-
Posts
25922 -
Joined
-
Last visited
-
Days Won
232
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by suvy
-
ஆக்கமும் ஊக்கமும் தந்து கருத்துக்களால் மகிழ்விக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி......எனக்குப் பல புதிய உறவுகளும் வந்து வாசிப்பதும் கருத்துக்கள் பகிர்வதும் சந்தோசமாய் இருக்கு......! 💐
-
அமெரிக்க மிசுசிப்பி மாநிலத்தில் சூறாவளி தாக்கி குறைந்தது 23 பேர் பலி.
suvy replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
அதுதானே இதுவும் நல்லா இருக்கு.......நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்னுதானே பிரியன்......! 😂 -
வணக்கம் வாத்தியார்......! ஹே, மதுர வீர அழகுல மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே வாடி என் கருப்பட்டி பாத்தா பத்தும் தீப்பெட்டி மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே மாருல ஏறிட இடந்தா மீசைய நீவுற வரந்தா உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா (ம் வர போறேன்டா) உன் கூட வரேன்டா (உன் கூட வரேன்டா) தேனி மொத்தம் பாக்கத்தான் தங்கமே உன்ன தூக்கித்தான் மொத்த தேனைத்தான் நான் மொண்டு ஊத்தவா ஊரே கண்ணு போடத்தான் மாமன் உண்ண கூடித்தான் புள்ள நூறுதான் நான் பெத்து போடவா கொடை சாஞ்சேனே கொம்பன் நான்தானே கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி.இ ஒன் கூட வரேண்டி (ஒன் கூட வரேண்டி) ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேண்டி).....! --- மதுர வீரன் அழகுல---
-
ஜெகதீஸ்வரா ......! 😍
-
30 வருடங்களுக்கு முன் சுஜாதா எழுதியது.......! 👍
-
மலர்.......(6). சங்கருக்கும் இராசம்மாவுக்கும் மனசுக்குள் ஒரே குற்றவுணர்வாய் இருக்கிறது. நிர்மலாவின் பெற்றோரும் அவளைத் தேடி அங்கு வந்திருந்தார்கள்.இருபகுதியினரும் சண்டை பிடித்து வாக்குவாதப் பட்டு பின் தனித்தனியே சென்று போலீசில் நிர்மலாவை காணவில்லை என்று புகார் குடுத்து விட்டு வந்திருந்தார்கள். இவ்வளவுக்கும் சங்கரின் புது மனைவியான ஜோதி அவர்களின் கண்களில் படவேயில்லை. நிர்மலாவின் தந்தை சண்முகம் போகும்போது சங்கரிடம் இதை தான் இப்படியே விடப் போவதில்லை நீங்கள் கெதியா என்ர பிள்ளையை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப் போடுவன் என்று எச்சரித்து விட்டுப் போகிறார். இவை எதைப் பற்றியும் ஜோதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் அவள் பெற்றோர் அவளை வேலையையும் நிறுத்தி விட்டு கொழும்பில் இருந்து கூட்டிக் கொண்டு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஜோதியின் தகப்பன் கஜேந்திரன் இராசம்மாவுக்கு துரத்து உறவு. ஜோதி கொழும்பில் ஒரு சர்வதேசங்களுடன் தொடர்புடைய கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தோடு நல்ல வேளையில் இருக்கிறாள். முதன் முதல் வீட்டில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போகும்போது பதவிசாக நல்ல மாதிரித்தான் போனவள். அங்கு அவர்களின் உறவினர் ராசன் வீட்டில் இருந்து கொண்டுதான் பேரூந்தில் வேலைக்குப் போய்வாறவள். காலப்போக்கில் கூட வேலை செய்ப்பவர்களின் சகவாசத்தாலும் மற்றவர்கள் போல் மிகவும் வசதியாக வாழவேண்டும் என்னும் இச்சையாலும் சின்ன சின்ன பார்ட்டிகள், அங்கு அவர்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துதல் என்று தடம் மாறுகிறாள். அவள் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வருவதாலும் சில நாட்கள் வெளியே தங்கிவிட்டு வருவதாலும் அதை ராசன் கண்டிக்க அவர்களுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பி சக தோழியுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறாள். சமீபத்தில் ஒருநாள் கஜேந்திரனுக்கு அவரது கை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசியவர் நீங்கள் கஜேந்திரனோ பேசுவது என்று வினவ, ஓம்....நீங்கள் யார் கதைக்கிறது என்று கேட்கிறார். ஐயா உங்களது மக்கள் ஜோதி கொழும்பாஸ்பத்திரியில் இன்ன வார்ட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான நோயில் இருக்கிறா. அதுதான் உங்களுக்கு தெரிவிக்கிறன் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே கஜேந்திரன் பதற்றத்துடன் மனைவி சுகுமாரியிடம் விஷயத்தை சொல்ல அவளும் பதறி இஞ்ச அப்பா இப்ப நீங்கள் கோபத்தை பாராட்டாமல் ராசனுக்கு அழைப்பெடுத்து என்னெண்டு போய் பார்க்கச் சொல்லுங்கோ. நாங்களும் உடனே போக வேணும் என்கிறாள். அவரும் ராசனுக்கு அழைப்பு விட அவனும் எடுத்து என்ன மாமா என்கிறான். --- தம்பி ராசு நான் மாமா பேசுறன்.....என்ன சொல்லுங்கோ மாமா.(ராசன் வீட்டில் இருந்துதான் ஜோதி வேலைக்குப் போய் வந்தவள்). --- அப்பன் குறைநினைக்காத இப்ப உங்கிருந்து ஒரு ஆள் யாரென்று தெரியாது போன் எடுத்தவர். என்னண்டால் எங்கட மகள் ஜோதி எதோ வருத்தமாய் ஆசுபத்திரியில் இருக்கிறாவாம். உனக்கு தெரியுமே. --- எங்களுக்குத் தெரியாது மாமா, விவரத்தை சொல்லுங்கோ நான் போய் பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறன். --- அவர் விபரங்களை விளக்கமாய் சொல்லிவிட்டு, குறைநினைக்காமல் ஒருக்கால் போய் பார்த்துவிட்டு எங்களுக்கு சொல்லு தம்பி. இங்க தாயார்காரி ஒரே அழுகையோடு இருக்கிறாள். --- ஒரு குறையுமில்லை மாமா, நான் இப்பவே சென்று பார்த்துவிட்டு சொல்லுறன். தொடர்பு துண்டிக்கப் படுகிறது.கொஞ்ச நேரத்தில் கஜேந்திரனுக்கு அழைப்பு வருகிறது. ராசன்தான் அழைக்கிறான். --- ஹலோ மாமா உங்களுக்கு வந்த செய்தி உண்மைதான். அவ இப்பவும் ஆசுபத்திரியில்தான் இருக்கிறா. குளுக்கோஸ் ஏத்துப்படுகுது. எதுக்கும் நீங்கள் இங்கு வாறது நல்லம் என்கிறான். உடனேயே கஜேந்திரனும் சுகுமாரியும் காரில் இரவிரவாக ஓடி கொழும்புக்கு வருகிறார்கள். பொழுது பல பலவென விடிந்து விட்டது. நேராக ஆஸ்பத்திரி சென்று மகளைப் பார்க்கிறார்கள். அவள் கட்டிலில் கிழிந்த நாராய் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். குளுக்கோஸ் எல்லாம் கழட்டி விட்டு விட்டார்கள். அங்கு அவள் அறைக்கு வந்த வைத்தியரிடம் விசாரித்த போது அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்கிறார், இப்ப இந்தப் பெண்ணுக்கு மூன்றாவது முறையாக "அபார்சன்" ஆகியிருக்கு. முன்பே எச்சரித்து இருந்தோம். இனி இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பது கடினம்.இன்றைக்கே நீங்கள் பில்லை கட்டிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு போகலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்றே அவளிடம் கஜேந்திரன் உனக்கு இங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒழுங்கா வேலை செய்வாய் என்று அனுப்பினால் நீ இங்க விசர் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாய் என்று பேசிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து விட்டார். இது நடந்து சில மாதங்களில் இந்த இராசம்மாவின் சம்பந்தம் தானாக தேடிவர, ஜோதிக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி அவசரம் அவசரமாக கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இராசம்மா அவர்களிடம் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஜோதியை சங்கருக்கு இரண்டாவது மனைவியாக கலியாணம் கட்டி அழைத்து வந்தவள். இரண்டு வீட்டாரும் மிகவும் பணக்காரர்களாக இருந்தபடியால் யாரும் இதைப் பெரிதாக்கவில்லை. மணமக்கள் சங்கரின் வீட்டுக்கு வந்த நேரம் நிர்மலா இல்லாததும் அவர்களுக்கு வசதியாகி விட்டது. இதை இராசம்மா சிறிதும் எதிர்பார்க்க வில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தன்னுடைய வீட்டுக்குத்தான் போவாள், கொஞ்ச நாளில அங்கு சென்று அவளை அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். இப்படியே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜோதியும் புகுந்த வீட்டுடன் நன்றாக ஒன்றிப்போய் விட்டாள். நிர்மலாவைப் பற்றி அவர்களுக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. மலரும்........! 🥀
-
வணக்கம் வாத்தியார்......! காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி... பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி......! ---அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி---
-
யானை தந்தம் போலெ........! 😍 416 Partager Télécharger Extrait 84 855 vues 22 août 2014 "யானைத் தந்தம் போலே பிறைநிலா"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. லீலா பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.எஸ். சரோஜா ************************************************************************************* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின. அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர். சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை. அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது. பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள் இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்.......!
-
அமெரிக்க மிசுசிப்பி மாநிலத்தில் சூறாவளி தாக்கி குறைந்தது 23 பேர் பலி.
suvy replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
சூறாவளி காட்சிகளைப் பார்க்க மனம் திக் திக் என்றிருக்கு......! இணைப்புக்கு நன்றி பிரியன்........! -
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல்
suvy replied to ஏராளன்'s topic in வண்ணத் திரை
நன்றாக இருக்கின்றது.......நன்றி ஏராளன்.....! 👍 -
ஒரு சிறு பிள்ளையின் அருமையான தமிழ் பேச்சு பாராட்டுக்கள்........காவலரிடமே 500 ரூபாய் வாங்குவது சாதாரண செயல் அல்ல........! 👍
-
ஆஹா தலையும் களத்தில் குதித்து விட்டார் .......இனி ரணகளம்தான்......! 😂 வெல்டன் நந்தன்......!
-
வருகிறோம் வருகிறோம் .........! 😂
-
மலர்............(5). வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத் திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான். அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக வருகிறான். இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார். --- நாய் நிக்குதோ ஐயா. --- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான். --- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார். --- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள். --- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள். ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா. இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள். நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம். --- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும். --- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள். --- நான் இனித்தான் வேலை தேட வேண்டும். --- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான். ---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள். --- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ. --- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது. --- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும். --- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ. --- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது. பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான். --- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன். --- எப்ப இங்கு குடி வாறீங்கள். --- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள். --- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு. --- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....! --- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன். நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....! மலரும்.......! 🌷
-
"பனி உமிழும் மாலைப்பொழுதில்" கவிதை நன்றாக இருக்கின்றது.....! நல்லதொரு கவிதையுடன் வந்திருக்கிறீர்கள்.......தொடர்ந்திருங்கள்.......வாழ்த்துகள் பாரதிசந்திரன்.....! 😁
-
வை.கோ வின் கண்ணாடி போர்ட் காரின் ஹெட்லைட் போலாக் கிடக்கு..... பெரிசின்ர கண்ணாடி பழைய மொடல் அம்பாசிடர் மாதிரி இருக்கு இதில் மஞ்சள் துண்டு வேற ..........அதனால் அது அவர்தான்......! 😁
-
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : { அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில } (2) ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஆண் : அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால ஆண் : எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ ........! --- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல---
-
பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு.......! 😍
-
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
suvy replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்