Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  29749
 • Joined

 • Days Won

  129

Posts posted by கிருபன்

 1. தனி ஒருவன் நான்...

  spacer.png

  நிலவை கடந்து தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது சாத்தியமா? அசாத்தியமா? என மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதையே தன் வாழ்நாள் கனவாய் கொண்டு வாழ்பவர் இவர். 

  தரைப் போக்குவரத்தாக இருக்கட்டும் விண்வெளிப்பயணமாக இருக்கட்டும் அனைத்துமே இவருக்கு அத்துப்படி தான். சாதிக்க துடிக்கும் அனைவரும் தமக்குள் கனவுகோட்டை கட்டுவதுண்டு. ஆனால் இவரின் கனவோ ஆகாச கோட்டையையும் தாண்டி அண்டவெளியில் உலா வருவது.

  டெஸ்லா (Tesla),ஸ்பேஸ் எக்ஸ் (Space X), பே பால் (Pay Pal) இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு.

  ஆனால் நினைத்து பார்க்க முடியாத இவற்றையெல்லாம் உருவாக்கி தொழினுட்பத்தின் மற்றுமொரு பக்கத்தை புரட்டிப்பார்த்து உலகை வியக்கவைக்கும் தன் அறிவுத்திறமையால் தொழினுட்பத்தை தன் கண்டுபிடிப்புகளாலும் அமைப்புகளாலும் அசத்திவருகிறார் எலான் மஸ்க் எனும் தொழினுட்ப நாயகன்.

  'தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை. தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகமே தடையுமில்லை' என்ற   திரைப்படப்பாடல்  வரிகளுக்கு  பொருந்தும் விதமாக தனி ஒருவனாய் வாழ்ந்து வென்று காட்டியவர் தான் எலன்மஸ்க். இளைஞர்களுக்கு சூப்பர் ஹீரோவாக, ரோல் மொடலாக இருந்து வரும் எலானை Avengers திரைப்படத்தில் வரும் ஐயன் மேன் (Iron man) கதாபாத்திரத்தை போல் நிஜ வாழ்வில் வாழும் ஓர் அயன் மேன் என்று வேடிக்கையாக கூறுவதுமுண்டு. 

  1971 ஆம் ஆண்டு ஜூன் 28 தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வாலில் உள்ள பிரிட்டோரியாவில் பிறந்த இவர் தான் எலோன் ரீவ் மஸ்க்.

  தாயார் மேய் மஸ்க் ஒரு மாடல் மற்றும் உணவியல் நிபுணரும் ஆவார் மற்றும்  தந்தை எரோல் மஸ்க் இயந்திர பொறியியலாளர், விமானி,  மாலுமி என பன்முகங்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.

  எலான் மஸ்க்கிற்கு ஒரு இளைய சகோதரரும் இருந்தார். எலன் மஸ்க் பெரும்பாலும் தனிமையிலே தன்னுடைய காலத்தை  கழித்தார். தன்னுடைய நண்பனென அவர் கருதிய தன்னுடைய புத்தகங்களுடன் தான் உரையாடப்பழகிக்கொண்டார். 

  தாயின் அன்பும் தந்தையின் வழிகாட்டுதலும் முழுமையாக கிடைக்கப்பெறாத எலான் மஸ்க்கிற்கு அன்னையாகவும் தந்தையாகவும் இருந்தது அவர் வாசிக்கும் புத்தகங்கள் தான். குறிப்பாக ஐசக் அசிமோவின் நாவல்கள் விண்வெளிப் பற்றிய எலானின் கனவிற்கு வித்திட்டது.

  எலான் மஸ்க் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாசா, அப்பலோ 11 ராக்கெட் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் உட்பட மூவரை நிலாவிற்கு அனுப்பி சாதனைபடைத்தது. ஆச்சரியத்திற்கும் அப்பாற்பட்ட இந்நிகழ்வு எலானின் கனவினை மேலும் வளர்த்தது. இப்படி விண்வெளி கனவுகளுடனும் புத்தகங்களுடனும் தன் வாழ்நாள் பயணத்தை ஆரம்பித்தார் எலான். 

  ஆரம்பகாலத்தில் கணினி மொழிகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்த எலான் ஆசிரியர் யாருமின்றி புத்தகங்கள் மூலம் தன்னுடைய 10 வயதிலேயே கடினமான கணினி மொழிகளை இலகுவாக கற்று தன்னுடைய 12 ஆவது வயதில்  Blaster  எனும் வீடியோ கேம் ஒன்றை தயாரித்து 500 மில்லியன் டோலருக்கு ஒரு நிறுவனத்திடம் விற்று அசத்திக்காட்டினார்.

  தன்னுடைய பள்ளிப்படிப்பை சாதரண விதமாக முடித்த எலான் கனடாவில் தன் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். 

  1995 ஆம் ஆண்டு சில முதலீட்டாளர்களின் உதவியோடு Zip 2 எனும் வலைத்தள மென்பொருள் நிறுவனமொன்றை ஆரம்பித்தார். வரைபடங்களை மென்பொருள் மூலம் உருவாக்கினார். இந் நிறுவனத்தை வேறொரு நிறுவனத்திடம் இதன் முதலீட்டாளர்க் விற்றனர்.

  இதில் எலானிற்கு உடன்பாடில்லையென்றாலும் இதன்  மூலம் அவருக்கு சிறுதொகையொன்றும் கிடைத்தது. அதுமட்டுமன்றி இணையத்தின் மூலம் பணப்பரிவர்தனை செய்யும் முறைக்கு முன்னோடியானார். இதுபோல் மற்றுமொரு பணப்பரிவர்தனை நிறுவனத்தோடு இணைந்து எலான் செயற்பட்டார்.

  இதன் விளைவாக  paypal உருவாகி உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலகின் முன்னணி Online shopping நிறுவனமான ebay நிறுவனம் paypal ஐ விலைக்கு வாங்க முற்பட்டது. இதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

  ஆனால் மற்ற முதலீட்டாளர்கள் இதனை பெருந்தொகைக்கு விற்க முற்பட்டனர். அதற்கு தடையாக இருந்த எலானை paypal இன் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்தனர்.

  ஆனால் எதற்கும் தயாராக இருந்த எலான் முன்னதாகவே paypal நிறுவனத்தில் அதிக தொகையான பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டார். ebay பெரும் தொகையை வழங்கி paypal  ஐ வாங்கியபோது அதிக பங்குகளை வாங்கி வைத்திருந்த எலானிற்கு 180 மில்லியன் டொலர் கிடைத்தது. 

  இவ்வாறாக பல தொழில்களை மேற்கொண்ட எலான் இறுதியில் தோல்வியைத் தழுவினாலும் போதியளவு பணத்தை இதன் மூலம் சேர்த்துக்கொண்டார். இதற்கு காரணம் விண்வெளி தொடர்பான அவரது கனவை நிறைவேற்றுவதற்கு நிறுவனமொன்றை அமைப்பதாகும்.

  அதாவது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான தனது கனவை நிறைவேற்றவே அவர் இத்தகைய விடயங்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டியள்ளார். அதற்கான சமயம் வந்துவிட்டதாக  எண்ணிய அவர் ரஷ்யா சென்று அங்குள்ள விஞ்ஞானிகளுடன் ஆலோசனை செய்தார்.

  எலான் ராக்கெட் பற்றிய பல புத்தகங்களை வாசித்து பல உத்திகளை கற்றுக்கொண்டார். ராக்கெட் பாகங்களை வெளியே வாங்குவதாலே செலவாகிறது. ஆகையால் அதன் பாகங்களை நாமே தயாரித்தால் செலவைக் குறைத்து கொள்ளலாம் என்று தனக்குள்ளேயே திட்டத்தை வகுத்துக்கொண்டார்.

  2001 ஆம் ஆண்டு SpaceX எனும் நிறுவனத்தை தொடங்கினார். விண்வெளிப் பற்றிய தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை போட்டுவிட்டார். உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம் எனும் பெருமையையும் SpaceX பெற்றது.

  தன்னுடைய SpaceX நிறுவனத்திற்கு பிரசித்திபெற்ற விஞ்ஞானிகள் அவசியமென்பதையறிந்த எலான் நாசாவில் பணிபுரிந்த விஞ்ஞானிகளை தம்முடைய நிறுவனத்தில் பணியமர்த்தினார். அவர்களின் கடின உழைப்பின் காரணமாக falcon 1  ராக்கெட் உருவானது.

  இவ் ராக்கெட் தரையிலிருந்து கிளம்பிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இதனைப் பார்த்த எலானிற்கு நெஞ்சம் பதைத்தது. தன்னுடைய ராக்கெட் வெடித்துச் சிதறும் அந்த தருணம் தன்னுடைய கனவுகளும் வெடித்து சுக்குநூறாய் போனது போலிருந்தது.

  ஆனாலும் கூட மனம் தளரா எலான் தன்னுடைய முயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் மீண்டும் மற்றொரு ராக்கெட்டை தயாரிக்க வேண்டுமென்று தன்னுடைய விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளித்தார்.

  இவ்வாறு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட ராக்கெட் பூமியிடம் விடைபெற்றுச் செல்லும் முன்னமே என்ஜின் கோளாறு காரணமாக கடலில் வீழ்ந்துவிட்டது. இப்படி இரண்டாவது முறையும் தோல்வியை தழுவிய எலனைப் பாரத்து பலரும் அவமானப்படுத்தினர்.

  அப்போதும் கூட தன்னுடைய நோக்கத்திலிருந்து சற்றும் விலகா எலான் நாசாவிடம் சென்று நாசாவின் செயற்கை கோளை விண்வெளிக்குச் செலுத்தும் ஒப்பந்தத்தை பெற்றார்.

  அதன்படி அந்த ராக்கெட்டும் பூமியை கடக்காது ஏமாற்றத்தையே தந்தது. கனவுக்கு செயல்கொடுக்க எண்ணிய இவருக்கு அடுத்தடுத்து தோல்வி நிலை ஏற்பட்டதால் சற்று உடைந்து போனார். விண்வெளியில் தன் தடம் பதிக்க எலான் மஸ்க் பாடுபட்டதோடு நின்று விடாமல் பூமியிலும் தன்னுடைய தடத்தை வெளிபடுத்த எண்ணினார்.

  தன்னுடைய ஆரம்ப வருவாயில்  அதிகளவு தொகையை SpaceX நிறுவனத்திற்கு ஈடுபடுத்தியிருந்தாலும் மிகுதிப்பணத்தில் 70 மில்லியன் டொலர் செலவில் மின்சாரத்தில் இயங்கும் காரைத் தயாரிக்க Tesla நிறுவனத்தை ஆரம்பித்தார். அதுமட்டுமா? 10 மில்லியன் டொலரைக் கொண்டு சூரியஒளி கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் Solar City எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.

  இப்படி கையிலிருந்த மொத்த பணத்தையும் கொண்டு எலான் நிறுவனங்களை உருவாக்குகையில் இதனை பார்த்த அவரது மனைவி கையிலிருக்கும் பணத்தை கொண்டு அன்றாட வாழ்க்கையை வாழாமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப கனவு காண்கிறீர்கள் என அதிருப்திஅடைந்தார்.

  இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு எலானை விவாகரத்து செய்தார் அவரது மனைவி. இப்படி தோல்விகள் எலானைப் புரட்டிப்போடவே திருமண வாழ்க்கையும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தது. 

  இப்படி தோல்வியின் மொத்த உருவமாய் விளங்கிய எலானை Failure Model என விமர்சிக்க தொடங்கினார்கள். இதனால் எலானை நம்பி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய தயக்கம் கொண்டனர். 

  திறமை இருந்தும் தோல்வியை பெற்றுக்கொண்ட எலானின் வாழ்வில் அனைத்துமே ஏமாற்றம் தான். தோல்வியானாலும் நான் துவண்டுபோவதில்லை என கம்பீரமாய் சொல்லும் அளவிற்கு மன தைரியத்துடன் இருந்த எலானிற்கு அடித்தது மற்றொரு லோட்டரீ என்றே கூறவேண்டும்.

  நாசாவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்முறை விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் பொறுப்பு எலானிற்கு கிடைத்தது. வாய்ப்புகள் இருந்தும் தோல்வியைத் தழுவிய ஒருவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றால் அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

  அதைத்தான் எலானும் நினைத்தார் போலும். இதுவே தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டார். இரவு பகல் பாராமல் அயாரது உழைத்து தன் குழுவுடன் இணைந்து Falcon எனும் ராக்கெட்டை தயாரித்தார். 

  பூமியிலிருந்து புறப்பட்ட அந்த ராக்கெட் எவ்வித கோளாறுமின்றி வெற்றிகரமாக விண்வெளிக்கு நாசாவின் செயற்கை கோளை அனுப்பியது.

  இத்தனை நாட்கள் தம் போரட்டங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றியால் உலகையே வென்று விட்ட பேரானாந்தம் எலானின் மனதில் குடிகொண்டது.

  அவரைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்த அனைவரும் வெட்கப்படும் அளவிற்கு தன்னுடைய சாதனையை நிகழ்த்தி நான் தான் அந்த எலான் மஸ்க் எனும் தன் பெயரை உலகெங்கும் பரைசாற்றினார்.

  இதையடுத்து நாசாவின் தொழினுட்ப பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச்செல்லும் பணி SpaceX நிறுவனத்திற்கு வழங்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப் பணியைத் தொடர்ந்தும் சிறப்பாக செய்து வந்தது எலானின் SpaceX நிறுவனம். 

  செயற்கைகோளை விண்ணில் செலுத்திய பிறகு ராக்கெட் அங்கேயே வீணாக்கப்படுவதை உணர்ந்த எலான் அதனை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றி இலாபம்  ஈட்டலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

  அவரின் சிந்தனையின் விளைவாக நீண்ட நாள் ஆய்விற்கு பின் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் மீண்டும் பூமியையே வந்தடையும்  செயன்முறையை செயல்படுத்தினார். இதனால் செலவுக்குறைந்து இலாபம் பன்மடங்கு பெருகியது. 

  இது ஒரு புறமிருக்க அவரின் Tesla நிறுவனமும்  வளர்ச்சியடைந்தது. பொதுவாக மின்சாரத்தில் இயங்கும் கார் அதி வேகத்தில் செல்லமுடியாததோடு நீண்ட நேரம் பயணிக்கவும் முடியாது.

  இதனை நிவர்த்தி செய்யும் விதமாகவே டெஸ்லா கார்கள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமன்றி Racing கார்களுக்கு நிகராகவும், நீண்டநேரம் பயணிக்கும் கார்களையும் பிரத்தியேகமாக வடிவமைத்துவருகிறது Tesla நிறுவனம். கார்களின் உற்பத்தியில் மற்றுமொரு புரட்சியை Tesla  நிறுவனம் ஏற்படுத்தியதென்றே கூறவேண்டும். 

  அதிலும் முக்கியமாக காற்று மாசைக் குறைக்கவே மின்சாரக் கார்களை அவர் தயாரித்து வருகிறார். தொழினுட்பத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியுமென்றால் தொழினுட்பத்தால் காக்கவும் முடியுமென்பதை நிரூபித்து காட்டினார் எலான். ளுழடயசஉவைல எனும் தனது நிறுவனத்தின் மூலம் சூரிய சக்தியினால் மின்சாரத்தை தயாரித்து அதனை குறைந்த விலையிலும் விநியோகித்து வந்தார். இப்படி அனைத்திலுமே தன்னுடைய தனித்துவமான சிந்தனையோடு தனக்கென ஒரு தனி இடம் பிடித்த எலான் அத்தோடு நின்றுவிடவில்லை.

   பூமிக்கு அடியில் காற்று நீக்கப்பட்டு அதன் மூலம் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் Hyperloop எனும் திட்டத்தை மேற்கொண்டார்.

  இதற்கமைய விமானத்தை காட்டிலும் வேகமாக பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்திருந்தார். இத் திட்டமானது விரைவில் பூரணத்துவமடைந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டை வீசி அதனை வெடிக்கச் செய்வதன் மூலம் மனிதன் வாழத் தகுந்த கிரகமாக அதனை மாற்றலாம் என தெரிவித்திருந்தார் எலான். மேலும் நியூராலிங்க் எனும் அமெரிக்க நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 80 %அளவில் முதலீடு செய்திருப்பதோடு உயிரினங்களின் மூளையில் மைக்ரோ-சிப்களைப் பொருத்தி, கணினிகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியிலும் எலான் மஸ்க் ஈடுபட்டுவருகிறார்.

  இப்படி தொழினுட்பத்தை தனக்கேற்றாற்போல் வடிவமைத்து  தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ள எலான் மஸ்க் தன்னுடைய பெயரை அசைக்கமுடியாத எந்திர சக்தியாக மாற்றியுள்ளார். 

  வெற்றி பெற்றுக் கொள்ள என்றால் தோல்வி கற்றுக்கொள்ள. இங்கு வெற்றி பெற்றவன் தோற்பதுமில்லை. தோற்காமல் ஒருவன் வெற்றி பெறுவதுமில்லை. 

  ஆகவே தோல்வியே வெற்றிக்கு முதற்படி என்பதை கருத்திற்கொண்டு நாமும் எலான் மஸ்க்கைப் போல விடாமுயற்சியும் கடின உழைப்பும் கொண்டு நம் இலட்சியத்தை நோக்கி பயணம் செய்தால்  பாரையே வெல்லலாம்.!

  'நான் முயற்சியை ஒரு பொழுதும் கைவிடமாட்டேன். அவ்வாறு நான் கைவிட்டிருந்தால் அது முற்றிலும் இயலாத காரியமாக இருக்கும் அல்லது நான் இறந்து இருப்பேன். So Never Give Up! 

  -Elon musk 

   

   

  https://www.virakesari.lk/article/130271

   

  • Like 1
 2. நேற்று வரை இருள்.. வேட்பாளரான பின் திரௌபதி முர்மு கிராமத்திற்கு திடீரென கிடைத்த மின்சாரம்

  தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவரது கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

  பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான உபர்பேடா கிராமத்திற்கு மின்சார வசதியில்லை என்ற செய்தி பரவத் துவங்கியது. பல தசாப்தங்களாக இருளில் வாழும் கிராமவாசிகளின் அவலநிலை பற்றிய புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஒடிசா அரசாங்கம் மின்மயமாக்கத் தொடங்கியுள்ளது.

  3,500 மக்கள்தொகை கொண்ட குசுமி தொகுதியில் உள்ள உபர்பேடா கிராமத்தில் படாசாஹி மற்றும் துங்குர்சாஹி என்ற இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. படாசாஹி குக்கிராமம் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்ட நிலையில், துங்குர்சாஹியில் இன்னும் பல வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

  drawpath.jpg

  சனிக்கிழமையன்று டாடா பவர் நார்த் ஒடிசா டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (TPNODL) அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 38 மின் கம்பங்கள் மற்றும் 900 மீட்டர் கேபிள்கள், கண்டக்டர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஒரு டிரக் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களுடன் உபர்பேடாவை அடைந்தனர். “மின்மயமாக்கல் பணியை முடிக்கவும், முழு உபர்பேடா கிராமத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நிறுவனத்தின் மயூர்பஞ்ச் பிரிவுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.” TPNODL மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  முர்மு தனது கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்ராங்பூருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து விட்டார். இருப்பினும் திருவிழாக் காலங்களில் கிராமத்திற்குச் சென்றாலும் ஊர்மக்கள் இந்த விஷயத்தை முர்முவின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்று TPNODL மூத்த அதிகாரி கூறினார்.

  “2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை மக்கள் இன்னமும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளை ஒளிரச் செய்கிறார்கள்” என்று உபர்பேடா கிராமத்தில் வசிக்கும் சித்தரஞ்சன் பாஸ்கே கூறினார்.

  குக்கிராமத்தில் உள்ள வீடுகள் வன நிலத்தில் கட்டப்பட்டதால் துங்குர்சாஹிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "கிராம மக்களை இருளில் வைத்திருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் சில அதிகாரப்பூர்வ அனுமதிகள் இல்லாததால் இது நடந்தது" என்று அந்த அதிகாரி கூறினார்.

  குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் தான் திரௌபதி முர்மு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. சொந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை என்பதை அவர் எப்படி கவனிக்காமல் இருந்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

  https://www.virakesari.lk/article/130311

 3. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள்

  மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

  ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,  அவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ராபர்ட் பயாஸுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் பார்க்க வந்தேன். அவருடைய உடல் நலம் சீர்கெட்டுள்ளது. அவர் உடனடியாக வெளியே வருவது நல்லது. உடல்நிலை காரணமாக பரோலுக்கு முயற்சி செய்கிறார். அவருக்கு பரோல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. உடல் நிலையை கருதி உடனடியாக பரோல் வழங்க வேண்டும்.

  atputha.jpg

  பேரறிவாளனின் தீர்ப்பு அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உள்ளது. மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலைமை மாறியுள்ளது. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும். இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும். முதல்வரும் கவனிப்பார். பேரறிவாளனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே பரோல் கேட்டோம், அதேபோல் இப்போது ராபர்ட் பயாஸின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் பரோல் வழங்க வேண்டும்.

  பேரறிவாளனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வரும். இருப்பினும், பேரறிவாளன் முழு நிம்மதியுடன் இருக்கிறார் எனக் கூறமுடியாது. உடன் சிறையில் இருந்தவர்கள் வெளியில் வரவில்லை என்ற கவலை அவருக்கு உள்ளது. பூரண மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. குளறுபடியான வழக்கில், தாம் மட்டும் வெளியே வந்திருப்பது சங்கடமாக இருப்பதாக பேரறிவாளன் தெரிவித்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நல்லது நடக்கும். முதல்வர் நல்ல முடிவெடுப்பார்.

  31 ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்தபிறகு இப்போது அவர் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது. இதில் முதல் பாதிப்பு எங்களுக்குத்தான். எங்கள் விடுதலைக்கு அவர்கள் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? எந்த நீதிமன்றத்தை வைத்துக்கொண்டு கொலைகாரன் என்றார்களோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தை அணுகி கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக்கூடாது. பேச முடிவெடுத்தவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது’’ என அவர் கூறினார்

   

  https://www.virakesari.lk/article/130309

   

 4. யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது

  யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை  கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

  யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

  இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சிறுமி, கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டு , கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  அதேவேளை தமது முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், தமது பகுதிக்கு அண்மையில் வசிக்கும் இளைஞர் குழு ஒன்றினால் தமக்கு தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அது தொடர்பிலும் பொலிஸாருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் வடமாகாண ஆளூநர் அலுவலகத்திலும் முறையிட்டு இருந்தனர். 

  அதனை அடுத்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண பொலிஸார் சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

   

   

  https://www.virakesari.lk/article/130299

 5. ஒரு பாலின உறவு: முஸ்லிம் நண்பியை நாடிவந்த இந்திய பெண் விடுதலை

  spacer.png

  பாறுக் ஷிஹான்

  ஒரு குழந்தையின் தாயாரான  முஸ்லிம்  பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ்  பெண் விடுதலை செய்யப்பட்டார்.

  அந்த வழக்கு  ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  அந்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  இரு பெண்களின்  உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

  அதன்பின்னர், முதலாவது சந்தேக நபரான, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயது பெண்ணை     ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். 

  அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

   இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க  தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான   தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.

  அவர் சார்பில், முன்னிலையான பெண் சட்டத்தரணி , அந்தப் பெண்ணை   இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள  அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்தார். அதன்பின்னர்,  இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை  விடுவித்து அனுமதி வழங்கினார்.

  அந்தப் பெண்ணை, பெண்கள் உரிமை தொடர்பான  அமைப்பு, பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து  மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கின், முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க  முஸ்லிம் பெண்ணின் சார்பாக பிரசன்னமாகி, குழந்தையையும் தாயையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது. 

  முஸ்லிம்  பெண்ணின் முறைப்பாட்டாளர்களான  பெற்றோர், கணவன்   சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

  இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில்  பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.

  கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.

  இரு பெண்களையும்  கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு  அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

  கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தனது முஸ்லிம்  நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த தமிழ்  பெண் ஒருவர் தேடி வந்துள்துள்ளதுடன்  இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர். 

  இவ்விரு பெண்களும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் 

  மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லிம் பெண்ணுக்கு  திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார்.

  பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

   

  https://www.tamilmirror.lk/அம்பாறை/ஒர-பலன-உறவ-மஸலம-நணபய-நடவநத-இநதய-பண-வடதல/74-299328

   

 6. எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

  spacer.png

  அதிமுகவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில் தொடங்கிய சர்ச்சை, 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி-பன்னீர் மோதலாக வெடித்தது. இந்த பின்னணியில் ஜுன் 27 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி தலைமையில் கூடியது. இதை சட்டத்துக்குப் புறம்பான கூட்டம் என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர் செல்வம், நேற்று தேனியில் இருந்து சென்னைக்கு வேகமாக வந்தார்.

  இந்த பின்னணியில் அதிமுகவில் தனக்கு எதிராக கட்சி விதிகள் மற்றும் மக்கள் பிரநிதித்துவ விதிகளும் மீறப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (ஜூன் 27) கடிதம் எழுதியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

  மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 (ஏ) (9) இன்படி இந்த விரிவான கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அந்த 9 பக்க கடிதத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் நடப்பதைப் பட்டியலிட்டுள்ளார்.

  “2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த 2 பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மேலும், இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, இந்த சட்டதிருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

  அப்போது முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு மக்கள் பிரநிதித்துவ சட்டத்துக்கு உட்பட்டு பணியாற்றினோம். இந்த அமைப்பிலேயே இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களை சந்தித்தோம்.

  இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு, கட்சிக்கு ஒற்றை தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 23.6.2022 அன்று நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட அந்த 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

  அதன்படி, பொதுக்குழுவில் எந்த விவாதங்களும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு தீர்மானங்களை ஒரு புக்லெக்ட் ஆக அச்சடித்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கொடுப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை

  மேலும் சட்டத்துக்குப் புறம்பாக அந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் மூலம் புதிய பொதுக்குழு தேதியும் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் இருந்த போதும், இது தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே ஒருங்கிணைப்பாளரான எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

  இதைத்தொடர்ந்து நான் (ஓ.பன்னீர்செல்வம்), வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த கூட்டம் சட்ட விரோதமானது. அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு அனைத்துமே சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று தெரிவித்துவிட்டு வெளியேறினோம்.

  பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்ன் வெளியாட்கள் பலர் சட்டத்திற்கு புறம்பாகவும், கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாகவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் என் (ஓ.பன்னீர்செல்வம்) மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

  இதையடுத்து ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் என்று ஜூன் 26 ஆம் தேதி இரவு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் முறையான கையெழுத்து இன்றி தலைமை நிலையச்செயலாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து எதுவும் இல்லை.

  அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரும் இணைந்துதான் இது போன்ற ஒரு கூட்ட அறிவிப்பை வெளியிடவோ நடத்தவோ முடியும். எனவே அந்த கூட்டமும் சட்டத்துக்குப் புறம்பானது.

  இது தவிர... அந்த கூட்டத்தில் 11.7.2022 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதும் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பானது. அ.தி.மு.க. பொருளாளர் என்ற அடிப்படையில் கட்சியின் வரவு-செலவு கணக்குகளை அந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யவும் என்னை அனுமதிக்கவில்லை. 14.6.2022 முதல் தற்போது வரை அ.தி.மு.க. வில் நடந்த சட்ட விதிமீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

   

  https://minnambalam.com/politics/2022/06/28/15/ops-panneerselvam-letter-to-election-commissioner-delhi-admk-edapadi-team

   

 7. ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்!

  இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  இதன்படி, துறைமுகங்கள், சுகாதாரத் துறை, அத்தியாவசிய உணவு விநியோகம், மற்றும் விவசாயப் பொருட்களின் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

  இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அநேகமாக இடைநிறுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

  அதேபோல், எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை குறுந் தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் ஊடாக வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

  பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

  இதேவேளை, பொது போக்குவரத்து அதிகளவில் தேவைப்படாத கிராமப் புற பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  மேலும், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்காக பொறிமுறையானது ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

   

  http://www.samakalam.com/ஜூலை10-வரை-அத்தியாவசிய-சேவ/

   

 8. கடும் வெப்பம், தண்ணீர், உணவு இல்லை; கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு

  747460-1.jpg

  Image Courtesy: Getty Images via AFP

  வாஷிங்டன்,

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. 

  மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்றுபார்த்தபோது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. 

  உடனடியாக, இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். 

  அப்போது, அந்த கண்டெய்னருக்குள் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

  உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவத்துறையினர் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 16 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 

  இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

  கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில் உயிரிழந்த 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

  லாரியுடன் இணைக்கப்பட்ட கண்டெய்னர் குளிர்சாதன வசதிகொண்டது என்றும் ஆனால், அந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  கண்டெய்னருக்குள் போதிய உணவு, குடிநீர் இல்லாததாலும் கடுமையான வெப்பத்தாலும் 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியை ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து, லாரி டிரைவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களின்போது உயிரிழப்புகளும் அரங்கேறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   

  https://www.dailythanthi.com/News/World/46-dead-after-trailer-carrying-migrants-found-in-san-antonio-732942

 9. எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

  (நா.தனுஜா)

   

   

  எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது.

  இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அச்சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும் அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

  எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தவறான தகவல்கள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைமீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

   தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாக குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன குறித்தும் அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டு நிர்வாகம், வணிக செயற்பாடுகள் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்பாடுத்தியுள்ள தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

  அரசாங்கம் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவந்துள்ளது.

  இருப்பினும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தவறான நம்பிக்கையினால் அவர்கள் இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

  அடுத்த தடவை நாட்டிற்கு அவசியமான எரிபொருள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ள திகதி அறியப்படாதவொன்றாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே கையிருப்பிலிருந்த நிதி ஏன் உரியவாறு கையாளப்படவில்லை என்பதற்கான சரியான விளக்கமெதுவும் வழங்கப்படவில்லை.

   அரசாங்கத்தின் அறிவிப்புக்களால் ஏற்பட்ட விளைவுகள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவுகின்ற குழப்பநிலையையும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அவநம்பிக்கையையும் காண்பிக்கின்றன.

  இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கத்தவறியமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். 

  பெற்றோல், டீசல் மற்றம் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

  அவர்கள் சுமார் 24 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்க வேண்டியிருப்பது பாரிய நேரவிரயத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் வன்முறைகளையும் மக்கள் - பொலிஸாருக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன.

  எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், கறுப்புச்சந்தையில் எரிபொருள் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளால் மிகக்குறைந்தளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  அத்தோடு இம்மாதம் முதல் வாரத்தில் எரிவாயுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது. 

  எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்ற இலங்கையின் ஏற்றுமதிகள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் நீதி நிர்வாக செயற்பாட்டின்மீது எதிர்மறைத்தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது.

  மேலும் அனைத்து மக்களுக்கும் நியாயமானதும், சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.

   இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதையும், பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

   அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும், அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கத்தின்மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

   

   

  https://www.virakesari.lk/article/130281

 10. ரஷ்ய தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி

  image_72f7629c27.jpg

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.

  இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

  வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார்.

  2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

  https://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷ்ய-தூதுவரை-சந்தித்தார்-ஜனாதிபதி/175-299301

 11. தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !

  தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

  ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

  1111.jpg

  பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ளார்.

  அதேவேளை, 13 மற்றும் 14 வயதானவர்களும் இவர்களில் உள்ளனர் என தென்னாபிரிக்காவின் பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி தெரிவித்துள்ளார்.

  இம்மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி இது தொடர்பாக கூறுகையில்,

  ‘சன நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நாம் எண்ணினோம். ஆனால் சனநெரிசல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றார்.

  ‘இம்மரணங்கள் குறித்து ஊகம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதனால் தாம் நாம் முன்னிலை தடயவியல் அணியை வரவழைத்துள்ளோம். இம்மரணங்களுக்கு நஞ்சு ஏதேனும் காரணமாக இருந்தால் அவர்கள் எமக்குத் தெரிவிப்பார்கள்’ என்றார்.

   

  https://www.virakesari.lk/article/130282

  • Confused 1
 12. அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக பாடசாலைகள் இயங்கவில்லை - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

  ( எம்.நியூட்டன்)

  அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக 27 ஆம் திகதி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

  இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

  மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல், வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை,சீரற்ற எரிபொருள் விநியோகம்,இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல் இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

  அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும் என்றுள்ளது.

   

  https://www.virakesari.lk/article/130286

   

 13. ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி

  spacer.png

  கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர்.

  இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி7 மற்றும் நேட்டோ மாநாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் இன்று ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர ஜி7 அமைப்பு நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா மீது கடும் தடைகளை விதித்து உக்ரேன் நாட்டிற்கு உங்கள் உதவிகளை வழங்க வேண்டும். உக்ரைன் கிழக்கு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் செவிரோடோனெட்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றிவிட்டன. மேலும் இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் மீண்டும் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளன." என்று தெரிவித்தார்.

   

  https://minnambalam.com/politics/2022/06/27/25/Zelenskyy-seeks-help-frol-G7-countries

   

 14. தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

  spacer.png

  அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

  காலை 9 மணி முதலே பசுமை வழிச் சாலையிலுள்ள தன் வீட்டில் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூடிவிட்டதை உறுதி செய்துகொண்டு 10 மணியளவில் தலைமைக் கழகத்துக்கு வந்தார். அமைப்புச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணித் தலைவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் தலைமைக் கழக நிர்வாகியல்லாத மாவட்டச் செயலாளர்கள் கூட இக்கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகளும் எடப்பாடிக்கு பொக்கேவும் சால்வையும் கொடுப்பதற்கே இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது.

  வழக்கமாய் கூட்டம் நடைபெறும் தளத்தில் மேடை அருகே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்காததால்... அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை மேடைக்கு அழைத்து கே.பி.முனுசாமி, தமிழ் மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி என மூன்று நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன.

  முதல் வரிசையில் விஜயபாஸ்கர், உதயகுமார், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். கூட்டம் 10.25 மணி வாக்கில் தொடங்கி 11. 15 மணியளவில் சுமார் முக்கால் மணி நேரமே நடந்தது.

  கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, ‘அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை போட அவர்கள் கடுமையாக முயற்சிக்கிறார்கள். நாமும் சட்ட விவகாரங்களை ஆய்ந்துதான் அடுத்தடுத்த அடிகளை வைக்க வேண்டும். வரும் ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அவர்களை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்போம். அதுதான் சட்டப்படி இப்போதைக்கு நமக்கு பாதுகாப்பு. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை நாம் ஒருபக்கம் தீவிரமாக செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் சட்ட ரீதியான போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

  இதனால் வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

   

   

  https://minnambalam.com/politics/2022/06/27/31/edapadi-palanisamy-temporary-general-seceratary-kpmunusamy-meeting

   

 15. 11 hours ago, goshan_che said:

  மீண்டும் நான் சொன்ன கூட்டு புரியலின்மையை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ஜி.

  பணத்தை பெற்று கொண்டு அனாதை சிறுவர்களிடம் கிட்னி திருடும் டாகடர்கள் உள்ளார்கள்.

  அதே போல் பணத்தை பெற்று கொண்டு பொய் வழக்கு பேசும் வக்கீல்களும் உள்ளார்கள்.

  பணவசதியில்லாத குற்றம்சாட்டப்பட்டவர்களை கிரிமினல் வக்கீல்கள் குற்றம் இல்லை என்று விடுவிப்பதைவிட பணவசதி மிகுந்தவர்களை குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதை காண்பதால் வரும் நம்பிக்கையீனம். அதனால் வக்கீல்களை நம்புவது குறைவு.

   

   

  18 hours ago, கிருபன் said:

  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23ஆம் திகதி அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

  இவர் யாரென்று ஒரு வீடியோ பார்த்தேன். யாழில் இணைக்கமுடியாது!

 16. எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம்

  (எம்.மனோசித்ரா)

  எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

  இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

  வலுசக்தி அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

  இன்று முதல் டோக்கன்

  தற்போது மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக 550 - 600 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. இதனை 300 - 350 மில்லியன் டொலர்களாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு எரிபொருள் இறக்குமதி செலவினைக் குறைக்கும் பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டளவில் எரிபொருளை விநியோக்க முடியும்.

  வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாளை (இன்று திங்கட்கிழமை) முதல் முப்படையினர் ஊடாக டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பானதாகவும் நேர்த்தியான முறையிலும் டோக்கன்களை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு;ள்ளது. அவர் பாதுகாப்பு செயலாளருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

  ஐ.ஓ.சி.யிடம் விநியோகத்தை அதிகரிக்க கோரிக்கை

  தற்போதுள்ள நிலைமைகளில் எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என்று கூற முடியாது. எனவே தான் டோக்கன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதனை 1000 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

  அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள்

  எரிபொருள் இன்றி அவற்றின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு இதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் தொகையினை பொது போக்குவரத்துக்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் , துறைமுகம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  சப்புகஸ்கந்த சுத்திகரீப்பு நிலையம் மூடப்பட்டது

  இம்மாதம் 29 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் குறித்த தினத்தில் அந்த கப்பல் வராது என்றும் , ஜூலை 3 அல்லது 4 ஆம் திகதியே வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திகதிகளிலும் கப்பல் வருமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டை வந்தடையும் வரை சம்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  மண்ணெண்ணெய் விநியோகத்தில் சிக்கல்

  எண்ணெய் சுத்தீகரிப்பு இடம்பெறவில்லை எனில் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாது. எனவே தான் அதன் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இதன் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெருவோர் உள்ளிட்டோருக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.

  தற்போதைய எரிபொருள் கையிருப்பு

  தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 8000 - 9000 மெட்ரிக் தொன் டீசலும் , 5500 - 6000 மெட்ரிக் தொன் பெற்றோலும் கையிருப்பில் உள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 10 000 மெட்ரித் தொன் எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றோம். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய விருப்பமில்லை என்று கூறுவது தவறாகும். இதற்கு முன்னர் ரஷ்ய நிறுவனத்தின் எரிபொருள் கப்பலை முற்பதிவு செய்த போது , எம்மால் விடுவிக்கப்பட்ட கடன் கடிதம் சர்வதேச வங்கியொன்றினால் நிராகரிக்கப்பட்டது.

  ரஷ்யா செல்லும் அமைச்சர்கள்

  இவ்வாறான தொழிநுட்ப காரணங்களின் காரணமாகவே ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இது போன்ற சிக்கல்களை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்வினைப் பெற்றுக் கொள்வதன் நிமித்தம் இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். எமக்கு எரிபொருளை வழங்கும் நாடு எதுவானாலும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனவே குறைந்த விலையில் எந்த நாடு எரிபொருளை வழங்கினாலும் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக் கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

  புலனாய்வு பிரிவு பணிப்பாளரிடம் கோரிக்கை

  இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தயார் என தெரிவிக்கும் நிறுவனங்கள் , பின்னர் அந்த தீர்மானத்திலிருந்து பின்வாங்குவதன் பின்னணியில் எவரேனும் இருக்கின்றனரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே இது தொட்பில் அவதானம் செலுத்துமாறு புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இரு வாரங்களுக்கொருமுறை விலை திருத்தம்

  அத்தோடு இனி வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். விலைசூத்திரத்திற்கமைய விலை திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

  கட்டாரிடமிருந்து அழைப்பு

  கட்டார் ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையின் தூதுக்குழுவொன்று அந்நாட்டுக்கும் விஜயம் செய்யவுள்ளது. அத்தோடு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் குவைத் அரசாங்கமும் சாதகமான சமிஞ்ஞையைக் காண்பித்துள்ளது.

  கல்வி அமைச்சிடம் கோரிக்கை

  எவ்வாறிருப்பினும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் இரு வாரங்களுக்கேனும் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியூடாக முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

  தனியார் துறை

  அத்தோடு தனியார் துறையிலும் இயலுமானவரை வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோருகின்றோம். இந்தியாவிலிருந்து விஜயம் செய்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களில் எரிபொருள் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்க இராஜதந்திரிகளுடன் பேச்சு

  அத்தோடு நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜதந்திரகள் குழுவுடன் நாளை (இன்று திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 க்கு வலு சக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்குழுவினரிடம் இந்த நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றார். 

   

  https://www.virakesari.lk/article/130236

   

 17. இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ? - யதீந்திரா

   

  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பத்மநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன்.

  இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்கிணைந்து முன்னெடுக்க முடியவில்லை. ஈழ அரசியலில், ஒற்றுமையின்மை என்னும் நோய், எவ்வாறு தமிழனத்தை பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு வாழும் சாட்சியாகும். ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களாலேயே, தங்களுக்குள் ஒன்றுபட முடியவில்லையாயின், மற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு ஒரணியாக கொண்டுவர முடியும்? ஒற்றுமையின்மை என்னும் நோயிலிருந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? இந்தக் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து செல்கின்றது. வரலாற்றோடு எவ்வித தொடர்புமில்லாத வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அது வியாபாரிகள் உகச்சரிக்கும் தமிழ் தேசியமாக உருமாறலாம்.

  இனவிடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போராட்டங்களே, ஒரேயொரு வழிமுறையாகும் என்னும் புறச்சூழலில்தான், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. நான் இந்த காலகட்டத்தை சேர்ந்தவன் இல்லையென்றாலும், வரலாற்றை உற்று நோக்கும் மாணவன் என்னும் வகையில் விடயங்களை தேடியும், சம்பந்தப்பட்டவர்களோடு உரையாடியும் அறிந்துகொண்டதன் மூலம், இந்த வரலாற்று காலகட்டத்திற்குள் செல்ல முடிந்தது. இன்று முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழியுடன், எதைச் சாதிப்பதற்காக சென்றோம் – இப்போது எந்த நிலையில் இருக்கின்றோம் – இனி எங்களால் என்ன செய்ய முடியும்? என்னும் கேள்விகளுடன், வெறும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அன்றைய சூழலில், மாபெரும் கனவுகளுடன்தான் இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள்.

  உண்மையில், அன்றைய சூழலில் இயக்கங்களில் இணைந்து கொண்டவர்கள் பலர், எந்த இயக்கமென்று ஆராய்ந்து இணைந்தவர்களல்லர். அப்படி ஆராய்வதற்கான தேவையும் அப்போது இருந்திருக்கவில்லை. ஏனெனில், இயக்கங்களில் சிறந்தது எது என்னும் கேள்விகளில்லாத காலமது. அனைவருமே விடுதலைக்காக போராடுபவர்கள் என்னும் பெருமை மட்டுமே மேலோங்கியிருந்த காலமது. இயக்கங்களின் தலைமைகளுக்கிடையில் மோதல்களும், பேதங்களும் ஏற்பட்ட போது, அனைத்துமே நிர்மூலமாகியது. சமூதாயத்தை தலைகீழாக புரட்டிப் போடும் கனவுகளோடு சென்றவர்கள், துரோகி, ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழுக்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கூலிப்படைகள் இப்படியான அடைமொழிகளிலிருந்து தப்பிப்பிதற்காக, சமூதாயத்தையேவிட்டே ஓடவேண்டிய துர்பாக்கிய நிலையுருவாகியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.

  2015இல், ஒரு சில முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சம்பந்தனிடம் கோரினர். அப்போது சம்பந்தன் அவர்களுக்கு வழங்கிய பதில் – உங்களிலிருந்துதான், கே.பி வந்தார். உங்களிலிருந்துதான் கருணா வந்தார். நீங்கள் அரச புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுதாக சந்தேகங்கள் இருக்கின்றன – உங்களுக்கு எவ்வாறு, இடம்தரமுடியுமென்று கேட்டிருந்தார். இதிலுள்ள துர்பாக்கியம் என்னவென்றால், சம்பந்தன் அவ்வாறு கூறுகின்ற போது, முன்னாள் இயக்கங்களான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சம்பந்தனை மறுதலிக்கவோ கண்டிக்கவோ இல்லை. ஒரு கட்சியில் ஆசனங்கள் வழங்குவது – வழங்காமல் விடுவது அந்த கட்சியின் முடிவு. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் ஆசனங்கள் வழங்கத்தான் வேண்டுமென்பதல்ல.

  ஆனால் அவர்களை நிராகரிப்பதற்கு சொல்லப்படும் காரணத்தில்தான், இந்த சமூதாயத்தின் மோசமான சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது. முன்னர் ஏனைய இயக்கங்களை அரச ஒட்டுக் குழுக்களென்று கூறி, அவமானப்படுத்திய போது, அமைதியாக இருந்த தமிழ் சமூகம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதியாகவே இருந்தது. மொத்தத்தில் இயங்கங்களின் இன்றைய நிலை பூச்சியமாகும். ஏனைய இயக்கங்களுக்கு எது நடந்ததோ, அதுவே இப்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் நடந்திருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பல பிரிவுகளாக இருப்பது போன்றுதான், விடுதலைப் புலியாதரவு புலம்பெயர் தரப்புக்களும் இருக்கின்றன.

  spacer.png

  இன்று இயக்கங்களின் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமை எனலாம். எந்த மிதவாத அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இயக்கங்கள் தோற்றம்பெற்றனவோ – இன்று அதே மிதவாதிகளின் தயவில் – அவர்கள் போடும் ஆசனங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இழிநிலையில்தான் இயக்கங்களின் கதையிருக்கின்றது. தமிழரசு கட்சியின் தயவில் அல்லது விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தயவில், தங்களின் எதிர்காலத்தை தேடும் நிலையில்தான் இன்று முன்னாள் இயக்கங்களின் நிலையிருக்கின்றது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரு காலத்தின் அரசியலை தீர்மானித்தவர்களால், ஏன் இன்றைய ஜனநாயக அரசியலில் சொல்வாக்கு செலுத்தமுடியவில்லை? மிதவாதிகளிடமிருந்த அரசியல் பார்வைகளைவிடவும் செழுமையான அரசியல் பார்வைகள் இயக்கங்களின் தலைமைகளிடம் இருந்தது. அன்றைய சூழலில் மிகவும் ஆழுமைமிக்க தலைவராக கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூட, 1988இல், இடம்பெற்ற, மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இத்தனைக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமிர்தலிங்கம் ஆதரித்திருந்தார். அந்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான், தமிழ் மக்கள் நிம்மதியாக நித்திரைகொள்ள முடிந்ததென்று, உரையாற்றிய, அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வலுவான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.

  விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டே அமிர்தலிங்கம், அவ்வாறனதொரு முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தனக்கு சரியென்று படும் ஒன்றில் பின்நிற்கக் கூடாது. இந்தப் பின்புலத்தில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று பின்நோக்கி பார்த்தால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவை வரலாறு, நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவை புறம்தள்ளி, ஈழத்தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும், எக்காலத்திலும் பெற முடியாதென்னும் வரலாற்று உண்மை நிருபிக்கப்பட்டிருக்கின்றது. பத்மநாபா கூறிய ஓரு கருத்தை சில வருடங்களுக்கு முன்னர் எனது கட்டுரையொன்றில், பயன்படுத்தியிருக்கின்றேன். அதாவது, இந்தியா என்பது ஒரு கருங்கல் பாறை. அதனோடு முட்டினால் நமது தலைதான் உடையும். ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் அன்றும் இந்தியா கருங்கற்பாறைதான், இன்றும் கருங்கற்பாறை – என்றுமே பாறைதான். பாறை என்பது பலத்தின் அடைமொழி. அன்று எவருமே முன்வராத நிலையில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று அந்த மாகாணசபையை பாதுகாப்பது தொடர்பில்தான் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த இடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அன்றைய முடிவு, வரலாற்றால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவை எதிர்த்து போராட்டத்தை தொடர முடியாதென்னும் நிலையில்தான், விடுதலைப் புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பின. இன்று மீளவும் தமிழ் தேசிய அரசியல் இந்தியாவின் தயவிற்காகவே காத்திருக்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலே இப்போதைக்கு போதுமானதென்னும் நிலைமை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் இப்போது கூட, முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் பயணிக்க முடியவில்லை. ஒன்றாக இணைந்து மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு யார் காரணமென்றால் அனைத்து இயங்களின் மீதும்தான் விரல் நீள வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் உடன்பட முடியவில்லையாயின், பின்னர் எதற்காக முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழி? தியாகங்களால் உருப்பெற்ற வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் இயக்கங்கள், மிதவாதிகள் போடும் ஆசனங்களை எண்ணிக் கொண்டிருப்பதைவிடவும், தங்களின் இயக்க அடையாள கட்சிகளை கலைத்துவிட்டு செல்லவது பெருமையானது.

  spacer.png

  இன்றும் இயக்கங்களை பிரதிநித்துவம் செய்பவர்களுக்கு முதன்மையான பொறுப்புண்டு. ஏனெனில் தமிழ் சமூகம் அரசியல்ரீதியில் இன்று வந்திருக்கும் இடத்திற்கு அனைவருக்குமே பொறுப்புண்டு. விடுதலைப் புலிகளுக்கு முதன்மையான பொறுப்புண்டு. உண்மையில் 2009இல் பேரழிவு ஒன்றை சந்தித்த போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர், சார்பற்ற சுயவிமர்சனமொற்றிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இருந்திருக்கவில்லை. இல்லாதவர் இருக்கின்றார் என்று கூறி, அரசியல் மாயைகளை கட்டமைப்பதிலேயே சிலர் கவனம் செலுத்தினர். இதன் விளைவைத்தான் இன்று தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இன்று அனைத்து இயங்கங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன அதாவது, தியாகங்கள் பெறுமதியற்றுப் போனமைக்கு, இருப்பவர்கள் வெறும் சாட்சியாகியிருக்கின்றனர். இப்போது ஒரு வழிமட்டுமே இருக்கின்றது. அதாவது, முன்னாள் இயக்கங்களின் இப்போதைய தலைமைகள், தங்களது ஒவ்வொரு இயக்கங்களினதும், முடிவுகளுக்காக மாண்டு போனவர்களது தியாகங்களை மதிப்பது உண்மையாயின், அனைவரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும். ஆளுமைமிக்க ஜனநாயக அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டும். முயன்றால், இது முடியாத காரியமல்ல.

  ஒரு வரலாற்றியலாளன் என்பவன், வரலாற்றை அதன் போக்கில் சென்று நோக்க வேண்டும் என்பார் வரலாற்றியல் அறிஞர் ஈ.எச்.கார். ஒரு அரசியல் வரலாற்று மாணவன் என்னும்வகையில், கடந்தகால வரலாற்றை அதன் போக்கில் நோக்கினால், இயக்கவழிப் பாதையில் எவருமே புனிதர்களல்லர். அனைவரது பக்கத்திலும் தவறுகள் உண்டு. அந்த தவறுகள் என்னவென்பது அந்த இயக்கங்களில் எஞ்சியிருப்போர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்து தவறுகளிலிருந்தும் பாடங்களை படிக்க வேண்டிய நிர்பந்தத்தை வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது. வரலாற்று சுமையை இறக்கி வைப்பது தொடர்பில்தான் அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டும். வரலாறு மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றது. மனிதர்கள் உருவாக்கிய வரலாற்றின் திசைவழியை, மனிதர்களால் மாற்றியமைக்கவும் முடியும். தமிழ் இயக்கங்களின் வரலாறென்பது, ஒரு புறம் தியாகங்களால் உருப்பெற்ற வரலாறாக இருக்கும் போது, மறுபுறம், அது ஒரு இரத்தக்கறை படிந்த வரலாறு, கொலைகளை ஆராதித்த வரலாறு, மனித உரிமைகளை போற்றாத வரலாறு, அரசியல் தீண்டாமைகளை போற்றிய வரலாறு, குற்றவுணர்விற்கு அச்சம்கொள்ளாத வரலாறு. தமிழ் அரசியல் வரலாற்றின் இந்தப் பக்கமே, மறுபுறம், இயக்கங்களின் தியாகங்களை பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. முன்னாள் இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றுபட்டால், இந்த வரலாற்று கறைகளை சீர்செய்ய முடியும்.

   

  http://www.samakalam.com/இயக்கங்களின்-அன்றைய-இயலு/

   

 18. ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா

   

  ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

  ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன பெரமுனவிற்குள் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆசன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அதிகாரங்கள் போய் சேர்வதை உறுதிப்படுத்துவதற்கான 21வது திருத்தச்சட்டமானது, தொடர்ந்தும் இழுபறிநிலையிலேயே இருக்கின்றது. இந்த நிலையில் ஒரு தேர்தல் இடம்பெற்றால் மட்டும்தான் இவை அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், சம்பந்தன் கூறுவது போன்று, ஒரு ஆட்சி மாற்றம் அவசியம்தான். ஆனால், ஒரு வேளை, சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை கருத்தில் கொண்டுதான், பேசுகின்றார் என்றால், ஆட்சி மாற்றம் தொடர்பில் கேள்விகளுண்டு. ஏனெனில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவில்லை. புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கான கற்பனையுடன் காலம் விரயம் செய்யப்பட்டது.

  முன்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் நன்மைகளை தராதபோது, இனிவரப் போகும் ஆட்சிமாற்றமொன்றின் மூலம் எவ்வாறு தமிழ் மக்கள் நன்மைகளை பெறமுடியும்? இந்தக் கேள்விக்கான பதிலை கட்டுரையின் பின்பகுதியில் நீங்கள் காணலாம். முதலில் ஆட்சி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். இலங்கைத் தீவில் ஏற்படும் எந்தவொரு பிரதான அரசியல் மாற்றங்களும், தமிழ் மக்களை முன்வைத்து ஏற்படுவதில்லை. ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஒரு விடயமாகக் கூட இருப்பதில்லை. அது ஒரு போதும் நிகழவும் மாட்டாது. தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் எவையுமே, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதும் இல்லை. அவ்வாறு பேசினால் தங்களின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமென்றே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் மாற்றங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன? அனைத்துமே தென்னிலங்கை அதிகார மையத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகளின் காரணமாகவே நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே ஆட்சி மாற்றத்தை உந்தித் தள்ளுகின்றது. இவ்வாறுதான் 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

  spacer.png

  தற்போது மீண்டுமொரு ஆட்சி மாற்றம் தொடர்பில் சிந்திக்கப்படுவதும் இந்த அடிப்படையில்தான். மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தின் மீதான அச்சத்தினடிப்படையில்தான், 2015 ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை மகிந்த முகாமிலிருந்து உடைத்தெடுப்பதற்கான வாய்ப்பான சூழல் அங்கிருந்தது. ராஜபக்ச குடும்ப அரசியல் ஆதிக்கத்தின் மீதேற்பட்ட அதிருப்திகளின் விழைவாகவே, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர், மகிந்தவிற்கு எதிராக அணிதிரண்டனர். ராஜபக்ச முகாமின் உடைவைப் பயன்படுத்தியே, ராஜபக்சவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கான மேலதிக ஆதரவாகவே தமிழ் மக்களின் வாக்குகள் பயன்பட்டன. இதன் காரணமாகவே, ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஒரு விடயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து அந்த ஆட்சி மாற்றம் நிகழவில்லை. 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற விடயங்களிலிருந்தே, நீங்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். நல்லிணக்கம், அரசியல் தீர்வு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டாலும் கூட, இறுதியில் ரணில்-மைத்திரி அதிகார மோதலைத் தொடர்ந்து, அனைத்து முயற்சிகளும் பூச்சிய நிலைக்கு சென்றது.
  இப்போது ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கையாளுவதென்னும் கேள்விக்கு வருவோம். இந்தக் கட்டுரையாளர் மேலே குறிப்பிட்டவாறு ஆட்சி மாற்றத்தை விளங்கிக் கொண்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழர்கள் ஒரு போதுமே பிரதான விடயமாக இருக்கமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்காது. இந்த அடிப்படையிலிருந்துதான், எனவே, ஆட்சி மாற்றங்களை எவ்வாறு உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளலாமென்று, தமிழ் தலைமைகள்தான் சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட அரசியல் சூழலில் எதனை முன்னிறுத்த வேண்டும் என்பதை தமிழ் தலைமைகளே சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் குறிப்பிட்ட சூழலில் எடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்களை இலக்கு வைத்து செயற்பட வேண்டும்.

  அவ்வாறானதொரு தூரநோக்குமிக்க பார்வை சம்பந்தனிடம் இருந்திருந்தால், 2015இல் ஏற்பட்ட ஆட்சி;மாற்றத்தை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும் ஆனால் சம்பந்தனது தவறான அரசியல் அணுகுமுறைகளால், கிடைத்த அருமையானதொரு வாய்ப்பு கைநழுவியது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலொன்று தெரிந்த சந்தர்பத்தில், இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். அதாவது, இந்த ஆட்சி மாற்றம் அதிக காலத்திற்கு நீடிக்காது ஏனெனில், இரண்டு முற்றிலும் மாறுபட்ட அரசியல் கருத்தியல், வெளிவிவகார பாரம்பரியம் கொண்ட கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரும், இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சி மாற்றமானது, நிச்சயம், உள்முரண்பாடுகளுக்குள் சிக்கும், எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பெறக் கூடிய விடயங்களை பெற முயற்சிப்பதே சரியானதென்று இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால் சம்பந்தன் எதனையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

  புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரமுடியுமென்று நம்பி செயற்பட்டதுதான், சம்பந்தன் மேற்கொண்ட மோசமான தவறாகும். இந்தத் தவறிலிருந்துதான் அனைத்து தவறுகளும் நிகழ்ந்தன. உண்மையில் அப்படியானதொரு அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் புதிய அரசியல்யாப்பு என்னும் பெயரில், காலம் வீணடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, இருக்கின்ற அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாகாண சபை நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். இதனை, நான் உட்பட, சிலர் பரிந்துரைத்திருந்த போதும், சம்பந்தன் அவர்களை பொருட்படுத்தவில்லை. அதே வேளை, கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதாக வெளியிலிருந்து சுட்டிக்காட்டியவர்களும், வரமுடியாத புதிய அரசியல் யாப்பிற்குள் எவற்றையெல்லாம் உள்ளடக்க வேண்டுமென்றே விவாதம் புரிந்தனர். புதிய அரசியல் யாப்பின் மூலம் கூட்டமைப்பு ஒரு பாரிய சதியில் ஈடுபடுவதாக கதைகள் புனைந்தனர். ஆனால் இறுதியில் அனைத்து கதைகளும் பெறுமதியற்றுப் போயின. உண்மையில் கூட்டமைப்பு சதி செய்யவில்லை, மாறாக, கற்பனையில் காலத்தை விரயம் செய்தது. ஏனையவர்கள் கூட்டமைப்பின் கற்பனை பற்றி, கற்பனை செய்தனர். புதிய அரசியல் யாப்பு தொடர்பான உரையாடல்கள் அனைத்தும், இறுதியில், கற்பனை தொடர்பான கற்பனைகளுடன் முடிவுற்றது. எப்போதெல்லாம் யதார்த்தம் புறம்தள்ளப்படுகின்றதோ – அப்போதெல்லாம் வெறும் கற்பனைகளிலேயே காலம் கரையும்.

  spacer.png

  மீண்டும் தென்னிலங்கையின் அரசியல் மோசமாக குழம்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், ஆட்சி மாற்றமொன்றின் தேவை உணரப்படுகின்றது. நிச்சயம் அதுதான் நிகழவும் போகின்றது. ராஜபக்சக்கள் வீழ்சியுற்றிருக்கின்ற சூழலில், புதியதொரு தலைமைக்கான பலப்பரிட்சையிலேயே தென்னிலங்கையின் அரசியல் நிலைகொண்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன, வீழ்ச்சியடைந்திருக்கின்ற அதே வேளை, எதிரணிக்குள்ளும் பிளவுகள் காணப்படுகின்றன. ஒப்பீட்டடிப்படையில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி அளவில் பெரிய எதிரணியாக இருந்த போதிலும் கூட, சஜித் பிரேமதாசவினால் தனித்து அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வலுவானதொரு கூட்டணி தேவை. அதே வேளை, ரணில் தற்போதைய நெருக்கடி நிலையை கையாளும் பொறுப்பை ஏற்றிருப்பதால், ஜக்கிய தேசியக் கட்சியை மீளவும் ஒழுங்கமைப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. ஜக்கிய தேசியக் கட்சி தலைமையில் வலுவானதொரு கூட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஆனால் வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ் மக்களின் வாக்குகள் பிரதானமாக தேவைப்படுமென்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் தென்னிலங்கையின் கட்சிகளுக்கிடையில், பலமானதொரு மோதல்நிலை இருக்கின்ற போதுதான், தமிழ் மக்களின் வாக்குகள் மேலதிகமாக தேவைப்படும். அவ்வாறானதொரு போட்டிநிலை இல்லாவிட்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்கள் பிரதான பங்கை வகிக்க முடியாமலும் போகலாம். எது எவ்வாறிருப்பினும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும், பயன்படுத்திக் கொள்வது, தமிழ் தலைமைகளின் ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றது.

   

  http://www.samakalam.com/ஆட்சி-மாற்றங்களும்-தமிழர/

   

 19. பொய் பொய் பொய்

  என்.கே.அஷோக்பரன்
  Twitter: @nkashokbharan

  இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

  ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவது ஏன்? என்பதெல்லாம் சுவாரசியமான கேள்விகள்.

  அரசியல்வாதிகள் பொய் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி கருத்துரைத்த ஜொனதன் றோச், “அரசியலில் போலித்தனமும் இரட்டைப் பேச்சும் கருவிகள். ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சன் வோட்டர்கேட் சர்ச்சைக்கு உடந்தையாக இருந்ததை மறுத்தபோது, அது தவறான முறையில், சட்டவிரோதமாக அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்ததை மறைக்கச் சொன்ன பொய், ஆனால் ஒரு பொது நோக்கத்திற்காகவும் பொய் சொல்லப்படலாம்.

  ஆப்ரஹாம் லிங்கனின் விஷயத்தைப் பொருத்தவரையில், அது உள்நாட்டுப் போரைத் தடுப்பதற்கான நியாயமான பொது நோக்கங்களுக்காக சொல்லப்பட்டதைப் போன்று. மேலும் அமெரிக்க கௌரவத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க, அமெரிக்க உளவு விமானத்தை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியதை ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் மறுத்தது போலவும் பொய் சொல்லப்படலாம்…

  தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதை பொதுவில் சரிசெய்வது அல்லது மறுப்பது பாசாங்குத்தனமா? நிச்சயமாக. ஆனால் பொது மற்றும் தனிப்பட்ட முகங்களை தனித்தனியாக பராமரிப்பது நாம் அனைவரும் தினமும் செய்யும் ஒன்று. எரிச்சலூட்டும் உறவினர்களிடம் நாங்கள் அவர்களின் வருகையால் மகிழ்ந்தோம் என்று சொல்கிறோம், மோசமான சேவையை வழங்கிய தகுதியற்ற பணியாளர்களுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் தவறு என்று எங்களுக்குத் தெரிந்தே உயரதிகாரிகளுடன் உடன்படுகிறோம்” என்கிறார் அவர்.

  ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை எளிதாக்குவதற்கு அரசியல் போலித்தனம், பாசாங்குத்தனம், இரட்டைப்பேச்சு, மற்றும் பொய் சில சமயங்களில் அவசியமான கருவியாக இருக்கிறது என்பதை றோச் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. வள்ளுவன் சொன்னது போல பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஆனால் யாருக்கு நன்மை பயக்கும் என்பது இங்கு முக்கியமானது.

  இங்கு நன்மை என்பது பொதுநன்மை. ஆனால் அரசியல்வாதிகள் மேற்சொன்ன காரணங்களுக்காகவும், பொது நன்மைக்குமாகவும் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா? இல்லை. பல சமயங்களில் தனிப்பட்ட நலன்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்குமாகத்தான் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

  அரசியல்வாதிகளின் பொய்களுக்கு லட்சோபலட்சம் உதாரணங்கள் இருக்கின்றன. அதில் அண்மைக்காலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்வையும், அவரது குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்த பொய் என்றால், அது டொக்டர் ஷாஃபி முஸ்லிம் மக்கள் அல்லாதவர்களுக்கு கருத்தடை செய்கிறார் என்று கோட்டாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலரும் சொன்ன பொய்யைக் குறிப்பிடலாம்.

  இனவாதம் பரப்பிய கோட்டாவினது இனவெறிக் கும்பல், இந்த இனவாதப் பொய்யினால், ஷாஃபி என்ற அப்பாவி வைத்தியர் மீது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் மீதே வேண்டாத ஒரு வெறுப்பு உருவாக்கப்பட்டது. “சிங்கள-பௌத்த” இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குவேட்டை நடத்த விளைந்த கோட்டா குழுமத்துக்கு இந்த இனவெறிச் சதி, அந்த வாக்குவேட்டைக்கு அவசியமானதொன்றாக இருந்தது. இன்று அந்தப் பொய் தகர்ந்துபோயிருக்கிறது. பொய் சொன்ன சன்ன ஜயசுமன உள்ளிட்டோர் இன்று பதவிகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர் ஷாஃபியும் அவரது குடும்பமும் அனுபவித்த வலிகளுக்கு என்ன மாற்று கிடைக்கப்போகிறது?

  இப்படி ஆயிரமாயிரம் இனவாதவெறி நிறைந்த பொய்களையும், புரட்டுக்களையும் அதன்பாலான கடுமையாக எதிர்வினைகளையும் இலங்கையில் சிறுபான்மையினர் காலங்காலமாக அனுபவித்தே வந்திருக்கிறார்கள்.

  தமிழனென்றால் “புலி”, “பயங்கரவாதி” என்று எத்தனை கட்டுக்கதைகள்! எத்தனை இளைஞர்கள் மறியலில் தங்கள் இளமையைத் தொலைத்துவிட்டுக்கிடக்கிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லியும் அர்த்தமில்லை. ஏனென்றால், அவர்கள் சொன்னது பொய் என்று எத்தனை தரம் நிரூபிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்லும் பொய்களுக்குள் விழுந்துகொண்டேயிருக்கும் முட்டாள் மக்கள் கூட்டமொன்று இருக்கும்வரை அவர்களும் பொய்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

  றொஜர் கூப்மன் சொல்வதுபோல, பொய் மற்ற நபரைப் பாதிக்கிறது, மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது. இது தார்மீக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் திருட்டுக்கு சமம். ஒரு நபரின் மனதை நீங்கள் பொய்யால் நிரப்பும்போது - உண்மையைப் பொய்யால் மாற்றினால் - நீங்கள் உண்மையில் அவர்களிடமிருந்து திருடுகிறீர்கள். ஒருவர் துப்பாக்கி முனையில் உங்கள் பணத்தை திருடும் போது குறைந்த பட்சம், ஒரு திருட்டு நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும்.

  ஆனால் உங்களிடம் உண்மையைச் சொல்வதாக நீங்கள் நம்பும் ஒருவர் உண்மையில் பொய்களைச் சொல்லும்போது, அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்களை பாதுகாப்பற்றவர்களாக விட்டுவிடுகிறார்கள். ஒரு வகையில் பார்க்கப்போனால், அரசியல்வாதிகள் சொல்லும் பொய்கள், அவர்கள் கொள்ளையடிப்பதை விட ஆபத்தானது.

  அரசியல்வாதிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் பொய்களால் கவரப்படுகிறார்கள். மக்கள் உண்மையைப் பற்றி யோசிக்க நேரமெடுப்பதில்லை. மக்கள் வதந்திகளை நம்ப விரும்புகிறார்கள். இணையம், சமூக ஊடகம் என எல்லாவிடத்திலும், மக்கள் வதந்திகளை விரும்பிப் படிக்கிறார்கள். அது அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இதனால் அரசியல் உலகில், பொய் வேலை செய்கிறது. "உண்மை அதன் உடையை அணிவதற்கு முன்பு ஒரு பொய் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது” என்பது பழமொழி. அதுதான் உண்மையும் கூட.

  கடினமான, கசப்பான, வலிமிகுந்த உண்மையை சொல்வது மக்களுக்குப் பெரிதும் பிடிப்பதில்லை. உண்மை எப்போது அழகாக இருப்பதில்லையே! வாய்மையே வெல்லும், உண்மையே பேசு என பெறுமதிகளைக் கொண்ட சமூகம் கூட, கசப்பான உண்மைகளை விரும்புவதில்லை போலும்! தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று பேய்க்காட்டுதலை நம்பிக்கையூட்டுதல் என்று புரிந்துகொள்ளும் மனிதர்களும் இங்கு இல்லாமல் இல்லை.

  இன்றுள்ள அரசியல் கட்டமைப்பின்படி, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். பொய் சொல்ல மறுக்கும் மற்றும் பொது அறியாமையை சுரண்டிக் கொள்ளாத அரசியல்வாதிகள், குறைவான ஒழுக்கமும், தராதரமும், பெறுமதியும் உள்ள அரசியல்வாதிளுடன் ஒப்பிடும்போது கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

   மேலும், அதன் காரணமாக குறைவான தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள். நேர்மையற்ற அரசியல்வாதிகளை வெறுக்கும் அதே வாக்காளர்கள், அந்தப் பொய்களையே மூலதனமாகக் கொண்ட அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள், வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த அரசியல்வாதிகளின் பொய்கள் குறித்த வாக்காளர்களின் முன்முடிவுகளை வலுப்படுத்தும் போது, உண்மையைப் பற்றி ஆராயமல், அவர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள்.

  ஆகவே நேர்மையான அரசியல்வாதிகள் வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்று பேச்சுக்குச் சொல்லும் மக்கள்கூட, உண்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்காது, பொய்பேசும் அரசியல்வாதிகளின் பொய்களுக்கு எடுபட்டு, அவர்களையே ஆதரிக்கிறார்கள். பொய்யால் ஆதரவு கிடைக்குமென்றால், வாக்கு கிடைக்குமென்றால், பதவி கிடைக்குமென்றால், எந்த அரசியல்வாதிதான் பொய் பேச மாட்டான்! பொய்யிற்கு நற்பலனை வழங்கும் சமூகமொன்றில், உண்மை செத்துத்தான் போகும்.

  மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, உங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகள் பொய் சொல்வதை சகித்துக்கொள்வது, அந்தப் பொய்யில் நீங்களும் பங்கேற்பதற்கு சமம். உங்கள் தார்மீக குருட்டுத்தன்மை அந்தக் குருட்டுத்தன்மைக்கேற்ற அரசாங்கத்தைப் பெற வழிவகுக்கும் போது, அதற்குப் பிறகு அழுது புலம்புவதில் பயனில்லை.
   

   

  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொய்-பொய்-பொய்/91-299263

 20. அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது
   

  சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  கைதானவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

  https://www.tamilmirror.lk/செய்திகள்/அவஸதரலய-சலல-மறபடட-54-பர-கத/175-299281

 21. இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா?

  லோகன் பரமசாமி

   

  தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை  உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.   

  Logan_Top_02.jpg

  தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மைத் தானத்தைப்  தக்கவைப்பதற்கும் பெரும்பங்காற்றியது.

  இந்திய, இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட காலப்பகுதியை எடுத்து நோக்கினால் ஜெயவர்த்தன அரசாங்கம் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவும், அதற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல்களை முன்னெடுத்தமையால்   அரசாங்கம் செய்வதறியாது திகைத்திருந்த நிலைமையே காணப்பட்டிருந்தது.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலிதாக்குதல் ஜுலை மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றமையும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழலையும் தனக்கு சதகமாகப் பயன்படுத்திய இந்திய அரசு, நாடுகளுக்கிடையிலான  இறையாண்மையை மீறி, வடக்கு, கிழக்கு பகுதியில் விமானம் மூலம்  உணவுப் பொதிகளை வீசியது. 

  அத்துடன் தனது படைகளையும் இலங்கைக்கு அனுப்பியது. இவ்வாறான சூழலில் இலங்கை அரசு, இந்தியாவிடம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கையாளும் வகையிலான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. குறித்த ஒப்பந்தம் 13ஆம் திருத்த சட்டமாக பரிணமித்து தற்போது வரையில் அரசியலமைப்பில் நீடித்துக்கொண்டிருக்கினறது. 

  ஓப்பந்தத்தின் பிரகாரம், வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று காணப்படுகின்றபோதும்,  பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் வடக்கையும் கிழக்கையும்  நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி இரு கூறுகளாக பிரித்துவிட்டது. 

  இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35ஆண்டுகளாகின்ற நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளிகள் தற்போது காணப்படுகின்றன. 

  இவற்றில் முக்கியமாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைகளின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவையாகின்றன. 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கைக் கடற்படையினர் 284இந்திய மீனவர்களை கடல் எல்லையை மீறினார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்துள்ளனர். அதேவேளை 53இந்திய மீனவப் படகுகளையும் பறித்தெடுத்துள்ளனர். 

  இந்தியாவும், ஜப்பானும் கூட்டிணைந்து மேற்கொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தினை இலங்கை அரசு மீளப்பெற்றுக் கொண்டது. இறுதியில் இந்தியாவைச் சமாளிப்பதற்காக மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசாங்கம். 

  இவற்றைவிடவும், சீன சார்பு நிலையால் இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை இலங்கை சம்பாதித்துக் கொண்டது.  இலங்கையில் பொருளாதார ரீதியாக சீனா தனது கால் தடங்களை ஆழமாப் பதித்து வருகிறது. இது இந்திய இலங்கை உறவில் பெரும் தாக்கத்தை விளைவித்துள்ளது. 

  2010ஆம் அண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இலங்கையில், சீனா 23.6சதவீத நேரடி முதலீட்டாளராகவும் இந்தியா 10.4 சதவீத நேரடி முதலீட்டாளராகவுமே இருந்துள்ளன. 

  இதற்கு அப்பால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை  சீனாவுக்கு 99வருட குத்தகைக்கு கொடுத்தமை, கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு வெகுவான அதிருப்திகள் உள்ளன. 

  ஏற்கனவே அமெரிக்க தலையீட்டை தவிர்க்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிலையில் சீன தலையீடு இந்தியாவின் மிகவும் கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையில் தற்போது, நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவிகளை வழங்கும் அதேநேரம் அச்சூழலை எவ்வாறு தனக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்ற சிந்தனையும் இந்தியாவுக்குள்ளது.

  புதிய உலக ஒழுங்கின் அடிப்படையில் ரஷ்யா, உக்ரேன் மீது தனது இறையாண்மையை பயன்படுத்த முடியுமாயின் அயல்நாடான இலங்கை மீது இந்தியா ஏன் இறையாண்மையை பயன்படுத்த முடியாது என்ற தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

  ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கம் விளைவிக்கும் என்ற கணிப்பைச் செய்துள்ள அரசியல் அவதானிகள் சீனா, தனது ஆக்கிரமிப்பை தாய்வான் மீது செலுத்தலாம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். ஆனால் அவ்விதமான ஆக்கிரமிப்பை  இந்தியா ஏன் இலங்கை மீது, செலுத்த முடியாது என்ற கேள்விக்கு அவர்கள் விடையைக் கண்டிருக்கவில்லை. 

  இந்தியாவுக்கு அவ்விதமான ஆக்கிரமிப்பைச் செலுத்துவதற்கு சாதகமான நிலையானது தற்போதைய காலத்தை தவிர, எதிர்காலத்தில் எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கைத் தளர்வு இறுக்கமான உறுவுகளை ஏற்று கொள்ள முடியாத சூழலை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன.  

  ஆனால் தற்பொழுது, பாரிய கடன்கள், மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எழுந்துள்ள பற்றாகுறையும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம், என்பது உள்ளிட்ட பல்வேறு  நிதி நிறுவனங்களிடத்தலும் உதவிகளைக் கோர வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

  இந்த நிலையின் காரணமாக இலங்கை அனைத்துவிதமான மாற்றுக் கொள்கைகளையும் கைவிட்டு  பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் சரணாகதி அடையும் நிலைக்கு வந்துவிட்டது.  அத்துடன், இந்தியாவிடத்தில் அண்மைய காலத்தில் பொருளாதார பலம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பது தான் பிரதான கேள்வியாகின்றது.  

  2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தெற்காசியாவிலேயே  அரசில் ரீதியாக மிகுந்த விலிமை உடைய நாடாக தன்னை காட்டிக்கொண்டது.  பிராந்தியத்திலேயே மிகவும் திறமையாக பயிற்சி பெற்ற இராணுவ குழுக்களை கொண்ட அரசாங்கமாகவும் கருதப்பட்டது. சீனாவையும், இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினையும் இராஜதந்திர ரீதியாக கையாளும் பலவானாகவும் இலங்கை அரசு கருதப்பட்டது. 

  Logan_Top_01.jpg

  ஆனால் தற்பொழுது, அவை அனைத்தையும் இழக்கப்பட்டு, அன்றாட வாழ்கைக்கைக்கே உதவிகளை கோரும் நிலையில் இலங்கை அரசு இருக்கின்றது. இந்தநிலையில் இந்திய ஊடகங்களில் இலங்கை பிரதமர் ரணிலின் கூற்றை மையமாக வைத்து வெளியான கட்டுரைகளில் இலங்கையும், கேரளாவும், தமிழ்நாடும் மிக இலகுவாக ஒன்றுடன் ஒன்று இசைவடைந்து விடக்கூடியன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளன. 

  இந்தியாவில் தென்பிராந்திய மாநிலங்களின் மொத்த உற்பத்தியும் இலங்கையின் மொத்த உற்பத்தியையும் இணைத்தால் 500 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். அவ்விதமான ஒருமித்த உற்பத்தியானது, தெற்காசிய உற்பத்தி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது. 

  இதனால், இந்தியாவின் துணைப் பிராந்தியமாக இலங்கையும் இணைந்து கொள்வது பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்ற நோக்குகளும் வெகுவாக உள்ளன.  இன்னும் சில இந்திய சிவில் சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில்  மன்னாரின் ஊடாக இராமேஸ்வரத்தையும் திருகோணமலையும் இணைத்து மிக பாரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் சீன செல்வாக்கையும் கையாள்வதும் இலகுவடைந்து விடும். அது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் சிறந்தது என்ற பார்வையும் உள்ளது.

  ஆக தற்போது, உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்புடன் எழுந்துள்ள  உலக ஒழுங்கின் அடிப்படையிலும் யதார்த்த ரீதியான இந்திய, இலங்கை நிலைமையையும் எடுத்த நோக்கினால் புதியதோர் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகுமா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. அவ்வாறு உருவாகும் ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது தான் அடுத்துள்ள பிரதான விடயமாகும். 

   

   

  https://www.virakesari.lk/article/130211

 22. பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

  கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம்  27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot_20220626-181911_Gmail.jpg

   

  https://www.virakesari.lk/article/130228

 23. 70 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட நடவடிக்கை - எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கம்

  (எம்.மனோசித்ரா)

  நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு 70 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  நுவரெலியா - நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு | Virakesari .lk

  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

  30 நாட்களுக்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் , இதுவரையிலும் போதுமானளவு எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாமையின் காரணமாக நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.

  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக பொலிஸாரை மாத்திரம் கடமைகளில் ஈடுபடுத்துவது போதுமானதல்ல. எனவே இராணுவத்தினரையும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.

   

  https://www.virakesari.lk/article/130229

   

 24. ’காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?’

  தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

  வடக்குக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும்,  காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர் என்று மனோ எம்.பி சுட்டிக்காட்டினார்.  

  மேலும் “காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை எனவும் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மக்களிடமிருந்து என்ன ஒத்துழைப்பை இவர்கள் கோருகிறார்கள் என எனக்கு தெரியவில்லை“ என்று மனோ.எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
   
  “இந்த முதல் கேள்விக்கு பதில் தேடுங்கள். அதையடுத்து  குடும்பங்கள் விரும்பினால், கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வழங்கலாம்“ என்று தெரிவித்த மனோ.எம்.பி, நீதி அமைச்சரும் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் இதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

  இது குறித்து மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஆட்சி காலத்தின் கடைசி வருடத்தில், இந்த காணாமல் போனோர் அலுவலகம் எனது அமைச்சின் கீழ் இருந்தது. 

  அப்போது அதன் தலைவராக, இன்றைய இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸ் செயற்பட்டார். நிமல்கா பெர்ணாண்டோ ஆகியோரும் அங்கத்தவராக செயற்பட்டனர்.

  அது ஒரு சுயாதீன ஆணைக்குழு அல்ல. எனினும்  சுயாதீன ஆணைக்குழுவுக்கு சமானமாக அது சுதந்திரமாக செயற்பட நான் அனுமதி அளித்து இருந்தேன்.

  வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் கொடுக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அதை வழங்க முயன்ற போது, அந்த குடும்பத்தவர் அதை வாங்க மறுத்த போது அதை வலியுறுத்த வேண்டாம் என நான் பணிப்புரை விடுத்தேன்.

  மேலும் மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் அமைச்சரான நான் கலந்துக்கொள்வதை தவிர்த்தேன்.

  தென்னிலங்கை மாத்தறையில் அலுவலகம் திறக்கப்பட்ட போது அதில் நான் கலந்து கொண்டேன். 1988களில் தென்னிலங்கையில் இப்படி காணாமல் போனவர்களின் சிங்கள இளையோரின் குடும்பங்கள், இந்த கொடுப்பனவுகளை பெற விருப்பம் தெரிவித்தபோது, அவற்றை வழங்க நான் பணிப்புரை விடுத்தேன்.

  2015 ஒக்டோபர், மனித உரிமை ஆணைக்குழுவின் 30/1ம் தீர்மானத்தின்படி, இந்த காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தை நாம் கடந்த ஆட்சியின் போது நிறைவேற்றினோம். அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இது நிகழ்ந்தது. எனினும் நாம் சட்டத்தை நிறைவேற்றி இந்த காணமல் போனோர் அலுவலகத்தை அமைத்தோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

  2018ஆம் ஆண்டு இந்த அலுவலகம் எனது பொறுப்பில் வந்தபோது, கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதே வலிந்து காணாமல் போனோர் குடும்பங்களின் முதல் கோரிக்கை என்பதை துறைசார் அமைச்சராக நான் உணர்ந்தே இருந்தேன். இன்றும் அப்படியே இருக்கிறேன்.

  கடந்த ஆட்சியின் போது பல கட்டமைப்பு முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன எம்மை முழுமையாக கடமையாற்ற விடவில்லை. இந்த காணமல் போனோர் அலுவலகம், முன்னாள் புலிகளுக்கு கொடுப்பனவுகள் கொடுக்கின்றது எனவும், புலிகளுக்காகவே அது அமைக்கப்பட்டது எனவும் கூறினர்.

  இன்று திடீரென முற்போக்கு ஜனநாயகவாதிகளாக வேடம் பூண்டுள்ள பல்வேறு பிரபல அரசியல்வாதிகளும் எம்மை எதிர்த்தார்கள். பிரபல பெளத்த பிக்குகள் இனவாதம் கக்கினார்கள். முன்னாள் புலிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னொரு பிரபல புலியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என என்னையும் திட்டி தீர்த்தார்கள்.

  இன்று இவற்றுக்கு எல்லாம் பதில் கூறவேண்டிய காலம் வந்து விட்டது. இன்றும் இனவாதம் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த இனவாதத்தை நேரடியாக எதிர்க்கக்கூடிய காலம் வந்து விட்டது. மதம் அரசியலில் வேண்டாம் என்றும், விகாரைகளுக்கு திரும்புங்கள் என்றும் பெளத்த பிக்குகளை பார்த்து நேரடியாக கூறக்கூடிய காலம் வந்து விட்டது.

  இவற்றையெல்லாம், இன்றைய பொருளாதார நெருக்கடி உருவாக்கி விட்டது.  அந்த நெருக்கடித்தான், பெரும்பான்மை சிங்கள இளையோர் மத்தியில் காலிமுக திடல் போராட்டத்தையும் உருவாக்கி விட்டது.

  ஆகவே இனி நாங்கள், “எங்கே எங்கள் உறவுகள்? கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன எங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?” என கேள்விகள் எழுப்பும் வேளை வந்து விட்டது. 2007ஆம் வருடம் நானும், நண்பன் ரவிராஜும் ஆரம்பித்த மக்கள் கண்காணிப்பு குழுவின் நோக்கங்களை நிறைவேற்ற காலம் வந்து விட்டது என நினைக்கிறேன்“ என்று தெரிவித்தார்.  

   

  https://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமல்-போனோருக்கு-நடந்தது-என்ன/175-299266

   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.