parathesi

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  50
 • Joined

 • Last visited

Community Reputation

8 Neutral

About parathesi

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday September 17

Profile Information

 • Gender
  Male
 • Location
  சந்தை மடம்
 • Interests
  ஏகாந்தம்,பழம்பெருமை,அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்க ஏங்குதல்
 1. கி;பி.அரவிந்தன் அவர்களின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கும் மற்றும்,அவரின் நண்பர்கள் வட்டத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
 2. வணக்கம் விசுகர் உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது வேலைக்கு வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது " வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன்
 3. உங்க நான் அவசரப்பட்டு உள்ளிட்டுடன் போல கிடக்கிது, 2 வருசம் நிண்டுட்டு வந்திருக்கலாம், போற போக்கை பாத்தால் யாழ் நெம்பர் எண்டு பீத்த ஏலாது.போல கிடக்கிது நல்லா ஊறின நங்கூர மட்டை எண்டு எல்லோ சனம் நினைக்கப்போகிது. சில பேர் வாய்வு தொல்லையும் இல்லாட்டி பின்பக்கத்தை சாடையா எண்டாலும் தூக்காயினம் அடிக்கிற அடியில எழுத்துகள் சிதறுப்பட்டு தெறிக்கிது. ஒரே இடத்தில இருப்பாய் இருந்து கொழுப்பு கட்டி பட்டுப்போச்சு - மூட்டுகளும் உளைவெடுத்து முதுகு பக்கம் முழு இடமும் சொறிய கை எட்டுதில்ல. சொறியிறத்துக்கு முதுகு இருந்தா காணும்- ஐஞ்சு வயது எண்டாலும் சரி, ஐம்பது வயசு எண்டாலும் சரி ஒரு பிரைசினையும் இல்லை ஹோ*** வாறதில்ல சரிக்கு சரி விசுக்கோத்தும் அரைப்போத்திலும் தான் – ஓ…….அரைப்போத்தில் பிரச்சினை உங்களுக்கு நான் சொல்லேலைத்தானே – “ஒரு முழுப்போத்திலுகை இருக்கிறது முழுக்க ஒரு அரைப்போத்திலுக்கை விட ஏலாது – அரைப்போத்திலுக்க கொள்ளக் கூடியது தான் அரைப் போத்திலுக்க கொள்ளும் மிச்சம் வெளியாலதான் ஊத்தும்”-அவைக்கு அதுகள் வெளில ஊத்திறதும் விளங்காது - பாவம் ஒண்ட நினைச்சுப் பாருங்க, உவையோட குடும்பம் நடத்தி பகலில இவையின்ர மண்எடுப்புகளையும் தாங்கி – இரவில இவையையும் தாங்கிறத… நல்ல காலம் நாங்கள் இவையோட இல்ல சந்தோசப்பட வேணும் … பானைக்கிள கஞ்சி குடிக்க தலையை விட்டுக் கொளுவுப்பட்ட ஆடு படுற அவஸ்தையை பாத்து - கடும் படிப்புப் படிச்ச பரமார்த குரு விட்ட சனம் ஓடினவையாம் 'ஆண்டவரே ஒரு நல்ல வழி காட்டும் எண்டு" அவர் சொல்லிப் போடார் "ஆட்டை வந்து பாக்கம சொல்ல ஏலாது, ஏறுறத்துக்கு பல்லக்கு கொண்டு வரச் சொல்லி .....வீட்டடிக்குப் போனால் வாசலால பல்லக்கு உள்ளுக்குப் போகேல்ல பக்கத்து மதில இடிச்சு ..காணிக்கிள்ளை போய் பல்லக்கில இருந்தேண்டு சொன்னவராம் " மடச் சனங்களே ! ஆட்டின்ர களுத்த வெட்டிப் பானையை உடைச்சு தலையை எடுக்கச் சொல்லி..... திரும்பி வெளிக்கிடேக்க உச்சுக் கொட்டி .... கணீர் விட்டு சொன்னது " நான் இல்லாக் காலம் என்ன செய்யபோறியள் எண்டு" இவரிட்டைக் கடும் படிப்புப் படிச்ச சிஷ்யப் பிள்ளைகள் அவுஸ்ரேலியா,லண்டன் ,அங்க இஞ்ச எண்டு கன இடங்களில இருக்கினம் நானும் அவக்கெண்டு ஓடியந்தது லண்டன் M.P யின்ர சே…M.P.யின்ர லண்டன் பெற்றோல் செற் காறற்ர திரி மாதிரி டப்பெண்டு இழுத்து பூட்டிப் போடுவியள் எண்டு பயந்து தான்.. இப்பவும் சொல்லுறன் நான் கெட்டா அது உங்களாலதான்....
 4. அவரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சுற்றத்தார்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
 5. வருக அகத்தியனே வருக, களதிற்கு வளம் சேர்க்க வருக ( பளைய காயள் எங்கயோ பதுங்கி இருந்து போட்டு - உப்ப தான் மெள்ள ,மெள்ள வாறீனம்) - எலக்சனுக்குப் பிறகோ
 6. நீங்கள் எழுதுவது கொத்து குண்டுகள் போடுவது (Cluster-bombs)போன்று உள்ளது -அல்லது யாருக்கோ உள்குத்தா ? குறுக்கு வழியில் காசு பார்ப்பது ,எத்திப் பிழைப்பது,ஏமாற்றுவது எல்லாம் அறனுக்கு அப்பாற் பட்டது தான் அதற்காக அனைத்து எரிபொருள் நிலைய முகவர்கள் எல்லோரையும் ஒரே தும்புத்தடி வைத்து கூட்டமுடியாது . நான் இந்தத் துறையை சேர்ந்தவன் அல்லன் எனினும் இந்த கொத்து குண்டு விளையாட்டை ஏனோ என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
 7. நிறைவான நன்றிகள் ஆதவன், வந்து பாதுக் கூப்பிடவையை கனம் பண்ணுறதுக்காக ஆயிரம் வேலை இருந்தாலும் இடைகிடை ஓடிவந்து பாக்கவேண்டிக்கிடக்குது
 8. நன்றிகள் நண்பரே, இந்தக் குளிருக்குள்ளேயும் நீங்கள் நினைகிற மாதிரி ஒருதரும் நேரத்துக்கு வீட்டை போக முடியாது அனேகமாக தொண்ணூறு வீதமானவர்களும் 65 - 67 வயதெல்லை தான். மேலதிக்க விபரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Retirement_age
 9. ராசவன்னியன், தயை கூர்ந்து " பெருசுகளிற்கான " வரைவிலக்கணத்தைத் தந்துதவ வேண்டுகிறேன் இதில் உடற்பருமனா அன்றில் வயதா ஆட்சி செலுத்துகிறது? நான் சிறிய தோற்றம் பெரிய வயது ### விசுக்கரா அன்றில் நானா " பெருசுகள் என்னும் பொன்னாடைக்கு தகுதியானவர்கள் ### ஆகப்பெருசு எண்டு நினைக்கப்படாது வாஜ்பாயி , மன்மோகன் - அவை எல்லாம் மூப்புதான்
 10. நன்றிகள் அகஸ்தியன்,நீங்களும் ஊரில இல்லப்போல? நானும் ஐஞ்சு தரம் கால் மாறிற்ரன்
 11. "முருகனுக்கு அரோகரா" முருகன் பிரசன்னதுக்கு வணக்கம் சொல்லக்கூடாது கை எடுத்துக் கும்பிட்டு "அரோகரா" சொல்லோணும் - சேயோனுக்கு அரோ...கரா
 12. ஆழ்ந்த இரங்கல்கள், கண் முன்னே நிற்கிறார் தலை சிறந்த கலைஞர் - சந்தனப்பொட்டுடன் வெள்ளை வேஷ்டி நஷனல் தான் உடுப்பு சின்ன உருவம் பார்க்க அம்சமாக இருப்பார். முன் வரிசையில் புழுதிமண்ணில் நித்திரை தூங்கி தூங்கி அனுபவித்தது நெஞ்சில் முட்டுகிறது. ஒவ்வொரு முறையும் வில்லுக்கு அடி போட முதல் முன்னங்கை நஷனலை இழுத்து முழங்கையடியில் சுருக்கி விடுவார்.இவரது சமகாலப் போட்டியாளர் "திருப்பூங்குடி ஆறுமுகம்"(புங்கைநகர்) மாதனை: விஷ்வகர்மா பரம்பரையினர் என்று அறியப் பட்டவர்கள்
 13. எங்கையோ ஒரு வயுறு அடிப்புடிச்சு மணக்கிற மாதிரி இருக்கிது
 14. புங்கையூரன் இந்த சந்திக்குப் பேர் அஞ்சு முச்சந்தி எல்லோ ??? உங்கட சந்தி கொழும்பில இருகிற மாதிரித்தான் என்னக்கு நினைப்பு சில வேளை இரண்டும் ஒண்டுதானோ தெரியாது
 15. தேவை இல்லாமல்உதுக்குள்ளை வந்து எட்டிப் பாத்து இப்ப இரவு நித்திரையை துலைச்சுப்போட்டன் இனி பள்ளிக்குடத்து எட்டாம் வகுப்பு பெட்டையள் வரைக்கும் " றிவேஸ்" ல போய் - நித்திரையில உளறப்போறன் என்ர சீதேவி முழிச்சு கிடந்தா பிறகு "லங்கா சிறி"ல தான் பாக்கக் கிடைக்கும் - ஆய்க்கினை யாப்போச்சு. கோட்டை முனியப்பகோயில் : தேங்காய்ச்சொட்டு பரணி ஹோட்டல் : அப்பம் சிற்ரி பேக்கறி : காறாத்தல் பாணும் பருப்பும் சுபாஸ் கபே : ஐஸ்கிரீம் றிக்கோ கோப்பி பார் : றோள்ஸ்,கோப்பி வை.சி.சி.கு(V.S.S.K) : உளுந்து வடை மலாயன் கபே : போளி தாமோதர விலாஸ் : நெய் தோசை சந்திரா ஐஸ் கிறீம் : ஐஸ் சொக் கொழும்பு றெஸ்ரோறன் : றால் குளம்பு பிளவ்ஸ் : றோஸ்ற்(5 சதம்) மொக்கன் கடை : புட்டு, ஆணம்,மட்டிச் சம்பல் முனீஸ்வரா கபே : புட்டு,இடியப்பம்,தோசை - புளிச்சொதி தாளித்த சம்பல்(கடுகு தூக்கல்) (வெலிங்டன் சந்தி) லிங்கம் கூல்பார் : சர்பத் , இதர வாழைப்பழம், பீடா (வெலிங்டன் சந்தி) கபே பாரத் : அப்பம், பிளேன் ரீ (ஆரிய குளம் சந்தி) ஒரியென்டல் பேக்கரி : சங்கிலிப் பாண் சொக்கன் கடை : கடலை வடை(3 ~ 5 சதம்) பிளேன் ரீ (கைலாச பிள்ளாயார் கோயில்) பட்டு புளியங் காய், ஈச்சம் பழம், பாலப் பழம், நாவல் பழம் அம்பலவி மாங்காய் (உப்புமி+மி.தூள்) எல்லாச் செல்வத்தையும் துலைச்சுப் போட்டு வந்து உங்க மண்ணெடுக்க வேண்டிக்கிடக்கிது "" எட்டுச் செலவுக்கு உது எல்லாம் கொண்டந்து படைபினமே "" இஞ்சூரன்ஸ் காசில எடுத்தெறிஞ்சிற்று மூண்டாம் நாள் வேலைக்கெல்லோ ஓடோணும் பின் குறிப்பு: நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்று - வீணி ஊத்தி நித்திரைல புரக்கடிச்சு முதுகில மொங்கான் விழ வாழ்த்துகிறேன்