யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Justin

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,530
 • Joined

 • Last visited

 • Days Won

  13

Justin last won the day on February 18

Justin had the most liked content!

Community Reputation

751 பிரகாசம்

About Justin

 • Rank
  Advanced Member

Profile Information

 • Location
  USA

Recent Profile Visitors

3,217 profile views
 1. Candid ஆக சில விடயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது! அதைச் சொல்லி விட்டு விடை பெறலாமென நினைக்கிறேன்! பேலியோ உணவு முறை பற்றி அது வேலை செய்வது பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை! ஆனால், இந்த பேலியோ முறையை வியாபாரமாக மாற்றுவோரின் உயிரியல் விளக்கம் என்பது எந்த அடிப்படையும் அற்ற முட்டாள் தனமான கற்பனை என்பது எனக்கு விளங்குகிறது. முறைசார் ரீதியாக உயிரியல் படித்து அதையே தொழிலாகச் செய்யும் எவருக்கும்விளங்கும்! இதை இலகு தமிழில் இங்கே சொல்லவே இந்தத் தொடர் தொடங்கப் பட்டது! இங்கே மோட்டுத் தனமான அரைவேக்காட்டு இணைப்புகளை இணைக்காதீர்கள் என்று டீசன்டாகத் தான் கேட்கப் பட்டது! அதைக் கூட கேட்க முடியாத முட்டாள் தனத்தோடு என் நேரம் விரயமாவதை நான் விரும்பவில்லை! இத்தொடர் இத்துடன் முற்றுப் பெறுகிறது! ஏராளன் இதைத் தொடர்ந்து தன் "போலி விஞ்ஞான" விளக்கங்களால் உங்களுக்கு நன்மை பயப்பார்! ஆதரவுக்கு நன்றி!
 2. நில்மினி, தகவலுக்கு நன்றி! ஆனால் அமெரிக்காவில் 2018 ஜூன் முதல் உணவுகளில் transfat பயன்படுத்தத் தடை! இன்னொரு விடயம்: ஆரோக்கியமான எண்ணையில் எப்படி தேங்கயெண்ணை வந்திருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை! பாமிற்றிக் அமிலம் என்ற நிரம்பிய கொழுப்பமிலம் மிகவும் நிறைந்தது தேங்கயெண்ணை (அதனால் தான் ஊரில் மாசிமாதக் குளிரில் தேங்காயெண்ணை நெய் போல உறைந்து விடும்!). இப்போது தேங்கயெண்ணை நல்லது ஒலிவ் எண்ணை கூடாது என்பதும் எங்கள் தமிழ் ஆட்கள் நம்பும் ஒரு fake news தான்!
 3. ஏராளன், மருத்துவரோ அல்லது உயிரியல் தெரிந்த கல்வியாளரோ உங்கள் இணைப்பில் உள்ள கட்டுரையை எழுதியதாக நான் நம்பவில்லை! உங்களுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் கட்டுரையைக் காட்டிப் பாருங்கள், அவரும் இதையே சொல்வார்! உயிரியல் அடிப்படை இல்லாத முட்டாள் தனமான கருத்துகள் அதில் இருப்பவை! அவர்களின் தங்கள் மீதே அவர்கள் செய்து கொண்ட பரிசோதனை இந்த கட்டுரையின் அடிப்படையில் இருக்குமானால் அவர்களின் பரிசோதனைகளும் ஏமாற்றுத் தனமானவையாகவே இருக்கும் என நான் ஊகிக்கிறேன்! இது போன்ற நிரூபணமாகாத முட்டாள் தனங்களை யாரும் நம்புவது அவர்களது உரிமை! ஆனால், அதைப் பரப்பும் போது அதன் அடிப்படை பற்றிய கேள்விகள் எழும்! இது போன்ற போலி விஞ்ஞானக் கருத்துகள் கொண்ட இணைப்புகளை இங்கே இணைக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி
 4. ஏராளன், நீங்கள் இணைத்திருக்கும் கட்டுரை இணைப்பில் இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் கூட. அடிப்படையான உயிர் இரசாயனவியல் அறிவற்ற ஒருவரால் எழுதப் பட்ட கட்டுரை இது. மூளையில் அதிகம் கொழுப்பு இருப்பதால் அதிக கொழுப்பு நல்லது என்பதும், சிவப்பு இறைச்சி இதயத்தில் இருப்பதால் அதிக சிவப்பு இறைச்சி நல்லது என்பதும் அரைவேக்காட்டு விளக்கங்கள். இந்த விளக்கத்தின் படி, நாம் கீரையும் காய்கறிகளும் சாப்பிட்டால் பச்சை நிறமாக மாறி விட வேண்டும்! அப்படி நடக்கிறதா? இல்லை! 1. சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னிரின் (carnitine) என்ற மூலக்கூறு இதயநோயோடு தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறது. எங்கள் உடற்கலங்களில் சிறுமணிகளில் (mitochondria) இருக்கும் ஒரு மூலக்கூறு இந்த கார்னிரின். அதனால் இதை விற்றமின் போல எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது என்ற போலி விஞ்ஞான தகவல், கார்னிரின் அதீத அளவில் இதய நோயை அதிகரிக்கும் என்ற ஆய்வு முடிவினால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. 2. கொலஸ்ட்ரோல் அதிகம் எடுத்துக் கொண்டால் இதய குருதிக் கலன்களில் கொழுப்புத் திட்டு (atheroma) அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது என்பது Framingham Heart Study என்ற பல்லாயிரம் பேரைக் கொண்டு நடத்தப் பட்டு வரும் ஆய்வின் முடிவு. மேலும் கொலஸ்ரோலின் LDL வகை ஈரலில் இருந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு கொழுப்பைக் காவிச் செல்வதால் அது குருதிக் கலன்களில் படிவைக் கூட்டுகிறது. HDL வகை உடலின் உறுப்புகளில் இருந்து ஈரலுக்கு கொழுப்பை எடுத்துச் செல்வதால் அது ஆரோக்கியமானதாக வகைப் படுத்தப் படுகிறது. 3. பசு மஞ்சள், துளசி கொழுப்பைக் குறைக்குமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த தகவலை உங்கள் இணைப்பின் சொந்தக் காரரான அரைவேக்காட்டு விஞ்ஞானி எழுதியிருந்தால் அதுவும் புலுடாவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆரோக்கியமற்ற போலி விஞ்ஞானத் தகவல்களை நம்பாமல், உரிய ஆதாரங்களுடனான தகவல்களை மட்டுமே இங்கு இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி
 5. உடற்பருமன்: ஒரு வரவு செலவுக் குழப்பம்! உடலின் சக்தித் தேவை, கட்டுமானம், தொழிற்பாடு என்ற மூன்று தேவைகளுக்குமாகத் தான் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்று பிரதான போசணைப் பொருட்கள் உள்ளெடுக்கப் படுகின்றன. இந்த மாபோசணைப் (macro nutrients) பொருட்களை உடலின் கலங்கள் பயன்படுத்த பல்வேறு நொதியங்கள் சிறப்பாகத் தொழிற்பட வேண்டும்: அதற்கு நுண்போசணைப் (micro nutrients) பொருட்களான விற்றமின்களும், கனிய உப்புகளும் அவசியம். இந்த மூன்று தேவைகளுக்காக நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், எங்கள் குடல் அதைச் சமிபாடடையச் செய்து, உறிஞ்சப் படக்கூடிய எளிமையான மூலக்கூறுகளாக மாற்றுகிறது. மாச்சத்து எந்த வடிவில் எடுக்கப் பட்டாலும், அது குளூக்கோசாகவும், பிரக்ரோசாகவும் மாற்றி உறிஞ்சப் படுகிறது. புரதங்கள் அமினோ அமிலங்களாகவும், கொழுப்புணவு கொழுப்பமிலங்களாகவும் மாற்றப் பட்டு உடலினுள் பிரவேசிக்கின்றன. எனவே உடலின் கலங்களைப் பொறுத்த வரையில், அவை காண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் குளூக்கோஸ், சிறிது பிரக்ரோஸ், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பமிலம் ஆகிய மூலக்கூறுகளைத் தான். இவற்றுள் குளூக்கோஸ் உடற்கலங்களின் default ஆன சக்தி எரிபொருள்! குளூக்கோஸ் நேரடியாக கலங்களால் சக்தித் தேவைகளுக்காக எரிக்கப் படும் அதே வேளை, எஞ்சியது கிளைக்கோஜன் (glycogen) எனப்படும் சேமிப்புப் பொருளாக மாற்றப் பட்டு தசைகளிலும், ஈரலிலும் சேமிக்கவும் படுகிறது! உடல் பட்டினி கிடக்கும் போது, இந்த களஞ்சிய சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனைத் தான் குளூக்கோசாக மீள மாற்றி உடல் பயன்படுத்திக் கொள்ளும். இதே வேளை கொழுப்பமிலங்களும் நேரடியாக உடற்கலங்களின் சக்தி எரிபொருளாக எரிக்கப் படலாம். உண்மையில், ஒரு யுனிற் கொழுப்பை எரிப்பதால் வரும் சக்தி, ஒரு யுனிற் குளூக்கோசை எரிப்பதால் வெளிவரும் சக்தியை விட அதிகமானது! ஆனால், உடல் கொழுப்பை சாதாரண நிலைமைகளில் பிரதான சக்தி எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருக்க சில காரணங்கள் இருக்கின்றன. உடற்கலங்களின் பிரதான பாகங்களின் கட்டுமைப்புக்கு மட்டுமன்றி, உடலின் முக்கிய ஹோர்மோன்கள், நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பு , குருதி உறைதல் என உயிர்காக்கும் பல தொழிற்பாடுகளுக்கு கொழுப்பு அவசியம். எனவே, சாதாரண நிலைமைகளில் உடல் கொழுப்பை எரிக்காமல் பாதுகாப்பது மட்டுமல்ல, ஒரு படி மேலே சென்று தனது தேவைக்கதிகமான குளூக்கோசை கொழுப்பாகவும் மாற்றும் வேலையை ஈரல் மூலம் செய்கிறது. இதனால் தான் கொழுப்பைக் குறைத்தாலும், சோறு, பாண் போன்ற மாச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வோர் உடல் பருமனாதல் பிரச்சினையை எதிர் நோக்குகின்றனர். ஒரு சிக்கலான பிரச்சினையை நாம் அணுகும் போது, நாம் வனத்தையும் பார்க்க வேண்டும், அந்த வனத்தை உருவாக்கும் மரம் செடி கொடிகளையும் பார்க்க வேண்டும். மேலே சொல்லப்பட்டவை மரம் செடி கொடிகள். இப்போது முப்பதாயிரம் அடிகள் மேலெழுந்து, வனத்தைப் பார்த்தால் உடல் கொழுத்தல் என்பது தேவைக்கதிகமான போசணையும் குறைவான எரிப்பும் என்பதைக் காணலாம். உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய ஜீன்கள் (பரம்பரை அலகுகள், இவையே பெற்றோரிடமிருந்து எமக்குக் கடத்தப்படும் கூறுகள்) பல கடந்த 10 ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. பரிசோதனை கூடங்களில், இந்த ஜீன்களில் சிலவற்றை எலிகளில் மாற்றிப் பரிசோதிக்கையில் அவற்றின் உடல் எடை சாதாரண எலிகளை விட இரட்டை மடங்காக அதிகரிப்பதைக் காண்கிறோம். இந்த எலிகள் சாதாரண எலிகளை விட அதிகம் சாப்பிடுகின்றன, ஆனால் குறைவாக சக்தியை எரிக்கின்றன. இந்த உடல் எடை தொடர்பான ஜீன்களில் முக்கியமானவை எங்கள் மூளையில் இருக்கும் ஹைப்போதலமஸ் என்ற பகுதியில் பசியைக் கட்டுப் படுத்தும் நியூரோன்களின் செயற்பாட்டுடன் சம்பந்தப் பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மூளையின் இந்தப் பகுதியை மையமாகக் கொண்ட மெலனனொகோர்ட்டின் (melanocortin) வலையமைப்பு எங்கள் பசி (hunger), பசியாறிய உணர்வு (satiety) என்பவற்றைக் கட்டுப் படுத்தும் பிரதான செயற்பாட்டு மையமாக இருக்கிறது. உடற்பருமனுடையோரில் மாறியிருக்கும் பிரதான ஜீன்களில் பல இந்த மெலனோகோர்ட்டின் கட்டமைப்புடன் நேரடித் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஆய்வு நடத்தப் பட்ட இனக்குழுக்களின் வகையைப் பொறுத்து, அதீத உடற்பருமனுடையோரில் இந்த மெலனோகோர்ட்டின் தொடர்பான பிரதான ஜீன் பிரச்சினை 2% முதல் 40% வரையாக இருக்கிறது. எமக்கான நல்ல செய்தி என்னவெனில், ஆசிய இனங்களில், இந்த பிரதான ஜீன் பிரச்சினை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், பரம்பரையாகக் கடத்தபடும் சீரியசான உடற்பருமன் பிரச்சினையால் ஆசியர்கள் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவு. இன வேறுபாடின்றி எல்லோருக்குமான நல்ல செய்தியும் இருக்கிறது: எங்கள் பசியைக் கட்டுப் படுத்தும் ஜீன்களில் இருக்கும் பிரச்சினையால் மிதமான போசணை அதிகரித்தாலும், உடல் எடை கூடாமல் ஆரோக்கியமாக இருக்க உடல் எமக்கு ஒரு பிரதான வழியைத் திறந்தே வைத்திருக்கிறது. அந்த வழியின் பெயர் சக்திச் செலவழிப்பு! -தொடரும்
 6. ரதி, நீங்கள் போய் தகவல்களை சரிபார்த்து விட்டு வந்து எழுதுங்கள்! முகத்தை மூடாத உடைக்குத் தடை இல்லாத போதும் சண்டித்தனம் விட்டு இப்ப மூக்குடை பட்ட பிறகு, இப்ப முதலில் இருந்து முகத்தை மூடிய உடை என்று ஆரம்பத்தில் இருந்தா..? facts முக்கியம், அதன் பிறகு உணர்ச்சி வசப்படலாம்! ஓம், நாதமுனி! நாங்கள் "பாதுகாப்பு" என்ற போர்வையில் அவர்களை சாறி உடுத்தி வா என்று தமாஸ் விடுவோம்! பிறகு அவங்கள் எங்களுக்குப் படிப்பிச்சும் விடோணும்! லூசுதனமான ஒரு வேலையைச் செய்து போட்டு, இன்னும், அவர்களே பிழை என்று தெனாவெட்டாக நிக்கிறீங்கள் பாருங்கள்? அங்க நிற்கிறான் "நவீன புத்திசாலித் தமிழன்"!
 7. உயிரோடிருக்கும் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என்கிறேன் நான்! இதில் எங்கே மறுகன்னம் காட்டல் இருக்கிறது நாதமுனி? இனி இப்படி ஒரு அவலம் நடக்காமல் இருக்க இங்கே நீங்கள் ஆதரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறிதும் உதவாது என்பதே என் வாதம்! இது உங்களுக்கும் புரியும், ஆனால் ஏதோ உங்கள் புத்தியை மறைக்கிறது இப்போதைக்கு! அது விலகும் போது யோசியுங்கள்! மற்றபடி நீங்கள் எழுதியிருக்கும் காசு, சவூதி, எல்லாம் சதிக் கோட்பாட்டுக் காரர்களின் பிதற்றல்கள். நடந்தது உலகத்திற்கு இப்போது நன்கு பரிச்சயமாகி விட்ட ஐசிஸ்-தூண்டிய கொடூரம் என்பது தான் இப்போது எம் முன்னே உள்ள தகவல்களின் அடிப்படையிலான முடிவு! அதை எப்படித் தடுப்பது என்ற யோசிப்பை இந்தப் பிதற்றல்கள் இலகுவாக வழி மாற்றிவிடும், அவர்கள் மீண்டும் வந்து வெடிப்பார்கள்! இது நல்ல "புத்தி சாலித்தனமாக" தான் தெரியுது எனக்கு!
 8. விசுகர், வர வர நீங்கள் ஒரு ஜோக்கராகவே மாறி வருகிறீர்கள்! தேமேயென்று வழமை போல படிப்பிக்கப் போன ஆசிரியரை பயங்கரவாதிமாதிரி தெருவில் வைத்து அவமதித்தது உங்களுக்கு உறைக்கவேயில்லை! அவர்கள் வெறுத்துப் போய் மாற்றல் வாங்கிப் போனது பெரிய குறையாகப் போய் விட்டது! நானாக இருந்திருந்தால் இந்த பெற்றோர் மீது வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விட்டிருப்பேன்! அவர்கள் தாமாக விலகி விட்டது டீசண்டானவர்கள் என்று காட்டுகிறது!
 9. நடுநிலை சிங்கம்: சேவை மனப்பான்மையுடைய யாராவது வடக்கு கிழக்கிலிருந்தோ அல்லது புலத்தில் இருந்தோ போய்த் தான் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் போல? தேசிக்காய்கள்: "புது ஆசிரியர்களைத் தேடித் தர வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பல்லவா? அதைச் செய்யாமல் விடுவதால் அவர்கள் தான் தமிழர்களின் கல்வியைக் கருவறுக்கும் சூத்திரதாரிகள் (எங்களுக்கு முஸ்லிம் ஆசிரியர்களைத் துரத்த மட்டும் தான் தெரியும்!)"
 10. நாதமுனி, மாட்டைப் பற்றிக் கேள்வி கேட்டால், மாடு கட்டிய மரத்தைப் பற்றி விளாவாரியாக எழுதியிருக்கிறீர்கள்!, நன்றி. இந்த vigilante கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும், அதை நாங்கள் வெளிநாட்டில் இருந்து முஸ்லிம் விரோதக் கருத்துகளால் சிலாகிப்பதும் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்கவும் உதவாது, நீண்ட காலப் போக்கிலும் குறைக்காது, வேண்டுமானால் பாதிக்கப் படும் சாதாரண முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை நடத்தவோ அல்லது தெரிந்தும் தகவல் தெரிவிக்காமல் இருக்கவோ இது தூண்டும்! கீழ்வரும் கேள்விகளை உங்களுக்கும், இங்கே முஸ்லிம் விரோதம் பரப்பும் நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன். பதில்கள் தேவையில்லை, ஆனால் உங்கள் reflection இற்காக மட்டும் இவை: 1. தாக்குதல் குழுவின் முன்னைய செயல்பாடுகள் பற்றி அசாத் சாலி என்ற முஸ்லிம் தலைவர் உட்பட சாதாரண முஸ்லிம்களும் முன்னரே தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பது fact. இதுவே இந்தத் தாக்குதல்களை அவர்கள் ஆதரிக்கவோ பாராட்டவோ இல்லை என்பதன் ஆதாரமாக இருக்கும் போது, வேறென்ன சாதாரண முஸ்லிம்கள் மேலதிகமாகச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? 2.சாதாரண தமிழர்களைச் சந்தேகநபர்களாகச் சிங்களவர்கள் பார்த்ததால் நாம் இலங்கையில் பட்ட துன்பங்கள், அவமானங்கள், கைதுகள் நினைவிருக்கிறதா? இதை இன்னொரு சமூகம் மீது திணிக்க ஏன் நாம் சந்தோஷப் படுகிறோம்? இந்த சாதாரண தமிழர்கள் பலர் இன்றும் அரசியற் கைதிகளாக இருக்கும் நிலையில், இந்த முஸ்லிம் குரோதம் எங்களுக்கே கூசவில்லையா? இந்த உரிமை மீறல்களைக் காட்டித் தானே நாங்கள் சிறந்த வாழ்நிலைமைகள் கொண்ட நாடுகளுக்கு வந்து வாழ ஆரம்பித்தோம்? 3. உலகின் வேறு எந்த நாட்டில், இப்படி பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பற்ற சாதாரண மக்களைத் துன்புறுத்துவதும் demonize செய்வதும் அமைதியைக் கொண்டு வந்திருக்கிறது? மேற்கில் 2001 இல் இருந்து தடுக்கப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லாம் அடிப்படைவாத அமைப்புகளுள் ஊடுருவி உளவு பார்த்த முஸ்லிம்களால் தான் தடுக்கப் பட முடிந்தது என்பதை அறிவீர்களா? இதற்காகவே முஸ்லிம்களை அன்னியப்படுத்துவதை மேற்கு நாடுகளின்பாதுகாப்புத் துறையினர் எதிர்க்கிறார்கள் என்றாவது அறிவீர்களா?
 11. நாதமுனி, இங்கே கருத்தெழுதும் மற்றவர்களின் முஸ்லிம் குரோதம் எனக்குப் புரிகிறது, அவர்கள் அப்படித் தான் எல்லா விடயத்திலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மேலதிக குண்டு வெடிப்புகளைத் தடுக்க முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
 12. நான் மேலே எழுதியதையே நீங்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்! ஒரு அடிப்படையும் இல்லாத உங்கள் பிரமையை பொய் என்று நேரம் மெனக்கெட்டு நிரூபிக்க நான் லூசு அல்ல! அதற்கென்று பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் தான் நீங்கள் அதைத் தேட வேண்டும்! பார்க்கிற நிகழ்கிற எல்லாத்துக்கும் பதிலும் அர்த்தமும் தேடும் அளவுக்கு என் போன்ற ஆட்களுக்கு நேரமில்லை! உங்களுக்கு நிறைய இருக்கிறது! இணையக்குப்பையில் பொறுக்கிய லூசுத் தனமான ஐடியாக்களை வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்! தண்ணீர் கோப்பி தேனீர் எல்லாம் கவனமாகப் பார்த்துக் குடியுங்கள்! மூளைக்குள் புகுந்து உங்கள் மனதோடு விளையாடும் பதார்த்தங்களை இலுமினாட்டிகள் கலந்திருப்பார்கள்! எனக்கு பயனுள்ள வேலைகள் இருக்கின்றன! நன்றி உரையாடலுக்கு!
 13. லாரா, நீங்கள் மேலே எழுதியிருப்பது எல்லாமே உங்கள் போன்ற ஆட்களின் பிரமையில் உதித்த கதையொன்றும் அதன் வழி வந்த முட்டாள் தனங்களும்! இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது JFK இன் துரதிர்ஷ்டம்! அந்த முட்டாள் தனங்களை உங்களுக்கல்ல நான் சுட்டிக் காட்டுவது! இது உண்மையா கற்பனையா என்று அறியும் ஆவலுள்ளோருக்குச் சொல்ல எனக்கு நானே உழைத்து நேர்வழியில் பெற்ற அறிவும் தகுதியும் இருக்கிறது! இதை மட்டம் தட்டலாக நீங்கள் பார்க்க வேண்டியதில்லை! நானும் உங்கள் போல யுரீயுபிலும் இணையக் குப்பை மேட்டிலும் மேல்வாரியாகக் கிடைப்பதைக் கொண்டு கதையளக்கவில்லை என்பதை வெளிக்காட்ட வேண்டுமல்லவா? அது தான் நான் செய்ய முயல்வது! அவ்வாறு செய்யும் போது தரக் கட்டுப்பாடு கொண்ட தகவல்களைத் தரமுடியாத ஒருவர் காயமுற்றால் அதற்கு நான் பொறுப்பல்ல! நோக்கமில்லாமல் செய்யப் படும் இந்த மட்டந்தட்டலுக்கு நான் மன்னிப்பெதுவும் கேட்கப் போவதில்லை! திருப்பி என்னை நீங்கள் தாக்கலாம், ஆனால் அதற்காவது credible ஆன தகவல்களைப் பாவியுங்கள்! சும்மா என்னை போலி அறிவாளியென்பதெல்லாம் என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை!
 14. ஓ..JFK தான் உலகத்தில் அறிவாளியா? அல்லது உங்கள் போன்ற வாலுக்கும் தும்புக்கும் வித்தியாசம் தெரியாத "அறிவாளி"களின் தலைமை "அறிவாளியா"? இலுமினாற்றி என்ற சொல்லின் உருவாக்கமே தெரியாமல் பயனற்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் அலையும்! அதை விளங்கினவன் "அறிவாளி" - விளங்காதவன் என்னைப் போல முட்டாள் என்று தான் நான் நினைக்கிறேன்!
 15. "விவேகம் படத்திலிருந்து ஒரு காட்சி " ம்..இது நல்லா "ஓடும்" போல இருக்கு! அதுக்குத் தானே கொஞ்சம் "குகூ" தனமான ஆட்களை மூளையைக் கழுவி வைத்திருக்கிறார்கள்? அது சரி, இலிமினாற்றிக்கு corporate headquarters இல்லை, என்று 1-800 நம்பர் எதுவும் இல்லை! அவனுகள் செய்வதை யாரும் அறியவும் முடியாது! அதனால் தடுக்கவும் முடியாது! பிறகேன் வேலை மெனக்கெட்டு இலுமினாற்றியைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்? வேலை, படிப்பு, பிழைப்பு என்று அனுபவித்து விட்டுச் செத்துப் போவது தானே?