-
Content Count
2,810 -
Joined
-
Last visited
-
Days Won
16
Justin last won the day on September 24
Justin had the most liked content!
Community Reputation
927 பிரகாசம்About Justin
-
Rank
Advanced Member
Profile Information
-
Location
USA
Recent Profile Visitors
3,691 profile views
-
மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்து விட்டால், அவற்றின் ஆயுள் கொஞ்சம் அதிகரிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் பொறுத்த வரை, இது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொறிமுறை: உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு, இதய நோய் இரத்த அழுத்தம் போன்ற தற்காலத்தில் மரணத்திற்குக் காரணமான பல நோய்களைக் குறைத்து விடுவதால் ஆயுள் சிறிது அதிகரிக்கலாம். ஆனால், உணவும் அனுசேபமும் மட்டுமே இந்த நோய்களைக் குறைத்து விடுவதில்லை, மனப் பதட்டம் (stress) போன்ற சமூகக் காரணிகளும் நோய்களை உருவாக்கக் கூடியவை என்பதால் அந்த திசையிலும் ஆய்வுகள் நகர்கின்றன. இந்தக் கோணத்தில் செய்யப் பட்ட ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவு தான் மேலே தலைப்பில் இருக்கும் "மூளைக்கு ஓய்வு" என்பது! நூறு பில்லியன் கலங்களால் ஆன மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விழுங்கிக் கொள்ளும் ஒரு உறுப்பு. அந்த நூறு பில்லியன் மூளைக்கலங்களான நியூரோன்களிடையே உருவாகும் நரம்புப் பிணைப்புகள் (synapses) ட்ரில்லியன் கணக்கில் இருக்கும். இந்த வலையமைப்பே (neural network) நாம் கற்றுக் கொள்ளவும், அனுபவம் பெறவும், உணர்வுகளால் நெகிழவும் காரணமான அடிப்படை அமைப்பாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது கொண்டிருக்கும் அதேயளவான நியூரோன்கள் தான் அது வளரும் போதும் அதன் மூளையில் இருக்கின்றன. ஆனால், இந்த நியூரோன்களிடையேயான தொடர்புகள் தான் மூளை வளர்ச்சியாக எமக்குத் தெரிகிறது. பின்னர் எமக்கு வயதாகும் போது கொண்டு வந்த நியூரோன்களில் சில ஆயிரத்தை நாம் இழக்கிறோம். அந்த இழப்போடு நரம்புப் பிணைப்புகளும் இழக்கப் படும் போது மூளைக்கு வயதாக ஆரம்பிக்கிறது. முதுமையின் இயற்கையான மாற்றம் இது. இந்த நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் வைத்திருக்க ஒரு வழி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது. பொதுவாகவே உடலில் சுவாசத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும் உடற்பயிற்சி முதல் மூளைக்கு வேலை தரும் கணக்கு, வாசிப்பு, யோசிப்பு, இசை வரை என பல வழிகளில் மூளையின் நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் காக்க முடியும். மூளையின் நியூரோன்கள் அதிகம் அளவுக்கு மீறி செயற்படாமல் பாதுகாப்பதாலும் ஒரு உயிரின் ஆயுளை அதிகரிக்கக் கூடும் என்று தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு மீறிய நியூரோன்களின் செயல்பாடு (excitation) என்பது எங்கள் மனப் பதட்டத்தின் பால் பட்டதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 80 வயதுவரை வாழ்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 85 வயது வரை வாழ்ந்தவர்களின் மூளையில் "றெஸ்ட்" (REST) எனப்படும் ஒரு ஜீனின் செயல்பாடு அதிகமாக இருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த றெஸ்ட் ஜீனின் வேலை மூளையின் நியூரோன்கள் அதிகமாக பதகளிப்பாகாமல் (over-excitation) பார்த்துக் கொள்வதாகும். இதே ஜீனினால் இயக்கப்படும் ஒரு நரம்பியல் பாதை தான் உடலில் மனப்பதட்ட நேரத்தின் போது நிகழும் அனுசேபத் தொழிற்பாடுகளையும் கட்டுப் படுத்துகிறது. எனவே, பதட்டம், அதனால் நிகழும் அனுசேபத் தொழில்பாடு அதோடு மூளையில் கொஞ்சம் அதிகமாகத் துள்ளும் நியூரோன்கள், இவையெல்லாம் இணைந்தே எங்கள் ஆயுளைக் குறைப்பதாக கருதுகிறார்கள். உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சில சமயங்களில் சாத்தியமில்லையானாலும் " அமைதியாய் இருந்தால் சில ஆண்டுகள் அதிகம் வாழலாமே?" என்ற கவர்ச்சிகரமான நன்மை கருதி இனி உணர்ச்சி மயமாவதைத் தவிர்ப்போம்! (இது எனக்குப் பொருந்தாத அட்வைஸ்!). ஆய்வின் இணைப்பு: https://www.nature.com/articles/s41586-019-1647-8 சாதாரண மொழியில் ஆய்வின் சுருக்கம்: https://www.nature.com/articles/d41586-019-02958-x நன்றி. ஜஸ்ரின்
-
அம்பனை, உங்களிடம் நான் இனி ஆதாரம் கேட்கப் போவதில்லை! ஏனெனில் ஒரு முற்றிலும் தவறான தகவலை இங்கே ஒரு சம்பந்தமேயில்லாத இணைப்பை இணைத்து பரப்பிக் கொண்டு கனடாவில் fake news காரர் இல்லை என்கிறீர்கள்! உங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்! என் குழந்தையே காசு கட்டித் தான் கிறிஸ்தவ பள்ளியில் படித்தது! அவரோடு படித்த மூன்றிலொரு பங்கு வகுப்பினர் இந்தியாவில் இருந்து வந்த இந்துக்குழந்தைகள். இது தான் நிலையும் சட்டமும்! உங்கள் வாதத்திற்கு அடிப்படை உங்களால் வாசித்து விளங்கிக் கொள்ள முடியாத நிலையா அல்லது வேறெதுமா என எனக்கு தெரியவில்லை! ஆனால், இனி உங்கள் கருத்துகள் இணைப்புகளின் நம்பகத் தன்மை பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையை யாழ் வாசகர்களுக்கு இந்தத் திரி தெளிவு படுத்தி விட்டது என நினைக்கிறேன்! நன்றி.
-
தவறான தகவலை ஏற்றுக் கொள்ளாமல் மேலும் பல தவறான தகவல்களால் குட்டையைக் குழப்பும் வேலையை செய்கிறீர்கள் போல தெரிகிறது: அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலைகள், பல்கலைகள் தனியார் நிர்வாகம், அது கிறிஸ்தவ சபையாக தனியாளாக இருக்கலாம். சேர்வதற்கு பணம் (tuition) கட்ட வேண்டும். நகரத்தின் வரி கொஞ்சம் அந்தப் பாடசாலைகளுக்கும் போகும். அப்படிப் போகும் நகரங்களில் குறிப்பிட்டளவு மதம் சாராத மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது நிபந்தனை. யாராவது சேர்க்க மாட்டோம் என்றால் DOE, இல் இருந்து IRS வரை வரிசை கட்டி வந்து ரின் கட்டி விடுவார்கள். கனடாவில் கிறிஸ்தவ பாடசாலைகளில் கற்கும் இலங்கை இந்துக் குடும்ப ஆட்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். தயவு செய்து fake news ஐப் பரப்பும் வேலையை நிறுத்துங்கள். நீங்கள் சொல்பவற்றை உறுதி செய்ய முடியா விட்டால் பொது இடத்தில் பகிராதீர்கள்! நான் சொன்னது சீக்கியர் அல்லது வரி பற்றியல்ல, நீங்கள் சொல்லும் பதிவு செய்தல் தனியார் வீட்டு பத வழிபாட்டுக்குப் பொருந்தாது! உங்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பது புரியவில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது!
-
stalking என்பதன் அர்த்தம் ஒருவரை அவரது மறுப்புக்குப் பிறகும் பின் தொடர்வது கு.சா! திரி குறிப்பிட்ட சம்பவங்களில் யாரும் பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கவில்லை!, விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்து பிரச்சாரம் செய்யவில்லை! ஊரவர் தனியார் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தது (trespassing) தான் இங்கே நடந்த குற்றம்! நீங்கள் வசிக்கும் நாட்டில் இதற்கு சிறைத்தண்டனை!
-
தவறான தகவல் அம்பனை. தயவு செய்து தரும் இணைப்பை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்!
-
இல்லை என்று சொல்லி விட்டு நகரும் உரிமை உங்களுக்கு உண்டு! சொன்னா பிறகும் தொடர்ந்தால் stalking என்று காவல் துறையில் முறைப்பாடு செய்ய முடியும்!
-
ஆனால் இரண்டினதும் விளைவுகள் வித்தியாசம். காசுக்கு ஒரு தமிழர் கோத்தாவுக்கு வாக்களித்தால் தமிழர்களின் உயிரைக் காசுக்காக கொடுத்து விட்ட வேலையைச் செய்கிறார். காசுக்கு ஒருவன் மதம் மாறினால், யாருடைய உயிரை, உடைமையை அவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறான்? எனவே இது யாரையும் பாதிக்காத தனி மனித நடவடிக்கை! நன்றி, மத நிறுவனமாக நடத்தினால் மட்டுமே பதிவும் அனுமதியும்! இருக்கிற மதத்தின் வழிபாட்டை நடத்துவதற்கும் இந்த இணைப்புகளுக்கும் தொடர்பில்லை!
-
மேலே அம்பனைக்கும், கு.சா வுக்கும்: ஏழை மக்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மதம் மாறினாலும் அது அவர்களின் தெரிவு தானே? இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை! இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை! சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை! இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு! இதை எந்த சட்டத்தாலும் கட்டுப் படுத்த இயலாது என்பது தான்! அம்பனை சொல்வது தவறு என்று தான் நினைக்கிறேன்! அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்!முன்னையது சிறுவர்கள், வெளியார் போன்றோர் கலந்து கொள்ளும் பொது நிகழ்வென்பதால் பாதுகாப்பு காப்புறுதி நோக்கங்களுக்காக பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்தால் வருமான வரியில் சலுகையும் கிடைக்கும். பின்னையது (சாயி பஜனை, பெந்தகோஸ்து) என்பன தனியார் நிகழ்வுகள். அனுமதியும் பதிவும் தேவையில்லை!
-
உங்களுக்கும் எனக்கும் இது தெரிந்திருப்பது போல இங்கே இருக்கும் பலருக்கு தெரியாது. "கிறிஸ்தவம்" என்ற நம்பிக்கையின் கீழ் உலகம் முழுவதும் 20,000 இற்கு மேற்பட்ட சபைகள் இருப்பதோ, ஒவ்வொரு சபையின் வழிபாட்டு முறைகளும் மற்றையதை விட வித்தியாசமானது என்பதோ இங்கே பலருக்குத் தெரியாது. இது எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை! ஆனால், அப்படித் தெரியாத ignorance ஐ அடிப்படையாக வைத்துக் கொண்டு மொட்டைக் கடதாசி போடுவதும், இல்லாத சட்டங்களை வைத்துக் கொண்டு அச்சம் கிளப்புவதும் தவறு! இது ஒரு கிறிஸ்தவ சபையென்பதால் இந்த அயலுக்குத் தொந்தரவு என்ற சப்பை வாதமெல்லாம் வலுவான காரணங்களாகத் தூக்கிப் பிடிக்கப் படுகிறது! நாளைக்கு இதே காரணத்தை வைத்துக் கொண்டு தென் சிறிலங்காவில் அல்லது மேற்கு நாடொன்றில் ஒரு தேரிழுப்பை சாயி பஜனையை நகர சபை தடை செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதே ஆட்கள் சைட் மாறி நின்றி "மத சுதந்திரம்" பற்றி முழங்குவர்! நானும் நீங்களும் அப்பவும் அவர்கள் பக்கம் நின்று முழங்குவோம்!
-
யாழில் மிகச் சிலருடன் உரையாடுவது மூளை அழற்சியை உருவாக்கும் செயல்! இப்ப நீங்கள் தான் இந்த லிஸ்ரில் லீடிங்! விட்டுருங்கள் தாயே!
-
கடஞ்சா, 1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள். 2. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல இலங்கையில் மத போதனைக்குத் தடை கிடையாது. இது ஒன்றும் கவனிக்காமல் விடப் பட்ட விடயமல்ல! 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன! இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன! எனவே இது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சட்ட முயற்சி. இனியும் இப்படியான ஒரு சட்டத்திற்கு இது தான் நிலையாக இருக்கும்! 3. இவ்விடயத்தில் நீதிமன்றிற்குப் போய் ஒரு precedence உருவாக்குவது நல்ல விடயம்! அப்படிப் போனால், தனியார் வீட்டில் கட்டாயமாக அடைத்து வைக்கப் படாமல் மத போதனையைச் செய்வதை இலங்கையின் நீதிமன்றங்கள் தடுக்காது என்பது தான் என் நம்பிக்கை. கீழ் நிலை நீதிமன்றங்கள் அப்படித் தடை போட்டாலும் உயர் நீதிமன்றம் இப்படியான சட்டத்தை அரசியலமைப்பு மீறலாகப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை மட்டுமே! 4. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய என் இன்னொரு பிரச்சினை, இதை எப்படி வரையறை செய்வது என்பது தான்: ஒருவன் என்ன காரணத்திற்காக மதம் மாறலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என் நிலைப்பாடு! இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை! அப்படியொரு நிலையை மதமாற்ற விடயத்தில் ஏற்படுத்தினால் வேறு பல விடயங்களில் அரசுக்கு தனிமனிதன் மீது அதிகாரத்தை வழங்கும் போக்கை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இது government overreach இன் ஒரு போக்கு! மீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை! இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது!
-
இந்த பாரம்பரிய சடங்குகள் மற்றவரைப் பாதிக்கும் போது அதை பிற்போக்குத்தனமாக நான் சுட்டிக் காட்டுவதுண்டு! உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும்! அப்படி முடியாது! மற்றவருக்கு பாதிப்பில்லாத சம்பிரதாயங்களை அவற்றுக்கு போலி விஞ்ஞான விளக்கம் கொடுக்காமல் செய்யுங்கள்! மற்றவரைப் பாதிப்பவற்றை செய்யும் போது கேள்விகள் வரவே செய்யும்! "இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்!"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்! இலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன்! வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் நழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது! சட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது! அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம்! இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்!
-
இது பலருக்கு உண்மை! எந்த வழியிலாயினும், ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்தில் வேரூன்றும் போது சில நல்ல விடயங்களை இழந்து சில நல்ல விடயங்களைப் பெறுகிறோம் என்பதே உண்மை! இதில் எதை விட்டுக் கொடுக்கலாம் எதை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கலாம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் தெரிவு என்பதையே மேலே கு.சா அண்ணைக்குச் சொல்ல முயன்றேன்! இதை விட யார் எங்கே, என்ன காரணங்களுக்காக வசிக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரு அக்கறையும் இல்லை!
-
இது தான் நான் அமெரிக்காவில் விரும்பும் சுகபோகம்! இது இல்லாமை தான் நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பாமைக்குக் காரணம்! மற்றபடி நீங்கள் குறிப்பிடுகிற "சீரழிந்த வாழ்க்கை" என்பது உங்கள் பார்வை! உங்களுக்கு சம உரிமையை விட சீரழியாத வாழ்வு முக்கியம் என்றால் நீங்கள் அயோத்தியில் போய் வாழவும் உங்களுக்கு தெரிவுண்டு! ஏன் இங்கே இருந்து சீரழிந்த வாழ்வு வாழுவான்? இது தான் உங்களிடம் மட்டுமன்றி மேற்குலக வாழ்வின் சுதந்திரத்தை விமர்சிப்போரிடம் நான் கேட்பது! பதில் ஒருவரிடமும் இல்லை!
-
இது தீமையான சட்டம் என்ற கருத்தில் இணைத்தீர்களோ தெரியாது!, ஆனால் தும்பளையான் சொன்னது போல இதை 2005 இலேயே கைவிட்டு விட்டனர். காரணங்கள்: உள்ளூரில் ஜே.வி.பியினதும், த,தே.கூவின் சுமந்திரனது தலைமையிலான எதிர்ப்பு. மேலும், அமெரிக்கா உட்பட சிறிலங்கா காசுக்குக் கையேந்தும் வெளிநாடுகளின் எதிர்ப்பு. சிறிலங்காவில் மதமாற்ற தடைச் சட்டம் என்று நீங்கள் கூகிளில் தேடும் போதே மேலே வரும் கார்டியன் (https://www.tamilguardian.com/content/sri-lanka-drops-anti-conversion-bill) இணைப்பைப் புறக்கணித்து விட்டு, கீழே இருக்கும் சண்டே ரைம்ஸ் இணைப்பை இங்கே இணைத்திருக்கிறீர்கள்! அதில் ஆண்டுகள் கூட (2009) தவறாக இருக்கின்றன. இதை தான் fake news என்பதோ? எந்த மதத்தை யார் தங்கள் தனியார் வீட்டில் நடத்தினாலும், ஊரவர் என்ற போர்வையில் குண்டர்கள் வீடு புகுந்து தாக்குவது தவறு என்று சொல்ல மூக்கு வேர்க்க வேண்டியதில்லை! உங்களுக்கு அடிப்படையான சுதந்திரத்தை மதிக்கும் பண்பு இருந்தால் போதும் எ.த! இந்த அடிப்படைச் சுதந்திரத்தை வேண்டி விரும்பி நாடி மேற்கு நாடுகளில் வந்து குடியிருப்போர் தான் தாய்நாட்டில் இப்படியான பிற்போக்கு ரவுடியிசத்தை ஆதரித்து இங்கே எழுதுகின்றனர்!