Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  24,392
 • Joined

 • Days Won

  86

Everything posted by கிருபன்

 1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவை – மன்னார் மறைமாவட்ட ஆயர் பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்களையே அதிகளவு சமூகத்தில் காண்கின்றோம். ஆகவே மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்
 2. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
 3. அதை பிறப்பதற்கு இரண்டு நாள் முதலே யாழ் களத்தில் சேர்ந்து இப்பவும் 13 வயதில் இருக்கும் தமிழ் சிறி ஐயா சொல்லக்கூடாது! நான் எப்போதும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன்.. கட்டுப்பட்டவன்..!
 4. மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதா
 5. 2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது! April 17, 2021 துணிச்சல் மிக்க பெண்ணிற்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு. 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்ணிற்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17.04.21) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில், மாலை 3 ம
 6. ஆமோதிக்கின்றேன்.. இது தாயகத்தில் இருப்பவர்களை அவமதிக்கும் கருத்து. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் புதிய தலைமுறையினருக்கு தாயகத்தில் இருப்பவர்களின் உண்மையான பிரச்சினைகள் விளங்க வாய்ப்பில்லை. எதையும் ஜனநாயகம் மிதமிஞ்சிக் காணப்படும் மேற்குநாடுகளின் சிந்தனை வழியேதான் சிந்திப்பார்கள். தாயக மக்கள் வெளியாரின் தலைமையை ஏற்கவேமாட்டார்கள்.
 7. நானும் பார்த்தேனே.. ஏன் காணாமல் போனது என்று மட்டூஸைத்தான் கேட்கவேண்டும். வெறும் முக குறியாக கருத்து வைக்கக்கூடாது என்று ரூல்ஸ் இருக்குப் போலிருக்கு! இதற்காக திரியில் இருந்து யாயினி காணாமல் போகக்கூடாது
 8. எல்லாம் blank ஆ இருக்கே! நாம் வாழும் சமூகம் எனும்போது சிந்திக்காமல் விடுவதே சிறந்தது என்று சிம்பொலிக்காக சொல்கின்றீர்களா?
 9. அபிலாஷ் சந்திரன், ராஜன் குறை போன்ற பத்தியெழுத்தாளர்கள் திமுக ஆதரவான நிலையில் இருந்தாலும் கண்மூடி கட்சியை ஆதரிக்கும் விசுவாசிகள் அல்ல. தர்க்கரீதியாகத்தான் எழுதுவார்கள். அதனால்தான் நீங்களும் நானும் அவர்களின் எழுத்தைப் படிக்கின்றோம். அவர்களது எதிர் முகாம்களில் இருக்கும் ஜெயமோகனையும் படிக்கமுடிகின்றது திமுக அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்காக யாரோடும் கூட்டுச்சேரும். அவர்கள் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்ததே ஆட்சி அதிகாரம் வேண்டித்தான். ஆனால் திமுக, அதிமுக ஆட்சிகள் இல்லாவிட்டால் தமிழகம் பார்ப்பனியத்தின் கீழேயே இருந்திருக்கும். இப்போது மீண்டும் இந்துத்துவம் என்று பார்ப்பனிய ஆட்சி
 10. 2015 க்கு முன்னர் என்றால் மோகன் archive இல் போட்டிருப்பார். யாழில் உள்ள தேடு பெட்டியில் தேடினால் கிடைக்காது. ஆனால் கூகிளில் தேடினால் கிடைக்கும்! இப்படித் தேடினால் சிலவேளை கிடைக்கும். site:yarl.com “பிகிலு”
 11. யாரும் பதில் வைக்காவிட்டால் நானும் ஒன்றும் சொல்வதில்லை! ஏதாவது பத்தினால் நானும் என் கருத்தை வைப்பதுண்டு! கலையரசன் சொல்லும் இனம் சார்ந்த அரசியல் இனப்பற்று இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில். அபிவிருத்தி அரசியல் என்று புள்ளையான், கருணா அம்மான், வியாழன் செய்வது அடிமை சேவக அரசியல். நானேதான்!
 12. நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி
 13. செய்தியை ஒட்டினா, அதில் உள்ளதெல்லாம் எனது கருத்து என்று நம்புற அளவுக்கு நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை! நான் ஒன்றும் தீம்கா ஆளில்லை. நீங்கள் என்னதான் ஸ்டாலினை வறுத்தாலும் எனக்கு சுடாது. இனவாதத்திற்கும், இனப்பற்றுக்கும் நூலிழை இடைவெளிதான். அண்மையில் குணா கவியழகனும் ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லியிருந்தார். அதை விளங்கினால் நல்லது..
 14. பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு முடி வளர்த்துக்கொண்டோ அல்லது முழு மொட்டையாகவோ போகமுடியாது. அதனால் கொரோனாக் காலத்திலும் ஒழுங்காக முடியை நானே வெட்டிவிட்டேன்! ஆனால் நான் நேற்று பின்னேரம்தான் ஒரு வருடத்திற்குப் பின்னர் எனது சடாமுடியை வெட்டினேன்!
 15. இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன் வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!
 16. மெதுவான சென்னை சிதம்பரம் ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை நோக்கி ஆரம்பத்தில் சென்றாலும் விக்கட்டுகளை தொடர்ச்சியாக இழந்து தள்ளாடி இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 12 2 குமாரசாமி 12 3 பையன்26
 17. இந்த படம் நேற்றுத்தான் எடுத்தது! ஒரு வருடமாக வளர்த்த முடியை இறக்கமுன்னர் எடுத்த படம்
 18. பையா, உங்களைவிட யங்காக இருக்கிற இவர் ஆர் என்று சொல்லமுடியுமோ?
 19. இந்தப் பதிவு பிரதேசவாதத்தைத் தூண்டும் பதிவு என்று வடமராட்சி நண்பர்கள் குழுமம் (வேறு இடத்து ஆட்களை சேர்ப்பதில்லை!) வாட்ஸப்பில் சொன்னார்கள்!!
 20. எனக்கு விளங்கினால் ஏன் இணைக்கின்றேன்! யாராவது வாசித்து பொழிப்புரை சொல்வார்கள் என்றுதான் இணைக்கின்றேன் சாராம்சம் இதுதான்.... பிஜேபி இந்துத்துவத்தை கையில் எடுத்து நேரடியாகவும், பினாமிகளையும் வைத்து இந்தியாவில் மதச்சார்பின்மையை (secularism) ஒழிக்கும் திட்டத்தில் செயற்படுகின்றது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் சமூகத் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த பெரியாரிஸத்தையும், அதனை தற்போது தாங்கிப்பிடிக்கும் திமுகவையும் இல்லாமல் செய்தால் திட்டம் வெற்றியாகும். மதவாத அரசியலினால் மட்டுமே சமத்துவம் நிலவும் என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தை மும்முரமாக எடுத்து செல்வதும், அப்பாவி மக்களை நம்ப வைப்பத
 21. மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கக்கூடியதாக இருந்தது! மும்பை இந்தியன்ஸ் வெல்லும் என்று கணித்தவர்களுக்கு 10 முட்டை கிடைக்கும் போலிருக்கே!
 22. நன்றி. Watch List இல் சேர்த்துவிட்டேன். இந்த வாரம் பார்க்கலாம்!
 23. 9) ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை MI vs SRH 10 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் 4 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் கணித்துளனர். மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் பையன்26 நுணாவிலான் கறுப்பி சன்ரைசர்ஸ் ஐதராபாத் கல்யாணி நந்தன் வாத்தியார் கிருபன் இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
 24. திராவிடம் - தலித் - “நீல சங்கி”: ஒரு புரிதல் ஆர். அபிலாஷ் “கர்ணன்” படத்தை ஒட்டிய உணர்ச்சி கொந்தளிப்புகள் முடியட்டும், அதன் பிறகு திராவிட ஆதரவாளர்களில் சிலர் ஏன் தொடர்ந்து தலித் படைப்பாளிகள், சிந்தனையாளர்களை நீல சங்கிகள் என பழிக்கிறார்கள் எனக் கேட்கலாம் எனக் காத்திருந்தேன். இந்த விவாதம், சர்ச்சை புதியது அல்ல. அம்பேத்கரின் மூலப்பிரதிகளை படித்தவர்கள் ஒரு விசயத்தை கவனித்திருப்பார்கள் - அவர் தலித்துகளின் விடுதலையை அரசியல் பிரதிநுத்துவம் சார்ந்து மட்டும் காணவில்லை. அதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக தலித் ஒருவர் நிறுத்தப்பட்டாலோ, பொர
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.