கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,358
 • Joined

 • Days Won

  73

Posts posted by கிருபன்


 1. கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்?

  கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்?DIPTENDU DUTTA / Getty

  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தரவுகள் காட்டுகின்றன. எனினும் ஊரடங்கை இந்திய அரசு தளர்த்தியிருப்பது ஏன்?

  இதுகுறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் அபர்ணா அல்லூரி.

  கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது.

  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜுன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தரைவழி போக்குவரத்து, விமான போக்குவரத்து எல்லாம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுவிட்டது.

  பல தொழில்களும், பணியிடங்களும் ஏற்கனவே திறக்கப்பட்டுதான் இருக்கின்றன. கட்டுமானத் தொழில் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது. மார்கெட்டுகளில் எப்போதும் போல மக்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தளங்கள் அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிடும். 

  கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்?Hindustan Times

  ஆனால், கொரோனா தொற்றின் வீரியம் ஒருபக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா ஊரடங்கை முதல் முறையாக அறிவித்தபோது இங்கு 519 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. 10 பேர் உயிரிழந்து இருந்தனர். 

  ஆனால், தற்போது குறைந்தது 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

  அப்படி இருக்கையில், ஊரடங்கைத் தளர்த்தி தொழில்களைத் தொடங்க இந்தியா அனுமதித்தது ஏன்?

  ஊரடங்கை இதற்கும் மேல் நீட்டிப்பது கடினம்

  "இது நிச்சயம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம்" என்கிறார் தொற்று நோய் குறித்த ஆய்வாளரும் பேராசியருமான கௌதம் மேனன்.

  "ஒரு கட்டத்திற்கு மேல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மனநல ரீதியாகவும் ஊரடங்கை நீட்டிப்பது கடினம்" என்று அவர் கூறுகிறார்.

  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து, பேரிழப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில் பலரும் இங்கு தினக்கூலியாகவோ அல்லது அதற்கு நிகரான வேலைகளிலோ இருக்கிறார்கள். இதனால் பலரும் தங்களது வாழ்வாதரத்தை இழந்தனர். அதோடு பல்வேறு தொழில்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கார் உற்பத்தியாளர்களில் இருந்து, ஆடை நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை அனைத்து தொழில்களும் சரிவை சந்தித்துள்ளன. 

  பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது.

  ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்றும் ஊரடங்கை மேலும் நீட்டித்தால் இந்தியா பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார். 

  பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது.Getty Images

  இந்தியா கொரோனா தொற்று பாதிப்புகளோடு, பொருளாதாரத்தையும் சேர்த்து சமாளிக்க வேண்டும் என்று உலகளாவிய ஆலோசனை அமைப்பான மெக்கின்ஸி கருத்து தெரிவித்திருந்தது.

  "இந்த ஊரடங்கின் முக்கிய நோக்கமே இந்தியாவில் கொரோனா உச்சத்தை தள்ளிப்போட்டு, அதற்குள் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதே ஆகும். இதனால், கொரோனா உச்சம் அடையும் போது அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கும். இந்த நோக்கம் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது" என்கிறார் பொது சுகாதார வல்லுநரான மருத்துவர் என். தேவதாசன். 

  கடந்த 2 மாதங்களில் அரங்கங்கள், பள்ளிகள் மற்றும் ரயில் பெட்டிகள் கூட தனிமைப்படுத்தப்படும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு கவசங்களின் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

  மாறிக் கொண்டிருக்கும் நிலைமை

  இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஒருசில வாரங்களில் குறைவான பாதிப்பு மட்டுமே இருந்தது வல்லுநர்களுக்கு புரியாத ஒன்றாக இருந்தது.

  அடர்த்தியான மக்கள் தொகை, நிதி பற்றாக்குறையில் இருக்கும் பொது சுகாதார மருத்துவமனைகள் இருந்த போதிலும், அதிகப்படியான தொற்று பாதிப்போ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. கொரோனா பரிசோதனை விகிதம் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து கேள்விகளுக்குமான பதிலை இது அளிக்கவில்லை. 

  மாறிக் கொண்டிருக்கும் நிலைமைGetty Images

  கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாகும் முன் ஊரடங்கை அமல்படுத்தும் தேவை அரசுக்கு ஏற்பட்டது. 

  ஆனால், நிலைமை அதன்பிறகு மாறிவிட்டது. 

  "மேலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களாக இருப்பார்கள்" என தேவதாசன் தெரிவிக்கிறார். 

  இந்தியாவில் ஊரடங்கை தளர்த்தலாம் என்று அரசாங்கத்திற்கு நம்பிக்கை அளித்த விஷயம் எது?

  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், அவற்றில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்பட வேண்டிய அளவிற்கு தீவிர நோயாளிகள் குறைவு. மேலும் மும்பை நகரத்தை தவிர வேறெங்கும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை. 

  இந்திய அரசு அளிக்கும் தரவுகள், கொரேனாவால் மற்ற நாடுகளை விட ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறுகிறது. 

  உதாரணமாக, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளதாக அரசு கூறுகிறது. இது உலக அளவில் ஒப்பிட குறைவானதாகும். 

  ஆனால், சிலர் இதை ஒப்புக்கொள்ளவில்லை. 

  கொரோனா இறப்புகளை கணக்கிட அல்லது பதிவு செய்ய இந்தியா சரியான முறையை பின்பற்றவில்லை. கொரோனாவால் ஏற்படும் அனைத்து உயிரிழப்புகள் பதிவாவது கிடையாது என்கிறார் பிரபல தொற்று நோய் நிபுணரான மருத்துவர் ஜேகப் ஜான்.

  இந்தியாவில் ஊரடங்கை தளர்த்தலாம் என்று அரசாங்கத்திற்கு நம்பிக்கை அளித்த விஷயம் எது?Getty Images

  மேலும் கொரோனா தொற்றுப் பரவலைக் காட்டும் வரைகோட்டை தட்டையாக்க வேண்டும் என்று இல்லாமல், கொரோனா இறப்பு விகிதத்தை காட்டும் வரைகோட்டைத் தட்டையாக்குவதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

  இந்நிலையில், ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று நம்பும் மருத்துவ வல்லுநரான ஜான், ஒழுங்கற்ற முறையில் இருந்த ஊரடங்கினால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த அரசு அதை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறுகிறார். 

  கொரோனா உச்சத்தை அடையும்போது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

  சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக நம்பும் மருத்துவர் மேனன், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டதாக கூறுகிறார்.

  "வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் பரப்புவதை தடுப்பதன் மூலம் உள்நாட்டில் இத்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். ஆனால், விமான நிலையங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். 

  தற்போது உள்ளூர் அளவில் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டிய நேரம். 

   

  இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு வேறுபடுவதால், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும், தளர்த்துவதற்கான முடிவை மாநில அரசுகளே எடுக்குமாறு மத்திய அரசு கூறிவிட்டது. 

  நாட்டின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் இருப்பது மகாராஷ்டிராவில்தான். 

  அதோடு தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. 

  ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பிவரும் காரணங்களால் பிகார் போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. 

  "முதலில் கொரோனா தொற்று பாதிப்புகள் பெரும்பாலும் நகரங்களில்தான் இருந்தது. இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால், நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களுக்கு நாம் வைரஸ் தொற்றை அனுப்பி வைக்கிறோம்" என்று தேவதாசன் கூறுகிறார். 

  இந்த ஊரடங்கால் 3 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், 71,000 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறுகிறது. ஆனால், இனி என்ன நடக்கும் என்பதை நம்மால் சரியாக கூற முடியாது.

  Presentational grey line

  Corona Virus: Is enough testing done in India? What is the real situation?

  Presentational grey line

  ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

  எவ்வளவு நாள் ஊரடங்கை நீட்டிக்க முடியும் அல்லது காவலர்கள் கண்காணிக்க முடியும்.

  "மக்கள் இருக்கும் சூழல்தான் எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பல இடங்களில் அது முடியாமல் போகிறது. கூட்டுக்குடும்பங்களில் வாழும் நபர்கள், குடிசைப்பகுதிகள், எப்போதும் கூட்டமாக இருக்கும் சந்தைகள், தெருக்கள், அல்லது வழிபாட்டுத்தளங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினமாகிறது" என்கிறார் மேனன்.

  கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட காலம் இருக்கப்போகிறது. நாம் அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மக்கள் அதோடு வாழக் கற்றுக் கொள்வதே இதற்கான தீர்வாக இருக்கும்

   

  https://www.bbc.com/tamil/india-52869174


 2. யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வழமைக்குத் திரும்பியது

  spacer.png

  கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  இதேவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு, திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது காலை 6- 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள பொதுச்சந்தைகள் அனைத்தும் இன்றைய தினம் மீள திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)

   

  http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-திருநெல்வேலி-பொதுச/


 3. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

  நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

  ” கொரோனா வைரஸ் பிரச்சினையால் தகுதியான முறையில் இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவ்விடயம் கவலையளித்தாலும் நாட்டின் நலனும், பாதுகாப்பும் எமக்கு முக்கியம். அப்பா இருந்திருந்தால் அவரும் இதனையே ஆசைப்பட்டிருப்பார்.

  எனவே, கொரோனா பிரச்சினை எல்லாம் முடிவடைந்ததும் நீங்கள் எல்லாம் எதிர்ப்பார்க்கும் வகையில் ஒரு மாபெரும் நிகழ்வு கட்டாயம் நடத்தப்படும்.

  மலையக அபிவிருத்தி சம்பந்தமாக எனது தந்தை கனவுகள் கண்டார். அந்த கனவுகளை நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கின்றோம். குறிப்பாக கல்விக்கு முன்னுரிமை வழங்கினார். மலையக பல்கலைக்கழகம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தியிருந்தோம். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக அது நிச்சயம் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

  எமது சமூகம் ‘கெத்தாக’ வாழும் வகையில் வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படும். அப்பா மரணிக்குள் நாளன்றுகூட ஆயிரம் ரூபா பற்றிதான் கதைக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் சந்தோசமாகவே வீடு திரும்பினோம். வீட்டில் நானும், தந்தையும் சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்.

  ஜீவன் என்றதும் திரும்பி பார்த்ததும், பெருமூச்சிவிட்டார். அவரை சென்று பிடித்தேன். அவர் கண்களில் முதற்தடவையாக ‘என் மக்களை விட்டு போகின்றேன்’ என்ற பயம் தெரிந்தது. நானும், அக்காவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தோம். இரண்டொரு நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது.

  26 வயதில் என் தந்தையை பிரிவேன் என தெரிந்திருந்தால் நான் தூங்கியிருக்கவே மாட்டேன். எனக்கு செந்தமிழ் பேசவராது. இது பற்றி அப்பாவிடம் சொன்னேன். குடும்ப உறுப்பினருடன் பேசுவதுபோல் மக்களிடம் கதை, ஏற்றுக்கொள்வார்கள் என்றார். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. அதற்குள் போய்விட்டார்.

  எனது அனுபவம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். தந்தையிடம் கேட்டேன். முதுகில் குத்துவதற்குதான் அனுபவம்தேவை, சேவை செய்ய நல்ல மனது இருந்தால் போதும் என்றார்.

  அந்த நம்பிக்கையில்தான் இவரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு என ஜீவன் தொண்டமான் ஆகிய நான் உறுதியளிக்கின்றேன்.

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிட்டது என சிலர் நினைக்கின்றனர். இருட்ட பார்த்து பயப்படவேண்டாம். ஏனெனில் காலையில் சூரியன் உதிக்கும். சேவல் கட்டாயம் கூவும். – என்றார்.
   

  http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தொழிலாளர்-காங்கி-6/


 4. சட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை

  May 31, 2020

  mallakam22.jpg

  சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

  மல்லாகம் சட்டத்தரணி ஒருவர், தனது கட்சிக்காரரிடம் நீதிமன்றில் சொந்தப் பிணைக்கு பண கட்டவேண்டும் என்று தெரிவித்து மேலதிகமாகப் பணம் அறவீடு செய்தார் என்ற விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

  அவ்வேளை அந்த விவகாரத்தில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் க.சுகாஷ் மீது குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் தனிநபர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதுதொடர்பில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக சட்டத்தரணி க.சுகாஷ், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

  இந்த நிலையில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய அதன் தலைவர் சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

  சமூக வலைத்தளங்களில் 28.05.2020 திகதி எமது சங்கத்தின் செயலாளர் கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது தொடர்பிலும் சங்கம் கவலை கொள்கிறது.

  எந்தவொரு சட்டத்தரணியினது பெயர் குறிப்பிட்டும் எந்தவொரு முறைப்பாடும் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இதுவரை கிடைக்காத நிலையிலும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது கவலையானதும் கண்டித்தக்கதுமான செயலாகும்.

  மேற்படி உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பான விடயப்பொருள் தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆழமாக ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறான ஏதேனும் விடயம் வெளிப்பட்டால் எமது சங்கம் அதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராகவுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது – என்றுள்ளது. #சட்டத்தரணி  #மோசடி  #சட்டத்தரணிகள்சங்கம்  #கவலை
   

  http://globaltamilnews.net/2020/144067/


 5. 4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  சுமந்திரனின் ஆதரவாளர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகு ஒரு காலம் சுமந்திரன் தங்களை நல்ல நிலைக்கு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச்  சமூகத்துக்குள்ளும் அரசு அலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்கு உரிய பதவிகளைத் தருவார் என்று நம்பிக்  காத்திருக்கும் ஒரு தொகை வளர்ந்து வருகிறது

  அடிபணிவு அரசியல்தலைமையால் எல்லா மட்டத்திலும் ஒத்தோடிகளும், சுயநலம் படைத்தவர்களும் பெருகிவிட்டார்கள். “அலுவல்” பார்த்து தாங்கள் அடையவிரும்பும் உச்சத்திற்குத்தான் அரசியல் பாவிக்கப்படுகின்றது.

  சமூக அக்கறை இல்லாத தலைமையால் அடிவருடிகளையும், விசுவாசிகளையும்தான் பெருக்கமுடியும்.

  தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப பலமான கூட்டணி உருவாகும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை. எனவே சுமந்திரன் ஐயா கூறியபடி அவர் ஒரு இலட்சம் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருக்காது.

  • Like 1

 6. 36 minutes ago, பையன்26 said:

  , த‌மிழீழ‌ம் ம‌ல‌ருவில் திராவிட‌ க‌ட்சிக‌ளின்  ஆத‌ர‌வு இருந்தா தான் ம‌ல‌ரும் என்று மேல‌ எழுதி இருக்கிறீங்க‌ள் / 

  பையன், நீங்கள் அல்லது மற்றவர்கள் வைக்கும் கருத்துக்களால் நான் கோபப்படுவதில்லை. அதையெல்லாம் தாண்டிப் பல வருடங்களாகிவிட்டது. 

  நிற்க, நான் எழுதியது.

  Quote

  தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

  இதில் தமிழீழம் மலரும் என்று நான் சொல்லவில்லை. தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

  தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.


 7. 53 minutes ago, பையன்26 said:

  நீங்க‌ள் புக‌ழ்ந்து த‌ள்ளும் ஆட்க‌ள் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 20வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் ஆட்சியை பிடிச்ச‌வை , பெரும் த‌லைவ‌ர் விட்ட‌ பிழை கூட‌ இந்திய‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌து , அத‌ அவ‌ர் செய்யாம‌ல் த‌மிழ‌க‌ ந‌ல‌னின் ம‌ட்டும் அக்க‌றை காட்டி இருக்க‌னும் பெரும் த‌லைவ‌ர் இற‌க்கும் வ‌ர‌ முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருப்பார்

  புகழ்ந்து தள்ளியதற்கு ஆதாரம் இருக்கா, பையன்?

  இரு கோடுகள் தத்துவம் நல்லாவே தெரியும்😁. சீமான் என்ற கோட்டைக் கீறினால் அதுக்கு மேல் வைகோ, கருணா, கேபி, ஸ்டாலின், திருக்குவளை மு.க., திருமா, என்று பல கோடுகளைக் கீறுகின்றீர்கள். அந்த விசுவாசம் புல்லரிக்க வைக்கின்றது!

   

   


 8. 32 minutes ago, Maruthankerny said:

  அதில் தவறுகள் இருப்பதாக உணணர்ந்தால் (ஒரு வேளை இருக்கவும் கூடும்) ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வாருங்கள் விவாதிப்போம்.  

  ஆரோக்கியமான கருத்தாடல்?

  தலைப்பின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் வன்னிக்குப் போய் விருந்து சாப்பிட்டதையும்,  துவக்கு சுட்டுப் பழகியதையும் பற்றி பத்து நிமிடங்கள் சொல்கின்றாரே. அதில் தவறுகள் எதையும் கண்டுபிடிக்காதவர்களுடன் ஆரோக்கியமான கருத்தாடல் சாத்தியமேயில்லை.😀

  • Like 1

 9. தமிழகம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள்-முழு விவரம்!

  spacer.png

  தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

   

  இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 31) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

  சில தளர்வுகளையும், தடைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,

  எதற்கெல்லாம் தடைகள்

  *வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். .· நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

  *தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

   

  *வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

  *சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

  கட்டுப்பாடுகள்

  இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

  இ-பாஸ் முறை

  · வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

  எவற்றிற்கு அனுமதி

  பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது

  *தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

   

  *அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

  *வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

  * 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

   

  *டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

  * மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

  *வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.

  *ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

  * முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்குமட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது

  *தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  *தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

  *அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

  *வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

  *டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

  *மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

  *மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

  * அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

  *வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  * ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

  *பொது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

  *தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


  https://minnambalam.com/politics/2020/05/31/24/tamilnadu-lockdown-extented-june-30

   


 10. சுமந்திரனின் வெற்றியும் தோல்வியும்

  -கபில்

  கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கடந்தும், தமிழர் தரப்பு அரசியலில், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டிருப்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

  அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியானது, தமிழரின் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறி விட்டார் என்று தமிழ் அரசியல் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

  சுமந்திரன், அவ்வாறு கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி, அவரது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கருத்து சுமந்திரனுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது.

  சுமந்திரனின் ஆட்கள் என்று கூறப்பட்டவர்கள் கூட, இந்தக் கருத்தினால் சினமடைந்தனர். அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும், தவறான மொழியாக்கத்துடன், தமது செவ்வி தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டு விட்டதாக சுமந்திரன் அதனை நியாயப்படுத்திக் கொண்டார்.

  அது மாத்திரமன்றி, தவறான நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்வியை, சரியானமுறையில் அணுகியிருக்கிறார் சுமந்திரன் என்று சான்றிதழ் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

  எவ்வாறாயினும், அந்தச் செவ்வியில் ஆயுதப் போராட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூற முயன்றது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும்- தமிழர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டதை, அந்தச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே, பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

  கொரோனாவுக்குப் பின்னர் தமிழ் அரசியல் பரப்பில் சூட்டைக் கிளப்பி விட்ட இந்த விவகாரம் இப்போது சற்று அடங்கி விட்டது.

  சுமந்திரனும் இப்போது கொழும்பில் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும், வழக்கில் கவனம் செலுத்தி வருகிறார். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தான் முக்கியமாக வாதிட்டு வருகிறார்.

  முதலாவதாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சரித்த குணரத்னவின் சார்பில், அவர் முன்னிலையாகிறார். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா - இல்லையா என்ற பரிசீலனையே தற்போது உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாமின் முன்பாக நடந்து வருகிறது.

  கடந்த 18ஆம் திகதி தொடங்கிய இந்தப் பரிசீலனை, இந்தப் பத்தி எழுதப்படும் போது, இரண்டாவது வாரமாகவும், நடந்து கொண்டிருக்கிறது. பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதா என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும்.

  நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தலை பிற்போட வேண்டும், நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினையை கையாளும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.

  எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த மனுக்களில், சட்டத்தரணி சுமந்திரனின் வாதங்கள் மிகமுக்கியமானவை. ஆனால், அவர் இந்த மனுக்கள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கத்தில் இருந்து திடீரென விலகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உத்தரவிட்டார்.

  அதற்கு எதிராக அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் முதலில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் சுமந்திரன் தான் மிக முக்கியமாக வாதிட்டிருந்தார்.

  நாடாளுமன்றத்தைக் கலைத்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என்று அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

  அந்த தீர்ப்பு சுமந்திரனுக்கு கொழும்பு அரசியலில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்திருந்தது. அதேவேளை, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காகத் தான் வாதாடுகிறார், ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்கே வழக்காடினார் என்ற குற்றச்சாட்டுகளும் தமிழ் அரசியல் பரப்பில் முன்வைக்கப்பட்டன.

  அண்மையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிணை கோரி, நீதிமன்றத்தில் சுமந்திரன் முன்வைத்த வாதங்களும் தமிழ் அரசியல்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

  அவர் தனது சட்டப் புலமையை, தமிழ் மக்களின் நலனுக்காக , அவர்களின் உரிமைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே கூறப்பட்டு வருகின்றன.

  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, வடக்கு, கிழக்கு இணைப்புக்காக, ஏன் அவர் இதனைப் பயன்படுத்த வில்லை என்று, தமிழ் மக்களின் உணர்வுபூர்வ பிரச்சினைகளுடன் சுமந்திரனை தொடர்புபடுத்தி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

  இவ்வாறானதொரு நிலையில், தமது கட்சியினராலேயே சுமந்திரன் பெரிதும் கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகியிருக்கும் சூழலில் தான், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீது அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

  இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில் அளிக்கப்படப் போகின்ற தீர்ப்பு, சுமந்திரனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

  இதில் வெற்றி பெற்றால், 2018 அரசியல் குழப்பத்தை முடித்து வைத்த வரலாற்றுத் தீர்ப்பு எந்தளவுக்கு சுமந்திரனுக்கு புகழைத் தேடிக் கொடுத்ததோ, அதுபோன்றதொரு புகழை அவருக்கு கொடுக்கக் கூடும். உயர்நீதிமன்றத்தில் 7 மனுதாரர்கள் சார்பில் வேவ்வேறு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தாலும், சுமந்திரனின் வாதமே பிரதானமாக இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கக் கூடிய புகழும் சரி, விமர்சனங்களும் சரி சுமந்திரனுக்கானதாகவே இருக்கப் போகிறது.

  இந்த தீர்ப்பில் வெற்றியைப் பெற்றாலும் கூட, தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனின் வாதத்திறமை போற்றப்படுமே தவிர, அவர் தெற்கின் அரசியல் சக்திகளுக்காகத் தான் வாதாடுகிறார் என்ற விமர்சனங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.

  அதேவேளை இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டால், அதுவும் கூட சுமந்திரனின் தோல்வியாகத் தான் தமிழ் அரசியல் பரப்பில் பிரசாரப்படுத்தப்படும்.

  எதிர்க்கட்சிகளின் தோல்வியாக அது பார்க்கப்படுவதை விட, சுமந்திரனின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். ஏனென்றால் அவர் அரசியலில் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவராக பெரும்பாலானவர்களாக பார்க்கப்படுகிறார்.

  அவ்வாறான ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தோல்வியடையும் போது கூட, அரசியல்வாதியின் தோல்வியாகத் தான் பூதாகாரப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

  எனவே, இந்த மனுக்களைப் பொறுத்தவரையில் சுமந்திரனுக்கு மிக முக்கியமானவை. உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். ஆனால், அது தமிழ் அரசியலில் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

   

  https://www.virakesari.lk/article/83109


 11. தமிழர் அரசியல் மிகமோசமாக பின்னடைவு : கலாநிதி தயான் ஜயத்திலகவுடனான கருத்துப்பகிர்வு

  (தொகுப்பு:- ஆர்.ராம்)

   

  தமிழின விடுதலைக்கான போராட்டம், சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்டு, ஆயுதரீதியில் உச்சமடைந்து அது மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகின்ற நிலையில் தற்போது போருமில்லை சமாதமுமில்லை என்றவொரு சூன்யமான காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

  thayan-jayathilaka.jpg

  இக்காலத்தில் நீதிக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தியதொரு போக்கும்,  ஆயுதவிடுதலையை அரவணைத்தொருதரப்பும் அதற்கெதிரான மனநிலையுடை பிறிதொருதரப்பும் பரஸ்பர விமர்சனங்களை முன்னெடுக்கின்றதொரு போக்குமே தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் காணப்படுகின்றமை வெளிப்படை. இத்தகையதொரு நிலையில்ரூபவ் உள்நாட்டிலும் பிராந்திய, பூகோளத்திலும் அரசியல் சூழமைவுகள் மாறியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன?

  அதற்கான அணுகுமுறைகள் யாவை? என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் அரசியல் ஆய்வாளருமான இராதந்திரி.கலாநிதி தயான் ஜயத்திலகவின் வீரகேசரி வாரவெளியீட்டுடனான கருத்துப்பகிர்வு வருமாறு,

  உலகில் சிறுபான்மை சமூகங்கள் எத்தகைய அரசியல், பொருளாதார அணுகமுறைகளைச் செய்துள்ளன என்ற அனுபவத்தினை தமிழத்தரப்பு முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

  அடுத்ததாக, தமிழர் அரசியல் தரப்புக்கள் இதுகால வரையிலான அரசியல் செயற்பாடுகளில் எவ்வாறான பாரிய தவறுகளை இழத்துள்ளன என்பதை சீர்தூக்கிப் பார்த்து சுயபரிசீலனை செய்ய வேண்டியதும் இன்றியமையாதவொன்றாகின்றது.

  அண்மையில் சம்பந்தன், சுமந்திரனோடு இணைந்ததாக தமிழினக் குழுமத்திற்குள் எழுந்த வாதப்பிரதிவாதங்கள் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய தவறுகளை திருத்துவதற்கோ, சீர்தூக்கிப்பார்ப்பதற்கோ விரும்பாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அக்குழுமத்திற்குள் காணப்படுகின்றார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது.

  உலகில் வடக்கு அயர்லாந்தில் செயற்பட்ட ‘ஷிங்பேன்’ அமைப்பானது தனது அரசியல் செயற்பாட்டு பயணத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அமைப்பு எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது என்று பார்த்தோமாக இருந்தால் அயர்லாந்து குடியரசில் அரச அதிகாரங்களை வசப்படுத்தக்கூடியளவு தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. உயர்ந்த கல்வி அறிவும் ஆற்றலும் கொண்ட தமிழ் தரப்பினரால் அவ்வாறானதொரு நிலையை அடைய முடியாது போனதேன் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

  செய்யக்கூடாதவற்றை செவ்வனே செய்தார்கள்

  இனவிடுதலைக்காக, அதிகாரங்களுக்காக போராடும் உலகில் எந்தவொரு நாட்டினது இனக்குழுவினரும் தமக்கு அதிகாரங்களைப் பெற்றுதருவதற்கான கரிசனையுடன் செயற்படும் அயல்நாட்டிற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு விளைவார்களே தவிர, கரிசனையுடன் செயற்படும் அயல்நாட்டின் படைகளுக்கு எதிராக போர் புரியமாட்டார்கள்.

  ஆனால் துரதிஷ்டவசமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அவ்வாறு செயற்பட்டார்கள். அவர்கள் அவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டார்கள் என்பதற்கு அப்பால் அவர்களின் செயற்பாட்டிற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையானோரும் ஆதரவை நல்கியுள்ளார்கள்.

  அக்காலத்தில் இருந்த சூழலில் அவ்வாறு தமிழ் மக்கள் ஆதரவினை நல்கியிருந்தாலும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரையில் அன்று விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட விதம் தவறு என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையே தற்போதும் நீடிக்கின்றது.

  அதுமட்டுமன்றி எந்தவொரு விடுதலை அமைப்பும் செய்வதற்கு தயங்கும் செயற்பாட்டை விடுதலைப்புலிகள் செய்தனர். அதாவது, தமது இனத்திற்காக கரிசனையுடன் செயற்பட்ட அயல்நாட்டுத் தலைவரை அவர்கள் படுகொலை செய்தார்கள். அதனைக்கூட தமிழ்த் தரப்பினர் தற்போது வரையில் தவறு என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

  விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தகாலத்தில் 2003 ஏப்ரலில் டோக்கியோவில்  உதவியளிக்கும் மாநாடு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அதனை விடுதலைப்புலிகள் நிராகரித்துவிட்டார்கள். உலகில் வேறெந்த கொரில்லா இயக்கத்திற்கு அவ்வாறான வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக அந்த மாநாட்டில் பங்கேற்றிக்கும். ஆனால் அம்மாநாட்டை விடுதலைப்புலிகள் நிராகரித்தபோதும் அதன் ஆழத்தினை புரியாது தமிழ் மக்களும் ஆதரவளித்தார்கள்.

  விடுதலைப்புலிகள் அமைப்பின் நினைவலைகளை மீள்நினைவுபடுத்திக்கொண்டும் அரவணைத்துக்கொண்டும் இருப்பதானது தமிழ் மக்களின் தேசிய தேவைப்பாடுகளுக்கு மிகப்பெரும் பாதகமான நிலைமைகளேயே ஏற்படுத்துகின்றனது. சர்வதேசத்தில் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் சாதமான நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாடுகள் காணப்பட்டன. இந்த நிலைமைகள், தமிழர்களின் பிரச்சினைகள் மீதான பின்னடைவுகளுக்கு வித்திட்டுள்ளன.

  ஷிங்பேன் அமைப்பு இந்த விடயத்தில் சிறந்த மூலோபயத்துடன் செயற்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் கடந்த காலவிடயங்களை பேசிக்கொண்டிருக்காதுரூபவ் அவற்றைக் கடந்து முன்னோக்கி பயணித்துள்ளார்கள்.

  கைக்கு வந்த அதிகாரமும் தவறவிடப்பட்ட வாய்ப்பும்

  விடுதலையைக் கோரிநின்ற தரப்புக்கள் தமக்கு கிடைக்கின்ற முதல் அதிகாரத்தினை பயன்படுத்தி அரசியல்ரூபவ் பொருளாதார ரீதியாக தமது மாகாணத்தினையோ, பிராந்தியத்தினையோ தயார்ப்படுத்தலுக்கு உட்படுத்தவே முயற்சிகளை மேற்கொள்ளும். ஆனால்ரூபவ் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருந்த 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக அப்போதைய இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்திக்கு தமிழ் கட்சிகள் கடிதமெழுதிக்கொண்டிருந்தன.

  13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமையவுள்ள மகாண சபை முறைமையையும் அதன் அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே அதனை எவ்வாறு எதிர்க்க முடியும்.

  ஸ்கொட்லாந்துக்கு ஆரம்பத்தில் ஸ்கொட்டிஸ் ஓபிஸ் என்ற வெறுமே சிற்றறையொன்றே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஜனநாயக ரீதியில் பரந்துபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து இன்று தனிநாடாக பிரிந்து செல்வதற்கான கோரிக்கை எழுமளவிற்கு செயற்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு முறையை முன்னெடுத்திருக்கவில்லை.

  உச்சக்கோரிக்கையால் எஞ்சியது எதுமில்லை

  2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் புதிய அரசியலமைப்பு பற்றிய கவனம் செலுத்தப்பட்டபோது “புதிய அரசியலமைப்பினை கோராதீர்கள். அவ்வாறு புதிய அரசியலமைப்பினை மையப்படுத்திய கோரிக்கையை முன்வைப்பீர்களானால் சிங்கள, இனவாதம் தலைதூக்கும்” என்று தமிழ் தரப்பினரிடத்தில் கூறியிருந்தேன். அதுமட்டுமன்றி அக்கோரிக்கையால் “ஐக்கிய தேசியக் கட்சியும் செல்வாக்கு இழந்து சிதைந்துபோகும்” என்றும் கூறியிருந்தேன். ஆனால் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால் அதுவே தற்போது நடைபெற்றிருக்கின்றது.

  மேலும், புதிய அரசியலமைப்பினை உருவாக்குதல் என்ற பெயரில் எழுத்துருவடிவங்களை வழங்குவீர்களாக இருந்தால் 13ஆவது திருத்தச்சட்டமும் அரசியலமைப்பிலிருந்து மறைந்துபோய் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைமையே ஏற்படும் என்பதையும் எடுத்துக்கூறி தமிழ்த் தரப்பினருக்கு முன்னெச்சரிக்கை செய்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை பொருட்டாக கொண்டிருக்கவில்லை.

  தற்போதைய ஜனாதிபதியினதும், அவரைச் சூழ உள்ளவர்களினதும் மனநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவதானித்தால் 1984இல் ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு வருகைதந்து மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு எதிரானதாகவே உள்ளது. அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தம்ரூபவ் 13 ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமை ஆகியவற்றுக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளார்கள்.

  இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு அத்தரப்பினர் எவ்வாறு வந்தார்கள் என்பதை ஆழமாக கவனிக்க வேண்டியுள்ளது. தமிழின அரசியல் தரப்பினர் கிடைத்த அதிகாரங்களை முறையாக பயன்படுத்தாது அதற்கு மேலதிகமாக கோரிக்கை விடுத்து வந்ததன் பின்னணியிலேயே ஆகும்.

  தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடனான நிலைமைகளே எழுந்துள்ளன. அவ்வாறான போக்கு 1984இற்கு முன்னர் காணப்பட்ட சூழமைவுகளுக்குச் சென்றுவிட்டது.

  இந்தியாவாலும் இயலாது

   

  தற்போதைய சூழலில் அயல் நாடான இந்தியா இந்த விடயங்களில் அதிகளவு தலையீடுகளைச் செய்யும் என்று கருதமுடியாது. காரணம்ரூபவ் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கொள்கை அளவில் ஏகோபித்த போக்கு காணப்படுகின்றனது.

  இந்தியா கஷ்மீர் தொடர்பில் அவ்வாறான முடிவெடுக்கையில் எம்மால் ஏன் அதையொத்து சிந்திக்க முடியாது என்று கருதுபவர்களும் ஆட்சியினுள் இல்லாமில்லை. ஆகவே அடுத்த கட்டம் எவ்வாறு செல்லும் என்பதை கூறமுடியாது. நிலைமகள் பாரதூரமடையவும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.

  ஆகவே கிடைத்த அதிகாரங்களை தமிழ்த் தரப்பு முதலில் பாதுகாத்திருக்க வேண்டும். இலங்கையில் இந்தியாவின் 70ஆயிரம் போர்வீரர்கள் நிலைகொண்டிருந்தனர். ஆயுதவிடுதலைக்காக செயற்பட்ட பல தமிழ் இயக்கங்கள் காணப்பட்டன. வலுவான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது. இவை அனைத்துமே இருந்தும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியாது போய்விட்டது. அதுவே அதியுச்சமாக இருகின்றது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், விடுதலைப் புலிகள் தொடர்பிலும் நிலைப்பாட்டினை மாற்றாத வரையில் இந்தியாவின் ஆதரவினை பெறுவது தொடர்ந்தும் கடினமானதாகவே இருக்கும்.

  இரண்டில் ஒன்றே சாத்தியம்

  ஆனால்,  ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்த நிலையில், இந்தியப் படையினர் இல்லாத நிலையில், ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வினை பெறுவதாக கூறி புதிய அரசியலமைப்பினை மேற்கொள்ள முனைந்ததால், தற்போது சிங்கள அடிப்படைவாத ஆட்சியொன்று உருவாகியுள்ளது.

  அவ்வாறான ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தரப்பு “தக்கவைத்துக் கொள்ளும்” அரசியலையே முன்னெடுக்க முடியும். அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கே போராட வேண்டியிருக்கும். தமிழ்த் தரப்பினரால் முன்னோக்கிய நகர்த்தல் அரசியலை தொடரமுடியாது.

  விடுதலைப்புலிகள் அமைப்பினை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவுபடுத்திக்கொள்ளுவதால் வெளிநாடுகளின் ஆதரவு குறைவடைந்து கொண்டே செல்லும். உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆட்சி வீழ்ச்சியடைந்து புதிய ஆட்சி ஏற்பட்டாலும் தமிழர்களால் விடுதலைப்புலிகள் அமைப்பினை அரணவணைத்துக்கொண்டும் வலிந்த கோரிக்கைகளையும் ஏகநேரத்தில் முன்வைத்தால் எந்தவிதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.

  அதேபோன்று பொறுப்புக்கூறல் கோரிக்கையையும்ரூபவ் விடுதலைக் கோரிக்கையையும் ஏககாலத்தில் நகர்த்திச் செல்லமுடியாது. ஏற்கனவே நான் கூறிய ஷிங்பேன் அமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தினை கையிலெடுக்காது விடுதலைக் கோரிக்கையை மையப்படுத்தி இயலுமானவரையில் முன்னோக்கிச் சென்றிந்தது.

  தற்போதைய சூழலில் தமிழினம் சார்ந்த கலந்துரையாடல்கள் உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு மட்டங்களில் இடம்பெற்றுக்கொண்டிருகின்றன. அந்த இனத்தின் அடுத்த சந்ததியினர் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், விடுதலைப்புலிகளையும், அவர்கள் செயற்பாடுகளையும் அரவணைத்துச் செல்லும் போக்கினால் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ளும் நிலைக்குச் செல்ல முடியாதிருக்கின்றது.

  தமிழ் மக்கள் கல்வி அறிவுடைய புத்திஜீவிகளைக் கொண்ட இனக்குழுமத்தினர். ஆகவே அவர்கள் தற்போது தம்மினத்தின் நிலைமையை சீர்தூக்கி பார்த்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

  உடனடியான செயற்பாடுகள்

  என்னுடைய வாழ்நாளில் தமிழின அரசியல் இத்தகையதொரு பாரிய பின்னடைவில் இருந்திருக்கவில்லை. தற்போதைய நிலையில் தமிழர் தரப்பினர் தாமதமின்றி சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

  கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்வுடன் இணைந்து செயற்பட்டதைப்போலல்லாது, சஜித்பிரேமதாஸ,  மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இதர தென்னிலங்கை தரப்பினரின் ஆதரவினைப் பெறக்கூடியவாறான கொள்கை செயற்றிட்டத்தினை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

  அடுத்து ஆட்சியில் அமரவுள்ள அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் வரையறைகளுடனேயே செயற்படும். அதேநேரம்,  ரணில், மங்கள போன்றவர்களின் நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் மீண்டும் ஆட்சியில் அமரப்போவதுமில்லை.

  மேலும், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் எவ்வளவுதூரம் ஆதரவினை வழங்கினாலும் பாரியதொரு தாக்கம் ஏற்படாது. ஆகவே இந்தியாவின் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தமிழ்த் தரப்பு பெற வேண்டும்.

  விடுதலைப்புலிகள் இல்லாத தற்போதைய சூழலில் தமிழர் அரசியல் வரலாற்றினை மீட்டுப்பார்க்க வேண்டும். மறைந்த தலைவர்களையும்ரூபவ் செயலிழந்துபோன விடுதலை இயக்கங்களையும், பற்றிச் சிந்திக்க வேண்டும். 1984 இற்கு முன்னர் காணப்பட்டவாறு மீண்டும் இந்தியா உட்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனைத்து தரப்பினருடனும் புதிய அனுகுமுறையொன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான புத்திக்கூர்மை தமிழினத்திடம் உள்ளது.
   

  https://www.virakesari.lk/article/83099


 12. புவிசார் அரசியலும் தமிழர்களும்

  புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக் காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். 

  புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

  1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் 

  2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

  3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

  4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

  5. அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள்.

  6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

  7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

  இதையே சுருக்கமாகச் சொல்வதானால்:

  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளமக்கள், மதம், கலாச்சாரம், வளம் தொடர்பான அங்குள்ள அதிகாரமையங்களின் கொள்கைகளையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் அரசற்ற அமைப்புக்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் புவிசார் அரசியல் என அழைக்கப்படும். 

  தமிழ் அரசியல் அறிஞர்களும் கையாள்தலும்

  எமது அரசியல் அறிஞர்களுக்கு தெரிந்த புவிசார் அரசியல் என்பது பாக்கிஸ்த்தான் வந்தால் இந்தியா வரும் இந்தியா வந்தால் சீனாவரும் சீனாவந்தால் அமெரிக்காவரும் அமெரிக்காவந்தால் ரஷ்யா வரும் என்பதாகும். அத்துடன் அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தையும் இந்து மாக்கடலின் வர்த்தகப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் சொல்லுவார்கள். 

  இந்த அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் இப்படி மாறிக்கொண்டு போகின்றது:

   இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.

   இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்

   இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் பெற்றுத்தரும்

   இந்தியா தமிழர்களைக்கைவிடாது.

   இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை. 

  ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இருபுறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவுசார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கின்றனர். அது தான் நாம் “இந்தியாவைகையாளவேண்டும்”. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன்வைக்கும் விவாதம் தான் இந்த கையாள்தல் என்ற வாசகம். 

  உலக அரங்கில் கையாள்தல் கொள்கை

  முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில்கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்ற எண்ணத்தை தமது வெளியுறவுக்கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு  ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் எனச்சொல்லி முன்னாள் அமெரிக்க அதிபர்களான இரண்டு ஜோர்ஜ்புஷ்களும் ஒதுக்கியது போல் ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கைநோக்கிய நகர்வு. 

  மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங்சான்சூகியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார். கியூபா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் செயற்படுத்திய கையாள்தல் கொள்கை போதிய பயனளிக்கவில்லை. பில்கிளிண்டனின் வெளியுறவுத்துறையில் பணிபுரிந்த ரொபேர்ட்சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல்மோசமாக வரையறை  செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். மிக உயர்ந்த பேரம் பேசல் வலுவில் உள்ள அமெரிக்காவிலேயே கையாளுதல் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால் தமிழர்கள் கையாள்தல் கொள்கையைப் பாவித்து தமது நிலையை உயர்த்துவது எப்படி?

  பரந்த அறிவற்ற அரசியலறிஞர்கள்

  ஈழத் தமிழர்களைச் சூழவுள்ள புவிசார் அரசியலைப் பார்த்தோம் என்றால் சீனா இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றது என்பது முதன்மையான உண்மை. அதை எதிர்க்க ஈழத்தமிழர்களை இந்தியாவும் அமெரிக்காவும் தனித்தனியாகவோ இணைதோ பாவித்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும். அதை தமிழர்கள் வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க அழுத்தம் கொடுக்கச் சொல்லி இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் பேரம் பேசலாம் என சில அரசியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். அவர்கள் வெறும் அரசியல் அறிஞர்கள் மட்டுமே. புவிசார அரசியல் அறிஞர்கள் அல்லர். இலங்கையின் ஏற்றுமதியில் 60வீதத்திற்கு மேலானவை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு செல்கின்றது. இவற்றைத் தான் மேற்கு நாடுகள் எனச் சொல்கின்றனர். இலங்கை மேற்கு நாடுகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சீனாவுடன் இணைய முடியாது. பொருளாதாரத்தடை கொண்டு வருவோம் என மேற்கு நாடுகள் அறிவித்தால் இலங்கை தனது கொள்கையை மேற்கு நாடுகளுக்கு இசைவாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவிற்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானது. இலங்கை தொடர்பான பொருளாதார அறிவுள்ள அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமே இலங்கையில் மேற்கு நாடுகளும் சீனாவும் இடையிலான போட்டியில் மேற்கு நாடுகளின் வலிமையை உணர்ந்து கருத்துச்சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். 

  இலங்கையில் சீனப்படைத்தளப் பூச்சாண்டி

  இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்கலாம் அல்லது அமைக்க முயற்ச்சிக்கின்றது. எனபடைத்துறை அறிவில்லாதவர்கள் மட்டுமே ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். இந்தியாவின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இந்தியாவிற்கு எதிரான நாடு படைத்தளம் அமைக்கமாட்டாது என்பதை உணர்ந்து கருத்துச்சொல்வதற்கு உலகெங்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய படைக்கலன்களைப் பற்றிய அறிவுதேவை. B-21, C-5 எனப்படுபவை நெடுஞ்சாலைகளா எனக் கேட்பவர்களால் புவிசார் அரசியலை உணர்ந்து கருத்துச்சொல்ல முடியாது. அண்மையில் ஒரு காணொளிச் செய்தியில் அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களுக்கு சீனா அஞ்சிநடுங்குகின்றது என செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவிடமும் லேசர் படைக்கலன்கள் உள்ளன என்பதை அந்தகாணொளித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவாளிகள் நடுவில் தொலை நோக்கம் ஏதுமே இல்லாத தலைவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழர்கள் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

  பிரித்தலும் புகுத்தலும்

  தமிழர்களின் எதிரி நாடுகள் தமிழர்களின் படைக்கலன் ஏந்திய போராட்டத்தை அழிக்க அதனுள் இருந்து சிலரை வெளியே எடுத்து கொழும்பிற்கு கொண்டு சென்றன. இப்போது அதே நாடுகள் ஒருவர் பின் ஒருவராக தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே சில கொழும்பு அறிவாளிகளைப் புகுத்திக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இலங்கையை சூழவுள்ள பிரதேசத்தின் புவிசார் அரசியலில் எந்த பாகமும் வகிக்க முடியாத வகையில் அவர்களிடையே பல கட்சிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். 

  இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மை வாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை 2009 இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத்தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர். 

  – வேல்தர்மா
   

  https://www.virakesari.lk/article/83077


 13. அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்”

  Last updated May 30, 2020

  தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

  இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

  1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.

  31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

  முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

  அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

  j1-scaled.jpgநூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

  நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.

  நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

  யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

  மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

  ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

  ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

  j2-scaled.jpgதமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

  நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

  தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

  நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

  -ஆர். முத்துக்குமார்.

   

  https://www.thaarakam.com/news/134306


 14. இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்?

  அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி
  இந்தியா - சீனா எல்லை பதற்றம்AFP

  ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

  எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி டெல்லி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது. இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது. 

  "சூழல் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது" என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா.

  இந்த மாற்றத்திற்கு காரணம் இந்தியா மாறியதுதான் என்று சீனா கூறுகிறது. 

  லடாக்கில் இருதரப்பினரிடையே இருமுறை மோதல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருதரப்பிற்கும் மோதல் நிலை ஏற்பட்டது.

  இந்தியா-சீனா எல்லை பதற்றம்

  இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது.

  இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்களிடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும், கடந்த 4 தசாப்தங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை. 

  உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட இந்த இருநாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 

  எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, நிஜமான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. 

   

  இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஏ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

  இந்த பதற்றம் லடாக் பகுதிக்கு மட்டும் இல்லை. இருநாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் சிக்கிமிற்கும் இடையே உள்ள நகு லா கணவாயிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். 

  மேலும், நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த சர்ச்சையும் நீடிக்கிறது. சீனாவை இணைக்கும் சாலையை அமைப்பது மூலம் இந்தியா நேபாளுக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறது. 

  தற்போது பதற்றம் அதிகரிப்பது ஏன்?

  இதற்கு பல காரணங்கள் உண்டு. 

  "தற்போது கல்வான் நதிக்கு அருகில்தான் அதிக பதற்றம் நீடிக்கிறது. ஏனென்றால் ஷ்யோக் நதிக்கரையோரத்தில் இருந்து டாலட் பெக் பகுதிக்கு இந்தியா அமைக்கும் புதிய சாலை இங்கிருந்துதான் எல்ஏசி-க்கு மிகவும் நெருக்கமான இருக்கிறது" என்று சுக்லா கூறுகிறார்.

  இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

  இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரிGetty Images இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி

  "கால்வன் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்துக்கு உட்பட்டது. உள்ளூர் எல்லைக் கட்டுப்பாட்டு சூழல் தெளிவாக இருக்கிறது" என சீன அரசு ஊடக நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

  "சீன ராணுவத்தை பொறுத்தவரை, இந்தியாதான் கால்வன் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது. எல்லையில் இருக்கும் சூழலை இந்தியா மாற்றுவதே, சீனாவின் கோபத்திற்கு காரணம்" என்று உலக விவகாரங்களுக்கான செங்க்டு நிறுவனத்தின் தலைவர் லாங் ஷிங்சுன் தெரிவிக்கிறார். 

  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

  இதன்படி அக்சாய் சீனா லடாக் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை, இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது. 

  வில்சன் சென்டர் என்ற வல்லுநர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குநராக இருக்கும் மைக்கெல் கூகெல்மேன் கூறுகையில், "இது வழக்கமான மோதல் கிடையாது. தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது" என்றார்.

  மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் எல்லைக்கு அனுப்ப இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும். 

  கடந்த ஆண்டில் மற்றக் கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.

  பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.

  நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையான கரகொரம் நெடுஞ்சாலை இப்பகுதியில்தான் செல்கிறது.

  பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானிய துறைமுகம் குவாடரில் இருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம்தான் அரபுக்கடலில் சீனாவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உதவுகிறது. 

  இந்தியா-சீனா எல்லை பதற்றம்

  இது எங்கு போய் முடியும்?

  "எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ மட்டத்திலேயே பேசி தீர்க்கப்படும். ஆனால், தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று" என்கிறார் இந்தியா - சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும் முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்டோப்டன்.

  "தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாங்காங் ஏரி கைவிட்டு போனால் லடாக்கை காப்பாற்ற முடியாது. ஷ்யோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சினை கூட அடையலாம்" என்று அவர் கூறுகிறார். 

  இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு புலனாய்வு தோல்வியே காரணம் என்று கருதப்படுகிறது. எல்லைப் பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க, அதற்குள் சீனா அங்கு அந்நாட்டின் ராணுவத்தையும் தேவையான உபகரணங்களையும் குவித்துவிட்டது.

  இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. 

  இது எங்கு போய் முடியும்?Getty Images

  ஒன்று, பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளை திரும்பிப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம். அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம். ஆனால், இரண்டுமே அவ்வளவு எளிமையானது கிடையாது. 

  "உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது. சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவத்திற்கு தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது" என்று அஜய் சுக்லா கூறுகிறார். 

  அடுத்து என்ன?

  இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் 1962ல் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்பட்டது.

  தனது பிராந்தியத்தின் 38,000 கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த 3 தசாப்தங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

  இந்தியா-சீனா எல்லை பதற்றம்PRESS INFORMATION BUREA

  இந்தியா தனக்கு சொந்தமானது என்று கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் அக்சாய் சீனா, ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தையும் மேற்கு திபெத்தையும் அக்சாய் சீனா இணைப்பதால், அது மூலோபாய ரீதியாக சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். 

  "பதற்றத்தை அதிகரிக்கும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. இந்தியாவும் மோதலை தவிர்க்கவே நினைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது இருதரப்பையும் சார்ந்தது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது" என்று செங்டு நிறுவனத்தின் லாங் ஷிங்சுன் கூறுகிறார். 

  எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனையை சீனா தீர்க்க நினைப்பதாகவே தெரிகிறது. 

  "இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவ பதற்றத்தை தவிர்த்து, தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது" என்கிறார் ஆபத்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் ப்ரத்யுஷ் ராவ்

   

  https://www.bbc.com/tamil/india-52861160


 15. ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்

  MicrosoftReuters

  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

  எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

  இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர்.

  இது தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சி என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

  ”மற்ற நிறுவனங்களை போல மைக்ரோசாஃப்ட்டும் வழக்கமாக தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சியை செய்து வருகிறது. இது சில இடங்களில் முதலீடுகளை அதிகரிக்கும். சிறிது காலத்திற்கு பிறகு நிறைய பேரை வேலையை விட்டு அனுப்ப காரணமாக அமையலாம். ஆனால் இந்த முடிவு கோவிட்-19ஆல் எடுத்த முடிவு அல்ல,” என மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

  மற்ற நிறுவனங்களை போல பிற செய்தி நிறுவனங்களுக்கு அவர்களின் செய்தியை வலைத்தளத்தில் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட்டும் பணம் வழங்கி வருகிறது.

  மைக்ரோசாஃப்ட் நிறுவனம்PA Media

  ஆனால் எந்த செய்தி வர வேண்டும் அது எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை முடிவு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பத்திரிகையாளர்களை வைத்துள்ளது.

  சுமார் 50 ஒப்பந்த செய்தி தயாரிப்பாளர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் வேலையை இழப்பார்கள் என சியாட்டல் டைம்ஸ் கூறியுள்ளது. மற்ற முழு நேர பத்திரைகையாளர்கள் இருப்பார்கள் எனவும் சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

  ”எங்கள் வேலையை ஓர் இயந்திரம் பார்த்துவிடும் என நினைப்பது நியாயமானதல்ல. ஆனால் அதுதான் நடக்கிறது”, என்று சியாட்டல் டைம்ஸ்க்கு இதனால் பாதிக்கப்படும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

  வேலையை விட்டு அனுப்பப்பட்ட சில பத்திரிகையாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதழியலுக்கான கோட்பாடுகளை முழுவதும் அறிந்திருக்காது, இதனால் தவறான செய்திகள் வெளியிட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர்.

  வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் 27 பேரை பிரிட்டனின் பி.ஏ மீடியா வேலைக்கு எடுத்துள்ளது என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

  அவர்களில் ஒருவர் , ”நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன். இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்துக்கொண்டது,” என்று கூறினார்.

  ரோபோட் இதழியல் எனக் கூறப்படும் இந்த முறையை செலவை குறைப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்தி பார்க்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய கூகுள் நிறுவனமும் சில திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.

   

  https://www.bbc.com/tamil/science-52862134

   


 16. குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…

  May 31, 2020

  Guruparan.jpg

  சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

  மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது.

  சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார்.

  அறம்சார் காரணிகள் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் பதவியை 2019 டிசெம்பர் 4ஆம் திகதி துறந்த பின்னரே இந்த மனுவை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார். அதனால் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் என்ற பதவிநிலையிலேயே அவர் உள்ளார்.

  சட்டத்துறையில் போதனைசார் அலுவலகராகப் பணியாற்றுவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வழக்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கும் தத்துவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்றும் அதனை ஏற்றுக் கொண்டமையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை தனது சுயாதீபத்தியம் இழந்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் என 41 எதிர்மனுதாரர்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

  சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார். இந்த மனு மார்ச் மாத இறுதியில் பரிசீலனைக்கு எடுப்பதாக உயர் நீதிமன்றம் முன்னர் தவணையிட்ட போதும், நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் உயர் நீதிமன்ற அமர்வுகள் சுமார் 50 நாள்கள் பிற்போடப்பட்டன.

  இந்த நிலையில் இந்த மனு இன்று சனிக்கிழமை உயர் நீதிமன்ற அமர்வால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, நீதியரசர் முர்டு பெர்னாண்டோ ஆகிய இருவரும் கொண்ட அமர்வு முன் மனு பரிசீலனைக்கு வந்தது.

  ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் உயர் நீதிமன்றில் முன்னிலையாக காரணத்தால் அவரது இளநிலை சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயக்குமார் உயர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். மனுதாரர் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனும் மன்றில் தோன்றினார்.

  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர்கள் ஜெனரல் இந்திகா டெமுனி டி சில்வாவின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார்.

  மனுதாரர் தன்னுடைய கட்சிக்காரங்கள் சார்பில் ஏற்கனவே நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்குக்குகளில் முன்னிலையாவதற்கு அவரது அனுமதியளித்து கட்டளையிடப்படவேண்டும் என்று நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரப்பட்டது.
  இந்த மனுவில் இடைக்காலக் கட்டளையாக்கும் விடயத்தை விவாவத்துக்கு எடுக்க பிரதம நீதியரசரால் அரச தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு தவணை வழங்குமாறு அரச தரப்பால் கோரப்பட்டது.

  அதற்கமைய மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது.

  பின்னணி

  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தானை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார்.

  அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.

  1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

  தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

  ஏற்றுக்கொள்ளப்பட்ட 3 பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்து சென்ற போது நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார். 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

  இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
  இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே 10ஆம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டது.

  மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டது.

  சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார். எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார்.

  மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் வெளியேறிய போது அவரை, இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் அலைபேசியில் ஒளிப்படமோ அல்லது காணொலிப் பதிவோ செய்திருந்தார். அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் கண்டிருந்தார்.

  இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த சட்டத்தரணி கு.குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார்.

  “தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று சட்ட மா அதிபரால் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனுக்கு பதிலளிக்கப்பட்டும் இருந்தது.

  இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில்,

  “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது.

  அந்தக் கடிதம் கிடைத்த அன்றைய தினமே (ஓகஸ்ட் 21) அவசர அவசரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு ஓர் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும்” என்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கோரப்பட்டது.

  பல்கலைக்கழக ஸ்தாபன விதிக் கோவை 8ஆம் பிரிவின் கீழ் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையால் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தகுதி வாய்ந்த அதிகாரியால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பதிலளிக்கப்பட்டது.

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியின் பதில் கடிதம் மற்றும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட கடிதம் என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதிய அமர்வில் முன்வைக்கப்பட்டன.

  அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

  இந்தத் தீர்மானம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நிகழ்ச்சிக் குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

  இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி தகுதிவாய்ந்த அதிகாரியால் முன்வைக்கப்பட்டது.

  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

   

  http://globaltamilnews.net/2020/144037/


 17. படுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..

  May 31, 2020

  IMG_9519-800x600.jpg

  மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

  யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

  இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் காவற்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், காவற்துறை அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.

  IMG_9523-800x600.jpg

   

  http://globaltamilnews.net/2020/144044/


 18. 11 minutes ago, Nathamuni said:

  சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

  அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

  அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

  சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

  நாதம்ஸ்,

  சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

  எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

  2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾


 19. 7 minutes ago, Maruthankerny said:

  ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
  பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
  விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

  இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

  உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

  சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
  தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
  யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

  ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
  பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
  ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

  நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
  எனக்கு விளங்கவில்லை. 
   

  அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

  திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

  12 minutes ago, Nathamuni said:

  தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

  விடுங்கள் கடந்து போவோம்.

  ஆமால்ல👍🏾


 20. 18 minutes ago, Maruthankerny said:

  இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
  சீமான் எங்கு சொல்கிறார்?

  தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
  இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

  மருதர், 

  நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪


 21.  

  8 minutes ago, பையன்26 said:

  கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

  கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

  நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

  என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

  6 minutes ago, Nathamuni said:

  உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

  அது ஆமை 🐢


 22. நாதம்ஸ், 

  திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

  இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

  பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

  உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

   


 23.  

  1 hour ago, MEERA said:

  தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

   

  இல்லை. சபேசன் எழுதவில்லை.

  திரி இங்குள்ளது.😎

   


 24. 39 minutes ago, பெருமாள் said:

  பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

  நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

  வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!


 25. 3 hours ago, colomban said:

  கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

  எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

  கடந்த வாரம் வேலைக்கு லீவு! கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நேரம் கிடைத்தது. 😬

  இந்த நேரம் பார்த்து அண்ணன் சீமான் வேறு விகடனுக்கு பேட்டி கொடுத்தாரு! நட்வர்சிங் பேட்டியை வேறு யாரோ தோண்டி எடுத்தார்கள்!  பொழுது போயிடுச்சு!

  தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

  கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு!

  1 hour ago, பையன்26 said:

  அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

  பையன் இப்ப பதட்டமான நிலை இல்லைத்தானே. அதனால் உண்மைகளை ஆராய்ந்து எழுதலாம்☺️