யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,378
 • Joined

 • Last visited

 • Days Won

  31

சண்டமாருதன் last won the day on March 18

சண்டமாருதன் had the most liked content!

Community Reputation

1,261 நட்சத்திரம்

2 Followers

About சண்டமாருதன்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto

Recent Profile Visitors

4,297 profile views
 1. இவர்கள் அவர்கள் அல்ல என்று ஐஎஸ் அறிக்கை விடும்வரை மழுப்பியத சிங்கள அரசுதான்.. உள்ளுர் இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தது என்றும் வெளியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தெடர்பிருப்பதாக தெரியவில்லை என்றுதான் இங்கை அரசு முடிந்தவரை இந்த தாக்குதல் குறித்து மழுப்பப் பார்த்தது. ஆனால் இப்போது அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தாக்குதலில் தெடர்புடைய இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது. அதுதான் இங்கு மிகப் பிரதானமானது. தாக்குதலோடு தொடர்புடையவர்களின் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மேலும் அவர்கள் எங்கு தாக்கப் போகின்றார்கள் என்ற இலக்கு உட்பட அனைத்தும் ஏற்கனவே தெரிந்திருந்தும் இந்த தாக்குதலை ஏன் சிங்களம் தடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வி. ஒரு வேளை இந்திய தூதரக தாக்குதலை உள்ளால கதைத்து தடுத்துவிட்டார்களோ தெரியாது.
 2. Sri Lanka Was Warned of Possible Attacks. Why Didn’t It Stop Them? https://www.nytimes.com/2019/04/22/world/asia/ntj-warning-sri-lanka-government.html?action=click&module=Top Stories&pgtype=Homepage தற்போது செய்திகள் போகும் பேக்கை பார்த்தால் தாக்குதல் திட்டங்கள் ஏற்கனவே அறியப்பட்டிருக்கின்றது.
 3. இணைப்பிற்கு நன்றிகள். நாலாம் மாடியில் இவர்களை வைத்து தான் சிங்களம் இஸ்லாம் இல்லாத தமிழர்களை விசாரித்து கொன்றார்கள். இனி இவர்கள் நாலாம் மாடிக்கு போவார்கள்.
 4. சிங்கள புலநாய்வுத்துறையில் முஸ்லீம்களின் பங்கு மிக அதிகம். இவர்களை வைத்தே சிங்களம் தமிழர்களை உள்ளகமாக கருவறுத்தது. தென்னிலங்கையில் நடந்த காணாமல் போதல்கள் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்திலும் புலனாய்வுத்துறை முஸ்லீம்களை வைத்தே சாதித்தது. இத் தாக்குதலில் முஸ்லீம்களை வைத்தே முஸ்லீம்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் பயன்படுத்தியிருக்கலாம். சற்று மிதமான மதப்பற்றுக் கொண்டவர்கள் தீவிரவாத வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். இதனூடாக இப்போது சர்வதேச அளவில் இலங்கை முஸ்லீம்கள் பயங்கரமானவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பேரினவாதம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. தாக்குதலுக்கான திட்டமிடலில் புலனாய்வுக்கு நிகரான புத்திசாலித்தனம் இருக்கின்றது அதை விட வேகம் சம்மந்தப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகளிலும் இருக்கின்றது. இந்த சம்பவம் ஒரு தொடக்கப் புள்ளி. இதிலிருந்த எதை ஆரம்பிக்க போகின்றார்கள் எப்படி முடிக்கப்போகின்றார்கள் என்பதை பார்ப்போம். தாக்குதலின் நோக்கம் இதுவாக இருக்குமோ என்ன ஐயம் தான் எனக்கும்
 5. இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை. இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் கேள்வியாக நிற்கின்றது.
 6. கீழ்வரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது குறித்த விளக்கக் காணொளியில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவிகளை சுட்டுக்கொல்லும் காட்சியும் சிறுபகுதியாக உள்ளது. பார்க்க முடியாதவர்கள் இக் காணொளியை தவிரக்கவும்.
 7. உங்கள் கருத்துக்கு நன்றிகள். கருந்துளை சம்மந்தப்பட்ட இந்தப் பதிவில் நிலவுக்கு சென்றது குறித்த கருத்துக்கான பாதிலாகவே எனது கருத்தும் பயணிக்கின்றது. அதற்காக இந்த திரி திசை மாறிச் சென்றதாக கருதவும் முடியாது காரணம் இவ்வாறான விசயங்களின் மேல் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவும் அதற்காக ஏற்கனவே கேள்விக்குள்ளாகியிருக்கும் விசயங்களை ஒப்பிடவும் கருத்தாடலில் இடமுண்டு. உங்கள் ஆர்வங்களில் எந்தக் குறுக்கீடும் இல்லை அவை குறித்த தேடல்கள் தெடர்வதிலும் உரையாடப்படுவதிலும் எந்த எதிர்க்கருத்தும் இல்லை. இரண்டு விடயங்களுக்கும் சம்மந்தமில்லை என்ற உங்கள் கருத்தோடு உடன்படுவதோ மறுதலிப்பதோ இவ்விடத்தில் பொருத்தமில்லை ஆனால் நான் அறிவியலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை துண்டித்து அணுகுவதில்லை. எம் மீது குண்டுபோட்ட விமானங்கள் தகவல் கொடுத்த செய்மதிகள் மற்றும் ஏனைய தளவாடங்கள் எல்லாம் இவர்களின் அரிய தொழில்நுட்பங்கள் தான். அறிவியல் கண்டுபிடிப்புத்தான். எனக்கும் இவற்றுகுமான முதல் தொடர்பு நுகர்வோர் என்ற உறவுதான் அதனால் நான் கனடாவில் இருப்பதால் கனடா கண்டுபிடிப்பை ஆ என்று அண்ணார்ந்து பாக்கவும் எதுவும் இல்லை. நாலு பல்கலைக்கழகமும் நாற்பது அறிவாளியும் ஒன்றை சொன்னால் அதை நம்பவேண்டிய அவசியமும் இல்லை ஏனெனில் இவைகள் அறத்துக்காகவும் மனிதநேயத்துக்காகவும் செய்யப்படுவதில்லை. வியாபாரம் லாபம் என்ற கணக்கின் அடிப்படையில் செய்யப்படுவது. நீங்கள் ஒரு கண்டுபிடிப்பை வைத்து ஆர்வப்படுகின்றீர்கள் நான் இந்த அறிவியல் எந்த நாட்டு அப்பவிகளை எந்தவிதத்தில் கொல்ல பயன்படுத்தப்படும் என அச்சப்படுகின்றேன் தவிர கருத்துக்களோடு முரண்பட இங்கு எதுவும் இல்லை. அவர் நிலவுக்கு போனார் அல்லது பொய் சொல்கின்றார் . இதை நாம் ஏன் ஆம் இல்லை என்று நிறுவ முற்படவேண்டும்? சர்ச்கைக்குரிய இந்த விசயம் முடிவுக்கு வரதாத சர்ச்சையான விசயமாகவே இருக்கின்றது. நாம் ஏதற்கு ஒரு முடிவுக்கு வர எத்தனிக்கவேண்டும் என்பதே என்நோக்கு.
 8. மரபணு சோதனை வாயிலாக உறுதிப்படுத்தப்படவேணடிய விசயம். இது அம்மா இது அப்பா என்பது நாம் பிறந்து வளரும் போது அறிந்துகொள்வதும் பின்னர் அதை நம்புவதும் ஆகும். அம்மா அப்பா விசயத்தின் தீர்மானம் எமது பிறவிக்கு முற்பட்டது. பகவத் கீதைமேல் சத்தியம் செய்தால்போல் அவை உண்மையாகிவிடாது. பகவத் கீதையில் நம்பிக்கை அவநம்பிக்கை என்பது இங்கே இரண்டாம் பட்சமானது. இங்கே நிலவுக்கு போனதென்று சொல்வதும் அவர்கள் தான் அது பொய் என்பதும் அவர்களும் அவர்களுக்கு எதிரானவர்களும் தான் சத்தியம் கேட்பவர்களும் அவர்கள் தான் மறுப்பவர்களும் அவர்கள் தான் பொய்க்கு விளக்கம் கொடுப்பவர்களும் அவர்கள் தான். நாம் எதையும் ஏற்கவேணும் நம்ப வேணும் அல்லது மறுதலிக்கவேணும் என்ற எந்த நிர்பந்தமும் நெருக்கடியும் அறிவுபூர்வமாகவே உணர்வுபூர்வமாகவோ இல்லை. நிலவுக்கு சென்றதையும் அதை ஒட்டி நடக்கும் சர்ச்சைகளையும் சாதரணமாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள். அது சார்ந்து இயல்பாக எழும் கேள்விகளோடு பயணிப்பவர்கள் அவ்வளவுதான்.
 9. சோவியத் ரசியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் இருந்த பனிப்போர் காலத்தில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விண்வெளிப் பயணப்போட்டியில் நிலவுக்கு அமரிக்கன் சென்றது உண்மை என்றோ அல்லது பொய் என்பது குறித்து நாம் அக்கறைப்படத் தேவையில்லை. எந்த முடிவுக்கும் வராமல் இந்த சம்பவத்தை அப்படியே சர்ச்சைக்குரிய விசயமாக கடந்து செல்லவேண்டியதுதான். இந்த இரு நாடுகளும் தமிழின அழிப்புக்கு சிங்களபேரினவாதத்திற்கு ஆதரவுதந்த நாடுகள் தான். நாம் ரசியாவிலோ இல்லை அமரிக்காவிலோ இல்லை லண்டன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழவதால் வெள்ளையராகவோ ஆங்கிலேயர் ரசியராகவோ மாறவும் முடியாது, அவ்வாறு மாறி அந்தந்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவாளிகள் நிறுவனங்களின் கூற்றுக்களுக்கு சார்பாகவே எதிராகவோ உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏன் என்ற கேள்விதான் அறிவு ஆராய்ச்சித் தேடலுக்கு அடிப்படை.. அவ்வாறுதான் ஏராளமான கேள்விகள் இந்த நிலவுப்பயணம் குறித்தும் பல கேள்விகள் எழுகின்றது. நாம் தான் அறிவாளி அல்லது அவர்கள் இவர்கள் தான் அறிவாளி அவர்கள் சொல்வதை மட்டும் கேள் என்ற நிலைப்பாடும் திணிப்பும் கருத்தாடலில் இங்கே இருக்கின்றது. அதை ஒருபோதும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. கேள்விகளின்பக்கம் நிற்பதே ஆரோக்கியமானது. நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் நடந்தது உண்மை என்றால் பைபிள் மேல் சத்தியம் கேட்கும் போது அவரே சத்தியம் செய்ய மறுத்துவிட்டார். இதற்கு மேல் இதில் நாம் வில்லங்கப்பட என்ன இருக்கின்றது. !! Neil Armstrong: Refuse to Swear on the Bible He walked On the Moon
 10. எதிர்பார்த்தாலும் நடமுறையில் அ;ப்படி ஒரு நீதி மன்ற மும் இல்லை. ஐ நா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவனுக்கு சார்பாக இல்லை. பலமானவன் சொல்வதை கேட்கும் நிலையிலேயே இருக்கின்றது. உலகில் போர்களும் அதனால் பல மில்லியன் மக்கள் கொல்லப்படுவதும் உடமைகளை இழந்து அகதியாவதற்கும் காரணமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பது அமரிக்கா. அமரிக்காவுக்கு எதிராக உலக நீதி மன்றம் எதை செய்ய முடியும்? ஒரு இனக் குழுமம் ஒன்றுபட்ட சக்தியாக பலமாக இருக்கும் போது பேரம் பேசும் தகுதியை பெறுகின்றது. புலிகள் பலமாக இருந்தவரை தான் ஏனைய நாடுகள் எமது பிரச்சனைகளை சொற்பமேனும் காதுகொடுத்து கேட்க நேர்ந்தது. புலிகளுக்கு முன்பும் பின்பும் எமது பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்ள வில்லை என்பது மட்டுமில்லாமல் இன அழிப்பு குற்றச் சாட்டில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நோக்கிலேயே உள்ளது. பலமான நாடுகள் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை. அதனால் லாபம் இல்லை. ஐ நா பலமான நாடுகளை அனுசரித்தே செல்கின்றது. ஈழம் தமிழகம் மற்றும் உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் ஒரு பெருவட்டமாக ஐக்கியப் படுவதும் ஒன்றுபட்ட அமைப்புகள் உருவாகுவதும் வியாபாரங்களில் வளர்வதும் போன்ற நிலை ஏற்படும்போது சில அனுகூலங்கள் ஏற்பட வாய்புள்ளது.
 11. பலமானவர்கள் பலவீனமானவர்களை வேட்டையாடிக்கொள்வதுதான் மனித இயல்பு. ஏனெனில் மனிதன் அடிப்படையில் ஒரு வேட்டை விலங்கு, எவ்வளவுதான் பண்பட்டாலும், நாகரீகம் அடைந்தாலும் அறிவு விஞ்ஞானம் தொழில்நுட்பம் மருத்துவம் என பல நூறு துறைகள் வளர்ந்தாலும் இவை அனைத்தும் சக மனிதனை அழிக்க அக்கிரமிக்க வியாபார ரீதியில் சுரண்ட என பல வடிவங்களில் வேட்டையாடும் கருவிகளாகவும் பயன்படுகின்றது. எம்மைப்போல் சிறிய இனக்கூட்டம் சிறிய தேசம் சமூக முரண்பாடுகளால் பிளவுபட்ட மக்கள் கூட்டம் இலகுவாக வேட்டையாடப்படும். எமக்கு நடந்த அனுபவங்களும் இதுதான். ஆனாலும் அனுபவத்தில் இருந்தும் எதையும் நாங்கள் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் எமது அவல வாழ்வின் பிரதான உண்மை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று பாலர் வகுப்பிலேயே சொல்லித் தருகின்றார்கள் இருந்தும் எம்மால் அதை ஏற்க முடிவதில்லை. ஐ நா வோ இல்லை வேறு ஒரு நாடோ எம்மை காப்பாற்றுவார்கள் அல்லது எமது உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றோம். அவர்கள் ஏன் அதைசெய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் குறித்து சிந்திப்பதில்லை.
 12. ஐ நா அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரு அமைப்பு. பல முள்ள நாடுகள் பணக்கார நாடுகளின் நிதியில் இயங்கும் ஐ நா அமைப்பு அவர்களை அனுசரித்தே செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக 2015 ல் இருந்து சிரியாவில் நடக்கும் யுத்தம். இதில் பிரதானமாக சம்மந்தப்படும் நாடுகள் அமரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் அரசுக்கு எதிரானவர்களோடு கூட்டு ரசியா அரசின் பக்கம். என்னும் பல நாடுகள் இதில் சம்மந்தப்படுகின்றது. கொல்லப்பட்டவர்கள் ஐந்து லட்சத்துக்கும் மேல் சொந்த நாட்டுக்கு வெளியே அகதிகளாக ஐந்து மில்லியன் மக்களும் நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்து ஆறு மில்லயன் மக்களும் அகதிகாளாக உள்ளனர். இத்தனை மில்லியன் மக்களின் அவல வாழ்விலும் உயிர்ப்பலியிலும் ஐ நா வின் அதிகாரம் என்பது கொடிய போரை தடுப்பதாகவோ மக்களை காப்பதாகவோ இல்லை. அடிச்சு துவைச்சு பாதி செத்த நிலையில் உள்ளவனுக்கு ஓரு கப் யூஸ் கொடுத்துவிட்டு அதிகமாக யார் ஐ நா வுக்கு நிதி உதவி செய்தார்களோ அவர்களுக்கு ஆதரவாக நியாயங்கள் போசுவதுதான். அதையேதான் எல்லா நாடுகளிலும் செய்கின்றார்கள். இலங்கையிலும் செய்தார்கள். ஐ நா வை யார் நடத்துகின்றார்கள் அல்லது எது நடத்துகின்றது என்று தெரியாமல் நாம் தான் நியாயம் தர்மம் அறம் என்ற நினைப்போடு அவர்களை அண்ணாந்து பார்க்கின்றோம்.
 13. காணொளியில் நிறைய விசயங்கள் பகிர்ந்திருக்கின்றார்கள். விவசாயம் ஒரு கட்டமைப்பின் கீழ் இல்லை ஆனால் அதை இப்போது விரும்புகின்றார்கள் என்பது வரை மகிழ்சியானது. விவசாயிகள் எல்லோரும் சேர்ந்துதான் ஒரு சங்கத்தை அமைக்கவேணும், இவ்வாறு காணொளியை பதிவிடுவதில் ஆர்வமுள்ளவர்களே ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபடுதல் பொருத்தமானது தவிர தமிழ்த் தலமைகளை இந்த விசயத்தில் நம்பி ஒரு பயனும் கிடையாது. இதற்கும் தமிழ்த் தலமைகளுக்கும் என்றைக்கும் தொடர்பே இருந்ததில்லை. கட்டுப்பாடற்ற மருந்துப் பாவனையால் காய்கறி விற்பனை பாதிக்கப்படுகின்றது என்று அவர்களே சொல்கின்றபோது அதில் மாற்றத்தை கொண்டுவராமல் விட்டால் விவசாயம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும். உரம் மருந்து பாவனை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. அவரவர் எடுக்கும் முடிவாக இருக்கின்றது. கோவாவை சனம் விரும்பாததற்கு காரணம் அளவுக்கதிகமான மருந்து என்கின்றார்கள். சொந்த மண்ணில் விழையும் காய்கறிகளை சொந்த மக்களே வாங்க முடியாத சூழுல் ஏற்பட்டால் வேறு எங்கு சந்தைப்படுத்துவது ? விவசாயிகள் சங்கம் அமைத்து ஒருங்கிணைவதும் கலந்துரையாடுவதும் பல்கலைக்கழக விவசாய மாணவர்கள் தம்மாலான ஆதரவை அறிவுபூர்வமாக செய்வதும் என தன்னார்வமாக நிறைய காரியங்கள் அவசியமாகின்றது,.
 14. வணக்கம் சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு தேசத்தை உருவாக்கியிருந்தால் அதுவே தமிழனுக்கு நிரந்தர அடயாளமாக இருந்திருக்கும். பலமான தேசங்களும் குறிப்பாக தமது சுயநலன் சுரண்டலுக்காக சிறு இனக் குழுமங்களை அழிப்பது உலகில் புதியதல்ல. ரசியாவை பின்தள்ள முஜாகுதீன்களை அன்று அமரிக்க உருவாக்கியது இன்றய ஐஎஸ்எஸ் சிரியப் போராளிகளை உருவாக்கியது. பல மில்லியன் மக்களின் சாவும் மில்லியன் குழந்தைகள் அநாதைகளாதலும் அகதியாதலும் என தொடர்கின்றது, இதையே பாகிஸ்தான் உளவுத்துறை காஸ்மீரில் செய்கின்றது. இவ்வாறான அணுகுமுறையைத்தான் இந்தியாவும் இலங்கைப் போராளிகள் விசயத்தில் செய்தது. இலங்கை அரசும் மதம் கிழக்கு பிரதேசவாதம் மற்றும் படித்த புத்திஜீவிகளை வைத்து நிறைய விசயங்களை தனக்கு சாதகமாக்கியது. நாம் இவற்றுக்கெல்லாம் பலியாகக் கூடிய நிலையில் இருந்தோம் இன்னும் இருக்கின்றோம் என்பதுதான் எமது அழிவினதும் அடயாளங்களை இழப்பதின் சுட்சுமமே தவிர எல்லா பழியையும் தூக்கி புலிமீது போட்டுவிட்டு நாம் யோக்கியர் என்பதும் எமது சமூகத்தில் இருந்து தோன்றி மறைந்த புலிகளை எமது சமூகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து விமர்சிப்பதும் சாத்தியம் என்றால் அதன் பொருள் நாம் ஒரு சமூகமாக கூட என்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே, இந் நிலையில் நாம் இனம் என்றும் அதற்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கின்றறோம். உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள்.