Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33806
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. கதவுகளுக்குப் பின்னால்... ஜெ.திவா தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! நான் அப்போதுதான் என் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் அழத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் என் சிசுவுக்கு முலையூட்டத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் ரத்தக் கறைபடிந்த என் கொலைக்கருவியை பார்க்கத் தொடங்கியிருக்கலாம் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் நான் விதைக்குள் தவிக்கும் ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும் நான் ஒரு பறவையின் மனதை அறிய ஒரு கிளிக்கு பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும் நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கக்கூடும் நான் ஒரு கனவின் பாதி வழியில் நின்றுகொண்டிருக்கக்கூடும் தயவுசெய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் யாரேனும் ஒருவர் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் திறக்கக் கூடாத ஒன்றைத் திறந்துகொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் இழக்கக் கூடாத ஒன்றை இழந்துகொண்டிருக்கலாம் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இசைத் தட்டுகள் நின்றுவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கதவை மூடிவைக்கும் எல்லா தேவைகளும் விலகிவிடும் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் ஒரு சுருக்குக் கயிற்றின் கடைசி முடிச்சை போடுவதை நீங்கள் தடுத்து விடும்போது கடவுள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில் நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது கடவுள் உங்களோடு பேசுவதை நிறுத்திவிடுவார் எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள் உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது கடவுள் உங்களுக்கு கதவு திறக்க மறுத்துவிடுவார் நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! http://jthiva.blogspot.com/2011/06/blog-post_22.html
  2. பருந்து தேவதேவன் உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக் குஞ்சுகளை அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை புலம்பல்களை போரை போர்க்களங்களில் பிணமாகி அழியும் மனிதர்களை பிணங்களின் அழுகிய வாழ்வை- நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா? அது தன் சிறகு மடித்து தனது பனித்த கண்களுடன் ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில் அய்யம் சிறிதுமின்றி ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா? http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_04.html
  3. எனக்கும் பாடப்புத்தகம் படிக்கத்தொடங்கினால் நித்திரை வந்துவிடும். அதற்காகவே தற்போதும் முன்னர் படித்த புத்தகம் ஒன்றை பக்கத்தில் வைத்திருக்கின்றேன். இரண்டு பக்கம் தாண்டமுதல் நித்திரை வந்துவிடும். அப்படி வரும் நித்திரை குலைய ஏழெட்டு மணித்தியாலம் போகும்!
  4. போதை உயிரோடை பாதியில் படித்து நிறுத்திய கதையை தொடர்வது அதிகாலை கனவை தொடர்வது போல எளிதல்ல ஊன் உறக்கம் மறந்த வாசிப்பின் எழுத்துகள் உதிரத்தில் மிதக்கக் கூடும் பேய் விரட்டுவதினும் கடினமானதே படிப்பின் போதையை விட்டொழிப்பது வாசிப்பை நிறுத்தி வைத்து சற்றே இடைவெளி விட்டு ஒருநாள் படிக்கும் போதுணர்ந்தேன் போதையொன்றும் பெரும் பரவசத்தை தருவதில்லை http://uyirodai.blogspot.com/2011/04/blog-post_29.html
  5. எனக்கு கொல்வது பிடிக்கும் போகன் எனக்கு கொல்வது பிடிக்கும் முதன் முதலாய் என்னை விரட்டிய தெரு நாயை அடித்துக் கொன்றேன் அன்று தெரிந்துகொண்டேன் நாய்களுடன் விவாதிப்பது என்றுமே பயன் தராது என்னுடைய பயத்தை நான் கொல்வதன் மூலமே வென்றேன் எப்போதெல்லாம் பயந்தேனோ அப்போதெல்லாம் கொன்றேன் பிடிக்காத வாத்தியார் பிடிக்கவில்லை என்ற பெண் விளையாட்டில் வென்ற நண்பன்... ஆனால் ஒரு கோழையைப்போல் ரகசியமாய்க் கொல்வது எனக்குப் பிடிக்கவில்லை வெளிப்படையாக கொல்வதற்கு நீங்கள் சில காரணங்களை கேட்டீர்கள் நாடு,மொழி,மதம் இனம்,ஜாதி சித்தாந்தம் போன்ற முகாந்திரங்களுடன் கொல்வதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என புரிந்துகொண்டேன் ராணுவத்தில் சேர்ந்து எதிர் நாட்டினரைக் கொன்றேன் விருதுகள் கிடைத்தன கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும் மதக் கலவரங்கள் செய்தேன் ஏனெனில் மதக் கலவரங்களில் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன பெண்களைப் புணர்வதும் குழந்தைகளை எரிப்பதும் கூட.. ஆண்களைக் கொல்வதை விட பெண்களைக் கொல்வது இனிப்பானது இன்னும் பிறக்காத சிசுக்களை வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்.. எல்லாம் கடவுளுக்காக எனில் எதுவும் பாவமில்லை உண்மையில் கொல்பவர் அனைவர் கையிலும் சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன் எல்லாக் கடவுள்களும் கொலை செய்துள்ளனர் ஆகவே கொல்வதினால் நானும் கடவுள் ஆகிறேன் பின்னர் இனக் கலவரங்களில் ஈடுபட்டேன் மொழிப் போர்களில்.. சித்தாந்த சுத்திகரிப்புகளில்... கொன்ற இடங்களில் எல்லாம் என்னைப் பயந்தீர்கள் மரியாதை செய்தீர்கள் வலியதே எஞ்சும் என்பது உங்களுக்கும் தெரியும் சிலர் என்னை பாசிஸ்ட் என்பீர்கள் கவலையில்லை ஏனெனில் எனக்குத் தெரியும் உங்களைக் கொல்பவர்களை மட்டுமே நீங்கள் உங்களை ஆள அனுமதிப்பீர்கள் என்று... http://ezhuththuppizhai.blogspot.com/2010/06/blog-post_8250.html
  6. உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !! வித்யாசாகர் ----------------------------------------------------------- நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் - உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என எல்லாமே உன்னை எனக்குள் - மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்; எனக்காக இல்லையென்றாலும் உனக்காகவேனும் வந்து - உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன் ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து - இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில் வைத்திருக்கிறேன்; பெரிதாக அதையெல்லாம் எண்ணி கதையெழுதும் காதலெல்லாம் அல்ல; நம் காதல்; காதலென்ற வார்த்தை கூட நம் உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம், அதையெல்லாம் கடந்து நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது. திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள் தவறிப் போட்டுவிட்ட - கல் போல மனதிற்குள் மனதை போட்டுவிட்டு யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது. சொல்லியிருந்தால் மட்டும் உலகம் அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ தெரியாது - ஆனால் - காதலென்னும் அவசியமோ நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே; அப்படி - சேருமிடமே தெரியாத வானமும் பூமியும் போல் எங்கோ ஒரு தூரத்தில் ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு; நானென்றால் நீ ஓடிவருவதும் நீயென்றால் நான் காத்திருப்பதும் எச்சில் பாராமல் - தொடுதலுக்கு கூசாமல் - ஆண் பெண் பிரிக்காமல் - எந்த வரையறையுமின்றி - உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும் நெருங்கியிருந்த உணர்வு சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்??? தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட திராணியின்றி நகைக்கும் உலகம் தானே இது; அட, உலகமென்ன உலகம்; உலகத்தை தூக்கி வீசிவிட்டு நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள தயாரில்லை என்பதற்கான காரணத்தை காலம் மட்டுமே ஒருவேளை அறிந்திருக்கக்கூடும்; எப்படியோ; யார்மீதும் குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின் இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே உனக்கும் எனக்கும் மட்டும்; தூரநின்று கண்சிமிட்டும் அந்த குழந்தையின் சிரிப்புப்போல நீ சிரிக்கும் அந்த சிரிப்பின் நினைவுகளில் தான் கட்டிவைத்திருக்கிறேன் என்னை - வாழ்விற்குமாய்; இப்போதும்!! இப்படியே கடந்து கடந்து ஓர்நாளில் - என் உயிர்முடுச்சு அவிழ்ந்து நான் கீழே விழுகையில் - ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது நீ வந்து நிற்கையில் - என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும் நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!! http://www.vaarppu.com/view/2449/
  7. சரி தவறு கயல்விழி சண்முகம் சரியெனப்பட்டது சத்தமாய் சரிதானென்றேன் தவறெனப் புரிந்தது தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்! ஒத்திசைக்க உற்றவர்கள் உடனிருந்தார்கள்! அவர்தம் கூட்டணி மாறியது சரியென்றதை தவறெனவும் தவறென்றதை சரியெனவும் இம்சிக்கிறார்கள் பிறழாத நாக்கு வேறு பொய் நவில மறுக்கிறது இப்போதும் முன்னிருந்த நிலைதான் இடறாத கொள்கையோடும் பிறழாத நாக்கினோடும் தன்னந்தனி மரமாய் நான்! வந்தமரக்கூடும் என் கிளையிலும் சில பறவைகள்! http://kayalsm.blogspot.com/2011/05/blog-post_23.html
  8. மீன்குஞ்சுகள் துவாரகன் -------------------- கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்குஞ்சுகள் ஒருநாள் துள்ளி விழுந்தன மாடுகள் தின்னும் வைக்கோல் கற்றைக்குள் ஒளிந்து விளையாடின வேப்பங் குச்சிகளைப் பொறுக்கியெடுத்து கரும்பெனச் சப்பித் துப்பின வயலில் சூடடித்து நீக்கிய ‘பதர்’ எல்லாம் பாற்கஞ்சிக்கென தலையிற் சுமந்து நிலத்தில் நீந்தி வந்தன வீதியிற் போனவர்க்கு கொல்லைப்புறச் சாமானெல்லாம் விற்றுப் பிழைத்தன திருவிழா மேடையில் ஏறி ஆழ்கடல் பற்றியும் அதன் அற்புதங்கள் பற்றியும் நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும் அளந்து கொட்டின இப்படித்தான் வைக்கோலைச் சப்பித் தின்னும் மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த மீன்குஞ்சுகள். http://www.vaarppu.com/view/2447/
  9. சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்துப்புரண்டுகொண்டிருக்கும் கொரில்லாக்கள், காட்டிக்கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு சமாதானப்போர்வைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட முன்னாள் போராளிகள், டிஜிட்டல் பேனரில் சிரிக்கும் எந்திரன், என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தார் மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறே. சே' எனது டீஷர்ட்டில் http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122
  10. முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!! வித்யாசாகர் போராட்டத்தின் - ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில் உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை - சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே - கடக்கிறோம் எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் - நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த மனித இனம் அதில் நானும் மாறுபட்டவனாக இல்லை அப்பட்டமாய் - எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும் வாழ்வதற்கான உயிர்காற்று - தொண்டையை அடைத்துக் கொள்ள, ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில், ஆசையில் - நம்பிக்கையில் - நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம் இதில், பெரிதாக சாதித்ததெல்லாம் எந்த நிலையிலும் - யார் இறப்பிலும் - உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும், எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல் சில உண்டு, என்றாலும் - மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய மீண்டும் ஒரு புள்ளியாக - நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!! http://www.vaarppu.com/view/2385/
  11. தனிமை ந.மயூரரூபன் முறைக்கிறதா என்னைப் பார்த்து சிரிக்கிறதா என்னைப்பார்த்து ஒன்றுமே புரியவில்லை அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும் பிடிபடவில்லை ஒன்றுமே. நான் பார்க்கும் எல்லாமே விரோதமாய்ப் பார்க்கின்றன என்னை மட்டுமே. என் கண்ணில் எப்போதும் ஒட்டியிருப்பது பயந்தானோ? பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ? என்னுள் துடிப்பு ஏறிக் குலைகிறது தாறுமாறாய். என்னுயிரைக் கொய்துவிடும் கனவுகள் நெருக்குகின்றன. கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும் அருட்டிப்பார்க்கிறது என்னை. ஊசியாய்த் துளைக்கும் பார்வையும் உடல் வறட்டக் கத்தும் சத்தமும் மூச்சழிக்க வைக்கும் என்னை. கொப்பில் குதிக்கும் தாட்டானும் தேடித் திரிவது என்னைத்தான். ஊத்தை இளிப்புடன் ஊடுருவிப் பார்க்குமது என்னை. பார்வைகளிலெல்லாம் உயிர் கொழுவித் தவிக்கும். நான் போகுமிடமெல்லாம் நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம். என்னைவிட எல்லோரும் நண்பர்களே. காகமும் தாட்டானும் கூடத்தான். அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன் நான் மட்டும் தனியே http://www.vaarppu.com/view/2371/
  12. கடவுளின் குழந்தை சாத்தான்களும் பிடாரிகளும் சகஜமாய் புழங்கும் கானகத்தில் குழந்தையொன்று மந்திரகவசத்தோடும் உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும் களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்... ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம் அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர் எப்போதும் இறக்கைகள் முளைத்த தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன சாத்தான்களின் பாசறையை கடவுளின் அரண்மனையாய் மாற்றுவதாய் ஏற்பாடு! ஈட்டிகள் துளைக்கையிலும் மரண அவஸ்தை உச்சத்திலும் உதவி வேண்டி குழந்தையின் கதறல் விண்ணைப் பிளந்தும் தேவதைகள் வரவேயில்லை! பார்த்தது குழந்தை! இவ்விடம் வாழ இன்னது ஏற்பு பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது இப்போது கடவுளை வரவேற்க குழந்தை தயார் ஒரு காட்டேரியின் மடியில் குருதியை சுவைத்தபடி! http://kayalsm.blogspot.com/2010/06/blog-post_24.html
  13. வீதியில் நடக்கும்போது வசீகரமான பெண்கள் போனால் தலை தன்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்கும். திரும்பிப் பார்க்க வைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதுபோலத்தான் கவிதையும் முதல் நொடியில் பிடித்துவிடவேண்டும்!
  14. சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன் ஆம் இன்றைக்கு எப்படியாவது கடவுளைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறேன் இனியும் பொறுமையில்லை முழுமையாக உதிர்ந்து விட்டன சகிப்புத்தன்மையின் செதில்கள் வந்துவிட்டார் கடவுள் எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது பின்புறமிருந்து முகத்தில் துணியைப் போர்த்தி வசமான பிடியுடன் இறுக்குகிறேன் திமிறிக் களைத்து தோற்று உடல் தளர்ந்து பிரிகிறது கடவுளின் உயிர் குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில் வழியும் இரத்தத்தை சுவைத்தபடி தொலைவில் வந்து பார்க்கிறேன் தகன மேடையில் யாரோ கிடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனது உடலை. http://www.aganazhigai.com/2010/04/blog-post_20.html
  15. அறிவிலி பற்றி எரிகையிலும் பூ பூக்க உன்னால் மட்டுமே முடியும்! 'மத்தாப்பூ'! சுற்றி எரிகையிலும் உள்ளே, பூகம்பம் வெடிக்கையிலும் சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய் பாசாங்கு பண்ண‌ என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து! எள்ளி ந‌கையாடும் எல்லோரையும் ஏதேதோ க‌தைக்கிறாரென‌ செவிடு பாய்ச்சுவ‌து எப்ப‌டி அக‌ந்தையாகும்? புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌ உல‌க‌த்தில்.... பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌ குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து எனக்கு! கோரிக்கையோ கட்டளையோ இல்லாத செல்லச் சிணுங்களில் சிக்குண்டு சிரிப்பதை ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா? செய‌ற்கையாய் சிரித்து சிரித்து க‌ண்ணில் நீர்வர மெய்யாய் சிரித்த‌து எப்போது? நினைவேயில்லை!! வலி நிர‌ப்பி வடித்த வார்த்தைச் சித்திர‌மெல்லாம் அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில் அதே காயாத‌ குருதி வாச‌னை! கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும் தைக்க‌ப்படவேயில்லை! சுயமெனும் இருள்வெளி தாண்டி புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌ வாய்ப்புகளெல்லாம் வாகாய் வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌! விரும்பிய‌ திசை எதுவென தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி.... கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி ஏனோ, வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை! கூர்மங்கிய நாக்குகளினால் குத்தப்பட்ட சொற் காயங்கள்! உயிர் நீங்கலாக மற்றதை மாய்த்தும் அவர் மனம் நோகுமென பதிலடி தராத பரிதாப தருணங்கள் இந்த அறிவிலி வாழ்க்கையில் அனேகம் நிகழ்வதால் இப்பெயர் பெற்றேன் காரணம் அறிக‌! http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html
  16. நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post_30.html
  17. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

    1. கறுப்பி

      கறுப்பி

      நிச்சயமாய்.........

  18. காவாலியின் கருத்தை வழிமொழிகின்றேன்..
  19. தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

  20. எழுந்து வாரும் தோழரே.. இலங்கைத் தாயின் புதல்வரே.. வளர்ந்து நாட்டைக் காத்திட வந்து சேரும் தோழரே :-)

    1. தயா

      தயா

      இலங்கையை காப்பாத்துறதை தவிர வேறை என்ன வேலை எங்களுக்கு இருக்கு...??

    2. சித்தன்

      சித்தன்

      அப்பத்தானே அவன் எங்களை கவனிப்பான்

  21. பட்டங்களுக்குப் பயந்தால் எதுவும் நடவாது! கிடைக்கும் பட்டங்களைப் பெயரின் பின்னால் போடவேண்டியதுதான்
  22. அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது.
  23. இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.