கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,364
 • Joined

 • Days Won

  73

Posts posted by கிருபன்


 1. பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.!

  Last updated May 28, 2020

  29.05.2000 அன்று  மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன்  ஆகிய  மாவீரரின்    20 ம் ஆண்டு  வீரவணக்க நாள் இன்றாகும்


  ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது ‘சில்லறைச் சண்டைகள்’ மூண்டு தணிந்து கொண்டிருந்தன.

  ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.

  Maj-Suvarnan.jpg1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.

  “டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.

  “சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.

  “டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.

  சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.

  “சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.

  இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.

  யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.

  ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.

  50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.

  சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.

  அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.

  ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.

  முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

  Ratha_M-768x496-1.jpgமறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. ‘இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு’ என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.

  மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். ‘எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்’.
  ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.

  சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.

  ‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

  பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.

  இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.

  கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.

  முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.

  ‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’

  ‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’

  அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.

  எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.

  இப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

  ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.

  இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

  உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.

  திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.

  காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.

  அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.

  முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

  ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.

  -அன்பரசன்-


   

  https://www.thaarakam.com/news/133895


 2. வட, கிழக்கு இணைப்புக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ''ஜனாதிபதி செயலணி'' - சிவசக்தி ஆனந்தன்

  மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகையை  மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது. 

  sivasakthi.jpg

  அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது.

  அதன் வெளிப்பாடே கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

  இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

  கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி அமைத்துள்ளமையும், அதற்கு பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற கமால் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளமையும்  கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு திட்டத்தின் நீட்சியே. 

  தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் பெயரால், தேசிய பாதுகாப்பின் பெயரால், வன, நிலங்கள், தொல்பொருள் பகுதிகள் என்றெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அகலக்கால் பதித்து வருகின்றார்கள்.

  தமிழர்களின் பூர்விக நிலத்தினை முழுமையாக பறித்து சிங்கள தேசமாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு முனைப்புக்களைச் செய்துவருகின்றார்கள்.

  அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன .

  இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப் படுத்தியுள்ளனர்.

  இந்த விடயத்தினை தனியே கிழக்கு மாகாணத்தினை மட்டும் மையப்படுத்தி பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கை.

  ஆனால் சிங்கள பேரினவாதிகளை பொறுத்தவரையில் கொக்கிளாயில் சுமார் 60 சதுர கிலோ மீற்றர்களுக்குள் 5 கடற்படை முகாம்கள், 8 பௌத்த விகாரைகள், 10 இராணுவ முகாம்கள், 4 இராணுவ வியாபார நிலையங்கள் இவற்றுடன் சிங்களக் குடியேற்றங்களும்  ஏற்படுத்தப்பட்டு வடக்கையும் கிழக்கினையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

  இவ்வாறிருக்க, 1932ஆம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபி திட்டம், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று அபிவிருத்திட்டங்களின் போர்வையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

  கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பதை ஒரேநோக்காக வைத்து 24குடியேற்றத் திட்டங்கள் மாறி மாறி வந்த   ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 240 தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

  குறிப்பாக கிழக்கில் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழலில் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கும், அங்கு சிங்களவர்களின் சனத்தொகையை 55சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அப்போதைய மஹிந்த அரசு திட்டமிட்டிருந்தது.

  அதற்காக, திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர்.

   அவ்வாறிருக்கையில் தற்போது,  மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் கீழும் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

  இத்தகைய பின்னணிகளை வைத்துப் பார்க்கின்றபோது, மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இலக்கை அடைவதற்கு விழைகின்றமை வெளிப்படுகின்றது. அதாவது கிழக்கில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகை மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது. 

  அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது.இந்த முயற்சிகளுக்கு தொல்பொருளின் பெயரால் காய் நகர்த்தப்படுகின்றது. அதனை கச்சிதமாக செய்து முடிப்பதற்கும், அதுதொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் கேள்வி கேட்காது அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக படைத்தரப்பு அப்பணியில் களமிறக்கப்பட்டுள்ளது.  
   

  https://www.virakesari.lk/article/82972


 3. சிகிச்சை பலனின்றி கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

  நல்லத்தண்ணி, லக்ஸபான தோட்டத்தில் வாழைமலை பகுதியில் கடந்த 26 ஆம் திகதி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில், 6 அடி நீளமுடைய ஆண் கருஞ்சிறுத்தை கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சிக்கியது.

  வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் வைத்தே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

  பின்னர் பாதுகாப்பான முறையில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
   

  http://www.tamilmirror.lk/செய்திகள்/சிகிச்சை-பலனின்றி-கருஞ்சிறுத்தை-உயிரிழப்பு/175-251050


 4. இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

  இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகாலத்தில் சேறு உருவாவதை தடுப்பதை போன்ற விடயம் என தெரிவித்துள்ளது.

  குறிப்பிட்டசெய்தியில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகாலத்தில் சேறு உருவாவதை தடுப்பதை போன்ற விடயம் என தெரிவித்துள்ளது.யுத்தங்களின் கொந்தளிப்பான நிலை காரணமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஒருவர் பின்பற்றவேண்டிய தெளிவான விடயங்களை முன்வைக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என எந்தஉத்தியோகபூர்வ ஆவணமும் நிருபிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  ரத்னாயக்கவிற்கு தண்டனை வழங்குவதற்கு 13 வருடங்கள் எடுத்த போதிலும் இலங்கை நீதிமன்றம் இன்னும் நியாயமான சந்தேகங்களை கொண்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கமானது அதிகளவான விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், அவர்கள் மத்தியில் ரத்னாயக்க போன்று மோசமான நடவடிக்கைளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதன் காரணமாக மன்னிப்பு வழங்குவது நியாயமற்றதோ அல்லது ஒழுக்கமற்றதோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.அத்துடன், இராணுவதளபதி யுத்தகுற்றச்சாட்டிற்கு உள்ளான ஜெனரல் என தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமற்றது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.(15)
   

  http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-இராணுவத்திற்கு-எ-2/


 5. ஆறுமுகனின் பூதவுடலுக்கு கண்ணீருடன் வீதியில் நின்று மக்கள் அஞ்சலி

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பிலிருந்து இறம்பொடை, வேவண்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் தற்போது புசல்லாவை நகரில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  இன்று காலை கொழும்பிலிருந்து ஹெலிகப்டர் மூலம் கம்பளைக்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் அங்கிருந்து புஸல்லாவை வழியாக வேவண்டன் எடுத்துச்செல்லப்படுகின்றது. -(3)100972974_1514216022071407_2869693144830574592_n101349640_1514216228738053_7098830557961781248_n101850849_1514215818738094_5877626482167119872_nhttps://www.facebook.com/ArumuganThondaman/videos/270952124314238/
   

  http://www.samakalam.com/செய்திகள்/ஆறுமுகனின்-பூதவுடலுக்கு/


 6. ஏட்டிக்கு போட்டியாக இன்று கூடும் ரணில் – சஜித் அணிகள்

  ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று கூடவுள்ளது.
  ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்களை கட்சியிலிருந்து நீக்கும் வகையில் ஐ.தே.க இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது.
  இந்நிலையில் அதற்கு எதிராக சஜித் பிரேமதாச குழுவினர் கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். -(3)
   

  http://www.samakalam.com/செய்திகள்/ஏட்டிக்கு-போட்டியாக-இன்ற/


 7. 9 hours ago, பெருமாள் said:

  K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

   

  https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

  தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

  அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

  இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

  நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

  எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

   

  1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

   


 8. 41 minutes ago, உடையார் said:

  என்ன ஒரு ஏமாளியக இருக்கின்றீர்கள் 🤣. இதுவரை இவர்கள் செய்தவை தெரியாதா?

  இவர்கள்  கிந்திய றோவின் வழிநடத்தலில் தலை ஆட்டும் பொம்மைகள். ஜெயா கூட ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்ப இருப்பவர்கள் கை பாவைகள். 

  இவர்கள் தானாக ஓரங்கட்டப்படுவார்கள். இன்றைய இளைஞர்கள் நல்ல தெளிவுடன் தமிழ் இன உணர்வுடன் இருக்கின்றார்கள். எங்களில் சிலர்தான் நம்பிக்கையிழந்து நிற்கின்றோம்

  ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் குறைந்தது 60% சனங்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்.  அரசியல் பலமிக்கவர்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 80களில் இவர்களின் ஆதரவு இருந்ததால்தான் போராட்டமே வளர்ந்தது. ஆதரவு ஏன் இல்லாமல் போனது என்பதை நான் திரும்பவும் சொல்லத் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

  திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டலாம் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மனப்பால் குடிப்பதுபோல அண்ணன் சீமானின் தம்பிகளும் மனப்பால் குடிக்கலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் தெளிவாக இருப்பதனால்தான் திராவிடக்கட்சிகளை ஓரம்கட்ட முடியாமல் இருக்கின்றது😁

  ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

  1. கோத்தாவுடன் இணைந்து சிங்கள இனத்துடன் ஐக்கியமாதல்

  2. சமூக அக்கறையும், இராஜதந்திரமும் உள்ள ஓர் புதிய அரசியல் தலைமையை தாயகத்தில் கட்டியமைத்து, பின்தளமாக பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவுள்ள கட்சிகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினதும் துணையுடன் ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக்கொள்ளல்.

  இரண்டாவதைச் செய்ய நம்பிக்கையும், பொறுமையையும் இல்லாமல்தான் சீமான் போன்றவர்களின் பின்னால் சென்று முதலாவது தெரிவை விரைவுபடுத்துகின்றனர்.

   

  இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்

   

   

   

   


 9. 11 minutes ago, பையன்26 said:

  உங்க‌ட‌ விவாதாம் எம் இன‌த்தை அழித்த‌ திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காவால் தான் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று /

   

  என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

  எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

  நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁


 10. 10 minutes ago, பையன்26 said:

  நேற்று நான் இணைத்த‌ 40நிமிட‌ காணொளி கூட‌ நீங்க‌ள் பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் /

  பொன்னான 40 நிமிடத் துளிகளை வீணாக்கமுடியுமா!


 11. மலையக அரண் சாய்ந்துவிட்டது

  image_fe61fbc30b.jpg

  க.ஆ.கோகிலவாணி 

  மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது.

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார். 

  அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர். 
  அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம்.  

  மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர்.

  ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர்.

  மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை. 

  இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர்.

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை.

  கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர்கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
  அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், 'ஆறுமுகன்' என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது.

  image_240e6ba087.jpgபெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான்.  1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது. 

  அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது.

  'தொழிற்சங்கம்', 'அரசியல்' என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 

  இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது.

  தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது. 

  அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும்.

  அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார்.

  ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன. 

  image_b88081d82a.jpgவரலாறு

  சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

  கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன.

  1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும்.

  1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார்.

  இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார்.
  2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார். 

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

  முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார். 

  image_42d393d9aa.jpg2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார். 

  நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

  2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார்.

  அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார்.

  2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார்.

  மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை - கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார்.

  அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார்.

  2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார்.

  2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பசுக்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார்.

  பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார்.

  நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

  நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார்.

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார்.

  இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார்.

  ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

  மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரண்-சாய்ந்துவிட்டது/91-250996


 12. யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

  (எம்.நியூட்டன்)

  யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார்.

  நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது.

  தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

  எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

  இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.

   

  https://www.virakesari.lk/article/82905


 13. 3 hours ago, தமிழ் சிறி said:

  99439971_147013236904378_7288975932751085568_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEChimZ9HcY1Oli9eHax_xflog16dUDXLeWiDXp1QNctyPKHvihkaLmnpoFKAvEsiOMrNhGrheMK8DrAo9w53mj&_nc_ohc=dwjC3t62SmkAX8NWUWA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=2f9bef3dee7adbeaf573bbc2a06aa129&oe=5EF6C4F4


  அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

  😆

  - வினவு


 14. விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி

  விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

  முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள் ...

  வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

  அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு :

  கேள்வி : 1984 ஆம் ஆண்டுகளிலிலேயே நீங்கள் இராணுவத்தில் இணைந்தீர்கள். அது யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியாகும். இவ்வாறானதொரு நிலையில் யுத்தத்தின் இறுதி கட்டம்வரை அதில் பங்கேற்பீர்கள் என்ற எண்ணம் காணப்பட்டதா ?

  பதில் : அவ்வாறு ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் இராணுவத்தில் இணைந்தது ஒரு குறிக்கோளுடனேயாகும்.

  கேள்வி : மே மாதம் 18 ஆம் திகதி நிலப்பரப்பை கைப்பற்றுகின்றீர்கள் . 19 ஆம் திகதி பிரபாகரனின் உடலை அடையாளம் காண்கின்றீர்கள். இவ்வாறானதொரு வெற்றி இலக்கை எப்போது உணர்ந்தீர்கள். ?

  பதில் : இங்கு பொய் செல்வதற்கு ஒன்றும் இல்லை. மன்னாரிலிருந்து 58 ஆவது படையணிக்கு கட்டளையிட்டு முன்னோக்கி நகர்ந்தோம். நிச்சயமாக வெற்றிப்பெற கூடிய போரினையை நாம் முன்னெடுப்பதாக அன்று நான் தெரிவித்திருந்தேன்.  எமது வெற்றி மன்னாரிலிலேயே உறுதிப்பட்டு விட்டது. இந்த காலப்பகுதியில் விடுதலை புலிகளின் நகர்வுகள் குறித்து போதிய அனுபவம் எமக்கிருந்தது. கஜபா படையணியின் தரைப்படையின் அதிகாரி என்ற வகையில் அதனை நன்கு உணர்ந்திருந்தேன்.

  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகா போன்றவர்கள் முழுமையானதொரு வெற்றி இலக்கை நோக்கி போரை நெறிப்படுத்தினார்கள்.  மறுப்பறம் அந்த காலப்பகுதியில் நான் சாதாரண அதிகாரியாகவே இருந்தேன். அப்போதே எனக்கு படையணியொன்று தலைமைத்தாங்குமாறு  இராணுவ தளபதி பாரிய பொறுப்பினை வழங்கியிருந்தார்.

  எவ்வாறாயினும் போரின் வெற்றி மே மாதம் 18 ஆம் திகதி உறுதியானது. 19 ஆம் திகதி பிரபாரகரனின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளரின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்த  இரு படையணிகளின்  இறுதி நடவடிக்கைகளின் போதே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார். இதனை மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவும் அறிவித்தார்.

  கேள்வி : யுத்தத்தின் இறுதி கட்டத்தில் எவ்வாறான மனநிலை காணப்பட்டது ?

  பதில் : மே 18 ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்தது. 19 ஆம் திகதி பிரபாகரனுடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரிலிருந்தே விருவிருப்பான நிலைமையே காணப்பட்டது. ஒரு விநாடி கூட நித்திரை கொள்வதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. உணவு பிரச்சினை இருக்கவில்லை. 17 ஆம் திகதி இரவு நிச்சயமாக யுத்தத்தை வெற்றி கொள்ள முடியும் என்று உறுதியான நம்பிக்கை இருந்தது.

  கேள்வி : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் சோர்வடையவில்லையா ?

  பதில் : இல்லை. அப்போது நாம் யுத்தத்தில் பங்கேற்ற போது மீண்டும் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை எந்த சந்தர்ப்பத்திலும் இருக்கவில்லை. யுத்தத்தில் நாமே முன்னிலை வகித்தோம். அனைத்து அதிகாரிகளும் யுத்த களத்தில் நேரடியாக பங்குபற்றியிருந்தோம். எமது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் நூறு வீதம் காணப்பட்டது. எனது ஒரு செவியின் கேட்கும் புலனை இழந்துள்ளேன்.

  மே 17 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களிடம் காணப்பட்ட அனைத்து வெடிபொருட்களையும் இட்டு வாகனமொன்றை நாமிருந்த பகுதிக்கு அனுப்பினர். அவற்றை வெடிக்க வைத்தனர். விடுதலை புலிகளின் சுமார் 1000 வாகனங்கள் இருந்தன. அவை அனைத்தும் தீக்கிரையாகின. அது போன்று நாம் முன்னிருந்து யுத்தத்தில் போராடியிருக்கின்றோம். இறுதி நேரத்தில் வெற்றி பெறு முடியும் என்று நம்பிய போதிலும் சிறு தளர்வும் ஏற்பட்டது.

  கேள்வி : பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் போன்றோருடன் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தம் சற்று கடினமானதாக இருந்தததா ?

  பதில் : 17 ஆம் திகதி இரவு இடம்பெற்ற யுத்தமே மிகவும் பலம்வாய்ந்ததாக இருந்தது. அன்றை தினம் இரவு புலிகளால் பாதுகாப்பு செயலாளரின் இருப்பிடத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதன் பின்னர் 18 திகதி மாலை வரை நடைபெற்ற யுத்தம் மிகுந்த அபாயமானது. தனது பாதுகாப்புபடையுடன் பிரபாகரனே இறுதி யுத்தத்திலும் பங்கேற்ற வேண்டி ஏற்பட்டது.

  தற்கொலை குண்டு தாக்குதல் எமது படை மீது நடத்தப்பட்டன. அவர்களிடம் காணப்பட்ட அனைத்தையும் கொண்டு தாக்கினர். அது போன்ற ஆபத்தான யுத்தமே இறுதி கட்டத்தில் இடம்பெற்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் யுத்தம் நிறைவடையப் போகிறது என்று அனைவரும் அறிந்திருந்தாலும் நிறைவுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் பலர் மரணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. யார் மரணிப்பது ? யார் எஞ்சுவது என்ற நிலைமையே காணப்பட்டது. அது இலகுவானதல்ல. படை வீரர் ஒருவருக்கு ஏதேனுமொரு பணிப்புரையை விடுக்கும் போது அது இலகுவானதல்ல என்பது எமக்குத் தெரியும். எனினும் வீரர்கள் யாரும் அதைப் பற்றி கவலையடையவில்லை. அதன் காரணமாகவே இராணுவ வீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று நான் இன்றும் பெரும்பாலான இடங்களில் கூறுவதற்கு காரணமாகும்.

  அனைத்து வீரர்களும் சிறந்த மனநிலையில் காணப்பட்டனர். வெற்றி பெற்றுவிட வேண்டும் என்றே இலக்கே காணப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எம்மை தொடர்பு கொண்டு நிலைவரங்களை கேட்டறிந்து கொள்வார். அதே போன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவும் தினமும் எம்மை தொடர்புகொள்வார். பிரிகேடியர் ஒருவரிடம் ஜனாதிபதி இவ்வாறு உரையாடுவது  சாதாரணவிடயமல்ல. இராணுவத்தளபதியும் அவ்வாறே செயற்பட்டார். அவ்வாறு மிகப் பயங்கரமானதொரு யுத்தமாகும். தற்போதைய சந்ததியினருக்கு இதனை கூறினாலும் புரிந்து கொள்ள முடியாது.

  கேள்வி : இறுதி கட்டத்தில் கடல் மார்க்கமாகவேனும் எங்காவது தப்பிச் செல்ல வழியுள்ளதா என்று புலிகள் சிந்திக்கவில்லையா ?

  பதில் : அவ்வாறு கடல் மார்க்கமாக தப்பிப்பதற்கான வாய்ப்பு இறுதி கட்டத்தில் இல்லாமல் போனது. இறுதி கட்டத்தில் எமது படையினரால் கடற்பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு மூடப்பட்டன.

  கேள்வி : ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசம் பிரபாகரனை பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டதே?

  பதில் : ஆம். பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு சர்வதேசத்தினால் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அது பற்றி நன்றாகத் தெரியும். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சர்வதேச அழுத்தத்தினால் யுத்தத்தை இடைநிறுத்த வேண்டியேற்படுமா என்று நாம் வினவிய போது அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.

  கேள்வி : மே 19 ஆம் திகதி எந்த சந்தர்ப்பத்தில் பிரபாகனுடைய சடலம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்தீர்கள் ?

  பதில் : 18 ஆம் திகதி மாலை நாடு மீட்க்கப்பட்டது. அதனை நாம் இராணுவத்தளபதிக்கு அறிவித்தோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அறிவித்ததன் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 19 ஆம் திகதி அனைத்தும் மேற்பார்வை செய்ய சென்ற போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரல் கமல் குணரத்ன எமக்கு அறிவித்த போது நாம் நேரில் சென்று அதனை பார்வையிட்டோம்.

  பிரபாகரனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னரும் அவர் உயிருடன் இருப்பதாகக் கூறினார். சிலர் பிரபாகரன் இறந்ததை நம்ப மறுத்தனர். சில பத்திரிகைகள் கூட இவ்வாறான செய்திகளை வெளியிட்டன. அது முட்டாள் தனமான செயலாகும்.

  கேள்வி : இறுதி கட்டத்திலாவது ஏன் அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. அவர் அந்தளவிற்கு ஒரு கோழையா ?

  பதில் : அது பற்றி எமக்கு தெரியாது. தெரியாதவை பற்றி கூற முடியாது. கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் பிரபாகரனது சடலமான என்பதை உறுதிப்படுத்துவதற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உறுதிப்படுத்தினர்.

  நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்று தான் அப்போது அவரை சடலத்தைப் பார்க்கும் போது தோன்றியது.

  கேள்வி : :மீண்டும் எமது தாய் நாட்டில் அவ்வாறானதொரு அமைப்பு தோற்றம் பெறவாய்ப்பு இல்லையா ?

  பதில் :எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான வாய்ப்பு இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எனது உயிர் இருக்கும் வரை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை.  

  சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல்

   

  (தமிழில் எம்.மனோசித்ரா)  
   

   

  https://www.virakesari.lk/article/82763


 15. கொரோனாவை வென்ற நியூசிலாந்து

  May 28, 2020

   

  Newziland-800x523.jpg

  நியூசிலாந்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. அந்நாட்டில் உள்ள ஒக்லாந்து நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 98 வயதான மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், நியூசிலாந்தில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

  கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர்தான் சமூக பரவல் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அதன்பின்னர் அம்மாதிரியான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் நியூசிலாந்தின் சுகாதாரத்துறையின் இயக்குநரான ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார்.

  அதேவேளை நாளை முதல் நியூசிலாந்தில் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை பத்தில் இருந்து 100-ஆக அதிகரிக்கப்பட உள்ளதுடன் அவுஸ்திரேலியாவுடனான எல்லை வரும் ஜுலை முதல் திறக்கக்கூடும் எனவும் நியூசிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது. #நியூசிலாந்து #கொரோனா  #அவுஸ்திரேலியா
   

  http://globaltamilnews.net/2020/143817/


 16. 27 minutes ago, Nathamuni said:

  ஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்?

  தமிழ்நாட்டை தனது வாழ்விடமாகக் கொண்டு தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் ஆள்வதற்கும், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களம் பேசும் சிங்களவர் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே கேட்கின்றீர்கள்?🤔


 17. 7 minutes ago, Nathamuni said:

  விளைவாக, தெலுங்கு அண்ணாவும்,  கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள்.

  ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது.

  சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது.

   

  நாதம்ஸ்,

  தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும்,  கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும்.

  இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின்  வீரியத்தைக் குறைக்கமுடியாது.

   


 18. 2 minutes ago, பையன்26 said:

  உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் 😉

  பையன் 2009 மே மாதத்திற்குப் பின்னர் கோபம் எல்லாம் வருவதில்லை. எனவே தாராளமாக எதையும் கேட்கலாம்😎 தெரிந்தால் சொல்வதில் தயக்கமில்லை


 19. 5 hours ago, Nathamuni said:

  ஆகவே சீமானை, ஈழம் என்ற கண்ணாடியினை போட்டுக் கொண்டு பார்க்காமல், தமிழக அரசியல் என்று மட்டும் பாருங்கள்.

  சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

  ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄


 20. 1 hour ago, பையன்26 said:

  எங்கை நான் இணைத்த‌ காணொளிக்கு கிருப‌ன் அண்ணாவின் ப‌தில‌ காணும் 😁

  வெறும் கட்சிப் பிரச்சாரக் காணொளிதானே😁

  இப்படியான கட்சிப் பிரச்சாரக் காணொளிகள் பிரித்தானியாவில் தேர்தல் காலத்தில் அதிகம் வருவதுண்டு. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவது இரு பெரிய கட்சிகளில் ஒன்றுதான்.

  உதிரிக் கட்சிகள் (நாம் தமிழர் போன்றவை) இரு பெரிய கட்சிகளில் ஒன்றை வெல்ல அல்லது தோற்க வைக்க முயலலாம். ஆனால் first-past-the-post நடைமுறையில் ஒரு ஆசனத்தைக் கூட எடுக்கமுடியாது. இவர்கள் தேர்தலில் போட்டியிடுவது எல்லாம் கிடைக்கும் அற்ப சொற்ப வாக்குகளை வைத்து பெரிய கட்சிகளுடன் பேரம் பேசத்தான்🤪

  தாயகத்தில் உள்ள தமிழர்கள் தமிழகத்தின், புலம்பெயர் மக்களின் ஆதரவோடுதான் தீர்வு ஒன்றை எட்டமுடியும். அதற்கு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளினதும் ஆதரவு தேவை. உதிரிக் கட்சிகள் உணர்ச்சிக் கோஷங்களை போட்டு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது😀

  56 minutes ago, Nathamuni said:

  கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை

  2009 மாவீரர் தினத்திற்கு எக்செல் மண்டபத்திற்குப் போயிருந்தேன். தலைவரையும், தளபதிகளையும், ஆயிரமாயிரமாக வீரச்சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு. ஆனால் செந்தமிழன் சீமான் (நேரடியாக வருவதற்கு அவருக்கு விஸா பல நாடுகள் கொடுப்பதில்லை) பேச்சு ஒளிபரப்பப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் அடித்த விசிலோடு வெளியே வந்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து சில மாதங்களிலேயே தலைவர் இருக்கிறார், வெளியே வருவார் என்று உசுப்பேத்துவர்களை அடியோடு பிடிப்பதில்லை. அப்படித்தான் சீமானின் சில்லறை அரசியலில் வெறுப்பு வந்தது.

   

  • Like 1

 21. கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்

  புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 மே 27

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடையாளம், தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம், இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது.

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அது முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில், விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்டே இருந்தது. அதன் பின்னரேயே, கூட்டமைப்பு இரா.சம்பந்தனின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ் வந்தது.

  அதுபோல, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஸ்தாபித்தனர். ஆக, தற்போதுள்ள கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். ஆனால், இரண்டும் தங்களைக் கட்சிகளாகப் பதிவு செய்வதிலிருந்து விலகியே ஓடிக் கொண்டிருக்கின்றன. அதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக நிறுவுதல், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸை மீட்டெடுத்தல் என்கிற கிட்டத்தட்ட ஒத்த காரணங்களே, பதிலாகவும் நீடிக்கின்றன.

  2004 பொதுத் தேர்தலுக்கு முன்னரான காலத்தில், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், கூட்டமைப்பை ஒருங்கிணைப்பதில் அக்கறை செலுத்திய தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. கட்சிக்கான யாப்பு வரையப்பட்டு, நிறைவு நிலையை அடைந்திருந்தது. ஆனால், கிளிநொச்சியில் இருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, அப்போது கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. தாங்களே ஏக நிலை அமைப்பாக இருக்க வேண்டும், தங்களைத் தாண்டி எந்தவோர் அமைப்பும் செயற்பாட்டுத் தளத்துக்கு சென்றுவிடக் கூடாது என்பதில், புலிகள் கவனமாக இருந்தனர். அதன்போக்கில்தான், கூட்டமைப்பைப் பதிவு செய்யும் செயற்பாடுகளையும் அனுமதித்திருக்கவில்லை.

  ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழரசுக் கட்சி தவிர்ந்த அனைத்துப் பங்காளிக் கட்சிகளாலும் பல தடவைகள் விடுக்கப்பட்டது.

  ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டமைப்பை எப்படியாவது கட்சியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக அதிகமாகவே உழைத்தார். அதற்காகப் பலதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தன் அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. ''பார்க்கலாம்...'' என்கிற தோரணையில், விடயங்களைக் கடந்தி வந்தார்.

  இன்னொரு பக்கத்தில், ஆளுமையுள்ளவர்கள் எனத் தான் நம்புபவர்களைக் கொண்டு, தமிழரசுக் கட்சியை நிரப்பும் செயற்பாடுகளையும் அவர் முன்னெடுக்க ஆரம்பித்தார். அது, கூட்டமைப்பு என்கிற அடையாளத்தைத் தக்கவைக்கும் நோக்கங்கள் சார்ந்தவை அல்ல. மாறாக, தமிழரசுக் கட்சி என்கிற தந்தை செல்வாவின் அடையாளங்களின் தொடர்ச்சியைப் பேணும் நோக்கிலானது. எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் அதன்போக்கிலேயே, நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

  கூட்டமைப்பு அடையாளத்தைத் தக்க வைப்பது சார்ந்து, சம்பந்தனுக்கு சில நெருடல்கள் இருந்தன. அதாவது, கூட்டமைப்பு என்பது புலிகளின் பின்னணியில் உருவானது; முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அங்கம் வகித்து வருகின்றமை சார்ந்தது. உலக ஒழுங்கில், ஆயுதப் போராட்டங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஆயுதப் போராட்டத்தோடு தொடர்பற்ற தரப்பாகத் தங்களை அடையாளப்படுத்துவதற்காக, தமிழரசுக் கட்சியை மீள நிறுவுதல் உதவும் என்று சம்பந்தன் நம்பினார். அதன்போக்கில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், புலிகளால் முன்னிறுத்தப்பட்ட பலரையும், 2010ஆமே; ஆண்டுப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக அனுமதிக்கவும் அவர் விரும்பவில்லை.

  தந்தை செல்வாவின் தொடர்ச்சியாகத் தன்னை முன்னிறுத்தவே சம்பந்தன் விரும்பினார். செல்வாவுக்குப் பின்னரான, அமிர்தலிங்கத்தின் அடையாளத்தைக் கூட, அவர் தம்மோடு சுமக்க விரும்பவில்லை. ஏனெனில், அமிர்தலிங்கம் போன்றவர்கள், ஆயுதப் போராட்டங்களை நோக்கி இளைஞர்களைத் தள்ளியதில், முக்கிய பங்காற்றியவர்கள் என்பது வரலாறு.

  வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு முன்னரேயே, அதாவது, செல்வாவின் உடல்நிலை மோசமடைந்து, தமிழரசுக் கட்சி அமீரிடம் வந்தது முதல், அது அடுத்த கட்டப் பாய்ச்சலை எடுத்திருந்தது. உணர்வூட்டும் அரசியலின் அதியுச்ச காலம். காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் மணித்தியாலக் கணக்கான பேச்சுகள் அரங்கேறிய காலம். அது இன்னொரு கட்டத்தில், தமிழரசுக் கட்சி அடையாளங்களுக்கு அப்பால், தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் மாறிவிட்டிருந்தது. ஆக, தமிழரசுக் கட்சியை மீள நிறுவும் போது, செல்வாவின் தொடர்ச்சியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்பது, சம்பந்தனின் எண்ணப்பாடு. அதில், அவர் ஓரளவு வெற்றியும் கண்டார்.

  அதற்காக, அவர் 2010ஆம் ஆண்டு முதல், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இரண்டாம் நிலையில் வைத்தே அணுகினார். தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்டால் அன்றி, எந்தவொரு காரணத்துக்காகவும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை வழங்குவதிலிருந்து தவிர்த்துக் கொண்டார். தன்னைச் சூழ சிலரை வைத்துக் கொண்டு, முடிவெடுக்கும் மய்யத்தை உருவாக்கினார். அதுவும்கூட, கூட்டமைப்புக்குள் எம்.ஏ. சுமந்திரன் தவிர்க்க முடியாத ஒருவராக மாறக் காரணமாகியது.

  கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழும்போதெல்லாம், கூட்டமைப்பு அரசியல் கூட்டாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுமந்திரன் பதில் சொல்வார். ஆனால், உண்மையில் கூட்டமைப்பு என்பது, எந்தவித அதிகாரக் கட்டமைப்பும் இல்லாத ஒரு தேர்தல் கட்டமைப்பு மாத்திரமே. அங்கு, தமிழரசுக் கட்சியைச் சுற்றியே அதிகாரக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. அதை அனுசரிக்காத பங்காளிக் கட்சிகள், வெளியேற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். இதுதான் நிலை.

  முன்னணியைப் பொறுத்தளவில், அங்கு இருக்கும் ஒரேகட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். ஆனால், முன்னணியின் ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் தங்களைக் காங்கிரஸ் அடையாளத்தோடு இணைத்துக் கொள்வதில், பெரிய தர்மசங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். அதனை, அவர்கள் பொது வெளியிலும் உரையாடிக் கொள்கிறார்கள். ஏனெனில், காங்கிரஸ் என்பது,  ஜீ.ஜீ. பொன்னம்பலத்தோடு ஆரம்பிக்கும் வரலாற்றைக் கொண்டது.

  அப்படியாயின், முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்வதில் என்ன சிக்கல் இருக்கின்றது என்றால், அது, பொன்னம்பலத்தின் குடும்ப நிலையிலிருந்து வருவது. அது ஒருவகையில், வாரிசு அடையாளத்தின் போக்கிலானது. எந்தவொரு தருணத்திலும் காங்கிரஸ், பொன்னம்பலங்களைத் தாண்டி, இன்னொரு தரப்பின் ஆளுகைக்குள் சென்றிருக்கவில்லை. அப்படியிருக்க, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்தால், அதைத் தங்களின் கைகளுக்குள் பேண முடியாது என்பது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் அவரது தரப்பினதும் எண்ணம். முன்னணி அடையாளத்தோடு மட்டும் இருக்க விரும்பும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள், இதனை ஏன் எழுப்புகிறார்கள் இல்லை என்பது சாதாரண மக்களின் கேள்வி. பொன்னம்பலத்தின் குடும்பக் கட்சியாக மாறிவிட்ட ஒன்றைக் காப்பாற்றுவது, முன்னணி இளைஞர்களின் எந்தக் கடப்பாட்டுக்குள் வருகிறது?

  ''..சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பது, பெயர் மாற்றப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்...'' என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அதன் தொண்டர்கள் வரையில், அண்மைக் காலத்தில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால், முன்னணி என்பது எந்த அடையாளத்துக்குள் வருகிறது. காங்கிரஸின் கடந்த காலக் கறுப்பு அரசியல் வரலாற்றுப் பக்கங்களை மறைக்கும், போலி முகத்திரையா முன்னணிக்கான அடையாளம்? மற்றவர்களை நோக்கி விரல் நீட்டும் முன், தங்களை நோக்கிக் கேள்வி எழுப்புவது முன்னணி அடையாளத்துக்காக ஒரு தசாப்த காலமாகக் காத்திருக்கும் இளையோர் செய்ய வேண்டிய ஒன்று.

  ஆனால், இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமை, காங்கிரஸின் ஒரு வரலாற்றைத் தொடர்வதற்கு விரும்புகின்றது. அதுதான், வாரிசு அரசியல் என்கிற அபத்தம். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலம் முதல், அது வாரிசு அரசியலுக்குள் சென்றதில்லை. ஆளுமைச் செயற்பாட்டின் படியே, தலைமைத்துவத்தைப் பேணியது. ஆனால், மாவை சேனாதிராஜாவை இடைக்காலத் தலைவராக்கி, எதிர்காலத் தலைமைத்துவத்தைத் திட்டமிட்ட சம்பந்தனின் நினைப்புக்கு, இப்போது தடைக் கற்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது, மாவையை நோக்கிப் பதவிகளுக்காகத் திரண்டிருக்கின்ற ஒரு கூட்டம், வாரிசு அரசியலை, ஒரு செல்நெறியாகத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நிறுவ முயற்சிக்கின்றன. இன்றைக்கு, தமிழரசுக் கட்சிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் குத்து வெட்டுகள் அதன் போக்கிலானவைதான்.

  முன்னணிக்குள், அப்படியான குத்து வெட்டுகள் குறைவு; ஏனெனில், காங்கிரஸ் என்பது பொன்னம்பலங்கள் சார்ந்தது. அங்கு, வாரிசு அரசியல் நிரந்தமானது. அந்த இடத்தில், எப்படிக் கேள்விகளை எழுப்புவது? ஆக, கூட்டமைப்பும் முன்னணியும் தங்களைக் கட்சிகளாகப் பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள், பகுத்து ஆயும் அளவுக்குப் பெரிதாக இல்லை. இந்த நிலை, தமிழ்த் தேசிய அரசியலின் போக்குக்குப் பெரும் பின்னடைவே.
   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பு-முன்னணி-என்கிற-போலி-அடையாளங்கள்/91-250943


 22. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தனிமைப்படுத்தலும்

  எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 மே 27

  தமிழில் 'தனிமைப்படுத்தல்' என்றும் ஆங்கிலத்தில் 'கொரண்டைன்' அல்லது, 'கொரொன்டீன்' என்றும் குறிப்பிடப்படும் செயல்முறை, ஒரு தண்டனையா? இது வரை, அவ்வாறு எவரும் நினைக்கவில்லை. 

  ஆனால், வடபகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தால், அதை ஒரு தண்டனையாகவும் கருத முடிகிறது.

  'தனிமைப்படுத்தல்' என்ற சொல், இந்நாள்களில் ஊடகங்களில் தொடர்ந்து வாசிக்கின்றோம்ளூ கேட்கின்றோம். இந்நாள்களில், அதில் குறிப்பிட்டதோர் அர்த்தம் தான் இருக்கிறது. 

  உலகத்தை உலுக்கும், கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காகச் சுகாதாரத் துறையினர், கொரோனா வைரஸ் தாக்கியவர்களையும் தாக்கியவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்களையும் தனிமைப்படுத்தி வைப்பதே, தனிமைப்படுத்தல் என்பதன் அர்த்தமாகும். 

  image_3014a55602.jpg

  ஆனால், கடந்த 18ஆம் திகதி, யாழ்ப்பாணம் அருகே, செம்மணியில் நடைபெற்ற ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரனைப் பார்த்து, பொலிஸ் அதிகாரி ஒருவர், 'ஒபதுமா ஒய வெடே கலொத் அப்பி ஒபதுமாவ தவஸ் 14க்கட நிரோதாயனயட்ட யவனவா' (நீங்கள் அதனைச் செய்தால் நாங்கள், உங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவோம்) என்று கூறுவதைத் தொலைக்காட்சி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது.

  விக்னேஸ்வரனை, கொரோனா வைரஸ் தாக்கியதாக அறிந்தோ, அது தாக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார் என்று ஆராய்ந்தோ, அந்தப் பொலிஸ் அதிகாரி அவ்வாறு கூறுவில்லை. தாம் சொல்வதைக் கேட்டு, விக்னேஸ்வரன் அந்த இடத்தை விட்டு விலகவில்லை என்பதற்காகவே, அவர் அவ்வாறு மிரட்டுகிறார். போரில் இறந்தவர்களை, அவ்விடத்தில் நினைவு கூர்ந்துவிட்டு, அவ்வாறு 14 நாள்கள் தனிமைப்பட விரும்பாத விக்னேஸ்வரன் திரும்பிச் சென்றார். 

  அரசாங்கம், வடக்கில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளைத் தடை செய்திருக்கவில்லை. விக்னேஸ்வரன், ஊரடங்குச் சட்டத்தை மீறியிருக்கவும் இல்லை. இரவு எட்டு மணிக்குப் பின்னரே, அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்  அமலில் இருந்தது. அவர், சுகாதார அறிவுறுத்தல்களை மீறவும் இல்லை. அவர், முகக் கவசம் அணிந்து இருந்தார். அவரும், அவருடன் சென்றவர்களும் வேறுவேறு வாகனங்களில் பயணித்து, சமூகஇடைவெளி பேணும் கொள்கைக்கு அமையவே செயற்பட்டிருந்தனர். எனவே, விக்னேஸ்வரன் சட்டத்தை மீறினார் எனக் கூற முடியாது. 

  ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதை அறிந்து, மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என, வடபகுதிப் பொலிஸாருக்கு அரசாங்கம் பணித்திருந்தது. நினைவேந்தல் நிகழ்ச்சிகள், சுகாதார ஆலோசனைகளின் படியே நடைபெறும் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அவ்வாறு பொலிஸாரை அரசாங்கம் பணிப்பதைக் குறை கூற முடியாது. ஏனெனில், அவ்வாறான கூட்டம் கூடும் ஓரிடத்தில், தொற்று ஏற்பட்ட ஒருவர் இருந்தால், சிலவேளை பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடும். 

  தென் கொரியாவில், ஒரு தேவஸ்தானத்தில் சமய நிகழ்ச்சியொன்றில், 31ஆவது நோயாளர் கலந்து கொண்டதை அடுத்து, நோயாளர் எண்ணிக்கை 1,000க்கு மேல் அதிகரித்தது. இலங்கையில், கடற்படையினர் மத்தியில் இன்னமும், புதிய தொற்றாளர்கள் காணப்படுகிறார்கள்;. இலங்கையில் மொத்தத் தொற்றாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கடற்படை வீரர்களேயாவர். 

  எனவே, அரசாங்கத்தின் ஆலோசனை பிழையானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. அது சரியென்றால், போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, போரில் இறந்த ஆயுதப் படையினரையும் பொலிஸாரையும் நினைவு கூரும்முகமாக, கடந்த 19ஆம் திகதி, நூற்றுக் கணக்கானவர்களை அழைத்து, கொழும்பில் பாரியதொரு நிகழ்ச்சியை, அரசாங்கம் எவ்வாறு நடத்த முடியும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். 

  சமூக விலகலைப் பேணுவதாக, தம்மைப் பற்றி உத்தரவாதமளிக்க முடிந்த போதிலும், அடுத்தவர்களைப் பற்றி உத்தரவாதமளிக்க, நோய்த் தடுப்புக்கான பொறுப்பை ஏற்றிருக்கும் அரசாங்கத்துக்கு முடியாததால், வடபகுதி நினைவேந்தல்களை நிறுத்த முடிவெடுத்ததாக, அரசாங்கத் தரப்பினர் வாதிடலாம். அந்த அடிப்படையில், அரசாங்கத்தின் முடிவு சரியென ஏற்றுக் கொண்டாலும், ஒருவர் அதை மீறினால், அவரைத் தனிமைப்படுத்தலாமா? தனிமைப்படுத்தல் ஒரு தண்டனையா?

  ஊரடங்குச் சட்டத்தை மீறி, அனுமதியின்றியும் அநாவசியமாகவும் வெளியே சென்றார்கள் என்று, 60,000க்கும் மேற்பட்டோர், நாட்டின் ஏனைய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் பயணித்த 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக, எவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதும் முறையாகாது.

  image_bf80e65611.jpg 

  எமது வாதத்தை நிரூபிப்பதைப் போல்த்தான், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல், கடந்த 19ஆம் திகதி, ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அக்கட்சியின் 11 பேர், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முறையிட்டனர். 

  அதன்படி, அந்த 11 பேரும் 14 நாள்கள், தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என, நீதிவான் கடந்த 17ஆம் திகதி உத்தரவிட்டார். அத்தோடு, அவர்களைக் கண்காணித்து 14 நாள்களுக்குப் பின்னர், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஐந்து சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் பணித்திருந்தார்.

  image_36c326dbbd.jpg
  ஆனால், மறுநாள் பொன்னம்பலத்தின் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நகர்த்தல் பத்திரமொன்றை ஆராய்ந்த நீதிவான், தனது முன்னைய உத்தரவை மீளப்பெற்றார். சந்தேக நபர்களுக்கு கொவிட்-19 தொற்றின் அறிகுறிகள் உள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லை என்ற அடிப்படையிலேயே அவர், தமது முன்னைய உத்தரவை மீளப் பெற்றார்.

  நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை, வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உளைச்சலுக்கும் வேறுபல நோய்களுக்கும் உள்ளாகக்கூடும் என்று கூறியே நீதிவான், 11 சந்தேக நபர்களையும் விடுவித்தார். அவர்கள் செய்தது குற்றமா, இல்லையா என்று நீதிவான் கூறியதாகச் செய்திகள் எதனையும் அறியமுடியவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக் கொண்ட நடவடிக்கை, பொருத்தமானதல்ல என்றே, நீதிவான் கூறியிருக்கிறார். அதாவது, அவர்கள், பொலிஸார் கூறும் குற்றத்தைச் செய்திருந்தாலும், தனிமைப்படுத்தல் அதற்குத் தண்டனையாக இருக்க முடியாது என்பதே, நீதிவானின் கருத்தாக இருப்பதாகத் தெரிகிறது.

  தனிமைப்படுத்தலானது, நோய் பரவலைத் தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றேயல்லாது, அதைத் தண்டனையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது, இதன் மூலம் தெரிகிறது. எனவே, விக்னேஸ்வரனையும் தனிமைப்படுத்துவோம் எனப் பொலிஸார் எச்சரித்தமை, எவ்வகையிலும் பொருத்தமானதல்ல என்பது, இதன் மூலம் மேலும் தெரிகிறது.

  நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றவர்கள், சட்டவிரோதமான நடவடிக்கை ஒன்றைச் செய்யப் போவதாகப் பொலிஸார் எங்கும் கூறியதாகத் தகவல் இல்லை. அரசாங்கமும் அவற்றைத் தடை செய்யவில்லை. 

  கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நிலையில், கூட்டங்கள் கூடுவதைத் தடுக்குமாறே, அரச உயர் அதிகாரிகள் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதாவது, இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளை, ராஜபக்ஷ அரசாங்கம், இம்முறை சட்ட விரோதமாகக் கருதவில்லை என்பதே, அதன் மூலம் தெரிகிறது.

  ஓரிடத்தில் மட்டும், அதாவது, மட்டக்களப்பில் மட்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றுக்கு எதிராக, நீதிமன்றத் தடையுத்தரவொன்றைப் பொலிஸார்  பெற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, அந்த நீதிமன்ற உத்தரவின் காரணமாக இடைநிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால், அந்தக் கூட்டத்துக்கு எதிராகவும் சட்ட விரோதமான கூட்டம் என்ற அடிப்படையில், தடையுத்தரவு பெறப்பட்டு இருக்கவில்லை. மாறாக, அக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படலாம் என்ற அடிப்படையிலேயே, அந்த உத்தரவும் பெறப்பட்டு இருந்தது.

  மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்திலும், வடக்கில் தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் அவற்றைச் சட்டவிரோதமாகக் கருதிய பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்நிகழ்வுகளுக்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்தனர்; அவற்றில் கலந்து கொண்டவர்களைக் கைது செய்தனர். 

  பின்னர், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம், அந்நிகழ்வுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் செய்யவில்லை; ஆதரவும் வழங்கவில்லை. எனினும், நல்லாட்சி அரசாங்கம், புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளித்து வருவதாக, மஹிந்த அணியினர் கூறி வந்தனர். ஒவ்வொரு வருடமும் புலிகளையும் அரசாங்கத்தையும் முடிச்சுப் போட்டு, விமர்சித்து வந்தனர். 

  ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக ராஜபக்ஷக்களும் அவர்களது சீடர்களும் கடந்த நவம்பர் மாதம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், இந்த விடயத்தில் அவர்களது நடத்தையில் ஒரு மாற்றத்தைக் காட்டுகின்றனர். அதைக் கடந்த நவம்பர் மாதமே, காணக்கூடியதாக இருந்தது. 

  கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்து, எட்டு நாள்களுக்குப் பின்னர், அதாவது நவம்பர் மாதம் 26, 27ஆம் திகதிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கில் பல இடங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்தினம், புலிகளாலேயே குறித்தொதுக்கப்பட்ட நாளாக இருந்தும், அரச படைகளோ பொலிஸாரோ, அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 

  இம்முறை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளையும் பிழையெனக் கூறியோ, சட்ட விரோதமானவை எனக் கூறியோ, எவரும் தடுக்க முற்படவில்லை. இது, ராஜபக்ஷக்களின் கொள்கை மாற்றமா என்பதை, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அவர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்துத் தான், முடிவு செய்ய முடியும்.

  image_3ecd91a1f2.jpg

  ராஜபக்ஷக்கள், அவர்களது பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் தமிழ்த் தலைவர்கள் மே மாதத்தில் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களையோ, நவம்பர் மாதம் நடத்தும் புலிகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகளையோ அங்கிகரிக்கப் போவதில்லை. அவற்றை, நிராகரிப்பதைப் பற்றிய பிரச்சினைக்கே இடமில்லை. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் இம்முறை, அவற்றைச் சட்ட விரோதமானவையாகக் கருதிச் செயற்படவில்லை. 
  அவர்கள், தனிமைப்படுத்தல் மற்றும், நோய்த் தடுப்புச் சட்டத்தை, நினைவேந்தல் நிகழ்ச்சிகளைத் தடுப்பதற்காகப் பாவித்தார்களா அல்லது, உண்மையிலேயே நினைவேந்தல் நிகழ்ச்சிகளால், கொரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்படும் என அஞ்சி, அவற்றைத் தடுக்க முற்பட்டார்களா என்பதும், தற்போதைய நிலையில் சற்றுச் சிக்கலானதாகத் தான் தெரிகிறது. 

  எவ்வாறாயினும், தற்போதைய சுகாதாரப் பணிப்புரைகளை மீறுவோரை, அவர்கள், கோவிட்-19 இன் அறிகுறிகளைக் காட்டாத நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதோ, வீடுகளில் தனிமைப்படுத்துவதோ நகைப்புக்குரிய விடயமாகும். 

  அதேவேளை, தமது கருத்துகளை, சுதந்திரத்தைத் தடுப்பதற்காக, அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பாவிக்கிறது என்றதோர் எண்ணத்தை, மக்கள் மனதில் ஏற்படுத்தும். அது, சட்டத்தைப் புறக்கணிக்க மக்களைத் தூண்டக் கூடும். இன்னமும் கோவிட்-19 பரவுகையின் அச்சுறுத்தல் முற்றாக நீங்காத நிலையில், பயங்கரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.      
   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்கால்-நினைவேந்தலும்-தனிமைப்படுத்தலும்/91-250942


 23. செளமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற பலவற்றைச் செய்தார். நாடற்றவர் என்றிருந்த நிலையை மாற்றினார்.

  பேரனாரின் பெயரில் குளிர்காய்ந்து தனது பின்னிரவு களியாட்ட வாழ்வுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டதைத் தவிர ஆறுமுகன் தொண்டமான சாதித்தது எதுவுமில்லை.

  மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற ஒரு நல்ல தலைவர் இச்சந்தர்ப்பத்தில் வந்தால் நல்லது.


 24. தமிழ் நாட்டில் உதிரிக் கட்சியாக இருக்கும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரங்களைப் பெறப்போவதுமில்லை. தமிழ் நாட்டை ஆளப்போவதுமில்லை. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், வேறு மாநிலத்தவர்களை எதிர்ப்பதும் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுத் தராது என்பதுதான் கடந்த 10 வருட சீமானின் அரசியல் சொல்கின்றது.

   விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 

  இந்தியாவின் அழுத்தம் இல்லாது ஈழத் தமிழருக்கு எதுவும் கிடைக்காது. சீமான் சங்கிகளுடன் கூட்டு வைத்தாவது எதையாவது செய்ய முயன்றால் நல்லது!😀

  Quote

  இந்தியா ஒரு உடனடி அயல்நாடு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யும். அது தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். அந்த வகையில் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஒரு விடயம் தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொண்டால் அதன் பின்னர் அதனை எதிர்த்து நிற்றல் என்பதற்கு பொருள் இல்லை. அதன் பின்னரும் அதனை எதிர்ப்பது என்பது, அதனுடன் மோதல் நிலையை கடைப்பிடிப்பதாகும். விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு பாதையைத்தான் தெரிவு செய்தனர். அந்தப் பாதை வெற்றியளிக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மை. ஆனால் இந்தியாவிடம் அதனை எதிர்பாக்கக் கூடிய தார்மீக பொறுப்பு தமிழர்களிடம் இருந்ததா என்னும் கேள்வியை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது. அதே போன்று இறுதி யுத்தத்தின் திசைவழியை மாற்றியமைக்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான் என்பதில் ராஜபக்ச தலைமையிலான கொழும்பும் தெளிவாகவே இருந்தது. ‘கோட்டாவின் யுத்தம்’ – என்னும் நூலில் இந்த விடயம் துலக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் கொழும்பிடம் இருந்தது போன்றதொரு தெளிவு தமிழர் பக்கத்தில் இருக்கவில்லை

   

  • Like 3
  • Thanks 1

 25. 5 minutes ago, பையன்26 said:

  இந்த‌ திரிக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஏத‌வாது ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா கிருப‌ன் அண்ணா 😉/

   

  இணையத்தில் பலரும் இப்போது கறி இட்லி சமைப்பது குறித்து பேசி வரும் நிலையில், நாம் அதை சமைப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்😁

  Recipe சுடச்சுட இன்றுதான் வந்திருக்கு!

  சீமான் தம்பிகள், தங்கைகள் செய்து பார்க்க வசதிக்குத்தான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது😉

  • Haha 1