Innumoruvan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  790
 • Joined

 • Last visited

 • Days Won

  14

Innumoruvan last won the day on October 4 2015

Innumoruvan had the most liked content!

Community Reputation

648 பிரகாசம்

About Innumoruvan

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Recent Profile Visitors

2,825 profile views
 1. எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். ஒரு சிறு உதாரணம். ஒரு ஒலியினை நாம் கேட்கவேண்டுமாயின், கேட்பவர், அதிர்வது, அதிர்வைக் கடத்தும் காற்றுவெளி என்ற மூன்று இருந்தால் மட்டுமே சாத்தியம். பூரணமான ஒன்று என்று ஒன்று இருந்தால், அங்கு கேட்பவர் மற்றும் கேட்கப்படுவது என்ற பிரிவு சாத்தியமில்லை. ஏனெனில் கேட்கப்படுவது என்பது கேட்பவரிற்குப் புறம்பான ஒன்றாக இருப்பின், கேட்பவர் பூரணமானதாய் இருக்க முடியாது. பூரணம் என்பது தனக்கு அப்பால் ஏதும் இல்லை என்பது. அப்படிப் பார்க்கையில், பூரணத்துவத்தில் அமைதி (silence) மட்டுமே சாத்தியம். அமைதி, சூனியம் என்று தப்பாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியது. சூனியம் என்று ஒன்று இருக்கவேண்டுமாயின் அங்கு சூனியம் கூட இருக்க முடியாது. ஏனெனில் சூனியம் என்பது இருப்பின் அங்கு இருத்தல் வந்து விடுகிறது. சூனியம் சாத்தியப்படவேண்டுமாயின் ஏதுமே இருக்கக் கூடாது. ஆனால் இருத்தல் இல்லாத இருப்புச் சாத்தியமில்லை. ஆதலால் சூனியம் சாத்தியமில்லை. பூரணம் மட்டுமே சாத்தியம். ஆனால், பூரணத்தில் பூரணம் சூனியமாகவே உணரப்படும். அந்தவகையில் கற்பனை என்று எதுவும் இல்லை என்ற உங்கள் கருத்தினை கற்பனை மட்டுமே இருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். ---------------------- Quantum Physics என்பது இன்று பலராலும் பலசரக்குச் சாமான் போன்று உபயோகிக்கப்படுகிறது. செவ்விலக்கியங்களை வெறும் 140 எழுத்துக்குள் சுருக்கி ருவிற்றரில் வாசித்து வளரும் சந்ததிக்குள் இது இப்படி இருப்பதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால் Quantum Physics போன்ற கடினமான துறைகளிற்குள் கட்டமைப்புக்கள் வாயிலாகச் செல்லாது, தனித்திருந்து அடிப்படைகளைத் தரிசிக்கையில் அனைத்து உண்மைகளும் கைப்படும். எது ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ என்று ஒன்று உண்டு. இன்னமும் சொன்னால் அது மட்டுமே உண்டு. ஒரு சித்திரத்தை வரையவேண்டுமாயின், சித்திரம் கான்வசில் வருவதற்கு முன்னர் அதன் essense(அறிவு) மனத்தில் வந்துவிடும். எசென்ஸ் எப்போதும் existenceற்கு முந்தியது. இதனை இதற்கு முந்திய பந்தியோடு சேர்த்துப் பார்க்கையில் உலகில் அறிவு மட்டுமே இருக்கிறது. ஒரு உதாரணம். இப்போ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கணனித்திரை இருக்கிறது. அதனை நீங்கள் அறிகிறீர்கள். அறிவது நீங்கள் என்று நீங்கள் ஒரு நிலையில் கருதினும், கணினித் திரை இது என்ற அறிவே இதனை அறிகிறது. ஓன்றும் ஒன்றும் இரண்டு என்ற ஒரு கடதாசியில் எழுதியிருப்பின் பார்த்த மாத்திரத்தில் அது நமக்குப் புரிகிறது. ஆனால் இரண்டு என்றால் என்ன என்ற அறிவே அந்தப் புரிதலிற்கு அடிப்படை. ஆனால், அறிபவன், அறியப்படுவது மற்றும் அறிவு என்ற மூன்று பிரிவுகள் இருக்கையில் மட்டும் தான் உலகு சாத்தியப்படுகிறது. அறிபவனையும் அறியப்படுவதையும் அகற்றி அறிவை மட்டும் எடுத்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அங்கு அமைதி மட்டுமே சாத்தியப்படும். அறிபவர், ஒரு விடயத்தை அறிகையில் அவர் அறிவாகவே இருக்கிறார். அனுபவம் அனுபவிப்பவரிலிருந்து பிறிதல்ல. ஆனால் இவற்றைத் தனித்தனியாக உணர்கையில் மட்டுமேத இந்தக் கற்பனை உலகு பிறக்கிறது. "ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க" என்ற வரியில் வருகின்ற ஏகனும் அனேகனும் மேற்படியே விரிகின்றன. உபநிடதங்கள் இதையே பேசுகின்றன. இந்த ஒருமையே முத்தியென்று தேடப்படுகிறது. ஏதுமற்ற நிலையில் இருந்து உலகம் தோன்றியது என்பது வரை இன்று அறிவியல் ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகிறது. அறிவியலைத் தாண்டி அறிவாகவே தன்னை உணர்கையில் அமைதியில் பூரணம் உணரப்படும். உலகம் கற்பனை மட்டுமே.
 2. இந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை எடுத்துக் கொண்டு (அது பணம், அழகு, கல்வி இப்படி என்னவாகவேனும் இருக்கலாம்) அந்தப் பெறுமதியில் தம்மை விடக் குசறைவானவர்களாகத் தாம் கருதும் ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தாம் றாஜாக்களாக மந்தை வளர்த்துக் கொண்டிப்பார்கள். தமது வட்டம் தமக்குப் பொன்னாடை போர்த்திக்கொண்டிருக்கும் வரை, தமது அகங்காரம் திருப்த்தியடைவதாக உணர்ந்துகொள்வார்கள். நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை உணர்வதற்கு முதற்படி தமக்குத் தாம் உண்மையாக இருப்பது அவசியம். தமது நிறைகுறைகள் சார்ந்தும் உணர்வுகள் இச்சைகள் தேடல்கள் சார்ந்தும் தமக்குள் தெளிவு அவசியம். பலர் இதனை அனுமதிப்பதில்லை. இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் ஏதோ ஒரு நோவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக நோவுநீக்கி மாத்திரை இரண்டினை முழுங்கி விடல் ஒரு வழி. ஏன் நோவு ஏற்படுகிறது என்ற அடிப்படையினை ஆராய்ந்து அந்த அடிப்படைப் பிரச்சினைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடுவது பிறிதொரு வழி. முதலாளித்துவ சமூகம் எப்போதும் முன்னையதையே தேர்ந்தெடுக்கும். ஏனெனில் நீங்கள் நோவு நீக்கி மாத்திரையினை முழுங்கிவிட்டுஆசைப்படுதல்களத் தொடர்ந்தால் தான் சந்தைக்கு ஆதாயம். சுருக்கமாக, நீங்கள் சித்தரிக்கும் நிலையினை நீங்கள் உணர்ந்த மாத்திரத்தில், அந்த உணர்வுக்குச் செவிகொடுத்தலை முதல் பெறுமதி ஆக்கிக்கொள்ளுங்கள், மீதி தன்னால் நிகழும். இவை தொடர்பில் மற்றயைவருடன் உரையாடுவதோ, மற்றயையவரை மாற்ற முயல்வதோ வினைத்திறன் அற்ற தேர்வுகள். நீங்கள் உங்களுடன் இயன்றவரை அமைதிக்குள் வாழக் கற்றுக்கொள்ளுவது, இன்னுமொரு விதத்தில் சொன்னால் சும்மாயிருக்கக் கற்றுக்கொள்ளுவது பெரும் பயன் தரும். மொத்தத்தில் நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை நீங்கள் பெற்றதைக் கொண்டாடுங்கள். மிக அவசியமான ஆரம்பம்.
 3. உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்தின் முனைப்பு என்றாகியுள்ளது. இது சுயத்தின் முனைப்பு என்று சொல்கையில் அது ஒரு சாதகமான முன்னேற்றமான விடயம்போல் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முனைப்பு திட்டமிட்டு நடுத்தரவர்கத்தினர் மீது விளைவிக்கப்படுகின்றது. முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்கு கடன் பிராணவாயு. கடன் வாழ்வதற்கு ஆசை அத்தியாவசியம். அனைவரும் எப்போதும் அறி;ந்த ஆனால் என்றைக்கும் விளங்கிக்கொள்ளாத விடயம், வறியோர்க்கும் செல்வந்தர்க்கும் ஆசை அந்நியம். இருவரிற்கும் அதற்கு நேரமில்லை. அதாவது வறியவர்க்கு என்னத்திற்கு ஆசைப்படலாம் என்று றூம் போட்டு யோசிக்க நேரமில்லை, அவர்களது ஆசைகள் அவர்களது ஊர் எல்லைக்குள் விரிவன—சந்தைக்கு அவற்றால் பாரிய சகாயமில்லை. செல்வந்தர்க்கு ஆசைப்படமுதல் வாயில் தோசை என்பதால் இல்லாமை உணர அவகாசமில்லை. இதனால் இடைப்பட்ட வர்க்கத்தில் சந்தை ஆசை வேளாண்மை செய்கிறது. இன்னுமொரு விதத்தில் பார்ப்பின், பெரும் செல்வந்தர் வேண்டாம், ஒரு பத்து மில்லியன் டொலரைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தால், 3 வீத உறுதிப்படுத்தப்பட்ட முதலீடு சர்வசாதாரணம். அதாவது 3 லட்சம் வருட வருமானம் உறங்கியபடி எந்த ஆபத்தும் இன்றி உறுதிப்படுத்தப்படலாம். 3 லட்சம் நடுத்தர வர்க்கத்தின் ஊதியம். ஒரு படி மேலே சென்று 100 மில்லியன் உள்ளவரைப் பார்த்தால் அதே 3 வீத முதலீடு அவரிற்கு 3 மில்லியன் பொக்கற் மணி என்றாகிறது. பொதுவாகச் செல்வம் செழிப்பாக இருக்கையில் பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளட் மட்டும் போதும் என்று; திருப்த்தியளிப்பினும் ஆறு வீதம் மிக இயல்பான களியாட்டக் காசிற்கான முதலீடு. ஆக 3 தொடக்கம் 6 வீதம் மிகக்குறைந்த ஆபத்தில் வருமானம் ஈட்டும் முதலீடுகள் செல்வந்தரின் பொக்கற் மணிக்கான குறியாகின்றன (பெரும்பணமீட்டும் வியாபாரங்களும் முதலீடுகளும் இன்ன பிற. வெறும் களியாட்டத்திற்கு மேற்படி போதுமானது). இப்போ எங்கிருந்து இந்த 3 தொடக்கம் 6 வீத வருமானம் ஈட்டப்படுகிறது என்று பாhத்தால் பெரும்பாi;மையாக மஞ்சள் தண்ணி தெளித்தபடி நிற்கும் நடுத்தர வர்க்க ஆடுகளே தென்படும். வீட்டுக் கடன். வாகனக் கடன் முதற்கொண்டு நுகர்வுப் போதைக்கு அடிமைப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் தலையில் செல்வந்தரின் களியாட்டம். ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. எவரையும் பேணாது, பழையவரின் தேடல்களில் பிறந்த பாரம்பரிய பெறுமதிகளையும் புறந்தள்ளி, சுயமுனைப்பில் மிதப்பதாய் நம்பியபடி அடிமைப்படுத்தப்பட்டு, அகங்காரம் புற்றுநோய் கடந்த பயங்கரமாகி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல உண்மையான உறவுகள் என்று யாருமற்று, இயக்கத்தில் தூங்கியபடி தனித்தீவுகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் உணரத் தவறுவது யாதெனில்: மேற்படி மந்தைக்குள் மாடாக கூட்டத்தில் தீவாகப் பாரம்பரிய லாபங்களையும் தொலைத்துத் திரியும் நிலை எதேச்சையானதொன்றல்ல—திட்டமி;ட்டுச் செய்யப்படும் வேளாண்மை. அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.
 4. நிழலி, நீங்கள் கொண்டாண்டத்துடன் வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களும் கூட. சொந்தமான பெறுமதி என்பதை ஊர் சார்ந்ததாக, ஞாபக வீதி சார்ந்ததாக நீங்கள் நினைத்தது போல் நான் கிஞ்சித்தும் குறிப்பிடவில்லை. இன்னமும் சொல்வதானால் தாயகம் சார்ந்து மட்டுமல்ல எந்த இடம் பொருள் பதவி பாத்திரம் காலம் சார்ந்தும் பேசவில்லை. அத்தனையையும் கடந்த உள்ளார்ந்த சுயத்தின் அலைவரிசை சார்ந்ததாக மட்டும் பேசியிருந்தேன். எமது சொந்த அலைவரிசையே நமக்கு மறந்துபோயுள்ள நிலையில் பெறுமதி என்பதைப் பிறிதொன்றைச் சார்ந்ததாக மட்டும் தான் பொதுவில் பார்க்க முனைவது புரிகிறது. ஆனால், ஒன்றின் தன்மை இன்னுமொன்றைச் சார்ந்து மட்டும் தான் இருக்க முடியுமா? உங்கள் நிறம் என்ன என்பதை இன்னுமொன்றின் நிறம் அல்ல என்பதாக மட்டும் தான் பதிலளிக்க முடியுமா? ஒரு அணையாத ஹோம்சிக் ஏதோ ஒரு அலைவரிசையோடு ஒட்டிவிடவேண்டும் என்ற அவாவில் உள்ளுர உழன்று தேடுவதைப் பற்றிப் பேசியிருந்தேன். இந்த ஹோம்சிக் வேண்டும் ஹோம், இடம், காலம், பொருள், பரிமாணம் கடந்ததொன்றுக்கான ஆர்ப்பரிப்பு. மற்றையவரைக் கொண்டாடக் கூடாது என்றோ அவரவர் பாணியில் கொண்டாடக் கூடாது என்றோ சொல்வது கிஞ்சித்தும் எனது நோக்கமில்லை. என்னை ஒத்த மனநிலையில் இருக்கும் சகபாடிகளைத் தேடியது மட்டுமே பதிவின் நோக்கம். உதாரணத்திற்கு, ஊரில் எனது வகுப்பில் படித்தவர்கள் முப்பது வருடங்களின் பின்னர் தங்கள் வாட்ஸ்ஆப் குழுமத்தில் என்னையும்இணைத்துக் கொண்டார்கள். ஞாபகவீதி ஒருகணம் திறந்தது உண்மைதான். இருப்பினும் எட்டாம் வகுப்பில் பார்த்தது போல் இன்னமும் அவர்கள் பெண்கள் படங்களை வைத்துக் கிளர்ச்சியுடன் அங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்று நான் புனிதம் பேசவோ கருத்துக்கூறவோ முயலவில்லை. அறவே அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் என்னால் எட்டாம் வகுப்பில் இருந்ததைப் போல் படத்தைப் பார்த்துக் கிளரும் மனநிலையினைக் கைப்படுத்தமுடியவில்லை என்பதையே பதிவு செய்கின்றேன். அதற்காகக் கொண்டாட்டம் அறவே இல்லை என்று கூறவில்லை. இந்த வருடம் கூட 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தை அணுவணுவாக ரசித்தேன். அங்கு பேசப்படும் சாதியம் நிலம் மற்றும் இன்னும் எதுவும் எனக்கு அறவே சம்பந்தமற்றன. அந்த முரண்கள் முற்றிலும் எனக்கு அந்நியமானவை என்னால் என்றைக்கும் உணரப்படாதவை. இருப்பினும். அந்தப் படத்தை என்னால் கொண்டாட முடிகிறது. ஒரு சகபாடியைக் கண்டுகொண்ட கூத்துப் பிறக்கிறது. ஒவ்வொரு துளியிலும் ஒட்டிக்கிடக்கும் ஆனந்தம் மடையுடைத்து என்னுள்ளும் பிரவாகிக்கிறது. அப்படியே அள்ளிப் பருக முடிகிறது. ஏனெனில் அந்தப் படம் ஒருவனின் சுய அலைவரிசையில் பரிணமித்ததால் என்னாலும் அந்த அலைவரிசைக்கு ரியூன் பண்ண முடிகிறது. கமரா நகரும் ஒவ்வொரு துளியும் முயற்சியின்றி என்னுள்ளும் பிரவாகிக்கின்றன. நான் சொல்லவருவது, இன்றைய உலகில் இத்தகைய பிரவாகம் மிக அரிதாக்கப்பட்டுவிட்டது. இன்னமும் சொல்வதானால் அத்தகை பிரவாகம் மறக்கடிக்கப்படுகிறது. ஓட்டம் என்பது ஓழுங்குபடுத்தப்பட்ட விதி அறிவிப்பாக ஆக்கி மலட்டு உணர்வுகளைப் பிரசவிக்கின்றது. நீங்கள் கூறும் கடன் பொறுப்பு சேமிப்பு தேவை அவசியம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் சவால்களாக இருக்கும் வரை பணம் மனதைக் குவியப் படுத்தி அர்த்தம் தரலாம். ஒரு பேச்சிற்கு, உங்களிற்குப் பணம் என்பது தேவை நிமித்தமற்றதாகி ஒரு தசாப்த்தமே முடிந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். வெறும் வீடியோ கேம் விளையாடுகையில் கிடைக்கும் ஸ்கோர் போல் ஒரு நம்பர் என்பதாக பணம் ஆகுகையில் எங்கனம் பணத்திற்குள் அர்த்தத்தைத் தக்கவைப்பீர்கள்? அவ்வாறு பணம் அர்த்தப்படுகையில் பணத்தின் சேர்க்கையினை எங்கனம் கொண்டாடுவீர்கள்? அதுபோன்றே, வேலையில் உயர்வு வேண்டாது ஓரு நேர்கோட்டில் செல்வதாகக் குறிப்பிடுகின்றீர்கள். இது கொண்டாட்டத்திற்கு முரணானது இல்லையா? உயர்வு என்பது புறோமோஷன் மட்டுமல்ல, புதுப் புதுச் சவால்களின் உச்சங்களைத் தொடர்வதும் கூட. நேர்கோட்டில் அளவாய் ஆசைப்பட்டுப் பயணிப்பது களிப்புக் கூத்திற்குச் சரிப்படுமா? அப்படியாயின் எதற்காக அந்த வேலைக்குச் செல்லவேண்டும்? இக்கேழ்விக்கு, வேலைக்குச் செல்வது வாழ்வாதாரத்திற்கான அவசியம் என்பது மட்டும் பதிலாயின் அதைத் தான் கொண்டாட்டம் தொலைந்த வரண்ட ஓட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒருவேளை நீங்கள் கூறுவதைப் போன்று இந்தக் மெத்தனப்போக்கு முற்றுமுழுதான கொண்டாட்டத்தை எப்போதும் உணராவிடினும் கனகாலம் கொஞ்சக் கொண்டாட்டத்தையேனும் தக்கவைக்க உதவலாம். ஆனால் இந்த மனநிலை அனைவர்க்கும் கைப்படாது. இன்னுமொருவர் சொல்லி றூம் போட்டு யோசித்து எவரும் உச்சம் தொட நினைப்பதில்லை. மாறாக, சிலரிற்குள் காட்டருவி மட்டுமே ஓடுகிறது. எதிர்ப்டும் சிதிலங்கள் அனைத்தையும் பிழிந்து சுவைத்துத் திமிர்த்தெழுந்து ஒரு பூதம் போல் காட்டருவி மேலும் சிதிலம் தேடுகிறது. அப்போது தான் சந்தை உலகின் வரையறை உறைத்து வரட்சி தலைகாட்டுகிறது. நீங்கள் கேட்ட கேழ்விக்காச் சற்று எதைப் பேசுகிறேன் என்பதைக் குறிப்பிடுவதற்கா இந்தப் பின்னூட்டம். ஆனால் நீங்கள் கொண்டாட்டத்துடன் மகிழ்ந்து நகர்வது மகிழ்ச்சி.
 5. நன்றி ஜஸ்ரின், நுணாவிலான், புங்கையூரான், நெடுக்காலபோவன் மற்றும் சண்டமாருதன், உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும். ஏறத்தாள எனது 2018ன் இரைமீட்பாகத் தான் இதைப் பதிவிட்டேன். உங்கள் கருத்திற்கான பின்னூட்டத்திற்குச் செல்வதற்கு முன்னர் இப்பதிவிற்கான ஒரு கொன்ரெக்ஸ்ற்றைச் சுருக்கமாக ஒரு பந்தியில் கூறிவிட்டு நகர்கிறேன். 2018ல் நான் ஒரு புத்தகம் தன்னும் வாசிக்கவில்லை—சித்தர்கள் சொன்ன "சாத்திரம் எரி" என்ற ரீதியில் அல்ல, மாறாக, புத்தகங்கள் கிழர்ச்சி தரவில்லை ஒரே மாவு வேறுவேறு பரிமாணத்தில் அரைக்கப்படுவதாய்த் தோன்றியதால் ஆர்வம் போய்விட்டது. ஒரு conference தன்னும் செல்லவில்லை. செய்திகளை, குறிப்பாக அரசியல், முற்றாகத் தவிர்த்திருந்தேன்—மிக முக்கிய அதுவும் என்னை நேரடியாகப் பாதிக்கும் செய்திகளை மட்டும் செவிவழியாக பிறர்மூலம் அறிந்ததைத் தவிர எந்தச் செய்தியையும் படிக்கவில்லை. இது தானாக நடக்கவில்லை, நானாகத் திட்டமிட்டுத் தவிர்த்திருந்தேன். வேலையில் மட்டும் வேலையோடு நேரடித் தொடர்புபட்ட தவிர்க்கமுடியாத அறிதல்கள் இருந்தன. வேலை உச்சவேகத்தில் நகர்ந்தது. வேலை உச்ச வேகத்தில் நிகழ்ந்ததால், அது சார்ந்த விளைவுகளும் புது உயரங்களைத் தொடப்பட்டபோதும் ஒரு துளி கொண்டாட்டமும் உள்ளுரப் பிறக்கவில்லை. ஏறத்தாள 600 மணிநேரம் ஏழு உபநிடதங்களைப் podcast வழியாகக் கேட்டுச் சிந்தித்திருந்தேன். பலநூறு மணிநேரம் அமைதியாய் உட்கார்ந்திருப்பதற்கு ஒதுக்கியிருந்தேன். ஒரு மாதம் பிற நாடுகளிற்குப் பயணித்திருந்தேன். மற்றும் இதர வழமையன வாழ்வு நிகழ்ந்தது. வருடத்தின் நகர்வில் ஏதேதோ பெருந்தெளிவுகள் கிடைத்ததாய்த்த தோன்றினும் முடிவில் சொல்லும்படியான எந்தப் பெருந்தெளிவும் அடையப்பட்டதாய்த் தெரியவில்லை. இந்த வகையில் தான் மேற்படி பதிவு... ஜஸ்ரின்: எல்லாரும் குருவாண்டி என்பதனை academics ரீதியிலோ, அல்லது ஆராய்ச்சி மற்றும் உசாத்துணை என்ற அடிப்படையிலோ கூறவில்லை. நாளாந்த வாழ்வு சார்ந்து அதைக் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, இன்றைய தேதிக்கு ஏதாவது விருந்துபசாரங்களிற்குச் செல்லின், அதாவது தொழில் சாரா உறவினர் போன்ற சந்திப்புகளிற்குச் சென்றால், புவி வெப்பமடைதல், quantum physics, மரபணு மாற்றப்பட்ட உணவு, இஸ்லாம், அமெரிக்க கறுப்பினம், artificial intelligence, பல்கலைக்களகம், stock market, ஆன்மீகம், Trump என ஏறத்தாள ஒரு பத்துப் பதினைந்து தலைப்புக்கள் அனைவராலும் பேசப்படுகின்றன. அனேகமாக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மேற்படி அனைத்துத் தலைப்பிலும் பேசக்கூடியவர்களாக வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு தலைப்பிலும் முனைவராகி ஆராய்ச்சி பண்ணித் தான் ஒன்றைப் பேசவேண்டும் என்ற அடாவடி மனநிலை எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. இன்னமும் சொல்லவதானால் பட்டம் மற்றும் படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் தொலைந்துகொண்டிருப்பதாகவே பலகாலமாக உணருகிறேன். நான் சொல்ல வருவது, மேற்படி உரையாடல்கள அனைத்தும் sound bitesசாக மட்டுமே இருக்கின்றனவே அன்றி ஒரு மில்லி மீற்றர் ஆழத்தில் தன்னும் அவை பற்றிச் சிந்திக் எவரும் தயாராயில்லை. அதே நேரம் மேற்படி தலைப்புக்களில் உள்ள அனைத்தும் அறிந்து முடிவெடுப்பதாக ஒரு வலிந்துருவாக்கப்பட்ட அமைதி அவர்களில் காணப்படுகிறது. இன்னமும் சொல்வதானால் மேற்படி தலைப்புகள் பற்றி அறிந்து தான் வாழ்வு நகர வேண்டும் என்ற ஒரு அவதானமும், அவ்வவதானம் திருப்த்திப்படுத்தப்பட்டதான அமைதியும் தெரிகிறது. இது மிகச் சுவரசியமான ஒரு அவதானிப்பாக எனக்குப் பட்டது. எனக்கு எந்தக் கட்சி அரசியலிலும் உடன்பாடில்லை நான் எந்தக் கட்சியினையும் சேர்ந்தவனும் இல்லை. ஆனால், நான் அவதானித்தவரை, மேற்பந்தியில் நான் குறிப்பிட்ட சந்தைக்கு அவசியமான mind programming, நான் அவதானித்தவரை பழமைவாத (Conservative) அரசியல் பிரச்சாரங்கள் வழி வந்தே பலரைச் சேர்வதாகத் தோன்றுகிறது. அதாவது, பழமைவாத அரசியல் சார்பு பணம்சேர்ப்பதற்கு அனுகூலம் என்ற பரவலான கருத்தின் வாயிலாக மேற்படி கட்சிநிலை எடுக்கும் பலர் காலப்போக்கில் முற்றாகச் சிக்கிக் கொள்கிறார்கள். ஏறத்தாள ஒரு cult போல் இது ஆகிப்போகிறது. ஜோடன் பீற்றசன் பிரபலமாவதற்கு முன்னர், ஏறத்தாள 2006ம் ஆண்டளவில் இங்குள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது அவர் தோன்றுவது வாயிலாக அறிந்திருந்தேன். மிகுந்த பிரமிப்பு மிக்க ஆழுமையாக அப்போது அவர் இருந்தார். தற்போது அவர் ஒரு பிறாண்ட் ஆனதும் அந்த ஆள் தானா இது என நினைக்கும் வகை பல மாற்றங்கள் பாதமான முனையில் எனக்குத் தென்படுகின்றன. ஆனால் இன்றையத் தேதிக்கு ஜோடன் பீற்றசன் எதிர் சாம் ஹரிஸ், அல்லது ஜோடன் பீற்றசன் சக பென் சப்பீரோ அல்லது ஜோ றோஜன் நிகழ்ச்சி போன்ற குறிப்பிட்ட ஒரு சில வாய்க்கால்கள் வழி வரும் துளித் தண்ணி போதும் என்றாகிக் கொண்டிருக்கின்றது. யாரைக் கேட்டாலும் நான் ஒரு சமூக லிபரல் பொருளாதார பழமைவாதி (Socially Liberal Fiscal conservative: more of a Libertarian) என்பதை ஒரு அந்தஸ்த்து statement ராக வைக்கிறார்கள், ஆனால் சமூகம் சார்ந்த உங்கள் லிபரல் நிலை பற்றிக் கூறுங்கள் என்றால் Gay Rights என்பதற்கப்பால் அவர்களால் செல்ல முடிவதில்லை. இதை எந்த வகையிலும் எவர் மீதான அவமரியாதையாகவோ, judgementஆகவோ நான் முன்வைக்கவில்லை. மாறாக, இவை தான் நான் எனது பதிவில் குறிப்பிட்ட சகபாடிகளை நாம் தொலைத்ததற்கான காரணிகள் என்கின்றேன். இதனால்த் தான் நாம் தனிமையினை உணருகின்றோம். சந்தை ஒரு வைறஸ் போன்று ஆகி மூளையினைக் கழுவிக்கொண்டிருக்கிறது. நோய் முற்றாகப் பாதித்தவர்கள் zombieகள் போன்று உணர்வு மறந்து, வாய் திறந்து ஓடிக்கொண்டிருக்க, நோய் பாதிக்காதவர்கள் மேலும் மேலும் தனிமையினை உணருகிறோம் என்பது மட்டுமே மேற்படி கருத்து. நெடுக்காலபோவான்: மரபணு மாற்றங்கள் சார்ந்து நீங்கள் முன்வைக்கும் கருத்தை நான் மறுதலிக்கவில்லை. இன்றைக்கு எலியைப் பிடித்து lyme disease பரப்பா வகை மரபணு மாற்றிக் காட்டில் விடுவதில் இருந்து, நுளம்பை மாற்றுவதில் இருந்து ஏதேதோ மாற்றங்களை மனிதன் துரித கதியில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாய் மற்றும் தாவரங்கள் தொட்டு தோந்தெடுத்த தெரிவு மூலம் இனப்பெருக்கம் என்பதன் வாயிலாக மட்டும் மரபணு தேர்வை முன்னர் நகர்த்திய மனிதன் இன்று ஜீன் எடிற்றிங்கை உடுப்புத் தைப்பது போல் அணுகுகின்றான். இது வெறும் ஆரம்பம். MicroSoft Windows வரும்வரை கொம்பியூட்டர் utilityயாகவில்லை, இப்போ எப்படி என்பது சொல்லத் தேவையில்லை. எந்தத் தொழில் நுட்டபமும் அப்படித்த தான்: மலைப்பு, இருந்தால் நல்லம், அவசியம், சர்வசாதாரண கருவி என்ற நான்கு நிலை கடக்கும். தற்போது எத்தனையோ தொழில் நுட்பங்கள் தத்தமது அச்சில் சர்வசாதாரண கருவி நிலையினை ஒரே நேரத்தில் அடைந்திருப்பதனால், இவற்றைத் தொகுத்து மனிதன் முன்னெப்போதும் இருந்திரா கதியில் விளையாடுகிறான். விஞ்ஞானம் ஆய்வுகூடங்களை விட்டு வெளியேறிவிட்டது. நான் மேலே குறிப்பிட்டது போல ஜீன் எடிற்றிங் kitறினை நீங்கள் தபால் வழி இன்று பெற்றுக் கொள்ள முடியும். மைக்றோசொப்ற் வின்டோஸ் வந்து கொப்பியூட்டர் எப்படி வெறும் கருவியானதோ அது போன்று தொழில் நுட்டபம் அனைத்து முனையிலும் எங்கள் வாழ்நாளில் இதை சர்வசாதாரணம் ஆக்கும். சட்டம் போட்டு மரபணு மாற்றம் தடுக்க முடியாது. அவனவன் garageசில் வச்சு எலியை மட்டுமல்ல குழந்தைகளையும் மாற்றிக் கொண்டிருப்பான். மாறுகின்ற உலகம் சார்ந்து எந்த அரசியல் அங்கமும் பூரண தெளிவோடு இல்லை. சுனாமிக்குத் தடுப்பு மதில் சாத்தியமில்லை. experts என்பவர்கள் பங்கு பூம்பனி போன்று மறைந்து கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட மாற்றங்கள் மேலும் மாற்றங்களிற்கான momentumதை அதிகரித்தபடி இருக்கின்றன. இந்த முனையில் உங்கள் எச்சரிக்கையினை நான் கிஞ்சித்தும் மறுக்கவில்லை. ஆனால், ஒரு கணம் இப்படி ஜோசிப்போம். 2 பில்லியன் ஆண்டுகளாக நீலப்பச்சைப் பாசி நிகழ்த்திய சூழல் மாற்றம் Ozoneனை உருவாக்கி மனிதனை உருவாக்கியது. மனிதன், அனைத்து உயிரனத்தையும் போல, தன்னைத் தக்கவைப்பதை மட்டுமே கருத்தாய்க் கொண்டு, உலகம் தன்னைச் சுற்றி மட்டும் சுழல்வதாய் பூமி மையமாக மனத்தை வைத்துக்கொண்டிருக்கிறான். இன்றைய தேதிக்கு மனிதன் அறிந்த மிகப்பெரும் அறிவாளி மனிதன் என்பதனால், கூர்ப்பின் உச்சம் மனிதனோடு நிற்கவேண்டியதில்லையே. மனிதன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போதல் என்பது மனிதனின் காதுகளில் நாராசமாய்த் தான் பாயும். ஆனால், யார் கண்டார், நாளைய உலகு மனிதனை நீலப்பச்சைப் பாசி அளவிற்குச் சிறுப்பிக்கலாம். இவை சார்ந்து பயமோ கவலையோ என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது. மாற்றமொன்றே மாற்றமற்றது. என்ன தொழில்நுட்பம் என்ற காரணி சார்ந்து மாற்றம் நாம் எவரும் உள்வாங்கா நம்மால் கிரகிக்க முடியா கதியில் நடக்கும் என்பது புதுமை. சுகன்: உங்கள் கருத்துகளிற்கு நன்றி. தாயகம் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பாகங்களும் ஒரே மாதிரித் தான் இனை;றைக்கு ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பேரினவாதம் மட்டும் காரணியல்ல. சந்தை நுகர்வோரை மண்டை கழுவுவதை அத்தியாவசியம் என்று கருதுகிறது. ஐன்ஸ்ரைன் குறிப்பிட்டதைப் போல, பிரச்சினையினை உருவாக்கிய மனநிலையில் இருந்து தீர்வு அசாத்தியம். என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு அலையில் மிதந்து செல்வது மட்டுமே. இதை gloomyயாகப் பாhக்கவேண்டும் என்பதில்லை. ஆன்மிக ரீதியில் நோக்கினும், அறிவு ரீதியில் நோக்கினும் மிதந்து செல்லகையில் புதிய கோணங்கள் கைப்படும். அனைவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
 6. கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது. வெற்றி மறந்து போகிறது. கொண்டாடத் தெரியாமல் போய் விடுகிறது. வெறுமனே ஓட்டந் தொடர்கிறது. சிறுவயதில் பள்ளியில் படிப்பில் ஏதேனும் சந்தேகமிருப்பின், அப்பா அம்மா ஆசிரியர் ரியூஷன் என்பனவெல்லாம் தாண்டி சந்தேகம் கேட்பதற்குப் பக்கத்தில் இன்னுமொரு மாணவன் இருப்பான். எமக்குப் புரியும் மொழியில் எமது சந்தேகத்தை அந்தச் சகபாடி தீர்த்துவைப்பான். நாம் வளர்ந்து வருகையில், இந்த பொருள்முதல் சமூகத்தில், எப்படியோ அந்தச் சகபாடியினைத் தொலைத்து விடுகின்றோம். எமது சந்தேகங்களைக் கேட்பதற்கு எமையொத்தவர்கள் யாரையும் காணக் கிடைக்காது, எமது சந்தேகங்களை முன்வைப்பதற்கு மொழியின் போதாமையுணர்ந்து, புலம்பெயர் தேசத்தின் வேற்றின வைத்தியரிடம் போன தமிழ் முதியவரைப் போல அனைவரும் ஆகிப்போகின்றோம். பிறரிடம் மட்டுமல்ல, எமக்கே எமது பிரச்சினைகளைப் புரியவைக்க எம்மால் முடிவதில்லை. எமது பெறுமதி என்று ஒன்று இருந்து, அந்தப் பெறுமதி கைப்படும்போது கொண்டாட்டம் தானாகத் தலைப்படும். ஏதேதோ பெறுமதிகளை எம்முடையதாக நாம் ஒவ்வொரு பொழுதில் நம்பிக்கொள்கின்றபோதும், இது எனது பெறுமதியல்ல என்ற ஒரு மெல்லியகுரல் உள்ளுர எங்கோ முணுமுணுத்துக்கொண்டிருக்க்கிறது. அதனால், அந்நியபெறுமதிகளின் கைப்படல் கொண்டாட்டத்தைப் பிரசவிக்காது நகர்ந்துபோகிறது. காலம் செல்லச் செல்ல, எனது பெறுமதி இதுவல்ல என்ற குரல் மட்டும் இருக்கிறதே அன்றி, எனது பெறுமதி என்ன என்பது என்னால் அறியப்படமுடியாததொன்று என்பது போல் பயப்படுத்துகின்றது. மரபணு மாற்றப்பட்ட உணவு எனது பெறுமதி என்ன என்பதை என்னால் அடையாளங்காணமுடியாதபோது, அனைத்தும் பயப்பிடுத்துகின்றன. நான் கடைசியாகக் கொண்டாடிய தருணம் எது என்று மனம் ஆராய்கின்றது. அந்தத் தருணம் என்னால் கொண்டாடப்பட்ட தருணமாய் இருந்ததனால், அந்தத்தருணத்திற்குள் எனது பெறுமதி இருந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆராய்தல் நடக்கின்றது. ஆனால் அந்தத் தருணம் சார்ந்து இன்றைக்கு என்னிடம் உள்ள பதிவு கொண்டு தான் என்னால் அந்தத் தருணத்தை ஆராய முடியும் என்பதனால், அந்தத் தருணத்தின் பதிவினை சல்லடைபோட்டுத் தேடுகின்றேன். அந்தத் தருணத்தில் நான் உண்ட உணவு, சுவாசித்த காற்று, நுகர்ந்த வாசனைகள், கேட்ட ஒலிகள் என்று அனைத்தும் எனது கவனத்தைப் பெறுகின்றன. அன்றைக்கு நானுண்ட கத்தரிக்காய் மட்டுமல்ல கறிவேப்பிலை கூட எனது பெறுமதியாயிருக்கலாம் என்று மனம் சந்தேகப்படுகிறது. இந்த அடிப்படையில் தான் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மீதான சண்டை ஆரம்பிக்கிறது. இந்தக் கத்தரிக்காய் அந்தக் கத்தரிக்காய் மாதிரியில்லை என்று வெளிப்படைக்குக் கேட்கும் அடம்பிடித்தலில் மறைந்திருந்து கேட்பது எனது பெறுமதியினை எனக்கு மீட்டுத்தாருங்கள் என்ற ஏக்கமே. மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் தீங்கு உண்டா இல்லையா என்ற வாதத்திற்குள் செல்லவே போவதில்லை. மாறாக, எனது மரபணு நான் பிறந்தபோது இருந்தபடியே இருக்கின்றதா என்ற கேழ்வியினை முன்வைக்கிறேன். CRISPR, ஜீனோம் எடிற்றிங் போன்ற தலைப்புக்களிற்குள் செல்லவேண்டாம். எமது வாழ்க்கைப் பாதையில் நாம் சந்தித்தித் வைரசுகள் முதற்கொண்டு இன்னோரன்ன விடயங்கள் எமது மரபணுக்களை எங்கனம் மாற்றியுள்ளன என்று திட்டவட்டமாக ஒப்பிடல் இன்றைக்கு அனைவரிற்கும் சாத்தியமான ஒன்றல்ல என்றபோதும் மாற்றங்கள் நடக்கின்றன என்பது பொது அறிவு. எயிட்ஸ் போன்ற பரிணமிப்புக்களில் வெளிப்படையாகின்ற மரபணு மாற்றங்கள், சிறிய அளவுகளில் புலப்படாது நடப்பினும் மாற்றம் நடக்கிறது. அது மட்டும் அன்றி, இன்றைக்கு Design Biology என்பது நோய்களிற்கான சிகிக்சையாக மாத்திரைக்குப் பதில் மரபணு மாற்றம் சார்ந்து சிந்தித்துக் கொடிருக்கிறது. கிறிஸ்ப்பர் மட்டுமன்றி வைரசுகளும் எம்முட் சென்று எமது மரபணுவினை மாற்றும் இலக்கிற்காகக ஆராய்ச்சி கூடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.. எமது வாழ்நாளில் இது சர்வசாhதரணமான விடயமாக வந்துவிடும். ஆக, அன்றைக்குக் கத்தரிக்காய் சாப்பிட்ட நானே மரபணு மாற்றப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனும் போது, அன்றைக்கு நான் சாப்பிட்ட கத்தரிக்காய் மட்டும் அப்படியே இருந்தால் மட்டும் என்ன லாபம்? எனவே எனது பெறுமதி என்ன என்பதைக் கடந்தகாலத்தில் தேடுவது பலன்தராது ஏனெனில் நான் அன்றைக்கு இருந்தவனாய் இன்றைக்கு இல்லை. எல்லாரும் குருவாண்டி இன்றைய தேதிக்கு சமூகவலைத்தளங்கள் மற்றும் வாழ்வில் அனைவரும் கருத்துக் கூறுவதை மட்டும் விரும்புகிறார்கள். கேட்பது என்பதோ அறிந்துகொள்வது என்பதோ உவப்பான விடயமாக இஇன்றைக்கு இல்லை. எனது பெறுமதி என்ன என்பதே எனக்குத் தெரியவில்லை, எனது குளப்பங்கள் சார்ந்து எங்கு தேடுவது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கருத்துக்கூறியே ஆகவேண்டும் என்று என்மீது யாரோ திணித்துவிட்ட பிணியில் நான் குருவாகிக் கொண்டிருக்கிறேன். Augmented Reality (AR) video game போல உலகு ஆகிப்போய்விட்டது. உண்மை என்பது அவரவர்க்கான பிரத்தியேகமானதே அன்றி அனைவரிற்கும் பொதுவான உண்மை என்று ஏதும் இல்லை என்பதாக உளவியல் மாறிக்கொண்டிருக்கின்றது. அவரவர்க்கு அவர்க்கான உண்மை. பொதுமறை என்று எதையும் எவரும் ஏற்கத் தயாரில்லை. எல்லோரும் தன்னைப் பெருப்பித்துக் காட்ட விழைந்து கொண்டிருப்பதால் கேட்பது பாதகம் என்றாகிப்போகிறது. மற்றையவன் பேச நான் கேட்பின் பேசுபவன் பெரியாள் ஆகி விடுவான். எனவே எனது கருத்துக்களை அங்கங்கே நானும் தூவுவது அவசியம். விடயம் புரிகிறதோ இல்லயோ நுனிப்புல்லுகளை நானும் சப்பித் துப்புவது அவசியம் என்பது இன்றைய நிலை. இதனால் அனைவரும் குருவாண்டி. சிஸ்யப் பிள்ளைகள் பற்றாக்குறை. இந்நிலையின் வீச்சு அனைவரும் தமக்காக மட்டும் இருக்கும் ஒரு நிலையினை நோக்கியதாக நகர்கிறது. ஆனால், இயற்கை மனிதனை கொம்பின்றி, நகம் இன்றி, பலம் இன்றி கூட்டத்தில் பலம் பெறுகின்ற சமூக விலங்காகப் படைத்திருக்கிறது. அதனால், எங்கும் பெருங்குளப்பம். ஆன்மிகம் சரியை கிரியை யோகம் ஞானம் என்று வந்தால் என்ன, சத் சித் ஆனந்தம் என்று கொண்டால் என்ன, பதி பசு பாசம் என்றால் என்ன, தத் துவம் அசி என்று கேட்டு அதன் வழி அகம் பிரம்மாஸ்மி என்று கொண்டால் என்ன முடிவில் விடுதலை பெறுவதற்கு ஞானம் அவசியம் என்பதாய் ஒரு பொதுமை காணப்படுவதாய்த் தோன்றினும், போதகர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அத்வைதம் சைவ சித்தாந்தத்தைப் புறக்கணிக்க, சித்தர்கள் பிரம்மத்தைப் புறக்கணிக்க, சாமியார்கள் சட்ட ஒழுங்கைப் புறக்கணிக்க என்று எங்கும் மோதல். எல்லோரும் குருவாண்டி. குளப்பம் பிரவாகம். எல்லாவற்றிலும் சந்தேகம் தெளிவு எங்குமில்லை, கொண்டாட்டம் வரண்ட வாழ்வில் ஓட்டம் மட்டும் இதயத்துடிப்பு. முடிவு ஒரு சமயப் பேச்சாளர் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பிரபல ஆலயத்தின் உற்சவத்தில் பேசுவதற்காக, பேருந்தில் செல்வதற்காகப் பேருந்து நிலையம் சென்றாராம். பேருந்து நிலையம் பக்த்தகோடிகளால் நிரம்பி வழிய, பேருந்தில் ஏறுவது அசாத்தியமாய் இருந்ததாம். கசங்கிப் போன மேலாடையோடு தனது கடைசி முயற்சியும் பயனிழந்து, வியர்வைப் பெருக்கோடு அவர் கூட்டத்தில் இருந்து விலக முயல்கையில், இளைத்த உடலுடன் இரு முதியவர்கள் இவரை மறித்து அந்தப் பேருந்து குறித்த ஆலயத்திற்கா செல்கிறது எனக் கேட்டார்களாம். இவர், ஆம் அது அங்கு தான் செல்கிறது, ஆனால் கூட்டம் அலைமோதுகிறது, என்னால் கூட ஏற முடியவில்லை, நீங்கள் ஏற மாட்டீர்கள் என்றாராம். அதற்கு அந்த முதியவர்கள், ஏறுவதை விடுங்கள் அந்தப் பேருந்து அந்த ஆலயத்திற்குத் தான் செல்கிறது என்பது உங்களிற்கு உறுதியாகத் தெரியுமா எனக் கேட்டார்களாம். இவர், ஆமாம் என்று கூறி விட்டு நகர்ந்து வந்து வாடகைக்கு ஒரு கார் எடுத்துக் கொண்டு நிகழ்விற்குப் பேசச் சென்றாராம். நிகழ்வு மேடையில் ஏறிய பேச்சாளரால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லையாம். ஏனெனில் மண்டபத்தில் முன் வரிசை ஆசனத்தில் அந்த முதியவர்கள் அமர்ந்திருந்தார்களாம். பேசி முடித்ததும் அவர்களிடம் சென்று எப்படி வந்தீர்கள் என இவர் வினவ, அவர்கள் தாங்கள் அதே பஸ்சில் தான் வந்ததாகச் சொன்னார்களாம். நம்ப முடியாத இவர், எப்படி ஏறினீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம்: பஸ் சரியான இடத்திற்குச் செல்கிறது என்பதை அறிந்தபின்னர் கூட்டத்துள் நின்று கொண்டோம். கூட்ட அலை எம்மை பேருந்துள் தானாகத் திணித்தது, பின்னர், பேருந்து கோவில் அருகில் நின்றதும், மறுபடி அனைவரும் அங்கே இறங்கியதால் மறுபடி அந்த அலை எம்மையும் பேருந்தில் இருந்து வெளியே துப்பிவிட்டது என்றனாராம். ஒட்டம் என்பது சக்த்தி வேண்டுவது. ஓடுவதற்கான சக்தியினைத் தக்க வைப்பதற்கு உடல் மட்டும் ஒத்துழைத்து ஒரு பலனும் இல்லை. உளம் உடன்படா ஓட்டம் அவசியம் மூச்சிரைக்கப் பண்ணும். எமது ஓட்டங்கள் எமக்கு அன்னியமானவையாக உளம் ஒவ்வாதனவாக உருக்குலைக்கும் படி இருக்கும் வகை மூச்சிரைத்தல் தவிர்க்க முடியாதது. அன்னிய பெறுமதிகளின் நிமித்தம் புரியாத ஓட்டத்தை மூச்சிரைக்கத் தொடர்வதற்குப் பதில், உள்ளுரக் கேட்கும் மெல்லிய குரலின் திசையறிவிப்பில் சென்று எமக்கான அலையினைத் தேடிக்கண்டடைந்து, கையைத் தூக்கிக் கொண்டு அலை எம்மை இழுத்துச் செல்ல அனுமத்தித்தல் வினைத்திறன் மிக்கது.
 7. http://indikadefonseka.com/my-brother-jani-a-portrait-of-a-real-life-jason-bourne/ போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி, மரித்த கொமாண்டோ சார்ந்து 2013ம் ஆண்டில் எழுதிய இந்தப் பதிவினை இன்று படிக்க நேர்ந்தது. எழுதியவர் இதயசுத்தியாக எழுதியிருக்கிறார் என்பதையும் அவரால் மனிதம் சார்ந்து எழுப்பப்படும் ஆசைகள் உண்மையானவை என்றும் என்னால் நம்ப முடிகிறது. அத்தோடு அவரது எழுத்து வளம் அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும், ஒரு தமிழனாக என்னால் இந்தக் கொமாண்டோவின் வீரத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் சில சமாந்தரங்களை உணர முடிகிறது. இந்தப் பதிவு அது சார்ந்தது. மேலே செல்வதற்கு முன்னர், மேற்படி இணைப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்கையில் அங்கு ஒரு பொழுதுபோக்குச் சுவாரசியமும் கைப்படுகிறது. இறந்த கொமாண்டோவின் முன்னை நாள் காதலி, அவரை ரசித்த அவரின் பதின் வயதுத் தோளி முதலானோரதும் அவரது வாழ்வில் இடம்பெற்றிருந்த இன்னோரன்ன இதரபாத்திரங்களும் பதிவு சார்ந்து தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டிருப்பமை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வைத் தருகிறது. சமாந்தரங்கள் எமது எதிரி பற்றிய வர்ணனை என்றபோதும், இந்தக் கதையில் எமது நாயகர்கள் பலரை இலகுவில் பொருத்திப் பொதுமை காண முடிகிறது. நான் மிகச் சிறுவனாக, காரணகாரியம் தெரியாது, பிரமித்துப் பார்த்த முதல் கதாநாயகன் கேடிள்ஸ். மேற்படி இணைப்பில் உள்ள யானி என்பதற்குப் பதில் கேடிள்ஸ் என்று போட்டு, நுகேகொடவிற்குப் பதிலாகத் தென்மராட்சி என்று மாற்றிப் படிப்பின், சில தவிர்க்கக் கூடிய வித்தியாசங்களிற்கு அப்பால் கதை அப்படியே பொருந்திவரும். பாலுமகேந்திரா படத்தில் வரும் நாயகிகள் போன்ற அக்காக்கள், கேடிள்ஸ் மோட்டார் சைக்கிளிள் செல்கையில் நளவெண்பா சித்தரித்த காப்புக் கழன்று விழும் நிலையில் நின்றதை நான் பார்த்திருக்கிறேன். கேடிள்ஸ் விபத்திற்குள்ளானதாய் வந்த வதந்தியால் அலரி விதை உண்ட அக்காவை நான் அறிந்திருந்தேன். ஏறத்தாள யானி நுகேகொடவில் நடத்திய ஊர்உலாவினை அதே காலப்பகுதியில் தென்மராட்சயில் கேடிள்ஸ் நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊரிற்கு ஒவ்வொரு நாயகர்கள். வரியுடை வந்து இயக்கம் நிறுவனமானவதற்கு முன்னான சறமும் கோடன் சேட்டும், ஏசியா சைக்கிளும் உரப்பையிற்குள் ஆயுதமுமான காலம் பதின் வயதுப் பெண்களிற்கு ஒரு வகைக் கிளர்ச்சியினையும் பதின்ம பையங்களிற்கு ஆயுதம் தூக்க விரும்பிய கிழர்ச்சியினையும் தந்தது மறுப்பதற்கில்லை. தோமியன் பெருமை சிங்களவர் கட்டுரை முழுவதும் பரந்து கிடக்கிறது. “இந்துவின் சொந்தம்” என்ற வரி ஆரம்பகால வீரவணக்கப் போஸ்ட்டர்களில் பார்த்தபோது உணரப்பட்ட சற்று அதிகரித்த பெருமை மறுப்பதற்கில்லை. றாதா அண்ணா இறந்த காலப்பகுதியில், யாழ் இந்துவின் பிறேயர் கோலிற்கு அருகில் இருந்து, இற்றைவரை வீரமரணம் எய்திய லெப்.கேணல் எண்ணிக்கையில் இந்துவின் சொந்தங்கள் அதிகம் என்ற பெருமை பேசிய நண்பரை நினைவிருக்கிறது. யானியின் சாகசங்கள் செவிவழிக் கதைகளாக மட்டும் எழுத்தாளரால் பதியப்பட்டிருக்கிறது. எங்கள் நாயகர்கள் எங்கள் கண் முன்னே எண்பதுகளில் நிகழ்த்திய சாகசங்கள் கொஞ்சமா நஞ்சமா. வங்கி வாகனம் என எல்லோராலும் அறியப்பட்ட கேடிள்ஸ் அண்ணையின் வாகனம் இராணுவ ட்றக் முன்னால் அலாதியாகத் திருப்பியோட்டப்பட்டதை எத்தனை கிழவிகள் வெற்றிலை உரலை உணர்ச்சிவசப்பட்டு இடித்தபடி பேசி நான் பார்த்திருக்கிறேன். எத்தனை இலட்சம் சாதனைகள் நிகழ்ந்தபின் எண்பதுகளில் கேடிள்ஸ்; வாகனம் ஓடியதைப் பேசுகிறானே என யாரேனும் நினைக்கக் கூடும். காரணம் உள்ளது. இயக்கம் நிறுவனமாவதற்கு முன்னால் மக்களும் இயக்கமும் இருந்த மனநிலையில் தான் எதிரி பக்கம் இருந்து மேற்படி பதிவு வரையப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் மனிதம் என்ற பொதுமை சார்ந்து சிங்களக் கொமாண்டோவின் தம்பியார் நீட்டும் கரம் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. புதுமை போரில் ஈரணிகளிலும் நின்ற அனைத்து வீரர்கள் சார்ந்தும் மரித்த பொதுமக்கள் சார்ந்தும் தன்னால் ஒரு சகோதரத்துவத்தை உள்ளுர முற்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்று சிங்கள எழுத்தாளர் சொன்ன வரி புதுமையாக இருக்கிறது. புத்தன் ஒருவேளை படிப்படியாய் இலக்கைக்கு மீள்கிறானோ என்ற நம்பிக்கையினை வளர்க்கிறது. என் அண்ணன் இழைத்த இன்னல்களிற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். அதற்கான உரிமை என்னிடம் இல்லை. ஆனால், உங்கள் மீது அந்த இன்னலை இழைப்பதற்காக அவர் கொடுத்த விலை அபரிமிதம் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என அவர் பதிந்திருப்பது புதுமையாய் இருக்கிறது. நம்பும் வகை இருக்கிறது. எங்களிற்கும் இருந்தது என்று ஒத்துக்கொள்ள முடிகிறது. கருத்து மேற்படி கட்டுரையில் போரின் பின் முன்வைக்கப்படும் பட்டவர்த்தமான பொது அறிவு, 2009 தையில் கிளிநொச்சி விழுந்ததைத் தொடர்ந்து பல தமிழராலும் முன்வைக்கப்பட்டுத் தான் வருகிறது. இருப்பினும் ஒன்று நடந்ததன் பின்னர் அது சார்ந்து பிறக்கும் அறிவு, குறித்த விடயம் நடப்பதற்கு முன்னால் அத்தனை இலகுவில் சாத்தியப்படுவதில்லை. அறுபது வருடங்களின் முன்னர் அந்தப் பொது அறிவு இப்போதிருப்பது போன்று பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டிருப்பின் ஒரு வேளை யானியை நாங்களும் கேடிள்சை அவர்களும் விளையாட்டு மைதானத்தில் சேர்ந்து கொண்டாடியிருக்கும் சாத்தியம் கைப்பட்டிருக்கலாம். ஆனால் தசாப்தங்களாக அந்தத் தீவு பொது அறிவினைத் தொலைத்திருந்தது. தொலைத்த பொது அறிவினைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஒரு விலை எப்போதும் இருக்கும். அந்தவiயில் இன்றைக்கு கட்டுரையில் பொது அறிவினைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி கருத்துக் கூறினும், அந்தத் தெளிவினை கண்டடைவதற்கு நாம் கொடுத்த ஒவ்வொரு சதமும் பேரம்பேசமுடியா விலையாக இருந்ததை மறுத்துவிடமுடியாது. இன்றைக்கு ஒருவேளை மேற்படி கட்டுரை தரக்கூடிய தெளிவினை வைத்து, இவ்விடயம் எப்போதும் இத்தனை இலகுவானதாய் இருந்ததாய் எவரும் நம்பிவிடக்கூடாது. இன்றைக்குக் கூட ஒட்டு மொத்த தேசமும் அந்தப் பொது அறிவினைக் கண்டடைந்துவிடவில்லை. சுவிற்சலாந்தில் கறுத்தச் சட்டையுடன் அடையாள அட்டை வளங்கும் இளையோரைப் பார்க்கிறோம். பிக்குகளைப் பார்க்கிறோம். தொலைத்த பொது அறிவினைத் தேடுதலும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது... ஒரு வேளை மேற்படி கட்டுரைகள் போன்றன, பொது அறிவினைக் கண்டடையும் விலையினைச் சற்றுக் குறைக்கக் கூடும், பொது அறிவு மேலும் சிலரிற்குக் கிடைக்கும்வகை செய்யக்கூடும். செய்யும் என்று நம்புவோம்.
 8. நன்றி அனைவரின் கருத்துகளிற்கும் நீங்கள் சொல்வது உண்மை தான். சுவர் எழுத்துக்கள் பரபரப்பு, பிரச்சாரம், நகைச்சுவை, வீரம், அரசியல், வன்மம், வம்பு முதலிய அனைத்தையும் அடக்கிக் தான் இருந்தன. சுவரில் இருந்த வேதாகமவரி தாய்மையின் வெற்றிடம் சார்ந்து உங்கள் மீதாற்றிய பங்கினை மிகவும் நுண்ணியதாய் அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அனேகம் வம்புகளையே சுவர் சுமந்து நின்றது. அதை எழுதியவர்கள் கெட்டவர்கள் என்பதல்ல, அதை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பரிமாண மனநிலை அவசியம். அது அனேகமாக வாலிபத்தில் தான் பலரிற்குக் சாத்தியப்படடிருக்கும். கிருபன் அந்தக் குழுமத்தை விட்டு நான் விலகவில்லை. ஆனால் எந்தக் குழுமத்திலும் எதையும் எழுதுவதில்லை. வாரத்தில் ஏதாவது ஒரு பொழுதில் துரிதமாக எழுதியவற்றைப் பார்த்துச் செல்வதோடு போகிறது. ஊர்மீழல் போலத்தான் இதுவும். அந்தப் பழைய வகுப்பறையில் அன்றைக்கு இருந்தவர்கள் குழுமத்தில் கூடியிருந்தபோதும், வகுப்பு அன்றுபோல் இல்லை இருக்கவும் முடியாது. ஏனெனில் அன்றைக்கு இருந்த பொதுமை இப்போதில்லை. அது சாத்தியமுமில்லை. இதில் கரித்துண்டைக் கேவலப்படுத்தவில்லை. நகரத்து மதில்களுக்கும் கிராமத்து மதில்களிற்கும் அதிகம் வித்தியாசமில்லை. பாத்திரங்கள் தான் மாற்றமே அன்றி கதைகள் ஒன்றுதான். அடியேன் சுத்த கிராமத்தானாக்கும் புத்தன் நீங்கள் graffiti ஒப்பிடிவது மிகவும் சுவாரசியமானது. கரிக்கட்டையால் மதிலில் கிறுக்குவதற்கும் கிறாபிடிக்கும் ஒற்றுமைகள் நிறையவும் காத்திரமான வேற்றுமைகளும் உண்டு. கிராபிடி ஒரு கலகக்காரனின் இலச்சினையாக இருக்கின்றபோதும் கிறாபிடியில் ஒரு Elitism இருக்கிறது. வித்தகத்தை வெளிக்காட்டுவதில் போட்டியிருக்கிறது. அது எல்லோரிற்கும் உரியதாயில்லை. விதிகளை இந்த வெளிப்பாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அந்தவகையில் அது ஒழுங்குபடுத்தப்பட்ட கலகக்காரனின் முரசாகிவிடுகிறது. செய்திகளையும் உயர்மட்டத்தில் சித்தரிப்பது போட்டியாகிறது. கிறாபிடி வரைபவர்கள் சார்ந்து இரு முடிவுகள் எட்டப்படுகின்றன. ஒன்று, அதை வரைபவர்கள் தங்களை ஆழுமைகளாக, பிரமிப்புக்களாக வளர்த்துக் கொள்வதோடு வளர்ந்தவர்களாகிச் சென்றுவிடுகிறார்கள். மற்றையது, நகரம் அவர்களைக் குத்தகைக் காரர்களாக்கி நாசூக்காகப் பணியில் அமர்த்திவிடுவதால் கட்டிப்போட்டுவிடுகிறது. ஆனால் கிராபிடி வரைபவர்களிற்கும் பரந்தளவில் ஒரு வயதுக்கட்டுப்பாட்டைப் பார்க்கமுடிகிறது. பெரியளவில் இளையோராயிருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). அனேகமான கிராபிடி வரைவோரிற்கு ஒரு சீற்றம் அல்லது குளப்பம் அல்லது தேடல் கூடவே இருக்கிறது. கரித்துண்டிற்கும் கிராபிடிக்கும் நிறைய இன்னும் பல கோணத்தில் ஒற்றுமை வேற்றுமை பேசலாம். நன்றி உங்கள் ஒப்பீட்டிற்கு
 9. கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான். பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடக்கூடாது. அது இதன் நோக்கமல்ல. ஒரு படைப்பாளியாக, விமர்சனங்களைச் சந்திக்கும் பக்குவம் உங்களிற்கு இருக்கும் என்ற அபார நம்பிக்கையில் இதை முன் வைக்கிறேன். மதிலும் கரிக்கட்டையும் நாங்கள் அனைவரும் பதின்மத்தில் அல்லது அதிகபட்சம் இருபதுகளின் ஆரம்பத்தில் ‘மதிலும் கரிக்கட்டையும்’ என்றொரு பருவத்தைக் கடந்து வந்திருப்போம். ‘மதிலும் கரிக்கட்டையும்” என்பதனை வெறுமனே சுவற்றில் கரிக்கட்டையால் எழுதுவதாக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, நமது கருத்து வெளிப்பாடுகளின் தன்மையினை அச்சொட்டாகப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு படிமமாகக் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒரு துணுக்கு நமக்குக் கிடைத்தவுடன் அது சார்ந்து எதிர்வினையாற்றுவது. பொழுதுபோக்குப் பெறுமதியில் நமக்குக் கிடைக்கும் ஒற்றைப் பரிமாணத்தைச் சுவற்றில் எழுதுவது (சுவர் இணையமாகக் கூட இருக்கட்டும்). சுடச்சுட எழுதியதைப் பார்த்து மக்கள் ஆற்றும் அனைத்து எதிர்வினைகளையும் எமது புகழாகக் கருதிக்கொள்ளுதல். ஆனால், எப்போதும் நாம் எவரும் நம்மைப் பற்றிச் சுவற்றில் எழுதுவதில்லை. மாற்றமின்றி மற்றையவரின் கதைகளே கிறுக்கப்படும். காரணம், கதை சார்ந்த பொறுப்பினை நாம் சட்டைசெய்வதில்லை. வரவு முழுவதும் எனக்கு இழப்பு முழுவதும் மற்றையவரிற்கு என்பதான மனநிலையில் செயற்பட்டுக்கொண்டிருப்போம். எவ்வளவிற்கு எவ்வளவு மேற்படி புகழிற்கு நாம் அடிமைப்படுகின்றோமோ அவ்வளவிற்கவ்வளவு நாம் அதிகம் அதிர்வேற்படுத்தும் கதைகளைத் தேடிச்செல்வோம். இந்த “மதிலும் கரிக்கட்டையும்” மனநிலை அதிகபட்சம் இரண்டாண்டுகள் நீடிக்கும். அனேகமாக ஒரு எதிர்பாராத் தருணத்தில் மற்றையவரிற்குத் தமது துணுக்கு ஏற்படுத்திய பாதிப்பின் கனதி இடியாக உணரப்படுவதில் இந்தக் கட்டத்தை நாங்கள் தாண்டுவது வழமையாக இருக்கும். பொதுவாக மிக இழமையில் நாம் இப்பருவத்தைத் தாண்டி விடுவது வழமையாக இருக்கும். குறிப்பாக எமது பிணைப்புக்கள் அது காதலோ, கலியாணமோ, குழந்தைகளோ, பணியோ, பணமோ என அதிகரிக்கையில் சுவரின் தாக்கம் இயல்பாக நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும். மற்றையவர் வலியினை நம்வலியாக உணர்ந்து கொள்ளல் சாத்தியப்படும். அப்படியாயின் மற்றையவர் கதைகளை நாம் பேசவே கூடாதா? ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா? நிச்சயமாக மற்றையவர் கதைபேசுதல் தொன்மை மிகு மானிடத் தன்மை தான். ஆயினும், அனைத்தையும் போல இதன் பாத்திரம் மறக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது. ஊர்வம்பினால் என்ன லாபம்? மனிதனின் தன்மைகளைக் குறிக்கும் படிமங்கள் வேண்டுமாயின் வரையறைக்குட்பட்டதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படிமத்திற்கும் எண்ணற்ற வெளிப்பாடுகள் சாத்தியம். மனிதன் ஒரு சமூக விலங்கு. நன்மையோ தீமையோ பிறருடன் பகிர்வதால் வாழ எத்தனிக்கும் ஒரு விலங்கு. அவ்வகையில் ஊர்வம்புகளின் மிகமுக்கிய பங்கு மனிதனின் தனிமையினைப் போக்குதல். அதாவது, உனக்கு என்னதான் பிரச்சினை உள்ளதாக—அது உடல், உள, உடமை எதுவாக வேண்டினும் இருக்கட்டும்—நீ நினைக்கிறாயோ அது உனக்கு மட்டுமானதல்ல. உன்னை ஒத்த பலர் உலகில் உள்ளார்கள். நீ தனியன் அல்ல. இப்பிரச்சினையில் இருந்து இவ்வாறு அவர்கள் மீண்டுவந்தார்கள் என்பதாக, ஒவ்வொரு தனிமையின் கனம்மிக்க தருணத்திலும் ஒரு கூட்டத்தைக் காட்டுவதில் ஊர்வம்புகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. தன்னைப்போன்ற பிறரை ஒருவர் ஊர்வம்புக் கதைகள் வாயிலாகத் தனது அண்மையில் கண்டுகொள்ளல் சாத்தியம். ஆனால் ஊர்வம்பளப்பவரும் வளருதல் அவசியம். கரிக்கட்டையால் மதிலில் எழுதிய மனநிலையில் ஒரு வளர்ந்த எழுத்தாளர் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வம்பைப் பேசத் துணியின், கதைமாந்தர் பக்க நியாயங்களிற்கும் நியாயம் செய்யவேண்டும். ஏனெனில் ஒருவர் கதையினை அவர் இல்லாதபோது பேசுபவர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பொழுதுபோக்கு கதையின் பொழுதுபோக்கு அம்சத்தைக் கிஞ்சித்தும் கெடுக்காது, அதே நேரம் பொறுப்பாக எழுதல் சாத்தியம். ஆனால் அது உழைப்பினை வேண்டுவது. இதனால் தான் பல சமயங்களில் உண்மை மனிதரின் முகம் அடையாளப்படுத்தப்படமுடியாத வகையில் வம்பில் இருந்து புனைவிற்கு எழுத்தாளர்கள் மாறிக்கொள்கிறார்கள். இல்லை வம்மைப் தான் பேசுவேன் அப்போது தான் எனது கதைக்களம் நான் ரசித்த வகையில் வெளிப்படும் என்று எழுத்தாளர் உணரின், அவசியம் உழைப்புச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தரவுகள் சரிபார்க்கப்படவேண்டும். பார்வைகள் நிறுக்கப்படவேண்டும். பாதிப்புக்கள் எடைபோடப்படவேண்டும். அனைவரிற்கும் குரல் கொடுக்கப்படவேண்டும். இல்லையேல், வழக்குகள் சட்டம் என்பனவற்றிற்கப்பால் மனசாட்சி சாட்டைவீசும். குறைந்தபட்சம் மனசாட்சியின் சாட்டையினை உணரப்பழகல் வேண்டும். மேற்படி தளத்தில் நின்று, சற்றும் குறையாத பொழுதுபோக்கினை வளங்குதல் முற்றிலும் சாத்தியம் என்பதற்கப்பால் அறமும் கூட. புலப்பெயர்வைத் தொடர்ந்த குழந்தைத் தனம் எமது சமூகத்தில் பல வளர்ந்தவர்கள் பதின்ம வயதின் தன்மையில் தங்கிநிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஏகப்பட்ட உளவியல் காரணங்களைக் காரணம் காட்டமுடியும் என்றபோதும், எனது அபிப்பிராயத்தில் இப்பிரச்சினை சார்ந்த முதற்படி எதிர்வினை காரணத்தைக் காட்டல் என்பதல்ல. மாறாக, இப்படி ஒரு பிரச்சினை சமூகத்தில் இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்வதே. அண்மையில் எதேச்சையாக யாழ் இந்துவில் கூடப்படித்த ஒருவரை பலகாலம் கடந்து சந்திக்க நேர்ந்தது. எமது வகுப்பினரிற்கு ஒரு whatsapp குழுமம் இருப்பதாகவும் என்னை இணைக்கலாமா என்றும் கேட்டார். இணைந்தபோது மலைப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பில் இருந்த மனநிலை இன்னமும் அபரிமிதமாக குழுமத்தில் வெளிப்படுகிறது. நாற்பது வயது கடந்தும் பெண்களின் படம் பார்ப்பது அங்கு கிழர்ச்சி குடுக்கிறது. புரியவே இல்லை. பெண்களைப் பிடிக்கும் என்றால், பெண்துணை தேடிக்கொள்வது அத்தனை சிரமமா என்ன? எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார்? எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது? சற்று இதுபற்றிச் சிந்திக்கையில் பதின்மத்தின் பல தன்மைகள் பலரில் நமது சமூகத்தில் அப்படியே தங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மதிலில் கரித்துண்டால் எழுதுவது கூட அத்தகைய ஒரு வெளிப்பாடு தான். இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா? இவ்வாறு பலகேள்விகளோடு இருந்த ஒரு பொழுதில் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மேற்படி விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. அதனால் இந்தப் பதிவு. உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
 10. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், பிரச்சினை என்னவெனில் எமது முன்னோர்கள் (இனம் மொழி எல்லாம் கடந்து அனைவரது முன்னோர்களும்) உண்ட உணவுகள் பார்வைக்கு அவைபோல் இன்றைக்கு உள்ளபோதும், எமது முன்னோர்கள் உண்ட ஒரு உணவைத் தன்னும் இன்று எம்மால் கண்டு கொள்ள முடியாது. இயற்கை விவசாயம் ஏறத்தாளச் சாத்தியமில்லை என்றாகிவிட்டது. நீங்கள் எந்த மருந்தும் அடிக்காது எந்தச் செயற்கை உரமும் போடாது முதுகு முறியப் புல்லுப் புடுங்கி மரம் வளர்;த்தாலும், சூழல் உங்கள் கையில் இல்லை. பக்கத்துக் கமக்காரன் இத்தனை ஏக்கர் தள்ளியிருந்தால் போதும் இயற்கை விவசயாயம் செய்துவிடலாம் என்பது மாறி, இயற்கை விதை சேர்த்துவைத்தால் போதும் என்பது மாறி, காற்றுத் தொட்டு நிலக்கீழ் அடி நீர் தொட்டு எம்மால் இன்றைக்கு ஒரு வட்டத்தைக் கட்டமுடியாதுள்ளது. பறந்து வாற பூச்சி மகரந்தத்தை மட்டும் பரப்பாமல் மருந்தையும் பரப்புகிறது. எல்லாத்துக்கும் மேலால், இந்தக் குட்டிப் புள்ளி பூமிக்குள் மட்டும் அல்லாது, மனிதன் அண்ட வெளியிலும் பல்ட்டி அடிக்கத் தொடங்கிவிட்டான். ஆக சூழல் என்பதை பக்கத்துக் கமக்காரன் எத்தனை ஏக்கர் தள்ளியுள்ளான் என்பதை வைத்து இனிமேலைக்கு ஆராய்வதில் பலனில்லை. ஒரு மனிதன் கழிவே அகற்றத் தேவையற்று, அவனிற்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்களையும் சக்தியினையும் துல்லியமாக அளந்து குளிகைக்குள் அடக்கி விஞ்ஞானம் என்றோ கடந்து போய்வி;;ட்டது. இப்படியான குளிகைகளை மட்டும் சாப்பிட்டால் உயிர் வாழலாம். ஆனால் மனிதன் ஐம்புலன்களாலும் உண்பவன். இங்கு தான் நிழலி இன்னுமொரு திரியில் கேட்ட மனிதனிற்குத் தேடல் அவசியம் தானா என்பது வருகிறது. நாயிற்குக் கிபிள் குடுத்தால் உண்கிறது. ஒரு நாளைக்கு இறைச்சியோ முட்டையோ ஈரலோ கொடுத்தால் அடுத்தநாள் கிபிளைப் பார்த்து முரண்டு பிடிக்கிறது. மனிதனின் முரண்டுபிடிப்பு நாயோடு ஒப்பிடுகையில் பலமடங்கு அதிகம். எனவே குளிசை உண்டு வாழ்வது இப்போதைக்கு விண்வெளிக்கு மட்டும் என்று மட்டும் இருக்கலாம். இந்தப் பிரச்சினை கைகடந்து சென்று விட்டது. மனிதன் மட்டுமே மனிதனிற்கு முரணான அனைத்தையும் உருவாக்கும் ஒற்றைச் சக்த்தி. இதை நினைத்து மன உழைச்சல் அடைவதில் எந்தப் பலனுமில்லை. எமது வாழ்வு மிகவிரைவில் 200 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அந்த 200 ஆண்டுகள் நம் மூதாதை வாழ்ந்த வாழ்வாக இருக்காது. சந்தையினை எம்மால் வெல்ல முடியாது. ஆனால் நாம் செய்யக் கூடியது என்னவென்றால், எது முடிந்தமுடிபான உண்மை என்பதை என்னால் அறியமுடியாது. எது நன்மை எது தீமை என்பதை என்னால் முடிந்தமுடிபாக அறிவித்து விடமுடியாது. கொஞ்சம் உள்ளுணர்வு, கொஞ்சம் அறிவு, கொஞ்சம் ஆசாபாசங்கள், கொஞ்சம் எனது உடலின் பிரதிபலிப்புக்களை உற்றுநொக்கல் என்பதாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் நான் இசைவாகிக் கொள்ள முயல்கிறேன் என்ற ஒரு மனநிலை மட்டுமே இன்றைக்குச் சாத்தியம். இன்றைக்கு உள்ள உலகு தான் உன்னதம் இதைத் தக்கவைத்துவிடவேண்டும் என்று நினைப்பது அசாத்தியம். 19ம் நூற்றாண்டில் பென்ஸ் வந்ததை விட்டுவிடுவோம் 1908ம் ஆண்டில் போர்ட் வந்த போது உலகத்தில் பலர் பயந்திருப்பார்கள். தம் மூதாதை உலகு அழிந்ததாய் உணர்ந்திருப்பர். இன்றைக்கு நாம் நேற்றையினை நினைத்து வருந்துவதும் அவர்கள் அன்றைக்கு வருந்தியதிலும் பெரு வித்தியாசமில்லை. ஆனால் அவர்களது நேற்றைக்கும் எமது நேற்றைக்கும் பாரிய வேறுபாடு. நாளைகள் முன்னர் எமது கற்பனைக்குச் சாத்தியப்பட்டிரா வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எமக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, தெரிவுகள் இன்று வாறதை ரசித்திருத்தல் மட்டுமே. இதையிட்டு நாம் மன உழைச்சலோ வருத்தமோ அடையத் தேவையில்லை. காரணம் முடிந்த முடிபான விருப்பு வெறுப்புக்கள் அகலும் போது மனம் விரிவதோடு வருத்தத்திற்கான அடிப்படை மறைந்துபோகிறது.
 11. உங்கள் கேள்விக்கு ஏகப்பட்ட கோணத்தில் பதிலளிக்கத் தோன்றுகின்றது. நேரம் போதவில்லை. சிலவற்றை இப்போ பதிவிடுகிறேன். 1) மனிதன் “எதையாவது தேடுவோம்” என்று றூம் போட்டு சிந்திப்பதில்லை. தேடல் இயல்பாகப் பிறக்கின்றது. மூச்சிரைக் ஓடிக்கொண்டிருத்தல், வாழ்வாதரப் போராட்டம் மூச்சுவிட முடியாதபடி வைத்திருத்தல், பயம், போதை, மயக்கம், கோபம் போன்று ஏகப்பட்ட விடயங்கள், தேடல் உள்ளதை தற்காலிகமாக மறைத்து வைப்பினும், தேடல் மனிதனின் இயல்பு. எப்ப வரும், எப்பிடி வரும் வந்தால் எப்படிப் புரியப்படும் என்பதற்கெல்லாம் அப்பால் தேடல் அற்ற மனிதன் இயல்பு நிலையில் இல்லை. அந்த வகையில், நீங்கள் சொல்வது போன்றே பார்த்தாலும், வாழ்வைப் பிரித்தாராயாது அதன்பாட்டில் எடுத்தாலும், வாழ்வின் இயல்பான அங்கமான இந்தத் தேடல் இயல்பாய்த் தானே பிறக்கிறது. குகைமனிதன் காலம் தொட்டே மனிதன் தேடிக்கொண்டு தான் இருந்தான். 2) மிருகங்களின் உளவியல் பற்றி எமக்கு இன்னமும் போதிய புரிதல் இல்லை என்பது எனது அபிப்பிராயம். செயற்கை அறிவின் முனைப்பில் இது புரியப்படும் என்பது எனது அனுமானம். அதுவரைக்கும், மிருகங்களிற்குத் தேடலில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் மனிதனிற்கு மட்டும் இந்தத் தேடல் என்ற கேழ்வி மட்டுமல்ல, இது போன்று பல கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஏன் காட்டு விலங்குகளிற்கு ஒபீசிற்றி பிரச்சினையில்லை மனிதனிற்கு மட்டும் தான் இந்த உடல் பருமன் பிரச்சினை என்ற கேள்வியினை எடுக்கலாம். இப்பிடி நிறைய கேழ்விகள் வரும் போதும் அவற்றிற்கான விடைகள் உள்வாங்கப் படுகின்றனவா என்பது கேள்விக்குரியதாகவே தொடர்கிறது. இப்போ காட்டு விலங்குக்கு இல்லாத ஒபீசிற்றி ஏன் மனிதனிற்கு இருக்கு என்ற கேழ்விக்கு “சந்தை” என்ற ஒரு சொல்லு பதிலாகும். ஆனால் அது புரியப்படாது. மாக்ஸ் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பின்னரும் மனிதன் தானும் ஒரு விலங்கு என்பதை மறந்து, புறம்பாகத் தள்ளி நின்று விலங்கோடு தன்னை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறான். எனது அபிப்பிராயம், மனிதன் செய்யும் அனைத்துமே அவனது விலங்குத் தன்மையின் இயல்பின் வெளிப்பாடுகள் தான். முதல் விலங்கு பில்லியன்களான ஆண்டுகள் சுவாசித்ததால் வழி மண்டலம் உருவானது, மனிதனின் நகர்ச்சி என்ன என்பது ஒரு வேளை இப்போதைக்குத் தெளிவின்றி இருப்பினும், மனிதனும் இயற்கையின் உருவாக்கமே. எதேச்சையானதா, திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால் மனிதன் என்ற விலங்கின் இயல்பையே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இயல்பில் தேடல் அடக்கம்.
 12. அனைவரின் கருத்துக்களிற்கும் நன்றி. சுவி, இலக்கு பென்ச்சமின் வீட்டில் தப்பவில்லை. கதையிழந்த கதாநாயகனாக சீலன் ஆகிப்போன ஒன்பது வருடங்களின் முன்னரே அது தப்பிப் போனது. ரதி உங்கள் விமர்சனமத்pற்கு நன்றி. குறியீடுகளைக்கோடிட்டுட் காட்டத் தோன்றியதால் ஒரு வாசிப்பபு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு வாசிப்புச் சாத்தியப்படும். சுகன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆதலால் தான் பின்னையது பின்னிணைப்பாக மட்டும் ஆனது. நன்றி
 13. குறிப்பு: தொடர்கதையினை உறவுகள் எதிர்பார்த்தமையினால், எவ்வாறு இந்தச் சிறுகதைக்குள் முடிவு சாத்தியம் என்ற கேள்வி பரவலாக எழுந்தது புரிகிறது. கதைக்குள் வைத்த சில வர்ணனைகள் கதையினை விளக்கியிருக்கும் என நினைத்தேன், ஆனால் அந்தக்குறியீடுகள் உரிய தெளிவினை அனைவரிற்கும் கொடுக்கவில்லை என்பதை உள்வாங்கிக் கொள்கிறேன். அதனால் வழமைக்கு மாறாக, சிறுகதைக்குச் சாத்தியமான ஒரு வாசிப்பை பின்னுரை ஆக்கிக் கொள்கிறேன். இது முழுவதும் கற்பனை. — ஒன்பது வயதில் சயமதீட்சை நடக்கவேண்டும் என்பதை சீலனின் அம்மாவும் அப்பாவும் அடுத்த கதைக்கு இடமின்றி நம்பினார்கள். 47நாட்கள் விரத அனுட்டானங்களுடன் சீலன் தீட்சை பெற்றுக் கொண்டான். புராணக் கதைகளிலும் சமய பாடங்களிலும் சொல்லப்பட்ட சித்தரிப்புக்களை சீலன் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டிருந்தான். சுவர்க்கமும் நரகமும் சித்திரகுப்த்தனும் சீலனிற்குக் கேழ்விக்கிடமற்ற உண்மைகள். யாழ் இந்துவில் கல்வி சீலனிற்குப்; பொருத்தமாக இருந்தது. ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புச் சோதனை எடுத்து அதி சிறப்புச் சித்தியடைந்தமையினால், ஒரு வருடம் முன்பாக, தனியார் வகுப்புக்கள் வாயிலாகச் சீலன் உயர்தரம் கற்க ஆரம்பித்திருந்தான். மொத்தத்தில் பக்கத்துவீட்டுப் பையன்களின் அம்மாக்கள் உதாரணம் காட்டும் ஒருவனாக சீலனின் வாழ்வு ஆரம்பித்தது. இடையில் தடம் மாறிப்போனது. சீலனின் அறம் மாறிக்கொண்டது. பாவம் புண்ணியம் என்பன சார்ந்து புதிய மனவமைப்பு அவனிற்குப் பயிற்சியானது. துப்பாக்கி அவனோடு ஒட்டிக்கொண்டது. அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிக் காட்டும் பணிகள் சீலனிடம் தெரிந்து கொடுக்கப்பட்டன. துப்பாக்கி விட்டு வெளியேறும் தோட்டா இலக்கைக் துளைத்து வெளியேறிச்செல்லும் அச்சை உணரும் அளவிற்கு அவனது தேர்ச்சி. அவனது பணிகள் ஒற்றைத் தோட்டாவிற்குரியனவாகப் பலசமயம் அமைந்தன. புகழின் மத்தியில் சீலனின் உயர்ச்சி. — தோட்டாவின் அச்சை உணரும் வல்லமை பெற்ற சீலனிற்குக் கனடா வந்துசேர்ந்த பாதை கனவு போல் இருந்தது. வந்துவிட்டோம் என்பது பல சமயங்களில் தெளிவற்ற உண்மையாக இருந்தது. நாளைக்குப் பதினாறு மணிநேரம் வேலை கிடைத்தது. ஊதியம் தேவைக்கு அதிகமாயிருந்தது. ஆனால் இன்னமும் எட்டு மணிநேரம் நரகமாய் இருந்தது. இரவு விடுதிகளில் விழித்திருந்தோரோடு சீலன் விழித்திருந்தான். அதிகபட்சம் இருமணிநேரம் தூங்கினான். — அந்த நிர்வாண நடனகூடத்திற்குள் முதற்தடவை சீலன் எதேச்சையாய்ச் சென்றிருந்தான். அவன் எதிர்பார்த்திரா வண்ணம், கூட்டத்திற்குள் தனிமையாய் இருத்தல் அங்கு அவனிற்குச் சாத்தியப்பட்டது. வெளிச்சத்திற்குள் இருள் அவனிற்கு அங்கு கிடைத்தது. நாளாந்தம் வேலை முடிந்ததும் அம்மண்டபத்தில் அவன் பிரசன்னம் வாடிக்கையானது. அவனது கண் எங்கேனும் நிலைகுத்தியிருக்கும். உடல் உட்கார்ந்திருக்கும். ஆனால் மனம் இப்போதெல்லாம் அவன் பிடியில் இல்லை. ஏதேச்சையாய் ஒரு நாள் நிலாவின் பெயரறிவித்து நிலா கம்பத்தைப் பிடித்து நடனமாடியபோது, அவன் அடக்க முடியாது சிரித்தான். அதனால் மண்டபத்தில் இருந்து அன்றைக்கு அவன் அப்புறப்படுத்தப் பட்டான். கம்பத்தில் நிலா நிர்வாணமாய் ஆடியமை ஒரு குறியீடாய், அவன் வாழ்வை, அவனிற்கு மிக நெருக்கமாய் அவன் கட்டிக் காத்த பெறுமதிகளை அவன் முன் விரித்தமை தான் அவனது சிரிப்பின் காரணம். ஏறத்தாள அந்த நிர்வாண நடனத்தின் கணத்தில் அவனிற்குள் ஒரு கணநேர மாயையில் இருந்து நிர்வாணம். அதனால் அடக்கமுடியாத சிரிப்பு. ஆனால் வெளியில் தள்ளப்படுகையில் மீண்டும் உறைந்தபார்வை மீண்டு கொண்டது. அடுத்த நாளும் அதன் பின்னும் தொடர்ந்து அந்த மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தான். —- வழமை போன்றுதான் மூன்று மாதங்களின் முன்னொருநாள் வேலை முடித்து நேரடியாக மண்டபம் வந்திருந்தான். இரவு ஒன்பது மணியிருக்கும். இவனது உறைந்த பார்வையினை உருக்கிய காட்சி உள்ளேறி மறைந்தது. உறைவு முற்றாய் உருகிப் போனது. எங்கிருந்தோ ஒரு பழைய குவியம் உள்ளிற்குள் புகுந்து கொண்டது. தூசுபடிந்து கிடந்த றோபோட் ஒன்றிற்கு இயங்கும் கட்டழை எதிர்பாரா வண்ணம் கிடைத்ததுபோல் எழுந்து நின்றான். தன்னை உறைநிலை விட்டு மீட்டு வந்த கணநேரக் காட்சியின் நீட்சியினைத் தேடி மண்டபத்துள் நடந்து கண்டும் கொண்டான். தெளிவாகப் பார்க்கக் கூடிய கோணத்தில் ஒரு புதிய மேசையில் அமர்ந்து கொண்டான். தான் எத்தனை நாள் பின்தொடர்ந்த உயர் இலக்கு அது. அருகாய்ச் சென்றும் அணுகமுடியாது போன பழங்கணக்கு. அதைக் கண்ட மாத்திரத்தில் அவன் விட்ட இடத்தில் இருந்து இயங்கத் தொடங்கினான். அவர்கள் உட்காhந்;திருந்த மேசையினை வைத்த கண் வாங்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவர்கள் கதைப்பதைக் கேட்கும் சக்த்தி மீண்டும் அவனிற்குள் எழுந்தது. புதிதாய் இருவர் அவர்களின் மேசைக்கு வந்தார்கள். ஒருத்தி நிலா. மற்றையவன் அம்மண்டபத்தின் உரிiமாயளன் என்பதைக் அவர்களின் அறிமுகம் கொண்டு அறிந்து கொண்டான். அப்போது தான் பென்ச்சமினை முதற்தடவை அவன் பார்த்தான். மண்டபம் மூடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னாய் இலக்கு பென்ச்சமினைத் தழுவி விடைபெற்றுச் சென்றது. தோட்டா அற்ற துப்பாக்கியாய் அவன் அமர்ந்திருந்தான். அன்றைய இரவு அமைதியாய் முடிந்தது. —- சீலன் பதினாறு மணி நேர வேலையினை எட்டுமணியாகக் குறைத்துக் கொண்டான். அவனிற்கு ஒரு துப்பாக்கி தேவைப்பட்டது. அதற்கான தேடல் ஒரு புறமிருக்க, பென்ச்சமினின் வீட்டைக் கண்டு பிடித்தல் அவசியப்பட்டது. இலக்கு பென்ச்சமினிற்கு நெருக்கமானவன் என்பதையும் இன்னும் பல விடயங்களையும் அன்றைய இரவில் அம்மண்டபத்தில் அவன் ஒட்டுக்கேட்பில் உய்த்தறிந்திருந்தான். இலக்கை அடைவதற்குப் பென்ச்சமினைக் கவனித்தல் சீலனிற்கு அவசியமானது. பென்ச்சமின் ஒரு தமிழன் என்றறிந்தபோது தன்னையறியாது உள்ளுர ஒவ்வாமைகள் எழுந்ததை சீலனின் குவியம் குறித்துக் கொண்டது. ஆனால் இலக்கு என்னவென்பதில் சீலன் தெளிவாய் இருந்தான். இரண்டு மாதங்களின் தேடல் ஒரு துப்பாக்கியினை சீலனிற்குப் பெற்றுக் கொடுத்தது. நேரத்தை உச்சப்பயன் படுத்துவதற்காய் ஒரு பழைய காரினை வாங்கிக் கொண்டான். மூன்று மாதங்களாய் பென்ச்சமினின் வாழ்வு சீலனின் கவனத்திற்குள் இருக்கின்றது. உள்ளே ஒரு முறை செல்வது இலக்கு பற்றிய புதிய தகவல்கள் எதையேனும் கொடுக்கும் என சீலன் நம்பிய போதும், பணக்கார வீடு, ஏகப்பட்ட கமராக்கள். அரை மணிநேரம் முன்னர் சீலன் அங்கு வந்திருந்தான். ஏனோ இன்றைக்கு அவனால் வீட்டின் உள் செல்ல வேண்டிய உந்துதலை அடக்கமுடியவில்லை. மணியினை அழுத்தினான் — அவ்வீட்டின் கூடத்தின் சுவரில், ஜேசுநாதர் தனது பன்னிரு சீடர்களுடன் உண்ட “கடைசி உணவு” சித்திரம் போன்று ஒரு சித்திரம். ஆனால் சித்திரத்தில் ஜேசு இல்லை. பென்ச்சமின், இலக்கு மற்றும் பலர் மகிழந்து உணவருந்திக்கொண்டிருந்த புகைப்படம். தனக்கு வழங்கப்பட்ட திட்டம் இலக்கு. பென்ச்சமினும் நிலாவும் தான் எதிர்பாரா வண்ணம் தனக்கும் எழுந்த ஒவ்வாமைகள். இவ்வொம்மாமை சார்ந்து தானாக முடிவெடுத்து அவர்களை கொல்ல கட்டழை இல்லை. எதற்கும் ஒரு முறை, சங்கேத பாசையில் தனது தொடர்போடு தொடர்பெடுத்துக் கேட்டுவிடலாம் என்றது மனம். பென்ச்சமினின் தொலைபேசியில் தனது மனதில் அழியாதிருந்த இலக்கத்தை அழுத்துகிறான் —- “யார் தம்பி நீங்கள், என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” என்பது பென்ச்சமின் கேட்ட கேழ்வி தானா என்பதை சீலனால் நிச்சயமாகக் கூற முடியாது. அது அவனிற்குள் முன்னொரு பொழுதில் ஏறி உட்கார்ந்து கொண்ட, அப்பப்போ தொல்லைப் படுத்தும் ஒரு கேள்வி. பென்ச்சமினும் அதனைக் கேட்டிருக்கக்கூடும். சித்திரத்தைப் பார்த்தபோது, இலக்கு மீண்டும் மனதுள் சென்றபோது, தோட்டா பென்ச்சமினின் தலையைத் துழைத்துச் சென்று சித்திரத்தில் இருந்த இலக்கின் நெற்றியில் ஏறியது. கண்ணாடி உடைந்தது, ஆனால் புகைப்படம் சுரில் தோட்டவோடு தங்கி நின்றது. இலக்கு நெற்றியில் பொட்டோடு கம்பத்தில் தொங்கியது போலிருந்தது. இப்போது நிலாவைச் சுடும் அவசியம் சீலனிற்குள் மறைந்து போனது. போதையின் பிடியில், சத்தங்களிற்குள் வாழப் பழகிய நிலாவிற்கு துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது நிற்கும் அவசியம் எழவில்லை. பச்சை குத்தப்பட்ட குதிரையில் அவள் பயணித்துக்கொண்டிருந்தாள்.
 14. அனைவரின் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. இது தொடர்கதை அல்ல. கதை முடிந்து விட்டது. நானே பொழிப்புரை எழுதின் சரியாக இருக்காது. எனவே வாசகர் கையில் விட்டுவிடுகிறேன். இந்த வாரம் நான் சந்தித்த ஒரு விடயம் தந்த இன்ஸ்ப்பிறேசனை வைத்து ஒரு திரைப்படப் பாணியில் பதிவு. எப்போதும் போல, எழுத ஆரம்பித்ததும் மனதின் இடுக்களில் ஒளிந்திருந்த திட்டமிடாத சங்கதிகளும் தமக்கு ஏதுவான பந்திகளில் வந்து அமர்ந்து கொள்ளும். அது இங்கும் நடந்தது. மற்றையபடி ஒரு சந்திப்பு ஏற்படுத்திய அதிர்வு தான் இக்கதைக்கான காரணம்.
 15. அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது பெண் குறிக்கு வழிகாட்டுவது போன்று அவளது பூப்பின் முடி சீராகப் பராமரகிக்கப்பட்டு மற்றைய இடங்களில் முடி அகற்றப் பட்டிருந்து. நிலாவின் முகத்தில் மழையில் நனைந்த நந்தியாவட்டை மலரின் குளிர்ச்சி இருந்தது. ஆனால் மழை ஓய்ந்த பின்னர் சிலிர்க்கும் இலை நீர் போன்று கண்ணீர் முற்றாகக் காயவில்லை. பெற்றோள் தீர்ந்துவிட்டது, பெற்றோள் சாவடி செல்லும் வரைக்கான பெற்றோள் கிடைக்குமா எனக் கேட்பதற்காகத் தான் வந்ததாக, தெருவில் நின்ற தனது காரைக் காட்டி சீலன் கேட்டான். தேனீர் பருகுகிறாயா என நிலா கேட்டாள். முன்னறிமுகம் சற்றுமற்ற நிலா இத்தனை இயல்பாய் உபசரித்தது சீலனின் மூளையில் பதியவில்லை. அவளிற்கு அவனைத் தெரியாதிருக்கலாம் ஆனால் அவன் அவளைக் கடந்த மூன்று மாதங்களாக வேவு பார்க்கிறான். ஆதலால் பரிட்சயமானவளிடம் தேனீர் சம்மதித்தான். மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த விலையுயர் கதிரையில் அமர்ந்து சுவரில் இருந்த சித்திரத்தைச் சீலன் பார்த்துக்கொண்டிருந்தான். தேனீருடன் வந்தவள் அவனருகில் அமர்ந்து தேனீர் பரிமாறினாள். ஆடையற்றிருந்த அவளது பாகங்கள் எவர் கவனத்தையும் பெறவில்லை. பென்ச்சமின் கண்ணைக் கசக்கிக் கொண்டு தூக்கம் முறித்தபடி கூடத்திற்கு வந்தான். சீலன் பெற்றோள் கேட்டு வந்திருப்பதாக நிலா சொன்னாள். வீட்டின் பின் பகுதியில் காலடி ஒலி கேட்டது. ஒரு ஆணும் பெண்ணும் கூடத்திற்குள் வந்தார்கள். அவர்கள் போதையில் இருந்தார்கள். நாற்பதுகளில் வயதிருக்கும். பெண் வெள்ளை நிறத்தில் மிருதுவான விலையுயர் ஆடை உடுத்தியிருந்தாள். அவள் ஒரு சீனப் பெண். அவன் குள்ளமாக இருந்தான். வெள்ளை முடி சவரம் செய்யப்படாது அவனது முககத்தில் இரு நாளின் கதைசொல்லிக் குத்தி நின்றது. குட்டை நரைமுடி அவன் மண்டையில். அவனது கண்களில் சோபை இல்லை. தனிமை அவற்றுக்குள் படர்ந்திருந்தது. சீனப் பெண்ணும் வந்தவனும் தம்பதியர் என நம்ப முடியாத தம்பதியராக இருந்தனர். சீலனிற்கு அவர்களைத் தெரியாது. "எங்கிருந்து வருகிறாய்" என பென்ச்சமின் சீலனைக் கேட்டான். தான் ஒரு வியாபாரப் பயணத்தில் பாதை தவறவிட்டதனால் இவ்வழி செல்வதாயும், கன தூரம் பெற்றோல் நிலையமெதுவும் வரிவில்லை எனவும் கூறினான். "நீ கனடாவிற்குப் புதியவனா, ஆங்கிலம் தற்போது தான் கற்கின்றாயா" என்றான் பென்ச்சமின். சீலன் அவனிடம் உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ளலாமா என்றதும் பென்ச்சமின் சீலனிடம் தன் கைப்பேசியினைக் கொடுக்க, அதை வாங்கிய சீலன் இலக்கங்களை அழுத்துகிறான். பின் தமிழில் உரத்து யாருடனோ பேசத் தொடங்கினான். “ரெண்டுபேரும் நிக்கினம். ஆரோ ஒரு புதுச் சப்பைப் பெட்டையும் என்னண்டு சொல்லமுடியா ஒருத்தனும் எதிர்பாராமல் நிக்கிறாங்கள். போட்டுட்டு வெளிக்கிடவா” என்று கூறி, பதிலைக் கேட்ட பின்னர் தொலைபேசியினை பென்ச்சமினிடம் கொடுக்கிறான். பென்ச்சமினின் முகத்தில் வியர்வை ஊற்றெடுத்தது. அருகில் வந்த மற்றையவன் பென்ச்சமினின் கைப்பேசியினை வாங்கிப் பார்த்துவிட்டு, “இவன் சும்மா இலக்கங்களை அழத்தியிருக்கிறான் ஆனால் கோல் அடிக்கேல்ல. சும்மா நடிச்சிருக்கிறாண்ட்டா” என்கிறான். சீனப் பெண் கதிரையில் அமர்ந்து கொள்ள, பென்ச்சமினும் மற்றையவனும் சரளமாய்த் தமிமிழில் உரையாடுகிறார்கள். பின்: “யார் நீ. உனக்கு என்ன பிரச்சினை. யுhரைப் போடப் போறாய். ஏங்க துவக்கு வச்சிருக்கிறாய்” என்று அடுக்கடுக்காய் பென்ச்சமின் சீலனைப் பார்த்துக் கேட்கிறான். சீலன் மற்றையவனைப் பார்த்து "உனது பெயரென்ன" என்கிறான். யாரும் ஆயுதம் எதனையும் எடுக்காதபோதும், சீலன் துப்பாக்கியினைப் பிடித்திருப்பது போன்ற தோரணையில் சீலனின் கேள்விகளிற்கு மற்றையவன் கண்ணுங்கருத்துமாய் ஒரு கதையினையே பதிலாககச் சொன்னான்: "மட்டக்களப்புச் சொந்த ஊர். கில்பேர்ட் றையன் என்ற்ர பேர். அம்மா தமிழ். அப்பா பேகர். பின்ன நாங்கள் தமிழ் தான் கதைக்கிறது. அங்கையிருந்தால் இயக்கங்களில சேர்தாலும் எண்டிட்டு அனுப்பி விட்டாங்கள். பல நாடு அடிபட்டு பிறகு கனடா வந்தன். இஞ்சதான் இவவைக் கண்டது. இவ இஞ்ச தான் பிறந்த மூண்டாம் தலைமுறை. சைனாப் பாசை தெரியாது. இங்கிலிசில தான் நாங்கள் கதைக்கிறது. நாலு பிள்ளையள். மூத்த மூண்டும் பெட்டையள். கடைசி பெடியன். பெட்டையள் தாயோட தான் நெருக்கம். அவளவை என்னோட கொஞ்சம் தூரமாய்த் தான் இருக்கிறாளுவள். பின்ன கடையிப் பெடியரோட தான் நான் கதைக்கிறது. அவரிற்குக் கொஞ்சம் தமிழ் விழங்குது." சீலனின் இதயத்தில் இரண்டுதலைமுறைத் தனிமை நுழைந்து அழுத்தியது. மட்டக்களப்புத் தமிழிச்சி பேகரைக் கட்டிப் பட்ட தனிமையும், கில்பேட் சீனாக்காறியைக் கட்டிப்பட்ட தனிமையும் சீலனிற்குள் உணரப்பட்டது. நிலா தேனீருடன் உண்பதற்கு கேக் கொண்டு வந்து வைத்தாள். அவள் தொப்புள் முதல் பாதம் வரை ஆடையின்றி இருந்தமை எவரின் கவனத்தையும் பெறவில்லை. “யார் தம்பி நீங்கள். என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” பென்ச்சமின் மீண்டும் கலவரத்துடன் சீலனைக் கேட்டான். சீலன் உறைந்த பார்வையினை பென்ச்சமின் மீது பொருத்தி நிலைகுத்தியிருந்தான். நிலா எழுந்து மீண்டும் சமயலறை நோக்கிச் சென்றாள். அவளது வலது பிட்டத்தில் குதிரை பச்சை குத்தப்பட்டிருந்தது. ஒரு தோட்டா பெனச்சமனின் தலை புகுந்து வெளியேறி கூடத்தின் சுவரில் இருந்த சித்திரத்தின் கண்ணாடியினை நொருக்கியது. நிலா நில்லாது நடந்து கொண்டிருந்தாள். சீலன் கதைவைத் திறந்து வெளியேறினான். கில்பேட் “பின்ன இவன் யார்? ஏன் சுட்டான்” என்று திருப்பத்திருப்ப ஈனக்குரலில் கேட்டபடி கதிரையில் அமர்ந்திருந்தான். சீனப் பெண், அலறியபடி கூடத்தைச் சுற்றிச் சுற்றிச் செக்குமாடு போல் ஓடிக் கொண்டிருந்தாள்.