• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வல்வை லிங்கம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,660
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by வல்வை லிங்கம்

 1. உங்களது சில பதிவுகளை சென்று பார்வையிட்டேன் (யாழில் அல்ல) ம் சிறந்த படைப்பாளி என்பதை ஏற்றுக்கொண்டே ஆகனும்.
 2. உங்க கேள்விகளைப் பார்த்தாலே நீங்களும் ஒரு சகலகலா வல்லி(வல்லன்) போல் தான் தெரிகிறது. நல்வரவாகட்டும்.
 3. நான் தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்கும் நண்பர்களில் முக்கியமானவர் முரளியாகும் ஆதலால் அவர் தனது தாய் தந்தையுடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்றும், இன்று தந்தையை இழந்த அவரது உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவரது தந்தையின் இழப்பு பற்றிய செய்தியை அவர்மூலமாகவே தொலைபேசியில் கேட்டபோது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற வார்த்தையுடன் அனுதாபம் தெரிவிப்பது இலகுவாகும் ஆனால் அனுபவரீதியாக அதை சந்திக்கும்போது மனம் ஏற்றுக் கொள்வதில்லை அதுதான் பாசத்தின் வெளிப்பாடு. முரளி தனது தந்தையை இழந்து தனது தாயாருடன் தனிமையில் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலமையில் இருப்பதாக தோன்றுகின்றது. அவரது உறவினர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதால் வந்துசேர்வதிற்கு தாமதமாகிறது போலுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் முரளிக்கும், தாயாருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன். ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.! ஓம் சாந்தி!!!
 4. இரண்டாவது படத்தில்(இறுதிக்கிரியை) ஈழவனின் தாய், தகப்பன்
 5. அமரர் இளங்கோவின் உடல் ஊருக்கு கொண்டுசெல்லும் நிலையில் இல்லாத காரனத்தினால் நாளை அதாவது 3ந்திகதி புதன்கிழமை சிங்கப்பூரில் இறுதிச் சடங்குகள் இந்துசமய முறையில் இடம்பெற்று தகனஞ் செய்யப்படவுள்ளதாக இன்று அறியத் தரப்பட்டுள்ளது.
 6. "ஆழ்ந்த அனுதாபங்கள்" என்ற வார்த்தை இலகுவில் கூறலாம், இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரையில் யாருக்கு கூறுவது? இரண்டுமாதக் குழந்தையுடன் தனிமையாக்கப்பட்ட மனைவியிற்கு கூறுவதா அல்லது பெற்றதாய் தகப்பனுக்கு கூறுவதா, இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது இருப்பினும் இந்த வயதிலா? நான் கிட்டத்தட்ட 5வருடங்களாக யாழ் கருத்துக்கள உறுப்பினராக இருக்கின்றேன், "எனது ஊர் இலக்கணாவத்தை" என்ற தலைப்பில் நான் பிறந்த ஊரான "இலக்கணாவத்தை" பற்றி நீண்ட ஒரு "பதிவு" படங்களுடன் இணைத்திருந்தேன் அந்தவேளை கூட இவரும் எனது ஊரைச்சேர்ந்தவர் அல்லது எனது குடும்ப உறவு என்றோ நான் அறிந்திருக்கவில்லை. தற்சமயம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அன்னாரது பூதவுடல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுவோமாக... ஓம்சாந்தி! https://www.facebook.com/groups/mainthan/
 7. கனடிய பிரபல்ய தமிழ் வானொலியான "101.3 CMR Tamil Fm" வானொலியில் இன்று அதாவது 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு, சுப்பர்சிங்கர் போட்டியாளர் கனடாகுயில் "மகிஷா" வை கௌரவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் "மகிஷா" தனது ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் வானொலி நேயர்கள் போன்றோரின் கேள்விகளிற்கு வானலையில் நேரடியாக பதிலளிக்கும் வகையில் CMR வானொலி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. இது பாராட்டப் படவேண்டிய, முன்னுதாரனமான செயலாகவே பார்க்க முடிகின்றது. CMR வானொலி நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். "மகிஷா" நேயர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு தனது சிறுமி என்ற நிலையை தாண்டி மிகவும் நிதானத்துடன் பதில்களை வழங்கியிருந்தது அவரது தூரநோக்கு இலகுவாக புரியக்கூடியதாக இருந்தது. இந்த நிகழ்வின்போது சில பாடல்களை பாடியதுடன் தனது எதிர்கால திட்டம் அல்லது ஆசைகள் பற்றியும் வெளிப் படுத்தியிருந்தார். நிகழ்வின் இறுதியில் தனது இந்த முயற்சியிற்கு ஆதரவாக இருந்த, காரனமாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். "மகிஷா" இசையில் மட்டுமன்றி சகல துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டி தமிழினத்திற்கு பெருமை தேடித் தரவேண்டுமென வாழ்த்துவோமா.
 8. உண்மையில் நான் விரும்பிப் பார்க்கும், ரசிக்கும் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சி மட்டும்தான். இதற்கு முதல்தடவையும் சில ஈழத்தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தது அறிந்ததே. நான் தெளிவுபடுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் "மகிஷா"வை வெளியேற்றும் அளவிற்கு இந்த தடவை சரியான முறையில் நடுவர்கள் நடுநிலை வகிக்கவில்லை என்பது தான் எனது கருத்தாகும். மற்றும்படி நடுவர்களில் எனக்கு எந்தவிதமான தப்பான அபிப்பிராயமும் கிடையாது. இதில் நான் எந்தவிதமான பாகுபாடும் நினைப்பதில்லை, இன்னும் வெளிப்படையாக கூறப்போனால் இதுவரை இடம்பெற்ற "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களில் எனது மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர்கள் "நித்தியசிறி" "சிறிநிஷா" "பிரியங்கா" போன்றவர்கள் தான்.
 9. வாழ்த்துவோம் நலமுடன், வளமுடன் வாழ்வோம்.... உனது வாழ்வின் ஒரு பகுதியை மற்றவர்களை வாழ்த்துவதிற்காக ஒதுக்கிக்கொள், மற்றவர்கள் உன்னை வாழ்த்தும்போது உனது வாழ்க்கை செழிப்படையும். ____ மற்றவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நீ வாழ்த்தாதே. _____ மற்றவர்கள் வாழ்த்தும் வரை காத்திருக்காதே வாழ்த்தவேணும் என்ற நல்ல மனம் இருந்தால் மட்டும் வாழ்த்து. _____ வாழ்த்துக்களிலும் முகம் பாராதே, இனம் பாராதே, சொந்தம் பாராதே அதாவது பாகுபாடு காட்டாதே.. ___ இப்போதாவது புரிந்திருக்கும் இல்லையெனில் உனக்கு அந்த ஆறாவது அறிவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே தெளிவாக்கும்...
 10. "Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் நான் கூறவருவது என்னவென்றால் இவர்களால் நடாத்தப்படும் இதைப்போன்ற போட்டி நிகழ்வுகள் இவர்களால் முற்கூட்டியே தங்களிற்கு இசைவாக திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையிலையே நகர்த்துகின்றார்கள் போலத் தெரிகின்றது. இதைப்போன்ற பிரபல்யமான ஊடகங்கள் இப்படியான சில கீழ்தரமான நடவடிக்கையினால் தங்களது தரத்தை தாங்களே பின்னகர்த்துவதாக கருத முடிகின்றது.
 11. எனது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளிற்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கின்றேன்.
 12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....
 13. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....
 14. அட நம்ம சின்னவன், வாங்கோ..வாங்கோ.
 15. எனது தாய் வீடான யாழிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
 16. இருமனமும் ஒருமனமாய் இணைந்துகொண்ட திரு&திருமதி ஜீவா அவர்கள் மனம்போல் இன்புற்று வாழ உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!
 17. ______ யாழ் தொடர்ந்து இயங்கும் என்ற செய்திக்கு நன்றி, வாழ்த்துக்கள்! .... சிவப்பு கலரினால் அடையாளப்படுத்திய அந்த(உதாரனம்) வசனம் தேவையா???
 18. சகோதரன் மோகன் உட்பட அனைத்து உறவுகளிற்கும் இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கவிருக்கும் ஆங்கில புத்தாண்டு 2012 இனியதாக அமைய வாழ்த்துக்கள். _____ நிலாமதி அக்கா சொன்ன கருத்தே எனதும். இது எங்களது இளைப்பாறும் மடம் அல்லது தளம் என்றும் சொல்லாம். இந்த வீட்டின் உரிமையாளர் எடுக்கும் நல்ல வேலைத் திட்டங்களிற்கு என்னால் இயன்ற பங்களிப்பையும் செய்ய விரும்புகின்றேன். இதில் செயல்படும் அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்கள்.
 19. வரிக்கு வரி உங்களது சோகம், தவிப்பு, இயலாமை போன்றவற்றை வெளிப் படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!