Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  24,380
 • Joined

 • Days Won

  86

Everything posted by கிருபன்

 1. இ-கலப்பையைத் (http://thamizha.com/project/ekalappai) தரவிறக்கம் செய்திருந்தால் மிகவும் இலகு (Windows XP மற்றும் Windows 7 இல் எனக்கு வேலை செய்கின்றது). Launch EKalappai 3.0 Select Keyboard - Phonetic (English2Unicode) or Bamini (Bamini2Unicode) Windows Tray இல் இ-கலப்பை நிற்கும். அதனை ஒற்றைச் சொடுக்கு மூலம் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் மாற்றலாம். இப்பதிவை அவ்வாறுதான் பதிந்தேன்.
 2. அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை!
 3. :icon_mrgreen: திருவாளர் பச்சை உயிர்த்து வந்தீட்டார்! :icon_mrgreen:
 4. வெளியே மழை பெய்கிறது ரெஜோ இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும் சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது … வாய் புகுந்து மீண்டால் இன்னொரு தெரு இன்னொரு வாசல் தப்ப முடியாதென்றே தெரிகிறது … உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி தொலைந்து போகத் தோன்றுகிறது பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும் மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது மதில் மேல் பூனையாய் என் நிழல் எந்தப் பக்கம் விழும் … நிழலைத் துரத்திக் கொண்டு நானும் என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
 5. எனக்கு திருவாளர். பச்சை அவர்களின் முகக்குறி வேண்டும்!
 6. போதிமரம் தமிழ்நதி என்னை விறுக்கென்று கடந்த உன் விழிகளில் முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது உன் உதட்டினுள் துருதுருக்கும் கத்திமுனை என் தொண்டைக்குழியை வேட்கிறது. மாறிவிட்டன நமதிடங்கள் துடிப்படங்கும் மீனாக நான் தரையில் துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில். துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ சற்றுமுன்பேஅம்மணமானோம். இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில் எரிகிறது எரிகிறது தேகம் நம் அட்டைக்கத்திகளில் எவரெவரின் குருதியோ வழிகிறது நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன் ஒழுகிற்று ஊரும் உயிரும் இழந்த பல்லாயிரவரின் ஒப்பாரி
 7. வாழ்த்துமழைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
 8. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்
 9. நிழலியின் மகனுக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்".
 10. என் பாதையும் என் பயணமும் கவிஞர்.பாரதிமோகன் இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் கிள்ளி எரிகின்ற விரல்கள்.. எங்கே தொலைந்து போவேனோ என்ற அச்சத்திலேயே.. போராடி போராடி புதிய பாதை தேடி-மீண்டும் இலக்கு நோக்கிய பயணம்.. பாதையும் முடியவில்லை பயணமும் முடியவில்லை களைப்பினூடே திரும்பிபார்கிறபோதுதான் உணர்கிறேன்.. வாழ்வில் பாதி முடிந்திருப்பதை மீதி வாழ்க்கையை எப்படி வாழ்வது... மீண்டும் தொடர்கிறது என் பயணம்.. அதற்கான
 11. நாங்கள்தான். மனதைத் தொடுகின்ற கவிதை.
 12. கதவுகளுக்குப் பின்னால்... ஜெ.திவா தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! நான் அப்போதுதான் என் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் அழத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் என் சிசுவுக்கு முலையூட்டத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் ரத்தக் கறைபடிந்த என் கொலைக்கருவியை பார்க்கத் தொடங்கியிருக்கலாம் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் நான் விதைக்குள் தவிக்கும் ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும் நான் ஒரு பறவையின் மனதை அறிய ஒரு கிளிக்கு பேச்சுப் பழக்கிக்கொண்டிர
 13. பருந்து தேவதேவன் உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் பு
 14. எனக்கும் பாடப்புத்தகம் படிக்கத்தொடங்கினால் நித்திரை வந்துவிடும். அதற்காகவே தற்போதும் முன்னர் படித்த புத்தகம் ஒன்றை பக்கத்தில் வைத்திருக்கின்றேன். இரண்டு பக்கம் தாண்டமுதல் நித்திரை வந்துவிடும். அப்படி வரும் நித்திரை குலைய ஏழெட்டு மணித்தியாலம் போகும்!
 15. போதை உயிரோடை பாதியில் படித்து நிறுத்திய கதையை தொடர்வது அதிகாலை கனவை தொடர்வது போல எளிதல்ல ஊன் உறக்கம் மறந்த வாசிப்பின் எழுத்துகள் உதிரத்தில் மிதக்கக் கூடும் பேய் விரட்டுவதினும் கடினமானதே படிப்பின் போதையை விட்டொழிப்பது வாசிப்பை நிறுத்தி வைத்து சற்றே இடைவெளி விட்டு ஒருநாள் படிக்கும் போதுணர்ந்தேன் போதையொன்றும் பெரும் பரவசத்தை தருவதில்லை http://uyirodai.blogspot.com/2011/04/blog-post_29.html
 16. எனக்கு கொல்வது பிடிக்கும் போகன் எனக்கு கொல்வது பிடிக்கும் முதன் முதலாய் என்னை விரட்டிய தெரு நாயை அடித்துக் கொன்றேன் அன்று தெரிந்துகொண்டேன் நாய்களுடன் விவாதிப்பது என்றுமே பயன் தராது என்னுடைய பயத்தை நான் கொல்வதன் மூலமே வென்றேன் எப்போதெல்லாம் பயந்தேனோ அப்போதெல்லாம் கொன்றேன் பிடிக்காத வாத்தியார் பிடிக்கவில்லை என்ற பெண் விளையாட்டில் வென்ற நண்பன்... ஆனால் ஒரு கோழையைப்போல் ரகசியமாய்க் கொல்வது எனக்குப் பிடிக்கவில்லை வெளிப்படையாக கொல்வதற்கு நீங்கள் சில காரணங்களை கேட்டீர்கள் நாடு,மொழி,மதம் இனம்,ஜாதி சித்தாந்தம
 17. இந்த இணைப்பில் காணப்படும் மென்பொருளைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன் (யூரீயூப்பில் இருந்து தரவிறக்கம் செய்தேன்) http://tamilcomputerinfo.blogspot.com/2011/06/250.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FyfPVo+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%29
 18. உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !! வித்யாசாகர் ----------------------------------------------------------- நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் - உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என எல்லாமே உன்னை எனக்குள் - மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்; எனக்காக இல்லையென்ற
 19. சரி தவறு கயல்விழி சண்முகம் சரியெனப்பட்டது சத்தமாய் சரிதானென்றேன் தவறெனப் புரிந்தது தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்! ஒத்திசைக்க உற்றவர்கள் உடனிருந்தார்கள்! அவர்தம் கூட்டணி மாறியது சரியென்றதை தவறெனவும் தவறென்றதை சரியெனவும் இம்சிக்கிறார்கள் பிறழாத நாக்கு வேறு பொய் நவில மறுக்கிறது இப்போதும் முன்னிருந்த நிலைதான் இடறாத கொள்கையோடும் பிறழாத நாக்கினோடும் தன்னந்தனி மரமாய் நான்! வந்தமரக்கூடும் என் கிளையிலும் சில பறவைகள்! http://kayalsm.blogspot.com/2011/05/blog-post_23.html
 20. மீன்குஞ்சுகள் துவாரகன் -------------------- கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்குஞ்சுகள் ஒருநாள் துள்ளி விழுந்தன மாடுகள் தின்னும் வைக்கோல் கற்றைக்குள் ஒளிந்து விளையாடின வேப்பங் குச்சிகளைப் பொறுக்கியெடுத்து கரும்பெனச் சப்பித் துப்பின வயலில் சூடடித்து நீக்கிய ‘பதர்’ எல்லாம் பாற்கஞ்சிக்கென தலையிற் சுமந்து நிலத்தில் நீந்தி வந்தன வீதியிற் போனவர்க்கு கொல்லைப்புறச் சாமானெல்லாம் விற்றுப் பிழைத்தன திருவிழா மேடையில் ஏறி ஆழ்கடல் பற்றியும் அதன் அற்புதங்கள் பற்றியும் நட்சத்திரமீன்களின் அழக
 21. சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்துப்புரண்டுகொண்டிருக்கும் கொரில்லாக்கள், காட்டிக்கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு சமாதானப்போர்வைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட முன்னாள் போராளிகள், டிஜிட்டல் பேனரில் சிரிக்கும் எந்திரன், என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தார் மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறே. சே' எனது டீஷர்ட்டில் http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122
 22. முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!! வித்யாசாகர் போராட்டத்தின் - ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில் உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை - சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே - கடக்கிறோம் எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் - நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த மனித இனம் அதில் நானும் மாறுபட்டவனாக இல்லை அப்பட்டமாய் - எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப
 23. தனிமை ந.மயூரரூபன் முறைக்கிறதா என்னைப் பார்த்து சிரிக்கிறதா என்னைப்பார்த்து ஒன்றுமே புரியவில்லை அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும் பிடிபடவில்லை ஒன்றுமே. நான் பார்க்கும் எல்லாமே விரோதமாய்ப் பார்க்கின்றன என்னை மட்டுமே. என் கண்ணில் எப்போதும் ஒட்டியிருப்பது பயந்தானோ? பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ? என்னுள் துடிப்பு ஏறிக் குலைகிறது தாறுமாறாய். என்னுயிரைக் கொய்துவிடும் கனவுகள் நெருக்குகின்றன. கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும் அருட்டிப்பார்க்கிறது என்னை. ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்
 24. கடவுளின் குழந்தை சாத்தான்களும் பிடாரிகளும் சகஜமாய் புழங்கும் கானகத்தில் குழந்தையொன்று மந்திரகவசத்தோடும் உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும் களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்... ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம் அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர் எப்போதும் இறக்கைகள் முளைத்த தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன சாத்தான்களின் பாசறையை கடவுளின் அரண்மனையாய் மாற்றுவதாய் ஏற்பாடு! ஈட்டிகள் துளைக்கையிலும் மரண அவஸ்தை உச்சத்திலும் உதவி வேண்டி குழந்தையின் கதறல் விண்ணைப் பிளந்தும் தேவதைகள் வரவேயில்லை! பார்த்தது குழந்தை! இவ்விட
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.