கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,364
 • Joined

 • Days Won

  73

Posts posted by கிருபன்


 1. 1 minute ago, Nathamuni said:

  ஆங்கில ஜோக் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

  The FAT lady complained that the food served in the restaurant is HORRIBLE and they server VERY SMALL portion...

  புலம் பெயர்ந்தவர்களும் ஒண்டும் செய்யக்கூடாது. தமிழ் நாட்டிலும் ஒண்டுமே செய்யக்கூடாது.

  சம், சும்... விக்கி, கஜேந்திரன் கோஸ்ட்டி ஏதாவது செய்தால், நான் ஆதரவு தருவோம்...

  ஹலோ.... விடிஞ்சுட்டுது... ஒழும்புங்கோ.... கோத்தா தேத்தண்ணி ஆத்திக்கொண்டு நிக்கிறார். :grin:

  முதல் பந்திக்கு அப்பால் வாசிக்காமல் வந்த கருத்து என்று புரிந்துகொள்கின்றேன்.😎

   

  • Haha 1

 2. 18 minutes ago, குமாரசாமி said:

  சீமானை சரியில்லை என சொல்பவர்கள்  வெளிநாட்டிலிருந்து ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றவர்களை குறிப்பிட்டு அவர்கள் எந்த விதத்தில்  எம் இனத்திற்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதையும் கூறலாமே???

  ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும்.

  தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும். 

   

  26 minutes ago, Kapithan said:

  கேள்வி சரியானதுதான். ஆனால் பதிலை எதிர்பார்க்காதீர்கள். வரவே வராது. எங்கள் கவனம் முழுதும் முட்டையில் மயிர் புடுங்குவதாகவே இருக்கும். 😂😂

  என்னுடைய சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து நடக்கவெளிக்கிட்டால் தள்ளாடவேண்டும். 😀எனவே மற்றவர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்கள் சிந்திப்பது தேவையா?😊

  • Like 1

 3. 49 minutes ago, Nathamuni said:

  இப்போது ஒரு வணிக இதழ், அப்படி ஒரு கேள்வியை கேட்கும், கேட்டாலும், அதனை எடிட் பண்ணி நீக்காமல் இருப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? 

  எடிற் பண்ணுவார்கள் என்று தெரிந்தால் அந்தப் பேட்டிக்கே ஒத்துக்கொள்ளக்கூடாது. தரமான ஊடகங்கள் இப்படி சில்லறை வேலை எல்லாம் செய்வதில்லை. எனவே எடிற் பண்ணியிருப்பார்கள் என்பது நம்பும்படி இல்லை. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பேட்டி கொடுக்கும்போது கேள்வி கேட்பவர்கள் எப்படி சுத்திவளைச்சுக் கேட்டாலும் தங்களது ஸ்கிறிப்ற் இலிருந்து மாறுவதில்லை. சொல்லவேண்டியதை திரும்ப பிடிகொடுக்காமல் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுடன் உரையாடவே பேட்டிகளைப் பாவிக்கின்றார்கள். மக்களுக்கு முக்கியமாக  என்ன சொல்லவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

  56 minutes ago, Nathamuni said:

  சரி, தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவை.

  சீமான் சரியில்லை.

  குறணி முத்தராக, இருப்பதனை விட்டு, யார் சரி என்று சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து அவரையே ஆதரிக்கிறோம்.

  இந்தத் திரியிலேயே முன்னர் சொல்லியிருக்கின்றேன்.

   

  தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

  தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.


 4. 22 minutes ago, உடையார் said:

  நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

  பிறர் ஓட ஓட விரட்ட முனைந்தாலும் நான் ஓடி ஒளிவதில்லை. அதைத் தவறாகப் புரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.😎


 5. 25 minutes ago, இசைக்கலைஞன் said:

  புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

  ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

  ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

  • Confused 1

 6. 1 hour ago, பையன்26 said:

  பதில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை

  ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

   


 7. தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்

  புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜூன் 03

  பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன.

  அரச படைகளும் அதன் புலனாய்வுத் துறையும், தமிழ் மக்களை, ஒவ்வொருவராக அலசி ஆராயும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு, புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளுக்கும், எதிரான கட்டுரைகளும் பத்திகளும் தமிழ்ப் பரப்பில் வெளிவர ஆரம்பித்திருந்தன.

  அதில், தலைவர் பிரபாகரனை 'மரணத்தின் காவலன்' ஆகவும் ‘பேரழிவின் நாயகன்' ஆகவும் சித்திரித்து வெளியான கட்டுரைகள், இணைய வெளியில் அதிகம் பகரப்பட்டிருந்தன.

  இந்தக் கட்டுரைகளை எழுதியவர்களின் எண்ணம், முள்ளிவாய்க்கால் என்கிற பேரூழிக் காலத்தை, தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற நிலையில், அவர்களுக்கு இராணுவம் மீதான கோபம் மாத்திரமல்ல, புலிகள் மீதான கோபமும் உச்சத்தில் இருக்கும் என்பதே ஆகும்.

  ஆனால், புலிகள் மீதான அதிருப்தி, அப்போது தமிழ் மக்களிடம் காணப்பட்டாலும், அது, அவர்களை வெறுக்கும் அளவுக்கு இருக்கவில்லை.

  ஏனெனில், புலிகள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல; அவர்கள், தமிழ்க் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் மகனாக, மகளாக, சகோதரனான, சகோதரியாக இருந்தவர்கள். தமிழ் மக்களுக்காகப் போராடப் போனவர்கள். ஆக, குடும்ப உறவுகளுக்கு இடையில், அதிருப்தி இருக்கலாம்; அது, வாழ்நாள் வெறுப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

  ஆனால், புலி எதிர்ப்புக் கட்டுரைகளை எழுதிய பலரும், இதைக் கணிக்கத் தவறிவிட்டார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவோடு, புலி நீக்கத்தையும் தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்ய எத்தனித்த அந்தக் கட்டுரையாளர்களால், தமிழ் மக்களிடம் சென்று சேர முடியவில்லை. மக்கள், தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள்ளேயே தொடர்ந்தும் நீந்துவதற்குத் தயாராக இருந்தார்கள்.

  இதனால், புலி எதிர்ப்பு, ஆயுதப் போராட்ட எதிர்ப்பைக் கட்டியெழுப்ப நினைத்த பலரும், தங்களது ஓட்டப்பாதையைச் சடுதியாகத் திரும்பிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

  2009, 2010களில், தங்களால் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகளைச் சடுதியாக அழிக்கத் தொடங்கினார்கள். இணையப் பக்கங்களில் அவை, காணாமற்போயின.

  சில நாள்களில், பிரபாகரனை மரணத்தின் காவலனாகச் சித்திரித்தவர்கள், ஆயுதப் போராட்டத்தின் நியாயப்படுகளைப் பேசிக் கொண்டு, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தேவை குறித்து, ஊடகங்களில் எழுதத் தொடங்கி இருந்தார்கள்.

  இறுதிப் போர் பேரூழி, புலிகளின் நிலைப்பாடுகள், ஆயுதப் போராட்டத்தின் போக்கு உள்ளிட்டவை குறித்த, விமர்சன அணுகுமுறை அவசியமானது என்பதை, இந்தப் பத்தியாளர் என்றைக்கும் கொண்டிருக்கின்றார். இது, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் போக்கை, ஆரோக்கியமான கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உதவும்.

  ஆனால், மக்களின் மனங்களை அறியாமல், தாங்கள் எதிர்கொண்டிருக்கின்ற நிர்ப்பதந்தங்களால், மக்களைச் சகுனித்தனமாகக் கையாள நினைக்கின்றமை, அயோக்கியத்தனமாகும். அவ்வாறான மனநிலையை, முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் வெளிப்படுத்திய பலரும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக மீண்டும் காட்சிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு சிலர், கருத்து உருவாக்கிகளாகவும் தம்மை முன்னிறுத்தினார்கள்.

  இன்றைக்கு, தமிழ் அரசியல் பரப்பில், 'புலி நீக்கம், தமிழ்த் தேசிய நீக்கம்' என்கிற விடயங்கள், தொடர்ந்தும் பேசப்படுகின்றன. அவை, தமிழ்த் தேசிய அரசியல் மீதான அக்கறையோடு  வெளிப்படுத்தப்படுகின்ற அளவைக் காட்டிலும், தேர்தல் அரசியலுக்கான வெற்றி, தோல்வி ஆகிய கட்டங்களைக் கருத்தில் கொண்டே பேசப்படுகின்றன.

  தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல்-வாக்கு அரசியலுக்குள் சுருங்கி நிற்கின்றது. அவ்வாறான நிலையில், இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் என்கிற இரண்டு நபர்களைச் சுற்றியதாகத் தமிழர் அரசியல் மாறியிருக்கின்றது.

  அரசியலில் தனி நபர்கள், ஆளுமையாக எழுவது இயல்பு. இதற்கு, ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடங்கி, அண்மைய சுமந்திரன் வரை, நிறைய உதாரணங்கள் உண்டு. அது, அந்த நபர்களால் மாத்திரம் நிகழ்வதல்ல. மாறாக, சூழ்நிலைகள், அன்றைய தேவைப்பாடுகளின் போக்கிலும்  எழுவது.

  அருணாச்சலம் மகாதேவாவைத் 'துரோகி' என்று சொல்லிக்கொண்டு, அரசியலில் தலையெடுத்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் தலைமைத்துவத்தைத் தமிழ் மக்கள், தந்தை செல்வாவைக் கண்டதும் தூக்கியெறிந்தார்கள். இன்னொரு கட்டத்தில், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகச் செல்லத் தயாரானார்கள்.

  இன்று, களத்தில் இருக்கின்றவர்களில், சம்பந்தனையும் சுமந்திரனையும் ஆளுமைகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, காட்சிப்படுத்துகின்றது. இதைத் தமிழ் மக்கள், குறிப்பிட்டளவு அங்கிகரிக்கவும் செய்கிறார்கள். அப்படியான நிலையில், அவர்களின் நிலைப்பாடுகள் சார்ந்து, ஆதரவு-எதிர்ப்பு அரசியல் நிலைபெறுவது இயல்பானது.

  ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, கடந்த காலங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிடுத்து, மகாதேவாவுக்கு எதிராகப் பொன்னம்பலம் பிரயோகித்த, 'துரோகி' அடையாள அரசியலை, மீண்டும் தூக்கிக் கொண்டு வருவதுதான் அபத்தமானது.

  ஏனெனில், துரோகி அரசியல் என்பது, ஒவ்வொரு கட்டத்திலும் மாறக்கூடியது. துரோகி அடையாள அரசியலின் வழியாகத் தன்னை நிலைநிறுத்திய பொன்னம்பலத்தை, துரோகி அடையாளத்தை வைத்தே தமிழரசுக் கட்சி, அகற்றியதுதான் வரலாறு. பின்னரான காலத்தில், துரோக அடையாளத்தின் வழியாகப் பலர் பலிவாங்கப்பட்டார்கள்.

  துரோகி அடையாள அரசியலைக் கையாள நினைக்கிறவர்கள், தேர்தல் வெற்றியை மாத்திரம், சிந்தித்து இயங்கும் தரப்பினராகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அரசியல் என்பது ஒற்றைப் பாதையைக் கொண்டதல்ல; இலக்கை அடைவதற்காகப் பல பாதைகளின் வழியாகவும் முயற்சிப்பதாகும்.

  ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னராக, இன்றைய நாள்களில், தமது நிலைப்பாடுகள், நம்பிக்கைகளின் வழியாக, ஒவ்வொருவரும் ஒவ்வோர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு வருகிறார்கள். அது, அவரவர் உரிமை. ஆனால், அதைத் துரோக அடையாளத்துக்குள் சுருக்குவதென்பது, ஆரோக்கியமானதல்ல. அதுபோல, தங்களின் குற்றம் குறைகளை, இன்னொருவரின் அர்ப்பணிப்புகளைக் கொண்டு மறைக்க முயல்வதும் ஆரோக்கியமானவை அல்ல. இவைகள், அயோக்கியத்தனமானவை.

  அண்மையில், தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரான நடராஜர் காண்டீபன், புலிகளுக்கும் பசிலுக்கும் இடையிலான 'டீல்' பற்றிப் பேசினார். அந்த விடயம், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில்  விமர்சிக்கப்பட்டதும், புலிகளின் அர்ப்பணிப்புக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நியாயமாக விமர்சிப்பவர்களைத் 'தமிழினத் துரோகிகள்' என்கிற தோரணையில், குரல் பதிவொன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர், அந்தக் குரல் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

  அதுபோல், கருத்துருவாக்கி என்று தொடர்ந்தும் தன்னை அடையாளப்படுத்தும் அரசியல் கட்டுரையாளர் ஒருவர், சுமந்திரனை நோக்கிய வாக்குத் திரட்சி என்பது, புலி நீக்கம், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்டது என்று, கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு, சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடுகளின் பின்னால், அணி திரளும் கூட்டம், பதவிகள், பணத்துக்கானது என்பது மாதிரியான, இரண்டாந்தரக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

  தேர்தல் அரசியலுக்குள் பதவிகள், பகட்டுகளுக்காக அலையும் கூட்டமொன்று, எல்லாக் காலத்திலும் உண்டு; அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அரசியல் நிலைப்பாட்டின் பின்னால் இணையும் அனைவரும், அவ்வாறான சிந்தனையைக் கொண்டவர்கள் என்பது, அபத்தமானது. இது, ஆரோக்கியமான அரசியல் விவாதங்களில் ஈடுபட நினைப்போரைத் துரோக அடையாள அரசியலுக்குள் தள்ளிவிட்டு, ஒதுக்கும் முயற்சியாகும்.

  கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, கட்டியெழும்பும் திட்டங்களோடு இயங்கிய தரப்பினர் அனைவரும் பதவிகளுக்காகவும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் திட்டங்களின் படியும் இயங்கியவர்கள் என்று சொல்ல முடியுமா? அவ்வாறான நிலைப்பாட்டில், சிலர் இயங்கியிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைவரும், அதே நிலைப்பாட்டில் இயங்கினார்கள் என்று சொல்வது ஏற்புடையதல்ல.

  ஏனெனில், தன்னை எந்த விதத்திலும் நிரூபிக்காத ஒருவரை நோக்கி, 'ஜனவசிய வட்டம்' வரைந்தவர்கள், இன்றைக்கு, 'சீச்சி இந்தப் பழம் புளிக்கும்' என்ற கட்டத்தில் நிற்கின்றார்கள். அப்படியான கட்டம் குறித்து, எழும் விமர்சனங்களையும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை; சிறுபிள்ளை மனநிலையையோடு இருக்கிறார்கள்.  

  தமிழ்த் தேசிய அரசியலில் கட்சிகள், ஆளுமைகள் போன்றவற்றின் நிலைப்பாடுகள் சார்ந்து ஆதரவு, எதிர்த்தளம் உருவாகுவது இயல்பானது. அதற்குப் பணம், பதவி, பகட்டுகளை நோக்கியதான திரட்சி என்று, பெயர் சூட்டுவது நல்லதல்ல. விவாதங்களின் வழியாக, விடயங்களைக் கடப்பதுதான், என்றைக்குமே நல்லது.

  அது, தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னர், மக்களின் மனங்களை அறியாமல், 'சகுனியாட்டம்' ஆடிய, புலி அவதூறுக் கட்டுரையாளர்களின் மனங்களை ஒத்ததாக, இருக்கக் கூடாது.
   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலில்-துரோகி-அடையாளம்-சூட்டுதல்/91-251268


 8. நரேந்திர மோதி 2.0: நடுத்தர குடும்பத்திற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்தது?

  அலோக் ஜோஷி முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி ஆவாஸ்
  நரேந்திர மோதிGetty Images

  மோதி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலம், அதாவது 2019 க்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதா? இந்த கேள்வி என்னவோ மிகவும் எளிதானதுதான். இந்தக் கேள்வியை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால், 'நிச்சயமாக இல்லை!' என்ற பதிலே ஒரு நொடியில் கிடைக்கும்...

  ஆனால் உண்மையில் இந்த வினாவுக்கான விடை நேரடியானதா? உண்மையில் பதிலளிக்க சுலபமானதா? அப்படியானால், பிரதமர் மோதியின் புகழ் அதிகரித்து வருகிறது, கைதட்டுவது தொடங்கி விளக்கேற்ற சொன்னது வரை அவரது கோரிக்கைக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது, அதனால் மக்களிடையே உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது என்பது போன்ற ஆய்வுகள் அனைத்தும் எங்கிருந்து வருகின்றன? 

  எனவே இப்போது இதே கேள்வியை தலைகீழாக கேட்டுப் பார்க்கலாம். மோதி அரசு 2019க்கு பிறகும் நடுத்தர வர்க்கத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் இருந்ததா? முதலில் இது போன்ற கேள்விகளை ஏன் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். 

  எனவே இப்போது உங்களைச் சுற்றியுள்ள நடுத்தர வர்க்க மக்களை கவனிக்க முயற்சிக்கவும். பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் அரசாங்கம் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள். 

  என்ன செய்யவில்லை என்று கேட்டால், ஒன்றல்ல, பற்பல உதாரணங்களுடன் பதில் கிடைக்கலாம். அதுமட்டுமல்ல, எந்த அரசாங்கமாவது இதற்கு முன் நடுத்தர வர்க்கத்திற்காக ஏதாவது செய்திருக்கிறதா? என்ற பதில் கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். இதுவரை யாரும் இவர்களுக்காக எதையும் செய்ததுமில்லை, இப்போது செய்வதுமில்லை.

  கோப்புப்படம்Getty Images

  ஆனால் துக்கம் என்ற வலி நிறைந்த பெட்டகம் தொடர்ந்து தனது கொள்ளளவைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைக் கொண்டாடிய பிறகு, முத்தலாக் விவகாரத்தில் விவாகரத்துக்கு சவால் விடுத்து எக்காளமிட்ட பிறகு, அடுத்த எதிர்பார்ப்பு பட்ஜெட்டை நோக்கி இருந்தது. 

  ஆனால்… வந்த பட்ஜெட்டோ, பட்டென்று இதயத்தை உடைத்துவிட்டது! இரண்டாவது முறை அரசமைக்க வாக்களித்த தங்களுக்கு ஏதாவது இனிப்பான செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைத்தது அல்வா தான்! வருமான வரி அடுக்குகள் அதிகரிக்கப்பட்டு, வரி விகிதம் குறையும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இலவு காத்த கிளி போன்ற கதையானது.

  ஆம்... அவர்கள் தன்னிறைவும், தற்சார்பும் பெற்றுவிட்டார்கள். இருப்பினும் இப்படி பெயர் எதுவும் இடப்படவில்லை. வரி விகிதத்தில் இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டன. முழு தள்ளுபடி சலுகைகளையும் விட்டுவிட்டு, குறைந்தபட்ச அடுக்கை தெரிவு செய்துக் கொள்ளலாம், அல்லது நீங்கள் பழைய முறையை பின்பற்ற விரும்பினால், விகிதம் மற்றும் வருமான வரி அடுக்கு பழையதாகவே இருக்கும். எந்த தெரிவை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு லாபம், சேமிப்பு என்றெல்லாம், உதாரணங்கள் உடனுக்குடனே கூறப்பட்டாலும், புதிய திட்டத்தில் லாபம் ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. 

  கோப்புப்படம்Getty Images

  ஆனால் பொறுப்பான ஆலோசகர்கள் சொன்னது என்ன தெரியுமா? ஆடு எத்தனை நாள் தப்பித்துக் கொண்டிருக்கும். இன்று மிகவும் இளம் குட்டியாக இருந்தால், சில காலம் கழித்து வெட்டப்படும்.. அதேபோல், எந்த தள்ளுபடியாக இருந்தாலும், இன்று கொடுக்கப்பட்டால், நாளை அது லாவகமாக திரும்ப எடுக்கப்படும். எனவே, பலியிடப்போவது நடக்கத்தான் போகிறது. அது இன்றா அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம் என்பதுதான் உங்களிடம் உள்ள தெரிவு. 

  திரைகள் விலக-விலக, காயங்கள் வலி கொடுக்கும் வடுக்களாக மாறின. அரசின் வரிவிதிப்பின் மிகப்பெரிய தாக்கமானது வரி மீதோ அல்லது இன்று சம்பாதிப்பவரின் பணப்பையின் மீதோ அல்ல. ஆனால் புதிய தலைமுறையின் எதிர்காலம், சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவர்களின் வயதான காலத்திற்காக சேமிக்கும் பணத்தின் மீதுதான் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

  தனியார் வேலைகளைப் பற்றி பேசாவிட்டாலும், குறைந்தது அரசு வேலையைப் பற்றி பேசுவோம். எதிர்காலத்தில், அரசாங்கத்தில் பணி புரிந்து ஓய்வுபெறும் போது, ஓய்வூதியம் கிடைக்காது. இதற்கு முன்பாவது, எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது அதுவும் கானல்நீராகிவிட்டது. முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மீது முள் பட்டாலும், சேதம் என்னவோ சேலைக்குத் தான் என்பது போல, இறுதியில் பாதிப்பு என்னவோ நடுத்தர வர்க்கத்திற்கு தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

  கோப்புப்படம்Getty Images

  வேலைவாய்ப்பு என்ற அத்தியாயமும் ஏற்கனவே மோசமடைந்து போய்விட்ட நிலையில், இப்போது கொரோனா, உலகளாவிய மந்தநிலை மற்றும் நீண்டகால முடக்கநிலை ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. 

  மன்ரேகா, வங்கிக் கடன் அல்லது இருபது லட்சம் கோடி நிதித் தொகுப்பு என அனைத்தையும் பார்த்த முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர், இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கங்களைப் போலவே திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளது என்று விமர்சிக்கிறார். இந்த அரசில் தென்படும் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், இங்கு திருப்தி என்பது மத அடிப்படையில் அல்ல, பொருளாதார அடிப்படையில் என்பதே.

   

  உஜ்வாலா முதல் கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் கணக்கிட்ட அவர், நடுத்தர வர்க்கத்திற்கு அதில் என்ன கிடைத்தது என்று வினவுகிறார். உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையானது அதல பாதாளத்திற்கு செல்லும் நிலையில், இங்கு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். 

  இதற்கான பதிலும் ஆட்சியாளர்களிடம் தயாராக இருக்கிறது. "நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு வைப்பதற்கான வசதிகள் குறைவாக இருக்கின்றன. ஏற்கனவே இருப்பது தீர்ந்த பிறகு தான் புதிதாக கச்சா எண்ணெயை வாங்கி சேகரிக்க முடியும்". 

  ஒருமுறை விலை குறைத்திருந்தால், இருப்பில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுவிட்டால், ஒரே அம்பில் மூன்று இலக்குகள் எட்டப்பட்டிருக்கும். முதலில் அனைவரும் குறைந்த விலையில் வாகன எரிபொருள் கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவார்கள், இரண்டாவதாக போக்குவரத்து செலவுகள் குறையும் என்பதால், தேவை இல்லை என்று எரிபொருள் நிரப்பாமல் இருப்பவர்களும், உடனடியாக வந்து தங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்பியிருப்பார்கள். 

  இது எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்த இருப்பை காலி செய்திருக்கும். மூன்றாவதாக, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி சேமித்திருக்கலாம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியிருக்கலாம். ஒரு கல்லை வீசியிருந்தால் பல மாங்காய்கள் கிடைத்திருக்கலாம். 

  கோப்புப்படம்Getty Images

  அரசாங்கத்தின் பணிகள் குறித்தும், அரசாங்கத்தின் முடிவுகள் குறித்தும் விரல் நீட்டி பேச வேண்டிய அவசியமே இன்று இல்லை. ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு அவர்கள் சிந்தித்து எடுத்த முடிவுகளையும், செயல்படுத்த நினைத்த திட்டங்களையும், கொரோனா என்ற வைரஸ் முற்றிலுமாக தனது பிடிக்குள் வசப்படுத்திவிட்டது. அதாவது, இப்போது கரும்பலகையில் எழுதிய அனைத்தையும் கொரொனா அழித்துவிட்டது. இனி புதிதாகத்தான் எழுதத் தொடங்க வேண்டும்.

  ஒரேயொரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதுவும் வெகு தொலைவில் உள்ளது. பிரச்சனையின் முடிவில், அது மக்களை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்திற்கு திரும்பக் கொண்டுச் செல்லவும் என்ன செய்வது என்று அரசாங்கம் தற்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். அதாவது, கொரோனா குறித்த பயம் படிப்படியாய் குறைந்து, தற்போது முடக்கநிலை சிறிது சிறிதாக தனது இயல்பை மாற்றிக் கொண்டு, இயல்புநிலைக்கு திரும்புகிறது. இந்த சமயத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணத்தையும் உற்சாகத்தையும் தரும் ஒரு அறிவிப்பு வரக்கூடும்.

  ஆனால், இப்போதைக்கு நடுத்தர வர்கத்தினர் குறிப்பிட்ட சிறிது காலத்திற்கு கடன் தவணைகளை செலுத்தக்கூடாது, வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வாடகை கொடுக்க வேண்டாம், பணியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க வேண்டும், குறைக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, மின்சாரம், நீர், எரிவாயு, தொலைபேசி கட்டணம் மற்றும் அரசாங்க வரிகளையும் செலுத்த வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

  மக்கள் ஏற்கனவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் கடந்த ஒரு வருட ஆட்சி பற்றி நடுத்தர வர்கத்தினரிடம் என்ன கேட்பது? லாக்டவுன் அமலில் இருந்தபோது ரமலான் நோன்பு வந்தது. ஈகைத் திருநாளுக்கு எந்த பொருட்களையும் வாங்கக்கூட முடியவில்லை, ஈகைத் திருநாள் வாழ்த்துகள் என்று சொல்லவோ, மார்போடு அணைத்து ஈத் முபாரக் என்று சொல்லவோ முடியாத நிலையில் ஈகைத் திருநாள் எப்படி இருந்தது என்று கேட்க முடியுமா?

  ஆனால் எது எப்படி இருந்தபோதிலும், நீங்கள் கேள்விகளைக் கேட்க முயற்சிக்க வேண்டும். மிகச் சிலரே நேரடியாக பதிலளிப்பார்கள். அந்த பதிலில் ஒரு கேள்வி தொக்கி நிற்கலம். அந்தக் வினா, மாநில அரசைப் பற்றியும் இருக்கலாம், அல்லது முந்தைய அரசாங்கத்தின் மீதும் இருக்கலாம். அந்த பதில்கேள்வியானது கடந்த எழுபது ஆண்டுகளைப் பற்றியதாகவும் இருக்கலாம். அப்படி ஏதும் இல்லையென்றல், வேறு யாரைப் பற்றிய கேள்வி எழாவிட்டாலும், குறைந்தது கேள்விக்கான பதிலை கேட்டவரைப் பற்றிய வினாவாகவும் அந்த பதில் கேள்வி இருக்கலாம். 

  உண்மை என்னவென்றால், மோதி அரசாங்கத்தின் கவனம் நடுத்தர வர்க்கத்தின் மீது இல்லை என்றாலும் கூட, இந்த அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, பிரதமர் மீது நடுத்தர வர்க்கத்தினருக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். சங்கடங்கள் இருந்தாலும், வருத்தங்கள் இருந்தாலும், புகார்கள் இருந்தாலும், ஏமாற்றம் இருந்தாலும், பரிதாபமான நிலையில் இருந்தாலும், நடுத்தர வர்கத்தினருக்கு அரசு மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை. 

  அதே சமயம், வாக்கு வங்கி எதுவாக இருந்தாலும், தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் வர்க்கம் நடுத்தர வர்க்கமே... "அதாவது, இந்த அரசாங்கம், தனது முதல் ஆண்டில் தேர்ச்சி பெற்றதா என்ற பரிட்சைக்கான முடிவை கொடுக்க வேண்டியது நடுத்தர வர்க்கத்தினரே. ஆனால், இந்த ஆண்டு, தேர்வு எழுதாமலேயே ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது போலவே, இந்த அரசும், தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றுவிட்டது!

  (இந்த கட்டுரையின் ஆசிரியர் ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் youtube.com/c/1ALOKJOSHI என்ற YouTube சேனலை நடத்தி வருபவர்)
   

  https://www.bbc.com/tamil/india-52897076


 9. ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்

  ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்TWITTER/RUTH RICHARDSON

  அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.

  மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார்.

  ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

  ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

  ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தன.

  இவை அனைத்தும் 20 டாலர் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆரம்பித்தது.

  கோப்புப்படம்Getty Images

  ஒரு கடையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டாலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

  தனது சொந்த ஊரான டெக்ஸாசில் இருந்து குடிபெயர்ந்து மினியாபொலிஸில் பல ஆண்டுகளாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்ந்து வந்தார். 

  சமீப காலம் வரை பவுன்சராக அவர் வேலை செய்தார்.

  கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்காவில் வேலையிழந்த மில்லியன் கணக்கான மக்களில் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டும் ஒருவர்.

  எங்களது கடைக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் வழக்கமாக வருவார். அவர் எந்த பிரச்சனையும் செய்ததில்லை என என்.பி.சி தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார் கப் புட் கடையின் உரிமையாளர் அபுமாயலே.

  ஆனால், சம்பவம் நடந்த அன்று அபுமாயலே கடையில் இல்லை. கள்ள நோட்டு சந்தேகத்தில் அவரது கடையில் வேலை பார்த்த பதின்ம வயது இளைஞர் வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றினார்.

  கோப்புப்படம்Getty Images

  20:01 மணிக்கு அவரச உதவி எண்ணான 911 ஐ தொடர்புகொண்ட கடைக்காரர், ஜார்ஜ் ஃப்ளாய்ட் அளித்தது கள்ள நோட்டு என்ற சந்தேகத்தின் பெயரில் அவருக்கு வழங்கிய சிகரெட்டை திரும்ப கேட்டதாகவும், ஆனால் அவர் அதை வழங்க மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். 

  மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் நன்கு குடித்திருப்பதாக தெரிவதாகவும் கடைக்காரர் புகார் அளித்துள்ளார் என போலீஸார் வெளியிட்ட பதிவுகள் காட்டுகின்றன.

  20:08 மணிக்கு சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்துள்ளனர். அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு பேருடன் ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமர்ந்திருந்தார்.

  வாகனத்துக்கு அருகே சென்ற தாமஸ் லேன் என்ற போலீஸ்காரர் தனது துப்பாக்கியை எடுத்ததுடன், கைகளைக் காட்டுமாறும் ஜார்ஜ் ஃப்ளாய்டிற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், காவல் அதிகாரி ஏன் தேவையில்லாமல் துப்பாக்கியை வெளியே எடுத்தார் என்பதை அவரது வழக்கறிஞர் விளக்கவில்லை.
   

  ‘’ ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை போலீஸ் அதிகாரி தாமஸ் லேன் காரை விட்டு வெளியே இழுத்தார். கைகளில் விலங்கு போடும்போது, ஜார்ஜ் ஃப்ளாய்ட் அதை பலமாக எதிர்த்துள்ளார்’’ என தாமஸ் லேனின் வழக்கறிஞர் கூறுகிறார்.

  கைவிலங்கு போட்ட பிறகே, கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்படுவதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை காவல்துறை வாகனத்தில் போலீஸார் ஏற்ற முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் அவர் கீழே விழுந்தார்.

  அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை ரோந்து வாகனத்தில் ஏற்ற மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து முயன்றுள்ளார்.

  கோப்புப்படம்Getty Images

  இந்த முயற்சியின் போது, சரியாக 20:19 மணிக்கு காவலர் சாவின் இழுத்ததால், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கீழே விழுந்தார். அப்போது அவர் கையில் கைவிலங்கு இருந்தது.

  காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே காலை வைத்து அழுத்தினார். இதை அங்கிருந்த பலர் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.

  ‘’ என்னால் மூச்சு விடமுடியவில்லை’’ என தொடர்ந்து கூறிய ஜார்ஜ் ஃப்ளாய்ட், பிளீஸ், பிளீஸ், பிளீஸ் என கெஞ்சியுள்ளார்.

  எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

  இதில் முதல் 6 நிமிடத்திலே ஜார்ஜ் ஃப்ளாய்ட் அசைவற்ற நிலைக்கு வந்தார். அங்கிருந்த பலர் ஃப்ளாய்ட்டின் நாடித்துடிப்பைப் பார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

  குயேங் என்ற காவலர் ஃப்ளாய்ட்டின் வலது கையை பிடித்து பார்த்தபோது, நாடித்துடிப்பு எதுவும் இல்லை. ஆனாலும், போலீஸார் ஃப்ளாய்ட்டை விட்டு நகரவில்லை.

  20:27 மணிக்கு காவலர் சாவின் தனது காலை ஃப்ளாய்ட்டின் கழுத்தில் இருந்து எடுத்துள்ளார். ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஃப்ளாய்ட் அழைத்துச் செல்லப்பட்டார்.

  அவர் இறந்துவிட்டதாக ஒரு மணி நேரம் கழித்து தெரிவிக்கப்பட்டது. 


  https://www.bbc.com/tamil/global-52894893

   


 10. அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கினத்தை பாதுகாக்க ஒரு நம்பிக்கை கீற்று

  ஜிப்பான் குரங்குகள்KFBG ஜிப்பான் குரங்குகள்

  அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ஹைனன் கிப்பான் இனத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ள ஓர் இணை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது. 

  காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 

  1950களில் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகில் 2000 கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன. ஆனால் 1970களில் 10க்கும் குறைவான கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன என்று அப்போதைய கணக்கெடுப்பு காட்டியது. 

  ஆனால் இப்போது சமீபத்திய கணக்கெடுப்பின்படி 30க்கும் மேற்பட்ட கிப்பான் குரங்குகள் ஐந்து குடும்பங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன.

  பல தசாப்தங்களாக வேலை செய்து ஹைனன் கிப்பான் பாதுகாப்பு திட்டத்தை நடத்தி வரும் கடூரி பண்ணை மற்றும் ஹாங்காங்கின் தாவிரவியல் பூங்காதான் குரங்குகளின் எண்ணிக்கை முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தன. 

  ஹைனன் மழைக்காடுகள் இந்த அழகிய விலங்கையும் அதன் பாடலையும் இழந்தால் எப்படி இருக்கும் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறார் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஃபிலிப் லோ.
   

  மரத்தின் உச்சியில் சென்று இங்குமங்கும் தாவுவதும், மிகவும் சத்தமான குரல் எழுப்பி பாடி தங்கள் பகுதி என்று உணர்த்துவதும் கிப்பான் குரங்குகளின் திறனாகும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள இணை தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை மேம்படுத்த சேர்ந்து பாடும்.

  கடந்த ஆண்டு இரண்டு கிப்பான் குரங்குகள் சேர்ந்து பாடுவதை காட்டிற்கு அருகில் வாழும் கிராம மக்கள் கேட்டுள்ளனர்.

  அதன் பின் ஒரு ஆண் கிப்பானும் ஒரு பெண் கிப்பானும் சேர்ந்து பாடுவதை பார்த்துள்ளனர். அப்போது அவை இரண்டுக்கும் நடுவில் நல்ல நிலையான பிணைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

  கிப்பான் குரங்குகளின் குடும்பத்தில் ஒரு ஆண் குரங்கு இரண்டு பெண் குரங்குகள் மற்றும் அதன் குட்டிகள் இருக்கும். காட்டின் வேறு பகுதியில் ஐந்தாவதாக இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இணையை கண்டறிந்தது மிக முக்கியமானதாகும்.

  (கோப்புப்படம்)Getty Images (கோப்புப்படம்)

  இந்த புதிய இணை கிப்பான் வகையை சேர்ந்ததாக இருப்பதால் அழியும் நிலையிலிருந்து கிப்பான் வகை மீண்டு வரும் என்ற நம்பிக்கை வளர்கிறது என்கிறார் ஃபிலிப் லோ. இந்த நல்ல விஷயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் வெற்றியாகவும் அமையும் என்கிறார் அவர்.

  இந்த மனித குரங்குகளை பாதுகாப்பது, கண்காணிப்பது அவைகளின் நடவடிக்கையையும் வாழ்க்கை முறையையும் ஆராய்வது, பல மரங்களை வளர்த்து அவற்றிற்கு உணவும் தங்குமிடமும் அளிப்பது போன்றவை இந்த பாதுகாப்பு திட்டத்தில் அடங்கும்.

  உலகம் முழுவதும் கிட்டதட்ட 20 கிப்பான் வகைகள் வடகிழக்கு இந்தியாவிலிருந்து போர்னியோ வரை உள்ளன. இந்த 20 வகைகளும் தற்போது காடுகளை அழிப்பது, வேட்டையாடுவது மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தால் அழியும் நிலையில் உள்ளன.

  இரண்டு வகையான கிப்பான்கள் சமீபத்தில் சீனாவில் இருந்து காணாமல் போயின. ஹைனன் கிப்பான்களையும் சேர்த்து சீனாவை பிறப்பிடமாக கொண்ட பல வகை உயிரினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் தெரிவிக்கிறது.


  https://www.bbc.com/tamil/global-52879250

   


 11. ‘இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன்’ - சரத் பொன்சேகா

  கோப்புப்படம்

  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். 

  இலங்கையின் பிரபல செய்தி ஊடக நிறுவனமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

  யுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார். 

  பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

  பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

  விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்ததாக சரத் பொன்சேகா கூறுகிறார். 

  எனினும், 19ஆம் திகதியும் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் - நந்திகடல் பகுதியில் அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

  சரத் பொன்சேகாGetty Images சரத் பொன்சேகா

  19ஆம் தேதி தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றை நிறைவு செய்து, அலுவலகத்திற்கு செல்லவிருந்த வேளையிலேயே பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். 

  யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

  யுத்தம் நிறைவு பெற்றதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டாலும், 19ஆம் தேதியே அதனை உறுதி செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

  இலங்கையின் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போது பதவி வகிக்கும் ஜெனரல் ரவிபிரியவிற்கு பொறுப்பாக வழங்கப்பட்ட படை பிரிவே பிரபாகரன் மீது இறுதித் தாக்குதலை நடத்திதாகவும் அவர் நினைவூட்டினார். 

  2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி அதிகாலை 2.30 அளவில் ஆரம்பமான இறுதி மோதல், 19ஆம் தேதி காலையில் நிறைவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
   

  இறுதித் தருணத்தில், அதாவது 17ஆம் தேதி அளவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான தலைவர்கள் அடங்கலான சுமார் 400 பேர் வரை நந்திகடல் பகுதியின் வடப் பகுதிக்குள் சிக்குண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 

  இறுதித் தருணம் வரை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நாம் அந்த சந்தர்ப்பத்தில் அறிந்திருந்தோம் என சரத் பொன்சேகா கூறுகின்றார். 

  இறுதி யுத்தம் முழுவதையும் பிரபாகரன் நேரடியாகவே தலைமையேற்று நடத்தியதை தாம் அறிந்திருந்ததாகவும், அதனால் பிரபாகரன் தப்பிச் செல்லாத வகையிலான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

  கோப்புப்படம்Getty Images கோப்புப்படம்

  பிரபாகரனை கொன்றதே சரியான விடயம் என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

  ஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார் என அவர் குறிப்பிடுகின்றார். 

  பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தாலும், இன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அவர் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது என அவர் கூறியுள்ளார். 

  பிரபாகரன் முதலாவது துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்திய 1975ஆம் ஆண்டில் தான், யாழ்ப்பாணத்திலுள்ள முகாமொன்றிற்கு பொறுப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  பிரபாகரன் தனது முதலாவது தோட்டாவை பயன்படுத்தும் போதே, தான் அதே பகுதிக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

  1981ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே பிரபாகரன் முதலாவது சிப்பாய் ஒருவரை சுட்டு கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். 

  அன்றைய தினம் முதலே பிரபாகரன் ராணுவத்துடன் மோதல்களை ஆரம்பித்திருந்தார் எனவும், அப்போது கூட தான் யாழ்ப்பாணத்திலேயே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

  1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து ராணுவத்தினரை கொலை செய்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட கறுப்பு ஜுலை கலவரத்தை அப்போதைய அரசியல்வாதிகள் சரியாக கையாளாததால், பிரபாகரன் பாரிய சக்தியாக வலுவானார் எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். 

  4 ஈழப் போர் நடந்த நிலையில், ஒவ்வொரு தடவையும் யுத்தம் மீள ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பிரபாகரன் மேலும் வலுவான ஒருவராகவே திகழ்ந்தார் என அவர் சுட்டிக்காட்டினார். 

  கோப்புப்படம்Getty Images

  2001ம் ஆண்டு இறுதி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வசம் 12 ஆயிரம் படையினரே இருந்ததாக கூறிய சரத் பொன்சேகா, யுத்தம் நிறுத்தம் முடிவடையும் போது அந்த தொகை 35 ஆயிரம் வரை அதிகரித்திருந்ததாக அவர் கூறினார். 

  அது மாத்திரமன்றி, கடல்புலிகள், விமானப்படைகள் என பிரபாகரன் 4ஆவது ஈழப்போரில் மேலும் வலுவடைந்தவராக திகழ்ந்தார் என சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். 

  பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை எனவும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாரிய அர்ப்பணிப்புடன் அவர் கடமையாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

  அவரின் அர்ப்பணிப்பினாலேயே, கீழ் மட்டத்திலுள்ள உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

  அவ்வாறான நம்பிக்கை கொண்டவர்களே பின்னர் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றம் பெற்றார்கள் எனவும் சரத் பொன்சேகா கூறுகின்றார். 

  பிரபாகரன் தன்மீது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் பிரபாகரனை பழி வாங்கும் எண்ணம் தனக்கு இறுதி வரை இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். 


  https://www.bbc.com/tamil/sri-lanka-52893161

   


 12. விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

  June 3, 2020

  121212122121211.jpg

  வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.  மட்டக்களப்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  குறித்த விபத்தில் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும், நல்லூர் அரசடி வீதியை சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணம் பலாலி வீதியை சேர்ந்த நிஷாந்த் ஜானுசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

  மட்டக்களப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் யாழில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , விபத்துக்கு உள்ளான இரு வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதாகவும் கனகராஜன் குளம் காவல்துறையினர்தெரிவித்தனர்.  #மோட்டார்சைக்கிள் #வவுனியா #விபத்து #யாழ்ப்பாணம்
   

  http://globaltamilnews.net/2020/144213/


 13. முகமாலை மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை ஒத்திவைப்பு

  spacer.png
  கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 9 ஆம்திகதி மீண்டும் நடைபெறவுள்ளன.குறித்த பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இதுதொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.Mukamalai__10_

  இதன்போது, துப்பாக்கிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினரின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன்போதும், இரண்டு மகசின்கள், 34 வெடிக்கும் தோட்டார்கள், 1 சயனைட், தகடு மற்றும் இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் என்ன மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)
   

  http://www.samakalam.com/செய்திகள்/முகமாலை-மனித-எச்சங்கள்-த/


 14. சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா?

  இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இந்த ஆதரவுத் தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குச் சாதகமாக அமையும்-

  -அ.நிக்ஸன்-

  இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றில் அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்த காலம் சென்றுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் அரசியல்தான் கதியென்ற நிலைப்பாட்டில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இயங்குவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களின்போது மாத்திரம் தமிழ்த்தேசியம் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில், ஒரு கட்சி, இரு தேசம் ஒரு நாடென்கிறது. மற்றைய கட்சி ஒன்று, ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி இருப்பதாகக் கூறுகிறது.

  வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு என்று கூறி வேறு சில கட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றன. இன்னுமொரு கட்சி. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிறது.

  இதனை அவதானித்த அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன், அனைத்துக் கட்சிகளின் இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கட்டுரை ஒன்றை எழுதி அதற்குத் தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டான்.

  அந்தக் கட்டுரையை வாசித்த அந்த மாணவனுடைய விரிவுரையாளர், தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டமைக்கான காரணத்தைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மாணவன், இரு தேசம் ஒரு நாடென்று பேசுகிற கட்சியும் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியம் என்று கூறுகிறது. ஓற்றையாட்சிக்குள் சமஸ்டி இருப்பதாகச் சொல்லித் திரியும் கட்சியும் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியம் என்கிறது.

  வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்த அரசியல் தீர்வுதான் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை என்று வேறுகட்சிகளும் மார்தட்டுகின்றன. அதனால்தான் அனைத்துக் கட்சிகளினதும் இந்தக் கருத்துக்களைத் தொகுத்து எழுதிவிட்டுத் தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டேன் எனக் கொஞ்சம் அச்சத்தோடு சொன்னான் அந்த மாணவன்.

  மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முன்பு கூறிய கட்சி ஒன்று தற்போது அந்த வாசகத்தையே கைவிட்டுள்ளது. அதனால் அந்தக் கட்சியின் கருத்தைத் தனது கட்டுரைக்குள் சேர்க்க முடியவில்லை என்றும் மாணவன் சுட்டிக்காட்டினான்.

  Eluka-Thamil-Batticaloa-27

  மாணவன் தனது விரிவுரையாரிடம் மீண்டுமொரு கேள்வியைக் கேட்டான், உண்மையில் தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று? விரிவுரையாளர் கொஞ்ச நேரம் அதிர்ச்சியாக மாணவனைப் பார்த்தார். விரிவுரையாளர் வழங்கிய பதிலும் மேற்படி கட்சிகளின் கருத்துக்களைப் போன்றுதான் இருந்தன.

  இதனால் திருப்பதியடையாத மாணவன், விரிவுரையாளரை நோக்கி என்ன சேர் நீங்களும் அந்தக் கட்சிகள் போன்றல்லவா சொல்கிறீர்கள் என்றான்.. விரிவுரையாளருக்கு மேற்கொண்டு என்ன பதில் சொல்வதென்றெ தெரியவில்லை—

  இதுதான் பிரச்சினை— தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்களுக்கும் சரியான விளக்கம் இல்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் உரிய விளக்கம் தெரியாது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியாது என்பதுதான் தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடு எழுந்தமைக்கு மூல காரணம்.

  குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற அரசியல் என்பது வெறுமனே ஏமாற்று. ஆகவே அந்த நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று சிங்கள. தமிழச் சமூகங்கள் ஒன்றினைந்து செய்யும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் மூலமே ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் திர்வைக் காணமுடியும்.

  இதற்காகச் சாதி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கடந்து தமிழ் மக்களாக ஒன்று திரள வேண்டும். அதுதான் தமிழ்த்தேசியம். இந்தத் தமிழ்த்தேசியம் என்பது தமிழ் ஈழம் அமைப்பது அல்ல. தேசம் என்பது வேறு நாடு என்பது வேறு என்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். தேசம் என்பது மக்கள திரள் என்றுதான் அவர் விளக்குகின்றார்.

  ஆகவே தேசமாக மக்கள் திரண்டு தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவுவதற்கான ஏற்பாட்டைச் செய்யப் போவது யார்? சமகால உலக அரசியல். பொருளாதார ஒழுங்கின் பிரகாரம் மக்கள் கூட்டுச் சக்தியாகத் தமது அரசியல் விடுதலையை ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வலியுறுத்தும் போது அது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

  ஆகவே இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு இந்த மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இவ்வாறான வெவ்வேறுபட்ட ஆதரவுத்தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கே சாதகமாக அமையும்.

  அதாவது சாதி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கடந்து தமிழ் மக்களாக ஒன்று திரள்வதை இந்த வெவ்வேறுபட்ட ஆதரவுத் தளங்கள் தடுக்கும் சிந்திக்க வேண்டிய விடயம் இதுதான். சிந்திக்க வேண்டியது யார் பொறுப்பு என்பதே இப்போதைய கேள்வி.
   

  http://www.samakalam.com/செய்திகள்/சாதாரண-கட்சி-அரசியலில்-ஈ/


 15. இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா

  அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. யுத்த வெற்றி நாயகர்களான இராணுவத்தினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பலம்பொருந்திய நாடுகள் தங்களின் யுத்த வெற்றி வீரர்கள் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறகின்றன. எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் இராணுவத்தினர் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனை எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் உலக அமைப்புக்களிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப் போவதில்லை என்று கோட்டபாய தனது உரையில் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 11வது ஆண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே கோட்டபாய இவ்வாறு தெரிவித்திருந்தார். கோட்டபாயவின் இந்தக் கருத்து ராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை விமர்சித்திருந்தனர். ராஜபக்ச தரப்புக்களுக்கு நெருக்கமான, இலங்கைக்கான ஜ.நாவின் முன்னைநாள் தூதுவர் தாமர குணநாயகம், ஜ.நாவிலிருந்து வெளியேறுதல் என்னும் எண்ணம் மிகவும் பாரதூரமானது. ஜனாதிபதிக்கு யாரோ தவறான ஆலோசனைகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

  ஜக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு நாடு விலகிக் கொண்ட சந்தர்ப்பம் ஒரேயொரு தடவைதான் இடம்பெற்றிருக்கின்றது. 1965இல் இந்தோனேசியா ஜ.நாவின் உறுப்புரிமையை விலக்கிக்கொண்டது. மலேசியாவிற்கு பாதுகாப்பு பேரவையில் ஆசனம் வழங்குவது தொடர்பான முரண்பாட்டின் காரணமாகவே இந்த விலகல் இடம்பெற்றது. ஆனால் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டது. அமெரிக்கா ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புக்களிலிருந்து வெளியேறியிருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட போது அமெரிக்கா அதில் இணைந்து கொள்ளவில்லை. ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது. ரொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2018இல் ஜ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. அதே போன்று ஜ.நாவின் பிறிதொரு அமைப்பான யுனெஸ்கோவிலிருந்தும் வெளியேறியது. 2016இல் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகப் போவதாக எச்சரித்திருந்தார். போதைவஸ்திற்கு எதிரான யுத்தத்தின் போது இடம்பெற்ற கொலைகள் தொடர்பில், ஜ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்படி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது இலங்கை ஜனாதிபதி அவ்வாறானதொரு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

  இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து விலக முடியுமா? அது அவ்வளவு எளிதான ஒன்றா? மேற்குலகினால் முதன்மைப்படுத்தப்படும் உலக ஒழுங்குடன் முற்றிலுமாக முரண்படும் வடகொரியா, கியுபா போன்ற நாடுகள் கூட ஜ.நாவிலிருந்து வெளியேற முயற்சிக்கவில்லை. ஜ.நாவின் அங்கமாக இருந்து கொண்டே, ஜ.நாவின் நடைமுறைகளுடன் மோதுகின்றன. ஜ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக விமர்சனங்களை எதிர்கொள்ளுவதற்கும் இதுதான் காரணம். மனித உரிமைகளை மீறுவோரும் – மனித உரிமைகளை பாதுகாப்போரும் எவ்வாறு ஒரு இடத்தில் இருக்க முடியும் என்பதுதான், அமெரிக்க குடியரசு நிர்வாகம், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது முன்வைத்துவரும் பிரதான குற்றச்சாட்டாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை போன்ற ஒரு சிறிய தெற்காசிய நாடு ஜ.நாவிலிருந்து வெளியேறலாம் என்று எண்ணுவது உலக ஒழுங்கிலிருந்து தனிமைப்படுவதற்கே வழிவகுக்கும்.

  GotabayaRajapaksa-2-720x450

  ஒரு நாடு ஜ.நாவின் உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான தெளிவான சர்வதேச விளக்கங்கள் இல்லை. 1965இல் இந்தோனேசியா ஜ.நாவின் உறுப்புரிமையிலிருந்து விலகப் போவதாக ஒரு கடிதத்தின் மூலம் அறிவித்துவிட்டு, உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டது. 18 மாதங்களின் பின்னர் இந்தோனேசியாக மீண்டும் ஜ.நாவில் இணைந்து கொண்ட போதும் அது தொடர்பில் பெரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை. அன்றைய சூழலில் இந்தோனேசியாவின் முடிவை சீனா மட்டுமே ஆதரித்திருந்தது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை ஜ.நாவிலிருந்து வெளியேறுவதாக தீர்மானித்தால் அது இயலுமான காரியம்தான். ஆனால் இவ்வாறானதொரு அறிவிப்பை கோட்டபாய ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தினாரா அல்லது இது தொடர்பில் அவரிடம் ஒரு தெளிவான நிலப்பாடு இருக்கின்றதா என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு தயாராகிவருகின்ற நிலையிலேயே கோட்டபாய இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கி;ன்றார். இந்த அறிவிப்பு இராணுவத்தினர் மத்தியிலும் சிங்கள தேசியவாதிகள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் ஜயமில்லை.

  ஜக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் ஜக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைக்க மறுத்துவருகின்றது அத்துடன், ஜ.நாவின் அங்கத்துவ அமைப்புக்கள் தொடர்பிலும் அமெரிக்கா, தொடர்ந்தும் கடுமையான குற்றசாட்டுக்களை முன்வைத்துவருகின்றது. வூகான் வைரஸ் பரவலுக்கு பின்னர், ஜ.நாவின் உலக சுகாதார அமைப்பு தொடர்பிலும் அமெரிக்கா கடும் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கோட்டபாயவின் எச்சரிக்கையும் வெளியாகியிருக்கின்றது. இன்றைய நிலையில் ஒரு நாடு ஜ.நாவுடன் மோதுவதானது அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையில்லை. கோட்டபாய தரப்பு இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமான ஒன்றாகவும் கணிக்கலாம்.

  UN.sri_.lanka_

  ஜக்கிய நாடுகள் சபை என்பது அடிப்படையில் நாடுகளை கண்காணிக்கும், நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு உலக அமைப்பாகவே இருக்கின்றது. இந்த அழுத்தங்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் கூட, நாடுகள் தொடர்பான உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் ஜ.நாவின் செயற்பாடுகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆனால் ஒப்பீட்டடிப்படையில் ஜ.நாவினால் சிறிய நாடுகள் மீதே செல்வாக்குச் செலுத்த முடிகின்றது. இந்த நிலையில் ஜ.நாவிலிருந்து வெளியேறப் போவதாக அச்சுறுத்துவதன் மூலம், ஜ.நாவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென்று சில நாடுகள் எண்ணுகின்றன. பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி ஜ.நாவிலிருந்து விலகப் பேவதாக எச்சரித்தமை அவ்வாறானதொரு அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். தற்போது கோட்டபாயவின் அறிவிப்பும் அவ்வாறான ஒன்றே. ஒருவேளை நாடுகள் எச்சரிப்பது போன்று ஜ.நாவிலிருந்து வெளியேறினாலும் கூட, ஜ.நாவினால் எதனையும் செய்ய முடியாது. ஜ.நாவின் அமைப்புக்கள் மூலம் வழங்கப்படும் நிதியை மட்டுமே நிறுத்த முடியும். அந்த நிதியிழப்பை ஒரு நாடு கருத்தில் கொள்ளாவிட்டால் ஜ.நாவை எதிர்த்தும் ஒரு நாடு செயலாற்ற முடியும்.

  ஜ.நாவிலிருந்து விலகி நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவை பலப்படுத்திக் கொள்வதன் ஊடாகவும் பரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். பலம்பொருந்திய நாடுகளின் விருப்பங்களுடன் முரண்படாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நடைமுறை ஒன்று தொடர்பிலும் இலங்கை சிந்திக்கலாம். ஆனாலும் இதில் ஆபத்துக்கள் உண்டு. இது ஒரு வகையில் கத்தியின் மேல் நடப்பது போன்றது. சறுக்கினால் மரணம்.
   

  http://www.samakalam.com/செய்திகள்/இலங்கையால்-ஜக்கிய-நாடுகள/


 16. 45 minutes ago, Kapithan said:

  அதெப்படி,

  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

  சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

  இதுதான் பலரது தேவையோ ? ☹️

   

  சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

  சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

  அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

  செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

  இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

   

   

  14 minutes ago, பையன்26 said:

  2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
  அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

  அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

  இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!


 17. சிங்கங்களை இழக்கும் காடுகள்

  முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜூன் 02

  image_3ac5adc3d2.jpgஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது.

  தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், அதே வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

  ஆறுமுகன் இறக்கும் போது, அவருக்கு வயது 55. அஷ்ரப் மரணித்தபோது, அவருக்கு 52 வயது. இருவரின் மரணமும் அகாலமானவை. நடுத்தர வயதில், இருவரும் மறைந்து போனார்கள்.

  அஷ்ரப்பும் ஆறுமுகனும் எங்கு 'முளை'த்தார்களோ, அந்த மண்ணின் மக்கள்தான் அவர்கள் இருவரையும் தத்தமது அரசியல் தலைவர்களாக்கிக் கொண்டனர். அஷ்ரப்பும் ஆறுமுகனும் வேறொரு நிலத்தின் 'வாடகைத் தலைவர்'களாக இருக்கவில்லை என்பதுதான் அவர்களின் பெருமிதங்களாகும்.

  2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து, அம்பாறை மாவட்டத்தில் கதிரைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எல்.எம். அதாவுல்லா (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) யூ.எல்.எம். முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.

  ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராகவே, அஷ்ரப் மரணித்து விட்டதால், அவரின் இடத்துக்கு அவருடைய மனைவி பேரியலை வேட்பாளராக, முஸ்லிம் காங்கிரஸ் நியமித்தது. அந்தத் தேர்தலில், அஷ்ரப்பின் மனைவி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

  கிட்டத்தட்ட அதேபோன்ற நிகழ்வுகள்தான், ஆறுமுகன் தொண்டமானின் மரணத்திலும் நடந்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது. அதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஆறுமுகன் களமிறங்கி இருந்தார். அவரின் திடீர் மரணத்தையடுத்து, அன்னாரின் வேட்பாளர் இடத்துக்கு, அவருடைய மகன் ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  அஷ்ரப்பின் மரணத்தின் பிறகுதான், அவருடைய பெறுமானத்தை அவரின் மண்ணின் மக்கள் முழுவதுமாக உணர்ந்தனர். அஷ்ரப் என்கிற அரசியல் தலைவரின் இழப்பை, முஸ்லிம்கள் இன்னும் வலியுடன் நினைவுகூருகின்றனர். அஷ்ரப்பின் 'இல்லாமை', அவரின் மண்ணுக்கு வாடகைத் தலைவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆறுமுகனின் இழப்பால், மலையகத்துக்கு அவ்வாறானதொரு நிலை நேர்ந்து விடக்கூடாது.

  ஒரு நிலத்தின் மக்களுக்காகப் போராடுவதற்கும், தலைமை வகிப்பதற்கும் அந்த நிலத்தில் பிறந்த ஒருவரால்தான் முழுவதுமாக முடியும் என்பதை, வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நிலமொன்றில் வாழும் மக்களின் கண்ணீரை, வியர்வையை, கோபத்தை மட்டுமல்ல, தூஷண வார்த்தைகளைக் கூடப் புரிந்துகொள்வதற்கு, வாடகைத் தலைவர்களால் முடிவதில்லை.

  தலைவர்கள், தமது சொந்த நிலத்து மக்களின் வழியாகத்தான், மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அஷ்ரப்பின் பெயரையும் உருவத்தையும் தவிர்த்து, அவரின் பிறந்தகமான கிழக்கு மாகாணத்தில், 'முஸ்லிம் அரசியல்' இன்றுவரை சாத்தியப்படாமைக்குக் காரணம், அவருடைய நிலத்து மக்களின் மனங்களில், அவர் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஆகும். 

  ஒவ்வொரு தேர்தலிலும், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, கிழக்கில் அஷ்ரப் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். அஷ்ரப் உயிரோடிருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, இப்போது அஷ்ரப்பைப் போற்றிப் புகழும் அரசியலைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அஷ்ரப்பின் பெயரை வைத்து, ஏமாற்று அரசியலும் தாராளமாகவே நடக்கின்றன.

  தேர்ந்ததோர் அரசியல் தந்திரியாக,  அஷ்ரப் இருந்தார். அதேவேளை, தனது சமூகத்தையும் குறிப்பாக, தனது நிலத்து மக்களையும் அவர் ஆழமாக நேசித்தார். அதனால், தனது சமூகத்தை அடகு வைக்கும் 'அரசியலை', ஒருபோதும் அவர் செய்யவில்லை.

  ஆனால், வாடகைத் தலைவர்கள் அப்படியல்ல. தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமக்கு வாக்களித்த சமூகத்தையே, 'விற்றுப் பிழைத்த' வரலாறுகள் ஏராளமுள்ளன.

  சிறுபான்மை அரசியல் தலைவர்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கும் 'தந்தை' எனத் தமிழர்கள் அழைக்கும் செல்வநாயகத்துக்கும் மட்டுமே உள்ள பெருமையொன்று பற்றி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் சிலாகித்து எழுதியிருந்தார்.

  'அரசியல் கட்சியொன்றின் தலைவராகத் தந்தை செல்வா பதவி வகித்த நிலையில், அவர் அமைச்சராகாமல் அவரின் கட்சிக்குள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார்.

  இவ்வாறே, ஆறுமுகன் தொண்டமான், தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை, ஒருமுறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆக்கினார்.

  அரசாங்கங்களுடன் இணைந்திருந்த, வேறெந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், இந்தப் புகழ்மிக்க தைரியமான முடிவை எடுக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான், அவருடைய சமூக மக்களுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் மக்கள் மீது அவரும் அவர் மீது மக்களும்  பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்தத் தைரியமான முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

  தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக, தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானாலும், தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கை ஆறுமுகனுக்கு இருந்தமையால், அவர் யுக புருஷராகிறார்'' எனத் தெரிவித்துள்ளார் பஷீர் சேகுதாவூத்.

  ஆறுமுகன் தொண்டமானின் மரணம் ஏற்படுத்தியுள்ள 'வெற்றிடத்தை', மலையகம் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலம் இன்னுமிருக்கிறது.

  ஆறுமுகனின் மரணம் காரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமைப் பதவி நிரப்பப்படும் போது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறந்து விடலாகாது.

  அஷ்ரப்பின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை நிரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரும் தடுமாற்றங்களும் அதன் காரணமாக, இரட்டைத் தலைவர்கள் அந்தக் கட்சிக்கு நியமிக்கப்பட்டமையும் இங்கு கொள்ளத்தக்கது.

  'சிங்கங்களின் கர்ஜனைகளால்தான், காடுகள் கம்பீரம் பெறுகின்றன' என்பதை, சிங்கங்களின் இழப்புகள்தான் அநேகமாகப் புரிய வைக்கின்றன.

  அஷ்ரப்பின் 'இல்லாமை'தான், அவரின் 'இருத்தலின்' அவசியத்தை, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகம் உணர்த்தியது.

  அதேபோன்று, ஆறுமுகன் இல்லாத மலையக அரசியலில், இப்போதைக்குச் சோபை இருக்கப் போவதுமில்லை.

  இனி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கும் திட்டுவதற்கும், ஆறுமுகன் இல்லை. எனவே, அவரின் புகழ் பாடுவதன் ஊடாக, அவரின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் போடும் அரசியலைச் செய்ய வேண்டிய 'கையறு' நிலைக்குள், எதிர்க்கட்சிகள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அஷ்ரப் மரணித்த பின்னர், அவருக்கு எதிரான கட்சிகள், இப்படித்தான் நடந்து கொண்டன.

  எது எவ்வாறாயினும், மலையகத் தமிழர்களின் ஏராளமான தேவைகள், உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவனாக, ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

  ஆனால், சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கும், மனநிலையற்ற தற்போதைய ஆட்சியாளர்களை,  ஆறுமுகன் இல்லாத அரசியலரங்கில், மலையகத் தமிழர் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது, மிக முக்கியமான கேள்வியாகும்.

  இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற செய்தி வெளியாகியுள்ளது.

  மிகவும் குறைவான, அடிப்படை வசதிகளுடன் வாழ்க்கையைச் சிரமத்துடன் எதிர்கொள்ளும் மலையக மக்கள், சில நன்மைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதென்றால், அவர்களைச் சார்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பை வகித்தல் அவசியமாகும். இந்த ஆட்சியில், ஆறுமுகன் மூலம் மலையகத் தமிழர்களுக்கு ஓர் அமைச்சர் கிடைத்தார். அவரின் மறைவுடன் அதுவும் இல்லாமல் போயிற்று.

  ஒவ்வொன்றையும் இழக்கும் போதுதான், அவற்றின் 'அருமை'கள் புரியத் தொடங்கும். அஷ்ரப் இல்லாமல் போனபோது, முஸ்லிம் சமூகம் தனது கம்பீரத்தை அரசியலரங்கில் இழந்தது.

  சிறுபான்மை அரசியல் தலைவர் ஒருவர் அகால மரணமடையும் போது, அவர் சார்ந்த அரசியல் கட்சியும் அவரின் சமூகமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான சம்பவங்கள், உதாரணங்களாக இருக்கின்றன.

  சிந்திக்கத் தெரிந்தோருக்கு, வரலாற்றில் ஏராளமான பாடங்கள் உள்ளன.

  ஆறுமுகன்: ஓர்மை யாத்திரீகன்

  (ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் 

  எழுதிய குறிப்பொன்றின் சில பகுதிகள்)

  01

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது, தொழிற் சங்கம் என்றும் அரசியல் கட்சி எனவும் இரண்டு தடங்களில் பயணிக்கும் அமைப்பாகும்.

  image_9025482aea.jpgஇவ்விரட்டை அமைப்புக்கு, ஆறுமுகன் தலைமை தாங்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில், 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வமைப்பின் வருடாந்த பேராளர் மாநாட்டுக்கு, விருந்தினர்களில் ஒருவராக என்னை அழைத்திருந்தார்.

  அவ்வருடம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் என அதிகாரம்மிக்க இரண்டு பதவிகளுக்கும் ஆறுமுகன் ஒருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்காகக் கட்சி யாப்பும் மாற்றப்பட்டிருந்தது.

  அதேவேளை, அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். இம்மாநாட்டில் நான் பேசுகையில், ''தொண்டமான் அவர்களுக்கு கட்சியில் தலைவர், செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மட்டுமல்ல, கட்சியில் இன்னும் மூன்று பதவிகளை அதிகமாகவும் வழங்கலாம். ஏனென்றால், அவர் 'ஒரு முகன்' அல்ல, 'ஆறு முகன்' அல்லவா''  என்றேன்.

  கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் ஒன்று சேரக் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். பேசி முடித்து, மேடையில் இருந்து இறங்கி வந்து, நண்பர் ஆறுமுகனின் அருகில் அமர்ந்த போது, ''எனக்கு தெரியும், இது குத்திக்காட்டுண்ணு'' என்று கூறி, எனது இடுப்பில், அவரது முழங்கையால் செல்லமாகக் குத்தினார்.

  காலப் போக்கில், அவரோடு இணைந்து செயற்படுகையில், ஆறுமுகன் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை, ஐயந்திரிபுற அறிந்துகொள்ள முடிந்தது. இதை இலங்கைக்கே புரியவைத்துவிட்டுப் போயிருக்கிறார். 'பன்மை திரளத் தன்மை சூழ்ந்த' ஓர்மையான யாத்திரீகன் ஆறுமுகன்.

  02

  பெரியவர்  சௌமியமூர்தி தொண்டமான் ஐயாவிடம், அரச அனுமதிப் பத்திரம் உள்ள 'சொட் கண்'  துப்பாக்கி இருந்தது. 1976ஆம் ஆண்டு ஒரு நாள், 12 வயது ஆறுமுகன், அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து, ''ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க, எனக்கு ஆசை; சுட்டுக் காட்டுங்கள்'' என்று கேட்டார்.

  கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து ளுபு  தோட்டாவைப் புகுத்தி, மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார். இதைப் பார்த்த சிறுவன் ஆறுமுகன், ''நானும் சுடணும் நானும் சுடணும்'' என்று அடம்பிடித்துத் துள்ளினான்.

  பெரியவரின் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு, வேறு ஓர் இடத்துக்குச் சிறுவனை அழைத்துச் சென்று, துப்பாக்கியால் அதிர்வு குறைந்த வகையில், 'பொறி'யும் நாலாம் நம்பர் தோட்டா ஒன்றையும் நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தைக் காட்டி, இலக்கு வைத்துச் சுடுமாறு கூறி, துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார்.

  சரியாக காகத்தை இலக்கு வைத்த 'தம்பி', துப்பாக்கியின் குழலை, காகம் இருந்த இடத்துக்கு அப்பால் வலப்புறமாக, ஓர் அடி அளவு நகர்த்தி, 'றிகறை' அழுத்தினார். 'டுமீல்', காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது.

  ''ஏன் தம்பி, நீங்கள் காகத்தைச் சுடாமல் தப்ப விட்டீங்க''? என்று கேட்ட ஐயாவிடம், ''காகம் பாவம், இப்ப அது, அதுட கூட்டுக்கு பிள்ளைகளப் பார்க்க போயிருக்குமில்ல..'' என்று சொன்னார் தம்பி ஆறுமுகன்.

  இப்படிப்பட்ட இனிய 'உயிரபிமானி'யாக ஆறுமுகன் இருந்தார்.

  ஆறுமுகனின் இழப்பின் பின்னர், மலையகத்து மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் சந்தேகமும் இருந்தாலும், காலத்துக்குக் காலம் யுக புருஷர்களை, தமக்குத் தலைவர்களாகப் பெற்றுவந்த அந்த மக்கள், புதிய தலைவர் ஒருவரை விரைவில் பெறுவது நிச்சயமாகும்.

  வாழுங்காலம் முழுவதும் வாழ்க்கைக்காகப் போராடுகிற, தொழிற் சங்கப் போராட்டங்களுக்குப் பழக்கப்பட்ட தேர்ந்த போராளிகளான அம்மக்கள், தமக்கான புதிய தொண்டரை விரைவில் தெரிவார்கள்.          

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கங்களை-இழக்கும்-காடுகள்/91-251265


 18. கற்கை நன்றே கற்கை நன்றே...

  காரை துர்க்கா   / 2020 ஜூன் 02

  இருவர் கவலையுடன் பகர்ந்த விடயங்களைக் கொண்டு, இன்றைய பத்தியைத் தொடர விளைகிறேன். ஒருவர், 39 வயதுடைய பெண். இவரது தலைமையிலேயே அந்தக் குடும்பம் சீவியம் நடத்துகின்றது. அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம். அந்தப் பெண்னுக்கு 17, 15 வயதுகளில், முறையே பெண்ணும் ஆணும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

  மற்றையவர், ஆங்கில ஆசிரியர். ஒரு நாள் ஆசிரியர், ஆங்கில வினைச் சொற்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். அவ்வேளையில், Learning (கற்றல்), Earning (உழைத்தல்) ஆகிய சொற்களின் தமிழ்க் கருத்தை விளங்கப்படுத்திய வேளை, "இந்த இரு சொற்களிலும் முதன்மையானது எது" என, மாணவர்களிடம் கேட்டாராம். "Earning" (உழைத்தல்) என்ற சொல்லே முக்கியமானது என, ஏகோபித்த குரலில் மாணவர்களிடமிருந்து பதில் வந்ததாம்.

  அடுத்து, அந்தப் பெண்ணின் கதை. அவர், நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்றே, குடும்பத்தை நடத்தி வருகின்றார். ஒரு நாளுக்குரிய கூலியாக, 700 ரூபாய் வரையிலேயே பெறுகின்றார். இந்த வருமானத்தில், குடும்பச் செலவுடன் பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்வதில், பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றார். அத்துடன், தனது உடல் உபாதைகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக மாதாந்தம், அரச வைத்தியசாலைக்கு 'கிளினிக்' சென்று வருகின்றார். இதனால், ஒழுங்காக வேலைக்குச் செல்வதிலும் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றார். 

  "அம்மா! எங்களுக்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகின்றீங்கள். நான் படித்தது போதும்; இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். 'ஓஎல்' சோதனை முடிந்தவுடன், நான் உழைக்கப் போறன். நான் உழைச்சு, குடும்பச் செலவையும் அக்காவின்ர படிப்பையும் பார்த்துக் கொள்கின்றேன்". தனது நெருக்கடிகளைத் தினசரி பார்த்து வருகின்ற 15 வயதுடைய மகன், இவ்வாறு தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார். தனது துன்பங்களைப் புரிந்து கொண்ட மகனை நினைத்து, ஒருபக்கம் பெருமைப்படுவதாகவும் மறுபக்கம், பிள்ளையின் கற்றலுக்கான மனநிலை, எங்கள் குடும்ப நிலைவரத்தால் குழம்பி விட்டதே எனக் கவலைப்படுவதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

  'ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் போல', வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் கணிசமானோர், இதே நிலையிலேயே இன்று உள்ளனர்.

  இரண்டாம் கட்ட ஈழப் போர் என்று கூறப்படுகின்ற ஆயுதப் போர், பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமானது.

  அக்காலப் பகுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசம், 'பாதுகாப்பு வலயம்' எனச் செஞ்சிலுவைச் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இதை அடையாளப்படுத்தும் முகமாக, வலயத்தைச் சூழ, சகவடிவில் (+) மின்சாரக் குமிழ்கள் ஒளிரவிடப்படும்.

  அந்தக் காலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசத்தில், ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில், இரவில், வீதியோரத்தில் இருந்து, பல மாணவர்கள் கல்வி கற்றார்கள்; சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்கள்; தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கும் பெருமை சேர்த்தார்கள்.

  இவ்வாறாக, அன்று வெடியோசைகளுக்கும் வேட்டொலிகளுக்கும் இடையேயும் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாளை உயிருடன் இருப்போமோ,  கந்தகக் குண்டுக்கு இரையாகி விடுவோமோ என்ற ஐயப்பாடுகள், நிச்சயமின்மைகளுக்கு இடையேயும், தெரு விளக்கில் படித்து எம்மவர்கள் சாதித்துக் காட்டினார்கள்.

  அன்று, கடும் யுத்தத்துக்குள்ளும் படித்து முன்னேற வேண்டும் என, அன்றைய சந்ததி கருதியது. இன்று, உழைத்து முன்னேற வேண்டும் என, இன்றைய சந்ததி கருதுகின்றது. இதற்கு, இன்றைய சந்ததியைக் குற்றம் சொல்லிப் பிழை இல்லை. ஏனென்றால், இன்றைய சந்ததி கடந்து வரும் பாதைகள், முற்றிலும் பிழைத்துப்போய் விட்டன.

  இந்நிலையில், பெரும்பாலான பெற்றோர், என்ன விலை கொடுத்தேனும் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றே உள்ளனர். ஆனாலும், அவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரப் பிரச்சினையுடன் தினசரி போரிட்டு வருவதால், பிள்ளைகளுடன் சமாதானமாக வாழ்வது, சவாலான விடயமாகி வருகின்றது.

  அதேவேளை, பட்டம் பெற்றவுடன் அரசாங்கம், தங்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை, ஏனைய இனங்களைவிடத் தமிழ் மக்கள் (மாணவர்கள்) மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்காகத் தங்கள் மாவட்டச் செயலகம் முன்னால், தகரக் கொட்டகை அமைத்து, பட்டதாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றைப் பார்க்கின்ற 15 வயதுடைய மாணவன் ஒருவன், 'படித்துப் பட்டம் பெற்றும் வேலை இல்லையே! இப்போதே ஏதாவது உழைக்கலாம்' என, அப்பாவித்தனமாக மனதில் நினைக்கலாம்.

  இவ்வாறானதொரு நிலையில், ''வடக்கு மாகாணத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்க வேண்டுமானால், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்" என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார்.

  கடந்த ஆண்டு, சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பிலேயே, பேராசிரியர் இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அதேவேளை, அரசாங்கம், தனியார் தொண்டு நிறுவனங்கள ஊடாகவும்; பாடசாலைகளுக்கு வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

  இவ்வாறான சூழ்நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்குக் காரணம், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே எனச் சுட்டிக்காட்டுகின்றார் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை.

  இந்நிலையில், பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமை மட்டுமே, வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கருத்து, குழப்பமானதாகவே உள்ளது.

  ஏனெனில், மாணவர்களின் கல்வி அறுவடை, பெற்றோருடன் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியோரிலும் தங்கியுள்ளது. இதில், சிலருக்கு நோயைக் குணப்படுத்த வேண்டும். அத்துடன், சில விடயங்களில் ஆளையே குணப்படுத்த அல்லது, மாற்ற வேண்டிய தேவைப்பாடுகள், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நிறையவே உள்ளன.

  இதற்கிடையே, 1981ஆம் ஆண்டு, இது போன்றதொரு (ஜுன் 01) நாளிலேயே, தமிழ் மக்களின் பொக்கிஷமான யாழ்ப்பாணம் பொது நூலகம் (அறிவாலயம்) தீயுடன் சங்கமமானது. அந்தத் தீ அணைந்தாலும், அதன் உக்கிரம், எங்கள் மனங்களில் கனன்று கொண்டிருக்கின்றது.

  இவ்வாறாகத் தமிழ் மக்களின் கல்விக்குக் கல்லறை கட்ட, காலங்காலமாகப் பல தரப்புகளாலும் பல தடவைகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  ஆகவே, பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்தே, தமிழ்ச் சமூகம் கல்வியைத் தொடருகின்றது; தொடர வேண்டிய நிலையில் உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியம் எனப் பிறர் கருதுகின்ற நிலையை, நாம் அதையும் தாண்டிச் செல்வதற்கும் வெல்வதற்கும், ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டலாமா? 

  இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு, எமது ஒட்டுமொத்த சமூகமும் அதன் கூறுகளும் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே நியாயமானது. நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டிய விடயங்கள், ஏராளம் உள்ளன. எமது சொந்தப் பலவீனங்களைக் கூர்ந்து கவனிப்போம்; தவறுகளிலிருந்து பாடம் கற்போம்.

  கல்வியின் ஊடாக ஏற்படுகின்ற, தாக்குப் பிடிக்கும் திறனே, எமக்குப் பல வழிகளிலும் உதவப் போகின்றது. எமது இளஞ்சந்ததியின் கல்வியே, எமது கைகளில் போடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கலியை உடைக்கப் போகின்றது. வீழ்ந்து கிடக்கும், எமது பொருளாதாரத்தை நிமிர்த்தப் போகின்றது.

  இது இவ்வாறு நிற்க, ''சரி! உங்கள் மகன் அடுத்த ஆண்டு உழைக்கப் போறான். உங்கள் பஞ்சம் பறந்தோடப் போகுது. இனி, நீங்கள் வீட்டிலிருந்து சமைத்து ஆறின சோறு சாப்பிடலாம் தானே'' என, அந்த அம்மாவைக் கேட்டபோது, ''உந்தச் சின்னப் பொடியன்ர கதையை விடுங்கோ. நான் பிச்சை எடுத்தாவது, என்ர ஆம்பிளைப் பிள்ளையைப் படிப்பிக்க வேண்டும்'' என்ற பதிலில் பொதிந்திருந்த வைராக்கியம், மெய் சிலிர்க்க வைத்தது. 'கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற, தமிழ்ப் பாட்டியின் வரிகளும் வைரமானவையே!    

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கற்கை-நன்றே-கற்கை-நன்றே/91-251264


 19. இனவெறித் ’தீ’

  என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 01

  அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார்.

  வௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவலைக்குமுரிய இனவெறியாட்டமாகும். அந்த இனவெறியின் அண்மைய பலிதான் ஜோர்ஜ் ஃபுளொய்ட்.

  இந்த இனவெறிப் படுகொலை, அமெரிக்கர்களைக் கோபமுறச் செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்களும் பொதுச் சொத்துகளை நாசம் செய்வதும் கடைகளைச் சூறையாடுவது போன்ற குற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. இதுவும் கூட, அமெரிக்காவுக்குப் புதியதொன்றல்ல.

  மனித வரலாறு முழுவதும், இனவாதம் நிலவி இருக்கிறது; இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது. தோலின் நிறம், மொழி, பழக்கவழக்கங்கள், பிறந்த இடம் போன்ற நபர்களின் அடிப்படைத் தன்மையை வெளிப்படுத்தும் எந்தவொரு காரணிகளால், ஒரு நபர், இன்னொரு நபரைவிடத் தரங்குறைந்தவர் என்ற நம்பிக்கையே இனவாதமாகிறது.

  இனவாதமானது போர்கள், அடிமைத்தனம், நாடுகளின் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மனிதனே மனிதனைத் துன்புறுத்துவதற்கும், அழிப்பதற்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

  இனவாதம் பற்றிப் பேசும் போது, அடிப்படையில் அதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தனிநபர் இனவாதம்; இரண்டாவது, ஒழுங்கு முறைசார்ந்த இனவாதம்.

  தனிப்பட்ட இனவெறி என்பது, ஒரு நபரின் இனவெறி அனுமானங்கள், நம்பிக்கைகள், நடத்தைகளைக் குறிக்கிறது. இது பற்றிக் கருத்துரைக்கும் ஹென்றி, டேடர் ஆகியோர், ''இது 'நனவானதும் மயக்கமுள்ள தனிப்பட்ட தப்பெண்ணத்திலிருந்து உருவாகும் இனப் பாகுபாட்டின் ஒரு வடிவம்'' என்கின்றனர். இருப்பினும், தனிநபர் இனவெறி, ஒரு வெற்றிடத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஒரு சமூகத்தின் அடித்தள நம்பிக்கைகள், விடயங்களைப் பார்த்தல், அவற்றைச் செய்வதற்கான வழிகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மேலும், இது நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது.

  மறுபுறத்தில், ஒழுங்குமுறைசார் இனவெறி என்பது, நிறுவப்பட்ட நிறுவனங்களில் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைகளை உள்ளடக்கியது. இவற்றின் விளைவாக, நியமிக்கப்பட்ட குழுக்களை விலக்குவது, ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளின் ஊடாக, ஒழுங்கு முறைசார்ந்த இனவெறி முன்னெடுக்கப்படுகிறது.

  ஒழுங்கு முறைசார்ந்த இனவெறியானது, தன்னை இரண்டு வழிகளில் வௌிப்படுத்துகிறது. முதலாவது, நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவெறி; மற்றையது, கட்டமைப்புச் சார்ந்த இனவெறி.

  இனவெறி (இனவாதம்), ஒரு சமூகத்தின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அதைக் கைப்பற்றும்போது, அது நிறுவன மயப்படுத்தப்பட்டதும் கட்டமைப்பு சார்ந்த இனவெறியை ஸ்தாபிக்கிறது. இத்தகைய ஒழுங்குமுறைசார் இனவெறியால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் தனிநபர்களிடம், அவர்களை அறியாமலேயே இனவெறி ஊறிவிடுகிறது.

  இன்று, அமெரிக்காவில் பற்றி எரியும் இனவெறிக்கெதிரான குரல்கள், இலங்கையிலும் ஒலிக்கின்றன; அது பாராட்டத்தக்கதே.

  மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது போல, ''ஓர் இடத்தில் இடம்பெறும் அநீதியினாது, அனைத்து இடங்களிலும் உள்ள நீதிக்கு ஆபத்தானதாகும். ஆகவே, உலகின் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தாலும் மனிதனாகச் சக மனிதனின் நீதிக்காகக் குரல்கொடுப்பது எமது கடமை ஆகிறது''. ஆனால், இலங்கையர்களின் 'நியாயத்தவம்', 'நீதிக்கான குரல்' அமெரிக்காவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. இன்றைய தினமானது, யாழ்ப்பாண நூலகம் இனவெறித் தீயால் சாம்பலாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்து, 39 ஆண்டுகள் நிறைவடையும் துயர தினமாகும்.

  ''ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் அடையாளத்தை, வரலாற்றை அழித்து விடுங்கள்; அந்த இனம், தானாக அழிந்துவிடும்'' என்பது, மிகப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு கூற்றாகும். உலக வரலாற்றில், ஓர் இனத்தை, சாம்ராட்சியத்தை அழிக்கும் போர்களின் போது, அந்த இனத்தின், அந்த சாம்ராட்சியத்தின் நூல்களையும் நூலகத்தையும் அழித்த செயற்பாட்டைப் பல சந்தர்ப்பங்களிலும் காணலாம்.

  ஓர் இனத்தின் பலமாக, அறிவுச்செல்வம் இருக்கும் பொழுது, ஓர் இனத்தின் அடையாளமாக நூல்களும் நூலகங்களும் இருக்கும் போது, அவற்றை அழிப்பதனூடாக அந்த இனத்தை அழிக்கும் கொடூர வரலாறு, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலமளவுக்குப் பழைமையானது. கி.மு 213இல், சீனாவின் சின் பரம்பரையின் முதலாவது சக்கரவர்த்தி என்று அறியப்படும் சின் ஷூ ஹூவாங், கவிதை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட புத்தகங்களைக் கையகப்படுத்தி எரித்திருந்தார்.

  கி.மு 300இல் ஸ்தாபிக்கப்பட்ட, அன்றைய உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட 'அலெக்ஸாண்ட்ரியா' நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது தீக்கிரையாக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் மிகத் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், இது ஜூலியஸ் சீஸரால் அல்லது, ஓரீலியனால் அல்லது, அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பரசர் தியோஃபீலியஸால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் ஆய்வாளர்களால் அதிகமாக முன்னிறுத்தப்படுகிறது.

  'ஞானத்தின் இல்லம்' என்று அறியப்பட்ட பாக்தாத் நூலகம், கி.பி 1,258இல் மொங்கோலியப் படையெடுப்பின்போது, மொங்கோலியப் படைகளால் அழிக்கப்பட்டது. மத்திய கிழக்கின் அறிவுச் செல்வத்தின் பெரும்பகுதி, இதில் அழிந்துபோனது.

  1930களில் ஜேர்மனியில், ஹிட்லரின் நாஸிப் படைகள், தமது கொள்கைக்கு மாற்றான நூல்களைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கினார்கள். 1992இல் பொஸ்னியாவின் பழைமை வாய்ந்த நூலகம், சேபியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

  இந்தத் துயர் மிகு biblioclasm எனப்படும் புத்தக அழிப்பின், அறிவு அழிப்பின் தொடர்ச்சியாகத்தான் நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பையும் நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது. யாழ். நூலக எரிப்பு 'காடையர்'களால் நடத்தப்பட்டது என நம்ப வைக்கப்பட்டாலும், அதில் அரசாங்கத்தின், பொலிஸாரின் நேரடியானதும் மறைமுகமானதுமான பங்களிப்பு இல்லை என்று, எவராலும் மறுத்துவிட முடியாது.

  image_fc3be50c5a.jpgயாழ். நூலகம் எரிக்கப்பட்ட போது, மிகப் பெரும் இனத்து வேசியாகவும் பேரினவா தத்தின் முரசொலி யாகவும் காணப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூ, அவரது தளபதி என்றறி யப்பட்ட அமைச்சர் காமினி திஸாநாயக்க, அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு முக்கிய குழு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, ஏறத்தாழ 500 பொலிஸாரைக் கொண்ட பெரும் பொலிஸ் படையொன்றும், தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது.

  1981 மே 31, யாழ். நாச்சிமார் அம்மன் கோவிலடியில், அன்றைய யாழ்ப்பாண நகரபிதாவான ராஜா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாதுகாப்புக் கடமையில் நின்றிருந்த மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அடையாளம் தெரியாத இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் எதிரொலியாக, அவ்விடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று, அவ்விடத்தில் தமது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கியது.

  அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினார்கள். இங்கு தொடங்கிய பொலிஸ் வன்முறைகள், யாழ். நகரின் மத்தியை நோக்கிப் பரவத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தின் சந்தைக் கடைத்தொகுதியும் புதிய சந்தைக் கட்டடமும் வர்த்தக, வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் மண்ணில், மீண்டும் ஒரு திட்டமிட்ட கலவரத்தை, பொலிஸார் நடத்திக் கொண்டிருந்தனர்.

  மேலும், யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான வி. யோகேஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட பொலிஸ் குழுவொன்று, அந்த வீட்டுக்குத் தீ வைத்தது. தீ வைக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் அந்த வீட்டிலேயே இருந்தனர். அவரும் குடும்பமும் விரைந்து வெளியேறியதால், மயிரிழையில் உயிர் தப்பினர்.

  இதேநேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய முக்கிய பத்திரிகையான 'ஈழநாடு' பத்திரிகைக் காரியாலயமும் அச்சகமும் அங்கு நுழைந்த பொலிஸ் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதுடன், முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டது. 'ஈழநாடு' பத்திரிகையின் ஆசிரியரான கோபாலரட்ணம், கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமைடைந்தார். நான்கு பொதுமகன்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

  மேலும், 31ஆம் திகதி இரவோடிரவாகத் தெற்கிலிருந்து பெருமளவு காடையர்கள் யாழ். நகரில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக, இந்தக் கறுப்பு வரலாற்றைப் பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காடையர் கூட்டம், யாழ்ப்பாணத்திலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்துக்குள் நுழைந்து, அதைத் தீக்கிரையாக்கியதுடன், நகரிலிருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து, கொள்ளைகளிலும் ஈடுபட்டது. அத்தோடு, யாழ். நகரை ஆங்காங்கே அலங்கரித்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகளும் அடித்துடைக்கப்பட்டன.

  இவ்வாறு தொடர்ந்த வன்முறையின் விளைவாக, 1981 ஜூன் முதலாம் திகதி இரவு, பொலிஸ் கும்பலும் காடையர் கூட்டமும் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமித்த, யாழ். பொது நூலகத்துக்குள் புகுந்து, அதற்குத் தீ மூட்டினார்கள். ஓலைப் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், மூலப்பிரதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 'யாழ்ப்பாண வைபவ மாலை' என்ற வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதியும், இதில் அழிந்து போனது பெருஞ்சோகம்.

  சுருங்கக் கூறிவதாயின், தமிழர்களின் அடையாளமும் வரலாறும் அரசாங்கத்தின் ஆதரவுடைய இனவெறிக் கூட்டத்தால் அழித்தொழிக்கப்பட்டது. இரவோடிரவாக இந்த இனரீதியான, புத்தக அழிப்பு (ethnic biblioclasm) நடத்தி முடிக்கப்பட்டது.

  பலம் வாய்ந்த இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்த போது, அவர்களின் கண்முன்னால் பொலிஸாரினாலும் காடையர்களாலும் பெரும் இனரீதியான வன்முறையும் இனரீதியான புத்தக அழிப்பும் நடத்தப்பட்டது என்றால், அது நிச்சயமாக அவர்கள் அறியாமல் நடந்திருக்க முடியாது.

  அமெரிக்காவின் இனவெறித் தீக்கு கண்டனம் தெரிவிக்கும் இலங்கையர்கள், தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒவ்வோர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் கூட, கண்டனத்தையாவது தெரிவிப்பதுதான் நியாயமாகும். கருகிய நூலகக் கட்டடத்துக்கு நீங்கள் வௌ்ளையடித்து விடலாம். ஆனால், அது மக்களின் மனங்களில் ஆறாத ரணமாகக் காணப்படும், இனவெறிக் காயத்துக்கு மருந்தாகிவிடாது; அழிந்துபோன பொக்கிஷங்களை மீட்டுத்தராது; இழந்த உயிர்களை மீட்பிக்காது.

  இந்த நாட்டில், மிகுந்த இரக்கமிக்க மனிதர்கள் இருக்கிறார்கள். அநியாயமாகக் கொல்லப்படும் ஒரு சிறுத்தைப் புலிக்காகக் கண்ணீர் வடிக்கும் இரக்கமிகு இதயங்கள் அவை. ஆனால், இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறைசார் இனவெறி, தம்மோடு வாழும் சக மனிதனை வெறுக்குமளவுக்கான வன்மத்தைப் பெரும்பான்மையானவர்களின் மனதில் விளைவித்திருக்கிறது; விளைவித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் உணரக்கூடிய அடிப்படை விடயமொன்றுள்ளது; தன் சகமனிதன் மீது, கடும் வெறுப்பை வைத்துக்கொண்டு, ஐந்தறிவு ஜீவனுக்காக இரங்குவதெல்லாம், ஜீவகாருண்யமாகிவிடாது. அது பெரும் போலிப்பாசாங்காகும் (hypocrisy).

  எந்தத் தீயையும் போல, இனவெறித் தீயும் அணைக்கப்படக் கூடியதே. ஆனால், தகுந்த காலத்தில் அது அணைக்கப்படாவிட்டால், நாம் முயற்சித்தாலும் அணைக்க முடியாத பெருந்தீயாக அதுவளர்ந்துவிடும். எவ்வளவு விரைவாக நாம், இதை உணர்கிறோமோஇ அவ்வளவு தூரத்துக்கு அது, எமக்கு நல்லது. 

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனவெறித்-தீ/91-251193


 20. இந்திய ஜனநாயகத்தின் ’காணொளி அரசியல்’

  எம். காசிநாதன்   / 2020 ஜூன் 01

  image_05a4f87da4.jpgகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், தினமும் சென்னையில் உச்சநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், இந்திய ஜனநாயகத்தின் செயற்பாடுகள், டிஜிட்டல் மயமாகி வருகின்றன.

   வழக்கமான பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்ற விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டே, இவ்வாறு டிஜிட்டல் மயமாகி வருகிறது.

   ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும், இந்த நவீன களத்துக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள, கொரோனா வைரஸ் பேரிடர், ஒரு வழியில் உதவியிருக்கிறது என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

  அரசியல் கட்சிகளின் பிரசார யுக்திகளில், வரலாறு காணாத மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி மூலமாகவே விவாதித்து, கொரோனா வைரஸ் பற்றிய தேசிய ஊரடங்கின் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டார். மாநில முதலமைச்சர்களுடனும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், இது போன்றதோர் ஆலோசனையின் மூலம், நிர்வாக ரீதியாக ஒரு மாற்றத்தை, இந்தியாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

  அரசியல் களம் மட்டுமின்றி, அரச நிர்வாகக் களமே கானொளிக்கு மாறியிருப்பது, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், மிக முக்கியமான மாற்றம் ஆகும். இது, கொரோனா வைரஸ் தந்த மாற்றம் என்றால் சந்தேகமில்லை.

  இந்தியா முழுவதும் அரசியல் போராட்டங்கள் எதையும், பொதுவெளியில் காண முடியவில்லை. தவிர்க்க முடியாமல், ஒரு போராட்டம் நடைபெற்றால், முகக்கவசம் அணிந்து போராடுகிறார்கள்;  உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும், சமூக இடைவெளி விட்டு நின்று போராடுகிறார்கள். 'டிஜிட்டல்' மயமாகி வரும் இந்த அரசியல் நிலைவரத்தால், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க, தனது ஆறாவது ஆண்டு நிறைவுச் சாதனைகளை, 500 டிஜிட்டல் பேரணிகள் மூலம், மக்களிடம் கொண்டு செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடிதம் ஒன்றை எழுதி, தனது சாதனைகளை டிஜிட்டல் மயமாக வெளியிட்டுள்ளார்.

  அரசாங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாகி இருப்பது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் அரசியல் களத்துக்கு, சற்று ஓய்வைக் கொடுத்திருக்கிறது.

  இன்றைக்கு இந்தியாவில் நடைபெறும் 'டிஜிட்டல்' பேரணிகளுக்குப் பொலிஸார் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை; வாகனங்கள் வர வேண்டியதில்லை. அதேபோல், அரசாங்கத்தின் சார்பில் நடக்கும் கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க, அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை. மிக முக்கிய முடிவுகளை, இந்த ஊரடங்கு நேரத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள், போராட்டங்கள் இன்றி, ஆட்சியாளர்களால் எடுக்க முடிந்திருக்கிறது. அதனால், தற்போது சட்டமன்றத்தில் வெளிநடப்பு இல்லை; நாடாளுமன்றத்தில் 'கலாட்டா 'இல்லை.

  அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, மக்களைத் திரட்டி, வெளியிடங்களில் போராட்டம் இடம்பெறவில்லை. உதாரணத்துக்கு, இந்திய உச்சநீதிமன்றமே அங்கிகரித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதி, இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள, இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தனியார் மயம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது.

   விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கு, புதிய மின்சாரத் திருத்தச் சட்டமூலம் வெளிவந்திருக்கிறது. கொரோனா வைரஸ் இல்லாத நேரத்தில், இதெல்லாம் நடைபெற்றிருந்தால், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய 'கலாட்டா'வை எம்.பிக்கள் செய்திருப்பார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு, எதிர்ப்புப் பேரணிகளை, போராட்டங்களை நாடு முழுவதும் அறிவித்திருக்கும்.

  ஏன், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் கூட, கொரோனா வைரஸ் காலம் என்பதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் அமைதி நிலவுகிறது. சாதாரண காலகட்டமாக இருந்திருந்தால், அரசாங்கத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்; நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று, குரல் எழுப்பப்பட்டிருக்கும். இதற்கு எல்லாம் வேலையில்லாமல், அனைத்துப் பிரச்சினைகளிலும் அரசாங்கமே அமைதியாக முடிவு எடுக்க, இந்தக் கொரோனா வைரஸ் காலம், பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, மாநில முதலமைச்சர்களுக்கும் உதவிகரமாக இருந்திருக்கிறது.

  ''பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம்'' என்று, மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சரால் உத்தரவிட முடிகிறது என்றால், அதற்குக் காரணம், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் கிடைத்த வாய்ப்புத்தான். மற்ற நேரங்களில், இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கக் கூடும்.

  இதேபோல், தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்குச் சம்பளக் குறைப்பு, பெரிய அளவில் போராட்டங்கள் இன்றி அரங்கேற்ற, கொரோனா வைரஸ் பேருதவியாக அமைந்து விட்டது.

  தமிழ்நாட்டில், தி.மு.க-அ.தி.மு.க இடையே, கானொளி அரசியல் சூடுபிடித்து வருகிறது. கொரோனா வைரஸ் பேரிடரில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட, 'ஒன்றிணைவோம் வா' என்ற நிகழ்ச்சியைத் தி.மு.க தொடங்கியது. இதை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கானொளி மூலம், கட்சி நிர்வாகிகள் தொடங்கி, பாதிக்கப்பட்ட தரப்பினர் வரை பேசியிருக்கிறார். ''ஊரடங்கு நேரத்தில், மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது'' என்றும், ''ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கவில்லை'' என்றும் சமூக இடைவெளி பேணி, முகக்கவசம் அணிந்து போராட்டத்தை நடத்தியிருக்கிறது தி.மு.க. அதேபோல், மற்றக் கட்சிகளும் இது போன்ற போராட்டங்களை நடத்தியிருக்கின்றன.

  அ.தி.மு.க சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொளி மூலமாகவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

  ''பட்டியலின மக்களை விமர்சித்த தி.மு.க எம்.பியைக் கைது செய்'' என்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.கவே மாநிலம் முழுவதும், சமூக இடைவெளி பேணி, முகக்கவசம் அணிந்து, போராட்டம் நடத்துகிறது.

  எதிர்வரும் செப்டெம்பரில், விடுதலையாகி சசிகலா வந்து விடுவாரோ என்ற எதிர்பார்ப்பில், முன் கூட்டியே செயற்படுத்தப்பட்ட வியூகம்தான், 'ஜெயலலிதா நினைவகம்' என்ற அறிவிப்பாகும். ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு, முன்கூட்டிய விடுதலை கிடைப்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும், அவர் விடுதலை ஆவார் என்று வரும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. சசிகலா வெளியில் வந்தால், அ.தி.மு.க புதிய பரிமாணத்தை அடையும்.

   தற்போது கட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து, சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்வார்களா? அதற்கு, டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என, நிபந்தனை வைப்பார்களா? போன்ற கேள்வினளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. எதிர்கால அ.தி.மு.கவின் பலம், ''ஒன்றுபட்ட அ.தி.மு.கவில்தான் இருக்கிறது'' என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க முடிவு எடுத்தால் மட்டுமே, சசிகலாவின் வருகை தமிழக அரசியலில், புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

   ஆனால், சசிகலாவையும் உள்ளடக்கிய, ஒன்றுபட்ட அ.தி.மு.கவை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி விரும்ப வேண்டும். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, இப்படியொரு சிக்கல், அ.தி.மு.கவுக்குள் எழுந்த போது, அக்கட்சி 'ஜெயலலிதா அணி', 'ஜானகி அணி' என்று பிரிந்து நின்றது. அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, ''ஒன்றுபட்ட அ.தி.மு.கவுக்கே என் ஆதரவு'' என்று அறிவித்தார். இது போன்ற நிலைப்பாட்டை, பா.ஜ.கவின் தேசியத் தலைமை, இப்போது எடுத்தால் மட்டுமே, சசிகலாவின் வருகை, ஒன்றுபட்ட அ.தி.மு.க உருவாகக் கைகொடுக்கும்.

  ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்திலும் அரசியல் வியூகங்கள் தொடருகின்றன. ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லத்தை' நினைவிடமாக அறிவிக்கும் அவசரச் சட்டத்தை, அ.தி.மு.க அரசாங்கம் கொண்டுவந்ததும் இதன் ஓர் அங்கம்தான். இப்படி ஒவ்வொரு மாநில அரசாங்கமும், தங்களுக்கு வேண்டிய நடவடிக்கைகளை மட்டுமின்றி, அரசியல் வியூகங்களையும் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் தொடருகின்றன.

  எதிர்க்கட்சிகளின் தொல்லையின்றி, எடுத்துவரும் நிர்வாக, அரசியல் நடவடிக்கைகள், இயல்பான சூழல் நிலவும் காலத்தில், அவ்வளவு எளிதல்ல. ஆளுங்கட்சிக்கு, காணொளிக்  கலந்தாலோசனைகள் மிகவும் வசதியாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் எளிதாக இருக்கும். ஆனால், சின்னச் சின்னக் கட்சிகளுக்கு சுலபமானதாக இல்லை. ஆகவே, கொரோனா வைரஸ் பரவுகை, சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், பிரதான எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள், அரசியல் களத்தில் சமாளித்து நின்றுபிடிக்க முடியும். சிறிய கட்சிகள், எப்படித் தங்கள் செயற்பாட்டை வகுத்துக் கொள்வது என்பதில், மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது.

  எது எப்படியிருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில், அரசியல் வியூகங்களுக்குப் பஞ்சமில்லாமல், அரசியல் களம் சூடாகவே இருக்கிறது. ஆகவே, இந்திய ஜனநாயகம், 'புத்தம் புது' பிரசாரப் பாதையில் செல்கிறது.

  இதன் அடுத்த கட்டம், தேர்தல்களில் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதையும், காணொளி மூலமே நடத்தி விடலாமே என்ற எண்ணத்தை, இந்தக் கொரோனா வைரஸ் விதைத்திருக்கிறது. அது, விருட்சமாகிறதா, மீண்டும் போராட்ட வாழ்க்கைக்கு இந்திய ஜனநாயகம் திரும்புகிறதா என்பது, கொவிட்-19 தொற்றின் வேகம், எவ்வளவு நாளைக்குத் தொடரும் என்பதில் அடங்கியிருக்கிறது.

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-ஜனநாயகத்தின்-காணொளி-அரசியல்/91-251191


 21. பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

  சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

  சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

  • Like 2
  • Thanks 1
  • Haha 1

 22. 6 hours ago, Nathamuni said:

  அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான்

  இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

   

  ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

   


 23. இ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து?

  spacer.png

  மறைந்த ஆறுமுகன் தொண்டமான் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரான முத்துசிவலிங்கம் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் மீண்டும் தலைவராக முத்துசிவலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  இந்த வாரத்திற்குள் இது தொடர்பாக இ.தொ.கா இறுதி தீர்மானங்களை எடுக்கவுள்ளது. -(3)
   

  http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-கா-தலைவராக-மீண்டும்-ம/


 24. இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

  June 2, 2020

  tpc.png

  உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது.  இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

  இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும்  தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதுடன், இதை குறுகியகால, இடைக்கால, நீண்டகால கண்ணோட்டங்களுடன் செயற்படுத்த வேண்டியுமிருக்கிறது.

  மரத்தினாலான கோடரிப்பிடியை கையகப்படுத்தியே மரங்கள் வெட்டப்படுகின்றன. அதேபோலவே இந்த எதிரி வைரசும் எம் கலங்களுக்குள்  புகுந்து எமது சொந்தக் கலங்களையே தம்வசப்படுத்தி எம் உடலினுள் பெருக்கெடுத்து எம்மை அழிக்கத் துணிந்து நிற்கிறது.  இதுவே பொதுவாக காலம் காலமாக எதிரிகளின் தந்திரோபாயமாகவும் இருந்து வருகிறது.

  எனவே நாம் பிறகாரணிகளாலும் சூழ்நிலைகளாலும் நோய்க்கிருமிகளாலும் கையகப்படுத்தப்பட்டு  தாக்கங்களையும் அழிவுகளையும் சந்திக்காமல் தடுப்பதற்கு எம்மைத் தயார்படுத்தும் திட்டங்களில்  ஒன்றுபடவேண்டிய அவசியம்  உணரப்படுகிறது.  ஒன்றுபட்டு நாம் தனிமனிதர்களாகவும் சமூகமாகவும்  தேசமாகவும் பல கடமைகளை அமைதியாகவும் ஆர்ப்பரிப்பு இல்லாமலும் நிறைவேற்றவேண்டிய தேவையிருக்கிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது நாம் சமூகத்திலே தனித்தனி மனிதர்களாக பிரிந்து இயங்குவது என்று அர்த்தப்படாது. உண்மையிலேயே நாம் ஒற்றுமையான சமூகமாக தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது எழுந்திருக்கிறது.

  பொருளாதார நெருக்கடிகள், தனிமைப்பட்டுப் போனது போல உணரும் மனத்தாக்கங்கள், கொரோனா தாக்கங்கள், கொரோனாவை பூச்சாண்டியாக காட்டி நிகழும் அராஜகங்கள், அடிக்கடி  வந்து போகும் புலம்பெயர் உறவுகளின்  தம் சொந்தங்களிடம்  வந்து போக முடியாத நிலை, அதன் ஏக்கங்கள்,  பொது நிகழ்வுகளில் கூடச் சந்தித்து  மனம் ஆறமுடியாத உள நெருக்கீடுகள்,  உதவிக்கு யாருமற்ற முதியோர்… எனப் பல்வேறுபட்ட சவால்களை திடீரென எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே அயலவர்களினதும் ஊரவர்களினதும் ஒன்றிணைவும் ஒருங்கிணைந்த  செயற்பாடுகளும்  மேம்படுத்தப்படவேண்டிய தேவை உணரப்படுகிறது.

  வேலையிழப்பு, வருவாய் குறைதல், புலம்பெயர் தேசங்களிலிருந்து தத்தம் குடும்பங்களுக்கு கிடைத்துவரும் வருவாய் குறைவு, அதிகரித்த செலவினங்கள் போன்றவற்றால் எமக்கு ஏற்பட்டிருக்கும், ஏற்படப்போகும் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கு தனிநபர்களாகவும் குடும்பமாகவும் சமூகமாகவும், தமிழ்த் தேசமாகவும் நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதற்குப் பல துறைசார் வல்லுநர்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வழங்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.

  குடிவகை பாவனை, புகைத்தல் போன்றவற்றிற்கான  செலவீனங்களை நிறுத்துதல், ஆடம்பர செலவீனங்களைக் குறைத்தல், உள்ளூர் உற்பத்தி முயற்சிகளை  ஊக்கப்படுத்துதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல்,   தற்சார்புப் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் கட்டியெழுப்புதல், உள்ளூரிலிருந்தோ புலம்பெயர் தேசங்களிலிருந்தோ  கிடைக்கும் வருவாய்களை திட்டமிட்டு செலவு செய்தல், பிறரின் நல்ல முன் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்துதல், அயலவர்கள், ஊரவர்களின் முயற்சிகளை சரியான திசையில் நெறிப்படுத்துதல் போன்ற சில ஆரம்ப முயற்சிகள் பயனுடையதாக அமையும்.

  எமது கல்வி நிலையை தக்கவைத்து மேம்படுத்துவதற்கு கற்பித்தல், கற்றல் பொறிமுறைகளை சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றியமைக்கும் முயற்சிகள் பல ஆரம்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மெருகேற்றப்படுவதுடன் அனைத்து மட்ட மக்களையும் சென்றடையும் வழிவகைகளையும் செயற்படுத்த வேண்டும்.

  நாம் பின்னடைந்துவிட்டோம், தளர்ந்து விட்டோம், சூழ்நிலைகள் சரியில்லை எனக் கருதி எமது அரசியல் அபிலாசைகளைக் கைவிடுவது அர்த்தமற்றதும் ஆபத்தானதுமாகும். இந்தச் சின்னஞ்சிறு கொரோனா வைரஸ் எமக்கு ஒரு பாடத்தைக் கற்பித்து நிற்கிறது. ஒரு சொந்தமான கட்டமைப்போ, கலமோ இல்லாத இந்த வைரஸ் பல கண்டங்கள் தாண்டி பலரைத் தன் கையகப்படுத்தி, சுய விளம்பரமோ, சுய அறிமுகமோ இல்லாமல் செயலில் இறங்கி  ஒரு குறுகிய காலத்திலே  உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. தூய்மை இல்லாது, கூட்டம் சேருவதை மனித குலத்தின் பெரும் பலவீனம் என்பதை துல்லியமாக அறிந்து திட்டமிட்டு அதனூடாக தனது பரம்பலை விஸ்தரித்து வருகிறது.

  தொற்றுநோய்களைத் திட்டமிட்டு வெற்றி கொண்டு விட்டோம்.  இனி எமது இலக்கு தொற்றாத நோய்கள் என்று கொக்கரித்த உலகின் உச்சந்தலையிலே இந்தச் சின்னஞ்சிறு வைரஸ்  ஓங்கி அறைந்திருக்கிறது. இந்த நுண்ணிய வைரஸின் அசுர வல்லமையில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

  அன்று தொட்டு இருந்து வரும் எமது கலாசார விழுமியங்கள் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எமக்கு உறுதுணையாக அமையும்.  வெளியே சென்று கை, கால் அலம்பி, கழுவி வீட்டினுள் செல்லுதல், மரணவீடு, வைத்தியசாலைகள் அல்லது சனக்கூட்டமான இடங்களுக்கு சென்றால் குளித்து விட்டு வீட்டினுள் செல்லுதல், மற்றவர்களை வணக்கம் சொல்லி வரவேற்றல், வீட்டில் சமைத்த உணவை உண்ணுதல், எமது பாரம்பரிய உணவு வகைகளை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தல் போன்ற சாதாரண நடவடிக்கைகள் எம்மைக் காக்க உறுதுணையாக அமையும்.

  அத்துடன் நீண்டகாலமாக பல இக்கட்டான சூழ்நிலைகளினூடாக பயணித்த அனுபவம் இந்த அசாதாரண சூழ்நிலையை வெற்றிகொள்ள எமக்குக் கைகொடுக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் முகம் தெரிந்த, முகம் தெரியாத பல தனி நபர்களும் குழுக்களும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தேர்தல்அரசியல் கடந்த ஒற்றுமை இன்னும் வலுப்பெறவேண்டியது இன்றைய தேவையாகி நிற்கிறது. இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள, வெற்றிகொள்ள உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தமிழ் மக்கள் பேரவை எதிர்பார்த்து நிற்கிறது. உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tpcmediasl@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி பங்களிக்கவும். #வெற்றி  #தமிழ்மக்கள்பேரவை  #கொவிட்19  #சுகாதார
   

  http://globaltamilnews.net/2020/144158/