Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Iraivan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  7,249
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Iraivan

 1. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடுநடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றது https://thinakkural.lk/article/89298#.X7Aa8BHdk4o.whatsapp
 2. அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ஜெயநாத் கொலம்பகே ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார் “ஐந்து ஆண்டுகளை நோக்கி அதாவது ஒவ்வொரு கட்சியும் அதன் ஆட்சிக்காலத்தை கருதி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை திட்டமிட்டக் கூடாது” என்ற தொனிப்பட. ஆனால் இலங்கை போன்ற அடிக்கடி மாறும் வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சிறிய தீவில் வசிக்கும் தமிழர்கள் அதிலும் குறிப்பாக தங்களை ஒரு தேசம் என்று அழைத்துக் கொள்ளும் அதே சமயம் ஒரு தேசத்திற்கு தேவையான வெளியுறவுக் கொள்கையை இன்று வரையிலும் வைத்துக் கொள்ளாத மிகப் பலவீனமான தமிழர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் வருகையோடு தங்களுடைய அரசியலிலும் ஏதாவது புதிய மலர்ச்சி ஏற்படுமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஜோ பைடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது. அவருடைய வயதும் அப்படி அவர் அவர் அடுத்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருடைய வயது இடம் கொடுக்குமா? என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள். அதேசமயம் பதவியேற்றதும் இளமையும் புதுப்பொலிவு கிடைத்து விடும். எனவே அவர் மேலும் ஒரு தடவை பதவிக்குப் போட்டியிட மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது என்று ஒரு மூத்த அரசறிவியலாளர் கூறுகிறார். பைடன் ஒரு தடவை மட்டுந்தான் ஆட்சியில் இருப்பார் என்றால் நான்கு ஆண்டுகளுக்குள் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது. ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கையில் திருப்பகரமான மாற்றங்கள் ஏற்படுவதேன்றால் அதற்கு முழு உலகத்திலும் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஒன்றில் இயற்கை பேரழிவுகள் அல்லது பெரும் தொற்று நோய்கள் அல்லது உலக மகா யுத்தங்கள் ஏற்பட்டு அதன் மூலம் பூகோள அரசியலில் வலுச் சமநிலை மாறவேண்டும். பொருளாதார வலுச் சமநிலை மாற வேண்டும். இராணுவ வலுச் சமநிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் பொழுது பேரரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏதும் ஏற்படலாம். அப்படி என்றால் கோவிட்-19 ஒரு பெரும் தொற்று நோய்தானே? அது ஏற்படுத்திய அழிவு அவ்வாறு திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்த போதுமானது இல்லையா? என்ற கேள்வி எழும். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கோவிட்-19 க்குப் பின்னர் என்று கூறும் அளவுக்கு கொரோனா தொற்றலை முற்றாக நீங்கி விட வில்லை. உலகம் இப்பொழுதும் வைரசின் பிடிக்குள்தான் இருக்கிறது. அதிலிருந்து முற்றாக விடுபடவில்லை. அப்படி விடுபடும் பொழுதுதான் கோவிட்-19க்குப் பின்னரான உலகம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். கோவிட்- 19 பொருளாதார ரீதியாக ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயம் அதன் தாக்கத்திலிருந்து முதலில் விடுபட்ட நாடு என்ற அடிப்படையில் சீனா ஏனைய நாடுகளை விடவும் முதலில் நிமிர்ந்த நாடாகக் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் சந்தைப் போட்டியில் சீனா முந்திக் கொண்டு போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாக தெரிகின்றன. இதனால் சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பனிப் போர் தீவிரமடையும். ஆனால் அது ஏற்கனவே உருவாகி வந்த ஒரு தோற்றப்பாடுதான். கோவிட்-19க்கு முன்னரே சீனா சந்தைப் போட்டியில் முன்னிலைக்கு வந்துவிட்டது. இது காரணமாகவே சீனாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு நிழல் போர் ஏற்கனவே கொரோனாவுக்கு முன்னரே தொடங்கி விட்டது. கோவிட்-19தையடுத்து அது மேலும் கூர்மையடைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாது. ஏனென்றால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள வெளியுறவு கொள்கையின் பிரகாரம்தான் இந்த கெடுபிடிப் போர் தொடங்கியது. கோவிட்-19க்குப் பின் அது மேலும் கூர்மை அடையும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உடனடிக்குக் குறைவு. ஆனால் அந்த வெளியுறவுக் கொள்கையை அமுல்படுத்துவதில் அணுகு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முன்னைய அதிபர் ட்ரம்ப் உணர்ச்சிவசப்படும் ஒருவராகவும் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டும் ஒருவராகவும் பல சமயங்களில் நிதானமற்றவராகவும் வலதுசாரி இயல்பு அதிகமுடைய ஒருவராகவும் காணப்பட்டார். அவரைப் போல புதிய அதிபர் ஜோ பைடன் இருக்க மாட்டார் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இது காரணமாக வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைகளில் ட்ரம்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் மிதமான போக்கை கடைப் பிடிக்கக்கூடும். இது ஈழத்தமிழர்களுக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்? முதலாவதாக சீனாவுடனான உறவுகளில் இப்போது இருக்கும் பதட்டம் சில சமயங்களில் குறையலாம். அதாவது பனிப்போர் சூழல் ஒப்பீட்டளவில் பதட்டம் குறைந்ததாக மாறலாம். இது இலங்கை அரசாங்கத்துக்கு ஒப்பீட்டளவில் சாதகமாக இருக்கலாம். சீனாவை நோக்கி போவதில் இலங்கை தீவுக்கு உள்ள வரையறைகளை உணர்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில்தான் பொம்ம்பியோ தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்தார். இது விடயத்தில் ராஜபக்சக்கள் ஒரு பிராந்திய வியூகத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதாவது இந்தியா முதலில் என்ற வெளியுறவுக் கொள்கை. அது ஒரு திரி சூல அணுகு முறை. இத்திரிசூல அணுகுமுறை மூலம் மூன்று முனைகளை ஒரே நேரத்தில் கையாளாலாம். இந்தியா- அமெரிக்கா- தமிழர்கள். இதன் மூலம் இந்தியாவை அமைதிப்படுத்தலாம். இப்பொழுது அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். எனவே இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கும். ஸ்ரீலங்கா இந்தியாவைச் சமாளித்தால் அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓரளவுக்கு அமெரிக்காவையும் சமாளிக்கலாம். இந்தியாவை சமாளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் மேற்கத்திய தலையீட்டைக் குறைக்கலாம். இதில் ஸ்ரீலங்காவுக்கு மூன்று அனுகூலங்கள் உண்டு. முதலாவது – இந்தியாவை பகை நிலைக்குத் தள்ளாத ஓர் அணுகுமுறை. இரண்டாவது- தமிழ் மக்களை 13ஆவது திருத்தத்துக்குள் முடக்கும் ஒரு தீர்வு. மூன்றாவது – தமிழ் மக்களையும் இந்தியாவையும் தொடர்ந்தும் முரண் நிலையில் வைத்திருக்கலாம். எனவே இந்தியா முதலில் என்பது ராஜபக்சக்களைப் பொருத்தவரை மிகவும் சமயோசிதமான தற்காப்பு நோக்கு நிலையுடனான ஓரு திரி சூல அணுகுமுறை. இதன் மூலம் அவர்கள் இந்தியாவையும் சமாளிக்கலாம் தமிழ் மக்களையும் சமாளிக்கலாம் அமெரிக்காவையும் சமாளிக்கலாம். டிரம்ப்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் ஐநாவை அதிகமாக நெருங்கி வருவார் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மறுபடியும் நாட்டம் காட்டலாம். அப்படி ஒரு சூழல் உருவானால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ராஜபக்சக்களின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் ராஜபக்சக்கள் இந்தியாவோடு நிற்கும் வரை அந்த அழுத்தங்களை அவர்களால் சமாளிக்க முடியும். எனவே ஜோ பைடனின் அணுகு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் இறுதியாக இந்தியாவை வெற்றிகரமாக கையாள்வதன் மூலம் தன்னால் கையாளக் கடினமாக உள்ள தமிழ் தரப்பையும் மேற்கு நாடுகளையும் இலங்கை வெற்றிகரமாக வெட்டி ஓட முயற்சிக்கும். எனினும் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத் தடை போன்ற விவகாரங்களைக் கையாள்வது என்று சொன்னால் அதற்கு அமெரிக்கா வற்புறுத்தும் அதன் வியூக உடன்படிக்கைகளான எம்.சி.சி. உடன்படிக்கை சோபா உடன்படிக்கை போன்றவை தொடர்பாக முடிவுகளை மாற்ற வேண்டி இருக்கும். சவேந்திர சில்வாவின் விவகாரம் ஒரு குறியீட்டு நடவடிக்கைதான்; அது ஒரு பரந்தளவிலான கொள்கை நிலைப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல என்று ராஜபக்சக்கள் நம்ப இடமுண்டு. அமெரிக்கா உண்மையாகவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களை தண்டிக்க விரும்பியிருந்திருந்தால் அவர்கள் முதலில் கோதாபயவை அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் துறக்க முன்பு விசாரித்திருந்திருக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத்துக்குள் வர இருக்கும் பசில் ராஜபக்ச இப்பொழுதும் அமெரிக்கப் பிரஜைதான். எனவே தன் பிரஜைகளாக இருந்த இருக்கின்ற ராஜபக்சக்களின் மீது தனது பிடியை இறுக்காத அமெரிக்கா ஒரு கருவியான சவேந்திர சில்வாவின் மீது என் பிடியை இறுக்கியது? தவிர பொருளாதார ரீதியாக இலங்கைத் தீவின் ஆடை உற்பத்திகளை அதிகம் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. இலங்கை தீவின் மொத்த ஆடை உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 விகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா அதை என் நிறுத்தவில்லை? அதுபோன்ற தடை நடவடிக்கைகளை எடுக்காமல் ஒரு சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரவேண்டாம் என்று தடை விதிப்பது வெறும் குறியீட்டு நடவடிக்கைதான். இது விடயத்தில் அமெரிக்கா கேட்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளுக்கு இலங்கை விட்டுக் கொடுக்குமாக இருந்தால் ஜோ பைடனின் அணுகுமுறை இலங்கைக்குப் பெரிய சோதனையாக அமையுமா? https://thinakkural.lk/article/89273#.X6_XNEbLRxA.whatsapp
 3. பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும் அவர்கள் முன்மதிப்பீடு தெரிவித்திருக்கிறார்கள். இலங்கையை சீனா கடன்பொறிக்குள் தள்ளிவிடுகிறது என்று பிரசாரங்களைச் செய்வதற்குப் பதிலாக இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு அமெரிக்கா வழிவகைகளை காணவேண்டும் என்று இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ யோசனை தெரிவித்திருந்தார். பைடன் நிர்வாகம் அந்த யோசனையை அக்கறையுடன் பரிசீலிக்கக்கூடும் என்று மூத்த அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான பி.கே.பாலச்சந்திரன் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் முதலீடுகள் வரவேற்கப்படக்கூடிய துறைகள் பற்றிய பட்டியல் ஒன்றை கோத்தபாயவும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பொம்பியோவிடம் கையளித்திருந்தனர். அமெரிக்காவை ஏனைய நாடுகளுக்கு நட்புபூர்வமானதாக்குவதற்கு பைடன் முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளின் ஒரு அங்கமாக ஜனநாயக நாடுகளை அரவணைத்து செல்வதில் அக்கறையுடையவராக பைடன் இருப்பதால், கோத்தபாயவுடம் தினேஷ் குணவர்தனவும் பொம்பியோவிடம் முன்வைத்த பட்டியலை அமெரிக்க புதிய நிர்வாகம் அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மீண்டும் அமெரிக்கா இணைந்துகொண்ட பிறகு மனித உரிமைகள் மற்றும் இனநல்லிணக்க விவகாரங்களில் பைடன் கொழும்புடன் கடுமையாக நடந்துகொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக இலங்கையில் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பாரம்பரியமாக மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இலங்கை தொடர்பில் ஒபாமா நிர்வாகம் முன்னர் அவ்வாறு நடந்துகொண்டது. அமெரிக்க துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸின் தாயார் ஒரு சென்னை தமிழப்பெண்மணி என்பதால், அவர் தமிழ்ப் பிரிவினைவாத இலட்சியத்துக்காகக் குரல்கொடுக்கக்கூடும் என்று சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் குறிப்பாக அச்சம் நிலவுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் கமலா ஹரிஸை அணுகுவதற்கு ஏற்கனவே நாட்டம் காட்டியிருக்கிறது என்று எச்.எல்.டி.மகிந்தபால நவம்பர் 8 சண்டே ஒப்சேர்வரில் எழுதியிருக்கிறார். ஆனால் பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பிதற்காக இனநல்லிணக்கப் பிரச்சினைகளை கையிலெடுப்பதில் அக்கறை காட்டக்கூடும் என்கிற அதேவேளை, இலங்கையில் அதன் செல்வாக்கை ஆழமாகப் பதித்துவிட்ட கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியல்லை. இந்து சமுத்திரத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான புவிசார் மூலோபாய தேவைக்கு இலங்கை அரசாங்கம் அவசியம் என்பதால் பைடன் நிர்வாகம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காலப்போக்கில் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கக்கூடும். மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கோதாபய அரசாங்கம் விரும்புகிற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் (எம்.சி.சி) உடன்படிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்த பைடன் இணங்கவும்கூடும் என்று பாலச்சந்திரன் கூறுகிறார். https://thinakkural.lk/article/87994#.X6qi9ph0f0g.whatsapp
 4. இவ்வளவு பேச்சுவன்மை இருக்கிறதே என்று வியப்பாக இருக்கிறது. விடுதலைப்புலிகளால் உருவாக்கம் பெற்றவர்கள்.
 5. கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம் கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன. 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன. கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் பெருந்தொiயானவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலையும் ஒன்றாகும். 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர். றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மேஜர் மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இம்மனித கடத்தலை செய்ததாக நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர். சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்து வந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் த.ஜெயசிங்கம், கலாநிதி வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான பேராசிரியர் த.ஜெயசிங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர் கே.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 83பேர் சாட்சியமளித்தனர். அங்கு வந்த இராணுவ அதிகாரிகள் தாம்மை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அகதி முகாமில் இருந்த அனைவரும் மைதானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிந்து நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர். இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் ஒவ்வொருவராக நிறுத்தப்பட்டனர். முகத்தை மூடி கட்டியிருந்தவர்கள் தலையை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர். இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார். இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் ஜெயசிங்கம் ஆகியோர் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 83பேர் சாட்சியமளித்தனர். அந்த அகதி முகாமில் இருந்த 45ஆயிரம் மக்கள் முன்னிலையிலேயே இந்த 158பேரும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நடந்த செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழின படுகொலை நாள் என பிரகடனப்படுத்தி வருடாவருடம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. https://www.tamilwin.com/articles/01/255211?ref=rightsidebar-article
 6. தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) தனது தேசிய பட்டியல் பதவிக்கு இரண்டு பேரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் குறித்து அந்த ஆங்கில ஊடகம் பேச்சாளரை கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேற்படி விடயத்தை தெரிவித்தார். அம்பாறையைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்ததோடு, அந்தப் பதவிக்கு இருவரை நியமிக்கும் முடிவும் அங்கு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முதல் இரண்டரை ஆண்டுகளாக கலையரசன் பதவியை வகிப்பார், அதன்பின்னர் மாவை சேனாதிராஜா அந்தப்பதவியை வகிப்பார். எனினும் வடக்கு மாகாண சபை தேர்தலில் மாவை போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றால் இந்த ஏற்பாடு மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.ibctamil.com/srilanka/80/149465?ref=home-imp-parsely
 7. கொஞ்சம் பிரச்சனைதான். கிழக்கு மக்களைக் கைவிடாமலிருக்க வேண்டும். தமிழ்த்தேசியம் குற்றச் சாட்டுகளுக்காக நிலைகுலையாமல் வளர்ந்து செல்லல் வேண்டும். இப்படி இணையும் தருணங்களில் கருணாவிற்கு ஆதரவு கொடுக்கும் பேரினவாதம் விலகும்.
 8. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இப்போது தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கிறது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கலையரசனின் பெயரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்த நிலையில் மாவை சேனாதிராஜாவுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், “இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினை, இதில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி முன்வைக்கப்படும் போது ஒரு அபிப்பிராயத்தையும் கூறியாக வேண்டும். ஒரு தமிழ் மாவட்டம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கும் போது அதற்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். என்றார். மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்து அதிலிருந்து விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கட்சி அரசியல் என்பது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றும் பயணத்திற்கு துணை புரியும் ஒரு சாதனம். அந்தச் சாதனத்தினால் நமது தேவையை அடைய முடியாதென நமக்குத் தெரியும் போது எம்மால் அப்பாதையில் பயணிக்க முடியாது. அப்படியாயின் மாற்று வழியொன்றைத் தேடவேண்டும். எந்த மக்கள் என்னைத் தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே நான் அதிலிருந்து விலகினேன். மக்கள் எத்தனை வருடங்களுக்கு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்வது? நன்றாகச் சிந்தித்தால் நான் தெரிவு செய்த பாதை சரியானது என்றார். https://www.ibctamil.com/srilanka/80/149188?ref=rightsidebar
 9. பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எமதுஆதரவு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/politics/01/253972?ref=ls_d_tamilwin
 10. செய்யப்பட வேண்டிய செயல். பிறந்தநாளுக்காக இல்லாவிட்டாலும் இவைபோன்றவை நல்லவையே.
 11. கடைசியாய் முடிவு வந்துவிட்டது. நெக்காலபோனவன் சொல்வது போலில்லை தற்போதய நிலை.
 12. பிழவுகளிருந்தாலும் இணைந்து செயற்படுதல் அவசியமானது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு மற்றவர்கள் வாருங்கள் கிழக்கின் தேவை கருதி இணைவோமென்றால் அதற்கு மதிப்பளிக்காவிட்டாலும் எதிர்ப்பது என்பது சரியான முடிவல்ல.
 13. உண்மை. அதேகாரணத்தினால்தான் பிள்ளையானின் வெற்றி இலகுவாகியுள்ளது.
 14. பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்து சலுகைகளைப் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அதுவே உரிமையாகத் தெரியும்.
 15. தமிழ்த் தேசியம் பேசுவதில்தான் பிரிவேற்படுகிறது. பேசுகின்ற தமிழ்த்தேசியம் மக்களுக்குப் புரிகின்றதா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.