Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,541
 • Joined

 • Last visited

 • Days Won

  33

Posts posted by சண்டமாருதன்

 1. On 26/9/2020 at 03:53, tulpen said:

  சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள்  இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி  வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும். 

  உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்

  எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். 

   என்னுமொரு சந்தர்ப்பத்தில்  எனது கருத்துக்களை பதிகின்றேன். 

 2. 15 hours ago, ரஞ்சித் said:

  இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம்.

  அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான்.

  1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும்.


  2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது.


  3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.

   

  தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின்  தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும்.  உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும். 

  • Like 2
 3. 12 hours ago, விசுகு said:

  இத்துடன் 

  14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம்  வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????

  சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. 

  தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்)

  இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். 

  வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். 

  ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. 

  தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. 

  தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும்  அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். 

  12 hours ago, Justin said:

  ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள்  எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்!

  சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும். 

  • Like 5
  • Thanks 1
 4. ஏற்கனவே இருப்பில்  நாம் தமிழர் முன்னேடுக்கும் தமிழ்த்தேசீய அரசியலை பிடிக்காத நிலை உள்ளவர்கள் தமது வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் தமக்கு பிடித்த ஒரு தமிழ்த்தேசீய முன்னெடுப்பையோ அதை செய்யும் கட்சி அமைப்பையே முன்நிறுத்தி கருத்தாடவில்லை. 

  நாம் தான் வலிந்து நாம் தமிழர் சாரந்த பதிவுகளை இங்கு இணைக்கின்றோம் தவிர நாம் தமிழர் கட்சிஉறுப்பினர்கள் தமது பதிவுகளை இங்கு கொண்டுவந்து இணைக்கவில்லை. இங்கே பிரச்சராம் செய்து அங்கே ஒட்டு விழப்போவதும் இல்லை இங்கிருக்கும் நாமும் ஓட்டு போடப்போவதுமில்லை. ஈழத்தில் இனவிடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்த தருணத்தில் இருந்து இனத் தேசீயத்தின் நீட்சியாக எழுச்சிபெறும் நாம் தமிழர் என்ற தேசிய எழுச்சி மீது  உள்ள ஆர்வத்தால் இங்கு இணைக்கப்படுகின்றது. நாம் தமிழர் அரசியல் கட்சியாக மாறுவதற்கு முன்பிருந்தே இணைக்கப்படுகின்றது. இது நாம் தமிழருக்கான ஓசிப்பிரச்சாரமாக எங்கனம் அமையும் ?

  சம்மந்தப்பட்டவர்கள் ஒரு கருத்தை தமது கருத்துக்காளால்  முன்நோக்கி நகர்த்தாமல் கருத்துக்களை வைத்து தாம் முன்னோக்கி நகர முற்படுகின்றார்கள். தம்மிடம் உள்ளதே சிறந்தது மற்றது குப்பை என்றோ தமக்கே அறிவிருக்கு மற்றவர்களுக்கு அறிவில்லை என்றோ அவ்வாறான தொனிகளில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்களே தவிர கருத்துக்களை அல்ல. 

  எமது இனம் பல முரண்பாடுகளாலும் ஏற்றதாழ்வுகாளாலும்  சிதைந்துபோயுள்ள கேவலமான நிலையில் இருக்கும் இனம். தனிநபர்களின் அறிவு புலமை தராதரம் கல்வி மேம்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த இனத்தையும் அணுகுவதோ, இனம் சார்ந்த அரசியல் எழுச்சியை எதிர்கொள்வதோ , இவை சார்ந்த தனிநபர் பலங்களை பொது எழுச்சியில் பிரயேகிப்பதோ கருத்தாடலின் அடிப்படையாக இருக்கும் போது அவை சிதைந்துபோயுள்ள இனத்தை புனரமைக்க எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. 

   

  • Like 1
  • Thanks 1
 5. பதிவுக்கு நன்றி.

  இறுதிப்போரும் தடைமுகாமும் துன்பங்களையும் கடந்து வாழ்வை தெடருவது ஒரு முன்னுதாரணம்தான். வாழ்க்கை குறித்த ஒரு புரிதலும் தேடலும் எப்போதும் ஒரு ஆரோக்கியத்தை எற்படுத்தும்

  பணியிடத்தில் 35 வருடங்களாக வேலை செய்து இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஒருவர்  நேற்று காலை மரணித்து விட்டார் என்று  குறுஞ் செய்தி வந்தது. உடற் பருமனோ ஆரோக்கியக் குறைவோ அவருக்கு இருந்ததாக நான் கருதவில்லை.  தற்போதைய தொற்று நோயும் தாக்கவில்லை. எனது புரிதலின்படி வேலை அவரும் இயக்கும் சக்தியாக இருந்திருக்கலாம் அது முடிவுக்கு வந்ததும் அவரை பாதித்திருக்கலாம்.  குறைந்தது என்னுமொரு பத்து வருடம் ஒய்வூதியத்தில் வாழ்ந்திருக்காலம் என்று யோசித்தேன். 

  ஒருவரின் வாழ்க்கை முறையும் இயல்பும் நல்ல ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு பதிவதற்கு அதுவும் ஒரு காரணம். இங்கு பதிந்ததால் எமக்கும் ஒரு நல்ல உணர்வு அவரது அனுபவத்திலிருந்து கிடைக்கின்றது. 

  • Like 1
 6. On 14/9/2020 at 17:18, goshan_che said:

  என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

  தேசிய இனம் என்றால் என்ன?

  இனத் தேசியம் என்றால் என்ன?

  அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

  இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

  இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

  பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

  உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

   

   

  யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

   

  உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். 

  ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை  தமிழ் தேசீய இனமாக கருதி  அவர்கள் மீது ஒடுக்குமுறையை  செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். .

   

  பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து.  கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன். 

   

   

   

   

  • Like 1
 7. 1 hour ago, tulpen said:

  சண்டமாருதன்,   இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பொது துறை ஊழல் என்பது சர்வசாதாரணம். இதற்கும் திராவிடம், ஆரியம், தமிழ்தேசியம் என்ற கருத்தியலுக்கும்  என்ன  என்ன தொடர்பு? இந்தியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருந்தாலும் இப்போது நடைபெற்ற ஊழலை விட இன்னும் அதிகமான ஊழலை செய்திருப்பார்கள் என்பது தமிழராய் இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. பணமோசடியில தமிழர்கள் என்றுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த லட்சணத்தில் இந்தியாவில் நடந்த ஊழலுக்கு உங்களுக்கு ஊட்டப்பட்ட இனவெறுப்பை வைத்து அனைத்து பழியையும் திராவிடம், ஆரியம் அடுத்தவன் மீது சுமத்தி காதில் பூ சுற்றுகின்றீர்கள்.

  ஐரோப்பாவில் வாழும் ஈழ தமிழர்கள் செய்த பல மில்லியன் கணக்கான பண மோசடிகளை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல. கள்ள கடன் அட்டையில் அடுத்தவன் பணத்தை திருடியதில்  தமிழர்கள் கில்லாடிகள்.  தமிழர்கள் என்றால் பத்தரை மாற்று தங்கங்கள் போல கதையளக்கின்றீர்கள். இன்றும் மற்ற நாட்டு வியாபார நிறுவனங்களில் பயமில்லாமல் எமது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் நாம் தமிழனின் கடை என்றால் பல முறை யோசித்தே கடன் அட்டை உபயோகித்து பணம்  செலுத்தும் நிலை. இறுதி யுத்தத்திற்காக தமிழ் மக்களிடம் பணத்தை கொள்ளையிட்ட அத்தனை பேரும் தீவிர தமிழ் தேசியத்தை நேசித்த தூய  தமிழர்களே என்பதை மறந்து விட்டீர்களா? ஜெயல்லிதாவோ, கருணாநிதியோ ஊழல் செயதவர்  கள் என்று சொல்வதற்கு தமிழரின் பணத்தை தமிழ் தேசியத்தின் பெயரிலேயே திருடியதால் கறைபட்ட தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதுவும் இந்த தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அந்த தார்மீக  உரிமை இல்லை. 

  தமிழ் நாட்டு ஊழலைப்பற்றி அடிக்கடி பேசும் பலர் எமது தேசியத்தின் பெயரால் செய்த ஊழலகளை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? 

  இதற்கு பதிலாக கள்ள மெளனமே கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஏனெறன்றால் இங்கு ஊழல் புரிந்த ஐரோப்பிய தமிழ் தேசியர்கள் தமது ஊழலை மறைக்க தான் திராவிடம், தெலுங்கர் என று புதிய புனைவுகளை பேசி தாம் தப்பிக நினைக்கிறார்கள். 

   

  இதில் கள்ள மௌனமாக இருப்பதற்கு ஒன்றுமில்லை.

  பாசிசத்துக்கான மேற்கோளுக்குக்குள் திராவிட அரசியல் அதிகாரம் எப்படி பொருந்துகின்றது என்பதற்கான பதில் அது. 

  Quote

  பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். 

  ஆரிய அதிகார வர்க்கத்துக்கு எதிரானதாக ஆரம்பித்த திராவிடம் அரசியல் அதிகாரம் பெற்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஊழல் சுரண்டலில் உச்சம் தொட்டதை தான் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆரியத்தின் நோக்கம் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி சுரண்டுவது அந்த இடத்துக்குத்தான் மாநில அளவில் திராவிட அரசியல் அதிகாரமும்  வந்துள்ளது. ஆரியம் திராவிடம் என்ற இரண்டும் பாசிச வரையறைக்குள் வருகின்றது. இதை எதிர்த்துநிற்கும் அரசியலை இங்கு பாசிசம் என்கின்றனர். இது திமுக பிரச்சாரத்தில் அடங்கும் தவிர இந்த கருத்தை ஏற்பதற்கு எந்த நியாயமும் கிடையாது. 

  போரட்டத்திற்கு சேர்த்த பணத்தை சிலர் ஆட்டையை போட்டதென்று நானும் கேள்விப்பட்டுள்ளேன். இக்களத்திலு இது பற்றி சில பதிவுகள் இணைத்து விவாதித்ததுண்டு. ஆனால் இதை யார் செய்தார்கள் அவர்கள்மீதான சட்ட நடவடிக்கை என்ன அதற்கான முனைப்பு என்ன என்ற எந்த அடிப்படையும் கிடையாது. அவர்களை ஐரோப்பிய சட்டங்களே ஒன்றும் செய்யாதபோது அவர்கள் எதற்காக திராவிடம் தெலுங்கர் என்று புனைவுகள் பேசி தப்பிக்கவேணும் ? பணத்தை கையாடல் செய்தவர்களை எந்த சட்டம் தண்டிக்க முனைகின்றது ? திராவிடம் தெலுங்கர் என்று பேசினால் அதிலிருந்து தப்ப முடியுமா ? நாவலன் என்னவென்றால் புலம்பெயர்ந்தவர்கள் பணம் தமிழ்நாட்டில் ஊதிப்பெருத்து பொங்கி வழிகின்றது என்கின்றார். எனக்கு இந்த விசயங்கள் புரியவில்லை. யார் இவர்கள் எங்கே இந்தப் பணத்தை வைத்திருக்கின்றார்கள்? அவர்களை வெளிப்படுத்துங்கள். அவர்களிடம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சொட்டு அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். 

 8. 4 hours ago, கிருபன் said:

  தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் ஒத்த உணர்வு அல்லது கூட்டுப்பிரக்ஞை. வெளியாரின் அச்சுறுத்தல்களின் போது தமது அடையாளத்தைப் பேண ஒரு மக்கள் திரளை உணர்வு ரீதியாக ஒன்றாக்குவது தேசியம்.

  தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்கவேண்டும். தேசிய உணர்வை இன ரீதியாக பெருமிதத்துடன் போற்றும் அதே வேளை பிற இனங்களும் அப்படியான தேசிய உணர்வுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இத்தகைய ஜனநாயகப் பண்புள்ள தேசியம் விரிந்து வளரும்.

  தேசிய உணர்வு பிற தேசியங்களின் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும். சீமானும் நாம் தமிழர் கட்சியும் தீவிர வலதுசாரிச் சிந்தனை மூலமும், பிற இனங்கள் மீதான வெறுப்பினை  விதைத்து அதனை தமிழ்த் தேசியம் என்று சொல்பவர்கள். இந்த நாஸிய, பாஸிச சிந்தனை உண்மையான ஜனநாயகத்தனமையுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவறான பாதையில் நடத்தி இறுதியில் வலதுசாரி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே வழிவகுக்கும்.

  உங்கள் கருத்தியலுக்கு ஏற்ற சூழல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லையே !! மக்கள் திரளின் ஒத்த உணர்வுக்கும்  கூட்டுப்பிரக்ஞைக்கும் மில்லியன் கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களா கொண்டிருக்கும் சாதிய மத பிளவுகளை கொண்ட இடத்தில் எங்கனம் சாத்தியம் ? இந்த ஒத்த உணர்வு பிக்ஞையை சிதைத்து சின்னபின்னமாக்கி உருவாகி இன்றுவரை அதை தக்கவைத்திருப்பதுதான் இந்திய மத்திய அதிகாரம். 

  இந்த மத்திய அதிகாரம் பார்பனர்மற்றும் பானியாக்கள் கையில் உள்ளது. திராவிட எழுச்சி எந்த விதத்திலும் இங்கே இனங்களின் ஒத்த உணர்வையும் கூட்டுபிரக்ஞையையும் மீட்டு எடுக்கவில்லை. அது ஏற்கனவே இருந்த பிரச்சனையோடு என்னுமொன்றானது. திராவிட கருத்தியலின் பின்னணியில் உருவான திராவிட அரசியல் கட்சிகள் பார்பனர்களை எதிர்ப்பது என்று பானியக்களுடன் பொருளாதார உறவை வைத்துக்கொண்டார்கள். தேர்தலின் ஓட்டுக்களுக்காக சாதிவாரியாக பெரும்பான்மையான இடங்களில் அச்சாதிகளில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இதன் விழைவு பானியாக்களுடன் சேர்ந்து வளங்களை சுரண்டினார்கள் ஒரு காலத்தில் 50 பைசா ரெயில் கட்டணத்திற்கு வழியற்று நின்ற கருணாநிதி மற்றும் சொநத பந்தங்கள் ஊழலில் கொழுத்தார்கள். இந்தியாவின் முதல்நிலை ஊழல்வாதியானர். சாதிவாரி தொகுதி வேட்பாளர்களை நிறுத்தியது ஊடாக சாதியத்தை தக்கவைத்தார்கள். இங்கே ஆரியமும் திராவிடமும் ஒரே வேலையைத்தான் செய்கின்றது. 

  தேசீயம் பிற இனங்கள் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும் என்கின்றீர்கள். பிற இனங்கள் தமது அடயாளங்களை மறைத்து என்னுமொரு தேசீய இனத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து சுரண்டும்போது இவ்வாறான பிரச்சனைகள் எழுவது தவிர்க்க முடியாத நிகழ்வு. இந்த வெறுப்பின் பின்னணி என்ன அது எவ்வாறு உருவாகின்றது என்பதை அந்தந்த கள யதார்த்தங்கள் ஊடாகத்தான் அணுகமுடியும். சிறு வணிக பெருவணிக ஆக்கிரமிப்பகள், இட ஒதுக்கீடு அரச பணிகளில் சுரண்டல், நீர்வள பங்கீடு இப்படி பல பிரச்சனைகள் பின்னணியில் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சீரழிவை ஏற்படுத்துவதன் ஊடகத்தான் இந்த வெறுப்பை புரிந்துகொள்ள முடியும். இந்த வெறுப்பு தனிப்பட்ட ஒருவனிடம் இருந்து மக்களிடம் செல்வதாக தலைகீழாக புரிந்துகொள்ள முடியாது. மக்கள் சந்திக்கும் பிச்சனைகள் ஊடாக தலமைக் கருத்தை நோக்கி பயணிக்கின்றது என்றே புரிந்துகொள்ளவேண்டிய தேவையும் இருக்கின்றது. 

  Quote

  இந்த நாஸிய, பாஸிச சிந்தனை உண்மையான ஜனநாயகத்தனமையுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவறான பாதையில் நடத்தி இறுதியில் வலதுசாரி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே வழிவகுக்கும்.

  நாசியம் பாசியம் 
   

  Quote
  Quote

  பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

   

  நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும்

   

  நாசிசம் பாசிசம் என்பதற்கு இரண்டு தமிழ் விளக்கங்ளை விக்கி பீடியாவில் இருந்து. 

  நாசிசம் இந்தியாவில் ஒரு மையக் குவியலாக இல்லை. அது பரவலாக்கப்பட்டுள்ளது. நாசிசத்துக்கு அடயாளமாக பிராமணரகளை சுட்டிக்காட்டும் போது அதற்கு அடுத்த நிலைச் சாதிகள் தங்களுக்கும் கீழானவர்களை நசுக்குவதும் நாசிசம் தான். (பிற சாதிகள் ஆணவக் கொலை செய்வதும் தலித்துக்களை நிர்வாணப்படுத்துவதும் மலத்தை அவர்கள் மீது ஊற்றுவதும் தின்னவைப்பதும் கூட்டு பாலியல் வல்லுறவு கொள்வதும் கொல்வதும் நாசிசம் அன்றி வேறென்ன )திராவிடம் ஆரியத்தை எதிர்ப்பதாக கூறி அதற்கு அடுத்த நிலை சாதீய ஒடுக்குமுறையை சாதிவாரி வேட்பாளர்களை நிறுத்தியதன் ஊடாகவும் மத்திய கட்சிகளுடன் கூட்டணிகள் போட்டும் நாசிசத்தை தொடர்ந்து தக்கவைத்ததுதான் யதார்த்த உண்மை. 

   

  Caste graphic

  India′s caste system: Weakened, but still influential | Asia| An in-depth look at news from across the continent | DW | 17.07.2017

  பாசிசம், 

  திராவிடக் கட்சியின் அரக்கோணம் எம்பிவீட்டில் 40 கிலோ தங்கம் 18 கோடி வருமானவரித் துறை கைப்பற்றுகின்றது, இதே எம்பி ஜெகத் ரட்சகன் 26 ஆயிரம் கோடி இலங்கையில் முதலீடு செய்கின்றார் , இவரே இந்த நிலை என்றால் திமுக குடும்பம் உட்பட ஏனையவர்களின சுரண்டலை கற்பனை செய்து பாருங்கள். 

  The life saffron. on Twitter: "I implore UN and it's affiliated organizations to recognise the father of corruption and declare June 3rd as the international corruption day. #HBDFatherOfCorruption #HBDFatherOfScientificCorruption… https://t.co/jxvYf8iR0u"

  திராவிடக் கருத்தியலால் அரசியல் அதிகாரத்துக்கு வந்து ஆரியத்தை விஞ்சும் சுரண்டலை செய்யும் திராவிடக் கட்சிகள் பாசிசத்துக்கு அப்பாற்பட்டதில்லை. அதுவே பாசிசத்தின் அடயாளம். 

  ஆரியம் திராவிடம் நாசிசம் பாசிசம் இரண்டையும் எதிர்த்து நிற்கும் நாம் தமிழர் உங்களுக்கு நாசிச பாசிச ஆட்சி காலூன்ற வழிசெய்யும் என்கின்றீர்கள். 

  • Like 1
 9. 2 hours ago, Nathamuni said:

  வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையா.... சும்மா அலப்பறைகளை எல்லாம் வாசிக்க சொல்லக் கூடாது.

  எங்களுக்கு தெரியாத எங்களது வரலாறை ஒரு வெள்ளையே சொல்ல வேண்டும்?

  முதலில் எங்களது கறியின் நிலைமையினை பாருங்கள்.... 2000 வருசத்துக்கு முந்தின அகநாநூறில், அரபிக்கடலில் இருந்து பேராற்றினுள் நுரை பொங்க வரும் யவனர்களின் கலங்கள், மதுவுடன் வந்து 'கறியுடன்' போம் என்று சொல்லி இருக்கிறார்.

  வெள்ளையளோ, தாங்கள் தான் இந்தியாவினுள் கறியினை அறிமுகப்படுத்தினார்களாம் என்று கதை விட்டு ரெசிபி புத்தகம் போடுகிறார்கள். மிளகுத்தண்ணி.... வெள்ளையர் கண்டுபிடிப்பாம்.... பின்ன என்னத்தை கதைக்கிறது.

  பெருஞ்சோறு - ஊன் சோறு - இப்ப பிரியாணி. https://www.youtube.com/watch?v=7pxEXHxSQzU

   

 10. 6 hours ago, கிருபன் said:

  சபா. நாவலன் உரையாடலில் நாம் தமிழர் கட்சி பொய்களால் கட்டி எழுப்பும் குறுந்தேசியவாதத்தை ஏன் இனவாத பாஸிஸம் என்றும் அதனை ஏன் எதிர்க்கவேண்டும் என்றும் சொல்கின்றார்.  வாக்குப்பொறுக்கும் அரசியலுக்காக திராவிடக் கட்சிகளை நாம் தமிழர் எதிர்ப்பது பாஸிச பிஜேபியை தமிழ்நாட்டில் உள்ளே விடத்தான் என்பது பலரது கருத்து. இதை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாகக் கருதுவது உண்மையான தமிழ்த்தேசியத்தை அழிக்கும் செயலே.

   

  உண்மையான தமிழ்த்தேசீயம் என்று எதை முனவைக்கின்றீர்கள்? யார் உண்மையான தமிழ்த்தேசீயத்தை வழிநடத்துகின்றார்? அல்லது எந்தக் கட்சி எந்த குழு அமைப்பு வழிநடத்துகின்றது ? நாம்தமிழரை பிழை என்று கத்துகின்றவர்கள் சரியென்று ஒரு எழுச்சியை சுட்டிக்காட்டுங்களேன். 

  திராவிடக் கட்சிகளை தான் ஆதரிக்கவில்லை ஆனால் நாம் தமிழர் எதிர்ப்பது பாசிச பிஜேபி உள்ளே நுழைவதற்கு என்கின்றார். திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் பிஜேபியோடு மாறிமாறி கூடடணி போட்டுததான ஆடசியை செய்கின்றது. வரும் தேர்தலில் திமுக பிஜேபி யோடு கூட்டணி அமைத்தால் கூட அது சாதாரண விசயம் காரணம் ஏற்கனவே அவர்கள் கூட்டணி போட்டவர்கள் தான். தமிழ்நாட்டில் பிஜேபி உள்ளே நுழைய வழியை திறந்ததே திராவிடக் கட்சிகள் தான். திராவிடக் கட்சிகளுக்கும் பிஜேபிக்குமான கூட்டணி உறவில் இந்த பாசிசம் எங்கே போனது என்ற கேள்வியை ஏன் எழுப்பவில்லை ?

  திராவிடத்தை ஆதரிக்கவில்லை ஆனால் திராவிடத்தை நாம்தமிழர் எதிர்துநின்றால் அது பாசிசம் ? இந்த கருத்தியலின் விழைவு என்ன ? மீளவும் திராவிட ஊழல் ஆட்சியை கொண்டுவருவது கருணாநிதியின் வாரிசோ அல்லது வாரிசின் வாரிசோ அரசியல் அதிகாரத்தில் மன்னராட்சிபோல் அமருவது. அவ் ஆட்சி பிஜேபியோடோ அல்லது காங்கிரசோடோ கூட்டணி வைக்கலாம் . இதுதானே இந்த நாம் தமிழர் எதிர்ப்பரசியலின் விழைவு !! 

  இந்த விழைவை விட வேறு எதாவதை நாம் தமிழர் என்ற அரசியல் எழுச்சியை சிதைப்பதால் ஏற்படுத்தப் போகின்றீர்களா ? நாம் தமிழர் என்ற தேசீய எழுச்சிக்கு பதிலாக வேறு ஒரு திசையை அல்லது அமைப்பை , கட்சியை முன்வைக்கின்றீர்களா ? அவற்றை சொல்லுங்கள் .

  • Like 1
 11. 6 hours ago, கிருபன் said:

  நாம் தமிழர்  செய்வது தமிழ்த் தேசியத்தின் பேரால் செய்யப்படும் வெறுப்பரசியல். அதன் மீதான விமர்சனம் சரியான பாதையில் தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவைக்கும். விமர்சனங்களை, கருத்துக்களை உள்வாங்காமல் உள்ள கட்சி, அமைப்புக்கள் உட்சுருங்கி சிதைந்து போகும் என்பதைத்தான் அண்மைய நடப்புக்கள் காட்டுகின்றன.

  பதிலுக்கு நன்றி கிருபன்

  ஒரு எழுச்சியை சிதைப்பது விமர்சனமாகாது. இங்கே நடப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிர்மூலமாக்கும் செயல். எப்படி புலிகளின் போராட்டகாலத்தில் பாசிசம் பயங்கரவாதம் ஒரு தரப்பு தொண்டை கிழியக் கத்தியதோ, லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சிங்களவர்களால் வருடக்கணக்கில் கொல்லப்படும்போது ராஜின திரணகமவுக்காக மட்டும் வர்க்க கண்ணீர்வடித்ததோ அதையேதான் இந்த விடயத்திலும் செய்யகின்றர்கள். இவ்வாறு தமது ஒட்டுமொத்த அறிவையும் பயன்படுத்தி கத்தியவர்கள் கதி போராட்டம் முடிவுக்கு வந்தபின் என்ன ஆச்சு ? பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

  உதாரணத்திற்கு இங்கே கருத்தாடலில்  நாம் தமிழர் அரசியல் என்ற திரிகளை மூடிவிட்டு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் ? புலிகளின் போராட்டம் முடிந்தபின் இக்களத்தில் ஒரு வெறுமை தோன்றியது. ஒரு சூனிய நிலை தோன்றியது. அதேதான் தமிழ்த்தேசீயம் என்ற உணர்வுசார் கருத்தாடலில் ஏற்படும். சூனியத்தை நோக்கி நகர்த்துவது விமர்சனமாகாது. 

  ஒரு இடத்தில் மக்கள் எழுச்சி, போராட்டம், களப்பணிகள் நடைபெறும்போதே அதன் பிரதிபலிப்புகள் இங்கு நிகழும். அதை கருத்துக்களால் நிர்மூலமாககுவது ஏற்புடையதல்ல. அதற்கு பெயர் விமர்சனமும் கிடையாது. 

   

   

  • Like 4
  • Thanks 1
 12. 19 hours ago, கிருபன் said:

  விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

   

  நாம் தமிழர் மீதான வெறுப்பரசியல்  தவிர வேறென்ன இருக்கின்றது இதில். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை மோசடி செய்த ஒருங்கிணைப்பு குழுமீதான வெறுப்பை நாம் தமிழர் பயன்படுத்திக்கொண்டதா சொல்வது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற கருத்து. தனது வெறுப்பரசியலுக்காக சொல்லும் பொய்.

  19 hours ago, கிருபன் said:

  தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

  நாம் தமிழர் பேச்சுக்களில் ஈழப்போராட்டம் கச்சதீவு பிரச்சனை மீனவர் பிரச்சனை மீத்தேன் கைரோ கார்பன் பிரச்சனை, நில நீர்வளச் சுரண்டல் , அணு உலைப் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை  என்று ஏராளமானவை முன் நிற்கின்றது.  பேரிடர் மீட்புக் குழு , ஏரிகள் துர்வருதல் மரம் நடுதல் என எத்தனையோ களபணிகள் அனைத்தையும்  சமூக விரோதக் கருத்தாக சித்தரிக்கும் இந்த சபா நாவலன் எழுத்துக்களில் எந்த அறமும் கிடையாது. 

  20 hours ago, கிருபன் said:

  சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

  பணத்தெகை ஊதிப்பெருகிறதா ?  இங்க புலம்பெயர்ந்த மக்கள் பணம் அங்க ஊதி பெருகி பொங்கி வழியிற நிலமையில அனுப்புறதுக்கு பதிலாக நாட்டில போரால் பாதிக்கப்பட்டு ஊனப்பட்டு வீடுவாசல் இல்லாம இருக்கிற மக்களுக்கும் நுண்கடன்களால் வறுமையால் தற்கொலை செய்யும் மக்களுக்கும்  கொடுக்காமல் தமிழ்நாட்டில ஊதிப்பெருக வைக்கினம்??? அள்ளி அவிழ்த்து விடும்  போது கொஞ்சமாவது யோசிக்க மாட்டார இந்த சபா நாவலன் ?

  20 hours ago, கிருபன் said:

  கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

  தென்னிந்தியாவில் எந்த தேசீய இனங்கள் திராவிடம் என்ற அடிப்படையில் ஒன்றிணைகின்றது ? ஆந்திரா கர்நாடகா கேரளாவில் திராவிடம் எந்த லட்சணத்தில் இருக்கு? ஒரே இனம் என்று இணையக் கூட தேவையில்லை தண்ணிய என்றாலும் துறந்து விடுறானா ? என்ன இழவு புரிதல் இது?. இதுக்குள்ள வெள்ளயின மேலாதிக்கத்துக்கு எதிரா கருப்பர் ஒன்று கூடுகினம் என்ற உவமை வேறு !! 

  ----

  கட்டுரையோடு இணைக்கப்பட்ட காணொளியில் செர்லைட் போராட்டத்திற்கு நாம் தமிழர் வரவில்லை என்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் செல்ல சீமானுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை கூட அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு நெல்லையில் கண்டன ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருந்தது. 

  சுபவீ உடன் கூட இருந்த அன்பு தென்னரசு 3 நிமிடத்தில் 

  --------

   

   

   

 13. 12 hours ago, முதல்வன் said:

  என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

  ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

  மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

  மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

  மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

  இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

  சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

  பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

  ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

  ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

   

  ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

  ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

  தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

  பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

  என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

   

   

  • Like 1
 14. Quote

  அதனால்தான்  1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய  காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற  செல்வநாயகமோ 'நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை' என்று ஒதுங்கிக்கொண்டார்.

   

   

  அமிர்தலிங்கம் வகையறாக்கள் கால அரசிலை புரிந்துகொள்ள கிருபன் இணைத்த இந்த கட்டுரை உதவியாக இருக்கும்.

  எனக்கு தெரிந்து ஈழத்தில் ஒரு அரசியல் படுகொலைக்கு அதிகளவு மக்கள் மகிழ்ச்சியடைந்தது அமிர்தலிங்கத்தின் மரணத்தில் தான். இவர்களின் சாதிய வர்க்க நலன் சார்ந்த அரசியல் வெகுசன மத்தியில் பேசு பொருளாக இல்லாதபேதும் அதை  பெரும்பாலான மக்கள் உணர்ந்திருந்தின் வெளிப்பாடே அந்த மகிழ்ச்சி. 

  • Like 1
  • Sad 1
 15. 4 hours ago, ரதி said:
  14 hours ago, goshan_che said:

  பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

  2009 வரை புலிகள்

  2009 டக்லஸ்

  பின்னர் சீமான்

  புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

  இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

  இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

   

  அவர் 2009 க்கு முதலில் இருந்தே டக்லசின் ஆதரவாளர் ...சுகன் என்ற பெயரில் அவர் அன்று புலிகளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இதே யாழில் கொட்டி கிடக்குது ...மனிதர்கள் மாறுவது வளமை தானே 

  உங்கள் கருத்துக்கு நன்றிகள். 

  டக்லஸ் குறித்து மட்டுமில்லை, பத்மநாபா படுகொலை, கருணா பிளவுகள் குறித்தும் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றம் குறித்தும் நிறைய கருத்துக்கள் மிக முரண்பாடோடு எழுதியுள்ளேன். இன விடுதலைப்போராட்டம் தேற்ற பின்னர் தேசீய எழுச்சி வீழ்ச்சி பெற்றதற்கான அக முரண்பாடுகளை திரும்பி பார்த்தலும் தேசீயத்தின் மீள் கட்டுமானத்திற்கு அவசியம் என்பது எனது நிலைப்பாடு. 

  எந்த துருப்பையாவது பற்றி தமிழ்த்தேசீயத்தை கரைசேர்க்க முயல்கின்றீர்களா என்ற கேள்விக்கு 2010 ல் நடைபெற்ற கருத்தாடல் திரி ஒன்று கீழே உள்ளது. 

  -போரால் வீழ்ந்த மக்ளை ஆற்றுதல், தடுப்பு முகாம்களில் இருந்தவர்கள் விடுதலை, அவர்களி; பாதுகாப்பு ஒரு காலத்தின் பிரதான தேவையாக இருக்கும் போது, நாடுகடந்த அரசு போன்ற முன்னெடுப்புகளுக்கு பதிலாக மனிதாபிமான உதவிக்கான அமைப்பே அவசியம் என்ற கருத்தை முன்வைத்தது. 

  -போர்க்குற்றங்கள் என்னும் துருப்பை இழக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தது.

  -பாதிக்கப்பட்ட மக்களை டக்லஸ் சைக்கிளில் சென்று சந்தித்து உதவிய போது அந்த இடத்தில் யார் இருந்திருக்க வேணும் இருக்க வேணும் என்பதை அடிப்படையாக வைத்தே டக்லஸ் சார்ந்த கருத்துக்கள்

  -வடக்கில் இருந்து கருணாமீது எறியப்படும் கற்கள் கருணா ஒளிந்திருக்கும் கிழக்கு பிரதேசவாத கூடாரத்தை சேதப்படுத்தாமல் ஊடறுத்து கருணாவை மட்டும் தாக்குமா என்பதை பொறுத்துதான் கருணா சார்ந்த கருத்துக்கள். 

  (இல்லாத பட்சத்தில் இதன் விழைவுகள் வடக்கு தேசீயம் கிழக்கு தேசீயம் இஸ்லாமிய தேசீயம்)

  -போரில் முடிவில் சிங்களத்தின் கோரப்பிடியில் மக்கள் இருந்தபோது தேசீயம் பிரிவினைவாதம் பேசுவதே மனிதாபிமானத்துக்கு எதிரானது என்ற சூழ்நிலை சார்ந்து தேசீயத்துக்கு எதிரான நிலைப்பாடு

  -என்னைப்பொறுத்தவரை தமிழ்த்தேசீயம் என்பது சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பல ஓட்டைகள் உள்ள படகு. அதில் ஏறி பயணித்து அது முள்ளிவாய்க்காலில் கவிழ்ந்தபோதுதான் இந்த ஓட்டைகள் எவ்வளவு பெரியது என்பது தெரிந்தது. இந்த படகில் பயணிக்கும் போது அதை கவிழ்த்து விடும் நிலைப்பாடு இருக்கவில்லை. கவிழ்ந்த பின் ஓட்டைகள் குறித்து கதைக்காமல் விடவும் இல்லை. 2009 க்கு முன்னரும் பின்னருமான நிலைப்பாடு இதுதான். எந்த துரும்பையாவது பிடித்து கரைசேர்க்க முயன்றீர்களா என்றால் படகை சரிபண்ணலாம் என்பதுதான் பதில். இதை சரிசெய்வதும் ஒருவகையான கூட்டு உணர்வால் எழுச்சியால் சிந்தனை முறையால் தான் சாத்தியம். அதனால் எந்த ஒரு எழுச்சிப்போக்கையும் ஆதரிக்கும் நிலைப்பாடு உண்டு. 

  -முன்னர் திராவிடக் கருத்தியலுக்கு ஆதரவான நிலைப்பாடு , கருத்தியலால் உருவாகும் அரசியல் அதிகாரம் எமக்கு எதிரானது என்ற அடிப்படையில் அதில் மாற்றம் உண்டு. 

  ரதி

  புலிகளின் போராட்ட காலத்தில் அதற்கு எதிரான எந்த கருத்தையும் பதிந்ததில்லை. 

  ஜனவரி 2009 ல் தான் முதலில்
  'துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை"  என்று எழுத ஆரம்பித்தேன். 

  மனிதர்கள் மாறுவது வழமைதானே என்பதற்கு பதில் ஆம் என்பதுதான். எனது கருத்துக்கள்  காலம் சூழுலுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் இருக்கும். 

  2009 க்கு முன்னரே டக்லஸ் ஆதரவாளர் என்பதற்கு, 1991 ராஜீவ் காந்தி துன்பியல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியாவில் இருந்து கடல் வளியாக மருந்துகள் வரத்தில்லை. தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப் பட்ட போராளிகள் அங்காங்கே குப்பி கடித்து மரணித்தார்கள். அங்கு மருத்துவத்துக்கும் செல்ல முடியாத நிலை. கடுமையான பொருளாதாரத் தடை. இவ்வாறான ஒரு சூழலில் ஈழமக்கள் ஜனனாயக் கட்சியின் ஆதரவோடு அவ்வப்போது தாண்டிக்குளம் தடைமுகாமை தாண்டி வந்த மருத்துவப் பொருள்கள் தேசீய விடுதலைப்போராட்டத்தில் காயமடைந்த பல போராளிகளின் உயிரை காப்பாற்றியது. சில போராளிகளுக்கு செயற்கை கால் பொருத்தக் கூடியவாறு இருந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் டக்லஸை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பக்கத்தில் உள்ள பன்றிக்கெய்த குளத்தில் கமம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இதைக் கேள்விப்பட்டேன்.

  Quote

  துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

  சிறு புல்லும் பற்குத்த உதவும் என்பது அனுபவம். 

  (திரிக்கு சம்மந்தம் இல்லாத பதிவை இடவேண்டியதாயிற்று)

   

   

   

   

  _

  • Like 1
  • Thanks 1
 16. 9 hours ago, goshan_che said:

  நான் இங்கு பலமுறை எழுதியதுதான்.

  1. தமிழ் தேசியம் என்ற தங்ககாப்பை காட்டி வரும் விசப்பாம்பு சீமான்.

  2. அவரின் கீழ் வேலை செய்பவர்கள், தம்பிகள் உண்மையான போராளிகள்.

  3. போன பேட்டியில் கூட, “எப்போதும் என் கொள்கை தமிழ் தேசியம்தான்”, “கட்சியை விட்டு போகும் நிலை வராது, வந்தால்- வேறு கட்சி எல்லாம் இல்லை, ஆசிரியர் தொழில் இருக்கு” என்று கூறியவர் கல்யாணசுந்தரம்.

  4. சீமான் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த போது, அந்த பெண்ணை நாகரீகம் இன்றி தாக்காமல், இது தனிபட்ட சட்ட பிரச்சனை, இதில் கருத்து கூற ஏதும் இல்லை என நாகரீகமாக பதில் அளித்ததை, சீமானை காபாந்து பேசவில்லை என நினைத்து, பழிவாங்க படுகிறார் கல்யாண சுந்தரம்.

  5. கல்யாணசுந்தரம் போன்ற தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பிடிபுள்ளவர்களுக்கு, சீமானின் முகம் போக, போக தெரியும். யாழ் களத்தில், சீமான் காவடிதுக்கும் உறவுகளுக்கும்தான். என்ன கொஞ்ச காலம் எடுக்கும்.

  பின்ன வரட்டே.

  விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

  சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

  5 hours ago, goshan_che said:

  ஆனால் சீமானின் பிளான் நல்லாவே வேலை செய்யுது

  1. தமிழ் தேசியத்தை ஏற்றுவது

  2. பெரியாரை தூற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குவது

  3. பெரியார் நீக்க வெற்றிடத்தை தமிழ் தேசியம் அடைக்கும் என்ற மாயையை உருவாக்குவது

  4. 2/5 தமிழரை தெலுங்கர் என பிஜேபி பக்கம் தள்ளுவது

  5. வளர்ந்து வரும் நிலையில் தமிழ் தேசியத்தை இரெண்டாக உடைத்து எல்லாரினதும் நம்பிகையை சிதைப்பது, தமிழ் தேசியத்தை தீண்ட தகாத கொள்கை ஆக்குவது.

  6. தாமரையை மலர செய்வது.

  இப்போ stage 4 -5 இல் நிற்கிறீர்கள்.

   

  இந்த திரியில் இனி இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. இனி இங்கே சீமான் ரசிகர் மன்றம் சார்பாக அடுத்தடுத்து குத்து பாட்டு அரங்கேறும்.

  ஆனால் எனது 6 point plan ஐ அடிகடி நினைவு படுத்தி பாருங்கள். சிலருக்கு இப்பவாவது விளங்கும். சிலருக்கு 6ம் படியில் நிற்கும் போதும் விளங்காது.

  சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

  ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

  தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

  இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

  உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

   

   

   

   

   

  • Like 6
 17. பதிவுக்கு நன்றிகள்

  சமபிரதாயங்களோ இல்லை சில முறைளையோ சாவுநிகழ்வில் கடைப்பிடிக்கும் போது இறந்தவரை சரியான முறையில் வழிஅனுப்பிவிட்டோம் என்ற ஆறுதல் சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு கிடைக்கின்றது. இந்த ஆறுதலே பிரதானமானது.

  ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் முறைகள் என அவரவருக்கு நாட்டாமை செய்து இந்த ஆறுதுல் கிடைக்காமல் போகும்  நிலையும் அதிக சாவு வீடுகளில் நடக்கின்றது. இந்த முறைகளை ஒரு வரயறையோடு காலத்துக்கேற்ப நெறிப்படுத்துவதும் அவசியமாகின்றது.

  (புகையிலை மற்றும் சுருட்டு ஒருகாலத்தில் சாவு வீட்டில் அவசியமானது. அது ஒரு தொற்று நீக்கியாக இருந்த காலத்தில்.- இந்தக் காலத்தில் அது நோயை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது)

  சிலர் சாவு நிகழ்வை  சமூக அந்தஸ்த்து போட்டியோடு இணைத்து செய்கின்றார்கள். தாம் இதை செய்தோம் இவ்வளவு செலவழித்தோம் என்று பெருமை தேடுவதுண்டு, இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

  இறந்த உறவுகளின் திகதி திதிகளில் விளக்கு வைத்து உணவு படைத்து வணங்குவதை (யாரையும் அழைக்கவேணுமென்றில்லை) ஒரு பழக்கமாக வைத்திருப்பது ஆரோக்கியமானது. நல்ல உணர்வு கிடைக்கும். சித்திரை பௌணமி ஆடி அமவாசையை கடைப்பிடிப்பதும் இவ்வாறே நல்ல உணர்வு கிடைக்கும். 

  இறந்தவர் சாம்பலை விழைநிலத்திலோ ஆற்றிலோ குளத்திலோ இல்லை கடலிலோ தூவலாம். கங்கையில்தான் என்பது அவரவர் தெரிவுகள். 

  On 3/9/2020 at 15:31, Sasi_varnam said:

  நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
  நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
  எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
  என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
  என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

  முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

  முடியும் !!! 🙏

   

  வன்னியில் இரண்டு வருடங்களுக்க முன்பு இறந்த எனது உறவினரின் ஒருவரின் அந்தியோட்டி நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும்  மரக்கன்றுகள் கூடுதலாக தென்னங்கன்றுகள் கொடுத்து அனுப்பினார்கள்.  அந் நிகழ்வு மிக நிறைவைத் தந்தது. பலர் இதை இப்போது செய்கின்றார்கள். 

  • Like 2
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.