• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மறுத்தான்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  141
 • Joined

 • Last visited

Everything posted by மறுத்தான்

 1. அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.
 2. ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். காசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.... நானும் உங்களில் ஒருவன் என்ற நேர்மையில் ! முகநூல் நண்பரிடம் சுட்டது (https://www.facebook.com/osaichella?fref=nf)
 3. நன்றி . ஆரம்பம் தான் கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. போக போக சரி வரும் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம். நீங்களும் புதியவர்தான். உங்களையும் யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
 4. நன்றி சுவி அண்ணா. தட்டி என்ன எப்ப திறக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 5. வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
 6. களத்தினை ஒரெயடியாக மூட முடிவு எடுத்துவிட்டீர்களா? .இல்லை எவ்வளவு தூரம் இவர்கள் போகப்போகிறார்கள் என்று விட்டுப்பார்த்து பிடிக்கப்போகிறீர்களா?.
 7. இதில் ஆரம்ப காட்சியை பாருங்கோ. இதில் 9வது நிமிடத்திலிருந்து பாருங்கோ.
 8. கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். நான் நினைத்தேன் கோகிலாம்பாலைத்தான் யாரோ போட்டுத்தள்ளிவிட்டாங்கள் என்று.ஆனால் இப்பொழுதுதான் முழு விபரமும் அறிந்தேன். நன்றி. ஆமா கடையிசில் கொலையாளிகளை தூக்கிலேற்றினார்களா இல்லையா?
 9. ஓ.. நள்ளிரவுக்குப்பின் நீங்கள் இங்கு நிற்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. நன்றி. வேலை முடிந்து வர பெரும்பாலும் 11மணியாகிவிடும் அதன் பின்புதான் மற்ற வீட்டு வேலைகளுக்கிடையில் இடைக்கிடை யாழினை பார்ப்பேன். உங்களுக்குத்தான் உந்த பிரச்சினையெல்லாம்.எனக்கில்லை ஏன்னா நான் ஒரு கட்ட/கட்டை பிரம்மச்சாரி.
 10. கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும். Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.
 11. எங்கே பார்த்தனீங்கள்?அதுக்குள்ளே எங்கேயோ கள்(ளு)ளமாய் இறக்கீட்டீங்கள் போல கிடக்கு.
 12. இங்கு வயது வித்தியாசத்திலும் பார்க்க ஒருவர் தவிச்ச முயல் அடிக்க நிக்கிறார் என்றதொரு ஆதங்கமே பலரிடம் உள்ளதாக நினைக்கிறேன்.
 13. வசம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
 14. முதலில் போட்டியில் வெற்றி பெற்ற கறுப்பி,இணையவன்,கந்தப்பு, அபிராம் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.அத்துடன் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய உறவுகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த போட்டி நடக்க காரணமாயிருந்த கரும்பு(முரளி)அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு போட்டி சிறப்பாக நடக்க உதவிய யாழ் நிர்வாகத்துக்கும்(எனக்கு தெரிந்து ஒரு போட்டிக்காக யாழின் முகப்பிலும் கருத்துக்களத்தின் ஒவ்வொரு பக்கதினிடையிலும் விளம்பரப்படுத்திய போட்டி இதுதான்)போட்டியில் வென்றவர்களுக்கு தமது சொந்த செலவில் பரிசினை வழங்கியவர்களுக்கும்(யாழ் களத்தில் ஒரு போட்டிக்காக பரிசு வழங்குவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்)நன்றி. போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் எனது நன்றி. எம்மவர் தயாரிப்பான 1999 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிவட்டு எனக்கு கிடைக்கப்பெற்றது.மீண்டும் நன்றி அரவிந்தன். இன்னொரு விளையாட்டு சம்பந்தமான ஒரு போட்டி யாழில் நடந்தால் அதிலும் சந்திப்போம்.வணக்கம்
 15. 12)நியூசிலாந்து - சொலவாக்கியா சொலவாக்கியா 13)ஐவரி கோஸ்ட் - போத்துக்கல் போத்துக்கல் 14)பிறேசில் - வட கொரியா பிறேசில் 15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி சிலி 16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து ஸ்பெயின் 17)தென்னாபிரிக்கா - உருகுவே உருகுவே 18)பிரான்சு - மெக்சிக்கோ பிரான்சு 19)கிறிசு - நையிரியா நையிரியா 20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா ஆர்ஜென்ரினா 21)ஜேர்மனி - சேர்பியா ஜேர்மனி 22)சொலவேனியா - அமெரிக்கா அமெரிக்கா 23)இங்கிலாந்து - அல்ஜீரியா இங்கிலாந்து 24)கானா -அவுஸ்திரெலியா கானா 25)நெதர்லாந்து -ஐப்பான் நெதர்லாந்து 26)கமரூன் - டென்மார்க் வெற்றி தோல்வியில்லை 27)சொலவாக்கியா - பரகுவே பரகுவே 28)இத்தாலி - நியூசிலாந்து இத்தாலி 29)பிறேசில் -ஐவரிகோஸ்ட் பிறேசில் 30)போத்துக்கல் -வடகொரியா போத்துக்கல் 31)சிலி - சுவிற்சலாந்து சுவிற்சலாந்து 32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras) ஸ்பெயின் 33)மெக்சிக்கோ - உருகுவே மெக்சிக்கோ 34)பிரான்சு - தென்னாபிரிக்கா பிரான்சு 35)நையிரியா -தென்கொரியா தென்கொரியா 36)கிறிசு -ஆர்ஜென்ரினா ஆர்ஜென்ரினா 37)சொலவேனியா - இங்கிலாந்து இங்கிலாந்து 38)அமெரிக்கா -அல்ஜீரியா அமெரிக்கா 39)கானா -ஜேர்மனி ஜேர்மனி 40)அவுஸ்திரெலியா - சேர்பியா சேர்பியா 41)சொலவாக்கியா -இத்தாலி இத்தாலி 42)பரகுவே - நியூசிலாந்து பரகுவே 43)டென்மார்க் - ஐப்பான் ஐப்பான் 44)கமரூன் - நெதர்லாந்து நெதர்லாந்து 45)போத்துக்கல் - பிறேசில் போத்துக்கல் 46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட் ஐவரிகோஸ்ட் 47)சிலி - ஸ்பெயின் ஸ்பெயின் 48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras) சுவிற்சலாந்து 49) பிரான்சு 50) ஆர்ஜன்ரினா 51) இங்கிலாந்து 52) ஜேர்மனி 53) நெதர்லாந்து 54) இத்தாலி 55) போத்துக்கல் 56) ஸ்பெயின் 57) பிரான்சு ***ஆர்ஜன்ரினா ***இங்கிலாந்து ***ஜேர்மனி ***நெதர்லாந்து ***இத்தாலி ***போத்துக்கல் ***ஸ்பெயின் ***மெக்சிக்கோ ***தென்கொரியா ***அமெரிக்கா ***கானா ***ஐப்பான் ***பரகுவே ***பிறேசில் ***சுவிற்சலாந்து 58) பிரான்சு ***ஆர்ஜன்ரினா ***இங்கிலாந்து ***ஜேர்மனி ***நெதர்லாந்து ***இத்தாலி ***போத்துக்கல் ***ஸ்பெயின் 59) இங்கிலாந்து ***இத்தாலி ***போத்துக்கல் ***ஸ்பெயின் 60) இங்கிலாந்து ***ஸ்பெயின் 61) ஸ்பெயின்
 16. தெருவோரமாக உள்ள புதிய கட்டிடம் இருந்த இடம் பிரசித்தமானது.அதில் இருந்த பழைய கட்டிடத்தின் மீதுதான் கரும்புலி கப்டன் மில்லரினால் கரும்புலித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
 17. GTVயில் வரும் அறிவித்தலானது புதியதோர் தொலைக்காட்சிக்கானது அல்ல.GTVதான் புதிய அலை வரிசையில் தரிசனம் என்ற பழைய பெயரிலேயே ஒளிபரப்பப்போகிறார்கள்.
 18. இங்கு பார்க்கலாம். www.euro2008.com http://www.euro2008.uefa.com/index.html
 19. மன்னிக்கவும் அரவிந்தன். நான் பதில் அளிக்கும் போது 7ம் திகதியாகிவிட்டது.ஆனால் போட்டிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.உங்கள் தீர்ப்பே இறுதியானது.நன்றி.
 20. பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?. 1) சுவிற்சலாந்து 2) போத்துக்கல் 3) குரோசியா 4)வெற்றி தோல்வியில்லை 5)பிரான்சு 6)வெற்றி தோல்வியில்லை 7)வெற்றி தோல்வியில்லை 8) சுவீடன் 9) போத்துக்கல் 10)சுவிற்சலாந்து 11)வெற்றி தோல்வியில்லை 12) போலாந்து 13)இத்தாலி 14)நெதர்லாந்து 15)ஸ்பெயின் 16)ரஸ்யா 17)வெற்றி தோல்வியில்லை 18)துருக்கி 19)குரோசியா 20)ஜேர்மனி 21)நெதர்லாந்து 22)இத்தாலி 23)ஸ்பெயிந் 24)சுவீடன் 25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? 1 போத்துக்கல் 2 இத்தாலி 3 ஜேர்மனி 4 நெதர்லாந்து 5 ஸ்பெயின் 6 குரோசியா 7 சுவிற்சலாந்து 8 சுவீடன் 26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை? 1 போத்துக்கல் 2 இத்தாலி 3 ஜேர்மனி 4 நெதர்லாந்து 27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை? போத்துக்கல் Vs இத்தாலி 28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது? இத்தாலி
 21. உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி) பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது? 1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா? தென்னாபிரிக்கா. 2) நியூசிலாந்து -கென்யா ? நியூசிலாந்து. 3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் ? பாகிஸ்தான் . 4) அவுஸ்திரெலியா - சிம்பாவே ? அவுஸ்திரெலியா . 5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்? மேற்கிந்திய தீவுகள். 6) இங்கிலாந்து - சிம்பாவே ? இங்கிலாந்து. 7) இந்தியா -ஸ்கொட்லன்ட் ? இந்தியா. 8) இலங்கை - கென்யா? இந்தியா. 9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து ? அவுஸ்திரெலியா . 10)இந்தியா -பாகிஸ்தான் ? பாகிஸ்தான். 11) நியூசிலாந்து -இலங்கை ? நியூசிலாந்து. 12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் ? தென்னாபிரிக்கா. 13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள். அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது? 14) அவுஸ்திரெலியா - இந்தியா? அவுஸ்திரெலியா. 15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் ? பாகிஸ்தான். 16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள்? அவுஸ்திரெலியா. 17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா? தென்னாபிரிக்கா. 18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து? நீயூசிலாந்து. 19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம்? அவுஸ்திரெலியா. 20) தென்னாபிரிக்கா- இலங்கை? தென்னாபிரிக்கா. 21) தென்னாபிரிக்கா - இந்தியா? தென்னாபிரிக்கா. 22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான்? பாகிஸ்தான். 23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து? தென்னாபிரிக்கா. 24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து? நீயூசிலாந்து 25) இலங்கை - பாகிஸ்தான்? பாகிஸ்தான். 26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள்? இலங்கை . 27) இலங்கை - இங்கிலாந்து? இலங்கை. 28) இலங்கை - இந்தியா? இலங்கை. 29) இலங்கை - பங்காளதேசம்? இலங்கை. 30) இந்தியா - பங்காளதேசம்? இந்தியா. 31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள்? மேற்கிந்தியாத்தீவுகள். 32) இந்தியா - இங்கிலாந்து? இந்தியா. 33) இந்தியா - நியூசிலாந்து? நியூசிலாந்து. 34) பாகிஸ்தான் - இங்கிலாந்து? பாகிஸ்தான் . 35) பாகிஸ்தான் - நியூசிலாந்து? பாகிஸ்தான். 36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள்? பாகிஸ்தான். 37) பாகிஸ்தான் - பங்காளதேசம்? பாகிஸ்தான். 38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து? இங்கிலாந்து. 39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து? நியூசிலாந்து. 40)இங்கிலாந்து - நியூசிலாந்து? நியூசிலாந்து. 41அ)இங்கிலாந்து - பங்காளதேசம்? இங்கிலாந்து. 41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம்? )நியூசிலாந்து . 42) அவுஸ்திரெலியா - இலங்கை? இலங்கை. 43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை? பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா. 44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை? பாகிஸ்தான், தென்னாபிரிக்கா. 45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) பாகிஸ்தான். 46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? பாகிஸ்தான். 47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா. 48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? பாகிஸ்தான். 49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? இலங்கை. 50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? அவுஸ்திரெலியா. 51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது? தென்னாபிரிக்கா. 52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? பங்காளதேசம்.
 22. தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை! மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம். தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம். ‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது. சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘அமைதிப்படை’னு விரல் விட்டு எண் ணக்கூடிய அளவுல ரொம்ப ஏழையா இருக்கேன். வயசானாலும் இங்கே வண்டியோட்ட லொள்ளு ஜொள்ளுனு சில அயிட்டங்கள் இருக்கு. ஆனா அதெல்லாம் நிக்குமா? ‘பெரியார்’ ஓர் ஆத்மார்த்தமான கனவு. அது நிறை வேறினதுதான் இப்ப மாதவ படை யாட்சியா என்னைக் கோவணம் கட்ட வெச்சிருக்கு!’’& மலர்ந்து சிரிக்கிறார் சத்யராஜ். ‘‘அட கெரகம்! இங்க நெஜமான மனுசங்களைத் தரிசிக்கிறது ரொம்பக் கஷ்டம். மனிதம், புனிதம்னு மைக்ல பேசிட்டுப் போயிடலாம். எத்தனை பேர் அப்படி நிஜமா வாழ்றான்? அப்படி சத்தியமா வாழ்ந்த மனுசன் மாதவ படையாட்சி. பட்டி ஆடுக கத்துனாலே உசிரு உடைஞ்சு போற மனுசன். காத்து எப்போ வீசும், மேகம் எப்போ கறுக்கும், எந்தப் பொழுதுல மழை வரும், எப்போ பருத்தி வெடிக்கும்னு பருவம் பூராத்தையும் உள்ளங் கையில் வெச்சிருப்பாரு. உறவுகளுக்காகவே உசிரு வளர்க்கிற ஆளு. தான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா செத்தே போவாரு. நீங்களும் நானும் ஜென்மத்துக்கும் அப்படி இருக்க முடியாது. நானாச்சும் மாதவப் படையாட்சியா நடிச்சு என்னோட ஏக்கத்தைத் தீத்துக் கிறேன். நீங்க படத்தைப் பார்த்துத் தீத்துக்க வேண்டியதுதான்!’’ &எதிர்க்காற்றில் அலைபாய்கிற தோள் துண்டைச் சரிசெய்கிறார். ‘‘தைரியமா நல்ல சினிமாவை பத்திப் பேசுற மனிதரா சத்யராஜ் மாறினது எப்போ?’’ ‘‘மனுஷன்னா, நல்லதுக்கு மாற வேண்டியதுதானே! இதில் கோவணம் கட்டிக்கிட்டு நடிக்கணும்னு தங்கர் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். நான் முதல்ல ரொம்ப யோசிச்சேன். ஆனா, கதையும் தங்கர் தன் உயிரைக் கொடுத்து அதைப் பதிவு செய்யுற விதத்தையும் பார்த்த பின்னாடி, நான் கோவணம் கட்டி நடிக்கிறதுதான் நியாயம்னு பட்டது. சர்வதேசத் தரம்னு சொல்றோம் இல்லையா, அப்படி ஒரு முயற்சிதான் இந்தப் படம். லொள்ளு, ஜொள்ளு படங்களாப் பண்றப்போ, என்னை கமல் சார் எங்கே பார்த்தாலும், ‘‘என்ன சார்? இந்த மாதிரியெல்லாம் நடிச்சுட்டு இருக்கீங்களே, உங்களை என்ன மாதிரி இடத்தில் நினைச்சு வெச்சிருக்கேன் தெரியுமா?’’னு வருத்தமா விசாரிப்பார். கமல் சார் மனசில் இருக்கிற மனுஷனா, நடிகனா எனக்குக் கிடைச்ச படம் இது!’’ ‘‘தங்கர் இயக்கத்தில் நடிப்பது எப்படி இருக்கு?’’ ‘‘நமக்கு அவுட்டோர் ஷ¨ட்டிங்னா பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி, கொடைக்கானல்னு போய்த்தான் பழக்கம். இப்படியரு திசை இருக்குன்னே ரொம்பப் பேர் அறியாமல் இருக்காங்க. முந்திரியும் பலாவும் மணக்கிற இந்தப் பூமியின் சரித்திரம் முதன்முதலாகப் பதிவாகிற சந்தோஷம் தங்கருக்கு. அதுக்கு உதவுறேன்கிற பூரிப்பு எனக்கு. படம் பார்த்தால், ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த நிம்மதி உங்களுக்குக் கிடைக்கும்.’’ ‘‘இந்த மாதிரி தேடல் இன்றைய இளம் நடிகர்களுக்கும் வரணுமில்லையா?’’ ‘‘ஏன் அவசரப்படணும்? எனக்கே இப்போதானே புத்தி வந்திருக்கு. அடடா, சினிமாவில் காசு பார்த்தோமே தவிர, வேற என்னடா பண்ணியிருக்கோம்னு பதறிப்போய் மாறின விஷயம்தானே இதெல்லாம்! விஜய் ‘போக்கிரி’ மாதிரி இருந்தால்தான் நல்லது. ‘பிதாமகன்’ விக்ரமுக்குதான் சரியா இருக்கும். நமக்கு ‘சிவாஜி’, ‘போக்கிரி’யும் வேணும்... ‘மொழி’, ‘பருத்தி வீரன்’களும் வேணும். நானும் அவங்க வயசில் கிளைகிளையாத் தாவிக்கிட்டேதான் இருந்தேன். இப்போதானே வானத்தைத் தேர்ந்தெடுத்திருக்கேன். பறக்கிற நேரம்தான் பறவைக்கு அழகு!’’ ‘‘நீங்க சீனியர். இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் ரொம்ப நம்பிக்கையா யார் இருக்காங்க?’’ ‘‘நிறையப் பேர் இருக்காங்க. ‘வரலாறு’ அஜீத், ‘பிதாமகன்’ விக்ரம், ‘கஜினி’ சூர்யா, ‘பருத்திவீரன்’ கார்த்தின்னு ஆளாளுக்குப் பிரமாதமா வெளிப்படுறாங்க. பரத்துக்கு சின்ன வயசு... ஆனாலும் ‘நேபாளி’ மாதிரி கேரக்டர் பண்றேன்னு வேஷப் பொருத்தத்தில் நிற்கிறார். ஆனால், தலைசிறந்த நடிகர்னு யாரையும் சொல்லத் தோணலை. ஏன்னா, சிவாஜி இருந்த காலத்திலேயே எம்.ஆர்.ராதா, ரங்காராவ்னு சரிக்குச் சரியா நிறையப் பேர் இருந்தாங்க. சொல்லப்போனா, சிவாஜிக்கே பிடிச்ச நடிகர் எம்.ஆர்.ராதாதான். ஆனால், யார் சூப்பர் ஸ்டார் மாதிரி வருவாங்கன்னு கேளுங்க... சொல்றேன். சிவாஜி இருந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்.தான். இப்ப சூப்பர் ஸ்டாரா ரஜினி இருக்கிற காலத்திலும், கமர்ஷியல் சூப்பர் ஸ்டார்னா விஜய்தான்... இதுதான் சாதனை!’’ ‘‘தமிழ் சினிமா இன்னும் மெருகேற உங்கள் யோசனைகள் என்ன?’’ ‘‘முதலில் காதலை விட்டுத் தொலைக்கணும் சார். காதல், டூயட்னு சுத்திட்டே இருப்பதால் தான் எத்தனையோ நல்ல கதைகள் இன்னும் சினிமாவில் சொல்ல வழியில்லாமல் இருக்கு. ‘வெயில்’ல வசந்தபாலன்கூட காதலைத்தான் சொன்னார்... ஆனா, அதில் நாம் தரிசிக்காத உலகம் இருந்ததா இல்லையா? ‘மொழி’யைப் பார்த்துட்டு எல்லார் கிட்டேயும் நாம இன்னும் கொஞ்சம் அன்பா இருக்கணும்னு தோணுச்சு. ‘பருத்திவீரன்’ காட்டினது நம்ம உலகம். இன்னும் அப்படியரு வன்முறையும் மூர்க்கமும் இருந்துகிட்டேதானே இருக்கு! தங்கர் ‘அழகி’யில் கொண்டுவந்தது எவ்வளவு அழகான காதல். இப்படி நான் சொல்லும்போதே ‘சிவாஜி’யும் வேணும்னுதான் சொல்றேன். இன்னிக்கு லண்டனில் டாப்டென் வரிசையில் ‘சிவாஜி’யும் இருக்குன்னா, அது பெருமை தான்!’’ ‘‘இன்னும் கனவில் இருக்கிற கேரக்டர் என்ன?’’ ‘‘ எப்பவும் இருந்த கனவு ‘பெரியார்’! மனதில் இருக்கிறதை உடனே சொல்லிடணும். ஆறப்போட்டால் அதை வேற ஆள் தன்னோட கனவா வெளிப் படுத்துவாங்க. ‘பெரியார்’ ஷ¨ட்டிங்கில் நிழல்கள் ரவியும் சந்திரசேகரும், ‘டேய், உன் முகம் அப்படியே ஆன்டன் பாலசிங்கம் மாதிரி இருக்கு’ன்னு சொன்னாங்க. எனக்குச் சந்தோஷமா இருந்தது. மாபெரும் விடுதலை இயக்கத்தின் தூண் பாலசிங்கம். ஈழ மக்கள் அவரை மாபெரும் மனிதனராகக் கொண்டாடுகிற மாதிரி நானும் மதிக்கிறேன். பாலசிங்கத்தின் மனைவி அடேல் எழுதிய வாழ்க்கைக் கதையைப் பின் பற்றி யாராவது படம் தயாரிக்க முன் வந்தால், ஒரு பைசாகூட வாங்காமல் நடிக்கத் தயாரா இருக்கேன். என்னுடைய இந்த இரண்டாவது கனவும் நிறைவேறும்!’’ நன்றி விகடன்
 23. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்படுத்தி எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்யும் உளவியல் வித்தையை கையாளத் துவங்கினார். இன்று வரை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் எவ்வித மாற்றமும் இன்றி அதனை நன்றாக கடைபிடித்து வருகின்றனர். பலமுறை இதுபற்றி புகார் தெரிவித்தும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் அதனை பொருட்படுத்தவில்லை. வென்றால் போதும்... அதற்கு வசைபாடல் உட்பட எல்லாமே வழிதான் என்பது ஆஸ்ட்ரேலிய அணியின் அறிவிக்கப்படாத நிலைப்பாடு. இது போன்ற போக்கை தற்போது இங்கிலாந்து வீரர்கள் முழு மூச்சுடன் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் தினேஷ் கார்த்திக் மீது இங்கிலாந்து புதுமுக விக்கெட் கீப்பர் மாட்ஸ் பிரையர் உள்ளிட்ட சிலர் வசைபாடி அவருடைய கவனத்தை சிதறடிக்க முயன்றுள்ளனர். அதேபோல் இந்திய இன்னிங்சின் இறுதிக் கட்டத்தில் ஜாகீர் கான் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் மட்டையின் விளிம்பில் பட்டு ஒரு பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அந்த ஷாட்டை வர்ணித்து கெட்டவார்த்தையால் இங்கிலாந்து வீரர் ஒருவர் வசைபாடியது ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள மைக்கின் வழியாக வர்ணனையாளர்களின் காதில் விழுந்துள்ளது. ஜாஹீர் களமிறங்கியுடன் அவர் நிற்கும் இடத்தில் ஜெல்லி பீன் என்ற ஒரு தின்பண்டத்தை போட்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். ஒரு முறை அதனை வெளியே தள்ளிவிட்டு மீண்டும் பார்க்கும்போது அந்த இடத்தில் மீண்டும் ஜெல்லி பீன் போடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜாஹீ கான் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தான் அவ்வாறு செய்ததை அறிந்து அவரை அச்சுறுத்தும் விதமாக தனது மட்டையைக் காண்பித்தார். அதன்பிறகு, கேப்டன் மைக்கேல் வான் மற்றும் நடுவர்கள் தலையிட எல்லாம் ஒரு நகைச்சுவைக்காகத்தான் என்பது போல சித்தரிக்கப்பட்டது. இன்னொரு மோசமான சம்பவம் என்னவெனில் தினேஷ் கார்த்திக் களமிறங்கியபோது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மாட்ஸ் பிரையர் தோனியை குறிப்பிட்டு அவர் இறங்கியிருக்கவேண்டும் என்பது போல் கூறி கார்த்திக்-தோனி இடையே நிலவி வரும் ஒரு ஆரோக்கியமான போட்டியை பொறாமை உணர்வாக மாற்ற முயலும் தேவையற்ற வேலையையும் செய்துள்ளார். எதிரணி வீரரைப் பார்த்து நகைச்சுவையாக கருத்து கூறுவது என்பது கிரிக்கெட் விளையாட்டில் சகஜமாக நிலவிவரும் ஒன்றுதான். கிரிக்கெட்டின் தந்தை போன்று கருதப்படும் டபிள்யூ.ஜி. கிரேஸ் ஒரு முறை இந்திய அணியுடன் விளையாடும்போது ஆட்டமிழந்தார், ஆனால் அவர் பெவிலியன் திரும்பிச்செல்ல மறுத்தார்... அதற்கு அவர் கூறிய காரணம் நான் பேட் செய்வதை மக்கள் பார்க்க வந்திருக்கிறார்க்ள்... நீங்கள் பந்து வீசுவதையல்ல என்றாராம்... இது போன்ற பல நகைச்சுவை உரையாடல்கள் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ஒரு வீரரை அவரது கவனத்தை திசை திருப்புவதற்காக சில சேட்டைகளை எதிரணி வீரர்கள் செய்வதுண்டு. ஒரு முறை சவுரவ் கங்குலி ஷேண் வார்ன் பந்து வீச்சை நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். கங்குலி நன்றாக ஆடத் துவங்கினால் எதிர்முனையில் இருக்கும் சச்சினின் ஆட்டமும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை படுகுழிக்குள் தள்ளிவிடும் என்று உணர்ந்த ஷேன் வார்ன் கங்குலியை நோக்கி உன்னுடைய அறுவையை பார்க்க இங்குள்ள ரசிகர்கள் வரவில்லை... எதிர்முனையில் இருக்கும் சச்சினின் ஆட்டத்தை பார்க்க வந்திருக்கின்றனர்... என்று கூற ஆத்திரமடைந்த கங்குலி அடுத்த ஓவரிலேயே ஷேன் வார்னை இறங்கி வந்து அடிக்க முயன்று போல்ட் ஆனார்... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் இது போன்ற கவன சிதறடிப்புகளுக்கு பதில் கூறாமல் கவனத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டு ஆடி மீண்டு வந்தவர்கள் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களாகவும் ஆகியுள்ளனர். கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் முதல் பிரைன்லாரா, சச்சின், டிராவிட் ரிச்ச்ர்ட்ச் அனைவரும் இப்பாதையை கடந்தே வந்துள்ளனர். ஆனால் இந்த வரம்பு மீறும்போது பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஒரு முறை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி இந்த வரம்பை மீறி பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டடை நோக்கி வசைபாட, கோபமுற்ற மியான்தத் லில்லியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறும் போது இந்த வசைபாடல் எல்லை மீறுவது இல்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் கறுப்பரின வீரர்கள், ஆசிய வீரர்கள் மீது இந்த வசை பயன்படுத்தப்படும்போது அது நிற வெறி வசையாகவோ நாட்டையும், ஒருவரது பிறப்பையும் இழிவு செய்யும் விதமாக போகிறது என்பதுதான் நிஜம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், உதாரணமாக இலங்கை வீரர்களை கறுப்புப் பன்றிகள் என்று ஆஸ்திரேலிய வீரர் டேரன் லீ மேன் ஒரு முறை வர்ணித்தது. முரளிதரனின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் திணறும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திய வசை மொழிகள் ஏராளம். பாகிஸ்தான் வீரர்களை பயங்கரவாதிகள் என்று மைதானத்திலேயே பேசியது போன்ற மோசமான முன் உதாரணங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை ஒரு பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை. இது குறித்து வெள்ளைய கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டால் மிகச் சுலபமாக "நாங்கள் கிரிக்கெட்டை கடினமாக ஆடுகிறோம்... எங்கள் போராட்ட குணம் இது போன்று வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது... இதையெல்லாம் கட்டுப்படுத்தினால் ஆட்டம் சுவை இழந்துவிடும்..." என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள். ஜாகீர் கான் விவகாரத்திலும் இதுதான் நடந்தது, ஜெல்லி பீன் என்ற வழுக்கும் தின் பண்டத்தை போடலாமா என்று இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டிடம் கேட்டதற்கு, எந்தவிதமான தார்மீக பொறுப்பும் இல்லாமல் அவர் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது... காலிங்வுட் கூறியது இதுதான்: ஜாகீர் கானுக்கு ஊதா நிற ஜெல்லி பீன் பிடிக்காது போலும்... தெரிந்திருந்தால் நீல நிற பீன்களை போட்டிருப்போம் என்று நக்கலாக கூறியுள்ளார்... கடைசியில் என்ன ஆனது?... இந்த ஜெல்லி பீன் விவகாரம் ஜாகீர் கானை உசுப்பிவிட்டது. இங்கிலாந்து வீரர்களை அவர் 2வது இன்னிங்சில் மண்ணைக்கவ்வ வைத்து இந்தியாவின் வெற்றிக்கே அது வித்திட்டுள்ளது. வெற்றி பெறுவதற்காக செய்கிறோம், தமாஷ¤க்கு செய்கிறோம்... கிரிக்கெட்டை கடினமாக ஆடுகிறோம்... என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வெள்ளைய கிரிக்கெட் உலகம் இதனால் தழுவும் தோல்வியையும் "தமாஷாக" எடுத்துக் கொள்ளுமா? மூலம். வெப்துனியா