Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Innumoruvan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  790
 • Joined

 • Last visited

 • Days Won

  14

Everything posted by Innumoruvan

 1. எனக்கும் யாழ் களத்தில் பலரது கருத்துக்கள் பிடிக்கும். தொடர்ந்து யாழ் களம் வருவதற்கு கருத்தாளர்களே உந்துதலாக இருக்கிறார்கள். சட்டென்று பத்துப்பேரைக் கூறுவதால் மற்றையவர்களைப் பிடிக்காது என்பதல்ல, பின்வருவோர் உடனடியாய் ஞாபகத்திற்கு வந்த் பெயர்கள் (வரிசைப் படுத்தவில்லை) கிருபன், சுகன், பூனைக்குட்டி, சினேகிதி, கலைஞன், நிழலி, ரதி, இசைக்கலைஞன், சாணக்கியன், தமிழிச்சி இப்போதைக்கு உடனே நினைவில் வந்தவர்கள். இசைக்கலைஞனோடு நேரடியாக விவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் இல்லை, ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு பல இடங்களில் மிகவும் இரசிக்கும் படி இருக்கும். எனது ஞாபகம் சரி எனின் முன்னர் இசைக்கலைஞனின் கையொப்பத்தில் பின்வரும் வாசகம் இருந்தது: “டைகரோட எயிமு டமில் ஈழம் ஸ்டேட்டு”. பலருடன் இதைப் பகிர்ந்து சிரித்துள்ளேன். கிருபன் -- கருத்துக்களில் எப்போதும் ஒரு நிதானம், அதாவது கருத்துக் கூறுவதற்கு முன்னர், கூறப்பட்ட விடயத்தைக் கிரகித்துக்கொண்ட நிதானம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பேசுவதற்கு முன்னர் கேட்பது அவசியம். கிருபனிற்கு இப்பக்குவம் நிறைய உள்ளது. மற்றும் வாசிப்பனுபவம் நிறையவே தென்படுகிறது. சுகன்: சிந்தனைத் தெளிவும் வாசைன அனுபவமும் கிருபனை ஒத்த நிதானமும் கருத்துக்களில் ஒரு உண்மையும் இருப்பது சிறப்பு. நிழலி மற்றும் கலைஞன்: நான் பார்த்தவரை தம்மை அறிந்தவர்களாக இவர்கள் வெளிப்படுகிறார்கள். எனக்கு இது பிடிக்கும், எனக்கு இது பிடிக்கும் என்று கூறுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை என்ற சிந்தனை உடையோர். மற்றும் ஒரு பிரச்சினை ஏற்படுகையில் துவண்டு விடாது அதை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக பிரச்சினையை கிரமமாக எதிர்கொள்பவர்களாக இவர்களது கருத்து வெளிப்படுகின்றது. மற்றும் இவர்களது இரசிப்புத் தன்மை மற்றையவர்களில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பெரும் இரசிகர்கள். பூனைக்குட்டி மற்றும் சினேகிதி: எனக்கு உளவியல் மற்றும் தத்துவார்த்த விசாரணைகளக் பிடிக்கும். இவர்களிற்கும் இம்முனை பிடித்த முனையாய் எனது பார்வையில் தென்படுகிறது. இருவரோடும் விவாதங்களில் ஈடுபட்டமை நினைவில் உண்டு. இவர்களோடு விவாதிக்கையில் எமக்குள் சிந்தனை அதிகம் தேவைப்படுவது மகிழ்ச்சியான அனுபவம். சுhணக்கியன்: சாணக்கியனோடு விவாதிப்பது எனது பார்வையில்; அரசியல் மற்றும் கொள்கை நிலைகளிற்கு அப்பால் சுவாரசியமானது. சொல்கின்ற கருத்தை உள்வாங்கி விவாதிக்கும் பக்குவம் சுhணக்கியனிற்கும் உள்ளது, மற்றும் தனது கருத்துநிலை ஒரு விவாதத்தில் தற்காலிகமாகவேனும் வெல்லத் தவறுகிறது என்கையில் அவ்விவதாத்தைப் பொறுத்தவரை ஏனும் தனது கருத்துநிலையைத் தன்னால் அடித்துக்கூறமுடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வித்தகத்தனமும் சாணக்கியனிடம் உள்ளது. ரதி: ரதி இயல்பாக நட்பான சுபாவம் உடையவராய்த் தெரிகிறார். கொஞ்சம் இன்னசென்ஸ், கொஞ்சம் பயம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வெளிப்படை மொத்தத்தில் எனது பார்வையில் ரதி ஒரு girl next door போன்றுவர். தமிழச்சி: தாயகம் தொடர்பான கனேடிய தமிழர் செயற்பாடுகளில் எனக்கும் பலவருட நேரடி பட்டனுபவம் உள்ளது. தமிழச்சியின் கருத்துக்களை வாசிக்கையில் இத்தகைய அனுபவம் அவரிற்கும் (அதுகும் ஓரே காலகட்டத்தில்) இம்முனையில இருப்பதோடு பல விடயங்களில் இம்முனை தொடர்பில் நான் பெற்றுக் கொண்ட அதே பட்டறிவு அல்லது முடிவுகைளையே தமிழச்சியும் பெற்றுள்ளதாய்த் தோன்றுகின்றது. மேலும் உளவியல் தத்துவம் என்ற முனைகளிலும் தமிழச்சிக்கும் நாட்டமுள்ளமையும் அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது. மேற்படி பத்துப் பேரில் எவரையும் நேரடியாக எனக்குத் தெரியாது. இது இந்த அவதாரங்கள் பற்றிய எனது அவதாரத்தின் எண்ணம் மட்டுமே.
 2. ஞாபகப் படுத்தியமைக்க நன்றி. ஆடிக்கூழ் எவ்வாறு நம் பண்பாடு ஆனது. ஆடிக்கூழின் தனித்துவம் (அதற்குள் இடப்படும் மாவுருண்டைகள் முதலிய தனித்துவங்கள்) எதனைச் சித்தரிக்கின்றது முதலிய தகவல்கள் அறிந்தவர்கள் அறியத்தரமுடியுமா? (பதிவாகவோ தனிமடலாகவோ) நன்றி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.