amudhini

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    9
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About amudhini

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 01/12/1980

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    panchjai

Profile Information

  • Gender
    Male
  • Location
    Kuwait
  1. அதிகாலை வேளை அடிக்கப்பட்டது சிங்களவனுக்கு சாவு ஓலை சென்றன இரண்டு குண்டுகள் செத்தொழிந்தன சிங்கள மண்டுகள் பறக்குமா எம் வானில் உன் ஊர்தி பறந்தால் குறிக்கப்படும் உன் சாவு தேதி அழிப்பது எம் சிவம் அறியாது போனால் ஆவாய் நீ சவம் பறந்து திரும்பிய எம் புலிகளின் பாதம் பணிகிறேன்.
  2. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
  3. நண்பருக்கு வணக்கம் பெண் என்பவள் காதலியாக மட்டும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை அமுதினி என் கருத்துக் குழந்தை. பிழையிருப்பின் மன்னிக்கவும்
  4. தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று
  5. வணக்கம் இணைய தளத்தில் இணைவது இதுவே முதல் முறை அமுதினி 5 வருட கருவாக… பூர்வீகம் - தமிழகம் இருப்பு - குவைத்
  6. குண்டு மழை பொழிந்து குருதி ஆறு காணும் ஈழம் ஈன்றெடுத்த என் இனிய சிநேகிதியே உறவு தேடி வந்தாயா இல்லை உதவி தேடி வந்தாயா நம் மொழி பேசிய மக்கள் நம்மொடு இல்லையடி அமெரிக்க ஆங்கிலம் அழகாகப் பேசுவேன் தாய் மொழி கேட்டால் பேய் விழி விழிப்பேன் மென்பொருள் உறவில் மெய்ப்பொருள் மறந்து வீறுநடை போடும் சீறுடைப் பிணமடி நான் அடுக்குமாடி குடியிருப்பின் அங்கமாய் ஆறு மாத குழந்தை அப்பா என் முகம் பார்ப்பது தப்பாது இரவு பத்து மணி அவள் அம்மாவை பார்ப்பது அரை மணி நேரம் முன்னதாக அச்சடித்த காகிதத்தின் அவசர தேவைக்கு அகுறிணை யாகிப்போன உயர் திணையடி நான் திரைப்படம் இல்லையென்றால் திகட்டாது என் வாழ்க்கை நாளொரு "தினம்" கொண்டாட வேண்டும் நகையும் பணமும் சேர்க்க வேண்டும் நண்பர்கள் கைகோர்த்து நகர் வலம் வரவேண்டும் ஒன்றுமே இல்லையென்றால் கற்புக்கரசிகள் கணக்கெடுக்க வேண்டும் இன்னும் என்னை நீ நம்புகிறாயா கொஞ்சம் பொறு உறவுக்கு உதவ வங்கி கடன் கிடைக்குமா பார்க்கிறேன் அன்புடன் பஞ்சாட்சரம் குவைத். -- கவிதை Unicode எழுத்தமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. - மோகன்