Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33780
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!! வித்யாசாகர் போராட்டத்தின் - ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில் உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை - சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே - கடக்கிறோம் எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் - நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த மனித இனம் அதில் நானும் மாறுபட்டவனாக இல்லை அப்பட்டமாய் - எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும் வாழ்வதற்கான உயிர்காற்று - தொண்டையை அடைத்துக் கொள்ள, ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில், ஆசையில் - நம்பிக்கையில் - நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம் இதில், பெரிதாக சாதித்ததெல்லாம் எந்த நிலையிலும் - யார் இறப்பிலும் - உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும், எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல் சில உண்டு, என்றாலும் - மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய மீண்டும் ஒரு புள்ளியாக - நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!! http://www.vaarppu.com/view/2385/
  2. தனிமை ந.மயூரரூபன் முறைக்கிறதா என்னைப் பார்த்து சிரிக்கிறதா என்னைப்பார்த்து ஒன்றுமே புரியவில்லை அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும் பிடிபடவில்லை ஒன்றுமே. நான் பார்க்கும் எல்லாமே விரோதமாய்ப் பார்க்கின்றன என்னை மட்டுமே. என் கண்ணில் எப்போதும் ஒட்டியிருப்பது பயந்தானோ? பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ? என்னுள் துடிப்பு ஏறிக் குலைகிறது தாறுமாறாய். என்னுயிரைக் கொய்துவிடும் கனவுகள் நெருக்குகின்றன. கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும் அருட்டிப்பார்க்கிறது என்னை. ஊசியாய்த் துளைக்கும் பார்வையும் உடல் வறட்டக் கத்தும் சத்தமும் மூச்சழிக்க வைக்கும் என்னை. கொப்பில் குதிக்கும் தாட்டானும் தேடித் திரிவது என்னைத்தான். ஊத்தை இளிப்புடன் ஊடுருவிப் பார்க்குமது என்னை. பார்வைகளிலெல்லாம் உயிர் கொழுவித் தவிக்கும். நான் போகுமிடமெல்லாம் நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம். என்னைவிட எல்லோரும் நண்பர்களே. காகமும் தாட்டானும் கூடத்தான். அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன் நான் மட்டும் தனியே http://www.vaarppu.com/view/2371/
  3. கடவுளின் குழந்தை சாத்தான்களும் பிடாரிகளும் சகஜமாய் புழங்கும் கானகத்தில் குழந்தையொன்று மந்திரகவசத்தோடும் உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும் களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்... ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம் அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர் எப்போதும் இறக்கைகள் முளைத்த தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன சாத்தான்களின் பாசறையை கடவுளின் அரண்மனையாய் மாற்றுவதாய் ஏற்பாடு! ஈட்டிகள் துளைக்கையிலும் மரண அவஸ்தை உச்சத்திலும் உதவி வேண்டி குழந்தையின் கதறல் விண்ணைப் பிளந்தும் தேவதைகள் வரவேயில்லை! பார்த்தது குழந்தை! இவ்விடம் வாழ இன்னது ஏற்பு பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது இப்போது கடவுளை வரவேற்க குழந்தை தயார் ஒரு காட்டேரியின் மடியில் குருதியை சுவைத்தபடி! http://kayalsm.blogspot.com/2010/06/blog-post_24.html
  4. வீதியில் நடக்கும்போது வசீகரமான பெண்கள் போனால் தலை தன்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்கும். திரும்பிப் பார்க்க வைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதுபோலத்தான் கவிதையும் முதல் நொடியில் பிடித்துவிடவேண்டும்!
  5. சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன் ஆம் இன்றைக்கு எப்படியாவது கடவுளைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறேன் இனியும் பொறுமையில்லை முழுமையாக உதிர்ந்து விட்டன சகிப்புத்தன்மையின் செதில்கள் வந்துவிட்டார் கடவுள் எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது பின்புறமிருந்து முகத்தில் துணியைப் போர்த்தி வசமான பிடியுடன் இறுக்குகிறேன் திமிறிக் களைத்து தோற்று உடல் தளர்ந்து பிரிகிறது கடவுளின் உயிர் குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில் வழியும் இரத்தத்தை சுவைத்தபடி தொலைவில் வந்து பார்க்கிறேன் தகன மேடையில் யாரோ கிடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனது உடலை. http://www.aganazhigai.com/2010/04/blog-post_20.html
  6. அறிவிலி பற்றி எரிகையிலும் பூ பூக்க உன்னால் மட்டுமே முடியும்! 'மத்தாப்பூ'! சுற்றி எரிகையிலும் உள்ளே, பூகம்பம் வெடிக்கையிலும் சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய் பாசாங்கு பண்ண‌ என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து! எள்ளி ந‌கையாடும் எல்லோரையும் ஏதேதோ க‌தைக்கிறாரென‌ செவிடு பாய்ச்சுவ‌து எப்ப‌டி அக‌ந்தையாகும்? புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌ உல‌க‌த்தில்.... பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌ குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து எனக்கு! கோரிக்கையோ கட்டளையோ இல்லாத செல்லச் சிணுங்களில் சிக்குண்டு சிரிப்பதை ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா? செய‌ற்கையாய் சிரித்து சிரித்து க‌ண்ணில் நீர்வர மெய்யாய் சிரித்த‌து எப்போது? நினைவேயில்லை!! வலி நிர‌ப்பி வடித்த வார்த்தைச் சித்திர‌மெல்லாம் அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில் அதே காயாத‌ குருதி வாச‌னை! கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும் தைக்க‌ப்படவேயில்லை! சுயமெனும் இருள்வெளி தாண்டி புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌ வாய்ப்புகளெல்லாம் வாகாய் வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌! விரும்பிய‌ திசை எதுவென தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி.... கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி ஏனோ, வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை! கூர்மங்கிய நாக்குகளினால் குத்தப்பட்ட சொற் காயங்கள்! உயிர் நீங்கலாக மற்றதை மாய்த்தும் அவர் மனம் நோகுமென பதிலடி தராத பரிதாப தருணங்கள் இந்த அறிவிலி வாழ்க்கையில் அனேகம் நிகழ்வதால் இப்பெயர் பெற்றேன் காரணம் அறிக‌! http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html
  7. நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post_30.html
  8. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

    1. கறுப்பி

      கறுப்பி

      நிச்சயமாய்.........

  9. காவாலியின் கருத்தை வழிமொழிகின்றேன்..
  10. தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

  11. எழுந்து வாரும் தோழரே.. இலங்கைத் தாயின் புதல்வரே.. வளர்ந்து நாட்டைக் காத்திட வந்து சேரும் தோழரே :-)

    1. தயா

      தயா

      இலங்கையை காப்பாத்துறதை தவிர வேறை என்ன வேலை எங்களுக்கு இருக்கு...??

    2. சித்தன்

      சித்தன்

      அப்பத்தானே அவன் எங்களை கவனிப்பான்

  12. பட்டங்களுக்குப் பயந்தால் எதுவும் நடவாது! கிடைக்கும் பட்டங்களைப் பெயரின் பின்னால் போடவேண்டியதுதான்
  13. அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது.
  14. இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!
  15. ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..
  16. கவனம். பின்வளத்தால கூப்பிட்டால் நல்லா இருக்காது!
  17. எனது பெயரையும் தமிழில் "கிருபன்" என்று மாற்றிவிட முடியுமா?
  18. பழசான பின்னரும் மாப்பிளையாக இருக்கமுடியாது! கலைஞன் கொலைஞனாக மாறாவிட்டால் சரி!
  19. சமாதானம் என்ற கோஷத்துடன் வரும் நீங்கள் தமிழருக்கு எத்தகைய சமாதானம் பொருத்தமானது, அதை அடையும் வழிமுறைகள் என்ன என்று விளக்க முனைய வேண்டும்.. சிங்களவருடன் ஒரு நாட்டில் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும் வாழலாம் என்று நம்பினால் நீங்கள் கனவுலகில் வாழுபவராக இருக்கவேண்டும்..

  20. fusion, fission?? மன்னிக்கவும் தமிழில் தெரியாது. :oops:
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.