Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33696
  • Joined

  • Days Won

    157

Posts posted by கிருபன்

  1. பலஸ்தீன அகதிகள் நிரம்பிய ரபாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிப்பு

    படை நடவடிக்கை திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கை

    damithFebruary 12, 2024
    16-2-2.jpg

    பலஸ்தீன அகதிகளால் நிரம்பி வழியும் தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் அதற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

    “இந்தப் பகுதியில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக” பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டி இருப்பதோடு, இது பொதுமக்களிடையே பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஹங்கே ப்ருயின்ஸ் ஸ்லொட் எச்சரித்துள்ளார்.

    ரபா மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் சவூதி அரேபியா மற்றும் ஓமான் எச்சரித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

    காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியில் இன்னும் தனது படை நடவடிக்கையை முன்னேடுக்காத பிரதான நகராக இருக்கும் ரபா மீது தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்தே தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் ரபா நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

    ரபாவின் கிழக்கில் உள்ள அடைக்கலம் பெற்ற மக்கள் வசித்த வீடு ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை (10) இரவு இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

    ரபாவில் திட்டமிட்ட வகையில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனி நபர்கள் இலக்கு வைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் தலைவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரபா நகரில் மக்கள் ஒழுங்கை குழப்பும் வகையிலேயே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் நகரின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிஸ் திணைக்களம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    ரபா மீதான படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலையை வெளியிட்டுள்ளன.

    எனினும் ரபாவில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு ‘பாதுகாப்பான வழி’ ஏற்படுத்தப்படும் என்று நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏ.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரபா நகருக்கு இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் தனது திட்டத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.

    “பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி நாம் இதனைச் செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

    காசா பகுதியின் எல்லையாக இருக்கும் ரபாவில் அந்தப் பகுதியின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் அந்த நகர் மீது தாக்குதல் தொடுத்தால் மக்கள் அங்கிருந்து வெளியேற இடம் இல்லாத நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.

    ‘புதைகுழி தான் மிச்சம்’

    இந்நிலையில் எகிப்துடனான ரபா எல்லை வேலியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் தனது கடைசி அடைக்கலமாக பல டஜன் கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்னவே இஸ்ரேலிய தாக்குதல்களால் பல முறை இடம்பெயர்ந்த நிலையிலேயே இங்கு வந்துள்ளனர்.

    காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான 14 கிலோமீற்றர் நீண்ட எல்லையான பிலடொல்பி இடைவழி நிலப்பகுதியை ஒட்டியே சலேஹ் ரசைனா என்பவரும் கூடாரம் அமைத்துள்ளார். அவர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் ஆறு முறை இடம்பெயர்ந்துள்ளார்.

    பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிய பயணத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் உடல் மற்றும் உள ரீதியில் பலவீனம் அடைந்துள்ளனர்.

    “நான் ஜபலியாவில் இருந்து (வடக்கு காசா) வந்தேன். வடக்கு காசாவில் இருந்து தெற்கு வரை காசா நகர், டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் வரை இடம்பெயர்ந்து இப்போது ரபாவுக்கு வந்திருக்கிறேன். நாம் வந்த சில நாட்களிலேயே இங்கு தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று 42 வயதாகும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரசைனா, மிடில் ஈஸ்ட் ஐ செய்தி இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

    ரபாவில் தற்போது 610,000 சிறுவர்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் சிக்கி இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப்பிடுகிறது. இந்த நிலப்பகுதி காசாவின் மொத்த நிலப் பரப்பில் ஐந்தில் ஒன்றுக்கும் குறைவான இடம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

    “நான் இனியும் வேறு எங்கும் போகப்போவதில்லை. நான் ஏற்கனவே ஆறு தடவைகள் இடம்பெயர்ந்து விட்டே. எம்மால் அடைய முடியுமான கடைசி இடம் இது தான்” என்றார் ரசைனா.

    “நாம் எகிப்துடனான எல்லைக்கு வந்தது இது பாதுகாப்பான இடம் என்று நம்பியாகும். இஸ்ரேலால் துரத்த முடியுமான கடைசி இடம் இது தான். இப்போது அவர்களால் மேலும் துரத்த முடியாது. எம்மாலும் இனி நகர முடியாது. இங்கிருந்து எம்மால் புதைகுழிக்குத் தான் செல்ல முடியும். இது எமது கடைசி இருப்பிடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ரபாவில் இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு பற்றி கடும் கவலை அடைவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கமரூன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். “போரை உடன் நிறுத்தி உதவிகளை வழங்குவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது, தொடர்ந்து நீடித்த மற்றும் நிலையான போர் நிறுத்தம் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதேநேரம், ரபாவின் நிலைமை பெரும் கவலை அளிப்பதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஸ்லொட் குறிப்பிட்டுள்ளார். “காசாவின் பொதுமக்கள் பலரும் தெற்கிற்கு தப்பிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறான மக்கள் நெரிசல் கொண்ட பகுதி ஒன்றில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினால் பெரும் உயிரிழப்புகள் மாத்திரமன்றி ஏற்படும் பாரிய மனிதாபிமான பேரழிவை எவ்வாறு பார்ப்பது என்பது கடினமாக உள்ளது. இது நியாயப்படுத்த முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோன்று சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலிய கொடிய தாக்குதலால் தப்பிச் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள காசாவின் ரபா நகரை இலக்கு வைப்பதற்கு எதிராக” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடனடி போர் நிறுத்தம் ஒன்றும் அந்த அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

    மறுபுறம் தமது நிலப்பகுதியில் பலஸ்தீனர்களின் பாரிய இடம்பெயர்வொன்றுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று எகிப்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. தமது நிலத்தில் இருந்து துரருத்தும் இஸ்ரேல் மீண்டும் தமது நிலத்திற்கு திரும்புவதற்கு அனுமதிக்காது என்று பலஸ்தீனர்கள் அஞ்சுகின்றனர்.

    ரபா தவிர காசாவின் மற்ற பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் நேற்றுக் காலை உக்கிர வான் தாக்குதல்கள் நீடித்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

    இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 112 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,176 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 67,784 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதேவேளை ஒருவாரத்திற்கு முன் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்த 6 வயது சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதேபோன்று அவர்களை மீட்க அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் குழுவினர்களின் உடல்கள் காசா நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக பலஸ்தீன மீட்புக் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
     

    https://www.thinakaran.lk/2024/02/12/world/41778/பலஸ்தீன-அகதிகள்-நிரம்பிய/


  2.  

    தமிழரசுக் கட்சிச் செயலர்: இணக்கப்பாடு இல்லை

    1678406774.jpg

    (ஆதவன்) 

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் தொடர்பான கலந்துரையாடலில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடந்தது.

    கட்சியின் புதிய தலைவர் சி.சிறீதரன், பதில் பொதுச்செயலர் பா.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், செயலர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு தரப்பும் கலந்து கொண்டன.

    திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஞா.சிறிநேசனும் செயலர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்ள இணங்கினாலும், யார் முதலாவது வருடத்தில் செயலாளராகப் பதவி வகிப்பது என்பதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இருவரையும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு கேட்கப்பட்டிருந்தது. இருவரும் பேசி எடுக்கும் முடிவுக்கு தான் இணங்குவதாக கட்சித் தலைவர் சிறீதரன் குறிப்பிட்டார். இருவரும் தாம் ஏன் பொதுச்செயலாளராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நியாயத்தை குறிப்பிட்டனர்.

    எனினும், இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மேலும் 2 நாள்கள் எடுத்து தீவிரமாக யோசிக்கும் படியும், மீண்டும் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. (ஏ)  

    https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சிச்_செயலர்:_இணக்கப்பாடு_இல்லை

  3. நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம்: முதலாவது நபர் கைது!

    adminFebruary 11, 2024
     

    சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

    பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார்.

    சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சமூக ஊடகங்கள் தங்களையும், அரசாங்கத்தின் செயல்களையும், பதில் காவற்துறை மா அதிபர் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றார்’எனவும்,  இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை (நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்) அரசாங்கம் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    அரசாங்கத்தை கவிழ்க்க கூட அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரமே இணைய பாதுகாப்பு சட்டம் பிரச்சினையாக இருக்கும் என டிரான் அலஸ்  தெரிவித்தார்.

     

    https://globaltamilnews.net/2024/200500/

  4. தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்

    Untitled-112.jpg

    தமிழரசுக்  கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது. அவ்வாறு வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. 1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா, பாலகிருஷ்ணன், சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில்  பேசினார்கள். அவர்களுடைய கருத்தை, அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம்  ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

    தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு  போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள். எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்? 2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில், நான் ஆற்றிய உரையில், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன். அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார். 2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார். அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள். சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

    எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல. அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல. இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர். அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான். அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார். அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார். பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்…. ”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் . பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?” என்று.

    சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

    எனவே, சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை. அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும். இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும். தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

    கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது. ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல. தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

    GF5pMnCXgAAHlXu-c.jpg
    GFPqeSBb0AA8e6r-1.jpg

    சுமந்திரன் அணியின் எழுச்சி என்பது தேர்தலோடு ஏற்பட்ட ஒரு தோற்றப்பாடு அல்ல. தேர்தலோடு அது மேலும் பலமடைந்தது என்பதே சரி. அது கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடு. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொள்கின்ற; ஐக்கிய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பு கட்சிக்குள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.

    எனவே அந்த உட்கட்சி யதார்த்தத்தை உள்வாங்கி சிறீதரன் கட்சியைச் சீரமைக்க வேண்டியவராக இருக்கிறார். சுமந்திரன் கட்சியைத் தேசிய நீக்கம் செய்தார் என்று அவர் கருதினால், கட்சியை முன்னரை விட அதிகமாக தேசிய மயப்படுத்த வேண்டியது இப்பொழுது சிறீதரனுடைய பொறுப்பு.

    குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகளின் விளைவாக கட்சிக்குள் மற்றொரு சிறு பிளவு மேற் கிளம்பும் ஆபத்துத் தெரிகிறது. அது மட்டக்களப்பு- திருகோணமலை என்ற முரண்பாடு. கிழக்கை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதில் மட்டக்களப்பா? திருக்கோணமில்லையா? என்ற ஒரு போட்டி அங்கே தோன்றியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சிக்கு விட்டுச் சென்றிருக்கும் மற்றொரு தீங்கான விளைவு அது. கிழக்கை மையமாகக் கொண்ட சம்பந்தர் தலைவராக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் கிழக்கில் பிள்ளையானின் கட்சிக்கு பலமான வாக்காளர் வங்கி ஒன்று உருவாகியது. அது கிழக்கின் யதார்த்தங்களில் ஒன்று. பிள்ளையானின் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வசித்தவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் கிழக்கின் யதார்த்தம்தான். இவ்வாறு ஏற்கனவே வடக்குக் கிழக்காகப் பிரிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில், இப்பொழுது கிழக்குக்குள்ளேயே ஒரு பிரிவு தோன்றக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அதாவது ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் ஒரு தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு புதிய உடைவுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. சிறீதரன் அதையும் கையாள வேண்டியுள்ளது

    GFgIgMrXYAAYOrO.jpg
    GFgIhLJXYAAXHZ-.jpg

    அவர் பதவியேற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றார். அது கொழும்பில் உள்ள மேற்கத்திய தூதரகங்களால் பெரிய அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கப்படவில்லை என்று சுமந்திரனுக்கு நெருக்கமான சிலர் கூறியதாக அறிகிறேன். எனினும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் சிங்கள ஊடகவியலாளராகிய சுனந்த தேசப்பிரிய பின்வருமாறு ருவிற் பண்ணியிருந்தார் “தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனை  சிறீதரன் வென்றமையானது தமிழ் அரசியல் தீவிரப்போக்கடைவதைக்  காட்டும் ஒரு  சமிக்ஞையாகும்”

    அதாவது சிறிதரனின் தலைமைத்துவம் தமிழ் அரசியலில் தீவிரவாத போக்கை மேலும் அதிகப்படுத்தப்போகிறது என்று கொழும்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களக் கடும்போக்கு வாக்குகளைக் கவர விரும்புகிறவர்களுக்கு அது வழிகளை இலகுவாக்கிக் கொடுக்குமா? குறிப்பாக நடந்து முடிந்த சுதந்திர தினத்திலன்று சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதில் சிறீதரன் நடந்து கொண்ட விதமும், அவர் கட்சியை எந்த திசையில் செலுத்த விரும்புகிறார் என்பதனை உணர்த்துகின்றதா? சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுவதுபோல தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கஜேந்திரகுமார் கிடைத்திருக்கிறாரா?

    சுதந்திர தினமன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியிலானது. கட்சிக்குள் தன்னுடைய நிலையைப்  பலப்படுத்துவதற்கு அது சிறிதரனுக்கு உதவும்.

    சிறீதரன் முதலில் கட்சிக்குள் தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியானது கொழும்பை நோக்கி அதிகம் அதிகம் திருப்பப்பட்டு விட்டது. அதை மீண்டும் வாக்காளர்கள் நோக்கித் திருப்பவேண்டும். அதே சமயம் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதுபோல ஒரு சமஸ்ரியை அடைவதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று ஆதரவாளர்களுக்கு வீரமாகத் தலைமை தாங்குவது கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்த உதவலாம். அதற்குமப்பால் சமஸ்ரியை அடைவதற்கான செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும்.
     

    https://www.nillanthan.com/6533/

     

  5. இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

    ManjulaFeb 10, 2024 13:44PM
    Lal-4.jpg

    ரசிகர்களுக்குப் பிடித்துப்போன விஷயங்களைப் பற்றி திரைப்படங்கள் எடுத்தால், அவை பெரிய வரவேற்பைப் பெறும். இதனை முன்வைத்தே, ‘ட்ரெண்ட்’ என்கிற வஸ்து திரையுலகில் கோலோச்சி வருகிறது.

    அந்த வகையில் கிரிக்கெட், சூப்பர்ஸ்டார் ரஜினி, மதவாதம் என வேறுபட்ட அம்சங்களைத் திரையில் காட்டுகிறதோ என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது ‘லால் சலாம்’ ட்ரெய்லர். தற்போது படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா, செந்தில், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

    அதையெல்லாம் மீறி, ரஜினிகாந்த் இதில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதே இதன் யுஎஸ்பி. அது திரையில் சரியாக ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.

    Lal Salaam Twitter Review

    தடம் புரட்டும் சம்பவம்

    ஒரு ஊரே கிரிக்கெட் போட்டியால் இரண்டுபடுகிறது. மதங்களின் பெயரால் பிளவுபடுகிறது. அதுவரை சகோதர பாசத்தோடு பழகியவர்கள் ஒருவரையொருவர் தாக்குகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணகர்த்தா என்று ஒரு நபர் கைகாட்டப்படுகிறார். அவரது பெயர் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்).

    கடலூர் வட்டாரத்திலுள்ள மூரார்பாத் ஊரைச் சேர்ந்தவர் திரு. அவரது தந்தை (லிவிங்ஸ்டன்) இறந்துபோக, தாய் (ஜீவிதா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். திருவின் தந்தையும் மொய்தீனும் (ரஜினிகாந்த்) நெருங்கிய நண்பர்கள்.

    சிறு வயதில் மொய்தீன் மகன் ஷம்சுதீன் (விக்ராந்த்) உடன் சேர்த்துத் தன்னை வெளியூரில் உள்ள பள்ளியொன்றில் படிக்க வைத்தது, திருவின் மனதில் அவருக்குள் காயத்தை ஏற்படுத்துகிறது.

    வளர வளர அது மொய்தீன் குடும்பத்தின் மீதான வெறுப்பாக மாறுகிறது. திருவின் குடும்பத்திற்கு மொய்தீன் பண உதவி செய்வது, ஊரில் சிலர் கேலி பேசவும் காரணமாகிறது.

    மூரார்பாத்தில் 3 ஸ்டார், எம்சிசி என்று இரண்டு கிரிக்கெட் அணிகள் உண்டு. இரண்டுமே மதங்களின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

    எம்சிசியின் கேப்டனான திரு, அந்த வட்டாரத்திலேயே பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரராக இருக்கிறார். அவரைத் தோற்கடிக்க, பம்பாயில் இருந்து மொய்தீன் மகன் சம்சுதீனை வரவழைக்கிறது 3 ஸ்டார் குழு.

    ஒரு ஆட்டத்தில் 3 ஸ்டார் அணி தோற்கிறது. அதனால், சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இன்னொரு ஆட்டம் ஆட வேண்டுமென்று வற்புறுத்துகிறார் சம்சுதீன்.

    அந்த நேரத்தில், அவர் ரஞ்சி டிராபி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவது மொய்தீன் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

    IVilQVgB-rk-1.jpg

    ஆனால், 3 ஸ்டார் மற்றும் எம்சிசி இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்படும் தகராறு ஊரையே இரண்டாக்குகிறது. மோதலின்போது, சம்சுதீன் கையில் காயம் ஏற்படுத்துகிறார் திரு.

    உள்ளூர் மருத்துவமனையில் அதற்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அவரை வெளியூருக்குக் கூட்டிச் செல்கின்றனர். அங்கு, ‘கால தாமதம் ஆனதால் கையை வெட்டி எடுக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

    கையை இழந்த வேதனை சம்சுதீனை அலைக்கழிக்கிறது. அந்த வழக்கில் கைதாகிச் சிறை செல்கிறார் திரு. பெயில் கிடைத்து வெளியே வரும் அவரை ஒரு கும்பல் தாக்குகிறது.

    தாயோ, உறவினர்களோ, ஊர் மக்களோ அவரை ஏற்கத் தயாராக இல்லை. அவரால்தான் ஊருக்குள் பிரிவு வந்ததாகத் தூற்றுகின்றனர் மக்கள்.

    அதேநேரத்தில், திருவை எதிரியாகக் கருதும் எம்.எல்.ஏ. மருமகன் மகராஜன் (விவேக் பிரசன்னா) ஊர் மக்கள் அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடும்போது கலாட்டா செய்கிறார்.

    நான்கு ஊர்களின் கோயிலுக்குப் பொதுவாக விளங்கும் தேரை மூரார்பாத்தில் இருந்து இழுத்துச் செல்கிறார்.

    ஏற்கனவே மொய்தீனுடன் பகை ஏற்பட்டதற்காகத் திருவைக் கரித்துக் கொட்டும் ஊரார், தேர் திருவிழா நடைபெறாமல் போனதற்கும் அவரே காரணம் என்று தூற்றுகின்றனர்.

    அதன்பிறகாவது தன் மீதுள்ள களங்கங்களைத் திரு துடைத்தெறிந்தாரா? மீண்டும் தேர் திருவிழாவை நடத்தினாரா? மொய்தீன் மற்றும் அவரது மகனுடனான பகையைக் களைந்தாரா என்று சொல்கிறது ‘லால் சலாம்’ படத்தின் மீதி.

    ஊர் மக்களின் ஒற்றுமையைத் தடம் புரளச் செய்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது ‘லால் சலாம்’ படக் கதை. ஆனால், அதனை மறந்துவிட்டு வேறெங்கோ திரைக்கதை செல்வது ஏமாற்றம் தருகிறது.

    Lal-2.jpg

    முதுமையிலும் அழகு

    ஏறக்குறைய இளமைப்பொலிவை ஒப்பனையால் ஏற்படுத்திவிட முடியுமென்ற காலகட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டார் ரஜினிகாந்த்.

    அதனால், வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்றால் போதும் என்ற இடத்தை அடைந்திருப்பதும் சிறப்பு. ஆனாலும், அவரை ‘ஸ்டண்ட்’ காட்சிகளில் நடிக்க வைத்தால் தான் ஹீரோயிசம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

    முதுமையிலும் ஒரு அழகுண்டு என்று காட்ட முயன்றிருந்தால், சூப்பர்ஸ்டார் மகள் என்ற பெருமையை இன்னும் ருசித்திருக்க வாய்ப்புண்டு. இதுவே, படத்தில் ரஜினியின் இருப்பு எத்தகையது என்று சொல்லிவிடும்.

    விஷ்ணு விஷால் இந்த படத்தின் நாயகன். அவருக்கே நிறைய முக்கியத்துவம். அதற்கேற்ப திருவாகத் தோன்றியிருக்கிறார். விக்ராந்த், இதில் ரஜினியின் மகனாகத் தோன்றியிருக்கிறார்.

    முக்கியமானதொரு பாத்திரம். அதனைச் சரியாகச் செய்திருக்கிறார். அழுது மூக்கைச் சிந்துவதே வேலை என்றிருக்கிறார் ஜீவிதா. அவருக்கும் லிவிங்ஸ்டனுக்கும் அதிகக் காட்சிகள் இல்லை.

    நிரோஷா இதில் ரஜினியின் மனைவியாக வந்து போகிறார். தம்பி ராமையா, செந்தில், நந்தகுமார், ஆதித்யா மேனன், பாண்டி ரவி, மூணார் ரமேஷ் என்று பலர் இதில் முகம் காட்டியுள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரும் இதில் உண்டு.

    விஷ்ணு விஷாலின் ஜோடியாக அனந்திகா ஒரு பாடல் காட்சிக்கு வந்து போயிருக்கிறார். தங்கதுரை உட்பட நால்வர் கூட்டணி ஓரிரு காட்சிகளில் நகைச்சுவையூட்டுகிறது.

    படத்தில் வில்லனாக விவேக் பிரசன்னாவும், அவரது மனைவியாக ஒரேயொரு காட்சிக்குத் தான்யாவும் வந்து போயிருக்கின்றனர். இத்தனை பாத்திரங்கள் இருப்பது இப்படத்திற்குப் பலமாக மாறியிருக்க வேண்டும்.

    ஆனால், எதற்கும் திரைக்கதையில் சரிவர இடமளிக்காதது படத்தைப் பலவீனப்படுத்தி இருக்கிறது. இது போக, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இரண்டு காட்சிகளில் ’கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

    விஷ்ணு ரங்கசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரை முழுக்க மனிதர்களும் பொருட்களும் நிறைந்து ஏதேனும் ஒரு வண்ணம் மிகுந்திருக்க வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

    RK.jpg

    ஒவ்வொரு பிரேமும் செறிவுடன் அமைந்திருக்கிறது. ராமு தங்கராஜின் தயாரிப்பு வடிவமைப்பு படத்திற்குப் பலம் கூட்டுகிறது. ரங்காவின் டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல விஷயங்கள் திரையை வண்ணமயமாக மாற்றியிருக்கின்றன.

    ஒளிப்பதிவாளர் விஷ்ணுவே இப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைய எப்படி தொடங்குறோம்கறது முக்கியமில்ல; எப்படி முடிக்கிறோம்கறதுதான் முக்கியம்’, ‘திருவிழா வர்ற ரெண்டு நாளுக்காகத்தான் ஒரு வருஷத்தையே நான் வாழுறேன்’ என்பது போன்ற வசனங்கள் நம்மை ஈர்க்கும்.

    படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் பிரவீன் பாஸ்கர், திரைக்கதையில் பதில்களைத் தர வேண்டிய சில காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார்.

    திரைக்கதை ஒரு வடிவத்தில் அடங்கவில்லை என்று தெரிந்தும், சிதறிக் கிடக்கும் காட்சிகளைக் கோர்வையாக அடுக்கத் தவறியிருக்கிறார்.

    முதலில் கேட்கும்போது ‘ப்பா..’ என்று அசூயைப்பட வைத்தாலும், திரையில் பார்க்கும்போது ‘ஏ புள்ள..’, ‘தேர் திருவிழா’, ‘ஜலாலி’ பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்களை நினைவூட்டுகிறது.

    அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம். அதேநேரத்தில், ஒட்டடையின் பலத்தில் நிற்கும் சிதைந்த கட்டடம் போலப் பல காட்சிகளைக் காப்பாற்றவும் அதுவே உதவியிருக்கிறது.

    Lal-3.jpg

    யாருக்காக இந்தப் படம்?

    இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை உணர்ச்சிவயப்பட வைப்பதோடு, மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது. எல்லாமே சரிதான்! ஆனால், இந்த படம் யாருக்கானது என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

    ஏனென்றால், இரு தரப்பு மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அச்சு அசலாகப் பதிவு செய்திருக்க வேண்டிய இத்திரைப்படம் ரொம்பவே மேலோட்டமாக அதைப் பேசியிருக்கிறது.

    அரைகுறையாகப் பார்க்கும் ரசிகர்கள் அதனால் கதையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒரு திரைப்படமாகவும் சில இடங்களில் பின்தங்கியிருக்கிறது ‘லால் சலாம்’.

    இடதுசாரிகள் சொல்லும் ‘சிவப்பு வணக்கம்’ என்ற சொல்லை ஏன் இக்கதைக்கு டைட்டிலாக வைக்க வேண்டும். தெரியவில்லை.

    படத்தின் முதல் பாதியில் கிரிக்கெட் ஆட்டமும், மொய்தீன் குடும்பமும் திரைக்கதையின் மையமாக இருக்கின்றன.

    இரண்டாம் பாதியை தேர் திருவிழாவும் மகாராஜனின் வில்லத்தனமும் ஆக்கிரமிக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரம் முதல் காட்சியோடு காணாமல் போகிறது.

    லிவிங்க்ஸ்டன் – ரஜினி நட்போ, ரஜினி மீது விஷ்ணு விஷால் காட்டும் வெறுப்போ, விக்ராந்த் பாத்திரம் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அணுகும் விதமோ, இத்திரைக்கதையில் முழுமையாக வெளிப்படவில்லை.

    சில காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவை எதற்காக நீக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமாக ‘ரியாக்ட்’ செய்கின்றன.

    ஒவ்வொரு காட்சியும் அழுத்தமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒன்றாகக் கோர்த்ததில் தெளிவு சுத்தமாக இல்லை.

    முக்கியமாக, இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி விலாவாரியாகக் காட்டப்பட வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வி நம்மை அலைக்கழிக்கிறது.

    அனைத்து பின்னடைவுகளையும் ‘ரஜினி’ என்ற ஒற்றை வார்த்தையால் சரி செய்திட முடியும் என்று இயக்குனர் ஐஸ்வர்யா நினைத்திருந்தால், ‘வெரி சாரி’ என்றே சொல்லியாக வேண்டும். அதுவே, யாருக்கானது இந்த வணக்கம் என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடும்!

    உதய் பாடகலிங்கம் 

     

    https://minnambalam.com/cinema/lal-salaam-movie-review-aishwarya-rajinikanths-impressed-her-attempt/

     

  6. அல்வாயின் அகள்விளக்கு கலாமணி!வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சம் !!

    February 10, 2024
     

     ஐங்கரன் விக்கினேஸ்வரா

     

    வடமராட்சியில் கடந்த 1987 ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ போது நடந்தேறிய கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் முதலாவதாக ஆண்டு நினைவு கூர்வாகக் கொண்டு வெளியாகும் “கல்லறை மேலான காற்று”கவிதைத்தொகுதிக்கு முன்னுரை ஒன்று அவசியம்தானா என்பது இன்னமும் வினாவாகவே என்னிடம் உள்ளது என ஆசான் கலாமணியின் வார்த்தைகள் இன்னமும் என் மன நினைவுகளில் பதிந்துள்ளது.

     

    இப்படித் தான் எங்கள் இலக்கிய நட்பு முகிழ்ந்தது. காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1988 போர்க் காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பே

    “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாகும்.

    வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன்

    கொடூர நினைவுகளின் அழியாத, அனல் வீசும் கவிதை தொகுப்பை ஈரோசின்

    மாணவர் இளைஞர் பொது மன்றத்தால் (GUYS) 1988 இல் வெளியிடப்பட்டது.

    இந்நூலின் முன்னுரையில் ‘விமர்சனமாக அமையக் கூடாதென்பதனால் கவிதைகள் பற்றி தனித்தனியாகவே கருத்துக்கூறுதல் பொருத்தமன்று எனினும் இக்கவிதைகள் யாவுமே, இராணுவக் கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டும் பொதுப்பண்பைத் தம்மகத்தே எனக்கூறுதல் சாலப் பொருந்தும். வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் இதற்கு ஓர் இடமுண்டு’ என எழுதியுள்ளார் ஆசான் கலாமணி.

    வடமராட்சி “ஒப்பரேஷன் லிபரேஷன்” ஓராண்டு நினைவுக் கவிதைகளை படைத்த இளங் கவிஞர்களின் படைப்பான “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாக்கு ‘அல்வைக் கலா’ எனும் எங்கள் பேராசான் கலாநிதி த. கலாமணி 31-05-1988 இல் எழுதிய முன்னுரையாகும்.

    அண்மையில் கலாமணியின் மைந்தன் பரணீதரனுடன் ஆசானின் முன்னுரைகளை தொகுத்து நூலாக்க வேண்டும் என கலந்துரையாடினோம். அவர் வாழும் போதே நூலாக்க வேண்டும் என முயன்றோம். எனினும் அவருக்கு சமர்ப்பணமாக அந்நூல் விரைவில் வெளிவரும்.

    கல்வியியல் துறை ஆசான்:

    யாழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆசானாகிய கலாநிதி தம்பிஐயா கலாமணி (1952.02.04) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த பிரபல்யமான நாடகக் கலைஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன இவர், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

    இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘நாட்கள் , கணங்கள் நமது வாழ்க்கை’ என்பதாகும். இவர் ‘ஒப்பிலாமணியே’ என்ற குறும்படத்தையும் நடித்துள்ளார். 1974 முதல் சிறுகதை எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

    வடமராட்சியின் மூத்த விருட்சமாக என்றும் விளங்கும் கலாமணி ஆசான் படைத்த படைப்புக்கள் பல. அவற்றுள் அம்மாவின் உலகம், இலக்கியமும் உளவியலும், இளையோர் இசை நாடகம், ஏனிந்தத் தேவாசுர யுத்தம்,

    காலநதியின் கற்குழிவு, ஜீவநதி நேர்காணல்கள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

    அல்வாய் மண்ணின் அகள்விளக்காக ஒளிவீசிய ஆசான் கலாமணியின் திரு ஊஞ்சல்- கொற்றாவத்தை சிறப்பாவளை அவதாரக் கண்ணன் ஸ்ரீ ரமணன் திருவுடையாள்: பிரதேசமலர் 2011, நதியில் விளையாடி, நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்,

    பாட்டுத் திறத்தாலே, புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும், பெளதிக விஞ்ஞானக் கலைச்சொற்கள், மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல்,

    வடமராட்சி வலயக்கல்விச் சமூகம் முன்னெடுக்கும் ஆசிரியர் மகாநாடு 2016 ஆகியன இவரது மண் வாசம் வீசும் நூல்களாகும்.

    அல்வாயின் அகள்விளக்கு:

    மனோகரா நாடகசபாவின் இயக்குனரான இவர், வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஶ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள் சிறுகதை நூலுக்கு, வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    மண்வாசனை வீசும் எழுத்தை தன் உயிராக நேசித்த அல்வாயின் அகள்விளக்கு கலாமணி நேற்று (2024பெப்ரவரி 9) நள்ளிரவில் விண்ணேவிய தகவல் மனதை நெருடியது. வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சமான கலாமணி ஆசான் என்றும் புதிய தலைமுறைகளுக்கான வழிகாட்டியாய் இருப்பார்.

     

    https://www.supeedsam.com/196112/

    1 hour ago, Kandiah57 said:

    எப்படி பௌதீகவியல். படிப்பித்தார் ?? விளங்கவில்லை   

    பல்துறை விற்பன்னர்.

    1 minute ago, கிருபன் said:

    யாழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆசானாகிய கலாநிதி தம்பிஐயா கலாமணி (1952.02.04) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த பிரபல்யமான நாடகக் கலைஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன இவர், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

     

    • Thanks 1
  7. பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி

    பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி

    தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(9) மாலை நடைபெற்றது.

    குறித்த இசைநிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, யோகி பாபு, புகழ், சான்னி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், கலா மாஸ்டர், ரச்சிதா, ஸ்டான்லி, டிடி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

    Hariharan-Concert-3.webp

    இதன்போது, பாதுகாப்பு வேலைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இளைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த விடாமல் சத்தமிட்டதுடன், அரங்கத்திற்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பல நட்சத்திரங்கள் அமைதியாக இருக்கும்படியு கேட்டும் இளைஞர்கள் ஓய்ந்தபாடில்லை.

    Hariharan-Concert-2.webp

    இதன்போது, “ஆடியன்ஸ் ப்ளீஸ், ப்ளீஸ் உங்க கால்ல விழுறம்” என கலா மாஸ்டர் யாழ் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    எனினும் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், கலவரத்தாலும், குறித்த ஹரிகரன் இசை நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

    GFzkkQMX0AANPOn.jpg

    மேலும், இத்தனை அமளிக்கு மத்தியிலும் நடிகை தமன்னாவின் நடனம் ஒன்று அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

    25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    GFzkkQPWcAA6z3H.jpg

    ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

    முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

    GFzB8SgaIAAqMqF.jpg

    பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது.

    GF7F8LHWMAA6WcS.jpgGF7F77iWEAAQhxR.jpgGF7F7giXQAA4Cui.jpgGF7F6IDXoAAF_ZV.jpgGF0Av-oWEAAoJis.jpgGF0Av-fXsAAXCS1.jpgGF0Av-fXgAAAxhQ.jpgGF0Av-eXYAArCt6.jpgGFyxaSrbIAA39dv.jpg

     

    https://trueceylon.lk/hariharan-musical-show-postbont-25254/#google_vignette

     

  8. ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பநிலை – 6 பேர் கைது ! 3 பேர் வைத்தியசாலையில்

    யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையில்  சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாணம்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து மேடை வரையில் சென்று இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

    இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு  பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள்  முடித்துக்கொண்டனர்.

    news-03-2.jpgnews-04-1.jpg
     

    https://thinakkural.lk/article/291234

     

  9. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை புறக்கணிக்கும் ரணில்: சுமந்திரன் பகிரங்கம்

    7-9.jpg

    தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, கொள்கை பிரகடன உரை மீதான ஆர்வம் காரணமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ரணிலின் நடவடிக்கை

    இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறுகையில், “சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் நடவடிக்கை எடுத்தார்.

    இதற்கான காரணம் என்னவென்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன், கொள்கை பிரகடனத்தின் மீதான பற்றால் அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கிறார்.

    இதுவரை அவர் கூற வேண்டுமென நினைத்த அனைத்தையும் கொள்கை பிரகடனத்துக்குள் உள்ளடக்கியுள்ளார்.

    இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், எனினும் சிறிலங்காவின் அதிபராக தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளமை குறித்து அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

    அதிபர் தேர்தல்

    இந்த வார்த்தைகளில் உண்மை இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் திறமை காரணமாக தற்போது நாட்டின் நிலை ஓரளவு மேம்பட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் அவரை பாராட்ட வேண்டும்.

    தற்போதைய சிறிலங்கா அதிபரின் முயற்சியால் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியுமாகியுள்ளது.

    எனினும், குறித்த நடவடிக்கை எம்மை மேலும் கடனாளியாக்கும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த ஆண்டை தேர்தல்களுக்கான ஆண்டு என ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

    தேர்தல்களுக்கான திகதியையும் அவரே அறிவிக்கும் நிலையில் இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இலங்கை ஜனநாயக நாடு. சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும்.

    எனினும், ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

     

    https://akkinikkunchu.com/?p=268076

  10. இரும்புத் தளபதியைப் பதவி நீக்கிய உக்ரேன் ஜனாதிபதி!

    10-7.jpg

    இரும்புத் தளபதியென  அழைக்கப்பட்ட உக்ரேனின் ஆயுதப்படை தலைமை தளபதியான  வலேரி ஜலுன்ஸ்யியை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

    கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செலன்ஸ்கிக்கும் தளபதி வலேரி ஜலுன்ஸ்யிக்கும் இடையே ஏற்பட்டுவந்த மோதல் காரணமாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரஷ்யாவுடனான போரின் போது சிறப்பாக செயற்பட்டமைக்காக வலேரி ஜலுன்ஸ்யி இரும்புத் தளபதியென அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    https://akkinikkunchu.com/?p=268084

  11. பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள்

    முருகாநந்தன் தவம்

    74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக்  கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக  தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு  வருகின்றனர்.

    இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத்  தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில்  சிவஞானம் ஸ்ரீதரன்  தலைவராகத்  தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக்கொண்டவன் என்ற தலைக்கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வியின் விளைவாகவே இன்று தமிழரசுக் கட்சி பிளவுபடுத்தப்படுகின்றது. 

     இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு சில குழறுபடிகளுடன் நடந்து முடிந்து விட்ட நிலையில், அதன் பொதுச்செயலாளர் தெரிவு கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றபோது, அரங்கேற்றப்பட்ட சதிகள், குழிபறிப்புக்கள், கட்சியைப் பிளவு படுத்தும் காய்நகர்த்தல்கள், கைகலப்புக்கள் ,பிரதேசவாத முன்னெடுப்புக்கள் எல்லாம் அந்த தலைவர் பதவி கிடைக்காத, அவமானம், ஆதங்கம், ஆத்திரத்தில்  நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சகுனித்தன ஆட்டமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

    தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு, பொதுச்சபையில் தனக்கு ஆதரவான பலர் இருந்தும் தலைவர் பதவிக்கான போட்டியில் தான் தோற்கடிக்கப்பட்டதை ஜீரணிக்க முடியாத நிலையில்  உள்ள சுமந்திரனும் அவரது விசுவாசியும் வலது கரமுமான சாணக்கியனுமே தமிழரசுக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள், பிளவுகள், குளறுபடிகளின் பிதாமகன்களாக உள்ளதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலரினால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது

    தமிழரசுக் கட்சியின் கட்சியின் யாப்புப்படி தலைவர் பதவிக்குத்தான் வேட்பு மனுக் கோரி முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும். ஏனைய பதவிகளுக்கு அப்படித் தேர்தல் நடத்தப்படுவது பற்றி யாப்பில் எதுவும் இல்லை. கட்சியின் செயலாளர் உட்பட ஏனைய பதவிகள் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதே இதுவரை கால நடைமுறையாக இருந்து வந்தது.

    தலைவர் தெரிவும் இதுவரை அப்படித்தான் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் இன்றி நடந்துவந்தது. ஆனால், இம்முறை சுமந்திரன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன் ஆகிய மூவரினதும் தலைவர் பதவிக்கான போட்டி   தேர்தல் மூலம் தெரிவு செய்ய வேண்டிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை விளைவு மற்றும் பதவி மோகங்களினால்  ஏனைய பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற மரபு மாற்றம் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டது.

     தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான ஸ்ரீதரன் கட்சியைப் பிளவின்றி, ஒற்றுமையாகக் கொண்டு செல்வதற்காக தன்னுடன் போட்டியிட்ட தலைவர் பதவி வேட்பாளரான சுமந்திரனுக்கு சிரேஷ்ட உபதலைவர் பதவியை வழங்குவதற்கு விரும்பினார். ஆனால், அதனை நிராகரித்த சுமந்திரன் கட்சியின் மரபுக்கு மாற்றாக  தனக்கு  பொதுச்  செயலாளர் பதவி வேண்டுமெனக் கோரினார்

    ஆனால், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில்  தலைவர் வடக்கைச் சேர்ந்தவராக இருந்தால் பொதுச் செயலாளர் கிழக்கைச் சேர்ந்தவராகவும் தலைவர் கிழக்கைச் சேர்ந்தவராக இருந்தால் பொதுச்செயலாளர் வடக்கைச் சேர்ந்தவராகவும்  இருப்பதுமே மரபு. அதனை நன்கு தெரிந்து கொண்டே தலைவர் வடக்கைச் சேர்ந்தவராக உள்ள நிலையில் வடக்கைச்  சேர்ந்த தனக்கு பொதுச் செயலாளர் பதவி  வேண்டுமெனக்கோரி  சுமந்திரன்  தமிழரசுக் கட்சியை பிளவடைய வைக்கும் சூழ்ச்சிக்குப்  புள்ளி போட்டார்.

    ஆனால், சுமந்திரனின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது அடுத்த காய் நகர்த்தலாகத் தனது விசுவாசிகளான கிழக்கைச் சேர்ந்த  மட்டக்களப்பு 
    மாவட்ட கிளைத் தலைவரான இரா.சாணக்கியன் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவரான குகதாசன் அம்பாறை மாவட்ட கிளைத் தலைவரான கலையரசன்  ஆகியோரில்  ஒருவரைச் செயலாளர் பதவிக்குத்  தெரிவு செய்ய வேண்டுமென  அவர் முன்மொழிந்தார். 

    இதில், திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவரான குகதாசன் நீண்டகாலமாகக் கனடாவில் வசித்து வந்த நிலையில் நாடு திரும்பி  2020ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். சம்பந்தனின் விசுவாசியாக இருந்து பின்னர் சுமந்திரனின் விசுவாசியானவர்.

     அடுத்தவரான மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவரான இரா.சாணக்கியன் யுத்தத்தின் இறுதிக்கட்டம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்தவர். அக்கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தவர். அதன்பின்னர் சில வருடங்களாகவே தமிழரசுக் கட்சியில்  இணைந்து சுமந்திரனின் அரவணைப்பினால் எம்.பியானவர். அடுத்தவரான அம்பாறை மாவட்ட கிளைத் தலைவரான கலையரசன்  அப்பாவி. அரசியல் சூதுவாது அறியாதவர்.

     இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் தீவிர விசுவாசிகளும் யுத்த காலத்தில் கட்சிக்காக உயிரைப் பணயம் வைத்துச்  செயற்பட்டவர்களும் இன்றுவரை கட்சிக்காக உழைப்பவர்களுமான முன்னாள் எம்.பிக்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் அணியினர் சுமந்திரனின் முன்மொழிவுகளை ஏற்க மறுத்ததுடன், பொதுச்செயலாளர் பதவிக்கு  ஸ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்தனர்.

    இதனால் பொதுச்செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கடும் போட்டியைப்  பயன்படுத்தி தனது விசுவாசிகளையே கட்சியின் உயர்பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். அதன்மூலம் தலைவர்  ஸ்ரீதரனை செயற்பட முடியாத தலைவராக்கி கட்சியில் தான் நினைத்ததையே நடத்தி முடிக்க வேண்டுமெனச் சுமந்திரன்  “பொதுச்செயலாளர்” பதவியை வைத்துப்போட்ட புள்ளியை வைத்து அவரது விசுவாசியான சாணக்கியன் போட்ட கோலமே இன்று தமிழரசுக் கட்சியை அலங்கோலமாக்கியுள்ளது.

    ஸ்ரீதரனைத் தலைவராக்கிய கிழக்கைச் சேர்ந்த அணியினருக்குச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை, அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்குக் கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்பதும் தான்  பிரச்சினைக்குக் காரணம் என சுமந்திரன்-சாணக்கியன்  தரப்பும்  இப்போது செயலாளராக இருப்பவர் தலைவர் தேர்தலில் சுமந்திரனை வெளிப்படையாக ஆதரித்தவர். 

    சிரேஷ்ட உபதலைவராக இருப்பவர் சுமந்திரனைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தவர் ஏனைய பதவிகளில் உள்ள சாணக்கியன் உட்படப் பலரும் சுமந்திரனின் விசுவாசிகள். எனவே, தமிழரசுக் கட்சியை சுமந்திரன் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள்  எடுக்க முயற்சிக்கின்றார் என்பது  குகதாசனை ஏற்க மறுப்பவர்கள் குற்றச்சாட்டு.  

     தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி  கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் வடக்கு தெளிவாக உள்ள நிலையில், கிழக்கில் அந்தப் பதவி திருகோணமலைக்கா மட்டக்களப்பிற்கா  என்பதில் கிழக்கு மாகாண உறுப்பினர்களே மோதல்களில் ஈடுபட்டுள்ளதுடன் எட்டிக்குப் போட்டியாக  ஊடக மாநாடுகளையும் நடத்தி சேற்றைப் பரஸ்பரம் வாரி இறைக்கின்றனர் இதனால் தமிழரசுக் கட்சிதான் நாற்றமடிக்கின்றது. 

    ஏதாவது பிரயத்தனங்களை மேற்கொண்டு குகதாசனையோ ஸ்ரீநேசனையோ பொதுச்செயலாளராக நியமித்தால் கூட அவர்களுக்கு மற்றைய தரப்பினர் கட்டுப்படுவார்கள், புதிய பொதுச்செயலாளரால் கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்  அது மட்டுமல்ல பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியை வைத்து புதிய தலைவரான ஸ்ரீதரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்தும் அசையக்கூடச் சுமந்திரன் தரப்பு தவிடு பொடியாக்கி விட்டது  என்பதே உண்மைநிலை.
     

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிளக்கும்-ஆப்புக்களாக-செயற்படும்-சகுனிகள்/91-332715

  12. 21 minutes ago, தமிழன்பன் said:

    எங்கள் ஊரில் இதனை கோவா என்று அழைப்பார்கள்

    நாங்களும் முட்டைக்கோஸ் என்று சொல்வதில்லை. கோவாதான்! கோவாலில் வந்து இறங்கிய போர்த்துக்கீசர் கொண்டு வந்திருக்கின்றார்கள் போலிருக்கு!

     

    4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

    இன்னும் கொஞ்ச நாளில் இலங்கையில் இந்திய தமிழ் மொழி வந்து  எங்கள் தமிழை சல்லடையாக்கும் பாருங்கோ 

    ப்ரோ😁, உதயன் போன்ற செய்தித் தளங்களே ஊரில் புழங்கும் வார்த்தைகளை பாவிக்காமல் இந்தியத் தமிங்கிலத்தை பாவித்தால் நாம என்ன செய்யமுடியும்?

    • Like 2
  13. ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் – ஹரீன்!

    எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

    ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

     

    https://thinakkural.lk/article/290694

  14. 15 minutes ago, தமிழன்பன் said:

     என்ற விவாதத்தை விட , முட்டைகோஸை தந்தவர்கள் இந்தியர்கள். அதில் என்ன விமர்சனம் ?

    இந்தியர்கள் முட்டைக்கோஸை தரவில்லை அன்பரே.

    ஜேர்ஸி மாட்டை அறிமுகப்படுத்திய காலனித்துவ சக்திகள்தான் முட்டைக்கோஸை அறிமுகப்படுத்தியவர்கள்.  முட்டைக்கோஸ் (cabbage) ஐரோப்பாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டது. நீண்ட கப்பல் பயணங்களில் போகும் மாலுமிகளுக்கு விற்றமின் குறைபாடால் முரசு கரைதல் ஏற்படுவதுண்டு. அதனைக் குறைக்க முட்டைக்கோஸை கப்பல்களில் கொண்டுசென்றார்கள்.

    அதுபோன்றுதான் அதிகம் பால் கறக்கும் ஜேர்ஸி மாடுகளும் காலனித்துவ சக்திகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும்படி ஊர்மாடும், ஜேர்ஸிமாடும் சுரப்பது ஒரே பால்தான்! 

    எனவே இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை உடலுக்கு தேவையான அளவுடன் உண்டும், மேலதிகமான கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்தும் வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

     

     

    • Thanks 1
  15. கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையின் பலப்பிரயோகம் – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

    adminFebruary 6, 2024
    kilistudent-Police.jpg?fit=816%2C533&ssl

    இலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்தும் கரிசனை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

    கிளிநொச்சியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் கண்ணீர்புகைப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் நீர்த்தாரை புகைபிரயோகத்தையும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இழுத்துச்சென்றனர். யாழ்பல்கலைகழக மாணவர்கள் சிலரை கைதுசெய்தனர் எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகள் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரானஇந்த கடுமையான நடவடிக்கைகளை அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

     

    https://globaltamilnews.net/2024/200389/

     

  16. 3ஆம் சார்ள்ஸ் மன்னருக்கு புற்றுநோய் ! 

    Simrith   / 2024 பெப்ரவரி 06 ,

    spacer.png

     

    மன்னர் சார்லஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன்  குறித்த  விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மன்னர் திங்களன்று "வழக்கமான சிகிச்சையை" தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொது கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.

    புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

     

    https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/3ஆம்-சார்ள்ஸ்-மன்னருக்கு-புற்றுநோய்/50-332743

     

  17. 22 hours ago, தமிழன்பன் said:

    முட்டைகோஸ்

     

    முட்டைக்கோஸை யார் இந்தியா, இலங்கைக்குள் புகுத்தியவர்கள்? வெள்ளையராக இருந்தால் அதை எப்படி நல்லது என்று ஏற்றுக்கொள்ளமுடியும்?🥱

    சுகர் வருத்தங்களுக்கு கரும்பைப் புரொசஸ் செய்து சீனியாக்கும் முறையைக் கண்டுபிடிச்சவர்களைத்தான் திட்டவேண்டும்!

  18. கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

    tCdfLC4U-Rajan.jpg

    ராஜன் குறை 

    Actors want to rule and are fear to talk about politics

    மக்களாட்சியில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவளித்தால் ஆட்சி அமைக்கலாம். இது சிறு குழந்தைக்கும் தெரியும். சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும். அவர்களை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது சுலபம். அதனால் அவர்கள் கட்சி தொடங்க விரும்பலாம். மக்களாட்சியில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் அதனை பொதுமக்கள் மாண்பு கருதி வரவேற்கவே செய்வார்கள்.

    அப்படி ஒரு நடிகர் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் சேராமல் தன் தலைமையில் கட்சி தொடங்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எதனால் கட்சி தொடங்கும் கதாநாயக நடிகருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அவர் சினிமாவில் நன்றாக நடனம் ஆடினார், சண்டை போட்டார், சிரிப்பு வரும்படி நடித்தார், உணர்ச்சிகரமாக நடித்தார் அதனால் அவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். அது அபத்தமாக இருக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

    அதனால் அந்த நடிகர் பொதுவாக என்ன சொல்வாரென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஜாதி, மத பிரிவினைகளைப் பார்க்கின்றன; நான் அனைத்து மக்களும் பொதுவானவன், ஊழலே செய்ய மாட்டேன், என் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளானால் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

    அதை எப்படி நம்புவது என்று கேட்டால், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக செயல்படுகின்றன என்று கூறுவார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தினார்கள், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, வேட்டி கொடுத்தார்கள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று பல நற்பணிகளைப் பட்டியில் இடுவார்கள்.

    இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த அரசே ஒரு நற்பணி மன்றம் போல செயல்பட்டு மக்களுக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று கூறுவதுபோல தோன்றும். அப்புறம் ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை மாற்றி அமைப்போம், முழுப்புரட்சி செய்வோம், “போர்! போர்!” என்றெல்லாம்  வீரமாக பொத்தாம் பொதுவாக எதையாவது பேசுவார்கள்.

    ஒட்டுமொத்தத்தில் நடிகர் மிகவும் பிரபலமானவர் என்பதால் மக்கள் அவர் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தால் அவர் முதல்வராகிவிட்டால் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று முடித்துவிடுவார்கள்.

    இவ்வாறு பேசுவது ஆட்சிக்கு வரும் விருப்பம்தானே தவிர, அரசியலுக்கு வரும் விருப்பமல்ல. அரசியல் என்பது எண்ணற்ற சமூக முரண்பாடுகளின் களம். கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர் கூறியதுபோல எதிரி x நண்பன் என்பதே அரசியல். எதிரி என்றால் தனிப்பட்ட எதிரி அல்ல; போட்டி நடிகர் அல்ல. அரசியல் எதிரி என்பது வேறு ரகம்.
    grMtvP1Z-Rajan-2.jpgஅரசியல் என்றால் என்ன?

    இன்றுள்ள மக்களாட்சி நடைமுறை உருவாகி இன்னம் 250 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை எனலாம். அதாவது மன்னரல்லாத அரசியலமைப்பு சட்ட குடியரசு 1776-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன்முதலில் உருவானது. மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி. அதற்கு 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி 1789-ம் ஆண்டு வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கம் உலகளாவிய மக்களாட்சி லட்சியமாக முன்மொழியப்பட்டது.

    அதற்கு முன்னால் மன்னராட்சியில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், சாதாரண மக்கள் என்ற கட்டமைப்புதான் பரவலாக இருந்தது. இதிலும் மத அமைப்பிலோ அல்லது வேறு விதமாகவோ பலவிதமான ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசர்களின் எதேச்சதிகாரமாக இருந்தது. மக்களுக்கான உரிமைகள் என்பது உத்தரவாதமில்லாமல் இருந்தன.

    இதில் முதலீட்டிய பொருளாதாரம் உருவான பிறகு வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஆகிய புதிய அதிகார மையங்கள் உருவானபோது அவர்கள் புதியதொரு அரசமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அச்சு ஊடகத்தின் பரவல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் சேர்ந்த புதிய மத்தியதர வர்க்கமும் இந்த மாற்றத்தை வலியுறுத்தியதால் மக்களாட்சி என்ற நடைமுறை உருவாகியது. அனைத்து மக்களும் சுதந்திரமானவர்கள், சமமானவர்கள் ஆகிய சிந்தனைகள் உருவாயின.  

    ஆனால், ஏற்கனவே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவினைகள் ஆகியவையும் இருந்தன. அதனால் மக்களில் பல்வேறு தொகுதியினருக்குள் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சமூக இயக்கங்களைத் தோற்றுவித்தன. குறிப்பாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்கள் பிரச்சினைகளுக்காக போராடினார்கள். விவசாயிகளும் அவர்கள் கோரிக்கைகளுக்காக போராடினார்கள். அப்படியே சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்கள் உரிமைகள், கோரிக்கைகளுக்காக அமைப்பாக மாறுவதில்தான் மக்களாட்சி அரசியல் கால்கொண்டது.

    அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், வரி விதிப்பில் எத்தகைய கொள்கைகளை பின்பற்றுவது, முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வரி விதித்து, பிற சாமானிய மக்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது என்ற மக்கள்நல அரசு மாதிரிகள் தோன்றின.

    முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பது, சந்தையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, தனிச்சொத்தைப் பெருக்குவது என்பவை வலதுசாரி முதலீட்டியக் கொள்கைகள். செல்வக் குவிப்புகளுக்கு அதிக வரி விதித்து, சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சமூக முழுமைக்கும் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வது இடதுசாரி சோஷலிச சிந்தனை.

    சமூகத்தின் அனைத்து வளங்களும் பொது உடமையாக இருக்க வேண்டும், எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமும் தோன்றியது.

    இந்தியாவிலோ கூடுதலாக ஜாதீயம் ஏற்படுத்திய கடுமையான சமத்துவமின்மையை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல காலமாக கல்வி மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட அடிமைகள் போல வைக்கப்பட்டிருந்த சூத்திரர், அவர்ணர் என்று கூறப்பட்ட மக்களை எப்படி சம வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கப்பட்டது.

    ஆனாலும் இன்னமும் சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள இடைவெளி குறையவில்லை. செல்வாக்கான பதவிகளில், தொழில்களில் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற மக்களாட்சி அரசியலே ஒரே களமாக உள்ளது.

    அதனால்தான் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடையேயான கடுமையான மோதல் களமாக மக்களாட்சி அரசியல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவோர் தாங்கள் ஏழைகள் பக்கமா, பணக்காரர்கள் பக்கமா, வரி விதிப்பு பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தங்கள் நிலைப்பாடு என்ன, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக எப்படி போராடப் போகிறோம் என்றெல்லாம் அரசியலில் ஈடுபடுபவர்கள் பேச வேண்டும்.

    இந்தியாவின் மற்றொரு முக்கியமான அரசியல் பிரச்சினை என்பது அதன் கூட்டாட்சி வடிவமாகும். மாநிலங்களில்தான் அரசுகள் உள்ளன. அனைத்தையும் இணைக்கும் ஒன்றிய அரசாங்கம்தான் தேசிய அளவில் உள்ளது. ஒன்றியத்திற்கும், மாநிலத்திற்குமான அதிகாரப் பகிர்வு சரிவர வகுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் அதிகாரம் குவிந்திருப்பது பல்வேறு மாநில அரசுகளாலும் கண்டிக்கப்படுகிறது. நாள்தோறும் பிரச்சினைகள் பெருகுகின்றன. ஒரு மாநிலக் கட்சி இந்த முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

    அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும், வரி விதிப்பும் சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அரசு என்பது வெறும் நற்பணி மன்றமல்ல. ஓர் அரசியல் கட்சி எந்த வகையில் சமூக இடைவெளிகளைக் குறைப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் கொள்கை என்று அழைக்கிறோம். முரண்பாடுகளை சமன் செய்வதே அரசியல் என்னும் கலை என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
    M26YAdjF-Rajan-3.jpgபெரும்பாலான அரசியல் கட்சிகள் எப்படி உருவாயின?

    திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதீய ஏற்றத்தாழ்வை களையும் சமூகநீதியை முன்வைத்தும், மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் பிறந்தது. அது முதலில் தென்னிந்திய மாநிலங்களை தனி கூட்டாட்சி குடியரசாக, திராவிட நாடாக உருவாக்கும் லட்சியத்தைக் கொண்டிருந்தது. பின்னர் இந்திய கூட்டாட்சியிலேயே மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. சோஷலிச பார்வை கொண்டது.

    எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும் அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார். அண்ணா பெயரில்தான் கட்சியே தொடங்கினார். அதனால் அவர் தி.மு.க-வின் நகல் என்றுதான் கூற வேண்டும். நாளடைவில் தி.மு.க-விலிருந்து சில பல அம்சங்களில் வேறுபாடுகளை உருவாக்கினார். ஆனாலும் மாநில உரிமை, சமூகநீதி அரசியல் தடத்திலிருந்து முற்றாக விலகவில்லை. அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.க-விற்கு ஒரு மாற்று என்பதே அதன் வரலாற்று விளக்கம்.

    முத்துராமலிங்க தேவரின் ஃபார்வார்டு பிளாக் முக்குலத்தோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக உருவானது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறி வன்னியர் நலனுக்கான கட்சியாக நிறுவிக்கொண்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வர்க்க நலன்களை முன்னெடுக்கும் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களின், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் முற்போக்குக் கட்சியாக உருவாகியுள்ளது.

    மக்களாட்சியில் எல்லா கட்சிகளுமே பொதுவான சமூக நலனுக்கு இயங்கினாலும் அவர்கள் முன்னிலைப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகள் என்ன, அவர்கள் கொள்கைகள் எந்த லட்சியங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாக இருப்பதுதான் அரசியல்.

    நடிகர்களின் கட்சிகள் எப்படி உருவாகின்றன?
     
    கதாநாயக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை எல்லோருமே பார்த்து ரசிப்பதால் எல்லா மக்களுக்குமான கட்சியையே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சமூகத்திலுள்ள முரண்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டால் ஏதாவது பொத்தாம்பொதுவாக மனிதநேய சிந்தனைகளைக் கூறுகிறார்கள். எந்த அரசியல் பிரச்சினையையும் எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசியல் பேச அஞ்சுகிறார்கள்.

    pkDeQooa-Rajan-4.jpg
    விஜய்காந்த்:

    விஜய்காந்த் என்ற கதாநாயக நடிகர் அப்படித்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கலவையான பெயரில் கட்சி தொடங்கினார். தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிக்கும் மாற்று என்றார். ஒன்பது சதவிகித வாக்குகளை இந்த “மாற்று” என்ற பெயரில் பெற முடிந்தது.

    ஆனால், அதற்குமேல் அவரால் அரசியல் பேச முடியவில்லை. எந்த பிரச்சினைக்காகவும் எந்த மக்கள் தொகுதியையும் அணி திரட்ட முடியவில்லை. இறுதியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு “மாற்று” என்ற லட்சியம் காணாமல் போனதில் அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறிவிட்டார்கள். இறுதியில் அவர் கட்சி எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.
    7jbbV2xE-Rajan-5.jpgரஜினிகாந்த்:

    ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி அலையில் அவர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததில் அவருக்கு பங்கிருப்பதாக ஒரு பிம்பம் உருவானது. ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்தார். அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வர சோ ராமசாமி உள்ளிட்ட பாஜக-வினர் கடுமையாக முயன்றார்கள்.

    அவருக்கு தனிப்பட்ட முறையில் பாஜக அரசியல் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த அரசியல் பேசினால் சிக்கல் என்பதை பாபா படம் அடைந்த தோல்வியிலிருந்து புரிந்துகொண்டார். அதனால் அவரால் கட்சி தொடங்குவதைப் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்க முடியவில்லை. கலைஞரையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி புகழ்ந்தார்.

    கலைஞரும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அரசியலுக்கு வர முற்பட்டார். அப்போதும் தான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றார். ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றப் போகிறேன் என்றார். கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுத்துகிறது என்றார்.

    எல்லோரும் மக்களை அணி திரட்டுங்கள் – நான் பிறகு வந்து தலைமையேற்கிறேன் என்று கூறி திடுக்கிட வைத்தார். நான் முதலமைச்சராகப் பதவியேற்று எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் என்றார். இவர் கட்சியை கட்டமைத்துக் கொடுக்க பாஜக-விலிருந்து ஒருவரை இரவலாகப் பெற்றார். இறுதியில் நல்லவேளையாக உடல்நிலை சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
    Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiகமல்ஹாசன்:
     
    மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்தார். வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத நடுப்பாதை, செண்டிரிஸ்ட் (Centrist) கட்சி என்றார். ஆனால் தெளிவாக நான் பாஜக-வை எதிர்க்கிறேன். அ.இ.அ.தி.மு.க-வை எதிர்க்கிறேன். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்றெல்லாம் பேச மாட்டார். பள்ளப்பட்டியில் போய் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி இந்து தான் என்பார். மற்ற இடங்களில் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவுபடுத்தும் இயக்கம் என்று சொல்ல மாட்டார்.

    திரைப்படங்களில் போட்டி நடிகர்களை இவர்கள் குறை சொல்ல முடியாது. விஜய்காந்துக்கு நடிக்கத் தெரியாது என்று பொதுவெளியில் கமல்ஹாசன் சொல்ல முடியாது. அது தொழிலுக்கு நல்லதல்ல. ஒருவர் படத்தை மற்றவர் விமர்சித்தால் பொதுவாக தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் அது விரும்பத்தக்கதல்ல.

    அரசியல் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை; அவர் ஊழல் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்லத்தான் வேண்டும். ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்று எடப்பாடி கூறத்தான் வேண்டும். “செளகிதார் சோர் ஹை” என்று மோடியை திருடன் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட வேண்டும். ஏனெனில் அரசியலில் முரண்களும், எதிர்ப்பும் அவசியம். வன்முறை கூடாதே தவிர, கருத்தியல் எதிர்ப்பு, கண்டனம் என்பது இன்றியமையாதது.

    ஆனால், நடிகர்களாகவே வாழ்ந்து பழகியதால் இவர்களால் பகிரங்கமாக அரசியலில் யாரையும் விமர்சித்து பேச முடிவதில்லை. கமல்ஹாசனால் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்குக் கூட தெளிவாகப் பதில் கூற முடியவில்லை. அருகிலிருந்தவரைக் காட்டி அவர்தான் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிவிட்டார்.  
    Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiவிஜய்:

    இந்தப் பட்டியலில்தான் மற்றொரு கதாநாயக நடிகர் விஜய் இப்போது சேர்ந்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று ஒற்றுப்பிழையுடன் பெயர் வைத்துவிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எந்த நிலைப்பாடும் கிடையாதாம்.

    நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாடே கொந்தளித்ததே, அப்போது விஜய் எங்கே போயிருந்தார்? அவருக்கு நீட் தேர்வு எத்தகைய பிரச்சினை என்றே தெரியாதா? நடிகர் சூர்யா கூட குரல் கொடுத்தாரே?

    அவரையே ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசி பாஜக விமர்சித்ததே? அது மத அடையாளம் பேசி நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று தெரியாதா? தமிழ்நாட்டு நலன்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறதென்று ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் ஓயாமல் குரல் கொடுக்கிறார்களே? அதெல்லாம் அவர் காதிலேயே விழவில்லையா?

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்தில் அமலாக்கிவிடுவோம் என பாஜக அமைச்சர் ஒருவர் பேசுகிறாரே? முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விடுகிறாரே? அதையெல்லாம் படிக்க மாட்டாரா இந்த எதிர்கால அரசியல்வாதி?

    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு நிலைப்பாடே இல்லாமல் எதற்காக தேர்தல் நெருங்கும்போது கட்சி தொடங்குகிறார்? இது யார் கொடுத்த அசைன்மைண்ட் என்று மக்கள் கேட்கிறார்களே? அவருக்குப் புரியாதா?

    பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதி

    பிரகாஷ் ராஜ் விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர். அவர் வளர்ந்த ஊரான பெங்களூருவில் கெளரி லங்கேஷ் என்ற சிந்தனையாளர் கொலை செய்யப்பட்டபோது அவர் வலதுசாரி அரசியலுக்கு எதிராக பொங்கி எழுந்தார். மதவாத சக்திகளை பகிரங்கமாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என பெயர் சொல்லி கண்டித்தார். தன் கண்டனத்தைத் தெரிவிக்க சுயேச்சையாக தேர்தலில் கூட நின்றார்.

    பிரகாஷ் ராஜ் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. ஆனால் மத அடையாளவாத வன்முறை நாட்டை பாழ்படுத்தி விடும் என்று துணிந்து குரல் கொடுக்கிறார்.

    எந்த ஒரு நடிகராவது அரசியலுக்கு வந்தாரென்றால் பிரகாஷ் ராஜைத்தான் கூற முடியும். உதயநிதி அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்கச் சென்றவர் என்பதால் அவரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் நினைக்கிறார்களே தவிர, அரசியலுக்கு வர நினைப்பதில்லை. அரசியல் பேசவே அஞ்சுகிறார்கள். நேராக தேர்தல்; முதல்வர் பதவி. அவ்வளவுதான் அவர்கள் ஆசை. சின்னச்சின்ன ஆசை. பாவம்.
     

     

    https://minnambalam.com/political-news/actors-want-to-rule-and-are-fear-to-talk-about-politics-by-rajan-kurai/

  19. சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும்

    சனத் நிசாந்தவின்    அகால மரணமும் பிரதிபலிப்புகளும் 

     —  வீரகத்தி தனபாலசிங்கம் — 

       மரணத்தைக் கொண்டாடுவது  உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக  அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து  வந்திருக்கிறோம்.

      ஜனாதிபதி பிரேமதாச  மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல  பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள்  நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல.

     அதற்கு ஒரு தசாப்தம்  முன்னதாக    புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி  அவரது சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது தென்னிலங்கையில் பட்டாசு கொளுத்திய சம்பவங்கள் பற்றியும் அறிந்தோம். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனப் பிரச்சினையில்  இந்தியா தீவிரமாக தலையீடுசெய்யத் தொடங்கிய  காலகட்டம் அது.

      முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க 1994 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது தமிழர்கள் மனக்கண் முன்னால்  எரிந்து கிடந்த யாழ்ப்பாணம்  பொதுநூலகம் நிச்சயமாக வந்திருக்கும்.

      முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1996 ஆண்டு காலமானபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ, பிரதமராக  இருந்த அவரது தாயார் சிறிமா பண்டாரநாயக்கவோ அஞ்சலிசெலுத்தப் போகவில்லை.

     உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்தபோது தென்னிலங்கை முழுவதும் போர் வெற்றிக் குதூகலத்தில் வீதிகளில் நின்றது. இவ்வாறான பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.

      மிகவும் பிந்திய  சம்பவமாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் அகால மரணம் அமைந்தது. 

        அவரது மரணத்தைக் குதூகலித்துக் கொண்டாடி சமூக ஊடகங்களில் மாத்திரமல்ல, பிரதானபோக்கு ஊடகங்களிலும் கூட கருத்துக்கள் பதிவாகியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. காலையில் நித்திரைவிட்டு  எழும்பும்போது நிசாந்தவின் மரணத்தைக் கேள்விப்பட்டது  எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா….? என்று கூட பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.

       அவரின்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட செய்தியும் கூட வழமையான இரங்கல் செய்திகளை விடவும் வித்தியாசமாக இருந்தது.

      இராஜாங்க அமைச்சரின் மரணம் எல்லோருக்கும் ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கிறது. உலகில் நிரந்தரமானது மரணம் ஒன்று மாத்திரமே என்று புத்தபிரான் எமக்கு போதித்திருக்கிறார். எதிர்பாராத ஒரு   தருணத்தில் மரணம் வரும் என்ற சிந்தனையையும் புத்தபிரான் கொண்டிருந்தார் என்று கூறிய ஜனாதிபதி  பைபிளை மேற்கோள் காட்டி ‘வெளிச்சத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு தனது சகோதரனை சபிப்பவன் உண்மையில் இருளிலேயே வாழ்கிறான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

      நிசாந்தவின் மரணம் எல்லோருக்கும்  பாடத்தைப் புகட்டியிருக்கிறது என்று விக்கிரமசிங்க கூறியது அவரின்  வாகனம்  அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமீறிய வேகத்தில் வந்ததால்  விபத்துக்குள்ளாகி அவர் பலியானதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நிதானமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல என்பது நிச்சயம்.

      பத்து நாட்களுக்கு முதல் நிசாந்த குருநாகலிலும் சிலாபத்திலும் இரு திருமண வைபவங்களில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை அவரது ஜீப் கொள்கலன் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது இடம்பெற்ற கோரவிபத்தில் அவரும் மெய்க்காவலரான பொலிஸ் உத்தியோகத்தரும் பலியானார்கள். 

       நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் புத்தளம் மாவட்டத்தில் அவரது  சொந்த ஊரான ஆராச்சிக்கட்டுவவில் கடந்த ஞாயிறன்று பெரும் எண்ணிக்கையான அரசியல்வாதிகள், ஆதரவாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.

     அவர் மரணமடைந்த  மறுநாள் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ” சனத் நிசாந்த ; அவர் நினைவு கூரப்படுவாரா? ” என்ற தலைப்பில் முன்பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டது. எமது நினைவுக்கு எட்டிய கடந்த காலத்தில் இலங்கையில் எந்தவொரு அரசியல்வாதியின் மரணத்தையும் அடுத்து இவ்வாறான ஒரு தலைப்புச் செய்தியை பத்திரிகை ஒன்று  வெளியிட்டதாக நாம் அறியவில்லை.

       48 வயதான நிசாந்தவின் அகால மரணம் அவரது இளம் மனைவியினாலும் நான்கு இளம் பிள்ளைகளினாலும் தாங்கிக்கொள்ள முடியாதது. துரதிர்ஷ்டவசமாக அவரது அரசியல் வாழ்வு பெரும்பாலும் எதிர்மறையான காரணங்களுக்காகவே நினைவுகூரப்படப்போகிறது. அதை ஒரு படிப்பனையாக அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்வார்கள் என்பது சந்தேகமே.

     ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நிசாந்த 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசியான நிசாந்த அவர்களைப் பாதுகாப்பதில் மாத்திரமல்ல பாராளுமன்றத்தில் சபையின் நடுவில் இறங்கி குழப்பம் விளைவிப்பதிலும் முன்னணியில் விளங்கினார்.                

    ஒரு தடவை சபாநாயகரிடம் மன்னிப்புக்கோரிய அவர் ஜனவரி முற்பகுதியில் இரு வாரங்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாதவாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

      மரணமடைவதற்கு முதல் நாள்கூட பாராளுமன்றத்தில் இணையவெளி பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக  அரசாங்கம் நிறைவேற்றியபோது சபையின் மத்தியில் இறங்கி நிசாந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சண்டித்தனத்தில் இறங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.

       பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை கிளப்பிப் பேசும்போது சபைக்குள் அவர்களுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்தவராக நிசாந்த தனக்கொரு (அவப்) பெயரைச்  சம்பாதித்துக்கொண்டார்.

      சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணவைபவத்தின் மின்கட்டணம் நீண்டநாட்களாக செலுத்தப்படாமல் இருந்தது. கடந்த வருடம் நிசாந்த தனது சொந்தப் பணத்தில் (பல இலட்சம் ரூபா) அந்த கட்டணத்தைச் செலுத்தி ராஜபக்சாக்கள் மீதான தனது விசுவாசத்தின் உச்சத்துக்குச் சென்றார்.

      அறகலய மக்கள் கிளர்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர் நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்ட்டபோது அவர்களை நீதிபதிகள் பிணையில் விடுதலை செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நிசாந்த பொதுஜன பெரமுன தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றியபோது  வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை சில நீதிபதிகள் விடுதலை செய்கிறார்கள் என்று கூறினார். அதற்காக அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் இருக்கிறது.

      சில வருடங்களுக்கு முன்னர் புத்தளம் மாவட்டத்தில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை தனது சகோதரருடன் சேர்ந்து தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நீதிமன்றத்தில் நிசாந்தவுக்கு எதிராக  வழக்கு ஒன்றும் இருந்தது.

      அறகலயவின் உச்சக் கட்டத்தின்போது 2022 மே 9 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து  தனது ஆதரவாளர்களை காலிமுகத்திடல் ‘கோட்டா  கோ கம’ வுக்கு  எதிராக கட்டவிழ்த்துவிட்டபோது அந்த தாக்குதல்களின் முன்னணியில்  நிசாந்த நின்றதாக  குற்றஞ்சாட்டப்பட்டது. 

      அமைதிவழியில் போராடியவர்கள் மீது  குண்டர்கள் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக இன்றைய பதில் பொலிஸ்மா அதிபருடன் (அன்று அவர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்)  நிசாந்த காலிமுகத்திடலில்  கதைத்துக்கொண்டு நின்றதைக்  காண்பிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெகுதீவிரமாகப் பரவியது.

      அந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக நாட்டின் பல பாகங்களிலும் மூண்ட வன்முறைகளில் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகளும்  உடமைகளும் தீக்கிரையாகின. அதில் ஆராச்சிக்கட்டுவவில் இருந்த நிசாந்தவின் வீடும் அடங்கும்.

       ராஜபக்சாக்களின் தவறான ஆட்சிமுறையின் விளைவாக மூண்ட பொருளாதார நெருக்கடியில் சொல்லொணாத் துன்பங்களை  அனுபவித்த நாட்டு மக்கள் மீது கொஞ்சமேனும் இரக்கம் காட்டாமல் தனது அரசியல் ஆசான்கள் மீதான விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு காலிமுகத்திடல் தாக்குதலை நிசாந்த முன்னின்று நடத்தியதை  மக்கள் எந்தளவு ஆத்திரத்துடன் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதை அவரின் அகால மரணத்தக்கு பிறகு சமூக ஊடகங்களில் நிரம்பிவழிந்த பதிவுகள் வெளிக்காட்டின.

     நிசாந்தவின் மரணத்தையடுத்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுப் பிரதிபலிப்புகளுக்கான  காரணங்களாக ….. சட்டத்தின் ஆட்சியை மதிக்காமல் செயற்படுதல், சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று அரசியல்வாதிகளும் அவர்களின் கையாட்களும் நடந்ததுகொள்வது, அதிகார துஷ்பிரயோகத்தினாலும் உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெறுவதற்கு தடையாக அரசியல் செல்வாக்கு இருப்பது…. என்று பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.

      ” அரசும் அரசியல்வாதிகளும் மக்களை வதைக்கின்ற சமுதாயங்களில், அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யாத சமுதாயங்களில், மக்களின் துன்பங்களுக்கு காரணமான அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஊழலுக்கும் வன்முறைகளுக்கும் பொறுப்பான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனைப் பயமின்றி சுதந்திரமாக வாழ்கின்ற சமுதாயங்களில் அவர்களுக்கு நேரக்கூடிய அகால மரணங்களை மக்கள் இயற்கை வழங்கிய நீதி என்று மக்கள் திருப்தியடைகிறார்கள்.

      ” வன்முறையும் துஷ்பிரயோகமும் வழமையானதாக மாறும்போது மனிதவாழ்வின் பெறுமதி தாழ்ந்துவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் துஷ்பிரயோகங்களைச் செய்த ஒருவர் மரணமடையுமபோது பொதுவெளியில் பிரதிபலிப்புகளும் அதேயளவுக்கு குரூரமானவைாயாகவே இருக்கும்.

      ” மனிதாபிமானப் பண்புடைய சமுதாயத்தை, மற்றவர்களின் உணர்வுகளை மதித்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளக்கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் , அதற்குரிய பண்புகளை முதலில் அரசு வெளிக்காட்டவேண்டும். சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பதுடன் பொறுப்புக்கூறக்கூடியத்கவும் அரசாங்கம் இருக்கவேண்டும். அரசு மனித உரிமைகளைக் களங்கப்படுத்தும்போது சமுதாயத்திடமிருந்து நயநாகரிகமான பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியாது ” என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் ( முன்னைய ருவிட்டர் ) பதிவொன்றைச் செய்திருந்தார். 

      அந்த பதிவை சில ஆங்கிலப் பத்திரிகைகள் நிசாந்தவின் மரணம் தொடர்பாக எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் மேற்கோள் காட்டியிருந்தன.

      இவ்வாறாக சமூக ஊடகங்களில் வெளியான பல பதிவுகளை உதாரணமாகக் கூறமுடியும். இத்தகைய பதிவுகள் மனிதத்தன்மை அற்றவை என்றும் கீழ்த்தரமானவை என்றும் கண்டனம் செய்யும் பதிவுகளையும் காணமுடிந்தது. அரசியல் அவதானிகள் சிலரும் மரணத்தைக் கொண்டாடிய பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்து எழுதுகிறார்கள்.

      நிசாந்தவின் இறுதி ஊர்வலம் சென்ற பாதையோரங்களில் பெருந்திரளாக மக்கள் கூடிநின்று அஞ்சலி செய்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    இதை நிச்சயமாக நிசாந்தவின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் எழுதவில்லை. மரணத்தைக் கொண்டாடும் மனநிலை மீதான வெறுப்பையே அவ்வாறு அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

      அரசியல் வர்க்கம் மீதான தங்கள் வெறுப்பை வெளிக்காட்டுவதற்கு நிசாந்தவின் மரணம் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.

      என்னதான் மனிதாபிமானப் பண்புகளைப் பற்றி நாம் பேசினாலும், பழிபாவத்துக்கு அஞ்சாத போக்குகள் நிறைந்த இன்றைய அரசியல் வாழ்வில் மரணங்களும் கூட குரூர திருப்தியுடன் நோக்கப்படும்  ஒரு  கலாசாரம் வளர்ந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.

      நிசாந்த விபத்தில் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின்  புத்தளம் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்ததாக கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரின்  மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சினிமாப் பாணியில் சொல்வதானால் அவர் அழுதுகொண்டே சிரித்திருப்பார் அல்லது சிரித்துக்கொண்டே அழுதிருப்பார்.

       பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின்  மரணச்செய்தி வெளியான கையோடு வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்தவராக இருப்பவரின் பெயரும் செய்திகளில் வந்துவிடுகிறது. இறுதிச்சடங்கு முடியும் வரையாவது அதைப் பற்றிய செய்தியை வெளியிடாமல் இருக்கும் ஒரு  குறைந்தபட்ச கண்ணியத்தைக் கூட ஊடகப்பரப்பில் காணமுடியவில்லை.

      அரசியல் கலாசாரம் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கிறதோ சமூகவாழ்வின் சகல அம்சங்களிலும் அதேயளவுக்கு எதிர்மறையான சிந்தனைப் போக்குகள் வளருகின்றன. என்னதான் மதங்களின் மாண்புகள் பற்றி நாம் பேசினாலும் அவற்றினால் இதுவிடயத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தி சமூகத்தை வழிநடத்த முடிவதில்லை.  போட்டாபோட்டி நிறைந்த இன்றையை சமூக வாழ்வில் பாரிய தார்மீக வெற்றிடம் ஒன்று  காணப்படுகிறது.

     மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் என்றோ ஒரு நாள்  மரணமடையத்தான் வேண்டும்.  ஆனால், உயிருடன் இருக்கும் காலத்தில் எமது வாழ்க்கை முறையின் மூலமாக நாம் எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியமானது.

      இதனிடையே, புத்தளம் மக்களும் நாட்டு மக்களும் பொதுஜன பெரமுன தலைவர்களும் கேட்டுக்கொண்டால் நிசாந்த விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசியலில் இறங்குவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக  அவரின் மனைவியான சட்டத்தரணி சமாரி பிரியங்கா பெரேரா கூறியிருக்கிறார் என்பதையும்  கவனிக்க நாம் தவறக்கூடாது.

      (வீரகேசரி வாரவெளியீடு)
     

     

    https://arangamnews.com/?p=10438

  20. சிலியில் ஏற்பட்டுள்ள  காட்டுத்தீயால்   112 போ் உயிாிழப்பு

    adminFebruary 5, 2024
    wildfire-in-chile.jpg?fit=921%2C518&ssl=

    தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரையில்  112 போ் உயிாிழந்துள்ளதுடன்   சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

    சிலியின்   மலைப்பகுதியான வினாடெல்மாரில் ஏற்பட்ட  பயங்கர காட்டுத்தீ   மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது இதனையடுத்து
    தீயணைப்பு வீரர்கள்  ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

    இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாகவும் . இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியதனால்  அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின.

    . வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது. எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டுள்ளாா்.  இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
     

    https://globaltamilnews.net/2024/200361/

  21. தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்?

    image_23d1a2197b.jpg

    சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில்  நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று. ஒன்று, தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல். இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல். அண்மையில், தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

    அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது, தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரியா?ஏனென்றால் கட்சிகளுக்குரிய கட்டுக்கோப்பு; யாப்பு; கூட்டுப் பொறுப்பு என்பன இருந்திருந்தால் பொதுச் செயலாளர் தெரிவில் அப்படி ஒரு குழப்பம் நடந்திருக்காது.

    அந்தக் குழப்பம் பின்வரும் விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது. முதலாவது, தமிழரசுக் கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பாக இல்லை. அது சிதைந்து போய்விட்டது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத அளவுக்கு கட்சி அதன் கூட்டுணர்வை இழந்துவிட்டது. இரண்டாவது, சிறீதரனின் தலைமைத்துவத்தை அவருடைய எதிரணி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளத்  தயாரில்லை. அதாவது தொகுத்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி தலைவருக்கான தேர்தலோடு இரண்டாகி நிற்கின்றது.

    ஆனால் இதுவிடயத்தில் தமிழரசுக் கட்சியின் சீத்துவக்கேட்டை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள் மட்டும் ஜனநாயகக் கட்டமைப்பாக உள்ளனவா? அங்கேயும் பரம்பரைத் தலைவர்கள்; கேள்விக்கிடமற்ற நிரந்தரத் தலைவர்கள் என்ற ஏற்பாடுகள்தானே உண்டு ? கட்சி மாநாடுகள் வைக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப ஒருவரே தலைவராகத் தெரிவு செய்யப்படலாமென்றால் அதன் பொருள் என்ன? கட்சிக்குள் வேறு தலைவர்கள் வரவில்லை என்பதா? அல்லது இருக்கின்ற தலைவர் கடவுளா?

    எனவே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் யோக்கியதை ஏனைய கட்சிகளுக்கு கிடையாது. தமிழரசுக் கட்சியைப் பின்பற்றி ஏனைய கட்சிகளும் தமது உயர்மட்டப் பொறுப்புகளை தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லையென்றால், தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்த முடியாது. தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்தவில்லையென்றால் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த முடியாது. ஏனென்றால், தேசியத்தின் இதயம் ஜனநாயகம்தான். தேசியவாதம் தொடர்பான மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களின்படி, தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லையென்றால், அவை தங்களைத் தேசியக்கட்சிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இல்லை. எனவே தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் எல்லா விதமான விமர்சனங்களோடும் முற்போக்கானது.

    அது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்,அல்லது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்கியிருக்கிறது என்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் அல்ல. கட்சிக்குள் ஜனநாயகமே இல்லை;கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை; தனியோட்டங்கள்தான் உண்டு; சுமந்திரனும் சம்பந்தரும் தங்களுக்கு இடையே பேசி முடிவுகளை எடுத்தார்கள்; சுமந்திரன் யாரையும் பொருட்படுத்தாமல் தனியோட்டம் ஓடினார்; என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

    ஆனால் சுமந்திரன் கூறுகிறார், கூட்டுப் பொறுப்பு என்று கூறி ஏனைய கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்துக்கொண்டு சந்திப்புகளுக்குச் சென்றால், சந்திப்பு முடிவதற்கு இடையில் ஊடகங்களுக்குத் தகவல்கள் கசிய விடப்படுகின்றன என்று. அதாவது கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்று.அவ்வாறு கட்சியின் கூட்டுப் பொறுப்பை சிதைத்தமைக்கு அவருடைய தனி ஓட்டங்கள்தான் காரணம் என்று கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

    இவ்வாறு கட்சிக்குள் ஜனநாயகம் சிதைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில், தலைமைப் பொறுப்புக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைமைகளை சுமந்திரனை உருவாக்கினார். அவர் அதை உருவாக்கக் காரணம் கட்சிக்குள் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்லது கதிரைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சம்பந்தரையும் மாவையும் கதிரைகளை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காகவா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப்பார்த்தால், இருவரையும் கதிரைகளை விட்டு அகற்றுவதற்காகத்தான் சுமந்திரன் ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேர்தல் நடந்தால் அதில்,தான் வெல்வேன் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்குரிய வேலைகளை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். எனவே,வெற்றி நிச்சயம் என்று நம்பியபடியால்தான் அவர் தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதனால்,கட்சியை ஒரேடியாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் நம்பினார்.

    ஆனால் சிறீதரன் தொடக்கத்திலிருந்து நம்பிக்கை தளராமல் உழைத்தார். கடைசிக் கட்டத்தில் தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்குப் பயந்து விட்டார்கள். தமிழ்த் தேசிய உணர்வின் அடிப்படையில் சிறீதரன் வெல்லலாம் என்ற சந்தேகத்தில், தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுத்தார்கள். வீட்டுச் சின்னத்துக்கு விழும் வாக்குகள் ஒரு கூட்டுணர்வின் அடிப்படையில் விழும் வாக்குகளே. அக்கூட்டுணர்வுதான் தமது ஆதரவுத் தளம் என்று நம்பும் அரசியல்வாதிகள் அதற்குப் பயப்படுவார்கள். ஆனால் அதற்காக, அதை ஒரு முழுமையான கொள்கை வெற்றியாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. குறிப்பாக இது கட்சிக்குள் நடந்த தேர்தல். இதில் பங்குபற்றியவர்கள் அரசியல்வாதிகள். பொதுமக்கள் அல்ல. அதாவது அரசியல் விலங்குகள். அரசியல் விலங்குகள் கொள்கைக்கு உண்மையாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை.

    image_7468b983f6.jpg

    அது சுமந்திரன் எதிர்பாராத தோல்வி.அவருடைய ஆதரவுத் தளம் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது. கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து அவர் எப்பொழுதும் ஒரு “கிங்மேக்கராகவோ” அல்லது பட்டத்து இளவரசனாகவோதான் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். அதற்கு சம்பந்தரும் ஆதரவு. கட்சிக்குள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் இருப்பதற்கு அவர் பழக்கப்படவில்லை. தோற்கடிக்கப்பட்ட பின் அவரைப் பொறுத்தவரை அவரைவிடத் தகுதி குறைந்தவர் என்று அவர் கருதிய சிறீதரனின் கீழ் அவர் செயற்பட வேண்டியுள்ளது. அதற்கு அவருடைய “ஈகோ” இடம் கொடுக்குமா?

    மேலும் இத்தோல்வியானது,அவருடைய எதிர்காலத் தேர்தல் தோல்விகளையும் தீர்மானிக்ககூடும். அப்படிப்பட்டதோர் சூழலில்,அவர் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் குறி வைக்கக்கூடும். அதற்கு செயலாளர் அவருடைய ஆளாக இருக்க வேண்டும். அதனால்தான் தன்னைச் செயலாளராக நியமிக்கக் கேட்டிருக்கிறார். அது நடக்கக்கூடிய காரியம் இல்லையென்று அவருக்கே தெரியும். ஆனால் அதன்மூலம் கிழக்கில் உள்ள தன்னுடைய ஆளை செயலாளராக நியமிக்குமாறு நிர்பந்திக்கலாம் என்பதை அவர் சரியாகவே கணித்திருந்தார். இது அவர்  எதிர்காலத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபு. அதாவது சுமந்திரன் கட்சிக்குள் தொடர்ந்தும் தனது முதன்மையைத் தக்கவைக்க முற்படுகிறார் என்று பொருள். அவர் சிறிதரனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அது தெரிகிறது.

    கடிதம் எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? சிறிதரனோடு அதை நேரடியாக காதும் காதும் வைத்ததுபோல ஏன் பேச முடியவில்லை? அது இருவரும் தூரமாக இருப்பதைக் காட்டுகின்றதா? அதனை பகிரங்கப்படுத்துவதன்மூலமும்,அதை எழுத்தில் முன்வைப்பதன்மூலமும், குறிப்பாக கடிதத்தில் சில சட்ட நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் எதிர்காலத்தில் சிறீதரனின் அணிக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற மிரட்டல் அங்கே உண்டா?

    கட்சிக்குள் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்றால் அவர் கட்சிக்கு வெளியே போவாரா? ஒரு புதிய கட்சியை உருவாக்குவாரா? அதாவது தமிழரசுக் கட்சி உடையுமா? சுமந்திரன் ஒரு “கிங் மேக்கர்”தான். ஒரு “கிங்கைப்”போல ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவாரா?

    ஆனால் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் மத்தியில் சுமந்திரனுக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அளாப்புகிறார் என்ற அபிப்பிராயம் மேலெழுந்திருக்கிறது. அவர் சிறீதரனுக்கு எழுதிய கடிதம் சாதாரண மக்களை அதிகம் சென்றடையாது. அரசியல் ஈடுபாடுடைய; அரசியல் கட்டுரைகளை வாசிக்கின்றவர்கள் மத்தியில் அதற்கு ஒரு கவனிப்பு இருக்கும். ஆனால் சாதாரண வாக்காளர்கள் சுமந்திரனை ஓர் அளாப்பியாகத்தான் பார்க்கிறார்கள்.

    சிறீதரனைப் பொறுத்தவரை அவர் பழைய கூட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்க முன்பு அவர் தன்னுடைய சொந்தக் கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்தி கட்சியை ஒரு கட்டிறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்ப வேண்டியவராகக் காணப்படுகிறார். கட்சி இரண்டாக உடைவதைத் தடுப்பதென்றால் இப்போதைக்கு சுமந்திரன் அணியை அனுசரித்துப் போகவேண்டும்.

    கடந்த சில தசாப்தங்களுக்குள் தென்னிலங்கையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்கனவே சிதைந்து விட்டன. அது ஈழப் போரின் நேரடி விளைவு. ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் ஈழப் போரின் நேரடி விளைவாக இரண்டு பாரம்பரிய கட்சிகளும் இப்பொழுதும் அரங்கில் நிற்கின்றன.அவை பண்புருமாற்றத்துக்குத் தயாரா?

    பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது தனிப்பட்ட சந்திப்பின்போது இக்கட்டுரை ஆசிரியரிடம் சொன்னார்…”உங்களுடைய தலைவர்களில் பலர் தீர்ந்துபோன சக்திகள்-spent forces-என்று”.தீர்ந்துபோன சக்திகளை வைத்துக்கொண்டு கட்சிகளைப் புதுப்பிக்கலாமா ?

    பல தசாப்தங்களுக்கு முன்பு செல்வநாயகம் சொன்னார்…தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று.ஆனால் இப்பொழுது அவருடைய கட்சியை அவருடைய கட்சிக்காரரிடம் இருந்தே காப்பாற்றுவது எப்படி?

     

    https://www.nillanthan.com/6511/

  22. விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா?

    தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா?  விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா?  அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு?

    அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..? குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..?

    ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்!

    விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

    மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.’’ எனக் கூறியுள்ளார்!

    ஐயா விஜய் அவர்களே, உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறதா? அல்லது யாரேனும் இதை எழுதி தந்தார்களா? ஏனென்றால், இது வரையிலான உங்கள் கனத்த மெளனம் அல்லது கள்ள மெளனம் சொல்லிய செய்திகள் வேறல்லவா?

    விஜய் தன் அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.என்கிறார். ஆனால், தன் தாய், தகப்பனிடம் இருந்தே அண்மை காலமாக அவர் விலகி உள்ளார்! சாதராணமான பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை! அவருடைய அரசியல் அவரது குடும்பத்தையே பிளந்துள்ளது.

    1192744.jpg

    அரசியலில் ஈடுபட சில அடிப்படை பண்புகள் வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா விஜய் அவர்களே?

    # முதலாவது துணிச்சல்! 

    # இரண்டாவது யார் எதிரி? யார் நண்பன் என்ற தெளிவு!

    # மூன்றாவது வெளிப்படைத் தன்மை! இது தான் பாதை! இது தான் பயணம் எனச் சொல்ல வேண்டும்.

    # நான்காவது நாட்டு நிலவரங்களில் ஒரு தொடர்ச்சியான அக்கறையும், அதனை ஒட்டி அபிப்ராயமும் வெளிப்பட வேண்டும்.

    # ஐந்தாவது மக்கள் செல்வாக்கு!

    மேற்படி ஐந்து அம்சங்களில் கடைசி ஒன்றில் மட்டும் தான் அபரிதமான மதிப்பெண் பெறுகிறார்! மற்ற நான்கிலும் அவருக்கு என்ன மதிபெண் போடலாம் என பார்க்கலாமா..?

    துணிச்சல்:

    எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி ஆரம்பிச்ச போது கருணாநிதி தான் தன் பிரதான எதிரி என ஒரு பலமான எதிரியோடு மோதினார்! அவருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர். பிலிம் ரோலை எரிக்கப் பார்த்தனர். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆங்காங்கே திமுகவினரால் தாக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர், ‘மலையாளி’ என்றும், ‘அறிவில்லாதவர்’ எனவும் அவமானப்படுத்தப்பட்டார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் எம்.ஜி.ஆர் முன்னேறினார்!

    ஆனா, விஜய்யின் துணிச்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்ட போது அமைதி காத்தீர்கள்.  2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்து, அதிமுக வெற்றி பெற்ற பின், ”அந்த வெற்றியில் அணிலாய் என் பங்களிப்பும் இருந்தது” என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதி காத்தீர்!

    vijay-64159751.jpg

    தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தீர்கள்! படத்தை திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தியேட்டர்காரர்கள் பயந்தனர்! நீங்க கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு போட்டு ஜெயலலிதா காலில் விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாத நிலையில் அவமானப்பட்டு திரும்பி வந்து அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பேனரில் உள்ள வாசகத்தை அகற்றி படத்தை வெளியிட்டீர்கள்! உங்கள் கருத்து சுதந்திரத்தை காக்கவே நீங்கள் போராடவில்லையே!

    சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி துணிச்சலாக வசனம் பேசினீர்கள்! பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! ஹெச்.ராஜா போன்றவர்கள் உங்களின் கிறிஸ்த்துவ குடும்ப பின்னணியை இழிவுபடுத்தி பேசினர். ரெய்டுகள் நடத்தப்பட்டன! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்கள். அதன் பிறகு கப்சிப் தான்!

    மோடியிடம் பேசப்பட்டது என்ன? அதன் பிறகு பாஜக தரப்பில் உங்களுக்கு இணக்கம் ஏற்பட்டது எவ்வாறு? தினமலர் உள்ளிட்ட இந்துத்துவ பத்திரிகைகள் உங்களை மிக மென்மையாக கையாளுவதன் ரகசியம் என்ன? உங்கள் தந்தையை விலக்கி வைக்கச் சொல்லி உங்களை நிர்பந்தித்தது யார்?

    Vijay-Facing-Music-for-Criticising-Modi-

    யார் எதிரி? யார் நண்பன்?

    மோடியும் நண்பர், ஸ்டாலினும் நண்பர், எடப்பாடியும் எதிரியல்ல..என்கிற ரீதியான அரசியல் தான் விஜய் அரசியலாக உள்ளது! காரணம், தெளிவான கொள்கை இல்லை!

    மதவெறி அரசியல் கூடாது என்றால், பாஜக தான் எதிரி!

    ஊழல், குடும்ப அரசியல் கூடாது என்றால் திமுக எதிரி! அதிமுகவும் ஊழல் கட்சி என்பதால் எதிரி தான்!

    சாதி அரசியல் கூடாது என்றால், பாமக, கொ.ம.க ஆகியவை எதிரி!

    எதிரியைத் தீர்மானிக்காமல் அரசியல் செய்ய முடியாது.

    நாட்டு நிலவரங்களில் அக்கறை;

    2009 லேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டீர்கள். எனவே, மக்களை பாதிக்கும் விவகாரங்களில் உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இது வரை உங்கள் எதிரி யார் எனச் சொல்லவேயில்லை.

    maxresdefault-6.jpg

    தமிழ் நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இளைஞர்கள், பிஞ்சு மாணவர்கள் கூட மது பழக்கத்தில் சீரழிகின்றனர்! தமிழக ஆட்சியாளர்களின் பேராசை இதற்கு பின்புலம். நீங்கள் இது வரை இது குறித்து கவலைப்பட்டு உள்ளீர்களா?

    ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இங்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கிறது. ”பணத்தை வாங்காதீர்கள்…” என்று உரத்து உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டாமா?

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில்,மக்கள் அமைதி போராட்டம் நடத்தும் போது குருவி போல் சுட்டுக் கொல்ல்லப்பட்டனர். நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்?

    சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?

    மெர்சல் படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!

    Vijay.jpg

    மேற்படி விவகாரங்களில் ஏன் உங்களால் கருத்து சொல்ல முடியவில்லை. காரணம், உங்கள் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம்,இரண்டாயிரம் என சட்டத்திற்கு புறம்பாக விலை வைத்து விற்பதில் ஆட்சியாளர்கள் மெளனம் காட்டுகிறார்கள்! பதிலுக்கு நீங்களும் அமைதி காக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாமா..?

    வெளிப்படைத் தன்மை:

    மக்கள் இயக்கம் கண்ட பிறகு இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு பொது விஷயத்திற்கும் வாய் திறப்பதில்லை. உங்கள் சம்பாத்தியம் என்ன? சொத்து மதிப்பு என்ன? பொதுச் சேவைக்கு உங்கள் சம்பாத்தியத்தில் எத்தனை சதவிகிதம் தருகிறீர்கள்..எதிலாவது வெளிப்படைத் தன்மை இருக்கிறதா?

    1017306.jpg

    பாருங்கள்! கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.இனிமேலாவது துணிந்து அநீதியை எதிர்ப்பீர்களா? எனில், உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொண்டால் தான் அப்படி எதிர்க்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்!

    2026-க்கு தான் தேர்தலில் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு இந்த தேர்தலையே ஒரு டிரைலராக  நீங்க பார்க்கணும்! எடுத்த எடுப்பில் பெரிய வெற்றியை ஈட்டி நேரடியாக முதல்வராக முடியாது! இனியும் காலம் தாழ்த்தாது களத்திற்கு வாங்க. நீங்க என்ன பேசுறீங்க, என்ன செய்யிறீங்க என்பதைக் கொண்டு தான் உங்கள் பின்னணியில் பாஜக இருக்குதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். ஏனென்றால், விஜய்க்கு தானாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் துணிச்சல் கிடையாது என்பதே உண்மை!

    இரண்டு திராவிட இயங்கங்கள் இங்கு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலையில், ‘அவர்களின் வாக்கு வங்கியை தான் ஒரு போதும் அள்ள முடியாது’ என்ற நிலையில் உங்களை இறக்கி ஆழம் பார்க்கிறதா பாஜக? என்ற சந்தேகத்திற்கு விரைவில் விடை கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய் வருகையால் இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று வாக்கு வங்கி பலவீனப்படும். விஜய் பாஜகவின் நிழலாக இயங்க நினைத்தால், அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!

    சாவித்திரி கண்ணன்

     

    https://aramonline.in/16521/actor-vijay-politics/

    • Like 3
    • Thanks 1
  23. சிறிதரன் எதிர்நோக்கும் சவால்கள்

    எம்.எஸ்.எம். ஐயூப்

    தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி  கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

    1949 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டு சொற்ப காலம் சென்றதிலிருந்து இலங்கையில் பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கும் தமிழரசு கட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் நிலையிலேயே சில தென்பகுதி ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார் என்று அறிக்கையிட்டு இருந்தார்கள். 

    இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தென் பகுதியில் இடம்பெறும் சில அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளைப் பற்றி தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் போதிய அறிவு இல்லாமல் இருந்ததையும் கடந்த காலத்தில் கண்டோம்.

    உதாரணமாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் சிங்கள பௌத்த மக்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாகர் உலகிலிருந்து களனி விகாரைக்கு ஒரு நாகம் வந்த கதையைப் பற்றி பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

    நிலத்துக்கடியில் இருப்பதாகக் கூறப்படும் நாகர் உலகிலிருந்து ஒரு நாகம் புத்தரின் அடையாளச் சின்னங்களைத் தாங்கிய வண்ணம் களனி கங்கை ஊடாக வெளியே வந்து அச்சின்னங்களை மற்றொருவர் மூலம் தம்மிடம் கையளித்தாகவும் அது தேசத்தையும் பௌத்த சமயத்தையும் பாதுகாப்பதற்காக ஒரு புதிய தலைவர் வருகிறார் என்பதற்கான அடையாளமாகவே நிகழ்ந்தது என்றும் களனி மகா விகாரையின் பிரதம மதகுரு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

    அதனை பொதுஜன முன்னணிக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய செய்தி என்று கூறி எவ்வித சந்தேகமும் இல்லாத செய்தியைப் போல் ஒளிபரப்பியது. இந்த வீடியோ இன்னமும் யூடியுப்பில் பார்க்கலாம். இச்செய்தி பௌத்தர்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் யார் என்று கேட்டால் சிலவேளை பலருக்கு தெரியாதிருக்கலாம்.

    தமிழரசு கட்சியைப் பற்றி அறியாத தென்பகுதி இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் இனப் பிரச்சினை போன்ற சிக்கலான ஒரு விடயத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்ப முடியாது. ஆனால் அவர்கள், அக்கட்சியை அறியாதிருக்க அல்லது தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்று தான் என்று நினைக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன.

    இலங்கை தமிழரசு கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஆரம்ப காலத்தில் தென் பகுதியில் அது 'பெடரல் பக்ஷய' (சமஷ்டி கட்சி) என்றே அழைக்கப்பட்டது. அதனை அடுத்து 1972 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சி மூன்று கூட்டணிகளின் பிரதான கட்சியாக இருந்தது. 1972 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை தமிழர் ஐக்கிய முன்னணியினதும் 1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் வரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் (கூட்டணியினதும்) 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பிரதான உறுப்புக் கட்சியாக இருந்தமையால் அதன் பெயர் அறிதாகவே ஊடகங்களில் காணப்பட்டது.

    2001 ஆம் ஆண்டு முதல் தேர்தல் காலங்களில் அதன் பெயர் ஓரளவுக்கு வெளியே தெரிய இருந்தது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசு கடசியின் சார்பாக அதன் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டனர். 1980களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அமைப்புக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் மூண்டதால் தமிழரசு கட்சி போன்ற கட்சிகளுக்கு ஊடகங்களில் இடம் கிடைக்கவே இல்லை. இவ்வனைத்து காரணங்களாலும் தமிழரசு கட்சி என்பது ஏதோ புதிய கட்சியொன்றைப் போல் தெற்கில் சிலர் காணலாம்.

    தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக இதற்கு முன்னர் ஒருபோதும் போட்டி நடைபெறவில்லை. பொது உடன்பாட்டிலேயே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். இம் முறை தேர்தலானது யார் சிறந்த தமிழ் தேசியவாதி என்பதை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே தெரிந்தது.

    தேர்தலுக்கு முன்னர் வெளியான தமிழ் பத்திரிகைகளிலும் இது தெரிய இருந்தது. அந்த வகையில் சிறிதரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. சில தமிழ் ஊடகங்கள் சிறிதரன் உள்நாட்டுப் போரின் அதிக வடுக்களை சுமந்துக்கொண்டிருப்பவர் என்றும் சமந்திரன் சம்பந்தனின் சிபார்சின் பேரில் அரசியலுக்கு வந்து தமிழ்த் தேசியத்துக்குள் புதியவராக அறிமுகமான புதிய தமிழ் தேசிய பற்றாளர் என்றும் குறிப்பிட்டன.

    தென்பகுதி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எப்போதும் தமிழ் தேசியவாதத்தை தமிழீழ விடுதலை புலிகளின் அரசியலாகவே காண்கின்றனர். கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடன் சிறிதரன் போரில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செயலுத்தியமை எதோ ஓர் ஆபத்தான சகுனமாக சிலர் பார்ப்பதாகவே தெரிந்தது.

    மூன்று தசாப்தங்களாக வான் தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதலாலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஒரு மண்ணில் அந்த கொலைகள் இடம்பெரும் போது அதற்கு சாட்சியாக இருந்த ஒருவர் புதியதோர் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது தாம் கடந்து வந்த அந்த கொடுமையான பாதையை மறக்க மாட்டார் என்பது எவரும் பரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தமாகும். ஆனால் அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் ஒருவர் அதனை புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். அதனையே தென்பகுதியில் காண முடிந்தது.

    இது சிறந்த தேசியவாதியை தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையியே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்து இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் கருத்து தெரிவித்த அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசியம் அழிந்துவிடக்கூடாது என்பதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

    கட்சித் தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் போட்டியிட்டு சிறிதரன் வெற்றி பெற்ற நிலையிலேயே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தேர்தல் முடிவின் பின்னர் கருத்து தெரிவித்த சிறிதரன், சுமந்திரனுடனும் தேர்தலுக்கு சற்று முன்னர் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடனும் இணைந்து தமிழ் தேசியத்தின் ஒவ்வோர் அங்குல இருப்புக்காகவும் பொறுப்புடன் செயற்படுவதாக என்று கூறியிருந்தார். அதேபோல் சுமந்திரனும் புதிய தலைவர் சிறிதரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிப்போம் என்று கூறியிருந்தார்.

    இவ்விருவரின் இக்கருத்துக்கள் வெறும் சம்பிரதாயத்துக்கானதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அக்கருத்துக்களால் அவர்கள் உலகுக்கு எடுத்துரைக்கப் போகும் ஐக்கியமானது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இது தமிழ் சமூகத்துக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்கும் பொருத்தமானதாகும்.

    இன்று இலங்கை தமிழ் அரசியலானது முன் நகர முடியாத ஒரு நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவே தெரிகிறது. தமது இருப்பை பாதிக்கும் பல பிரச்சினைக்ளுக்கு தீர்வு தேடி சாத்வீகமாக பல தசாப்தங்களாக போராடி வந்த தமிழ் தலைவர்கள் அப்போராட்டம் தோல்வியடையவே பிரிவினையை கோரினர்.

    பிரிவினைப் போராட்டம் மரபு ரீதியான கட்சிகளை பின் நோக்கித் தள்ளிவிட்டு இளைஞர்களிடம் சென்றடைந்தது. அப்போராட்டமும் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் ஜனநாயக ரீதியாக சமஷ்டி ஆட்சி முறையை கோருகிறார்கள். அதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் தயாராக இல்லை. மீண்டும் ஆயுதப் போராத்துக்குப் போகவும் முடியாது. ஜனநாயக போராட்டமும் ஓரிடத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இது ஒரு நெருக்கடியான நிலைமையாகும்.

    இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடையிலான போட்டா போட்டியும் நிச்சயமாக சிந்தனைக்கு தடையாகவே கருத வேண்டியுள்ளது. போராட்ட வடிவங்கள் மற்றும் சுலோகங்கள் தொடர்ந்தும் பயனளிக்காவிட்டால் அவற்றை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதாவது ஆயுதப் போராட்டத்துக்கு மீண்டும் போக வேண்டும் என்பதல்ல. ஆனால் தென் பகுதியிலும் சர்வதேசத்திலும் புதிய நண்பர்களை தேடலாம். தென் பகுதி பொருளாதார போராட்டங்களோடு தமிழர்களின் பிரச்சினைகளையும் இணைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராயலாம். கடந்த வருடம் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது ஓரளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தெற்கே எடுத்துச் செல்லப்பட்டன.

    இவற்றைத் தான் செய்ய வேண்டும் என்பதல்ல. தமிழர்களும் முஸ்லிமகளும் புதிதாக (out of the box)சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதையே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயினும், கட்சிகளாக பிரிந்து இதனை செய்யப்போகும் போது மற்றைய கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்கள் மற்றம் முத்திரை குத்தல்கள் பற்றிய அச்சத்துடனேயே அதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே தான் கட்சிகளின் ஒற்றுமை ஊடாக ஒரு கூட்டுப் பயணம் அவசியமாகிறது. 31.12.2023

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எதிர்நோக்கும்-சவால்கள்/91-332553

     

  24. ”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

    ManjulaFeb 03, 2024 13:45PM
    bollywood actress poonam pandey

    தான் உயிருடன் இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

    பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) ‘நஷா’ என்ற படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்தி தவிர கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பூனம் நடித்திருக்கிறார். பூனம் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ‘ஜர்னி ஆஃப் கர்மா’ பாலிவுட் படம் வெளியானது. அதற்குப்பின் அவர் நடிப்பில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    bollywood actress poonam pandey

    கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர், 2௦2௦-ம் ஆண்டு தன்னுடைய காதலன் சாம் பாபே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று(பிப்ரவரி 2) திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    நன்றாக இருந்த பூனம் திடீரென எப்படி இறந்தார்? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர். மேலும் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    bollywood actress poonam pandey

    இந்த நிலையில் தான் இறக்கவில்லை என இன்று(பிப்ரவரி 3) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ”நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள்,”விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என கடுமையாக பூனம் பாண்டேவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

     

    https://minnambalam.com/cinema/bollywood-actress-poonam-pandey-apologises-for-shocking-everyone/

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.