Jump to content

சண்டமாருதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2554
 • Joined

 • Last visited

 • Days Won

  33

Everything posted by சண்டமாருதன்

 1. அன்னாருக்கு அஞ்சலிகள் . அவரை பிரிந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
 2. தமிழக கட்சிகள் எல்லாம் சாக்கடை என்றால் ஈழத்து அரசியல் கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா ? இல்ல அமரிக்க கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா ? ஈழத்தில் ஆயுதபபோராட்டத்துக்கு முற்பட்ட காலத்து அரசியல் எப்படி அதிகாரத்தில் உள்ளவனை அண்டிப்பிழைத்து என்பதுக்கும் வரலாறு உண்டு. ஆயுதப்போரட்டம் முப்பது இயக்கமாக பிரிந்து சிதைந்து குத்துப்பட்டு ஆளையாள் கொன்றதும் உண்மை. இன்ளைய அரசியல் கட்சிகளின் யோக்கியதையை உணர அதிக சிரமமும் இல்லை. சாக்கடைக்குள்ளாகத்தான் இந்த இனத்தின் அரசியல் சுழல்கின்றது. இந்த சுழற்சியிலிருந்து அந்நியப்படடு தமிழினம் சார்ந்த அரசியல் என்ற ஒரு பூராயமும் கிடையாது. இந்த வாய்க்கியத்தை நாமும் திருப்பி உங்களை நோக்கியும் சொல்லலாம் யாழ் நிர்வாகத்தை நோக்கியும் சொல்லலாம். . 2008 ராமேஸ்வரம் கண்டனக் கூட்த்தில் சீமான் பேசியதில் இருந்து இன்றுவரை இன்றுவரை ஈழத்தில் நடந்த இனப்படுகொலை , போராட்டம் அதற்காக உயிர்நீர்த்தவர்கள். தலமை என அனைத்தையும் உயிர்ப்புடன் நகர்த்துவதில் சீமானும் நாம் தமிழருமே பிரதானமாக உள்ளனர். அப்படி இல்லை வேறு தரப்பு உள்ளது என்றால், முடிந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். இனப்படுகொலையோ இல்லை போராட்டமோ தனிநபர்கள் அல்லது குழுக்களின் சொத்தல்ல. அது அனைவராலும் பேசப்படவேண்டிய விசயம் , அரசியலோடு இணைக்கப்படவேண்டிய விசயம். இந்த விசயத்தை ஈழத்தமிழர்கள் அமைப்புகள் கடந்த பத்து வருடமாக போசியது அதிகமா இல்லை நாம்தமிழர்கள் பேசியது அதிகமா ? புலம்பெயர் நாடுகளில் எந்த லட்சணத்தில் மாவீரர் தினம் மே இன அழிப்பு நினைவு கூரப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்தது. இன அழிப்பையும் போராட்டத்தையும் அதிகமாக தமது பிரச்சரத்தில் முன்னெடுக்கும் நாம் தமிழர் பதிவு திரிகளை மூடியதன் மூலம் யாழ் நிர்வாகம் என்னத்தை சாதித்தது ? இந்த செயல் மூலம் தமிழர்களுக்கு என்னத்தை சொல்ல முற்படுகின்றது ? இல்லை இவற்றுக்கெல்லாம் பிரதியீடாக வேறு தரப்புகளை இன்காண்கின்றதா ? முன்பும் இந்த கருத்தை முன்வைத்துள்ளேன். திரும்பவும் பதிகின்றேன். ஒருவனை தவறு அல்லது ஒரு கட்சி தவறு என்று சுட்டிக்காட்டும் போது சரியானதை சுட்டிக்காட்டுங்கள். இல்லையேல் மேலே ஒருவர் மூக்கை பொத்திக்கொண்டு சாக்கடையை கிண்ட முற்படுகின்றார். அப்படி எதற்கு வில்லங்கப் பட வேணும் ? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காழ்புணர்வுகள் ஊடாக பொதுவெளியை அணுகும் தன்மையே இங்கு அதிகமாக உள்ளது. அதனால் உங்கள் வசனத்தோடு இதை முடிக்கலாம் "உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்"
 3. இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.
 4. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள் எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். என்னுமொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை பதிகின்றேன்.
 5. தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும். உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும்.
 6. சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.
 7. உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை தமிழ் தேசீய இனமாக கருதி அவர்கள் மீது ஒடுக்குமுறையை செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். . பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து. கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன்.
 8. சந்தடிசாக்கில் விசமத்தனமான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். இலங்கையிலோ இல்லை தமிழ்நாட்டிலோ இல்லை தமிழர்கள் வாழும் வேறுநாடுகளிலோ தமிழன் கையில் நாடோ இல்லை அரசியல் அதிகாரமோ கிடையாது. பிற இனங்களின் இனவெறிக்கு பலியாகும் நிலையிலேயே தமிழனம் இருப்பது வெளிப்படையான உண்மை. தமிழரின் தார்மீக உரிமைக்கான குரலை இனவெறிக்குரலாக திரிவுபடுத்துகின்றது உங்கள் கருத்து. இங்கே இந்த திரியில் அவரவர் தரப்பில் இருந்து அவரவர் கருத்துக்களை முன்வைத்தார்கள். அவ்வளவுதான். இந்தக் கருத்துக்கள் யதார்த்த களத்திற்கும் செயற்பாட்டுத் தளத்திற்கும் பொருத்தமானது என்பதையோ இல்லை ஏற்றுக்கொள்ளவேணும் என்பதையோ அந்தந்த தளத்தில் போராடும் மக்களே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள்.
 9. பிராமணர்களை போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறி ஆரியர்கள் என்று திராவிடம் அரசியல் செய்தது. இப்போது தமிழ்தேசீய அரசியல் திராவிட போர்வைக்குள் இருக்கும் வேற்று இனங்களை குறிவைக்கின்றது. ஆரிய திராவிட போர்வைகளால்சுருட்டிகட்டப்பட்டுள்ள நிலையில்தான் தமிழினம் உள்ளது. இதில் உட்சுருங்கி அழிய எதுவும் இல்லை. ஆரிய திராவிட போர்வைகளை தமிழினம் என்று ஏற்பது உட் சுருங்கி அழிவதை விட மோசமான நிலை.
 10. இதை ஏன் சீமான் செய்யவேணும் ? அவர்கள் தங்களை தமிழர்கள் என்றுதானே அடயாளப்படுத்தி அரசியல் அதிகாரங்கள் இட ஒதுக்கீடு நிலங்கள் சிறுவணிகம் பெரு வணிகம் என அனைத்தையும் கைப்பற்றுகின்றார்கள். அதுதானே அடிப்படை பிரச்சனை. ஆந்திரா கர்நாடகா மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்வதுபோல் அவர்கள் தங்களை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே!! நாயுடு நாயக்கர் ரெட்டிகள் அனைவரையும் மட்டுமல்ல கட்டபொம்முலுவை கூட வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று தமிழர்கள் உள்வாங்கி சுவீகரித்து ரொம்பகாலமாகிவிட்டது. இவ்வாறு சுவீகரித்ததின் விழைவில் இருந்துதான் " வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆழும் உரிமை தமிழருக்கே " என்ற நிலை உருவாகின்றது. நீங்கள் சொல்வதுபோல் புதிதாக அவர்களை தமிழ்த்தேசீயத்துள் இணைப்பதற்கு என்ன இருக்கின்றது? இதுவரை காலமும் தமிழக அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.திராவிடம் என்ற போர்வையில் இருக்கின்றது. நீங்கள் சுருக்கமாக சொல்ல வருவது இந்த நிலையை அப்படியே விட்டுவிடுவது. சீமானின் தமிழ்த்தேசீய எழுச்சி தேவையற்றது என்பதைத்தான். இந்திய நீதிமன்றங்கள் நீங்கள் நினைப்பதுபோல் என்றைக்கும் நடப்பதில்லை. நீதித்துறையே பிரமணர்கள் கைகளில்தான் இருக்கின்றது. இம்மியளவு பிசகினாலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மக்கள் இறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது பெரும்பான்மை அதிகாரம் சார்ந்த அரசு பணிகள் தெலுங்கு சாதிகளுக்கு எப்படி சாத்தியமானது போன்ற பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். உச்ச நீதிமனறங்களோ சட்டங்களோ சற்று சரியாக நடந்திருந்தால் கூட கருணாநிதி வகையறாக்கள் தனிப்பட்ட ரீதியில் கூட இவ்ளவு சொத்தை குவித்திருக்க முடியாது. -----
 11. தமிழ்நாட்டில் தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்குள் இருக்கின்றார்கள். ஒன்று இந்திய தேசீய ஒடுக்குமுறை மற்றயது திராவிட ஒடுக்குமுறை. சுருக்கமாக சொன்னால் ஆரிய திராவிட ஒடுக்குமுறை. திராவிடக் கட்சியினர் ஆரியக் கூடாரத்துக்கு செல்வது ஒன்றும் இப்போது இருக்கும் ஆபத்தை விட மோசமானதில்லை. சிங்களம் பேரினமாக மாறியதற்கு உள்வாஙகிக்கொண்ட தமிழர்கள் இதர இனங்களை சேர்ந்தவர்களையும் தமிழக சூழலையும் ஒப்பிட முடியாது. தமிழகத்தில் தென்னிந்திய திரைபட சங்கம் , சம்மேளனத்தை கூட தமிழ்நாடு திரைபட சங்கம் சம்மேளனம் என்று மாற்ற முடியாதளவுக்கு தெலுங்கு ஆதிக்க நிலமை இருக்கின்றது. இலங்கையில் கணிசமான தமிழர்கள் காலப்போக்கில் சிங்களவர்களாக மாறியதுபோல் தமிழகத்தில் சாத்தியமில்லை. தெலுங்கர்களிடம் இருப்பது இனரீதியான அடயாளம் மட்டுமில்லை, தெலுங்கு சாதிவாரியான அடயாளங்கள். இவைகள் தனியே கௌரவத்துக்கான அடயாளம் கிடையாது மாறாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் உரிமையாகின்றது. தமிழர்களில் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியும் வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாது. கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசும் தமிழர். தெலுங்கு இசைவேளாளர் சாதி. அறிஞர் அண்ணாவின் தந்தை முதலியார் ஆனால் தாயார் பங்காரம்மா வளியில் வளர்ந்தவர். அவரும் தெலுங்கு பேசும் இசைவேளாளர் சாதியை சேந்தவர். திராவிடக் கட்சித் தலமை அண்ணாவிடம் இருந்து கருணாநிதிக்கு இதற்கு ஊடாகத்தான் மாறியது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டில் 222 பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் இசை வேளாளர் உட்பட்ட 34 சாதிகளே அதிக இடங்களை அபகரித்தது. தமிழ்நாட்டின் பூர்வ குடிகளான வன்னியர்களும் இதர சாதிகளும் இதற்கு எதிராக போராடி 21 பேர் உயிரத்தியாகம் செய்து சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று மிகவும் பிற்படுத்தப் பட்ட 108 சாதிகள் தெரிவானது. அதிலும் கருணாநிதி இந்த இசைவேளாளர் சாதியை இணைத்துக்கொண்டார். பிற்படுத்தப்பட்ட மக்கள் சலுகைகள் மற்றும் மிகவும் பிற்படுத்ப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அபகரிக்க வழி ஏற்படுத்தினார். இதன் விழைவால் தமிழ்நாடு அரசு பணிகளில் கிட்டத்தட்ட 60 வீதத்துக்கும் மேலான பணிகள் தெலுங்கு வம்சாவழிக்குப் போனது. கிராம ஆட்சியர் தாசில்தார் வட்டாட்சியர் காவல்துறையின் அதிகாரமட்டங்கள் என அனைத்தும் தமிழ் முகமூடிபோட்ட தெலுங்கர்கள்.( மணற் கொள்ளை முதல் சாராய அலை வரை அனுமதிகளுக்கு பஞ:சமில்லை )நாயக்கர் ஆட்சிக்காலத்திலேயே பெருமளவில் தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் தெலுங்கர் கைகளில் போய்விட்டது. திராவிட ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை அதிகாரம் தெலுங்கர் வசம் இருந்ததால் பெருமளவு நிலங்கள் அவர்கள் கைகளில் போனது. கருணாநிதி தலமையிலான திராவிட அரசியல் என்பது தனியே கருணாநிதிகுடும்பம் கொள்ளையடித்தது என்ற புரிதல் மிகத் தவறானது. தமிழ்நாட்டின் நிலம் வளம் அரசியல் அதிகாரம் அனைத்தையும் தமிழர்களிடம் இருந்து பறித்துக்கொண்ட சிறுபான்மை தெலுங்கு சாதிகளின் சூழ்சியை வழிநடத்தியதே திராவிட ஆட்சி. மேலே நீங்கள் கூறுவது சரி பிழை என்பதற்கு அப்பால் இந்தியாவின் சாதிவாரியான கட்டமைப்பு, இட ஒதுக்கீடு, அரசியல் அதிகாரம் என பல சிக்கல்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தற்போது மிகக் கனமான அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் தமிழர் அல்லாதோரிடமே இருக்கின்றது. இந்த அதிகாரத்தை சிதைக்காமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் கூறும் சிங்கள அணுகுமுறை அதிகார சிதைவுக்கு பின்னர் ஒருவேளை சாத்தியப்படலாம். ஆரியம் திராவிடம் இரண்டும் தமிழர் எதிரி, அவர்கள் இணைந்தால் ஒரு எதிரி இணையாவிட்டால் இரண்டு எதிரி.
 12. இணைப்பிற்கு நன்றிகள்.இவரது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் நிறைய இருக்கின்றது.
 13. நான் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். தரவுகளை அடிப்படையாக வைத்துதானே சொல்கின்றார். இதில் பொய்யுரைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . வலிந்த பண உதவிகளும் நன்கொடைகளும் பன்நாட்டு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ஏழை நாடுகளுக்கோ இல்லை கல்விநிறுவனங்கள் ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால் அதன் பின்னணியில் சூழ்சிகள் வஞ்சகங்கள் இருப்பது வழமையானது. ஏழை நாடுகளில் மருந்துகளை பரிசோதிக்கும் போக்கு எப்போதும் மேற்குநாடுகளிடம் இருந்தே வருகின்றது. இந்தியா ஆபிரிக்கா இப்போது எதிர்வினையாற்ற முற்படுகின்றார்கள். பன்னாட்டு மருந்துக் கம்பனிகள் மொன்சான்ரோ போன்ற நிறுவனங்கள் பில்கேட்ஸ் போன்றவர்களின் மறுபக்கங்களை பற்றி தமிழர்கள் சிந்திப்பதற்கு இவ்வாறான காணெளிகள் தொடக்கமாக இருக்கும். அதனால் தொடரந்து இணையுங்கள்.
 14. எமது அம்மா அபபா சகோதரங்கள் பிள்ளைகளுக்கு உயிராபத்து நேரும் போது உணர்வுகள் மிக கனதியாக இருக்கும். அதே கனதி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.. எதிர்கால சந்ததிகளுக்கு உறவுகளின் பிரிவு சாதராண ஒரு நிகழ்வாக இருக்கலாம். தாய் தந்தையரின் செத்தவீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் உணர்வுகளும் இயந்திரமயமான இன்றைய தொழில நூட்ப உலகில் இணைந்த வாழ்வில் உணர்வுகளின் கனதி ஒன்றாக இருக்கப்போவதில்லை.. மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்து வாழும் விலங்குகள் பறைவைகளிடம் பரிவு பாசம் பிரிவு உணர்வுகள் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றது. கால்நடையாக சென்ற மனிதன் குறுகிய நேரத்தில் வேகமாக பயணிக்க குதிரை மாடுகளை பயன்படுத்தினான் பின்னர் வாகனங்கள் விமானங்கள் என முன்னேறி இன்று கணனி தகவல் தொழில் நுட்ப காலத்தில் மானுடத்தின் கண்டுபிடிப்புகளே அவனது நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.. நேரம் பறிபோகும் போது உணர்வுகள் சுருங்கி மனிதனும் இயந்திரத் தன்மைக்கு மாற நேரிடும். காதல் காமம் பிறப்பு இறப்பு இவை சார்ந்த உணர்வுள் மாறுபடும். இவ் உலகில் கொடிய சுயநலம் மிக்க அறிவுத் திறன் உள்ள விலங்கு என்றால் அது மனிதர்கள் தான்.. நான் எனது பிள்ளைகள் பெற்றோர்கள் உளளடங்கலாக மனிதர்கள் அழிவது ஒரு அற்ப நிகழ்வாக எதிர்காலத்தில் இருக்கும்.
 15. இந்த இரண்டு நிகழ்விலும் எவ்வளவு புரிதல் இருக்கின்றது. நாட்டில் மலேரியா வந்தால் வேப்பம் பட்டையை அவிச்சு குடிப்பது வழக்கம். நீண்ட காலமாக வேம்பு மஞ்சள் போன்றவற்றை நோய்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள். அதை இங்கும் முயற்சிக்கின்றார்கள். இதனால் கட்டுப்படுத்தலாம் குணமாக்கலாம் என்பது வேறு விசயம். ஆனால் ஏதோ ஒரு முயற்சியை வெறும் மத வழிபாடு ஆராதனை போதனை என்பதை கடந்து செய்கின்றார்கள்.
 16. இந்த லட்சணத்தில இருந்தா குறைந்தது இருபது வீதம் பேருக்கு அதாவது முப்பது கோடிபேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகும் போல இருக்கு.
 17. “எல்லா சாதியும் சொந்தம் தான்... இனி இப்படி பண்ண மாட்டேன்... படிக்க ஆசைப்படுறேன்!” - முத்து
 18. உண்மைதான். .மீம்ஸ் கிரி யேட்டராய் வரும் இளைஞன் சந்திக்கும் வேலைகான இன்ரவியூதான் இந்தப் படத்தின் சிறப்பு. தகவல்களை மட்டும் வைத்திருக்கும் தற்கால இளைஞர்கள் அதற்காக சுயத்தை நவீன தொழில் நுட்ப உலகில் இழந்துவிட்ட பரிதாப நிலை. முகநூலின் என்னுமொரு பக்கத்தை கட்டுகின்றது கீழே உள்ள குறும்படம். இலங்கையில் எடுக்கப்பட்ட படம் என நினைக்கின்றேன் . எயிட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
 19. போராட்ட காலத்தில் சில நிகழ்வுகள் போராட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும் என்ற கருத்துண்டு அவற்றில் சில பூநகரி முகாம் கைப்பற்றப்பட்டிருந்தால் , ஆனையிறவு கைப்பற்றப் பட்டிருந்தால், ஆனையிறவுக்கு உதவிக்கு வந்த படைகளை கப்பலில் இருந்து இறங்க முன்ன தாக்கியிருந்தால் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றது. அவற்றுக்கு ஒத்ததே அன்ரனியும், இவரே கருணா இடத்தில் இருக்கவேண்டியவர் மட்டுமல்லாமல் இவரே கிழக்கு முழுவதுக்குமான தளபதியாக இருக்க வேண்டியவர். இருந்திருந்தால் போரட்ட காலத்தில் போராட்டத்தின் போக்கு மாறியிருக்கும். வடக்கில் பால்ராஜ் கிழக்கில் அன்ரனி இருவரும் போராளிகளின் அதிக உயிரிழப்பால் ஏற்படும் தாக்குதல் வெற்றி எதிர்காலத் தோல்வி என்று கருதியவர்கள். உயிரழப்பை தவிர்ப்பதற்காய் பல தாக்குதல்களை தவிர்த்தவர்கள் . இதனால் பல பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தார்கள். போராளிகளின் அதிக அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தவர்கள். வீரவணக்கம்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.