கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,224
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. உங்கள் சொந்தப் படத்தை முடியின்றி அனுப்பிப் பாருங்கள் :wink: :P :P
 2. பகுத்தறிவைக் கொண்டிருந்தால் பிச்சைதான் எடுக்கமுடியும். பேசாமல் ஆத்திகத்தில் சேர்ந்து சாமிகளை நம்புவர்களிடம் கொள்ளையடித்து சந்தோஷமாக வாழ வழியைப் பாருங்கள்.. :idea:
 3. 8 வருடம் கடந்துவிட்டது. ஒன்றையும் புடுங்க முடியவில்லையென்பதால்தான் இக்கட்டுரையே வந்ததாக நான் நினைக்கின்றேன். சமாதானம் பூச்சாண்டி காட்ட இங்கு வாயில் சூப்பியோடு எத்தனை பேர் உள்ளனர்? :P :wink:
 4. 98 இல் press secretary ஆக இருந்து அமைதி முயற்சிக்கு வித்திட்டதாகத் தற்பெருமை பேசியதிலிருந்தே Glen Jenvey இன் விருப்பம் என்னவென்பது புரிகின்றது. அதை ஏசியன் ரிபுயூனில் படித்து இங்கு ஒட்டியபோது சமாதானம் என்னத்தை நம்பியதோ தெரியவில்லை. துப்பறியும் கதைகளையும், விறுவிறுப்பான நாவல்களையும் படிக்க ஆசைதான். எனவே இன்னும் ஒட்டுங்கள். :wink:
 5. யாழ் களத்தில் கருத்தெழுத மீண்டும் வந்திருக்கின்றீர்கள். தடை கிடைக்காமல் இருக்க வாழ்த்துக்கள் :wink:
 6. ஒவ்வொருவருக்கும் அறிவு ஒளியை ஊட்டுவது அவர்கள் கற்ற பாடசாலைகள்தான். இந்தளவு தூரம் கருத்துக்களை எழுதப் பெற்ற அறிவு படித்த பாடசாலைகளில் இருந்துதான் வந்தது. எனவே, பாடசாலைகளைப் பற்றித் தரக்குறைவாக எழுதுவதை நிறுத்தினால் நல்லது (இது எனது தாழ்மையான அபிப்பிராயம் =>> மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற ஒழுங்கை ஞாபகத்தில் கொள்ளுங்கள்)
 7. தமிழர்களிடம் இந்தப் பழக்கங்கள் ஆதியில் கூட இருந்ததாகக் கேள்விப்படவில்லை. சும்மா தேவையில்லாத அலம்பல்கள் மூலம் இல்லாததை இருப்பதாக நிரூபிக்கமுடியாது.
 8. இரண்டு பந்தியோடு நிறுத்தியிருந்தால் பூகம்பம் வந்திருக்கும். நீங்கள் மூன்றாவது பந்தியை எழுதித் தணித்து விட்டீர்கள். எனக்கென்னமோ நீங்கள் மூன்றாவது பந்தியை முதலில் எழுதத் தீர்மானிக்கவில்லை என்ற மாதிரித் தெரிகின்றது... :roll: தலைப்பினால் உண்டான அதிர்வு கவிதை வரிகளைப் படித்தபோது அடங்கிவிட்டது... :|
 9. அன்றும், இன்றும், என்றும் பிடித்த தமிழ் நடிகர் - கமல்ஹாசன்.. மேலும் தரமான படைப்புக்களைத் தந்து தமிழ்த் திரையுலகத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்..
 10. புலனாய்வை உங்களுக்கே விட்டுவிடுகின்றோம். நீங்கள் குருவியாக இருக்கலாம் அல்லது கொக்காக இருக்கலாம். அதுவல்ல முக்கியம். நீர் இக்களத்திற்கு வேண்டப்படாதவர் என்பதும், உம்மை வரவேற்க விருப்பமில்லையென்பதும் களப்பொறுப்பாளர் வைத்த கருத்தில் இருந்தே தெளிவாகின்றது. அதை நீர் புரிந்து கொண்டால் சரி.
 11. முதல் தரக் கருத்தாளர்கள் உலவும் இடம் இல்லையென்று நினைக்கும் "முதல்" தர கருத்தாளர் எதைச் சாதிக்க முனைகின்றார். அவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இங்கு எவருக்கும் அறிவு போதாது என்பதால்தான் சரியான பதில்கள் வழங்கப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு வேறிடம் போக வேண்டியதுதானே (வேறு போக்கிடம் இல்லையாக்கும்). மலரைச் சுற்றும் வண்டாக (அல்லது மலத்தைச் சுற்றும் ஈயாக) யாழ் மீது ஏனிந்த தீராக் காதல்?
 12. ஏதோ தொற்றுவியாதி போலக் கிடக்கு. நமக்கும் வராமல் இருக்க தள்ளி இருப்போம். :arrow:
 13. உங்கள் பெயருக்கேற்றால்போல்தான் இருக்கின்றீர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியைப் பற்றி இருக்கும் புத்தகங்களை முதலில் படிக்கவேண்டும். ஈழத்து எழுத்தாளர்களான டானியல், எஸ்.பொ, தளையசிங்கம் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்க முயன்றால் எல்லாம் தானாக விளங்கும்.
 14. நாங்கள் என்றும் பொறுமை காப்பவர்கள். யதார்த்தமான உண்மைகளைச் சுட்டிக்காட்டினோம். அது உங்களைப் பொறுமையின் எல்லைக்குத் தள்ளினால், அது உங்களின் குறைபாடேயொழிய நம் தவறல்ல. பி.கு. இத்தலைப்பு மூடப்படவேண்டும் என்பதே உமது குறிக்கோள். அதற்குமுன் உமது கருத்துக்கள் சரியானவை என்று ஒரு மாயத்தோற்றத்தைத் பதியவைக்க முயல்வதும் உமது பாணிதான்.
 15. யாழுக்குக் களங்கம் ஏற்படுத்தவே நீர் இருக்கின்றீர். அதைவிட அவர்களின் சந்திப்பு எவ்வாறு யாழை மலினப்படுத்திவிடப் போகின்றது? உமது கருத்துக்களால் பாதிக்கப்பட்டு ஒதுங்கிவிட்ட யாழ் உறவுகள் எத்தனை பேர் என்று உமக்குத் தெரியும். அப்படியான செயல்பாடுகள்தான் சிறப்பு என்று சொல்லவருகின்றீரோ? யாழுக்கு சிறப்பு/கேவலம் என்பதை யாழ் நிர்வாகத்தினர் சொல்லட்டும். உமக்கு ஒரு கருத்தாளனைவிட மேலதிக அதிகாரமோ, அல்லது யாழ் தளத்திற்காக உத்தியோகபூர்வமாக கருத்துச் சொல்லும் அதிகாரமோ இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளும். :idea:
 16. புற்றுக்குள் பதுங்கியிருப்பதை விட, யாழ் களத்தினூடாக அறிமுகமான நாலு பேர் சந்திப்பதுகூட இமாலய சாதனைதான். யாழ் களத்தினூடாக அறிமுகமானவர்கள், யா௯ழ் கள உறுப்பினர்களின் சந்திப்பு என்று சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை. பெரிய பெரிய கம்பனிகளில் கூட teleconference, video conference என்று பல வசதிகள் இருந்தும், face-to-face meeting க்காக அதிக பணம் செலவழித்துப் பயணம் செய்வது ஏன் என்று விளங்கினால், இப்படியான நேரடியான சந்திப்புக்கள் பயனற்றவை என்று ஒருவரும் எழுதமாட்டார்கள்.
 17. தமிழிலுள்ள விமர்சகர்கள் எப்போதும் குழுமனப்பாங்கினராகவே இருந்துள்ளனர்/இருக்கின்றனர். மார்க்சீய விமர்சகர்கள்/ எதிரானவர்கள் என்று பல முகாம்கள் உள்ளன (வழமையான குடுமி பிடிச் சண்டைகள்தான்). இதில் அழகியல் விமர்சகர்கள் என்பவர்களுக்குள்ளேயே வேற்றுமைகள் உள்ளன. இவை பற்றித்தான் நான் வாசித்த புத்தகம் சொல்கின்றது. ஈழத் தமிழருக்குள்ளும் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று பிரிவுகள் இருந்தன. இப்போதும் அவர்களிம் வழித்தோன்றல்கள் இருக்கவே செய்கின்றார்கள்..
 18. சரி.. நான் தந்தவை எங்கிருந்து சுடப்பட்டன என்று யாராவது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :!: (உதவாக்கரைப் புத்தகங்களைப் படிக்கும் என்போன்றவர்கள் யாவர் என்று கண்டுபிடிக்கத்தான் :idea: ) :arrow:
 19. புலமையினாலோ, பெயர் உதிர்ப்புச் சாமார்த்தியங்களினாலோ தமிழ்ச் சூழலை மதிப்பிடவோ, தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புத் திறனை அறிந்து அவர்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுபோகவோ, அச்சு இயந்திரம் கணந்தோறும் கக்கும் பக்கங்களிலிருந்து சாரமானவற்றைக் கண்டெடுத்து முன்னிலைப் படுத்தவோ இயக்கம் சார்ந்த விமர்சகளால் இயலவில்லை என்பதை தமிழ் விமர்சனச் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
 20. சிறப்பு விவாதங்களுக்குள் எழுத ஆரம்பித்துவிட்டு இலகுவாகத் தாருங்கள் என்றால் எப்படி?? :?: மண்டை விறைக்க வேண்டாமா?? :wink:
 21. அழகியல் விமர்சனம் படைப்பில் நிற்கும் பொருளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் அது உருவத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது என்றும் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. அத்துடன் அழகியல் விமர்சகர்கள் என்று கருதப்படுபவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்குக் கருத்து வேற்றுமைகளைப் பற்றிக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலே மார்க்சிய விமர்சகர்களால் முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள். படைப்பில் பொருளை மட்டும் முன்னிலைப்படுத்டி விமர்சனம் செய்துகொண்டிருந்தவர்கள் காலப்போக்கில் தங்கள் விமர்சன மொழியில் உருவ நேர்த்தி, மொழியழகு, உத்திச் சிறப்பு என்றெல்லாம் சேர்த்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு விமர்சகனை எந்த அளவுகோலை முன்னிறுத்தி நாம் மதிப்பிட வேண்டும்? தத்துவம் தழுவி நிற்கும் விமர்சகன், தத்துவம் சாராத பொது அறிவாளியைவிடவும் கூடுதலான சமூக உண்மைகளை - ஊனக் கண்களுக்குப் புலப்படாமல் ஞானக் கண்களுக்கு மட்டும் புலப்படும் உண்மைகளை - கண்டுவிடித்துக் கூற இயலும் சாத்தியம் எந்த அளவுக்கு நிரூபணம் ஆகியிருக்கின்றது? தத்துவப் பற்று இயக்கப் பற்றாக்வும் கட்சிப் பற்ராகவும் மாறும்போது ஞானக் கண் பெற்றவர்களால் சாதாரண மனிதன் அறிந்து வைத்திருக்கும் செய்திகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.
 22. விமர்சனம் என்றால் ஒரு படைப்பைப் பற்றிய திறனாய்வு என்று கருதி கீழ் வரும் பந்திகளைப் படிக்கவும்.. தமிழ் விமர்சனத் துறையில் வெளியாகும் கருத்துக்களை அழகியல் விமர்சன முறை, மார்க்சிய விமர்சன முறை என்றெல்லாம் பிரிக்கலாம். இவற்றையும் தாண்டி அமைப்பியல் பார்வை, பின்நவீனத்துவப் பார்வை போன்ற போக்குகளும் உள்ளன. இவை எதிரெதிர் நிலைகளைக் கொண்ட விமர்சன முறைகள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சனத்தில் தத்துவ நிலைப்பாடு எடுப்பவர்கள் தங்கள் தத்துவத்திற்கு வெளியே நின்றுகொண்டு செயல்படுபவர்களை எதிரிகளாகவே தங்கள் அணியினருக்கு காட்ட முற்படுகின்றார்கள். தாங்கள் ஏற்று நிற்கும் தத்துவமே முழுமையானது என்றும், அதன் மூலம் மட்டுமே சமூக ஊனங்களுக்குப் பரிகாரம் காண இயலும் அல்லது அவற்றைப் புரிந்துகொள்ள இயலும் என்றும் தங்கள் அணியினரை நம்ப வைக்கும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். உலக அரசியல் அரங்கில் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாக இந்த இறுக்கமான பார்வையைக் கொண்டு செலுத்த இயலாத நிலை இப்போது உருவாகிவிட்டது.
 23. என்ன ஆதிவாசி, நம்மளப் பாத்தா பேராசிரியர் சிவத்தம்பி மாதிரியா இருக்கு? தமிழில் பாண்டித்தியம் எல்லாம் நமக்குக் கிடையாது. எல்லோரையும் போல் எனக்கும் இது தாய்மொழி அவ்வளவே!