Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33697
  • Joined

  • Days Won

    157

Posts posted by கிருபன்

  1. On 26/3/2024 at 22:11, goshan_che said:

    சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை.

    கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜

    • Haha 1
  2. On 5/3/2024 at 19:26, ரசோதரன் said:
     
    'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?'
     
    'மெக்ஸிகன்.'

    கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்!

    தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂

  3. On 5/3/2024 at 00:00, ரசோதரன் said:

    ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை.

    பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜

  4. ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன

    15-22.jpg

    கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

    அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது.

    குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

    30 வருட காலமாக

    அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    நிர்வாக அடக்குமுறை

    இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

     

    https://akkinikkunchu.com/?p=272438

  5. சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

    March 29, 2024
     
    WhatsApp Image 2024 03 22 at 8.26.51 AM சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்
     

    இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.
     
    கேள்வி  இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?
     

    பதில்  இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது.

    கேள்வி  இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்?

    பதில்  இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

    sea சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்கேள்வி

      அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்  மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது.

    கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது.

    கேள்வி  எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன?

    பதில்  தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.

    கேள்வி  இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

    பதில்  இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும்.

    தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள்  தொப்புள் கொடி உறவுகள்  இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு.

    பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது.

    ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை.

    மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு.

    https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/

  6. இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்

    March 29, 2024
     

    9 2 இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை - புனரமைப்பையும் ஆரம்பித்தனா்
     

    ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

    கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை.

    இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
    “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
     

    https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/

  7. பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

    ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர்.

    கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.

    இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R
     

    https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341

  8.  முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு !

    620139104.jpg

    (புதியவன்)

    இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல்.

    மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

    அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
     

    https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!

     

  9. மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!

    629024181.jpg
     

    புதியவன்

    சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

    இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது.

    கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

    அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க)

    https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!

  10. மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்

    மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)

    — அழகு குணசீலன் —

    மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல்.

    இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை.

    காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு.

    கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன.

    அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது. 

    மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1.

    இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே. 

    இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம்.

    ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது.

    உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை.

    பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன. 

    இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது. 

    மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது. 

    1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை.

    தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம். 

    அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம்.

    இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?  

    இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது.

    கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..? 
     

    https://arangamnews.com/?p=10587

     

  11. திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.

    March 28, 2024

    (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

    கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர்.

    இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

    இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
     

    https://www.supeedsam.com/198438/

  12. முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

    March 28, 2024
     

    18 முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

    பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

    அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
     

    https://www.ilakku.org/ex-militant-detained-for-3-days-and-ordered-to-be-interrogated/

     

  13. ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

    March 28, 2024
     

    555 ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் - அல் - ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

    உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.

    டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
    டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

    உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

    உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.

    https://www.ilakku.org/sri-lankans-participating-in-the-russo-ukraine-war/

  14. திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்

    Vhg மார்ச் 28, 2024
    Photo_1711586805190.jpg

     

    திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

    திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

    திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.

    துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்

    கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.

    அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

    மேலும் திருவண்ணாமலையில் பௌத்த மக்களுக்கு இடம்பெற்று வரும் நிகழ்ச்சி நிரல்களும்மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும் எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

    திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் எனவும் திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி இதன் தெரிவித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
     

    https://www.battinatham.com/2024/03/blog-post_160.html

  15. ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்

    168542315.jpeg

    (செல்வன்) 

    ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு  போராடத் தயாராகும் மக்கள் 

    முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.

    ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை பண்ணிவருகின்றார்கள்.

    இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச குடிநீர் திட்டத்திற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஒட்டுசுட்டான் நீர்ழங்கல் விநியோகத்திட்ட அலுவலக காணிக்குள் அனுமதியற்ற முறையில் 300அடி ஆழத்தில் நிலத்தடி நீரினை உறுஞ்சி ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் விநியோகத்திட்ட அலுவலகம் அமைக்கும் போது பேராற்றில் இருந்து நீரினை கொண்டுவந்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தே நீர்வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த நிலையில் அலுவலகம் அமைந்த காணிக்குள் 300 அடி அழம் கொண்ட நிலத்தடி நீரினை உறுஞ்சும் குழாய் கிணறுஅமைக்கும் பணிகள் அண்மை நாட்களாக நடைபெற்று வந்ததை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26.03.2024 ஒன்று கூடியபோது அங்கு கிராம சேவையாளர் மற்றும் பொலீசார் வருகைதந்து மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

    எவரின் அனுமதியும் இன்றி நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கு நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

    பொலிசாரின் பிரசன்னத்துடன் குழாய்கிணறு அமைக்கும் இயந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அரச மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின்னர் முடிவிற்கு வருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.(ஏ) 
     

    https://newuthayan.com/article/ஒட்டுசுட்டானில்_பாரிய_குழாய்க்_கிணறு;_போராடத்_தயாராகும்_மக்கள் 

     

  16. 5 hours ago, Kapithan said:

    இந்தத் தாக்குதலின் பின்ணணியில் US, UK and Ukraine இருக்கிறது என நம்புவதாக ரஸ்ய  FSB தலைவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. 

    ஆமாம். மேற்குநாடுகளில் இருந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களுக்கு தொண்டாளர்களாகப் போனவர்களின் தலைகளை கொய்து வீடியோ எடுக்க ஐஸிஸை உருவாக்கிய ஒபாமாவும் மேற்குப் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயிற்சி கொடுத்தார்கள்!

     

  17. “பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!

    KaviMar 25, 2024 21:44PM
    1221191.jpg

    பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம், எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த 22 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இன்று(மார்ச் 25) மாலை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களான நெல்லை ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில்  போட்டியிடும் தாரகை ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு தாய் மக்களாக வாழும் இந்தியாவை வெறுப்பு விதைகளை தூவி, நாசம் செய்து விடுவார்கள்.

    தேர்தல் வந்துவிட்டது என அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், வெள்ளம் வந்தபோது எங்கிருந்தார்?

    தென் மாவட்டத்தையும் வட மாவட்டத்தையும் மழை வெள்ளம் பாதித்த போது ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா?. ஓட்டு கேட்டு வந்தபோது கூட மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

    வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் தரவில்லை. நாம் உரிமையோடு கேட்பதை தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம்.

    ஆளுநர் எப்படி மூக்கு அறுபட்டு, வெட்கம் இல்லாமல் இன்னும் அந்தப் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்?

    பாஜக நிதியையும் தராமல் நமது மக்களை ஏளனமாக பேசுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை தரமாட்டாராம். ஆனால் மாநில அரசு நிவாரண தொகையை வழங்கினால் அதை பிச்சை என்று  ஏளனம் செய்வாராம்.

    மக்களுக்காக அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அது மக்களுடைய பணம். மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவுவது தான் அரசின் கடமை.

    மக்களை அவமதித்த போதே உங்களுடைய தோல்வி உறுதியாகிவிட்டது. ஆட்சியும் பதவியும் இருப்பதால் பாஜகவினர் ஆணவத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

    ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர் என்கிறார், இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்.

    தமிழக மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு. மக்களிடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது.

    பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்.

    தமிழகத்துக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? அவரால் பதில் சொல்ல முடியுமா?

    தமிழகத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை கூட செய்யாமல் பத்தாண்டு காலம் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள்?

    நாங்கள் வரிப்பணம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது.

    இதைக் கேட்டாலும் உங்களிடம் பதில் இல்லை. இதற்கும் வாயால் தான் வடை சுடுவீர்களா?

    தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை உங்களை போல் வெறுத்த, வஞ்சித்த பிரதமர் இதுவரை கிடையாது.

    மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது? பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள்?” என்று கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.

    மேலும் அவர்,  “நேருவை என்ன சொல்லி திட்டலாம், சோனியா காந்தியை எப்படி வசைபாடலாம், ராகுல் காந்தியை பார்த்து பயப்படாதது போல் எப்படி நடிக்கலாம்? தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசை திருப்பலாம் என மோடி யோசித்துக்கொண்டிருக்கிறார்” எனவும் குறிப்பிட்டார்.
     

    https://minnambalam.com/political-news/its-a-shame-to-vote-for-bjp-stalin-campaign-for-kumari-nellai-candidates/

  18. குண்டு வெடிப்பின் பின்னால் உள்ள சக்தி என்ன அவர்களுடைய நோக்கம் கொள்கை என்ன என்பதை இப்புத்தகம் காட்டுகின்றது.

    March 25, 2024
    WhatsApp-Image-2024-03-23-at-4.57.11-AM-

    பிள்ளையான்  என்றழைக்கப்படும் சி..சந்திரகாந்தன்

    ( கனகராசா சரவணன்;)

    கிழக்கு மாகாணம் எல்லோருடைய மாகாணமாக இருக்க வேண்டுமாக இருந்தால் யாரும் தாங்கள் பெரிது என தங்களை  மார்தட்டக் கூடாது எந்த மதமும் தங்களை உயர்திபிடிக்க கூடாது அது பௌத்தமாக இருக்கலாம் முஸ்லீமாக இருக்கலாம் அதனை நாங்கள் எதிர்ப்போம். இந்த குண்டு வெடிப்பின் பின்னால் உள்ள சக்தி என்ன அவர்களுடைய நோக்கம் கொள்கை என்ன என்பதை இந்த புத்தகம் இலகுவாக காட்டியுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான்  என்றழைக்கப்படும் சி..சந்திரகாந்தன் தெரிவித்தார்

    மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்ரர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றதுது புத்தகத்தை இராஜாங்க அமைச்சர் வெளியீடு செய்துவைத்து உரையற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

    சிறைச்சாலை வாழ்க்கை இல்லை என்றால் இந்த புத்தகம் எழுத வாய்ப்பே  இருந்திருக்க முடியாது சிறைச்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சந்திப்புக்கள் மிக பயங்கரமான மனிதர்களோடு மிக நண்பனாக உரையாட கிடைத்த பாக்கியம் எல்லாம் இறைவன் கொடுத்தது அதில் தகவல் திரட்டுவதற்கு பல வழிகளிலே சிறைச்சாலை அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த அரபு மொழி சம்மந்தமாக புலமை கொண்ட மௌலவி.

    அதேபோன்று  சிறையில் இருந்த ஸாரானின் தம்பி சைனி மெனியுடடைய மனைவியின் கடைசிதம்பி இப்போது சிறையில் இருக்கின்ற நவ்பர் மௌலவி கூட உரையாடி இந்த புத்தகத்தில் குரான் வசனங்களை பெற்றுக் கொண்டேன். இவ்வாறு நீண்ட வரலாற்றின் தொகுப்பில் ஒரு இஸ்லாமிய மகனும் எங்களை குற்றம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கவனமாக எழுதப்பட்டது

    போர்பிரகடனம் செய்து கையை உயர்த்தி கோட்பாடுகள் என தௌவ்பீக் கொள்கை களை வஹாபீசத்தை பேசி வழிநடாத்துகின்றவர்கள் தான் இந்த புத்தகத்தை படித்து எங்களுக்கு எதிராக பேர் கொடி தூக்குவார்கள் அவர்கள் நாட்டில் மீண்டும் ஒரு இரத்தகலரியை ஏற்படுத்த வேண்டும் என சிந்திப்பவர்களாகத்தன் இருக்கும் .

    புதுவருட தினம் மட்டு ஆண்டகை பொன்னையா வருவார் அங்கு கரோல்  இடம்பெறும் அதில் கனிசமான அளவு முஸ்ஸீம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் அப்படி ஒரு தினமான ஈஸ்ரர் தினத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது

    நாம் தெரிந்தே தெரியாமலே ஒரு போர் பிரகடனத்துக்கு மத்தியில் இருக்கின்றோம் இந்த போர் பிரகடனத்தை நாங்கள் வலிந்து எடுக்கவில்லை இன்னும் ஒரு மதம் அந்த மதத்தில் இருக்கும் முறை மையமாக கொண்டு எங்களது பகுதியிலே வாஹாபீச கொள்கை உருவாகி இந்த நாட்டையும் உலகத்தையும் குலுக்கியது

    இதை எப்படி எதிர்காலத்தில் கையாளப்போகின்றோம் இந்த இரத்த களரியை போல் இன்னும் ஒரு இரத்த களரியை தடுப்பதற்கு உரிய நிலமையில் இருந்து எப்படி ஒரு அமைதியான சூழலை தொடர்ந்து தக்கவைப்பது இந்த சவாலை எப்படி எதிர் கொள்வது என சிந்திக்காமல் இருக்க முடியாது அந்த வலி வேதனையை சொல்லியிருக்கின்றோம்

    இந்த கடும் போக்குவாதிகள் எப்படி உருவாகின்றார்கள் உருவாக்கப்படுகின்றனர் என தேடிபார்க்கவேண்டும் சனல் 4 வீடியோ காட்சியை வைத்து சில அரசியல்வாதிகள் என் மீது கைநீட்டி காட்டினர். நான் விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் சிங்கள உறவில் நீணடகாலமாக பாதிக்கப்பட்ட அரசியல் பாடம் சந்தித்தனவன் நான் அந்த காலத்தில் மிகப் பெரும் தாக்குதல் நடாத்த எத்தனை ஆண்டுள் சென்றது

    சாதாரன ஒரு மதக் குழுவில் இருக்கின்றவர்கள் பெரும்பான்மை குழுவில் இருந்தால் எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு தான் இந்த புத்தகம் பதில் சொல்லியிருக்கின்றது எப்படி மெல்ல மெல்ல எமது மண்ணில் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது என அறியவேண்டும். இந்த மண்ணிலே சாதாரணமாக தமிழ் அரசியல் கட்சிகள் போல வெறுமனவே சாதாரணமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க முடியாது ஒரு ஆழமான கருத்தாடலையும் அறிவு சாந்த திட்டமிடுபவர்களாக இருக்கவேண்டும்

    சிறைச்சாலைக்குள் இருந்து கொண்ட இவர்கள் தமது உடைகளை கழுவுவதற்கு (சீமெந்து பாக்)  மாட்டுதாள் பாக்கில் அரபு எழுத்தில் எழுதி அதனை திருப்பி வைத்து அதற்குள்  உடைகளை வைத்து வெளியே அனுப்புவார்கள் அதில் அரபி எழுத்தில் என்ன தவல் கொடுத்து அனுப்புகின்றார்கள் என தெரியாது அதனை பார்க்க கூடிய அறிவு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கவில்லை இன்று கூட அந்த நிலமை அப்படித்தான் இருக்கமுடியும்.

    எனவே எங்கள் மண்ணிலே எங்களுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள் இப்படி ஒரு சம்பவம் இன்னும் ஒரு முறை நடக்க கூடாது என அரசு சிந்திக்க வேண்டும்;.

    இந்திய எல்லைப் புறத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ் தலைவரை நேற்று இந்தியா கைது செய்தது ரஷ்யாவில்; துப்பாக்கி சூடு நடக்கபோவதாக அமெரிக்க உளவு பிரிவு அறிவித்தது அதனை ரஷ்யா எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபோல கணக்கு எடுக்வில்லை எனவே எல்லோரும் ஒன்றுபட்டு சிந்தித்தால் மட்டும் தான் இந்த போர்பிரகடனத்தையும் சவால்களையும் வெல்ல முடியம். ;

    காத்தான்குடியில் வஹாபிச கருத்துக்களில் இருக்கின்ற பள்ளிவாசல் எத்தனை; சூபிக்கள் என்றால் யார். சியா சுனிமுஸ்லீம்கள் என்றால் என்ன  அங்கு இருக்கின்ற அது போன்று ஏனைய மதப்பிரிவுகள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

    இந்த உயிரை பயணமாக கொடுத்தவர்கள் எல்லோரும் மிக வசதி படைத்தவர்கள் இந்த வீடியோவில் காட்டப்பட்ட  பலர் வசதி படைத்தவர்கள் அவர்களுடைய கம்பனி வாகரையிலே ஒரு பண்ணைக்காக பதியப்பட்டுள்ளது இதே கம்பனி தான் ஸரானை ஜப்பானுக்கு அழைத்து சென்றது அவருக்கு பித்தழையை வாங்கி கொடுத்திருக்கின்றது

    மில்கானை சவுதிக்கு பொலிஸ் பாயிஸ் அழைத்து கொண்டு சென்று விட்டுவந்துள்ளார்  ஓட்டு மாவடியில் இருக்கின்ற மௌலவி சிறைச்சாலைக்கு தொழுகைக்காக அதிக பணத்தை கொடுத்துவபவரின் தந்தையாக இவர் பள்ளிவாசலால் அதிக உதவி செய்கின்ற பேர்வையில் அவர் அங்கு சந்திக்க இடம்பெற வாய்ப்பு இருக்கின்றது  எங்கள் நாட்டு புலனாய்வு பிரிவு பலவீனப்பட்டு போயுள்ளது அரசியல் சூழல் காரணமாக நடவடிக்கை எடுப்பதற்கு பேசுவதற்கு எல்லோரும் அச்சப்படுகின்றனர்

    7ம் 8ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கருப்பொருளான மதமாற்றம் 5000 ஆயிரம் வருடமான இந்த மண்ணின் பாரம்பரியமான இந்த மாற்றத்தை தீர்மானிக்கின்ற அளவிற்கு சென்றிருக்கின்றது என்றால் அந்த பிழையை யார் ஏற்றுக் கொள்வது 1922 ம் ஆண்டு தொடக்கம் ஈழகனவுகளில் நாங்கள் மிதக்க 1938 எண்ணை கலாச்சரம் சவூதியில் ஏற்பட்ட மாறுதல் அது வளர்சியடைந்த அந்த அரபு தேச கலாச்சாரத்தை 1990 ம் ஆணடு குழந்தைகளுக்கு  ஊட்டப்படுகின்றது 1980 புத்தளத்தில் சரியா சட்டம் அச்சிடப்பட்டிருக்கின்றது சரியா சட்ட கல்லூரி இங்குவந்து அமைக்கப்பட்டிருக்கின்றது என சொன்னால் இதை கண்டும் காணாமல் போன சமூகம் யார் என சொன்னால் குண்டு வெடித்ததன் பின்னர் அதை பேச நாங்கள் அருகதை இல்லை என பேசுவோமாக இருந்தால் இதையார் பேசுவது எமது பிள்ளைகள் மரணிக்கும் வரை காத்திருக்க போகின்றோமா ?

    ஒரு நாட்டின் பலம் கருவில் பிள்ளை சாகாமல் தடுப்பது பிறக்கும் பிள்ளை ஆரோக்கியமாக பிறப்பது பிறந்த பின்னர் தாயும் சிசுவும் பாதுகாப்பாக வாழ்வது ஆனால் வாஹபிச கொள்கை இஸ்லாமுக்கு எதிரான  காபீர்கள்களை கண்ட இடத்தில் பிரடியை வெட்டுங்கள் என்று சொன்னால் நேற்று இறந்து போன குழந்தைகள் மாத்திரம் தான் குழந்தைகள் தன எமது குழந்தைகளுக்கு  வரும்வரை காத்திருக்க போகின்றோமா இன்னுமொருமுறை வராமல் தடுக்க வேண்டும் என்றார்.


    https://www.supeedsam.com/198277/

  19. சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!

    Vhg மார்ச் 25, 2024
    Photo_1711326896333.jpg

    கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா  (23-03-2024) ஆம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

    மங்கல விளக்கேற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரை, அழகிய வரவேற்பு நடனம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

    நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

    Photo_1711326896931.jpg

    சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினால் வெளியிடப்பட்ட இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட எழுதப்பட்டுள்ள இப்புத்தகமானது நூலாசிரியரின் இரண்டாவது நூலாக திகழ்கின்றது.

    கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சரினால் அவதானிக்கப்பட்ட விடயங்களின் தொகுப்பாக இந் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வள்ளிபுரம் கணகசிங்கம், இராஜாங்க அமைச்சரின் தாயார் கமலா சிவநேசதுரை உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

    இராஜாங்க அமைச்சர் சிறைவாசம் அனுபவித்த போது அவரது முதல் நூலான வேட்கை எனும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
     

     

    https://www.battinatham.com/2024/03/blog-post_780.html

  20. தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும்.

    March 26, 2024

    ( வி.ரி. சகாதேவராஜா)  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம்.

     இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர்  டாக்டர் அன்பாஸ்பாறூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

     அவர் மேலும் தெரிவிக்கையில்..

     இலங்கையில் வைத்தியர்களுக்கு போதுமான ஊதியம் பாதுகாப்பின்மை காரணமாக பலர் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் . இந்த சூழலில் திருக்கோவிலில் கடந்த 11ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் 17 வயது மரதனோட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார் .அதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது சீருடை அணிந்த மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தினார்கள். பாடசாலை நேரத்தில் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?  பொதுமக்கள் பின்னால் அரசியல்வாதிகள் இருந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் எமது வைத்தியர்களை விலக்கி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம் . இதனால் கடந்த இரு வாரங்களாக வைத்திய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதில்  ஒருவித அசமந்த போக்கு இழுத்தடிப்பு செய்கிறது.இன்னமும் அங்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது.

     இந்த நிலை தொடர்ந்தால் இந்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படக்கூடிய அபாயமும் இருக்கின்றது. இதனால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் .

    இருந்த பொழுதிலும் எமது பாதுகாப்பு கருதி இன்றாவது  அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்முனை பிராந்திய சுகாதார வைத்தியசாலை உட்பட்ட வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கின்றோம் என்றார்.
     

    https://www.supeedsam.com/198320/

  21. முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் - கருணா அம்மான்

    Vhg மார்ச் 25, 2024
    Photo_1711353638930.jpg

     

    மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

    பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை கருணா அம்மான் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். 

    மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட அவர் எனக்கொரு கட்டளையிட்டிருக்கின்றார். 

    ஏனென்றால், முன்னாள் போராளிகள் நாட்டுக்காக கஷ்டப்பட்டு அது பலனளிக்கவில்லை என அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
     

    https://www.battinatham.com/2024/03/blog-post_523.html

  22. ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது

     

    ச.சேகர்

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

    image_7d2967f62a.jpg

    திறந்த பொருளாதாரமுறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த போதிலும், 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரையான பொருளாதார நெருக்கடி தோன்றிய காலப்பகுதியில், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி ரூ. 204 என்பதிலிருந்து ரூ. 369 ஆக சடுதியாக வீழ்ச்சியடைந்தது. அதுபோலவே, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 2023 பெப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் ரூ. 364 இலிருந்து ரூ. 290 ஆக உயர்ந்திருந்தது. ரூபாயின் பெறுமதியின் ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளின் விளைவாக இந்நிலை ஏற்பட்டிருந்தது.

    இவ்வாறு ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளமை என்பது பொருளாதார மீட்சியின் அடையாளமாக அமைந்துள்ளதாக பொதுவான கருத்துகள் காணப்படுகின்றன. அதில் ஓரளவு உண்மைத்தன்மையும் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 1977 ஆம் ஆண்டின் பின்னர் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக் கணக்கில், ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவீனம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் போன்ற வியாபார மீதி அடங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவீனம் வழமைபோல அதிகமாக காணப்பட்டது. இதனால் வர்த்தக மீதியில் மீதியில் மறைப் பெறுமதி பதிவாகியிருந்தாலும், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் சுற்றுலாத் துறை வருமானம் போன்றன உயர்வை பதிவு செய்திருந்தமையினால் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதியை எய்த முடிந்திருந்தது.

    நிதிக் கணக்கு என்பது எவ்விதமான முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் தவணைகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து கடன்கள், நட்பு நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் போன்றன கிடைத்திருந்தன. கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களினூடாக நாட்டினுள் பணப்பாய்ச்சல் காணப்பட்டது. இவை பொருளாதார மீட்சிக்கான நேர்த்தியான அடையாளங்களாகும். மேலும் பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும், பண்டங்களின் விலை உயர்வாக காணப்படுகின்றமையாலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் நுகர்வில் வீழ்ச்சி பதிவாகியிருக்கலாம். இதனால் இறக்குமதி செலவு குறைவதில் பங்களிப்பு வழங்கியிருக்கும்.

    சந்தையினுள் வரும் டொலர்களின் எண்ணிக்கை, வெளிச்செல்லும் டொலர்களை விட உயர்வாக இருந்தமையினால், சந்தையில் டொலர்களின் மிகை நிலை காணப்பட்டது. இதனால் சந்தையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக சந்தையில் மிகையாக காணப்படும் டொலரை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை உயர்த்தியிருந்தது. இவ்வாறு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அந்நியச் செலாவணி இருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இதில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு சந்தையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகும்.

    இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைவதற்கான காரணம் இதுவாகும். எவ்வாறாயினும், உண்மை நிலை இதுவல்ல. தற்போதும் நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்றுமதியில் ஈடுபடுவோர் தமது டொலர் வருமானங்களை உடனடியாக ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் விதிமுறை காணப்படுகின்றது. நாடு பெற்றுக் கொண்ட சர்வதேச கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. எனவே, சந்தையில் ஏற்பட்டுள்ள டொலர் மிகை என்பது உண்மையான நிலைவரம் அல்ல. சந்தையிலிருந்து சில காரணிகள் பலவந்தமாக கட்டுப்படுத்தப்படுகின்றமை இந்த பெறுமதி வீழ்ச்சியில் பங்களிப்புச் செலுத்துகின்றது. இந்தக் காரணிகளும் தளர்த்தப்படும் போது, இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

    இலங்கையில் நுகர்வோர் பொருட்கள், இடைப்பாவனை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இல்லை. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களில் இதுவரையில் விலைக்குறைப்பு ஏற்படுத்தப்படவில்லை. பால்மா விலையில் மாத்திரம் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக, நாட்டில் பொது மக்களின் வாழ்க்கைச் செலவில் பிரதான தாக்கம் செலுத்தும் காரணியான எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் நிலவிய எரிபொருள் விலை உயர்வுகள் மற்றும் ஜனவரி மாதம் முதல் எரிபொருள்கள் மீது பெறுமதி சேர் வரி பிரயோகிக்கப்பட்டுள்ளமை போன்றன இத்தத் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.

    நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதுடன் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்தால், அது இயற்கையானது. தற்போதைய நிலை மிகவும் தற்காலிகமானதாகும். எதிர்காலத்தில் இறக்குமதிகள் கட்டுப்பாடுகள் மேலும் தளர்க்கப்பட்டதும், பெற்ற கடன்களை மீளச் செலுத்த ஆரம்பித்ததும், இந்த நிலை மாறும். ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிக்கும்.

    தற்போதைய பொருளாதார மீட்சி என்பது வெறும் மாயக் கதை, விரைவில் நாம் மீண்டும் பின்நோக்கி செல்வோம் என்றவாறான கருத்துகள் பகிரப்படுகின்றன. முறையாக பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படாவிடின், நாட்டின் பின்நோக்கிய நகர்வை தடுக்க முடியாது. நாட்டினுள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், அது சார்ந்த வருமதி அதிகரித்துள்ளது மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய கால அடிப்படையில் இந்த இரு துறைகளினூடாகவும் நாட்டினுள் அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்கும்.

    ஆயினும், தேர்தல்கள் தொடர்பில் பேசப்படும் நிலையில், கடந்த காலங்களைப் போன்று, மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக நிவாரணம் வழங்குகின்றோம் எனும் போர்வையில், மீண்டும் நாட்டை பின்தள்ளும் தீர்மானங்களை அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் நன்று.
     

     

    https://www.tamilmirror.lk/வணிகம்/ஏன்-ரூபாயின்-மதிப்பு-உயர்கிறது/47-335088

    • Thanks 1
  23. யாழில் இருந்து கொழும்பு வந்தவரை ஆட்டோவில் ஏற்றி பணம், நகைகள் கொள்ளை!

    யாழ்ப்பாணத்திலிருந்து தனது மனைவியுடன் கொழும்புக்கு வருகைதந்த இளம் வர்த்தகர் ஒருவர் புறக்கோட்டையில் வைத்து ஆட்டோ சாரதியினால் கடத்தப்பட்டு நகைகள், பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

    இவர் தனது மனைவியுடன் கொழும்பு பம்பலப்பிட்டிக்கு வந்திருந்த நிலையில் வர்த்தக நடவடிக்கைக்காக புறக்கோட்டைப் பகுதிக்கு தனியாக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

    யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மகப்பேற்று மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் வர்த்தக அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் புறக்கோட்டைப்பகுதிக்குக்கு வந்தேன்.அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.

    அப்போது புறக்கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார். பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன்.

    பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குத் தான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.

    நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன்.அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார். மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.

    அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார்.
    ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.

    எனக்கு சந்தேகம் வந்தது.அதனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என அவரிடம் வேண்டினேன். அப்போது அவர் என்னை மிரட்டி அந்த பானத்தை குடிக்க சொன்னார் ஓட்டோவைச் சுற்றி அவரின் கையாட்களான இருவர் அங்கு நின்றதை அவதானித்தேன் .ஆனாலும் நான் மீண்டும் மறுத்தபோது அவர் எனது கழுத்தைப் பிடித்து அந்த பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார்

    அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரளையை நோக்கிச் செலுத்தினார். எனக்கு அருகில் இருவர் ஏறி அமர்த்திருந்ததை நான் உணர்ந்தேன்.பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது

    மயக்க நிலையில் இருந்த என்னை சனிக்கிழமை அதிகாலை கம்பஹா திவுலுப்பிட்டிய பகுதியில உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் வீதி ஓரமாக தள்ளிவிட்டு ஓட்டோக்காரர்கள் சென்று விட்டனர் ,நான் வீதியில் மயக்க நிலையில் கிடந்ததைக்கண்ட சிலர் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததாக பின்னர் அறிந்தேன்.
    அத்துடன் எனது கையில் இருந்த மோதிரம், கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் .ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டேன் , கடவுச் சொல்லை எப்படி என்னிடமிருந்து பெற்றார்கள் என்று எனக்கு புரியவில்லை மயக்க நிலையில் இருந்த என்னிடம் ஏதோவெல்லாம் கேட்டார்கள் நான் பிதற்றியதை என்னால் கொஞ்சம் உணர முடிந்தது என்றார்

    இச் சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி கூறுகையில்,

    இரவு எட்டு மணியளவில் வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற எனது கணவர் இரவு பத்து மணியாகியும் வரவில்லை. தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அதற்கும் பதில் இல்லை.

    கணவர் ஒருபோதும் எனது தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமல் இருக்கமாட்டார். அதுவும் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நிச்சயமாக குறித்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டும்.

    ஆகவே அவருக்கு ஏதோ நடந்து விட்டது என்ற அச்சத்துடன் நான் அனுமதிக்கப்பட்டிருந்த பம்பலப்பிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கொழும்பில் உள்ள எனக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் உதவி கேட்டேன். நள்ளிரவு என்பதால் பலரும் தயங்கினர்.

    பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதென்றாலும் என்னால் மருத்துவ மனையை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.அப்படியிருந்தும் இரவிரவாக விழித்திருந்து எனக்குத் தெரிந்த சிலருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

    அதிகாலை மூன்று மணியளவில் கட்டுநாயக்காவில் உள்ள பணம் எடுக்கும் தானியக்க இயந்திர (ATM) நிலையத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும், பின்னர் இரண்டு தடவைகள் ஐயாயிரம் ரூபாவும் அடுத்தடுத்து எடுக்கப்பட்டமைக்கான குறுஞ் செய்தி எனது தொலைபேசிக்கு வந்தது.இதனால் எனது கணவருக்கு ஏதோ ஆபத்து நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு எனது வங்கி அட்டையின் இலக்கத்தைத் இடைநிறுத்தினேன் .

    அடுத்த நாள் அதிகாலை நன்கு தெரிந்த ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்.கணவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு கூகுல் வரைபடத்தைப் பெற்ற பொலிஸார் புறக் கோட்டை போஹா சந்தியில் இருந்து மருதானை பொரளையூடாக கட்டுநாயக்கா மீரிகானைக்குச் சென்றிருப்பதாகக் கூறினர்.மீரிகானையுடன் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணியளவில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து தாதியொருவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் கணவர் என்னுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கினார்.அதனையடுத்து வைத்தியாசலைக்குச் சென்று கணவரைப் பார்வையிட்டேன்.பொலிஸாரும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டனர் என்றார்.

    இதேவேளை கொழும்பில் சமீபகாலமாக இவ்வாறான கடத்தி பணம்பறிக்கும் சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிவித்த பொலிஸார் கொழும்புக்கு வரும் மக்களை ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்துவதில் மிகவும் எக்காரிகையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
     

    http://www.samakalam.com/யாழில்-இருந்து-கொழும்பு-4/

  24. திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது?

    SelvamMar 24, 2024 17:36PM
    Screenshot-2024-03-24-173059.jpg

    திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29-ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ரிமோட் எடுத்து டிவியில அடிச்சீங்களே, அந்த ஆளு தான இப்போம் திமுக கூட்டணிக்கு போகுறீங்கன்னு சொல்றாங்க…

    ரிமோட் இன்னும் என் கையில தான் இருக்கிறது. டிவியும் அங்கே தான் இருக்கிறது. நம் வீட்டு டிவி, நம் வீட்டு ரிமோட். ஆனால், அந்த டிவிக்கான கரண்ட்டையும், ரிமோட்டுக்கான பேட்ரியையும் மத்தியில் ஒரு சக்தி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

    இதை நான் இனிமேல் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செய்கைகளுக்கு இனி அர்த்தமே இல்லாமல் போய்விடும். நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியதில்லை.

    அரசியல் களத்தில் தன் எதிரி யார் என்பதை முடிவு செய்தால் தான் வெற்றி நிச்சயம். நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் அரசியல் எதிரி என்றென்றும் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை சாதியம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் எத்தனை பேர் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார பயண திட்டம் வெளியாகியுள்ளது.

    Screenshot-2024-03-24-150922.png

    அதன்படி,

    மார்ச் 29 – ஈரோடு

    மார்ச் 30 – சேலம்

    ஏப்ரல் 2 – திருச்சி

    ஏப்ரல் 3 – சிதம்பரம்

    ஏப்ரல் 6 – ஸ்ரீபெரும்பதூர், சென்னை

    ஏப்ரல் 7 – சென்னை

    ஏப்ரல் 10 – மதுரை

    ஏப்ரல் 11 – தூத்துக்குடி

    ஏப்ரல் 14 – திருப்பூர்

    ஏப்ரல் 15 – கோவை

    ஏப்ரல் 16 – பொள்ளாச்சி

     

    https://minnambalam.com/political-news/kamal-haasan-starts-election-campaign-dmk-alliance/

    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.