கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  18,083
 • Joined

 • Days Won

  71

Everything posted by கிருபன்

 1. ஊரில் சாதி முறை இருந்தது (தற்போது அழிந்துகொண்டு போகின்றது). இங்கு புதிய சாதி முறைகளை அறிமுகப் படுத்திவிட்டால் போயிற்று. 1. ஸ்ருடன்ற் விசாக்காறர் 2. ஸ்பொன்சர்காறர் 3. அகதிக்காறர் அ) நிரந்தர வதிவுடமை பெற்றோர் ஆ) இன்னும் அகதியாக இருப்போர் இ) நிராகரிக்கப்பட்டோர் தரப்பட்ட வரிசையின்படி இறங்குவரிசைப் படுத்திக் கொள்ளலாம்.
 2. நான் ஸ்கொலர்ஷிப்பில் வந்தேன். போதுமா? :P :wink:
 3. சங்கர்லால். நான் வாய்ச்சவடால் விடுகின்றேன். அது எனது உரிமை. நீர் கண்ட இடத்தில் எல்லாம் குசுவிட்டுக் கொண்டு திரியாமல் இருக்கப் பழகவும். :evil: கருத்துக்குப் பதில் எழுதுவதை விட்டுவிட்டு என்னைப் பற்றி ஆராய வெளிக்கிட்டு உமக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. உம்மைப் போன்ற போக்கற்றவர்களுக்குப் பதிலளிப்பது எனக்குத் தேவையில்லாத வேலை. வெட்டி ஒட்டுவதை விட்டு விட்டு சொந்தமாக சிந்திது எழுதப் பழகவும். :twisted: :twisted:
 4. தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள். அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன். 80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள். 1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க 2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக 3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி 4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற) 5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்) காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்? இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர். மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம். 90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது. மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது. ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.
 5. நேரடியாக அதிகம் கருத்தாடாவிட்டாலும், உங்கள் நகைச்சுவையாக கருத்துக்களை (அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டுபவைகளாகவும் உள்ளவற்றை) படித்துப் பயன்(!) பெற்றவன் என்ற முறையில், பிரியாவிடை சொல்லத் தயக்கமாக உள்ளது. இது தற்காலிகப் பிரிவு என்றே யாழ் கள உறுப்பினர்கள் கருதுவார்கள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தருவீர்கள் என்ற நம்பிக்கயுடன், உங்கள் தாயகப் பயணம் (வாழ்வு) இனிதாக இருக்க வாழ்த்துகின்றேன்.
 6. தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)
 7. வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது. பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.
 8. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம். விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்) யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும். தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.
 9. அப்படியா. எனக்குப் பிடித்த இன்னுமோர் பாடல் இதோ. பாடல்: காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் (காதல்) தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம் வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல் (காதல்) வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தேய்ந்து போ பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல் (காதல்)
 10. பாடல்: காதல் கடிதம் தீட்டவே குரல்: உன்னி மேனன், எஸ் ஜானகி வரிகள்: வைரமுத்து ம்ம்...ம்ம்ம்... காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் (காதல்) கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா லலா லாலல லாலா லாலா லாலா லாலலா காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் ஓ...
 11. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அந்தத் துறையில் உள்ள Journals களில் வெளிவரவேண்டும். Journals கட்டுரைகள் பல விஞ்ஞானிகளின், அறிவாளிகளின் விமர்சனத்திற்கு உட்பட்டபின்னர்தான் வெளியிடப்படுகின்றன. Conference களில் வெளியிடப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே விஞ்ஞானிகள், ஆய்வுவல்லுனர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க ஆரியரின் படையெடுப்பு பொய் என்று வந்த கட்டுரையின் தகமை என்ன என்பதை புரிந்துகொண்டால் வீணே இவ்வளவு பக்கங்களை விரயம் செய்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரியர் படையெடுத்தன்ர் என்பது உண்மையானால், பலகலைக் கழகங்களில் உள்ள மானுடவியல் பாடவிதானங்கள் மாற்றத்திற்கு உட்படும். அப்போது தெரியும் எது உண்மை, பொய் என்று (யாழ் களத்தில் எழுதுவதன் மூலம் பொய்யை உண்மையாக்க முடியாது, உண்மையைப் பொய்யாக்கவும் முடியாது)
 12. அப்ப குருவியும் மலரண்ணியும் சிவனும் சக்தியுமாகி அற்பமானிடர் எம்மையெல்லாம் இரட்சிக்க அவதரித்துள்ளனர். எல்லோரும் உங்கள் பாபங்களைப் போக்க குருவியையும் மலரண்ணியையும் வணங்கி குருவிக்கடவுளின் அறிவுரைகளைக் கேட்டு, அவற்றின்படி நடந்து, மற்றவர்களையும் நடக்கத் தூண்டி வாழக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்
 13. ஆங்கிலம் பாவனையில் இல்லாத ஐரோப்பிய நாடுகளில் சென்ற தமிழர்கள் அந்நாட்டு மக்களின் மொழியுணர்வைக் கண்டு தாமும் தம்மொழி மேல் பற்று வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். :roll:
 14. ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் உண்மையாகிவிடமுடியாது. தென் கொரிய விஞ்ஞானி மனிதரைக் "குளோனிங்" செய்தேன் என்று பல கட்டுரைகள் படைத்தார். என்னவாயிற்று? மேலும் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஆரியர் வருகையை எவரும் தனியே ஜீனோமை வைத்து மட்டும் மறுதலிக்கமுடியாது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இலகுவான முறையில் எளிமையான தரவுகளைக் கொண்டு எதையும் நிறுவமுடியாது. புள்ளிவிபரவியல் என்பதே uncertainity பற்றிய கணித ஆராய்ச்சி. இதை வைத்து எதையும் certain என்று சொல்லமுடியாது. உ.ம். MMR குழந்தைகளுக்கு autism ஏற்படுத்தும் என்று கூறியது.
 15. குறும்படங்கள் மென்மேலும் படைக்க வாழ்த்துக்கள் அஜீவன்.
 16. மற்ற இனத்தினருக்கு சட்டம், பொலிஸ் என்ற பயம் உள்ளன. லண்டன் தமிழரில் பலர் சட்டம், பொலிஸ் என்றெல்லாம் சிந்திப்பதேயில்லை. எனவே கொலைகள் நடக்கின்றன. மேலும் கொலையாளிகளை எம்மவர்கள் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் (வெகுமதி கொடுத்தால் செய்வார்கள்). எனவே சண்டியர்களுக்குத் தைரியம் இருக்கின்றது (தைரியம் இல்லாமல் எப்படி சண்டியராவது?)
 17. Churchill took hardline on Gandhi Winston Churchill favoured letting Gandhi die if he went on hunger strike, newly published Cabinet papers show. The UK's WWII prime minister thought India's spiritual leader should be treated like anyone else if he stopped eating while being held by the British. But his ministers persuaded him against the tactic, fearing Gandhi would become a martyr if he died in British hands. Gandhi was detained in 1942 after he condemned India's involvement in the war but never went on hunger strike. Many British officials initially took a hardline stance to the possibility of such action. The Viceroy of then British-run India, Lord Linlithgow, said he was "strongly in favour of letting Gandhi starve to death". But senior government figures, such as former foreign secretary Lord Halifax argued: "Whatever the disadvantages of letting him out, his detention would be much worse." Eventually in January 1943, ministers decided that although they could not give into a hunger strike publicly - they would be willing to release the spiritual leader on compassionate grounds. "He is such a semi-religious figure that his death in our hands would be a great blow and embarrassment to us," said Sir Stafford Cripps, then Minister for Aircraft Production. Failing health But Churchill had said he would prefer to keep Gandhi locked up and let him do "as he likes". However, he added: "But if you are going to let him out because he strikes, then let him out now." Gandhi was eventually released in 1944 because of fears his failing health meant he could die in British custody. He was assassinated on 30 January, 1948, aged 78, after Indian independence. The full papers are on display at the National Archives in Kew, south-west London. http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4573152.stm
 18. எது எதுக்கெல்லாம் வழக்குப் போடுகின்றது என்று விவஸ்த்தை கிடயாது?? இதற்குள் மக்கள் படம் பார்த்து விழிப்படைந்துவிடுவார்கள் என்று நினைப்பு வேறு.
 19. தேசியத்துக்கு எதிரான வானொலிகளையும், இணையத் தளங்களையும் கேட்டும்/பார்த்தும் அவர்களின் வளர்ச்சிக்குத் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வதை விட்டுவிட்டால் அவர்கள் தாங்களாகவே காணாமல் போய்விடுவார்கள். இத்தகைய ஊடகங்களில் விவாதங்களில் பங்குபற்றுவது பிரயோசனமில்லாத ஒன்று.
 20. "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்"
 21. பின்வரும் இணைப்பில் உள்ளதைப் படித்தால் இன்னும் சில விடயங்கள் வெளிக்கும். http://www.tamilcircle.net/news/kuspu.htm
 22. இந்திய சுதத்ந்திரப் போராட்டத்தைப் பின்பற்றித் தான் தமிழரின் ஆரம்பகாலப் போராட்டங்கள் இருந்தன. காந்தீயத்தை வைத்து ஒரு சுண்டைக்காயைக் கூட சிறிலங்கா அரசிடம் இருந்து நாம் பெறமுடியாது என்று புரிந்து 30 வருடங்களைத் தாண்டியாயிற்று. இதன் பிறகும் இத்தகைய வழக்குகளையும்/விவாதங்களையும் செய்து என்ன சாதிக்க முயல்கின்றீர்களோ தெரியவில்லை. பக்கங்கள் வீணாவதுதான் மிச்சம். பி.கு. சுகுமாரன் இணைத்த ஆங்கிலக் கட்டுரைகளை அவர் முழுமையாகப் படித்தாரோ தெரியாது. கூகிளில் தேடி, வெட்டி ஒட்டியதாக இருக்கும். மெனக்கெட்டு தட்டச்சு செய்திருந்தால் அவரைப் பற்றி வேலை வெட்டி இல்லாத ஆட்கள் எவருமில்லை.
 23. நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம். தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள். http://www.tamilnation.org/
 24. காந்தீயத்தைப் பற்றி கள உறுப்பினர்கள் மட்டும்தானா அறியவேண்டும்? விருந்தினர்கள் அறியக்கூடாதா? அது சரி. தமிழீழத்தில் காந்தீய வழியில் போராடிக் களைத்துத்தானே, வன்முறைப் போராட்டம் ஆரம்பித்தது. தொடங்கியவர்கள் காந்தீயத்தைப் பற்றி நன்கு அறிந்து அதன் பிரயோகம் தமிழரின் போராட்டத்திற்குச் சரிவராது என்று விட்டுவிட்டனர். இந்த வேளயில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தீயத்தின் பங்கை ஆராய்ந்து என்ன பிரயோசனம்? முனைவர் பட்டத்திற்குப் படிப்பவர்களுக்கு உதவும், பலரும் இதனை எழுதியே முனைவர்களாகி இருப்பார்கள்.
 25. ஒருவர் கூட இன்னமும் கவிதைகளைப் படித்து தமது கருத்துக்களை வைக்க முன்வரவில்லை. இதற்குள் விமர்சகர்கள், வித்தகர்கள் என்று நினைப்பு வேறு. வளரும் கலைஞனை உற்சாகப்படுத்த அவனது ஆக்கங்களை விமர்சியுங்கள். கவிதைப் புத்தகத்தை வாங்கவும் காசில்லை என்பது போல் தெரிகின்றாது. அதில் என்ன உள்ளது என்று ஆராயமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து என்னத்தை விமர்சித்துக் கிழிக்கிறீர்கள். யாழ் களம் கள்ளுக்கொட்டில் என்று யாரோ எழுதியதை உண்மையாக்குவது போலுள்ளது இங்குள்ள கருத்துக்கள். :twisted: