் ரணில்.

  ஆகவே, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருக்கும் இன்றைய சூழல், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வொன்றுக்கான முன்னகர்த்தலை முயற்சிக்கக்கூடிய அரிய தருணம். 

  இதன் அர்த்தம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளும், ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு நாளில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதல்ல; மாறாக, கோட்டா வந்த போது வாய்ப்பே இல்லையென்று ஆகிப்போன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தற்போது அதிகரிப்புவாத (incrementalism) அடிப்படைகளில், அடுத்த கட்ட நகர்வுகளைச் செய்யக் கூடிய சாத்தியம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

  ஒன்றிரண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இந்த வாய்ப்பை தட்டிக் கழித்துவிடக்கூடாது என்பதுதான், இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாக இருக்கிறது. 

  இலங்கை இன்று கண்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலை, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்பில், ஒரு துளி எதிர்மறையான எண்ணத்தை, சிங்கள-பௌத்த மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திர இலங்கை எடுத்துக்கொண்ட அரசியல் பாதை தவறு என்பதையும், சிறுபான்மையினர் நடத்தப்பட்ட விதம் பிழை என்பதையும் பலரும் உணர்வதாகத் தெரிகிறது. 

  இந்த நேரத்தில், சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தனது, அரசியல் மூலதனமாகக் கொண்டிராத ஒருவர் ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் திறமையிலும் இராஜதந்திரத்திலுமே தங்கியிருக்கிறது. 

  ரணிலை எதிர்ப்பது என்பது இலகுவான தெரிவு. அதனால், தமிழ் மக்களுக்குப் பலனேதுமில்லை. ஆனால், ஜனாதிபதி ரணிலோடு, அரசியல்ரீதியாக ஈடுபடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஏதேனுமோர் அடைவையேனும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், அது ஒரு பலனுமில்லாத எதிர்ப்பைவிட, நன்மையானதே. 

  தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை விடுத்து, இதைச் ‘சாத்தியமான அரசியல்’ பற்றிப் பேசும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாவது செய்வார்களா என்பதே, இங்கு கேள்வி. ‘வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு’ என்ற வள்ளுவன் வாக்கை, தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகள் தொடர்பில் சிந்தனையில் கொள்ள வேண்டும்.

   

   

  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினைக்கான-அரசியல்-தீர்வு-வருமா/91-302128

 3. ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி

  ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி 

  — கருணாகரன் — 

  இலங்கை அரசியல் களம் கொந்தளித்துக் கொண்டேயிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள், அதிரடிகள், மாற்றங்கள், சறுக்கல்கள், எழுச்சிகள் என ஒரே அமர்க்களக் காட்சிகள். அடுத்து என்ன நடக்கும் என்ற பதிலற்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலுமிருந்தும் எழுந்து கொண்டிருக்கிறது. 

  முன்பெல்லாம் அரசியல் போட்டிகள், மாற்றங்கள், திருப்பங்கள் நடந்தாலும் அதற்கு அப்பால் வெகு தொலைவில் சனங்களின் வாழ்க்கை அதிக சேதாரமில்லாமல் இயல்பு நிலையில் இருக்கும். இப்பொழுது சனங்களின் வாழ்க்கைதான் அதிகமாகக் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கிறது. அதன் மீதுதானே பொருளாதாரக் குண்டு விழுந்து வெடித்துள்ளது. 

  இந்தப் பொருளாதாரக் குண்டு வெடிப்பினால் (Economic explosion) மண்ணெண்ணெய்க்கும் பெற்றோலுக்கும் எரிவாயுவுக்குமாக நாட்கணக்கில் தெருவில் நிற்க வேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு எந்த நேரம் மின்வெட்டு வரும் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது போதாதென்று அடுத்த ஆறு மாதங்களுக்குக் கடினமான காலமாக இருக்கும். விரும்பியோ விரும்பாமலோ இதைக் கடந்துதானாக வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதியும் எச்சரித்திருக்கின்றனர். அப்படியென்றால் அரிசி, பருப்பு, சீனிக்கும் அடுத்த க்யூ முளைக்கப்போகிறது! இப்படி நாடிருக்கும்போது உச்சி குளிருமா? உள்ளம் கொதிக்குமா?  

  இந்தக் கொதிப்பும் கொந்தளிப்புமே அரசியற் களத்தையும் கொந்தளிக்களிக்க வைத்தது. 

  சனங்களின் கொதிப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிய ராஜபக்ஸவினரைக் காப்பாற்ற ஓடோடி வந்தான் இந்த நவீன ராதா கிருஸ்ணன் மன்னிக்கவும் ரணில் கிருஸ்ணன். அப்படி வந்தவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தினார். ஒரு மாங்காயை அவர் தனக்கென எடுத்துக்கொண்டார். அதுதான் அவருடைய ஜனாதிபதி பதவியும் ஆட்சித் தலைவர் என்ற அதிகாரமும். 

  அடுத்த மாங்காய், ராஜபக்ஸவினரைப் பாதுகாத்து ஓரத்தில் வைத்திருப்பதாகும். ராஜபக்ஸவினரைப் பாதுகாப்பதென்பது ஒரு வகையில் ரணில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான். அவர்களைப் பாதுகாக்கவில்லை என்றால் ரணிலுக்கும் பாதுகாப்பில்லை. ஏனென்றால் தலைமைப் பொறுப்புகள், பதவிகள் என்ற வெளி அரங்கிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்றத்திலும் அரசியல் தீர்மானங்களிலும் இன்னும் ராஜபக்ஸவினரின் கைகளே ஓங்கியுள்ளன. ‘பொதுஜன பெரமுன’ என்ற ராஜபக்ஸவினரின் கட்சியே பாராளுமன்றத்தில் செல்வாக்கையும் பலத்தையும் கொண்டுள்ளது. இப்படியிருக்கும் வரை அதை ரணிலும் அனுசரித்தேயாக வேண்டும். ரணிலை அனுசரித்துப் போனால்தான் ராஜபக்ஸவினருடைய தலைகளும் தப்பும். ஆக மொத்தத்தில் நடந்து கொண்டிருப்பது ஆளை ஆள் பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாட்டமாகும். 

  இதற்குப் பின்னணியில் வெளிச்சக்திகளின் கைகளே வலுவாக உள்ளன. இலங்கை அரசியற் சீரழிவும் தலைமைகளின் தவறுகளும் நாட்டின் இறைமையை இல்லாதொழித்துள்ளன. அந்த வெளிச்சக்திகளே இப்படியானதொரு நிலைமையையும் உருவாக்கியுள்ளன. 

  இதுதான் இலங்கை அரசியலில் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. வழமையான அதிகாரத் தரப்புகளைத் தவிர, புதிய சக்திகள் எதுவும் அதிகாரத்துக்கு வரக் கூடாது. மறந்தும் மக்களாட்சியோ மக்களுக்கான ஆட்சியோ நடந்து விடக் கூடாது. மக்களை வைத்துப் பிழைக்கும் கொம்பனிகளின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்பதாக. 

  இதற்காக உள்ளுரின் அதிகாரச் சக்திகளும் வெளியாதிக்கத்தரப்புகளும் ஒரே புள்ளியில் இணைகின்றன. 2019இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி + ஐக்கிய தேசியக் கட்சி = கூட்டாட்சி (நல்லாட்சி) நடந்ததும் இந்த அடிப்படையில்தான். இதற்காக இந்த அதிகாரத் தரப்புகள் எல்லாமே தமக்குள் சமரசங்களைச் செய்து கொள்கின்றன. இப்படி ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிக்கின்ற, தாங்கிப் பிடிக்க வேண்டிய, அரசியல் யதார்த்தத்தில்தான் இலங்கை நசிந்து, நலிந்து கொண்டிருக்கிறது. 

  ‘நாடு நசிகிறதோ நலிகிறதோ எப்படியாவது போகட்டும். நாம் இதற்குள் நம்முடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வோம்’ என்றிருக்கும் ரணில் – ராஜபக்ஸவினரின் கூட்டு அரசியலில் இப்பொழுது ஆட்ட நாயகனாக ரணிலே இருக்கிறார். இதுவரையிலும் ராஜபக்ஸவினரின் ஆட்டக்களமாக இருந்த அரசியல் அரங்கை, அப்படியே அலாக்காகத் தூக்கித் தன்னுடைய கக்கத்தில் வைத்திருக்கிறார் ரணில். 

  ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியதைப் போல திடீர் அரசியல் அதிர்ஸ்டக்காரன் ஆகியிருக்கிறார் விக்கிரமசிங்க. இப்பொழுது அவர் “சிங்கமொன்று புறப்பட்டது..” என்று ஹாயாகப் பாடிக் கொண்டு தனக்கு எதிரேயிருக்கும் ஒவ்வொரு காய்களையும் ‘ஹாயாக’ வெட்டிக் கொண்டிருக்கிறார். இதில் யாருடைய தலைகள் உருளும்? யாருடைய தலைகள் தப்பும் என்று விக்கிரமாண்டேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம். 

  ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் முதலில் செய்த களையெடுப்பு, காலிமுகத்திடல் போராட்டக்காரரை – தான் ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்புகளை மறைமுகமாக உருவாக்கிக் கொடுத்த புண்ணியவான்களை – தேடிப் பிடித்துச் சிறையில் தள்ளிக் கொண்டிருப்பதேயாகும். அடுத்த கட்டமாக அந்தப் போராட்டக்களத்தையே –காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த Gota go Gama கிராமத்தையே – துடைத்து அழித்து விட்டார். ‘வேண்டுமென்றால், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் இடத்தில் போய்க் குந்தியிருந்து கொண்டு போராடுங்கள்’ என்று பெருமனதோடு சொல்லியிருக்கிறார் பெருமானார். 

  “இதெல்லாம் தப்பு. போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. அவர்களுடைய போராட்டத்துக்கு இடமளிக்க வேண்டும்” என்று சொன்ன அமெரிக்கத் தூதரைக் கூப்பிட்டு, “உங்களுடைய வெள்ளை மாளிகைக்கு முன்னால் இப்படி யாராவது நின்று சத்தம் போட்டால் அவர்களுக்கு கேக்கும் ஐஸ்கிறீமுமா கொடுப்பீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். (இதொரு அரசியல் நாடகம் என்பது பிந்திய நாட்களில் நடந்த காட்சிகள் நிரூபிக்கின்றன. இப்பொழுது அமெரிக்கத் தூதுவரும் ஜனாதிபதியும் மிக அந்நியோன்னியமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர்). 

  பிரதமராக இருந்தபோது “போராடுவது மக்களின் உரிமை. எவரும் தாராளமாகப் போராடலாம்” என்று ஒரு மாதத்துக்கு முன்பு திருவாய் மலர்ந்த இந்த லிபரல் ஜனநாயகவாதி, ஜனாதிபதியானவுடன் ஜனநாயக வழிப்போராடிகளுக்குச் சிறைக்கதவுகளை அல்லவா திறந்து விட்டிருக்கிறார்! மட்டுமல்ல, அநாமதேயக் கொலைகள் வேறு நடக்கின்றன –நடத்தப்படுகின்றன. 

  கடந்த ஒரு மாதத்துள் மட்டும் 21 கொலைகள் நடந்துள்ளன என்று பொலிஸ் விவரங்கள் சொல்கின்றன. இந்தக் கொலைகளை நடத்தியவர்களில் யாருமே கைது செய்யப்படவும் இல்லை. அடையாளம் காணப்படவும் இல்லை. எல்லாமே இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்டவை என்பதுதான் சிக்கலுக்குரியது. இப்படியான கொலைகள்தான் முன்பும் நடந்தன – நடத்தப்பட்டன. இது போராடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் அரச வழிமுறையாகும். இனி வரும் காலத்தில் இது பெரிய விபரீதங்களையெல்லாம் உண்டாக்கப் போகிறது என்று தெரிகிறது. 

  இதேவேளை ‘அரகலய’ போராட்டக்காரர்களை 06.08.2022இல் அழைத்து நல்லுபதேசத்தை வழங்கியிருக்கிறார் விக்கிரமாண்டேஸ்வரப் பெருமான். இந்தச் சந்திப்பில் “இளைய தலைமுறையினரின் எண்ணங்களைப் பரிசீலிக்கிறோம். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு அரசியலில் உரிய இடமளிக்கப்படும் என்றிருக்கிறார். இது அரகலயவினரின் கோபத்தைத் தணிப்பதற்கான உத்தி. இந்த உத்தியில் அவர் கணிசமான அளவுக்கு வெற்றியும் அடைந்துள்ளன. இதற்கொரு சிறந்த உதாரணம், ஓகஸ்ற் 09இல் அடுத்த எழுச்சி நடக்கும் என்றிருந்த நிலையை அப்படியே உறங்கு நிலைக்குத் தள்ளி விட்டார் விக்கிரமசிங்க. 

  இதொன்றும் புதியதல்ல. 1977இல் மாமனார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா செய்தவைதான். அந்த வழியை மருமகன் ரணில் வெற்றிகரமாகத் தொடர்கிறார். அவ்வளவுதான். 

  ஜே.ஆர். 1977இல் ஆட்சியதிகாரத்துக்கு வந்தவுடன் செய்தது ஜனநாயக அரங்கை முடியதேயாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தையும் அவருடைய அணியையும் நாட்டை விட்டுக் கலைத்தார். சிறிமா பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தார். ஜனநாயக வழியில் போராடிய தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றிக் கைது செய்து சிறையிலடைத்தார். பிறகு சிறைச்சாலைக் கலவரத்தை உருவாக்கி அவர்களைக் கொன்றார். ஊர்களை படைகளைக் கொண்டு எரித்தார். படை நடவடிக்கைகளின் மூலம் படுகொலை அரங்குகளைத் திறந்தார். ஊடக சுதந்திரத்தை தணிக்கையின் மூலம் அச்சுறுத்தினார். அவசரகாலச்சட்டம், ஊரடங்குச் சட்டம், பயங்கரவாதச் சட்டம், புலித்தடைச் சட்டம் எனப் பல சட்டப் பூட்டுகளால் சமூகத்தை முடக்கினார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்றால் அடக்குமுறை அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்துவதே. இதன் ஒரு அம்சமாக அமைச்சர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கித் தன்னுடைய சட்டைப் பைக்குள் வைத்திருப்பது என்பது வரையில் எதையும் எப்படியும் செய்ய  முடியும் என்று வில்லங்கமான காரியங்களையெல்லாம் செய்து அந்தப் பதவியை –அதிகாரத்தைப் பரிசோதித்துப் பார்த்தார். 

  இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் இதே வழியில், ஜே.ஆரைப் போலச் சில பரிசோதனைகளைச் செய்ய முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது. தன்னுடைய அதிகாரத்துக்கு முன்னே எதிர்த்தரப்பு என்று எதுவுமே இருக்கக் கூடாது என்ற விதமாகச் சிங்க செயற்படுகிறார். இதற்காக அவர் வகுத்திருக்கும் பத்மவியூகமே சர்வகட்சி ஆட்சியாகும். இந்தப் பொறியில் யாரும் சிக்காதிருக்க முடியாது. அப்படிச் சிக்காதவர்கள் மக்கள் விரோதிகள். மக்கள் துயர் தீர்ப்பதில் அக்கறையில்லாதவர் என்றொரு படத்தைக் காட்டுவதற்கு ரணிலுக்கு வாய்ப்பாகி விட்டது. பொருளாதார நெருக்கடி என்ற தேசியச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வராதவர்கள், ஒத்துழைக்காதவர்கள் எல்லாம் கறுப்பாடுகள் என்று மக்களுக்குக் காட்டுவதற்கு ரணிலுக்கு  வாய்ப்புக் கிட்டியுள்ளது. 

  இதனால்தான் சஜித் பிரேமதாசா தொடக்கம் சம்மந்தன் வரையில் விருப்பமில்லாமலே கொடி காட்ட வேண்டி வந்திருக்கிறது. (இவர்களுடைய கழுத்தில் நுகத்தடியை பிராந்திய சக்தியும் மேற்குலகும் ஏற்றி வைத்துள்ளன) ஏற்கனவே தங்கள் விருப்பத்துக்கு அப்பால் நின்றே ரணிலை ஆதரித்து, அனுசரித்துப் போக வேண்டி வந்தது ராஜபக்ஸக்களுக்கு. இப்பொழுது அந்த நிலை வந்திருக்கிறது மற்ற ஆட்களுக்கும். ஆகவே கொஞ்சக் காலத்துக்கு இலங்கையில் எதிர்க்கட்சியோ எதிரணிகளோ இல்லை என்ற நிலையே நீடிக்கப்போகிறது. ஜே.ஆர். பெற்ற வெற்றியைப் போல ரணிலும் இதில் வெற்றியடைய முயற்சிக்கிறார். அதாவது எதிர்த்தரப்பு இல்லாத ஆட்சியொன்றை ரணில் நிறுவப்போகிறார். 

  ஆக மொத்தத்தில் எல்லோராலும் தோற்கடிக்கப்பட்ட விக்கிரமசிங்க, இப்பொழுது எல்லோரையும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார் என்றே கூற வேண்டும். இதுதான் தலைகீழ் மாற்றம் என்று சொல்வது. இலங்கையில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், பிரச்சினைகளில் மாற்றம் (தீர்வு) எல்லாம் வந்திருக்கிறதோ இல்லையோ, தலைகீழ் மாற்றம் மட்டும் தப்பாமல் நிகழ்ந்திருக்கிறது. அப்படியான ஒன்றுதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி விரட்டப்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஜனாதிபதியாக்கப்பட்டிருக்கிறார். (அரசியலமைப்பின்படிதான் தான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன் என்று ரணில் சொன்னாலும் நிஜ உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்). 

  வாய்ப்புகளை தமக்கென உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவது ஒரு வகையான திறமை. அதேவேளை அபூர்வமாகக் கிடைக்கின்ற வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவற்றைச் சரியாக பயன்படுத்துவது இன்னொரு வகையான திறன். நெருக்கடிக்கு முகம் கொடுப்பது, அவற்றைத் திறமையாகக் கையாள்வது, அவற்றின் ஊடே வெற்றி இலக்கைச் சென்றடைவது இன்னொரு திறமை. 

  மிகச் சிலரே தமக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குகின்றனர். அவர்களே பெரிய வெற்றியாளர்களாக, பெருந்தலைவர்களாக மாறுகின்றனர். சிலர் கிடைக்கின்ற வாய்ப்பைப் புத்திபூர்வமாகப் பயன்படுத்தி வெற்றியடைகின்றனர். பலரும் இவை இரண்டையும் தவற விடுகின்றனர். 

  இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டாவது, மூன்றாவது வழிமுறைகளுக்குச் சிறந்த உதாரணமாக மாறியுள்ளார். 

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கில் வாய்ப்புகள் அனைத்தையும் இழந்த –தோற்றுப்போன –ஒருவராகவே விக்கிரமசிங்க இருந்தார். அவருடைய ஐ.தே.க இரண்டாக உடைந்தது. ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர் பதவியைக் கூட இழக்கக் கூடிய நிலை வந்தது. மிஞ்சிய கட்சியில் ஒருவர் கூட வெற்றியடையவில்லை. “ஐம்பது வருட கால அரசியல் அனுபவங்களும் தலைமைத்துவ வாய்ப்புகளும் எந்த வகையிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. ரணிலின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது. அவர் ஒரு தோல்வியின் நாயகன்” என்ற விமர்சனங்கள் ரணிலை நோக்கி வைக்கப்பட்டன. 

  இன்று இவை எல்லாவற்றுக்குமான பதிலை ரணில் அளித்துக் கொண்டிருக்கிறார். சொல்லில் அல்ல, தன்னுடைய வெற்றிகரமான செயல்களின் மூலமாக. சிக்ஸருக்கு மேல் சிக்ஸராக. 

  ஆம், ரணில் இப்பொழுது அதிசயமான வெற்றியாளரே. இந்த வெற்றியை அவர் இரண்டு வகையில் அறுவடை செய்ய முயற்சிக்கிறார். ஒன்று, மற்றவர்களின் பலவீனத்தைத் தன்னுடைய பலமாக மாற்றுவதன் மூலம். இரண்டாவது, தன்னுடைய மிக நுட்பமான அரசியல் ராஜதந்திர நடடிவடிக்கைகளின் மூலமாகவும். 

  ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குக் கிடைக்கின்ற வெற்றிக்கான சந்தர்ப்பங்களை எல்லாம் கை நழுவ விட்டன என்பதுடன் வீண் பிடிவாதங்களாலும் புத்தியற்ற தன்மையினாலும் நாசமாக்கின. இன்னும் இதிலிருந்து மீள முடியாத நிலையிலேயே உள்ளன. 
   

  https://arangamnews.com/?p=7972

 4. ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்? - யதீந்திரா 

  ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப்பினர் மத்தியில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 2015 ஆட்சி மாற்றத்திலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு அளவுக்கதிகமாக தென்னிலங்கை அரசியலுக்குள், தேவையற்ற வகையில் தலையீடு செய்துவருகின்றது. சுமந்திரன்தான் இதற்கான பிரதான காரணமாகும்.

  சுமந்திரனின் வரவுக்கு முன்னர் இவ்வாறானதொரு போக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருந்ததில்லை. இதற்கு சுமந்திரனின் பின்னணியும் ஒரு பிரதான காரணமாகும். சுமந்திரன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவரல்ல. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் தேசிய அரசிலுக்குள் இணைந்து கொண்டவர். இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் நிலையில்தான், 2010இல் சுமந்திரனும் இருந்தார். ராஜபக்சக்களின் வீழ்சி, ரணிலுக்கு வாய்ப்பை வழங்கியது போன்றுதான், புலிகளின் வீழ்ச்சி சுமந்திரனுக்கு மட்டுமல்ல விக்கினேஸ்வரனுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் எதிர்பார்த்தது போன்று விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்ததும், விக்கினேஸ்வரன் அவரது இயல்புக்கு மாறானதொரு கடும்போக்கு நிலைப்பாட்டை தழுவிக் கொண்டார். இப்போது அதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்.

  விக்கினேஸ்வரனோடு ஒப்பிட்டால் சுமந்திரன், வலிந்து தேசியவாதியாவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுமந்திரன் ஒரு வேளை அப்படி நடிக்க முற்பட்டிருந்தாலும் கூட, அது அதிக காலத்திற்கு நீடிக்காது. ஆனால் இந்த அரசியல் நடிப்பில் இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் ஒருவரென்றால், அது சிவஞானம் சிறிதரன் மட்டும்தான். அவரால் பிரபாகரனுக்கு பிறந்தநாளும் கொண்டாட முடிகின்றது, உருத்திரகுமாரனோடு சேர்ந்து பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் பேச முடிகின்றது பின்னர் ரணில்விக்கிரமசிங்கவுடன், அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்போவதாகவும் கூற முடிகின்றது. இவ்வாறான நடிப்பாற்றல் எல்லோருக்கும் வாய்க்காது.

  spacer.png

  2015, தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்தே, சுமந்திரனின் செல்வாக்கு கூட்டமைப்பிற்குள் வலுவடைந்தது. தேசிய பட்டியல் மூலம் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு ஒரு இடத்தை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் கூட, சம்பந்தன் அதனை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை என்பது, முற்றிலும், கொழும்மை அனுசரித்து – முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து பயணிப்பாதாகவே இருந்தது. இந்தக் காலத்தில்தான், சுமந்திரனின் கொழும்பு செல்வாக்கு கணிசமாக வலுவடைந்தது. ஒரு தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதற்கு அப்பால், ஒரு இலங்கை அரசியல்வாதியாக சுமந்திரன் வளர்சியடைந்தார். சுமந்திரன் அதிகம் தென்னிலங்கை அரசியலுக்குள் ஆர்வம் காண்பிப்பதை, இந்த பின்புலத்திலிருந்துதான் நாம் நோக்க வேண்டும்.

  ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் பற்றி பேசும்போது, இந்த விடயங்கள் எதற்காக என்னும் கேள்வி எழலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கமான உறவிருந்தது. ரணிலுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு கடுமையாக விரோதித்துக் கொண்டது. ஆனால் இப்போது, ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திவரும் அபிப்பிராயங்களை உற்றுநோக்கினால், தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் கூட, சுமந்திரனை போன்று ரணிலை விமர்சிக்கவில்லை. இதன் பின்னணி என்ன? சுமந்திரன் தென்னிலங்கை அரசியலுக்குள் அதிகம் தலையீடு செய்ய முற்பட்டதன் விளைவாகவே, ரணிலுடன் முரண்பட வேண்டியேற்பட்டிருக்கின்றது. அது எவ்வாறான தலையீடு என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும் கூட, சுமந்திரன் மேற்கொண்ட சில நகர்வுகள், ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுடன் நேரடியாக உரசியிருக்கின்றது. இல்லாவிட்டால் இந்தளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்க வேண்டிய தேவையில்லை.

  ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் வெள்ளிடைமலை. அதாவது, தற்போது கிடைத்திருக்கும் அதியுச்ச அதிகாரத்தை முழு அளவில் பிரயோகித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்வது. அவ்வாறு தனது அதிகாரத்தை அதியுச்சளவில் பிரயோகிக்க வேண்டுமாயின், அரசு பலமாக இருக்க வேண்டும். அரசு பலமாக இருக்க வேண்டுமாயின் அரசிற்கு எதிரான எதிர்ப்புக்களை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டு. இதனை கருத்தில்கொண்டே, போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்சியடைவதை ரணில் தடுக்க முற்படுகின்றார். மேலும் இடதுசாரி பின்புலம் கொண்ட சக்திகள் கொழும்பில் எழுச்சியடைவதை இந்தியா மற்றும் மேற்குலம் ஒரு போதும் ஆதரிக்காது. தாராளவாத பின்புலம் கொண்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்க்க மாட்டார்கள்.

  இவ்வாறானதொரு பின்னணியில்தான், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, பொன்சேகா, போராட்டத்தை தன்வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். பொன்சேகாவின் தலைமைக்கு போராட்டம் கைமாறுமாயின், அது முற்றிலும் கட்சி அரசியலுக்குள் சென்றுவிடும். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டிய உடனடித் தேவையை எதிர்கொண்டிருக்கும் மக்களோ, மூச்சுவிடுவதற்கான அவகாசத்தை தேடியலைகின்றனர். இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களை மக்கள் வெறுக்கவே அதிக வாய்ப்புண்டு. இந்த விடயத்தையும் ரணில் சரியாக கணித்திருப்பார். மேலும் ரணில் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர் என்னும் அப்பிராயம் மத்தியதர வர்கத்தினர் மத்தியிலுண்டு. இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரு விடயமாகும்.

  spacer.png

  ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுக்கு இரண்டு இலக்குகள் இருக்கலாம். ஒன்று, வீழ்ந்துகிடக்கும் ஜக்கிய தேசியக் கட்சியை தூக்கிநிறுத்த முயற்சிப்பது. இதுதான் ஜக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம். அதே வேளை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக தன்னை நிலைநிறுத்துவது. தற்போதுள்ள நிலையில், ராஜபக்சக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை. இந்த நிலையில் அனைவரது ஆதரவுடனும் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பையும் குறைத்துமதிப்பிட முடியாது.

  ஆனால் அனைத்தும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில்தான் தங்கியிருக்கின்றது. மொத்தத்தில், இது ரணிலுக்கான இறுதி அரசியல் சதுரங்கம். ரணிலை பொறுத்தவரையில் – அரசியல் சதுரங்க ஆட்டத்தை விடவும் மேலானது. அதுவே சற்று காலம் எடுக்குமென்றால், அரசியல் ஒரு மரதன் ஓட்டம் போன்றது. கடுமையான ஆட்டமெனில், அது ரகர் விளையாட்டு போன்றது. இரத்தம்பார்க்கும் விளையாட்டு எனில் பொக்சிங் போன்றது. அனைத்து ஆட்டத்தையும் ரணில் ஆட வேண்டியிருக்கின்றது. மற்றவர்கள் எவரையும் விடவும், அரசியலில் இந்த ஆட்டங்களை ரணில் நன்கு கற்றுத்தேறியவர். ரணிலின் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான், தமிழ் தேசிய தரப்பினருக்கு நல்லது. ஆட்டத்தின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்ளாமல், ஆட்டத்திற்குள் நுழைவது எதிர்மறையான விளைவுகளையே தரும். யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரு வருடங்களில், தமிழ் தேசிய தரப்பினர், சிறிலங்காவின் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தாங்கள் ஆடுவதாக எண்ணிக் கொண்டனர் ஆனால் அவர்கள் ஆடவேயில்லை.
   

  http://www.samakalam.com/ரணிலின்-தென்னிலங்கை-நகர்/

 5. அறிவும் உணர்வும் தடுமாறும் காதல்

  written by காயத்ரி மஹதிJuly 25, 2022

  காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என அறிவோம். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்று அறியப்படுபவர்களின் அழகு, உடை, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு, உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் ஆகியவற்றைத் தாமும் செய்து அந்த நபரை அப்படியே நகலெடுப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக்கன்னியும் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமுகத்தில் அவர்களுக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள்.

  இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய காலகட்டங்களில் இளைஞர்களில் ஒரு சாரார் காதலில் கொஞ்சம் மாற்றம் கொண்டுவரத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் கனவுக்கன்னியாக, கனவுநாயகனாக அல்லாமல் அறிவில் சிறந்து விளங்கும் இண்டலெக்சுவல்கள் மீது காதல்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் அவர்கள் படிக்கும் புத்தகங்கள், அவர்கள் செய்யும் புராஜக்ட் வெற்றிகள், அதில் அவர்கள் கையாளும் யுக்திகள், அவர்களது முடிவெடுக்கும் திறன், எந்தச் சூழலிலும் புலம்பாமல், அடுத்து என்ன என்ற ரீதியில் வாழ்க்கையைக் கையாளும் விதம் என்று அவர்களுடைய ஆட்டிடியூடை முன்வைத்து காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், உடல் அளவில் மட்டும் ஈர்ப்பு இல்லாமல், தங்களுடைய செக்ஸுவல் அப்பேரட்டஸ் பகுதி தங்களுடைய மூளைக்குள் இருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள்.

  இப்படி அறிவு சார்ந்து காதல் துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணம் வந்த பின், அதில் இக்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான புரிதலில் உள்ள நிறை குறைகளை இக்கட்டுரையில் அலசப் போகிறேன்.

  பெண்ணின் கல்வியறிவு பற்றியும் அவளது சுதந்திரம் பற்றியும் பேசும் இந்தச் சமூகம்தான், அவளது சிந்தனையின் வளர்ச்சியைப் பார்த்து பெரிய பயத்தையும், திமிரானவள் என்கிற பிம்பத்தையும் கட்டமைக்கிறது. “அறிவாளிப் பெண்” என்றாலே யாருடைய பேச்சையும் கேட்காமல் இருப்பவள் என்றும், அவளுடன் எது குறித்தும் எளிதாக உரையாட முடியாது என்றும் சமூகம் எல்லோரிடத்திலும் சொல்கிறது. தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணை ஆண், பெண் இருவரும் இயல்பாக அவரவர் வட்டத்தில் சேர்த்துக்கொள்ளத் தயங்குகின்றனர். என்னதான் தெளிவாக இருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் தொடரும்போது, அறிவாளியாகக் கருதப்படும் பெண்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வுரீதியாக நிலைகுலைந்து போகிறார்கள்.

  “படிச்சா ரொம்ப நல்லா வருவ” என்பது போன்ற தன்னம்பிக்கையூட்டும் வரிகளைப் பின்பற்றி வெற்றிபெற்ற பெண்களை நோக்கி, இந்தச் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அளப்பரியவை. அவள் சிந்தித்துப் பேசும் வார்த்தைகளுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய முரணை யதார்த்த வாழ்க்கை கண் முன் விரிக்கிறது. ஒவ்வொரு பெண்ணிடமும் “நல்லா படித்து, தெளிவா முடிவெடுக்கத் தெரிந்தால் போதும், நீ நினைத்த அத்தனையும் உன் கைகளில் வந்துசேரும்” என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இதையெல்லாம் யோசிக்கும்போது இந்த அறிவின் வளர்ச்சியால் ஆண், பெண் உறவில் நிகழும் வன்முறைகள்தான் அதிகமாக மாறி வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது.

  இங்கே கல்வியறிவு என்பது சிந்தனையை மேம்படுத்தும் என்று எல்லாரும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இங்கு கல்வியறிவைக் கல்வித் தகுதியாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் பதவியும் வருமானமும் மட்டுமே சிந்தனையின் வளர்ச்சி என்ற கோணத்தில் பார்க்கவும் பழக்கப்பட்டு வருகிறோம்.

  இதில் நாம் கவனிக்க வேண்டிய இடம் என்னவென்றால், conscientiousness-க்கும், Fluid intelligence-க்கும் உள்ள வேறுபாடு.

  spacer.png

  ஆண்களின் காதலில் உள்ள இண்டலக்சுவல் தன்மையில் எப்போதும் conscientiousness கலந்திருக்கும். அதாவது எத்தனை முற்போக்கு இருந்தாலும், அதில் சமூகம் சொல்லும் சாதி, மதம், வர்க்கம் எல்லாம் கலந்துதான் பேசுகிறார்கள். ஆனால் பெண்ணின் காதலில் இண்டலக்சுவல் என்ற அம்சம் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. புதிதாகக் குடும்ப அமைப்பில் உள்ள மூடப்பழக்கங்களை உடைத்து அறிவின்பால் ஒரு குடும்பத்தை உருவாக்குவதாக அது இருக்கிறது.

  இங்கு எல்லாமே பாகுபாடு கலந்துதான் பார்க்கப்படுகிறது என்று சொல்லும்போது, மனிதநேயம் மட்டும் அல்ல, அறிவின் வளர்ச்சிகூட பாகுபாடு கலந்துதான் பார்க்கப்படுகிறது. “அனைத்தும் சமம்” என்று சொல்பவர்களிடத்தில் எதுவும் சமம் இல்லை என்று சொல்வதைவிட “அனைத்தும் சமம்” என்பதை இங்கு யாருமே முறையாக வாழ்வியல் களத்தில் வாழ்ந்து காட்ட முன்வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

  அறிவின் வளர்ச்சியால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வரும் மோதல்கள் எல்லாமே “என்னைச் சமமாக நடத்து” என்பதே ஆகும். ஆனால் இங்கு ஆண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும், பெண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும் பெரியதொரு முரண்சுவரை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆணின் பார்வையில் பதவியும் வருமானமும்தான் அறிவின் வளர்ச்சி என்று பார்க்கப்படுகிறது. ஆனால் பெண்ணின் பார்வையில் பதவி, வருமானம் கடந்து, அவளுக்கான அங்கீகாரம், அவளுக்கான சுதந்திரம் என்று சொல்லிப் பேசவும், செயல்படவும் செய்கிறார்கள். இந்தச் செயல்கள் எல்லாம் ஆணின் மனதுக்குள் இருக்கும் பெண்ணின் பிம்பத்தை முற்றிலும் உடைத்துவிடுகின்றன. இந்தப் பிம்பம் உடைவதை ஆணால் ஏற்க முடியாமல், இருவரின் உறவுக்குள் விரிசலும் போராட்டமும் நடக்க ஆரம்பிக்கிறது.

  இங்கு ஆண், பெண் காதல் என்ற உறவு என்றுமே ஒரு கற்பனையின் அடிப்படையில்தான் பேச ஆரம்பிக்கும். இதில் சினிமாவும், இலக்கியமும் அதை இன்னும் மெருகூட்டி வருகிறது. ஒரு காதலின் வெற்றி எது என்றால், ஆண் என்றுமே ஒரு பெண்ணை ராணி போல் பார்த்துக்கொள்வது, அல்லது எத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் விட்டு வெளியே வந்து, அவளுக்காக, அவர்கள் காதலுக்காக ஒரு வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க வேண்டும் என்றாகிறது. இதுவே பெண் என்றால், கணவனுடைய ஆளுமையை வெற்றியடைய வைக்க, அவளின் திறமையை எல்லாம் பூட்டி வைத்து, குடும்பத்தை முறையாக, கௌரவமாக நடத்திக்காட்ட வேண்டும் என்பதே காதலின் நோக்கம் என்று 2022-இல் வாழ்கிற பெரும்பான்மையான மனிதர்கள் இன்னமும் நம்புகிறார்கள். இதுதான் காதலின் புனிதம் என்று பேச்சின் வழியே குறிப்பிடுகிறார்கள்.

  ஓர் ஆண் தான் நேசித்த பெண்ணைத் திருமணம் வரை கொண்டுவந்ததே மிகப்பெரிய வெற்றி எனக் கருதுகிறார்கள். அதன்பின் அவர்கள் அந்தப் பெண்ணுக்காகப் பெரிதாக எதுவும் யோசிக்க மாட்டார்கள், யோசிக்கப் பழகியதும் இல்லை. வீட்டில் நடக்கும் வரவு, செலவுகளைப் பார்ப்பது, புதிதாகச் சொத்து சேர்ப்பது, ஆபரணங்கள் சேர்ப்பது, மருத்துவச் செலவுகளைப் பார்ப்பது என்று தன்னை நம்பி வந்த பெண்ணுக்குப் பொருளாதார ரீதியாக ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்துவிட்டோம் என்கிற திருப்தியும் அதை நோக்கிய தேடலும் மட்டுமே போதும் – எத்தனை பெரிய அறிவின்பால் ஈர்ப்பில் வந்த காதலாக இருந்தாலும் – என்று இருக்கிறார்கள். பெண்ணைப் பற்றி வேறு எதுவும் தெரிந்துகொள்ள முயலவும் மாட்டார்கள்.

  ஆனால் பெண்ணுக்கோ தான் நேசித்த ஆணிடம், திருமணம் கடந்து உணர்வுரீதியான பாதுகாப்பும் விடுதலையும் இருக்க வேண்டும். தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் இருவரும் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வாள். அவளுடைய பதவி, வருமானம் கடந்து, அவளுக்குப் பிடித்த கனவுகளைத் துரத்த என்ன கற்க வேண்டுமோ அதைக் கற்றுக்கொள்ள முயல்வாள். அதற்கு வீட்டில் ஆண், பெண் இருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று சொல்வாள். அவளது தொழிற்துறையில் எத்தனை நேரம் வேலை பார்க்க நேர்ந்தாலும் அதில் தேவையில்லாத குடும்ப செண்டிமெண்ட் கலக்காமல் இருக்க மெனக்கெடுவாள். ஆண் வேலை பார்க்கும்போது கிடைக்கும் சுதந்திரம், தான் வேலை பார்க்கும் போதும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவாள்.

  கணவன், குழந்தை, குடும்பம் என எல்லாவற்றிலும் அறிவில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் சுதந்திரமும் ஒரு பகுதியாகத்தான் அமைந்திருக்கும். அவளுக்கு அவள் மிக முக்கியம். அவளுக்கான வாழ்க்கையை அமைக்க, ஆசையை நிறைவேற்றத்தான் அவளுடைய பதவியும் வருமானமும் இருக்கிறது. எப்போதும் போல் வெற்றுக் குடும்ப நம்பிக்கைகளைச் சொல்லி, அவளிடம் செண்டிமெண்ட் டிராமாக்கள் நடப்பதை அவள் விரும்பவது இல்லை. இதைத்தான் அவள் காதல் திருமணத்தில் எதிர்பார்க்கிறாள்.

  spacer.png

  ஆனால் இந்தச் சினிமா, புனைவு இலக்கியங்களில் காண்பிக்கப்படும் காதலுக்கு நேர் எதிரான ஒரு சமூகக் கட்டமைப்பில்தான் நாம் வாழ்கிறோம். அதனால் இவர்கள் கற்பனை செய்த காதலுக்கும், நிஜ வாழ்வில் எதிர்ப்படும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் சவால்களாக இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்கிறேன்.

  ஒரு பெண் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் வைஸ் பிரசிடெண்ட்டாக வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் டீம் லீடராக ஒரு பையனும் வேலை பார்க்கிறார். இருவரும் பழக ஆரம்பிக்கும்போது, இருவரது எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. அறிவின் மூலம் ஈர்க்கப்படும் காதல் எல்லாமே தன்னுடைய செக்ஸூவல் அப்பேரட்டஸ் தலைக்குள் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். அதன்படி எண்ணத்தின் வழியே காதலும் காமமும் செயல்படத் தொடங்கும்போது அதனைத் திருமண வாழ்க்கை வரை கொண்டுபோக முடிவு எடுக்கின்றனர். ஆனால் இருவரின் வீட்டிலோ சாதி பார்க்கின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், நண்பர்களாக இருந்துகொள்ளுங்கள், சம்பந்தி எல்லாம் ஆக முடியாது என்று வீட்டார் மறுத்துவிடுகிறார்கள்.

  பொதுவாக ஒரு மனிதனைச் சக உயிராகப் பார்க்கக் கற்றுக்கொள் என்று சொல்லும் போது இந்த வார்த்தைகள் மனிதாபிமானத்தைப் பெயரளவில் குறிப்பதாக மட்டுமே இருக்கின்றன. காதல், திருமணம் என்று வரும்போது, சக உயிர் என்பதை எல்லாம் கடந்து, இருவரின் கல்வித் தகுதியும், பதவியும், வருமானமும் மட்டுமே மிக முக்கியமான அங்கமாக மாறி வருகிறது. அதில் ஏற்படும் பிரமிப்பால் ஒருவரை ஒருவர் விரும்பும் போது, சாதி வேறுபாடு, மத வேறுபாடு, வர்க்க வேறுபாடு எல்லாவற்றையும் கடந்து ஒரு புரட்சித் திருமணம் நடத்த விரும்புகின்றனர்.

  அப்படியாக வைஸ் பிரசிடெண்ட் பெண்ணும், அந்த டீம் லீடர் பையனும் இறுதியில் வீட்டினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்கின்றனர். திருமண வாழ்க்கையும் ரொம்ப அழகாகப் போய்க்கொண்டிருந்தது. இவர்களிடையே பிரச்சினை எப்படி ஆரம்பமானது என்று பார்த்தால், குழந்தை பிறந்த பின்தான் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.

  குழந்தைக்கு யார் சாதியை அடையாளப்படுத்துவது என்ற கேள்வி வரும்போது பையன் தன் சாதியைப் பின்பற்றச் சொல்லிவிட்டார். அந்தப் பெண், “நாம் இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம். இன்னும் இதைப் பற்றி இருவரும் கலந்து பேசவில்லை” என்கிறார். ஆனால் கணவனோ எப்போதும் போலக் குடும்பத்தில் எல்லாரும் சொல்கிறார்கள், சமூகத்தில் கேள்வி கேட்பார்கள் என்ற வெகுஜன பதிலைச் சொல்கிறார்.

  ஆணுக்கோ இக்குடும்பத்தில் தான் சொல்லும் முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், குடும்பத் தலைவனான தன் பேச்சை எதிர்கேள்வி கேட்பது பெரிய அவமானம் என்றும், எல்லாவற்றுக்கும் “சமூகம் வரையறுத்த ஆண்” என்ற பிம்பத்துக்குள் இருந்தே பதில் சொல்கிறான்.

  ஆனால் பெண்ணோ இதில் யாருடைய தலையீடும் இல்லாமல், நாம் காதலித்து உருவாக்கிய குடும்பத்தின் அடையாளத்தை நாம் இருவரும் சேர்ந்து பேசி உருவாக்குவோம் என்கிறாள். ஆனால் ஆணும் குடும்பமும் சேர்ந்து அவளின் வார்த்தையைப் புறந்தள்ளுகிறார்கள்.

  ”இத்தனை பெரிய பதவியில் இருந்தும், குடும்பத்துக்குச் சம்பாதித்துக் கொடுத்தும் தனக்கு மரியாதை இல்லையா?” எனத் தன் சார்பில் எழுப்பப்படும் கேள்வியைக்கூட மதிக்கவில்லை, சுதந்திரமாகத் தன் வீட்டில், தான் நேசித்த ஆணிடம் பேசக்கூட ஓரிடம் இல்லை என்று வரும்போது, ஒரு பெரிய வெறுமையைக் கடக்கிறாள்.

  நம் சமூகக் கட்டமைப்பில் எப்பவும் போல் எல்லா உறவினர்களும், “இதெல்லாம் ஒரு விசயமா?” என்று சொல்லி அவளைப் பேசவிடவில்லை, அவள் பேசுவதைக் கேட்கவும் தயாராக இல்லை. அப்புறம் என்ன காதல், கல்யாணம், அதுவும் சாதி மறுப்புத் திருமணம் என்ற அடையாளம் எதற்கு என்ற கேள்விகள் அவளுக்கு எழுகின்றன. அனைத்துமே ஒரு பிம்பமாகவும், கானல் நீராகவும் மட்டுமே நிஜ உலகில் பதிலாக வருகிறது.

  இங்குதான் பெரும்பாலான ஆண்கள், நம் கல்வியறிவையும், சமூகத்தைச் சார்ந்து நாம் சிந்திக்கும் அறிவையும் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால் அறிவு சார்ந்து செயல்படும் பெண்களோ கல்வியறிவு மூலம் தான் சிந்தித்த அனைத்தையும் சமூகத்திடம் எதிர்கேள்வி கேட்டு, அதற்கு முறையான பதிலையும் சொல்கிறார்கள்.

  spacer.png

  அதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் பெண்கள் தன் சுயத்தைப் பற்றியும், தன் வாழ்க்கையில் நடக்கும் சரி, தவறுகள் பற்றியும் அவர்கள் உலகில் இருக்கும் ஆட்களுடன் பகிர்ந்துகொள்வார்கள், அதைப் பற்றி விவாதிப்பார்கள். அதில் அவர்கள் கற்கும் விசயங்களை வைத்துத் தன் சிந்தனைத் திறனை இன்னும் மேம்படுத்துவார்கள்.

  ஆனால் ஆண்களோ, தன் சுயத்தைப் பற்றி, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர்கள் செய்யும் சரி, தவறுகள் பற்றி குடும்ப நபர்களிடமோ, நண்பர்களிடமோ, வேலை பார்க்கும் இடத்திலோ எங்கேயும், எதுவும் பேசுவது இல்லை. அவர்களுடைய வெற்றிகள் பற்றியும், ஜாலியான விசயங்கள் பற்றியும், சமூக அரசியல், சினிமா இவைகளைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பேசுவார்கள். அதைத் தவிர்த்து தங்களைப் பற்றி வேறெதுவுமே பேச மாட்டார்கள். ஏனோ அது அவர்களுடைய “ஆண்மைக்கு இழுக்கு” என்றுதான் பல இடங்களில் சிந்திக்கிறார்கள். அதனால்தான் பலரால் பாராட்டப்பட்ட ஆண்கள்கூட தற்கொலை முயற்சியை நோக்கி நகர்கின்றனர்.

  இங்கு ஏன் இந்த மாதிரி தெளிவான ஆண்களில் பெரும்பான்மையோர் மிகுந்த மன அழுத்தத்துக்கும் தற்கொலை சார்ந்த எண்ணத்துக்கும் ஆளாகின்றனர் என்று பார்க்கலாம். 

  பதவியில் இருக்கும் தெளிவான பெண்ணைப் பார்த்து காதல் கொள்ளும் ஆண், அவளுடைய காதலும் தெளிவாகத்தான் இருக்கும் என்று உணர்வதில்லை. இங்கு ஆணுக்குத் தொழிற்துறை சார்ந்த கனவுகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல் பெண்ணுக்கும் தொழிற்துறை சார்ந்த கனவுகள் முக்கியம். ஆனால் ஆணோ, திருமணமானவுடன் அவன் நினைக்கும் போதெல்லாம் சமைத்துக் கொடுக்கவும், அவன் நினைக்கும் போதெல்லாம் உடலுறவு வைக்கவும், அடிக்கடி ஃபோன் செய்து பேசுவதுமாகத் தன்னுடைய பார்வையில் எல்லாமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். மற்ற நேரத்தில் அவள் எத்தனை பிசியான வேலைகள் செய்தாலும், தன்னுடனான வாழ்வில் அவளால் எதுவும் தடைபடக் கூடாது என்று யோசிக்கிறான். அதற்காக ஆண், பாசம், அன்பு என்ற பெயரில் சில விசயங்களைச் செய்யும்போது, இம்மாதிரியான புத்திசாலிப் பெண்கள் எந்த அளவுக்கு காதல், அன்பு இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்கள். அன்பின் பெயரால் தன்னுடைய தொழிற்துறை சார்ந்த கனவுகள் தொந்திரவு செய்யப்படுவதை அவள் விரும்புவதில்லை.

  ஆண், பெண் உறவில் இப்படித்தான் காதல் இருக்கும் என்ற பிம்பத்தைப் பெண் உடைக்கும்போது, ஆணுக்குச் சந்தேகம் வருகிறது. தன் மீது ஈர்ப்பு குறைந்துவிட்டதா, தன் மீது அவளுக்குப் பாசம் இல்லையா என்று எல்லா நேரமும் பொசசிவ் என்ற பெயரில் அவர்கள் காதலை நிரூபிக்கக் கேட்கும் போது, பெண்கள் டயர்ட் ஆகிவிடுகிறார்கள். இது தொடரும்போது ஒரு கட்டத்துக்கு மேல், பெண் தன்னைச் சுதந்திரமாக வேலை பார்க்க விடு, வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் போது, ஆண் தனக்குள் உடைந்து போகிறான்.

  தன்னைப் பார்க்காமல், தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றிப் பேசாமல் இருக்கும் தெளிவான பெண்ணின் மீது பயத்துடன், தன் பக்கம் அவள் கவனத்தைத் திரும்ப வைப்பதற்குச் சில வன்முறைகளைக் கையாளத் தொடங்குகிறான். அதையும் அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை என்றால், தன் ஆண்மை மீது சுய சந்தேகம் வந்து, ஒரு பெண்ணுடன் வாழத் தெரியாத ஆண் என்கிற அடையாளம் வரக்கூடாது என்றெண்ணி, மரணத்தை நோக்கி அவன் நகரவும் கூடும்.

  ஆனால் இதே ஆண்களிடம் முரணான குணாதிசயங்களைச் சமூகத்தில் பார்க்க முடியும். அறிவில் சிறந்து விளங்கும் பெண்ணை நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்கள், முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள், சிறந்த தொழில் முனைவோர் என்று சொல்லி பாராட்டுவார்கள், தயக்கம் இல்லாமல் பெண்களைக் கொண்டாடுவார்கள். இம்மாதிரி பெண்களை உதாரணமாக எடுத்துக்காட்டி தங்கள் வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதாகட்டும், அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு உதவி செய்வதாகட்டும் என்று பெண்கள் ரசிக்கும் ஆணாக இருப்பார்கள். ஆனால் இவை எல்லாமே தோழிகளுக்கும் மகள்களுக்கும் சகோதரிகளுக்கும் மட்டும்தான்.

  இப்படியாக ஓர் ஆணுக்குப் பெண்களின் உணர்வுகளையும் திறமைகளையும் புரிந்துகொள்ளும் திறன் இருக்கும்போது, எங்கு அந்த “ஆண்” என்கிற நெடில் அடையாளம் வருகிறது என்றால், அது திருமணப் பந்தத்தில் மட்டுமே. இன்னும் மாறாத பழைய சிந்தனையுடன்தான் திருமண உறவில் ஆண்கள் பங்கேற்கிறார்கள்.

  spacer.png

  தெளிவான பார்வையோடு திருமணம் செய்யும் பெண்கள் ‘equal partnership’ என்ற இடத்தைப் பற்றிப் பேசவும் எதிர்பார்க்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இங்கு நம் சமுகத்தில் திருமண உறவில் பழைய சிந்தனையை அழிக்க முடியாமல், புதிய சிந்தனைக்கு வழிவிடத் தெரியாமல், எதை எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே உறவுகளைப் பற்றிய அபத்தமான புரிதலுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  மனைவியோ, காதலியோ, அவர்களிடம் கொஞ்சம் தலைக்கனத்துடன் நடந்துகொண்டால் மட்டுமே மதிப்பிருக்கும் என்று ஆண்களின் மரபில் ஊறிவிட்டது. அதனால்தான் இங்கு திருமணமான பலரும் “கல்யாணம் பண்ணாதீங்க” என்று சொல்கிறார்கள்.

  இந்த எண்ணப்போக்கு மாற வேண்டும். இங்கு பலருக்கும் புதிய சிந்தனை மாற்றம் புரிந்தாலும், பழமைவாத ஆண், பெண்ணின் ஈகோவை விடமுடியாமல் இருக்கிறது. இங்கு எல்லாருக்குமே ரோல் மாடல் சொல்லிப் பேசினால் எளிதாக மக்களிடம் ஒரு புதிய விசயத்தைக் கொண்டுசேர்க்க முடியும். அதனால் தெளிவான பார்வையில் குடும்ப வாழ்க்கையிலும் தொழிற்துறையிலும் சேர்ந்து வெற்றிபெறும் தம்பதிகள் மனம் திறந்து தங்களது வாழ்க்கையைச் சமூகத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தியும், அதில் வரும் சிக்கல்களை எப்படிக் கையாண்டனர் எனத் தத்தம் அனுபவங்களைப் பகிரும்போதும், அறிவில் சிறந்து விளங்கும் பெண்கள் திருமண வாழ்க்கையில் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கிறார்கள் என்பது ஆண்களுக்குப் புரிய வரும். அதற்குப் பல தம்பதிகள் தொடர்ந்து தங்களுக்குள்ளும் உரையாடிக்கொள்ள வேண்டும்.

  இப்படித் தம்பதிகள் பேசுவதால், அவர்களுக்கு இடையே இருக்கும் புரிதலும் அதற்காக அவர்கள் செய்யும் விசயங்களும் வெளிப்படையாகத் தெரிய வரும். வீட்டில் உதவிசெய்வது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, யாருக்கு மீட்டிங், வேலை இருந்தாலும், வீட்டை எப்படிக் கையாண்டார்கள், எதனால் அவர்கள் காதல் வாழ்க்கையும், தொழிற்துறை வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பரவலாகப் பார்க்க முடியும். வெறுமனே புனிதப்படுத்தி, ரொமாண்டிசைஸ் செய்யாமல், இயல்பாக ஒருவருக்கு ஒருவர் காதலுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியும் என்ற நம்பிக்கை திருமண உறவில் ஏற்படும். இனிவரும் காலங்களில் இப்படியாகத்தான் திருமண வாழ்க்கையை இருவரும் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு நாம் முன்மாதிரியான தம்பதிகளைக் கண்டறிந்து பாராட்டி, அந்த இணையரைச் சமூக அங்கீகாரத்துடன் கொண்டாட வேண்டும்.

  இப்படியெல்லாம் செய்யும் போதுதான், தற்போது அறிவின் அடிப்படையில் ஈர்க்கப்பட்டு திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தம்பதிகள், அதிலுள்ள குறைகளைச் சரிசெய்ய முயற்சி எடுப்பார்கள். இதைப் பார்க்கும் அடுத்தத் தலைமுறையினர் பாடம் கற்றுக்கொள்வார்கள். இந்த மாதிரியான துணையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இன்னும் விசாலமான பார்வையுடன் பழக ஆரம்பிப்பார்கள். இருவரும் பழகும்போது அதில் இரண்டு குடும்பங்களை எங்கே நிறுத்த வேண்டும், எதில் எல்லாம் அனுமதிக்க வேண்டும் என்ற தெளிவுடன் காதல் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள்.

  அதனால் தற்போதுள்ள தம்பதிகளின் பிரச்சினைகளைப் பற்றியோ, அவர்களின் அறிவு சார்ந்த ஈர்ப்பு பற்றியோ குடும்பமும் நண்பர்களும் பேசும் கேலி கிண்டல்களைக் கையாள, ஒரு தனிப்பட்ட வெளியைத் தம்பதிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும், அதில் வரும் குறைகளை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்குச் சரிசெய்ய முயல வேண்டும். 

  இந்தக் காலக்கட்டத்தில் அறிவு சார்ந்த உளவியலில் ஒரு மிகப்பெரிய மைண்ட் கேம் எல்லாருக்குள்ளும் நடக்கிறது. அதைக் கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் ஆண், பெண் காதலைத் தற்போது பார்க்கிறோம். இவையே இன்றைய திருமணப் பந்தத்தில் ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் உருவாக்க ஆரம்பிக்கும். நாம் காதலர்கள் போல் புதிதாகப் பழக ஆரம்பிப்போம்.

   

   

  https://tamizhini.in/2022/07/25/அறிவும்-உணர்வும்-தடுமாறு/

  • Like 2
 6. குஞ்சரம் ஊர்ந்தோர்

  Review_JK.jpg?resize=735%2C1024&ssl=1

  ஜேகே

  யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே அமைந்துள்ள பாசையூர் கிராமத்தில் மீன் சந்தை ஒன்று தினமும் கூடுவதுண்டு. அங்கே காலை வேளைகளில் மீன் வாங்கச் செல்பவர்களுக்கு அந்த ஐயாவைத் தெரிந்திருக்கலாம். சந்தைக் கட்டடத்தின் கடற்கரைப் பக்க வாசலுக்கு அருகே ஒரு கதிரையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மிதப்பாக அமர்ந்திருந்தபடி அந்த வயோதிபர் சந்தையின் சந்தடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அந்தச் சந்தையே தன்னால்தான் இயங்குகிறது என்பதுபோல அங்கு நிற்கும் ஏல வியாபாரிகளையும் மீனவர்களையும் ஏய்த்தவண்ணம் இருப்பார். இடையிடையே பத்திரிகையை எடுத்து வாசிப்பார். மீன் வாங்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறுவார். ஒருநாள் ஆர்வமிகுதியில் வாங்கிய மீன்களைக் கழுவி அறுத்துக் கொடுக்கும் தொழிலாளர்களிடம் அவரைப்பற்றி விசாரித்தபோது ஒருவித புறுபுறுப்புடன் அவர்கள் பதில் தந்தார்.

  “சீமான் அந்தக்காலத்துச் சம்மாட்டியார். பழைய மிதப்பில இன்னமும் திரியிறார்’         

  பெரும் படகுகளின் உரிமையாளர்களே சம்மாட்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அக்காலத்தில் முத்துக்குளிப்புத் தொழிலில் ஈடுபட்ட படகுகளைச் சொந்தமாக வைத்திருந்தவர்களும் இவர்களே. மீன்பிடியிலும் பெரு வள்ளங்கள் அல்லது வத்தைகளின் சொந்தக்காரர்களை சம்மாட்டிகள் என்று அழைப்பார்கள். அந்த வத்தைகளின் சுக்கானைப் பிடித்து அவற்றைப் பொறுப்பாக ஓட்டிச்செல்பவர் மன்றாடியர் என்று அழைக்கப்படுவார். சம்மாட்டியார், மன்றாடியார் என்பவை சாதிப்பெயர்கள் அல்ல, அவை திறன் மற்றும் தகுதியால் ஒருவரிடம் வந்து சேர்பவை. ஒரு மன்றாடியார் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு வத்தையை வாங்கினாரேயானால் அவர் சம்மாட்டியார் ஆகிவிடுகிறார். பின்னர் ஒரு வத்தை இரண்டு வத்தையாகி மூன்றாகிப்பெருகும். அவரிடம் பலர் வேலை செய்வார்கள். மீன் வரத்து அதிகமாகும். மீதமாகும் மீன்கள் கருவாடு போடப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படும். கொழும்பு முதலாளிகளுடனான பரிச்சயமும் நவீன தொழில்நுட்பமும் இவர்களுக்குக் கைவசப்படும். சம்மாட்டியாரின் செல்வம் விரிவாகி, வீடு, கார் என வசதி வந்து சேரும். ஆனால் காலம் எப்போதும் ஒருவரையே தூக்கி வைத்துக் கொண்டாடாது அல்லவா? இவருக்குக்குப் போட்டியாக இன்னொரு சம்மாட்டியார் உருவாகுவார். அவர் வத்தைக்குப் பதிலாக டீசல் இயந்திரத்தில் இயங்கும் படகினைக் கொண்டுவருவார். முன்னவரின் பொல்லாத காலம், வத்தைகள் கடல் சூறாவளியில் சிக்கிச் சின்னாபின்னமாகும்.  யானை மீது வெண்கொற்றக் குடையின் நிழலில் அமர்ந்து வீதியுலா சென்றவர்கள் எல்லோரும் ஒருநாள் உடல் மெலிந்து கால்நடையாக மற்றோர் ஊருக்குச் செல்லும் வேளை வந்து சேரும். மொத்தச் சந்தையையும் குத்தகை எடுத்து மீன் வியாபாரம் செய்தவரின் வாழ்வு நொடிந்துபோய் அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து பழைய பெருமை பேசும் நிலைக்கு வந்து சேரும்.

  “குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

  நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்”

  சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் சொல்லும் ஆதார விசயமும் அதுவே. 

  மன்னார் பிரதேசத்து, குறிப்பாக வங்காலையில் வாழும் பரதவ சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தலைமுறையின் வாழ்க்கையை ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் அதன் மனிதர்களினூடாகப் பதிவு செய்கிறது. முத்துக்குளிப்புத் தொழில் அருகிப்போன காலத்தில் எப்படி அந்தச் சமூகத்தின் தொழிலும் பொருளாதாரமும் ஆழ்கடல் மீன்பிடிநோக்கித் தள்ளப்பட்டது, எப்படி கொழும்பு கருவாட்டு முதலாளிகளுடனான தொடர்பு அவர்களுக்கு ஏற்பட்டது, கடற் தொழிலின்போது கூடவே அவ்வப்போது இடம்பெறுகின்ற கடத்தல் தொழில், பணம் சமூக நிலைகளில் ஏற்படுத்தும் செல்வாக்கும் அதிகார மாற்றங்களும், மதம் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறது, மதத்தை இந்த மனிதர்கள் எப்படித் தம் அதிகாரப் பெருமைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பல்வேறுபட்ட மனிதர்களினூடாக இந்த நாவல் பேசிக்கொள்கிறது.

  ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு மொழியையும் கலையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மன்னாரின் தனித்துவப் பாரம்பரியமான கூத்துக்கலை வெறும் அரங்கக் கலையாகக் காட்டப்படாமல் வீட்டுக்கொண்டாட்டங்களிலும் தினசரி வாழ்வியலிலும் மிக இயல்பாகப் பிணையப்பட்டிருக்கிறது.

  உதாரணாத்துக்கு ஒரு திருமணக்காட்சி.

  ஆனாப்பிள்ளை சம்மாட்டியார் வீட்டுத் திருமணத்தில் பச்சை வடம் சாத்துகிறார்கள். பச்சை வடம் சாத்துதல் என்பது திருமணத்துக்குப்பின்னர் மாப்பிள்ளை பெண் வீட்டில் மூன்று நாள் தங்கியிருந்துவிட்டு நான்காம் நாள் மாலையில் தன் தாயார் வீட்டுக்கு வரும்போது அவரைக் கனம் பாடி அண்ணாவியர் கூட்டம் சொல்லும் பட்சண வார்த்தை.

  ‘அகோஷயம்’ – அண்ணாவியார்

  ‘சவ்வாசு’ – ஒத்துப்பாடிகள்

  ‘அகோஷயம்’ – சற்று மேல்ஸ்தாயியில்.

  ‘சவ்வாசு’ – அதை ஒத்த ஸ்தாயியில்.

  ‘அகோஷயம்’ – இன்னும் மேல்ஸ்தாயியில்.

  ‘சவ்வாசு சவ்வாசு’

  ‘அவாள் ஆரெண்டால்’

  ‘ஆ….ஆ’

  ‘மாப்பிள்ளை ராயன்’

  ‘ஆகா ஆகா’

  ‘மணவாளக்குமாரன்’

  ‘அக்கா அக்கா’

  ‘மனங்கொண்டு மணமுடித்து’

  ‘சவாசு ச்வாசு’

  ‘தன் மணவறையிலிருந்து மீண்டு தெருலாத்தி’

  ‘அடடா அடடா’

  ‘தன் தாய் தந்தை வீட்டிற்கு வந்த சந்தோசத்திற்கு’

  ‘அவாள் ஆரெண்டால்’

  ‘வாழைக்கு இரண்டு குலை வரக்கண்ட வள்ளல்’

  ‘அடடா அடடா’

  ‘மண்ணினால் கப்பல் செய்து தண்ணீரில் ஓட்டுவித்தவன்’

  ‘அககா அககா’

  ‘மாப்பிள்ளை ராயன் மணவாளக்குமாரன்’

  ‘ஆனாப்பிள்ளை பெற்றெடுத்த அருமருந்த புத்திரர்’

  ‘தம் மணவறை துறந்து தெரு உலா சென்று தன் தாயார் வீடு வந்த சந்தோசத்திற்கு’

  ‘சவாசு சவாசு’

  ‘மாக்கிறேற் மச்சாள்’

  ‘மாப்பிள்ளைக்கு அருமை மச்சாளாகிய’

  ‘மதன காமேஸ்வரி மாக்கிறேற் அம்மாள்’

  ‘சவாசு சவ்வாசு’

  ‘மன்மத சுந்தரி மாக்கிறேற் மச்சாள் சொல்லுங்கவி கேளுங்காணும்’

  ‘அடடா அடடா’

  ‘கைப்பிடி நாயகன் தூங்கயிலே’

  ‘அவன் கையை எடுத்தப்புறந்தானில் வைத்து’

  ‘சவாசு சவாசு’

  ‘அயல் வளாவிற் சென்று ஒப்புடன் துயில் நீத்து வருபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியே கம்பனே’

  இப்படி நகைச்சுவையும் இரட்டை அர்த்தங்களும் கலந்து கட்டி பச்சை வடம் நீண்டு கொண்டே போகும். அதிகம் நீண்டுவிட்டால் அங்கிருக்கும் சில குடிமக்களின் பொறுமை சோதிக்கப்பட்டுவிடும். அவர்கள் சாராயம் வேண்டும் என்று கலகம் செய்ய ஆரம்பிப்பார்கள். பச்சை வடம் அடுத்த நிலையை எட்டும். போதையும் தலைக்கேற குடும்பச்சண்டைகள் எழும். இப்படிக் கூத்தும் குடும்பமும் இணைந்த கொண்டாட்டங்கள் சில தசாப்தங்களுக்கு முன்னம்கூட எம் வாழ்வியலில் ஊடாடிக்கொண்டிருந்தது என்று அறியும்போது நவீனம் எத்தனை அழகுணர்ச்சிகளைத் தொலைத்து நிற்கிறது என்கின்ற அயர்ச்சியே ஏற்படுகிறது.

  கொழும்பு முதலாளிகளுக்கும் இந்த மக்களுக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல்களும் ஒருவரை மற்றோருவர் தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தும் போக்கும் மிக அற்புதமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கருவாட்டுக் கொள்முதலின் ஏகபோக உரிமைக்காக முதலாளிகள் செய்யும் நரித்தன வேலைகள் இயல்பாக ஒரு சமூகத்தின் வாழ்வியலையே மாற்றிவிடுகிறது. படகுகளிலிருந்து வத்தைகளுக்குக்கும் பின்னர் டீசல் இயந்திரங்களுக்கும் மாறுவதும் அதை இயக்குவதற்கென கொழும்பிலிருந்து பணியாளர்கள் வருவதும், கூடவே அவர்கள் செய்யும் தங்கக் கடத்தல்கள், அங்கு ஏற்படும் சிக்கல்கள், குடும்ப வாழ்க்கையின் குலைவுகள் என ஒரு மொத்த சமூக மாற்றத்தையே தன் பாத்திரங்களினூடாக சீமான் பத்திநாதன் பர்ணாந்து கொடுத்துவிடுகிறார். இவற்றையெல்லாம் அந்த மக்களிடையே ஏகபோகம் செய்யும் கத்தோலிக்கக் கட்டமைப்பு எப்படிப் பயன்படுத்துகிறது, தன் பிழைத்தல் அந்த சமூக நிலை மாற்றங்களை எப்படி கையாள்கிறது, மத நம்பிக்கையைத் தாண்டி மதம் என்பது அதிகாரத்துக்கான பிடிமானமாக எப்படி மாறுகிறது என்பதெல்லாம் நாவலின் உப கிளைகளுள் சில.

  ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவலை வாசிக்கும்போது இதே களத்தின் எழுதப்பட்ட வேறு இரண்டு நாவல்கள் அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒன்று செங்கை ஆழியானின் வாடைக்காற்று. நெடுந்தீவு சமூகத்தின் வாழ்க்கையும், அங்கு வாடைக்காற்றுப் பருவத்தில் வந்து வாடிவீடு அமைத்து மீன் பிடிக்கும் மனிதர்களும் கூடவே அந்தத் தீவில் தங்கிப்போகும் வலசைப்பறவையான கூழைக்கடாக்களும் பின்னிப்பிணைந்து அந்த நாவலின் ஊடாடியிருக்கும். அடுத்தது ஜோ. டி. குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’. ‘ஆழி சூழ் உலகு’ என்பது நெய்தல் நிலத்து சமூகத்தின் வாழ்க்கையையும் அதன் பரிமாணாத்தையும் பல்வேறு காலகட்டங்களினூடாக வெளிப்படுத்தி ஒரு முழு வடிவத்தைக் கொடுக்க முயன்றிருக்கும். குஞ்சரம் ஊர்ந்தோரில் வாடைக்காற்று கொடுக்கும் கூழைக்கடா போன்ற ஆழ் படிமங்கள் கிடையாது. ஆழி சூல் உலகு நாவலின் பல்வேறு காலப் பரிமாணங்கள் கொடுக்கும் முழுமையும் இதில் இல்லை. ஆனால் ஒரு சமூகத்து மனிதரின் ஒரு குறிப்பிட்ட தலைமுறை மாற்றத்தை எந்தப் பதனிடலும் இலக்கிய நுட்பங்களின் பூச்சுகளும் இல்லாமல் எழுத்துப்பிழைகளைக்கூடத் திருத்த முயலாமல் அப்படியே அதன் இயல்புகளுடன் கொடுக்க முயன்றிருக்கிறது ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல். அதனளவின் அந்த நாவலின் முக்கியத்துவமும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. குஞ்சரம் ஊர்ந்தோர் போன்ற நாவல்களின் வருகை நாமறியாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த அதிகம் பேசப்படாத சமூகக் குழுக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றன. புனைவுகளின் வரலாற்றுப் பங்களிப்பும் இதுவே. இந்த நாவல் தன் பலவீனங்களையும் கடந்து தனித்து நிற்பதன் காரணமும் அதுவே.  

   

  ஜே.கே 

   

  அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
   

  https://akazhonline.com/?p=3856

  • Like 1
 7. நான் உறுப்பினராக இருக்கும் யோகா உடற்பயிற்சி மற்றும் நடைபிரயாணக் (hiking) குழுமத்தில் உள்ள ஒருவரும் இந்த மரதன் போட்டியில் பங்குபற்றி ஓடி முடித்திருந்தார். அவர் வாராவாரம் அரை மரதன் ஓடும் வழக்கமுள்ளவர். ஓடிமுடித்த இளையோர்கள் மத்தியில் உயரமாக நின்ற படம் வாட்ஸப் குழுமத்தில் அனுப்பியிருந்தார்!

 8. கருணாநிதி சகாப்தம்

  சமஸ்

  spacer.png

  உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.

  ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக் காட்டிலும் அதிகமான, ஜெர்மனிக்கு இணையான மக்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் கருணாநிதி; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவர். ஐம்பதாண்டு காலம் திமுக எனும் பெரும் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்தார். அவர் கட்சி வென்றாலும் தோற்றாலும் அவருக்குத் தோல்வி தராமல் அறுபதாண்டு காலம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் திரும்பத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்தனர். எண்பதாண்டு காலப் பொது வாழ்க்கை. என்றாலும் ஆறடி நிலத்துக்கு, ஆளுங்கட்சியுடன் மரணத்துக்குப் பிறகும் அவர் போராட வேண்டியிருந்தது. காவிரி நதிப் படுகையில் பிறந்த கருணாநிதி, கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை வந்தடைந்த 95 ஆண்டு பயணத்தில் தூக்கிச் சுமந்த பாரம் மிக்க கனவு தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது.

  குளங்களும் மரங்களும் வறுமையும் நிறைந்த, வேறு வசதிகள் ஏதுமற்ற குக்கிராமம் திருக்குவளை. அங்கிருந்துதான் அவ்வளவு பெரிய கனவையும் தன்னுடைய தனிமையில் சுமந்தபடி தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் அந்தச் சிறுவன். திருக்குவளையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு, திருவாரூருக்கு, தஞ்சாவூருக்கு, சேலத்துக்கு, ஈரோட்டுக்கு, காஞ்சிபுரத்துக்கு, சென்னைக்கு. ஒரே துணையாக இழிவு இருந்தது. சாதி இழிவு, செல்வ இழிவு, ஞான இழிவு. பள்ளிக்கூடத்தில் இடம் மறுக்கப்பட்டபோது குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தலைமையாசிரியரை அந்தச் சிறுவன் மிரட்ட வேண்டியிருந்தது. ஐந்து முறை முதல்வரான பின்னரும், சாதி இழிவு என்னைத் துரத்துகிறது என்று அந்த முதியவன் ஒரு பேட்டியில் கண்ணீர் விட்டு அழ வேண்டியிருந்தது.

  கருணாநிதியின் வாழ்க்கை மஹாத்மாவினுடையது இல்லை; அதனாலேயே அது முக்கியமானதாகிறது. ஒரு சாமானியன் சறுக்கக் கூடிய எல்லா பலவீனங்களிலும் பலமான கருணாநிதி சறுக்கி விழுந்திருந்தார். எல்லா மேன்மைகளுக்கும் இடையே கீழ்மைகளும் அவர் வாழ்வில் இருந்தன. சுயநலம், சூது, ஊழல், குற்றம், குடும்ப வாரிசு அரசியல் என எல்லாச் சேறுகளும் அவர் மீது அப்பியிருந்தன. புனிதம் என்று எதுவும் அங்கில்லை. சடாரென்று நம்மை நோக்கித் திரும்பி, ‘ஏன் இவ்வளவு வேட்டையாடிகள் நிறைந்த, இவ்வளவு வலிகள் மிகுந்த, இவ்வளவு இழிவுகள் சுமத்தப்பட்ட வாழ்க்கை எனக்குத் தரப்பட வேண்டும்?’ என்று அவர் கேட்டால், பதில் சொல்ல நமக்கும் ஒரு வார்த்தையும் கிடைக்கப்போவதில்லை.

  பேராளுமை ஒருவரைக் கண்டடைய இந்திய மனத்துக்கு மூன்று கண்ணாடிகள் வேண்டும். உயர் சாதி அல்லது உயர் வர்க்கத்தில் அந்த ஆளுமை பிறக்க வேண்டும். வெள்ளை நிறத் தோல் அல்லது நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு மேதைகளின் அங்கீகாரம் வேண்டும். மூன்றும் இல்லாவிடில் துறவிக்கோலம் பூண வேண்டும். அப்போதுதான் இந்திய மனதின் கண் திறக்கும். முன்னோடிகள் பெரியார், அண்ணாவுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒன்று இருந்தது. உயர் வர்க்கத்தில் பிறந்தவர் பெரியார். ஆங்கிலத்தில் கரை கண்டவர் அண்ணா. மூன்றுமே இல்லாத கருணாநிதியை ஒரு சராசரி இந்திய மனதால் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ முடியவில்லை. கருணாநிதி தன் பேராளுமையை நிரூபிக்கக் கடைசி வரை போராடினார் - இந்திய மனமோ கடைசி வரை அவருடைய இழிவுகளின் வழி அவரை அடையாளம் காண முற்பட்டுக்கொண்டிருந்தது.

  இழிவு துரத்தியது. திரையுலகில் ஒரு காலகட்டத்தையே கட்டியாண்ட கருணாநிதி, அரசியல் பதவிகளுக்கெல்லாம் வருவதற்கு முன்பே சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடும் காரும் வாங்கி செல்வந்தர் ஆகியிருந்தார் என்றாலும், திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்து அரசியல் வழியாகவே கருணாநிதி சம்பாதித்தார் என்றே கதை பேசினார்கள். முதியவர் நேருவின் காதல்களை ப்ளே பாய் சாகசங்களாகப் பேசி மகிழ்ந்தவர்கள் கருணாநிதியின் திருமண உறவுகளைக் கொச்சைப்படுத்தினார்கள். வரலாற்றில் கருணாநிதி தன் எல்லாப் பங்களிப்புகளையும் வரிசைப்படுத்தினாலும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை வரையறுப்பதுபோல ‘கடினமான உழைப்பாளி என்று கருணாநிதியைச் சொல்லலாம்’ என்று முடித்துக்கொள்ள முற்பட்டார்கள்.

  வரலாற்றில் கருணாநிதிக்கு உரிய இடத்தை அளிப்பது என்கிற தார்மிகத்தை ஒரு விமர்சகன் அடைவதும் இந்தியாவில் சுலபம் இல்லை. அதற்கு ஒரு விமர்சகன் எங்கோ தன்னை அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுயஅறுப்பு. சாதிய, மேட்டிமைய, தூய்மையிய அகங்காரத்திலிருந்து வெளியேறாத ஒரு மனதால் கருணாநிதியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஒரு தீண்டாமை மனம் நிராகரிப்புக்கான காரணங்களை உற்பத்திசெய்துகொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தளவில் அரசியலில் கருணாநிதி ஒரு தலித். அதனால்தான் தன்னளவில் அழுத்தத்தை உணர்ந்தவர்கள் - அவர்கள் எந்தக் கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தாலும் - கருணாநிதியை ஓர் உந்துசக்தியாகக் கண்டார்கள். அதிகாலையில் எழுந்தால், அடுக்குமொழியில் பேசினால், கவித்துவமாக எழுதினால் தங்களாலும் தடைகளை உடைத்துக்கொண்டு அரசியல் களத்தில் மேலே வர முடியும் என்று நம்பினார்கள்.

  கருணாநிதி மறைந்த அன்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளிவைக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒரு தலைவரின் மறைவுக்கு இந்திய அரசு இப்படியான மரியாதையை அளித்தது கருணாநிதிக்கே முதல் முறை. வாய்ப்பிருந்தும் ஏனைய பல மாநிலத் தலைவர்களைப் போல தன்னை டெல்லி அரசியலில் கரைத்துக்கொண்டவரில்லை கருணாநிதி. சென்னையில் அமர்ந்தபடியே டெல்லி தர்பாரைத் தீர்மானிப்பதில் மாநிலத் தலைவர்களுக்கான பங்குச் சூழலை உருவாக்கினார். ஏழு பிரதமர்களின் ஆட்சியோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவருக்குப் பங்கிருந்தது.

  பிரிட்டிஷ் காலனியாதிக்க இந்தியாவில் திராவிட நாடு வேட்கையோடு அரசியல் களம் புகுந்த பெரியார், அண்ணா வழிவந்தவர் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தோடு தனி நாடு கனவு இற்றுப்போனபோது தமிழ் மக்களை ரத்தக்களறியில் திருப்பிவிடாமல் இந்திய ஒன்றியம் எனும் அமைப்புக்குள் சாத்வீக வழியில் தேசிய இனங்கள் தம் உரிமைகள், அதிகாரங்களை வென்றெடுக்கும் வழிமுறையைக் கண்டதும், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை விரிவாகப் பயிற்றுவித்ததும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனை. அவர்கள் உருவாக்கிய ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கமானது இந்தியா என்கிற சிந்தனையையும் விஸ்தரிப்பதானது. நாட்டின் பாதுகாப்பு நீங்கலாக எல்லா அதிகாரங்களையும் மாநிலங்கள் சிந்திப்போம் என்ற அண்ணாவின் கனவு பல விஷயங்களில் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது.

  அண்ணா வழியில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி, நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மாநிலங்களுக்கு என்று கொடி கேட்டவர், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிக் கொடியையும் முன்மொழிந்தார். கூட்டாட்சிக்கான பாதைபோல கூட்டணிகளைக் கையாண்டவர் இந்தியாவின் கூட்டணி யுகத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவரானார்.

  நவீன தமிழ்நாட்டின் சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்பேட்டைகள், அணைகள், சமத்துவபுரங்கள், நூலகங்கள் என்று கட்டுமானங்கள் நெடுகிலும் தன்னையும் நிறைத்துக்கொண்டார் கருணாநிதி. அவர் முன்னெடுத்த சமூகநீதி ஆட்சிக் கொள்கை அதுவரை அரசுப் பணியைப் பார்த்திராத ஒரு பெரும் கூட்டத்தை அரசு அலுவலகங்களுக்குள் நிறைத்தது. வேளாண் துறையை ஊக்குவித்தபடி அவர் உருவாக்கிய நவீன தொழில் கொள்கையானது, மாநிலத்தின் வளர்ச்சியில் எல்லா சமூகங்களுக்கும் இடம்கொடுத்தது. அரசிடமிருந்து அடித்தட்டு மக்கள் அந்நியமாகிவிடாமல் இருக்க அவர் அறிமுகப்படுத்திய சமூகநலத் திட்டங்கள் உதவின. சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்க் கனவுக்கான குறியீடாக கவி வள்ளுவரை அவர் கட்டமைத்தார்.

  சட்ட மன்றத்தில் பேசியதைத் தொகுத்தால் மட்டுமே ஒன்றரை லட்சம் பக்கங்கள் வரக்கூடிய அளவுக்கு உரையாற்றியவர், பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்தவர் கருணாநிதி. கவிஞர், கதாசிரியர், பத்திரிகையாளர், திரைக்கலைஞர் என்று ஏராளமான அறிவடையாளங்களால் தன்னை நிறைத்துக்கொண்ட கருணாநிதி, தன்னுடைய கட்சியின் தளபதிகளாக வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் - அவர்களில் பலர் அடாவடிகளுக்குப் பெயர் போனவர்கள். தலைநகர் சென்னையில் ஒரு கபாலி இருந்தார். பின்னாளில் கபாலியின் மகன் மருத்துவர் ஆனார். வேறு பல கபாலிகளின் பிள்ளைகள் அரசின் ஒப்பந்ததாரர்கள் ஆனார்கள். குற்றச் சாயல் கொண்ட செல்வந்தர்கள் ஆனார்கள். அவர்களின் பிள்ளைகளும் படித்தார்கள். எப்படியும் குடும்பங்களின் தோற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் மாறியது. சமூகத்தின் ஒப்பனை மதிப்பீடுகளுக்காக கபாலிகளை கபாலிகளாகவே ஒதுக்கிவைத்து, அவர்கள் பிள்ளைகளையும் கபாலிகளாகத் தொடரவிடுவதா அல்லது கபாலிகளை அரசியலதிகாரத்துக்குள் அணைத்து, கபாலிகளின் சந்ததி அடையாளம் உருமாற வழிவகுப்பதா என்ற கேள்வியை உன்னத அரசியல் பேசியோர் முன் தூக்கி வீசினார் கருணாநிதி. கருணாநிதியின் முக்கியமான அரசியல் இது.

  அராஜகரான கருணாநிதிக்கு ஜனநாயகத்தின் மீது அபாரமான பிடிமானம் இருந்தது. சட்ட மன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலும் விவாதிப்பதிலும் பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்தார். சுதந்திர இந்தியாவின் கருப்புக் காலகட்டமான நெருக்கடிநிலை நாட்களில் தன் ஆட்சியைப் பறிகொடுத்து, அடக்குமுறைக்கு எதிராக நின்றார். கட்சியையே கலைக்கும் நிர்ப்பந்தமும் அந்நாட்களில் அவருக்கு வந்தது. உயிரே போனாலும் கப்பல் தலைவன் கப்பலைச் செலுத்தியபடியே மடிவான் என்றார்.

  திமுகவுக்குள் கருணாநிதியின் ஜனநாயகம் முரண்பாடுகளில் நிறைந்திருந்தது. உட்கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்தினார். விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு கட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். எந்த ஒரு சமூகமும் பெரிதாகத் தலை தூக்கிவிடாதபடியும் அதேசமயம் எல்லாச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியும் செய்தார். எனினும், அண்ணா காலத்தில் கட்சிக்குள் விரிந்து பரவியிருந்த ஜனநாயகத்தின் எல்லை கருணாநிதிக்கு உட்பட்டதாகச் சுருங்கியது. சித்தாந்த தளத்தில் கட்சியால் முன்னகர முடியவில்லை. அறிவார்த்த தளத்தில் கட்சி மேலும் சரிந்தது. இரண்டாம், மூன்றாம், நான்காம் வரிசைத் தலைவர்கள் அணிவரிசையில் பெரிய பள்ளம் விழுந்தது.

  எந்தக் குடும்பம் கருணாநிதி எல்லா உயரங்களையும் அடைய கட்சிக்குத் துணை நின்றதோ அதே குடும்பம் அவருடைய எல்லா புகழும் கீழே சரியவும் கட்சி சீரழியவும் காரணமாக இருந்தது. அவருடைய கடைசி ஆட்சிக் காலகட்டத்தில் நடந்த அவர் புகழ் பாடும் விழாக்களும் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவில் அவர் உட்கார்ந்திருந்த தோரணையும் தன்னை அவர் ஒரு ராஜராஜ சோழனாகப் உருமாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியை உண்டாக்கியது. கட்சியைத் தோல்விகள் முற்றுகையிட்டன. புதிதாக வந்திருந்த வரலாறு தெரியாத ஒரு தலைமுறைக்கு அவர் வெறும் காட்சிப்பொருளாகவும் கேலிப்பொருளாகவும்கூட மாறியிருந்தார்.

  இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு தந்தைமை ஸ்தானத்தை மானசீகமாக தமிழ்ச் சமூகம் கருணாநிதிக்குக் கொடுத்திருந்தது. திமுக தலைவர் ஆகி அரை நூற்றாண்டை அவர் தொட்ட நள்ளிரவு. பேச்சுமூச்சிழந்த நிலையில் அவரை வீட்டிலிருந்து தூக்கிப்போட்டுக்கொண்டு ஓடிவருகிறார்கள். அவருடைய வீடிருக்கிற கோபாலபுரம் பகுதியே பதற்றத்தில் நிற்கிறது. பெரும் கூட்டம். வாயைச் சேலைத் தலைப்பால் பொத்தியபடி நிற்கும் பெண்கள், குழந்தைகளைத் தோளின் மீது தூக்கி உட்காரவைத்துக்கொண்டபடி எக்கி நிற்கும் ஆண்கள், கண்கள் இடுங்கிய வயசாளிகள், பெரிய இளைஞர் கூட்டம், பர்தா அணிந்த இளம் பெண்கள் - எல்லோர் முகங்களிலும் பதைபதைப்பு. பேச்சுமூச்சின்றி வெளியே கொண்டுவரப்படும் அவரைப் பார்க்கிறார்கள். அந்தக் கணம் வரை உச்ச அழுத்தத்திலிருந்த அன்பு நெஞ்சுக்கூட்டை உடைத்துக்கொண்டுவரும் அழுகையாகப் பீறிடுகிறது: ‘‘ஐயோ என் தலைவா...’’

  கருணாநிதி மறைந்த அன்று தமிழ்நாடு உறைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிப் பேச ஒரு கதை இருந்தது. நல்லதோ, கெட்டதோ அவருடைய வாழ்க்கை, அவருடைய அரசியல் நுழையாத வீடு என்று ஒன்று தமிழ்நாட்டில் அவர் காலத்தில் இல்லை.

  காவிய வாழ்க்கை. நண்பர்களிடம் காசு வசூலித்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். தெருக்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். ஊர் ஊராக அலைந்து நாடகம் போட்டார். ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என்று அதிரவைக்கும்படி கேள்வி கேட்டார். காதலித்தார். சுயமரியாதைக்காரனுக்குப் பெண் கிடையாது என்றார்கள் பெண் வீட்டார். பெற்றோர் தேர்ந்தெடுத்த வேறொரு பெண்ணை மணந்தார். திருமணம் முடித்த அடுத்த வாரமே கூட்டங்கள் பேச வெளியூர் போனார். நான்கே வருடங்களில் மனைவியைப் பறிகொடுத்தார். அடுத்தது இன்னொரு கல்யாணம். போராட்டங்கள். சிறை. அப்புறம் இன்னொரு காதல். கல்யாணம். நடுநடுவே சினிமா. ஆட்சியதிகாரம். இடையில் தலைவனைப் பறிகொடுத்து நண்பனின் உதவியோடு தலைவரானார். அடுத்து அதே நண்பனை முரண்பாட்டில் கட்சியிலிருந்து நீக்கினார். நண்பன் அரசியல் போட்டியாளரானார்; மரணம் வரை கருணாநிதியால் வெல்ல முடியாதவரானார். நண்பனின் மரணத்துக்குப் பின்னும் யுத்தம் தொடர்கிறது, நண்பனின் அரசியல் வாரிசுடன். இம்முறை மாறி மாறி வெல்கிறார்கள், தோற்கிறார்கள். சண்டமாருதம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண் யாரும் எதிர்பாராத ஒரு நாளில் காலமாகிறார். கருணாநிதி அதே காலகட்டத்தில் மௌனமாகிறார். காலமெல்லாம் பேசிக்கொண்டிருந்தவரால் அதற்குப் பிறகு சாகும் வரை பேச முடியவே இல்லை.

  காவிய வாழ்க்கை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை; அவரோடு சேர்த்து மெரினாவில் உடல் அடங்கியிருக்கும் அந்த நால்வரின் வாழ்க்கையுமே அப்படித்தான் இருந்தது. ஒரு நாடகாசிரியன், ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை. நான்கு பேரும் மாபெரும் நாடகங்களை நடத்தியவர்கள். அந்த நாடகங்களுக்குள்ளேயே அவர்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டவர்கள். பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையே நாடகமாக விரிந்தது. பார்வையாளர்களாக இருந்த மக்களால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பார்வையாளர்களும் நாடகத்தின் பாத்திரங்களாக மாறினார்கள். தமிழ் எல்லோரையும் இணைத்திருந்தது. கருணாநிதியோடு சேர்த்து ஒரு காலகட்டம் மெரினாவில் உறைந்துகொண்டது. ஒரு சகாப்தம் மண்ணுக்குள் தன்னை மூடிக்கொண்டது!

  - ஆகஸ்ட் 2018, ‘இந்து தமிழ்’
   

   

  https://www.arunchol.com/samas-article-on-era-of-karunanidhi-arunchol

  • Thanks 1
 9. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

  on August 8, 2022

  03ranil-wickremesinghe1-e1659946289902.j

  Photo, AP Photo/Eranga Jayawardena, CP24

  ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அதற்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்துக்கு நிகரான முறையில் அவரது அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டியது அவசியமாகும்.

  நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்வருமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னதாக கடிதங்களை எழுதியபோது அவரது யோசனைக்கு கிடைக்காத வரவேற்பு அதிகப்பெரும்பாலான கட்சிகளிடமிருந்து இந்தக் கொள்கை விளக்கவுரைக்கு பிறகு கிடைத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒன்றிரண்டைத் தவிர நாடாளுமன்ற கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன.

  நம்பிக்கை இழந்த நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான பரந்தளவிலான அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை தனதுரையில் ஜனாதிபதி அறிவித்தார்.

  சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உடனடியாக அமைப்பது, கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையையும் குடிமக்களின் பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்கிய மக்கள் சபையையும் அமைப்பது, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வது  ஆகியவை ஜனாதிபதியின் திட்டங்களில் முக்கியமானவை.

  தேசிய சபையின் முதலாவது பணி குறைந்தபட்ச பொதுவேலைத் திட்டத்தை வகுப்பதாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி இன,மத அடிப்படையிலான பகைமைகள் இல்லாத இலங்கை ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அந்த சபையின் இலக்காக இருக்கும் என்று கூறினார்.

  சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான தேசிய திட்டமொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறிய விக்கிரமசிங்க அந்தச் சபையின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் மீது அரசாங்கம் எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தாத வகையில் அது சுதந்திரமான அமைப்பாக இருக்கும்; அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை மாத்திரமே வழங்கும் என்றும் ஒருங்கமைவு பல்வேறு கட்சிகளுடனும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

  பொருளாதார ரீதியில் இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கு காரணமாயமைந்த கடந்த கால தவறுகள் குறித்து விளக்கிக்கூறிய ஜனாதிபதி அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படும் என்றும் அந்தக் கொள்கை வறியவர்களுக்கும் வசதி குறைந்த பிரிவினருக்குமான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கும் சிறிய மற்றும நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்குமான சமூக சந்தைப் பொருளாதார முறைமையொன்றுக்கான (Social market economic system) அத்திபாரத்தை அமைக்கும்; தேசிய பொருளாதார கொள்கையின் ஊடாக தேசத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பினால் இலங்கை சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும்போது 2048 ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக விளங்கும் என்றும் தெரிவித்தார். பொருளாதார முனையில் அது அவரது கனவாக இருக்கிறது.

  தமிழச் சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியும் தேசிய இனப்பிரச்சினை குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கும் ஒரு நேரத்தில் அவரிடமிருந்து அரசியல் தீர்வின் அக்கறை வெளிப்பட்டிருக்கிறது.

  போரின் காரணமாக தமிழ் மக்கள் பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் இடர்பாடுகளை அனுபவித்துவருகிறார்கள். தீர்க்கப்படவேண்டிய நிலப்பிரச்சினைகளும் இருக்கின்றன. வடக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக சிந்திக்கவேண்டியிருக்கிறது. இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம். தாய்நாட்டுக்கு வந்து அவர்கள் முதலீடுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தனதுரையில் கூறி நல்லிணக்கத்துக்கான தெளிவான சமிக்ஞையை ஜனாதிபதி காட்டியிருக்கிறார்.  தனது திட்டங்களுக்கு தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும் அவரின் இந்த அறிவிப்பின் ஒரு நோக்கமாக இருக்கும். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டியதன் அவசியமும் அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.

  கடந்த நான்கு மாதங்களாக இடம்பெற்றுவந்த ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி போராட்டங்களில் இனவாத அரசியலுக்கு எதிராக இளைஞர்களில் கணிசமான பிரிவினர் எழுப்பிய குரலை அங்கீகரிப்பவராகவும் ஜனாதிபதி கருத்துவெளியிட்டிருக்கிறார். “இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரல் எழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும் நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள்” என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

  இனவாதத்தையே தங்களது பிரதான அரசியல் தளமாகக் கொண்டு செயற்பட்ட ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க இனவாத அரசியலின் பாதகங்கள் குறித்து தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

  இது இவ்வாறிருக்க, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஜனாதிபதியினால் எந்தளவுக்கு வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. அது சர்வகட்சி அரசாங்கமாக இருக்குமா அல்லது பலகட்சி அரசாங்கமாக இருக்குமா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. பரவலாக ஒத்துழைப்பு கிடைத்தாலும் சகல கட்சிகளும் அரசாங்கத்தில் இணைவதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

  இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்கவேண்டும். சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனை விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு முன்வைக்கின்ற ஒரு யோசனையல்ல. கோட்டபா ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சில மாதங்களுக்கு முன்னரே சர்வகட்சி அரசாங்கம் குறித்து பேசப்பட்டது.  அதாவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு (ஒரு 6 மாதங்களுக்கு அல்லது சற்றும் கூடுதலான காலத்துக்கு) இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை சாத்தியமானளவு விரைவாக ஒழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் தேர்தல்களுக்கு போவதுமே அப்போது முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையாக இருந்தது. ஆனால், விக்கிரமசிங்க அத்தகைய காலவரையறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதையே காரணம் காட்டி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) சர்வகட்சி அரசாங்கத்தில் இணையமுடியாது என்று அறிவித்திருக்கிறது.

  அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கியமான ஏற்பாடுகளை புதிய திருத்தவரைவு கொண்டிருப்பதாக ஜனாதிபதியே நாடாளுமன்றத்தில் கூறினார். அவரைப்பொறுத்தவரை இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதில்தான் கவனத்தைச் செலுத்துகிறார். 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பில் அதில் இருந்த முக்கியமான ஏற்பாடுகள் எல்லாம் புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

  22ஆவது திருத்தத்தின் மூலமாக சகலவற்றையும் சாதித்துவிடமுடியாது. தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களுக்கு இது ஒரு அடிப்படையே என்றும் ஜனாதிபதி கூறுகிறார்.

  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் கொள்கை விளக்கவுரையில் துல்லியமில்லாத கருத்தையே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

  ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமா? எமது நாட்டுக்கு எத்தகைய ஆட்சிமுறை பொருத்தமானது? ஆட்சிமுறை எவ்வாறு சீர்திருத்தப்படவேண்டும்? என்ற விவகாரங்களை ஆராயும் பொறுப்பை உத்தேச மக்கள் சபையிடமே ஜனாதிபதி விட்டுவிடுகிறார்.

  கடந்த காலத்தில் பல ஜனாதிபதித் தேர்தல்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அந்த ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. எவராவது அந்த ஆட்சிமுறையை ஒழித்தாலும் கூட பின்னர் அதிகாரத்துக்கு வரக்கூடியவர்கள் அதே ஆட்சிமுறையை மீண்டும் கொண்டுவரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற வாதத்தை முன்வைக்கும் விக்கிரமசிங்க தேசிய கருத்தொருமிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே பொருத்தமானது என்கிறார். அந்த தேசிய கருத்தொருமிப்பை காணும் பொறுப்பை அவர் உத்தேச மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்பார்க்கிறார். அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய ஏற்பாடுகளில் இருந்து தனது தலைமையில் அமையக்கூடிய அரசாங்கத்தை அவர் விலக்கிவைக்க முற்படுகிறார் என்றே தோன்றுகிறது.

  கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ஜனாதிபதி ஆட்சி முன்னென்றும் இல்லாத வகையில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறது. எவ்வளவுதான் ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிந்திருந்தாலும் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வாசற்படிவரை வந்து அந்த அதிகாரங்களை உலுக்கிய பிறகு அந்தப் பதவிக்கு இருக்கக்கூடிய ‘மதிப்பின்’ அளவை ஜனாதிபதி விக்கிரமசிங்க உணர்ந்திருக்கிறார் போலும்.

  அதனால்தான் மக்களுக்கு மேலாக போற்றக்கூடிய ஒரு மன்னராகவோ அல்லது கடவுளாகவோ நாட்டின் ஜனாதிபதி இருக்கவேண்டியதில்லை. அவரும் குடிமக்களில் ஒருவரே. அதனால் ஜனாதிபதிக்கு என்று தனியான கொடி, தனியான இலச்சினை, தனியான கௌரவ பட்டங்கள் எல்லாம் தேவையில்லை என்று அவர் அறிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக பதில் ஜனாதிபதியாக கோட்டபாயவினால் நியமிக்கப்பட்ட உடனடியாகவே விக்கிரமசிங்க ஜனாதிபதியை ‘அதிமேதகு’ என்று இனிமேல் அழைக்கத்தேவையில்லை என்று முடிவெடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘கௌரவ’ என்று அழைக்கவேண்டுமா இல்லையா என்பதையும் அவர் கூறியிருக்கலாம்.

  என்னதான் இருந்தாலும், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை மானசீகமாக விரும்புகின்ற ஒருவராக விக்கிரமசிங்க ஒருபோதும் அடையாளம் காணப்பட்டவர் அல்ல. அது விடயத்தில் இன்னமும் அவர் நழுவல் போக்கையே வெளிப்படுத்துகிறார். ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கும் இன்றைய சூழ்நிலை அதை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மிகவும் வாய்ப்பானதாகும். முன்னென்றும் கிடைத்திராத இந்த அரிய வாய்ப்பும் அரசியல் வர்க்கத்தினால்  தவறவிடப்படக்கூடிய ஆபத்தே இருக்கிறது.

  Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

   

  https://maatram.org/?p=10269

   

 10. சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் - சீனாவின் அபிலாசைகள் தாய்வானுடன் முடியப்போவதில்லை தாய்வான் வெளிவிவகார அமைச்சர்

  By Rajeeban

  09 Aug, 2022 | 12:28 PM
  image

  சீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு தூண்டும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

   நான்சி பெலோசியின் விஜயத்தின் பின்னர் தாய்வானிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவிற்காக அந்த நாடு நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள ஜோசப் வூ சீனாவின் இலட்சியம் 23 மில்லியன் மக்களை கொண்ட சுயாட்சி நாடான தாய்வானை கைப்பற்றுவது மாத்திரமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

  சீனா தற்போது கிழக்கு தென்சீனாவை தாய்வான் நீரிணையின் ஊடாக இணைக்க முயல்கின்றது இதன் மூலம் அந்த பகுதி முழுவதையும்  சர்வதேச கடற்பரப்பாக மாற்ற முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் சீனாவின் நோக்கங்கள் அத்துடன் நிற்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  தாய்வான் தொடர்பான சீனாவின் நடவடிக்கை ஒரு சாக்குபோக்கு மாத்திரமே அதன் இலட்சியங்கள் அதன் தாக்கம் தாய்வானிற்கு அப்பால் நீண்டுள்ளது என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் நாடுகள் அனைத்தும் சீனாவின் ஏதேச்சதிகாரம்; விரிவடைவதற்கு பதிலளிக்க முயலவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தாய்வானிற்கான சீனாவின் அச்சுறுத்தல்   முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது ஆனால் தனது சுதந்திரம் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தாய்வான் மிகவும் உறுதியாக உள்ளது என தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வு சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

  சீனா பல வருடங்களாக தாய்வானை மிரட்டிவருகின்றது அது கடந்த வருடங்களில்  அதிகரித்துள்ளது என தாய்வான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  நான்சி பெலோசியின் விஜயம் இடம்பெற்றதோ இல்லையோ தாய்வானிற்கு எதிரான சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் எப்போதும் காணப்பட்டுள்ளது இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

  தாய்வானை சர்வதேசசமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கு வெளிநாட்டு நண்பர்களை தாய்வானிற்கு அழைப்பது தாய்வானின் முக்கிய தந்திரோபாயங்களில் ஒன்று என தெரிவித்துள்ள அவர்தாய்வானிற்கு வந்து ஆதரவு தெரிவிக்க விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்க முடியாது என சீனா எங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் என நான் அச்சம் கொண்டுள்ளேன்,சீனா தற்போது எங்களை அச்சுறுத்த முயல்கின்றது நாங்கள் அச்சமடையவில்லை என்பதை சிறந்த வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

   

  https://www.virakesari.lk/article/133209

   

 11. ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

  By Rajeeban

  09 Aug, 2022 | 10:37 AM
  image

  ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளது.

  பொருளாதாரத்தை முறையாக கையாளமை, ஊழலிற்கு எதிராக பல மாதங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து ஜூலை 21 ம் திகதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

  பலவருட தவறான நிர்வாகம் மனித உரிமை மீறல்களின் பின்னர் இலங்கை அரசியல் பொருளாதார மனித உரிமை நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது.

  உரிய சமூக பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 

  நாட்டில் காணப்படும் ஊழலிற்குதீர்வை காண்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களை நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

  அதேவேளை கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்கவேண்டும் ஆயுதப்படையினரின் துஸ்பிரயோகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சவால்களை எதிர்கொண்டுள்ளார், ஆனால் மிக கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆர்ப்பாட்ட தலைவர்களை அரசியல் நோக்கத்தின் கீழ்  கைதுசெய்வது செயற்பாட்டு குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண உதவாது   என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

  இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பின்பற்றினால் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் நெருக்கடிகளிற்கான அடிப்படைகளிற்கு தீர்வை கண்டால் மாத்திரமே சர்வதேச உதவிகள் பயனுள்ளவையாக காணப்படும் என இலங்கையின் சகாக்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  https://www.virakesari.lk/article/133196

   

 12. சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

  சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. 

  இது தொடர்பில்  இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  சீனக் கப்பல், 2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின்  இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

  இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம்  வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (a)

  https://www.tamilmirror.lk/செய்திகள்/சீன-கப்பல்-தொடர்பில்-வெளிவிவகார-அமைச்சின்-அறிவிப்பு/175-301971

 13. களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள்

  தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

  இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. 

  நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள். 

  இன்னொரு தரப்பினர், பொருளாதார மீட்சியின் அவசரம் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள், போராட்டக்காரர்களை அமைதிகாக்கும்படி கோருகிறார்கள். 

  மற்றுமொரு தரப்பினர், போராட்டம், வன்முறையைக் கையில் எடுத்ததை அனுமதிக்கவோ அங்கிகரிக்கவோ முடியாது என்றும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்கள். 

  இவ்வாறெல்லாம் கோருகிறவர்கள், அடுத்த வேளை உணவுக்கோ, எரிபொருளுக்கோ போராடுபவர்கள் அல்ல. களத்தில் நின்று கண்ணீர்புகையையும் நீர்த்தாரையையும் எதிர்கொண்டது, இவர்களது பிள்ளைகளும் அல்ல. போராடுவதும் மாற்றத்தைக் கோருவதும் மிகச் சாதாரணமான இலங்கையர்களே ஆவர். இன்று, இவர்களை நோக்கியே ஜனாதிபதி முதல் அனைவரும், இவ்வாண்டு இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள். 

  இன்றைய இலங்கையின் சித்திரம் கவலைக்கிடமானது. அதுகுறித்துப் பேசுவார் யாருமில்லை. அண்மையில், உலக உணவுத்திட்டம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அச்சம் தருபவை.  ‘63 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை. இலங்கையின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். சத்தான உணவுகளின் விலைகள் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது’ என்றும் இவ்வறிக்கை சுட்டுகிறது. 

  அதேவேளை, இலங்கையின் உணவு இறக்குமதிக்காக மாதந்தோறும் செலவிடப்படும் தொகை 130 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது உணவின்மையையும் பட்டினியையும் அதிகரித்துள்ளது.

  விவசாய அமைச்சின் புள்ளிவிவரங்களின் படி, இலங்கையில் திரவ பால் உற்பத்தி 20 சதவீதமும் முட்டை உற்பத்தி 35 சதவீதமும் கோழி இறைச்சி உற்பத்தி 12 சதவீதமும் குறைந்துள்ளன. கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே இந்நிலைமைக்கு பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

  நிறையுணவாகக் கருதப்படும் பாலினதும் முட்டையினதும் உற்பத்தி வீழ்ச்சியானது, போசாக்குத் தொடர்பான ஏராளமான வினாக்களை எழுப்புவதோடு, நீண்டகாலப் பாதிப்புகளை இலங்கையர்களுக்கு ஏற்படுத்தவல்லது. 

  பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் கஷ்டங்களை தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும் எனத் தெரிவித்தார். இதையே பொருளாதார வல்லுனர்கள் எனப்படுவோர் சொல்கிறார்கள். முன்னாள் மத்தியவங்கி ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி, அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார். 

  பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்துப் பேசுகின்ற அனைவரும், ஒரே தொனியில் பேசுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே ஒரே வழி; இலங்கை கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்; மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்; அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். இவையே இவர்களது தீர்வாக இருக்கிறது. 
  இவை அனைத்தும், சாதாரண மக்களின் மீது பொருளாதாரத்தின் சுமையை ஏற்றும் தீர்வுகளே ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடத் தயாராகவுள்ள இலங்கை அரசாங்கம், இலங்கை மக்களை முழுமையாக அடகுவைக்கிறது. 

  மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற, மானியங்களைக் குறைக்கின்ற, தனியார்மயத்தை துரிதப்படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோர், செல்வந்தர்களின் பங்கு என்ன என்பது பற்றி வாய் திறப்பதில்லை. 

  அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், மத்திய வங்கியின் ஆளுநர் மிகமுக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். மாதந்தோறும் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாகக் கிடைக்கும் தொகை, ஒரு பில்லியன் (1,000 மில்லியன்) அமெரிக்க டொலர். இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை. அவை, இலங்கைக்கு வெளியே பதுக்கப்படுகின்றன. அவை நாட்டுக்குள் வந்தால், மாதாந்த எரிபொருள், உணவு, மருந்துகளைக் கொள்வனவு செய்யப் போதுமானவையாக இருக்கும். 

  இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருதற்கான 2021ஆம் ஆண்டின் 5ம் இலக்க விதியின் படி முழு வருமானமும் அந்நியச் செலாவணியில் நாட்டுக்குள் வந்தாக வேண்டும். ஆனால், அது நடைபெறுவதில்லை. இக்குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதுமில்லை.

  அதேவேளை, இலங்கையின் வரிவிதிப்பு முறைகள் அரசாங்கத்தின் மிகக்கேவலமான முகத்தை வெளிக்காட்டுகிறது. முத்துகள், வைரங்கள், உயர்ரகக் கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

  அதேவேளை, பெண்களுக்கு அவசியமான மாதவிடாய்கால துணிகளுக்கு 43சதவீத வரியும் குழந்தைகளுக்கான அணையாடைகளுக்கு 15சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இவ்வாறான வரிவிதிப்புகளையும் வரிச்சலுகைகளையும் உருவாக்கிய அதிகாரிகள், அங்கிகரித்த அரசாங்கம் என்பன, மிகச்சாதாரணமான இலங்கையர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

  இலங்கையில் பொருளாதார அடியாட்கள், பல்வேறு வகைகளில் இயங்குகிறார்கள். ஒருசிலர், இவ்வாறு நாட்டுக்குள் வரவேண்டிய அந்நியச் செலாவணியை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். 

  இன்னும் சிலர் அரசாங்கப் பதவிகளில் இருந்தபடி, இவ்வாறான செயற்பாடுகளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். இவ்வாறான செயல்கள் தொடர அனுமதியளிக்கிறார்கள். இவர்கள் அனைவரும், நாட்டுக்குள் இயங்கும் செயற்பாட்டுப் பொருளாதார அடியாட்கள். 

  இன்னும் சிலர் அரசாங்கத்தின் கொள்கைவகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் பொருளாதார அடியாட்கள். அவர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையக் கோருவது, சமூகநல வெட்டுகளைக் கோருவது போன்ற வேலைகளைச் செய்பவர்கள். 

  மூன்றாவது வகை, நாட்டின் தலைவர்களாக, அமைச்சர்களாக இருந்து நேரடியாக, நவதாராளவாதத்தின் அடியாட்களாக இயங்குபவர்கள். இவர்கள் அனைவரும் வகைதொகையின்றி இலங்கையில் உலா வருகிறார்கள். 

  இந்தப் பொருளாதார அடியாட்கள், வரன்முறையின்றி இயங்குவதற்கு இயல்பான எதிர்ப்பு உருவாகாத சூழல் அவசியம். அதையே போராட்டக்காரர்களை நசுக்குவதன் ஊடு, அரசாங்கம் செய்ய முயல்கிறது. 
  பொருளாதார அடியாட்களோடு, ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் பின்னிப் பிணைந்தவை. இல்லாவிட்டால் மத்திய வங்கிப் பிணைமுறி விடயத்தில், இலங்கையால் தேடப்படுகின்ற குற்றவாளியை ‘சீஎன்என்’  தொலைக்காட்சி பேட்டி எடுக்கிறது. அவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது பற்றி வகுப்பெடுகிறார். இதையெல்லாம், கேட்டுக்கேள்வியின்றி சகிக்க வேண்டிய நிலையில்தான் இலங்கையர்கள் இருக்கிறார்கள். 

  இந்தப் பொருளாதார அடியாட்களும் அவர்தம் துதிபாடிகளும் அடிக்கடி சொல்கின்ற இரண்டு விடயங்களை சுருக்கமாகப் பார்ப்போம். 

  முதலாவது, அரச சேவையில் பணியில் உள்ளவர்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது. இந்த அடியாட்களது கோரிக்கை யாதெனில், பணியாட்களைக் குறைத்து, துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பதாகும். தனியார்மயமாக்குவதன் ஊடு வினைத்திறனான சேவை கிடைக்கும் என்பதே இவர்களின் வாதம்.

  இலங்கையில் வெற்றிகரமாக இயங்கிவந்த அரச பஸ் சேவையை, 1979இல் தனியார்மயமாக்கியதன் கோர விளைவுகளை, இலங்கையர்கள் நன்கு அறிவார்கள். இன்றும் பின்தங்கிய கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களே செல்கின்றன. அரசசேவையைத் தனியார்மயமாக்குவது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, பஸ் சேவை தனியார்மயமாக்கம் நல்லதோர் உதாரணம். 

  இலங்கையின் அரசதுறையின் அரசியல்மயமாக்கமும், வாடிக்கையாளர் அரசியலும் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் சீரழித்துள்ளன. அதேவேளை இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலன்கள் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்வதற்கு, வினைத்திறனான அதேவேளை போதுமான ஊழியர்களைக் கொண்ட அரசசேவை அவசியம். 

  ஆட்கள் குறைப்பு பற்றிய விடயத்தில், நாம் ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறோம். இலங்கையில் 1.5 மில்லியன் பேர் அரசபணிகளில் இருக்கிறார்கள், சராசரியாக 100 பேருக்குப் பணிசெய்வதற்கு 6.8 பேர். ஐரோப்பாவில் சராசரியாக 100க்கு7, ஸ்கன்டினேவியாவில் சராசரி 100க்கு 9. 
  இலங்கை போன்ற அசமத்துவங்கள் நிறைந்த, குறைந்த வருமானமுடைய ஒரு நாட்டின் நலனுக்கு, அரசசேவையே அச்சாணி. 

  ஐ.நாவின் சமூகக் குறிகாட்டிகளில் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது,  இலங்கை முன்னணியில் இருப்பதும், குறிப்பாகக் கல்வியிலும் மருத்துவத்திலும் இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான குறிகாட்டிகளைக் கொண்டிருப்பதையும் சாத்தியமாக்கியது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமுமாகும். 

  பொருளாதார அடியாட்கள் எம்மிடம் மீதமுள்ள சமூக நலன்களையும் அது தருகின்ற வளமான கல்வி, நலமான உடல்நிலை ஆகியவற்றையும் பறித்து, அனைத்தையும் வியாபாரமாகவும் இலாபத்துக்கானதாகவும் மாற்ற முயல்கிறார்கள். 

  அவதானமாக இல்லாவிடின், துன்பத்தில் உழல்வது எமது எதிர்காலச் சந்ததியும்தான் என்பதை நினைவில் கொள்க!
   

  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/களத்தில்-குதித்துள்ள-பொருளாதார-அடியாட்கள்/91-301863

   

 14. ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது?

  நிலாந்தன்

   

   

  வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா  எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

  கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக  அமையுமா?

  அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்பு முறியடிப்பு நடவடிக்கைகளில் ரணில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.அரகலயவை ஒடுக்கும் நடவடிக்கைகளை ரணில் இருமுனைகளில் முன்னெடுக்கிறார்.ஒருமுனை,அரகலய தோன்றக் காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடியைத் தற்காலிகமாகவேனும் தணிப்பது. இரண்டாவது, அரகலயச் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பது.

  முதலாவது முனையில்,கடந்த சில வாரங்களுக்குள் ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களைச் செய்திருக்கிறார்.முதலாவது, மின்வெட்டு நேரத்தை குறைத்துக் கொண்டு வருவது.இரண்டாவது தலைநகரில் எரிவாயு விநியோகத்தை வழமைக்கு கொண்டு வந்தது.ஏனைய நகரங்களிலும் எரிவாயு விநியோகம் சீராகி வருகிறது. மூன்றாவது, வரிசையில் நின்றால் எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.கியூஆர் கோட் முறைமைக்குள் எரிபொருள் ஒப்பிட்டளவில் கிடைக்கக்கூடியதாக இருப்பது.நாலாவது, பொருட்களின் விலைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவது. ஐந்தாவது, அரகலயவின் கோரிக்கையான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தும் விதத்தில் 22 A  திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆறாவது, சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருப்பது.

  மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் அரகலய தோன்றக் காரணமாக இருந்த அம்சங்களை அகற்றுவது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக,அரகலயவை ஆதரித்த சிங்கள படித்த நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் பயங்களையும் போக்குவது.இது முதலாவது முனை.

  இரண்டாவது முனையில் அரகலய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது. கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் இரண்டு பிணங்கள் காலிமுகத்திடலில் கரையொதுங்கின.அரகலய தொடங்கி இதுவரையிலும் இவ்வாறு ஆறு பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன.இது முதலாவது. இரண்டாவது,தென்னிலங்கையில் பரவலாக துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.இதில் கடந்த இரு மாதகாலப் பகுதிக்குள் 23பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மூன்றாவது,அரகலய செயற்பாட்டாளர்கள் உதிரி உதிரியாகக் கைது செய்யப்படுவது. அவர்களில் சிலருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்திருப்பது.ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவரான ஸ்டாலினைக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொழிற்சங்கங்கள் அரகலயவை தூக்கிநிறுத்தக்கூடாது என்று ரணில் சிந்திக்கிறார்.நாலாவது,அரகலயவின் பின்னணியில் நிற்பதாக கருதப்படும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் அலுவலகம் போலீசாரால் சோதனை இடப்பட்டுள்ளது.நாலாவது,கோட்டாகோகம கிராமத்தின் பருமனைக் குறைப்பது.அக்கிராமம் நாடு முழுவதுக்குமான அரகலயவின் குறியீட்டு மையம் ஆகும்.அரசுக்கு எதிராக ஒரு போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை வெளியுலகத்துக்கு உணர்த்தும் ஒரு செயற்பாடாக அது காணப்பட்டது. ரணில் இப்பொழுது அதைச் சிறிதாக்கி வருகிறார்.அங்கே இப்போது நூற்றுக்கும் குறைவானவர்களே காணப்படுகிறார்கள்.

  spacer.png

  மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் ரணில் விக்ரமசிங்க அரகலயவை குறிப்பிடத்தக்க அளவிற்கு முறியடித்திருப்பதாகவே தோன்றுகிறது. அரகலயவின் முன்னனிச் செயற்பாட்டாளர்ர்கள் பலர் தலைமறைவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. அரகலயவின் தொடக்கத்தில் இருந்து அதை ஆதரித்து வந்த மேற்கு நாட்டுத்  தூதரகங்கள் இப்பொழுது கைது நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில்லை. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக பார் அசோசியேஷன்-சட்டத்தரணிகள் அமைப்பு-முன்னரைப்போல பலமான எதிர்பைக் காட்டவில்லை.

  கோத்தாபய அகற்றப்படும் வரையிலுமான போராட்டக்களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதில் சட்டத்தரணிகளின் சங்கம் பெரிய பங்களிப்பை நல்கியது. ஒருநாட் காலை  காலிவீதியில்  போலீஸ் வாகனத் தொடரணியொன்று காணப்பட்டது.போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு அவ்வாறு அந்த வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபணை தெரிவித்தது.பின்னர் அந்த வாகனப்பேரணி நீக்கிக்கொள்ளப்பட்டது. காலிமுகத்திடலில் போலீஸ் மற்றும் படைத்தரப்பிடமிருந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகளும் மதகுருகளும் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலி அமைத்துக் கவசமாக நின்ற காட்சிகளும் உண்டு.கோத்தாபய அகற்றப்படுவதற்கு முன்புவரை அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் நீதிமன்றங்களில் குவிந்தார்கள்.மீரிஹான சம்பவத்தின் பின்னரான கைது நடவடிக்கைகள் உட்பட சில கைது நடவடிக்கைகளின்போது 300க்கும் குறையாத சட்டத்தரணிகள் அவ்வாறு திரண்டுநின்று செயற்பாட்டாளர்களை பாதுகாத்தார்கள்.

  ஆனால் இதுவெல்லாம் கோத்தா அகற்றப்பட முன்னரான கதைகள்.ரணில் வந்த பின்னரான கதைகள் வேறு.போராட்டத்தில் முன்னணியில் நின்ற மதகுரு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சட்டத்தரணிகள் சங்கம் அவர்களை பாதுகாப்பதற்கு முன்னரைப் போல ஒன்றிணைந்து தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை.

  கைது செய்யப்படுவோர் வெவ்வேறு நீதிமன்றங்களில் பரவலாக முற்படுத்தப் படுத்தப்படுவதால்,சட்டத்தரணிகள் அவ்வாறு திரளமுடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.எனினும் கொழும்புமைய சட்டத்தரணிகள் அமைப்பு பெருமளவுக்கு யூஎன்பிக்கு ஆதரவானது என்று கருதப்படுகிறது.மேலும் அரகலயவோடு தொடக்கத்திலிருந்தே இளம் சட்டத்தரணிகள் அமைப்புத்தான் அதிகம் நெருக்கமாக காணப்பட்டது என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

  மேலும்,கைது செய்யப்படுவோரில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களின் விடயத்தில் நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு சில இளம் சட்டத்தரணிகள் மட்டுமே தயாராக காணப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. அவை அரகலயவின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத வன்முறைகள் என்று கருத்தும் ஒரு பகுதி சட்டத்தரணிகளும் உண்டு. அதாவது சட்ட மறுப்பை சட்டக்கண் கொண்டு பார்ப்பது.

  ஒரு மக்கள் எழுச்சியின்போது இடம்பெற்ற சம்பவங்களை சட்டக்கண் கொண்டு பார்க்க முடியாது.ஏனென்றால் எல்லா மக்கள் எழுச்சிகளும் சட்ட மறுப்பாகத்தான் தோன்றுகின்றன.எனவே ஒரு மக்கள்திரளின்  சட்டமறுப்பு நடவடிக்கையை சட்டத்தின் தராசில் வைத்து நிறக்க முடியாது. அதை ஒரு சட்டப் பிரச்சினையாக வியாக்கியானம் செய்யவும் முடியாது.அது ஓர் அரசியல் பிரச்சினை.ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கிறார்.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் அமைப்பு பலமான எதிர்ப்பை காட்டவில்லை.அதைச் சட்ட விவகாரமாகச் சுருங்குவது ஒருவிதத்தில் ரணில் வைத்த பொறிக்குள் சென்று விழுவதுதான்.

  சட்டத்தரணிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியிலும் குறிப்பாக சஜித் அணியினர் மத்தியிலிருந்தும் மேற்படி கைது நடவடிக்கைகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புக் காட்டப்படவில்லை. இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரு வர்க்கமாக நின்று சிந்திக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அழித்த, வீடுகளை எரித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் பெரியளவு ஆர்வம் காட்டப்படவில்லை.

  spacer.png

  இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க அரகலயவை அதன் ஆதரவுத்தளங்களில்  இருந்து பெருமளவுக்கு தனிமைப்படுத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தொகுத்துக் கணித்தால் வரும் ஒன்பதாம் திகதி மாபெரும் எழுச்சி ஒன்றுக்கான வாய்ப்புகளைத் தடுப்பதற்காக ரணில் கடுமையாக உழைக்கிறார்.

  அரகலயக்காரர்கள் கூறுகிறார்கள் தற்பொழுது போராட்டம் ஓய்ந்து போய்விட்டதான ஒரு தோற்றம் வெளித் தெரிவது உண்மைதான் என்று. ஆனால் அரகலயவின் பேரெழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால் இடைவெளிகள் விட்டு மக்கள் குறிப்பிட்ட தினங்களில் தெருக்களில் லட்சக்கணக்கில் திரண்டு வந்தார்கள்,இப்பொழுதும் அரகலய சோர்ந்து போய்விட்டதாக தோன்றினாலும் அது மறுபடியும் ஒருநாள் மக்களைத்  வீதிகளுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.மஹிந்தவை அகற்றியது அரகலய -1.0 என்றும் ,பஸிலை அகற்றியது அரகலய-2.0 என்றும்,கோட்டாவை அகற்றியது அரகலய-3.0 என்றும், இனி ரணிலை அகற்றுவதும் முறமையை மாற்றுவதும் அரகலய-4.0 என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.

  spacer.png
  spacer.png

  ஆனால் கடந்த மூன்றுமாத காலத்துக்கும் மேலான தென்னிலங்கை அரசியற் களத்தைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவான ஒரு பிரிகோட்டைக்  காணமுடிகிறது.கோத்தாவுக்கு முன்,கோத்தாவுக்கு பின் என்பதே அது. கோத்தாவுக்கு பின்னரான அரகலய பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.சோர்ந்துபோய்க் காணப்படுகிறது. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மைய வாரங்களாக ஒழுங்கு செய்யப்படும் போராட்டங்கள் பேரெழுச்சிகளாக அமையவில்லை.

  வரும் ஒன்பதாந் திகதியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கெட்ட நாளாக மாறுவதைத் தடுக்க ரணில் முயற்சிக்கிறார்.69 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்ற ராஜபக்சக்களைத் துரத்திய ஒரு போராட்டத்தை, சுமார் 30,000 வாக்குகள் பெற்ற ஒருவர் முறியடிக்கப் போகிறாரா? ஒன்பதாம் திகதி பற்றிய அரசியல் எண்கணிதத்தைப் பொய்யாக்குவதில்  ரணில் வெற்றி பெறுவாரா?

  http://www.nillanthan.com/5594/

 15. காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி

  By T. Saranya

  06 Aug, 2022 | 09:52 AM
  image

  காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

  காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

  அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

  ஆனால், இந்த தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முழு விவரத்தை பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. 

  23.jpg

  AP Photo / Fatima Shbair

  ஆனால், இந்த தாக்குதலில் குறைந்தது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  மேற்குகரை பகுதியில் இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் மூத்த பயங்கரவாதி கைதியை இஸ்ரேல் கைது செய்த நிலையில் இதற்கு பதிலடியாக உடனடி அச்சுறுத்தலாக மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  அதேவேளை, இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

   

  https://www.virakesari.lk/article/133022

 16. வருகிறார் கோட்டா

  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. 

  தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

  எனினும், அவர் இலங்கைக்கு வந்தவுடன் எங்கு தங்கப்போகின்றார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம், அது குறித்து தனது சகோதரர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தித்தருமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரும்பினால் தொடர்ந்தும்  அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். அதற்கான பக்க பலமாக நாம் இருப்போம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். (a)

   

  https://www.tamilmirror.lk/செய்திகள்/வருகிறார்-கோட்டா/175-301804

 17. சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

  சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

  இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

  இந்தநிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

  அத்துடன் அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள்  மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வுகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். (a)

  https://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வகட்சி-ஆட்சிமுறைக்கு-ஐக்கிய-மக்கள்-சக்தி-ஆதரவு/175-301812

 18. சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும்

  image_948d7301b6.jpg

  ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது. 

  ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த நிலையில்,   தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டமை முதலாவது பார்வையாகும்.

  இரண்டாவது, ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதரும்  சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல், அங்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி வரையிலும் நங்கூரமிட்டிருப்பதாகும்.

  சீன உளவுக் கப்பல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தால் தெளிவான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை. இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, “எரிபொருள் நிரப்புவதற்காக வருகைதருகின்றது” என்றார். 

  இந்த பதில், இராஜதந்திர மட்டத்திலான பதில் அல்ல என்பது பலருக்கும் புரிந்திருக்கும். முன்னதாக அந்தக் கப்பலின் வருகை தொடர்பில் தங்களுக்குத் தெரியாது என்று அறிவித்திருந்த இன்றைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வழங்கிய அனுமதியின் பிரகாரமே அக்கப்பல் வருகைதருகிறது என, இவ்வரசாங்கம் பதிலளித்திருந்தது. 

  சீனாவின் உளவு கப்பல்கள் இலங்கைக்கு வருகைதருவது இது முதன்முறையல்ல. சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பலானது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 2014 ஆம் ஆண்டு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

  சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்து நங்கூரம் இடுவது தொடர்பில், இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

  இந்த கப்பலின் வருகைதொடர்பில் இலங்கை முறையாக பதிலளிக்கவில்லை என்றாலும் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்றடிப்படையில், தங்களுடைய உதவி தொடருமென இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

  ஆசியான் பிராந்திய மாநாட்டின் இணை நிகழ்வாக, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரிக்கும், டாக்டர் ஜெயசங்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். “நெருங்கியதும் நட்புமிகுந்ததுமான அயல் நாடுகளின் சந்திப்பு” என அச்சந்திப்புக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 

  அயலுறவுக்கு முதலிடம்” எனும் கொள்கையின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணியப்பை டாக்டர் ஜெய்ஷங்கர் மீண்டும் வலியுறுத்தியிருப்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.  

  image_9eb9229322.jpg

  குறிப்பாக இலங்கைக்கு பாரியதொரு நிதியுதவியை இந்தியா அளித்த உடனே சீன உளவுக்கப்பலின் வருகையானது இந்தியாவுடனான இலங்கையின் உறவைப் பாதிக்குமென பெரும்பாலும் கூறப்பட்டிருந்த நிலையில், ஜெய்ஷங்கரின் அறிவிப்பானது ஓரளவுக்கு திருப்தியூட்டுவதாய் அமைந்துள்ளது. எ

  இலங்கையின் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற நெருக்கடியின்போது இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியாவாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், சீன உளவுக்கப்பலின் வருகையானது இந்தியாவின் பாதுகாப்பு சவாலுக்கு உட்படுத்துமாயின் அதன் பிரதிபலனை இலங்கையே அனுபவிக்கவேண்டும். அதற்கெல்லாம் எதிர்காலமே பதில் சொல்லும்.

  ப்பட்டால் பின்னர் இலங்கை அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டும்.

  சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் காரணமாக ராஜபக்‌ஷக்களின் மோசடி நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப்பட்டதுடன், இலங்கையை நெருக்கடிக்குத் தள்ளியதுடன்,

  இலங்கைக்கும், சீனாவுக்குமிடையிலான ஹம்பந்தோட்டை துறைமுகத்தைக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் இத்துறைமுகத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சீனாவின் நகர்வானது ஒப்பந்தத்தின் மீறலாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

  கப்பலானது செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடியதுடன், இலங்கையையும், இந்தியாவின் தென் பகுதியையும் ஆபத்துக்குள்ளாக்கும் மேம்பட்ட உணரிகளையும் கொண்டுள்ளது. இந்தியா இதை ஏற்கெனவே உணர்ந்துள்ளது. கப்பலானது 100 சதவீதம் நீர்மூழ்கி உளவு மற்றும் மேம்பட்ட கொள்ளவுகளை உடைய பாதுகாப்புத் தரையிறக்கக் கப்பலுடனான இராணுவக் கப்பலாகும்.

  இலங்கை அரசாங்கம் கூறுவதைப் போல, எரிபொருள் நிரப்புவதற்குத்தான் அந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடுகிறது என்றால், ஓகஸ்ட் 11 முதல் ஓகஸ்ட் 17 ஆம் திகதிவரையிலும் 6 நாட்களுக்கு நங்கூரமிடப்பட்டிருப்பது ஏன்? என்ற சந்தேகம் நியாயமானது. ஆனாலும் சில திருத்த வேளைகளுக்காக அவ்வாறு தரித்து நிற்குமென பதிலும் அளிக்கலாம்.

  சீன கப்பலின் விஜயமானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்,    இடையே பிரிவினையை ஏற்படுத்தும். ஏனெனில், அந்தக் கப்பலானது. கப்பலானது இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் அணு நிறுவல்களை இலக்கு வைத்துள்ளது.

  இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவியளித்து வரும் இந்தியாவை சீனா சீண்டிப்பார்க்கிறது என்பதில் தவறில்லை. 

  Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

  இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே  இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

  இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா? என்பதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

  இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா? என்பதுவும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயமாகும். எவ்வாறோ, இந்தியா தனது கழுகுப் பார்வையை இலங்கையின் மீது ஆழப்பதித்துள்ளது என்பது மட்டுமே உண்மையாகும்.

  சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா? என்பது மறுபுறத்தில் உள்ள கேள்வியாகும். தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

  மொத்தமாக பார்க்குமிடத்து கீழ் கண்ட விடயங்கள் தொடர்பில் ஆகக் கூடுதலான கரிசனையை காண்பிக்கவேண்டிய நிலைமைக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

  SEA OF SRI LANKA  எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

  தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

  எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

  எனினும், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங்கைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் வகையிலான ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

  image_e8b7b5c659.jpg

  “ஒரே சீனா” கொள்கை தொடர்பான இலங்கையின் பின்பற்றல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு சாசன கோட்பாடுகள் தொடர்பான இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.

  அதுமட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மோதலின்மைக்கு முக்கிய அடிப்படையாக அமையும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

  ஆக, சீன உளவு கப்பலின் வருகையானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொண்டுள்ளார். ஆகையால்தான், சீன தூதுவரிடம் இவ்வாறான கருத்து அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கவேண்டும்.

   

  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீன-கப்பலால்-சிக்கும்-இலங்கையும்-கைகொடுக்கும்-இந்தியாவும்/91-301787

 19. அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்

  கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட  46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

  இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர்.

  வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

  இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 1024 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

  அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு வரை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முயற்சித்த 183 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

   

  http://www.samakalam.com/அவுஸ்திரேலியாவுக்குள்-ந/

 20. காலிமுகத்திடல் கூடாரங்களுக்கு 10 ஆம் திகதி வரையில் அனுமதி; நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவிப்பு!

  காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அகற்றப்படுவதை தடுப்பதாக  சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியுள்ளார்.

  இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு தேவையான ஆலோசனைகளை விரைவில் வழங்குவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன அறிவித்துள்ளார்.

  எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோத கூடாரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

  போராட்டக்களத்திலிருந்து சுயவிருப்பின் பேரில் வௌியேற விரும்பும் நபர்களுக்கு, இந்த இணக்கப்பாட்டினால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து இன்று மாலை 05 மணிக்கு முன்னர் வௌியேற வேண்டும் என பொலிஸாரால் விடுக்கப்பட்ட பணிப்புரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் இந்த உறுதியுரை வழங்கப்பட்டது.
   

  http://www.samakalam.com/காலிமுகத்திடல்-கூடாரங்க/

 21. திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்

  மனுராஜ் சண்முகசுந்தரம்

  spacer.png

  மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும்.

   

  பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்படிக் குறுக்கீடு செய்வது வழக்கமாகிவிட்டிருக்கும் சூழலில் ஆர்.என்.ரவி முன்வைத்திருக்கும் கருத்துகளின் நிறைகுறைகளையும் உண்மைத்தன்மையையும் கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில், இந்தக் கூற்றுகள் இந்தியா குறித்து நன்கு நிறுவப்பட்ட கருத்தாக்கத்தையே மாற்றியமைக்கக் கூடியவை. 

  மொழி அடிப்படையும் இன அடிப்படையும் வேலூர் சிப்பாய் எழுச்சி நாள் விழாவிலும் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழா ஒன்றிலும் ஆளுநர் முன்வைத்த இந்தக் கருத்துகளை வரலாறு மறுப்புவாதம் என்றுதான் கூற வேண்டும். ஆரியர்கள் குடியேற்றம் என்ற கோட்பாட்டைக் கடந்த காலத்தில் பல்வேறு தலைவர்கள் கடுமையாக மறுத்திருக்கிறார்கள்; ஆரிய - திராவிடப் பிரிவினை என்பதற்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டினார்கள். கடுமையாகச் சர்ச்சிக்கப்படும் இந்த சித்தாந்தக் களத்தில் காலடி எடுத்து வைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் விவாதங்களை ஆளுநர் உசுப்பிவிட முயன்றிருக்கிறார்.     

  இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது போன்ற கூற்றுகளை முன்வைத்த முதல் நபர் ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல. ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது இடம் சார்ந்த வரையறை என்று 'சிந்தனைக் கொத்து' என்ற தனது புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிடுவதன் மூலம், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகள் என்று நிறுவ கோல்வால்கர் முயன்றார். இதற்கு, ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பாடு’ (Out of India theory) என்று பெயர். இந்தக் கோட்பாட்டைப் பெரும்பாலான அறிஞர்கள் புறந்தள்ளிவிட்டனர். 

  ஆயினும், அப்போது கோல்வால்கரும் தற்போது ஆர்.என்.ரவியும் முன்வைத்த கருத்துகளை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் அந்தக் கருத்துகளுக்கு வலுவான அறிவுலக ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம் அல்ல; அவை இந்தியா என்ற கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கக் கூடியவை என்பதால்தான் அவற்றை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும். 

  இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு பூர்வகுடிகளின் செழுமையான, பன்மையான வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. இந்த வரலாறானது மொழியியல், தொன்மவியல், நாட்டாரியல், மானுடவியல், தொல்லியல், மண்ணியல், பிரபஞ்ச வரலாறு, மரபணுவியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளால் நிறுவப்பட்டிருக்கிறது. மேற்கண்ட கல்வித் துறை ஆய்வுகளின் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்டவை) தனித்தன்மையை மொழியியல் ஆய்வுகள் நிறுவியிருக்கின்றன.        

  ராபர்ட் கால்டுவெல், ‘திராவிட ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பம்’  (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages - 1856) என்ற தனது மிக முக்கியமான நூலில் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல என்பதற்கு ஆதாரங்களை வழங்கியிருக்கிறார். மொழியியல் தொடர்பான இந்தக் கண்டறிதல் ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. இதன் தொடர்ச்சியாக தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பிறந்தது. அது, சமூகநீதியால் உந்தப்பட்ட பகுத்தறிவுவாதத்தின் அடிப்படையிலான அரசியல் விழிப்புணர்வுக் கலாச்சாரத்துக்கு வழிவகுத்தது. 

  அயோத்திதாச பண்டிதர், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை போன்றவர்களும் பிற்காலத்தில் ‘நீதிக் கட்சி’ தலைவர்களான டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் போன்றவர்களும் பிராமணர் அல்லாதோருக்கான விடுதலைக்காக சமூக-அரசியல் அறைகூவலை விடுத்தனர். ஒட்டுமொத்தமாக இந்தச் சூழல்தான் பிற்பாடு, 1916 நவம்பர் 20 அன்று மெட்ராஸ் நகரத்தின் விக்டோரியா அரங்கில் நடந்த கூட்டத்தில் முறைப்படி உருவெடுத்த திராவிட இயக்கத்துக்கான விதைகளை விதைத்தது.  ‘ஆரியர்களுக்கு முந்தைய தமிழ் கலாச்சாரம்’ (Pre-Aryan Tamil Culture - 1985) என்ற தனது புத்தகத்தில் பி.டி.சீனிவாச ஐயங்கர் சங்க இலக்கியத்தைக் கொண்டு திராவிடக் கலாச்சாரத்தின் இருப்பை தெளிவாக நிறுவுகிறார்.      

  தொல்லியல் சான்றுகள்

  ஆரியர்களுக்கு முன்பே தங்களுக்கென்றொரு பண்பாட்டு மரபையும் தனித்தன்மை கொண்ட செம்மையான இலக்கிய மரபையும் கொண்டிருந்த தனித்த இனம் இருந்தது என்பது 1920களின் தொடக்கத்தில் ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளால் வலுவாக நிறுவப்பட்டிருக்கிறது. இதைத் தமிழ்நாட்டில், கீழடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

  அகழாய்வுகளில் கிடைக்கும் உயிர்மப்பொருட்கள் பலவும் எளிதில் அழிந்துபடக் கூடியவை. அவற்றைக் கையாள்வதில் நவீன வழிமுறைகள் பெரிதும் முன்னேறியிருக்கின்றன. கூடவே, அதிக அளவிலான மரபணு வரிசைப்படுத்தல் தொழில்நுட்பம். இந்தியத் துணைக் கண்டத்தில் அலையலையான குடியேற்றங்கள் எப்படி ஏற்பட்டன என்பதை இவற்றைக் கொண்டு நாம் தற்போது புரிந்துகொள்கிறோம்.     

  நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றின் போக்கில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களை மேற்கண்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 2018இல் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 92 அறிவியலர்கள் சேர்ந்து எழுதிய ‘தெற்காசியாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் மரபணுத் தொகுப்பமைப்பு’ (The Genomic Formation of South and Central Asia) என்ற ஆய்வுக் கட்டுரை வெளியானது. 

  இந்தியத் துணைக் கண்டத்தில் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதை மேற்கண்ட கட்டுரையும் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளும் சிந்து வெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று உறுதிப்படுத்தியதோடு ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தில் என்று கால அளவையும் குறுக்கின.  

  பொய்யென்று நிரூபிக்கப்பட்ட கோட்பாடு

  திராவிடர்களும் ஆரியர்களும் ஒரே இனத்தவர்கள்தான், ஆனால் புவியியல்ரீதியில் வேறுபட்டவர்கள் என்று கூறுமொரு பரந்த கதையாடலின் ஒரு பகுதியாக இருக்கும் ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பா’ட்டை சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் பொய்யென்று தூக்கியெறிந்திருக்கின்றன. ஹரப்பா மக்களின் மொழி திராவிட மொழியாகவோ / பூர்வ-திராவிட மொழியாகவோ இருந்திருக்கக்கூடும் என்று கூறும் ஆய்வுகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சிந்து வெளி நாகரிகத்துக்கு ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பெயரிடுதல், புராணங்களில் வரும் சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க முயலுதல் போன்ற காரியங்களில் சமீபத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கும் கோல்வால்கரின் தொண்டர்களுக்கு மேற்கண்ட ஆய்வு முடிவுகள் தீவிர சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 

  ஆகவேதான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான அண்ணா இதுபோன்ற அடிப்படையற்ற கருத்துகள் குறித்து தனது ‘ஆரிய மாயை’ என்ற புத்தகத்தில் அப்போதே எழுதியிருப்பார்.     

  மூடநம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் போலி வரலாறுகளுக்கும் எதிரான ஒரு சமூக - அரசியல் சொல்லாடலைப்  பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றி அண்ணா கட்டமைத்தார். கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களின் சமூகக் கோட்பாடுகளுடன் அறிவுப் புலத்துக்கே உரிய தீவிரம், அறிவியல் மனப்போக்கு, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றைச் சேர்த்து வலுப்படுத்தினார்கள். 

  இவையெல்லாம்தான் திராவிட இயக்க அரசியலின் அளவுகோல்களாயின. திமுகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையில் அரசியல்ரீதியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்போதுகூட அவற்றின் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் அடிப்படை விழுமியங்கள் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையிலிருந்தும் சாதியச் சமூகத்தின் மீதான எதிர்ப்பிலிருந்தும் விலகிவிடவில்லை.

  திராவிட மாதிரி

  ஆகவேதான், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வேரோடு களைவதிலும் எல்லோரும் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற வகையிலான நியாயமான சூழலை உருவாக்குவதிலும் மாநில அரசின் பங்களிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்; அதற்கு ‘திராவிட மாதிரி’ என்று பெயரிட்டிருக்கிறார். ‘டிரவிடியன் மாடல்’ (Dravidian Model) என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆளுநருக்குத் தமிழ்நாடு முதல்வர் பரிசளித்தார் என்பதும் உண்மையே. பொருளியலர்கள் ஏ.கலையரசனும் எம்.விஜயபாஸ்கரும் இணைந்து எழுதிய அந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் நவீன அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான, கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையிலான விளக்கத்தைத் தருகிறது.   

  மேலே குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களைப் போல இன்னும் இந்தியாவின் மொழிகள் அலையலையான குடியேற்றங்களால் எப்படி மாற்றமடைந்திருக்கின்றன என்பதைப் பற்றியும், இந்தியாவைப் பல்வேறு தோற்றுவாய்களைக் கொண்ட நாகரிகச் சமுதாயமாக மாற்றும் வகையில் பல்வேறு சமூக இயக்கங்கள் தோன்றி, வெவ்வேறு மொழிகளில் சமூக விடுதலை சித்தாந்தங்களை எப்படிப் பேசின என்பதைப் பற்றியும் துல்லியமான ஆதாரங்களுடன் பதிவுசெய்யும் வெவ்வேறு புத்தகங்களை தமிழ்நாட்டில் தன் பதவிக்காலத்தின் மிச்சமுள்ள நாட்களில் ஆர்.என்.ரவி எதிர்கொள்ள நேரலாம். 

  இவற்றைத் தவிர ஆளுநர் எதிர்கொள்ள நேரிடும் எந்தக் கோட்பாடும் சந்தேகத்துடனே பார்க்கப்பட வேண்டும். அதற்கு, ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார்கள் என்பதற்காகக் கிடைக்கும் ஏராளமான சான்றுகள் துணை நிற்கும்.

   

  https://www.arunchol.com/manuraj-shanmugasundaram-on-dravidian-movement

  • Like 1
 22. இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

  kugenAugust 5, 2022
   

  WhatsApp%20Image%202022-08-05%20at%203.43.32%20AM.jpeg
  செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

  பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்தார்.

  துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

   

  http://www.battinews.com/2022/08/blog-post_86.html

   

 23. குரங்கு அம்மை நோய் ; அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

  அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய்  அதிகரித்து வருவதன் காரணமாக பொது சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

  கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது. 

  இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

  குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 

  குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன. 

  நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அவசர நிலையை பிரகடனம் செய்தது. 

  இந்நிலையில் குரங்கு அம்மை நோயை அமெரிக்கா  பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

   

  https://www.virakesari.lk/article/132934

   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.