• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழச்சி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,522
 • Joined

 • Last visited

 • Days Won

  7

தமிழச்சி last won the day on September 4 2014

தமிழச்சி had the most liked content!

Community Reputation

299 ஒளி

About தமிழச்சி

 • Rank
  Advanced Member
 • Birthday March 5

Recent Profile Visitors

2,378 profile views
 1. நெடுக்கு, இதனை நீங்களே செய்யலாமே! ஏன் மற்றவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். அங்கு விடுதலைப் புலிகள் போராடியபோதும் நீங்கள் அவர்களோ சேர்ந்து போராடவில்லை. மாறாகப் புலம்பெயர்ந்து உங்கள் வாழ்க்கைக்கும் படிப்பிற்கும்தான் முக்கியத்துவம் கொடுத்தீர்கள். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது யார் நினைத்தாலும் இதனை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்ல முடியும். முன்னைப்போல், எங்களை வழிநடத்த எந்தத் தலைவர்களும் இல்லை. ஆகவே, யார் வேண்டுமானாலும் போராடலாம். 16 வயது நிரம்பிய ஒரு இளைஞனால் போராட்டத்தைத் தொடங்கமுடியும் என்றால் இத்தனை படிப்பறிவு கொண்ட உங்களாலும் முடியும். ஆகவே, நீங்களே நீங்கள் முன்வைக்கும் விடயங்களைத் தொடங்குங்கள். உங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் பின்தொடர்வார்கள். மற்றவனைக் கைகாட்டுவதற்கு முன்னர் நீங்கள் அதனைச் செய்யுங்கள்.
 2. படங்களுக்கு மிகவும் நன்றி ஜீவன்சிவா. அந்த மண்ணை விட்டுப் பிரிந்து 26 வருடங்கள் ஓடி விட்டது. மீண்டும் வந்து அந்த மண்ணைத் தரிசிக்க இந்தப் படங்கள் உந்துதலாக இருக்கிறது. முகநூலிலும் பழைய மாணவர்கள் பலர் இந்தப் படங்களை இணைத்து ஆசையைத் தூண்டுகிறார்கள். அமெரிக்க மிசன் பாடசாலை அமைந்திருக்கும் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதா?
 3. மிகவும் கடினம் சுமே. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை. அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது. புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும். நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான். இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது. அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல. நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம். வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும். புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன். எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும் mentality உம் மட்டும்தான். அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது. ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம். மிகவும் நன்றி ரதி. நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன். அப்பப்போ காணாமலும் போவேன். ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.
 4. என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம். ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம். ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம். ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன். அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள் நிச்சயம் இருக்கும். எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன். அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை. அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை. ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை. முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை. அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார். சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.
 5. அவர் இந்தியாவிலிருந்து விசாவில் வந்து சாத்திரம் பார்ப்பவர். இவரை யார் பிணையில் எடுப்பார்கள்? அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அவர்களால் அத்தனை பணம் செலுத்தி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இங்கு காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றித் தொட்டாலே அது குற்றம். ஆகவே, இந்த வாதம் இங்கு எடுபடாது. இவரால் வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் முன்வந்து காவல்துறையிடம் முறையிடுமாறும் காவல்துறை கேட்டுள்ளது. ஆகவே, இது அவரைச் சிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்.
 6. நிழலி குறிப்பிட்டது போல, உண்மையில் நடந்தது என்னவென்று தெரியவில்லை. காவல்துறையிடம் முறையிட்டதால் கைது செய்யப்பட்டதாகவும் ஒக்டோபர் 22இல் கோர்ட்டிக்குச் செல்லவுள்ளதாகவும் மட்டுமே ஆங்கில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியிருக்கின்றன. நிழலி சுட்டிக்காட்டிய பின்புதான், ஒரு பெண் இத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டு அவரே காவல்துறையிடம் சென்றிருப்பாரா என்பது கேள்விக்குறியே. எது எப்படியோ, கனடாவில், பரிகாரம் என்று சாத்திரிகளின் பின் செல்லும் பெண்களுக்கு இது நல்லதொரு பாடம். இந்தச் சாத்திரிக்கு அவரின் சாத்திரமே அவருக்குத் தெரியவில்லை.
 7. இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும்? பெண்கள் விருப்பப்பட்டுச் செய்வது என்பது வேறு. ஆனால், இந்த நாட்டில் இருந்து கொண்டு ஒரு அந்நிய ஆணுடன் இப்படி நடந்து கொள்ள முடியுமா? மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல, இங்கு ஒரே கடைத்தொகுதியிலேயே பல ஜோதிடர்கள் முகாம் போட்டுள்ளார்கள். அவர்களோடு அவர்களது மனைவிமார் வேறு வந்திருப்பார்கள். கடைக்குள் போய் உடன் வருவதற்குள்ளேயே காரில் அட்டை வைத்திருக்கப்பட்டிருக்கும். யாயினி, தமிழ்க் குடும்பங்களுக்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியுமா என்ன? என்னதான் நாம் முயற்சி செய்தாலும் சில விடயங்கள் நமது கைகளில் இல்லை. குடும்பம் என்ற அமைப்புக்குள் பெரியவர்களின் கையே இன்றும் ஓங்கியிருக்கிறது. நாம் என்னதான் அவர்களைவிட அதிகமாகப் படித்திருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் ஒரு சிலரின் கைகள் மட்டுமே எப்போதும் ஓங்கியிருக்கும். நாம் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான். இதற்குள் பாரபட்சம் வேறு. அடுத்த தலைமுறையோடாவது இது அழிந்து போகவேண்டும்.
 8. இது காவல்துறையிடம் சென்றது மிகவும் நல்ல விடயமே. இப்படியெல்லாம் ஏமாறும் பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது. இப்படியான பரிகாரங்களை எல்லாம் நம்புவார்களா என்ன? இதற்குப் பின்னராவது இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோசியர்களின் எண்ணிக்கை குறையட்டும். இந்தச் செய்தி மற்றையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நினைக்கிறேன்.
 9. அங்கு நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களும் அனைத்து வட்டாரத்தையும் சேர்ந்தவர்களாகத் தெரிவு செய்யுங்கள். அதேபோல், மக்களின் நலனுக்காகச் செயற்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 10. எனக்கும் தமிழ்நாடு மிகவும் பிடித்த இடம். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஒரு வருடம்கூடப் போதாது. அவ்வளவு இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்ப்பதற்கு. ஆனால், அங்கு வாழ்ந்திருக்காதவர்களுக்கு தமிழ்நாடு பிடிக்காது. மெட்ரோ ரயில் பற்றித் தொடர்ந்து பதியுங்கள் ராஜவன்னியன். அது நிரந்தரமாக வரும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப முடியாது.
 11. நிரந்தரமாக இருந்த, இருக்கும் ஒருவரையாவது காட்டுங்கள். நாங்களும் பார்த்துக் கொள்கிறோம். அதேபோல், சாப்பாடே இல்லாமல் இருக்கும் ஒருவரையும் காட்டுங்கள். கு.சா. இங்கு தமிழர்கள் மட்டுமல்ல, மற்றைய இனத்தவர்களும் சோறு சாப்பிடப் பழகி விட்டார்கள். அநேக ரெஸ்ரோறன்களில் இப்போது சோறும் ஒரு ஐயிட்டம் ஆகிவிட்டது. சின்ன வயதிலிருந்தே சாப்பாட்டு விடயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் இந்தப் பிரச்சனைகள் வராது. நிறையச் சாப்பிட்டால்தான் வளரலாம் என்று சொல்லிச் சொல்லி வயிறு வெடிக்கும்வரை சோறைச் சாப்பிட வைத்தால் இப்படித்தான் அவதிப்படவேண்டும். இப்போது வளர்ந்து வரும் பிள்ளைகளுக்காவது ஆரோக்கியமாகச் சாப்பிடப் பழக்கி விடுவோம். நுணாவிலான் ஒரு திரியில் குறிப்பிட்டிருந்த ஒரு குறிப்பு (கடும் சீரகம் மற்றும் வெந்தயம் என்று நினைக்கிறேன்) நீரிழிவு நோய்க்கு உகந்தது என்று சமீபத்தில் நானும் அறிந்து கொண்டேன். எனக்குச் சொன்னவரும் நீரிழிவு நோயுள்ளவர்தான். ஏற்கனவே நுணாவிலான் குறிப்பிட்டிருந்ததால் நான் இங்கு பதியவில்லை.
 12. பல விடயங்களுக்குக் காலம்தான் பதில் சொல்லும். காலத்தைக் கடந்து வெல்பவன்தான் சாதனையாளன். முயல் போல் விரைவாக ஓடிக் களைப்பதிலும் பார்க்க ஆமைபோல் மெதுவாகச் சென்றேனும் சாதிப்பது மேல். முயல் போல் விரைவாக ஓடுபவனுக்குத் தடைகள் வருவது குறைவு. ஆனால், ஆமைபோல் நகர்பவனுக்குத்தான் பல அடிகள் விழுகிறது. இது நான் என் அனுபவத்தில் கண்டது. பகிர்வுக்கு நன்றி.
 13. பொது அமைப்பு, சங்கம் என வரும்போது அவர்கள் நியாயமாக நடந்து கொள்வது அவசியம். சங்கம் என்பது ஊர்மக்களுக்குப் பொதுவானது. அந்த ஊரைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அந்தச் சங்கங்களைக் கேள்வி கேட்கலாம். உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி கேட்கலாம் என்பது ஊர்ச்சங்கங்களுக்குப் பொருந்தாது. அப்படி அவர்களது யாப்பில் குறிப்பிட்டிருப்பார்களாயின் அந்தச் சங்கம் ஊர்ப்பொதுமக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட சங்கம் என்று கூறமுடியாது. அநேகமாக, இவ்வாறான சங்கங்களை ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். இவ்வாறாக பிரச்சனைகள் வரும்போது யாப்பைச் சுட்டிக்காட்டி, பெரும்பான்மை வாக்குகள் என்ற ரீதியில் பிரச்சனைகளைக் கையாளுவார்கள். அந்த யாப்பைக்கூடத் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்படி எழுதிக் கொள்வார்கள். அந்தப் பெரும்பான்மை வரவேண்டும் என்பதற்காகத் தங்களது ஆட்கள் அனைவரையும் முற்கூட்டியே எப்படிப் பேசவேண்டும், எதற்கு வாக்களிக்க வேண்டுமென ரியூசன் கொடுத்துவிட்டு அந்தக் கூட்டத்திற்கு அழைத்து வருவார்கள். இவ்வாறான காரணங்களால் பல ஊர்மக்கள் தங்களுக்கு ஏன் பிரச்சனை, உறவுகளுக்குள் விரிசல் வந்துவிடக்கூடாது போன்ற காரணங்களால் ஒதுங்கியிருப்பார்கள். பல ஊர்ச்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்குள்தான் இயங்குகிறது. சில ஊர்களில் இரண்டு சங்கங்களும் உள்ளன. இப்போது இந்த விடயம் பெரிதாக்கப்பட்டு விட்டது. இதனை முன்னெடுத்தவருக்கு பாராட்டு. உங்களின் இந்த முயற்சி பல ஊர்ச்சங்கங்களுக்கு ஒரு பாடமாக அமையும். இனியேனும் இவ்வாறான ஊர்ச்சங்கங்கள் திருந்த வேண்டும். இதுவரை காலமும் பெரும்பான்மை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு காலம் தள்ளினார்கள். முகநூலில் லைக் செய்யாவிடிலும் இந்த விடயத்தைப் பல ஊர்மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாகி விடுகிறது. காலப்போக்கில், பலர் நிர்வாக உறுப்பினர்களை (தனிப்பட்ட ரீதியிலேனும்) கேள்வி கேட்பார்கள் அல்லது தங்களது உதவிகளையும் பங்களிப்பினையும் குறைத்து விடுவார்கள். அப்படி அந்தச் சங்கம் நியாயமாக நடப்பதாக நினைத்தால், ஊர் மக்களே குற்றம் கூறுபவர்களுக்கு எடுத்துக்கூறி விளங்கப்படுத்துவார்கள். அதனை வைத்தே, அந்த ஊர்ச்சங்கம் நியாயமாக நடந்து கொள்கிறதா இல்லை அநியாயமாக நடந்து கொள்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
 14. இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். இனிப்பு என்பதால் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. ஊரில் தேங்காய்ப்பாலில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.