யாழுக்கு திரும்பி செல்வோம் என்று பல முறை நினத்ததுண்டு ,எனக்கு ஏற்பட்ட மனதாங்கலை விட நேரத்தை மீண்டும் போய் அதிக நேரம் யாழில் செலவழித்து விடுவேன் என்ற பயம் தான் யாழுக்கு திரும்பாமல் என்னை தடுத்தது .சில உறவுகள் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நேற்று ஒருவர் திரும்ப திரும்ப கேட்க சில மாதங்களின் யாழை திறந்து பார்த்தேன் .பல மாற்றங்கள் பார்க்க ஏதோ எனது பழைய வீட்டிற்கு சென்ற உணர்வு .
சசி, இந்த பாடலை வேறு இணைத்திருந்தார் .நான் சங்கீதம் படிக்கவில்லை ஆனால் நாலாம் வகுப்பில் சங்கீதம் ஒரு பாடம். அந்த ஆசிரியையின் பூட்டி தான் இந்த பாடகி.எனது அம்மாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக இருந்தததால் குடும்ப சிநேகிதம் மாதிரி.டீச்சரின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கின்றார்கள். டிச்சரின் மகள் பவானி ,பவானியின் மகள் மீனாட்சி ,மீனாட்சியின் மகள் தான் இவர் .இவர்கள் எவருடனும் தொடர்பில் இல்லை .
உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .