Jump to content

சண்டமாருதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2554
  • Joined

  • Last visited

  • Days Won

    33

Posts posted by சண்டமாருதன்

  1. சிற்பத்தொழிலாளர்களை வருத்தி ஒரு கோயிலை உருவாக்கி அதில் என்ன அருளை பெறப்போகின்றார்கள் ? இவர்கள் தங்கிய நிலக்கீழ் அறையைப் பார்த்தால் தவறாகவே நடத்தப்பட்டுள்ளார்கள். ஊரில் பயபக்தியோடு தூர்க்கையை வழிபடுவார்கள் இங்கு துர்க்கையை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள்.  கனடா சட்டத்திற்கு ஏற்ப நிர்வாகத்திற்கு தண்டனை கிடைக்கவேண்டும். 

    • Thanks 1
  2. இவ்வளவு சாம்பார் கலியாணத்திற்கு தேவையா? என்ன செய்றாங்கள் என்று புரியவில்லை

    வலம்புரிச் சங்கு உயிருள்ளதா? எப்படி மேலே வருகின்றது?

    கீழே உள்ள காணொளியில் செம்புக்கு நடுவில் உருத்ராட்சம் சுத்துவதும் காரணம் புரிவில்லை.

     

    • Like 1
  3. இணைப்பிற்கு நன்றி

    சொற்பொழிவில் சொல்வதுபோல் நம்பிக்கை என்பது ஒரு சக்தி. சாவின் விழிம்பில் இச் சக்தியின் வீரியம் தெரியவரும். வாழ்க்கையில் சாவுக்கு அருகாமையில் தானோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ சென்று வரும் அனுபவம் என்பது நூறு புத்தகங்கள் தருவதை விட அதிகமான பக்குவத்தை தரும்.  

  4. 3 hours ago, யாயினி said:
    21.11.2017
     
     
    Image may contain: plant, flower, nature and outdoor

    மண்ணில் முதல் முதலில் வித்தாகியவர்கள்...

    Image may contain: 1 person, hat and closeup

    http://tamil.thehindu.com/business/பரவலாகி-வரும்-செங்காந்தள்-மலர்-சாகுபடி/article6396872.ece

    உங்கள் பதிவில் இருந்து தேடிப்பார்த்தேன். நல்ல வருமானம் தரக் கூடிய மருத்துவ பயிர். நாட்டில் உள்ளவர்கள் பயிரிட்டு மருத்துவத்துக்கும் பயன்படுத்தலாம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

     

    • Thanks 1
  5. 4 hours ago, யாயினி said:

    தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கினார்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தார்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்கள் உலகம் அவற்றை பார்த்து "உச்" மட்டும் கொட்டிய அந்நாள்.. 

    22 வருடங்களுக்கு முன்னொருநாள். 
    அன்று #கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். 
    இன்று போலவே அன்றும் #மழை பெய்து கொண்டு இருந்தது. 

    விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. #பலாலி #இராணுவ முகாமிலிருந்து #யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற #இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க #புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரப்பு செய்திகள்.

    யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ #நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

    காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். #குண்டு வீச்சு #விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். #ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

    ஆனால் அன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

    இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

    அன்று. பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

    யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய #இனவழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான #தென்மராட்சி #வடமராட்சி #வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

    யாழ்ப்பாண #குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். #யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

    ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

    எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

    அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

    தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் உலகம் என்ற ஒன்று பார்த்து உச் மட்டும் கொட்டியது.

    அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

    24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

    அந்த நாள் 1995 ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி.
    இன்றுடன் 22 வருடங்கள் கடந்து விட்டன :'1f642.png(:'( 1f622.png:'(

    நன்றி.
    - சாரல் இணையம் -

    Image may contain: one or more people and crowd
     
    LikeShow more reactions
    CommentShare

     

    மிகத் துயரமான நாள். இப்போது பெரும்பாலானவர்களுக்கு நினைவிலும் இல்லை.

     

    • Thanks 1
  6. 20 hours ago, ராசவன்னியன் said:

    1. ஆளுரிமை (Personal Liberty)

    2. மக்கள் இறையாண்மை (Popular sovereignty)

    3. நாட்டுணர்ச்சி அல்லது தேசிய இன உணர்ச்சி (Nationalism)

    இவை மூன்றுமே சாதியம் மதவாதம் போன்றவற்றால் சிதைக்கப்பட்டு இறையாண்மை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பலவீனத்திலேயே இந்திய என்ற தேசம் நிலைத்திருக்கின்றது. 

    இறையாண்மை ஒருவன் ஒரு குடும்பம் ஒரு சமூகம் என்ற உறவாடலோடு தொடர்புபட்டு ஐக்கியப்பட்ட உழைப்பு பாதுகாப்பு போன்றவற்றுடன் சம்மந்தப்படுகின்றது. உணர்வோடும் தொடர்புபட்டது. மொழி சமூக உறவு வலுக்கும் நிலை. அதே நேரம் இரண்டு இனங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை வரையறுப்பதிலும் இறையாண்மை தொடர்புபடுகின்றது. இவை எப்படி பலவீனப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர்ந்து கொள்ளலாம். இந்த மூன்று கூறுகளும் நவீன தொழில்நுட்ப உலகில் பலமடைகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் தொடர்பாடல் கருவிகள் போன்றன புதியதொரு பரிணாமத்தில் இணைக்கின்றது. இவை ஒரு குறிப்பிட்டளவு தான் நிகழ்கின்றது. இவற்றை செம்மைப்படுத்த வேண்டியது தற்போதைய கடமையாகின்றது. நாம் பல சதிகளால் பிரிந்திருக்க ஆரம்பித்தோம் . தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியால் வேறு ஒருதளத்தில்இணைகின்றோம். இவற்றிலும் தனித் தனி தீவுகளக இணைந்தால் பலவீனம் தொடரவே வாய்புள்ளது. 

    • Like 1
  7. 13 minutes ago, ராசவன்னியன் said:

    இதற்கு ஒரே வழி குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், அதும் உடனடியாக நிறைவேற்றப்படவும் வேண்டும்..

    'பயம்..பயம்..' இது ஒன்றே அனைவரையும் தவறுகளிலிருந்து விலத்தி வைக்கும்..

    மத்திய கிழக்கு நாடுகளிலும் குற்றங்கள் உண்டு..ஆனால் அதற்கான தண்டனைகள் கடுமையாக, உடனடியாக நிறைவேற்றப்படுவதால் பயத்தின் காரணமாக அதிக குற்றங்கள் நிகழ்வதில்லை. தாங்கள் நியாயம் கற்பிக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்தாலும், அவை நீர்த்து சுருண்டுவிடும் ஐயா.

    சின்ன உதாரணமாக, நாடு திரும்பும் ஆசிய நாட்டவர்களின் நடத்தையை சொல்லலாம்..

    விமான நிலைய 'செக் இன் கவுண்டர்'கள் முதல் விமானத்தில் அமரும் வரை வாலை சுருட்டிக்கொண்டிருப்பார்கள், அதே பயணிகள், தம் சொந்த நாட்டில் தரையை தொட்டவுடன் தன் புத்திய காட்டத் தொடங்கிவிடுவார்கள்.. ஏன்..?

    கட்டுப்பாடில்லாத, தண்டனை குறைவான தாமதிக்கும்,/எதற்கும் தப்பிக்க வழியிருக்கும் சனநாயக நாடு என்றபடியால் தானே இந்த அலட்சியப் போக்கு..? திமிர்..?

     

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

    அரபு நாடும் தமிழ்நாடும் ஈழமும் ஒன்றல்ல. தண்டனை கொடுப்பவர்கள் யோக்கியமாக முதல் இருக்கவேண்டுமே !! பொதுவான அரச இயந்திரமே பிரச்சனைக்குரியதாக இருக்கும் போது அதில் இருந்து தண்டனை வழங்குவது தீர்வாக அமையாது. 

    குறிப்பாக சாதிய மத முரண்பாடுகள் உள்ள சமூகத்தில் இறுக்கமான தண்டனைகள் குற்றத்திற்கான தண்டனையாக மட்டும் புரிந்துகெள்ளப்பட மாட்டது. அவைகள் விரைவில் வேறு எல்லைகளை தொட்டுவிடும். புதிய பிரச்சனைகளைள கிளப்பி விடும். ஈழத்தில் போராட்டம் பின்னடைவில் இந்த அம்சமும் பெரும் பங்கு வகிக்கின்றது.

    உதாரணமாக காவல் துறையின் தண்டனை சார் நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டால் அவர் தலித் அல்லது வேறு சாதி சார்ந்தவராக அணுகப்படலாம் அல்லது இந்து பிஜபி அல்லது இஸ்லாமியராக அணுகப்படலாம். வேறு மாநிலத்தவராக அணுகப்படலாம் திமுக அதிமுக வாக அணுகப்படலாம். பிரச்சனைகள் வேறு திசைகளுக்குச் செல்லும். மேலும் காவல் துறையே குடிசைகளை கொழுத்துகின்றது பெண்களை தாக்குகின்றது பெண்கள் மீது அத்துமீறல்களை செய்கின்றது. அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதிகார சக்திகளின் கட்சிகளின் அடியாட்களாக பார்க்கப் படுகின்றார்கள். அவர்கள் மாணவர் என்ற சக்தியின் மீது அதிக தண்டனையை பிரயோகித்து அவர்களை ஒழுக்கப்படுத்துவது நடமுறைக்கு சாத்தியம் இல்லை. அதற்குரிய அரசியல் தளமும் இல்லை என்பதே கசப்பான உண்மை. 

  8. 11 minutes ago, ராசவன்னியன் said:

    மன்னிக்கவும்.. இப்படியொரு நியாப்படுத்துதலை எதிர்பார்க்கவில்லை.. !

    எப்படிப்பட்ட ஹார்மோன்களும் கட்டுக்குள் இருக்க வேண்டும், அவரவர் வீட்டிற்குள் அதை வைத்துக்கொள்ள வேண்டும், பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் யாரும் நடக்க அனுமதிக்கக் கூடாது.. இதில் வயது வித்தியாசம் ஏன்? பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை இருக்க வேண்டுமெனில் இம்மாதிரியான பொறுக்கித்தனத்தை வயது தாட்சன்யமில்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும்..

     

    ஏற்கனவே மது விலக்குப் போராட்டத்தில் கவல்துறை இவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரணமாக பஸ் ரயில்களில் தொங்கிக்கொண்டு போகின்றவர்களை கத்தி கொண்டு போகும் நிலைக்கு நகர்த்தியது என்னவென்பதை ஆராய்வதே சிறந்தது. தயவு தாட்சன்யமில்லாமல் ஒடுக்க முற்பட்டால் இது என்னும் வேற லெவலுக்கு போகும் தவிர இதை தணிக்க முடியாது. காவல்துறையும் பொறுக்கித்தனம் செய்கின்றது அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொறுக்கித்தனம் செய்கின்றது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உருவாகும் எதிர்வினைகள். உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டியவை. எக்காலத்திலும் இளைஞர்களின் துடிப்பை சரியான வழிக்கு திசை திருப்பவேண்டுமே தவிர அதை ஒடுக்கி முடக்குவது அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு சமம். 

  9. https://www.youtube.com/watch?v=UVNXzzj_0fc

    https://www.youtube.com/watch?v=R5-x-rCFxmg

     

    இளம் கன்று பயமறியாது என்பது போல் இது எல்லா நாட்டிலும் வளமை. சூழ்நிலைக்கு ஏற்ப அட்டகாசம் வேறுபடும். காரில் ரேஸ் ஓடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். கண்ணாடி பஸ்தரிப்பிடங்களை உடைப்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். வயதும் ஆர்வமும் கேர்மோன்களும் என தன்னை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமானவானா சமூகத்திற்கு காட்டவும் பிறரின் கவனத்தை தன்பக்கம் இழுக்கவும் செய்வார்கள். பெண்களின் கவர்ச்சி உடைகளும் மேக்கப்புகளும் இவ்வாறானது தான். இந்த உந்து சக்தியை சிலர் விளையாட்டின் பக்கம் திருப்புவார்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு சார்ந்து திருப்புவார்கள். சரியான வழிநடத்தல் தான் காரணம். இருந்தும் இந்த மாணவர்கள் தமது சக்தியை அவ்வப்போது சமூக நீதிக்கான போராட்டங்களின் பக்கம் திருப்புகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் அட்டகாசங்களை பெரிதுபடுத்த முடியாது...

     

     

  10. Quote

    ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?

     

    இலங்கையில் தனிநாடு உருவானால் தமிழ்நாட்டுக்கும் தனிநாட்டுச் சிந்தனைன வந்துவிடும் என்றே ஈழத்தமிழர்கள் அழிவுக்கு இந்தியா மத்திய அதிகாரவர்க்கம்  துணைபோனது. அவ்வாறு துணைபோனதன் எதிர்விளைவுதான் இன்று தமழித்தேசீயவாதம் தமிழ்நாட்டில் சற்று மேலோங்கியிருக்கின்றது. 

    தமிழகமோ அல்லது பிற மாநிலங்களோ பிரிவது என்பது மத்திய அரசு மாநிலவாரியாக செய்யும் அடக்குமுறை பாரபட்சம் மொழித்திணிப்பு வளங்களை சுரண்டுதல் போன்ற பல விசயங்களோடு சம்மந்தப்பட்டது. 

    பிரிவினை என்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் புரட்சியும் அடிப்படையாகும் ஆனால் இந்த அடிப்படையை சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை போன்ற பல அலகுகளால் தகர்த்தே இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை ஒழிந்து தமிழன் மலையாளி கன்னடன் தெலுங்கன் என்ற நிலை வரும்போது இந்தியா என்ற கட்டமைப்பும் உடையும். 

    ஆனால் பிரிவினையை தீர்மானிப்பதில் பிரிந்து போக விரும்புபவர்களை விட அதிக வலிமை பிரிவதால் யாருக்கு என்ன லாப நட்டம் என்பதிலேயே அதிகம் உண்டு. இந்தியா உடைவதால் அமரிக்கா சீனா ரசியா ஐரோப்பாவுக்கு என்ன லாபம். உடையாமல் இருப்பதால் என்ன லாபம்.  இவையே பிரதானமானது. தற்போது பிரியாமல் இருப்பதே ஏகாதிபத்தியத்துக்கு அதிக லாபம். இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அடுத்து வரும் காலங்களிலும் இந்தியாவின் உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளின் உணவு உற்பத்தி வளரச்சியும் இந்தியா உடையாமல் இருப்பதுக்கு ஏதுவாக உள்ளது. 

    உலகமயமாக்கல் இந்தியமயமாக்கல் இவைகளை கடந்து இனத்தேசீயமானது சாதி மத வகுப்புவாங்களை கழைந்து மேலோங்கவேண்டும். அவ்வாறு மேலோங்கும்போதும் கூட  தற்சார்பு பொருளாதாரமும் வளரவேண்டும். தற்சார்புப் பொருளாதரத்துக்கு ஏகாதிபத்தியநாடுகள் ஈடமளிக்காது.  அவ்வாறு இடமளிக்காத போது பிரிந்தும் அடிமைவாழ்வுபோலாகிவிடும். உதராணமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றும் இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருக்கின்றது. அணுகுண்டு வைத்திருந்தால்போல் இந்தியா விடுதலைபெற்று சர்வ சுதந்திரம் பெற்ற நாடு என்று பொருள் இல்லை.  இந்தியாவின் தேயிலை சக்கரை அரிசி விலையை தீர்மானிப்பது மேற்குநாடுகளே அன்றி இந்தியா அல்ல.  உலகமயமாக்கல் என்பதன் பின்பு பிரிவினை என்பது மிகச் சிக்கலான விசயம். யூரியுப் எல்லாம் ஆழப்போறான் தமிழன் பாடல்தான் நுறு விதமாக வெளியிடுகின்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் நடமுறைச் சாத்தியம் என்பது ஏகப்பட்ட விசயங்கள் அதிகாரங்கள் பணம் ஏகாதிபத்தியம் சம்மந்தப்பட்டது. 

    • Like 2
    • Thanks 2
  11. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகங்களையும் வீர வரலாறுகளையும் ஒரு உந்து சக்தியாக எமது இனம் தனது விடுதலைப்பயணத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. பேரினவாத அரசின் போர்க்குற்றங்களையும் போராட்டத்தின் தொடர்ச்சிக்குப் பயன்படுத்த முடியவில்லை. இவை இரண்டையும் அலட்சியப்படுத்திய ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகள் சூனியமானது. அற்ப பலனையும் எக்காலத்திலும் பெற வக்கற்றது. 

    • Like 5
  12. நாங்கள்தான் சொல்லிவிட்டோமே நாங்கள் எப்படி இருக்க விருப்புகிறோம் என்று. ஆனால் உங்களை மாதிரி மத வெறியர்களாக சொந்த அக்கா தங்கைகளை கல்லா எறிந்துமட்டும் கொல்ல மாட்டோம். நாங்கள் எதுவாக இருந்தாலும் அது பரவாயில்லை. நீங்கள் சன்னியாகும் , சியாவகும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் தினமும் குண்டுத்தாக்குதல் செய்து அழித்துக்கொண்டிருங்கள்

    .

    இஸ்லாமியர்கள் இந்தக் களம் பக்கம் எட்டியும் பர்ப்பதில்லை. இந்தக் களத்தில் எந்த ஒரு இஸ்லாமியர்களும் வந்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லை இருந்தும் நீங்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி சீண்டி வருகின்றீர்கள். இந்து மதப்பற்றுள்ள ஒருவரின் குணம் எப்படிப்பட்டது என்பதற்கு உங்கள் கருத்துக்களை விட வேறு சான்று என்ன வேணும்? உங்கள் கருத்துக்கள் மற்ற மதங்களை தாக்குவதில் குறியாய் உள்ளது. எப்படியாவது தமிழர்கள் சாதி மத பேதங்களை கடந்து இனமாக ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற பயம் மதப்பிளவுகளை விரிவாக்கும் உங்கள் கருத்துக்களில் தாராளமாக உள்ளது. இந்த நிலையில் அமரிக்காபோல் ஆட்சியும் அமைக்கப்போவதாகச் சொல்கின்றீர்கள். நல்லது.

  13. இந்த திரியில் மதவாதம் பற்றி கதைப்பது யார்? நீங்கள் உட்பட இந்து சமயத்தை தூற்றுபவர்கள் தான் மதவாதம் பேசுகிறீர்கள். (நீங்கள் உங்களை இந்து என கூறிக்கொண்டாலும் அது உண்மையா பொய்யா என தெரியாததால் இந்து சமயத்தை தூற்றி மதவாதத்தை திணிக்கும் உங்களையும் மதவாதியாக உள்ளடக்கியுள்ளேன்.)

    நான் மதவாதம் பற்றி கதைக்கவில்லை. மதம் மாற்றுவது சரியா பிழையா என மட்டும் தான் கதைத்துள்ளேன். அப்படி தான் "மதம் மாற்றுவது பிழை" என இங்கு கருத்திட்ட ஏனையோரும்.  :)  மதவாதத்துக்கும் இதற்குமான அடிப்படை வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். :huh:

    ஆக மொத்தத்தில் மதவாதம் பற்றி பேசும் நீங்களே உங்களை கருணாவை விட மோசமான துரோகி என கூறுகிறீர்கள். :D

     

    நீங்கள் தானே சட்டை கதையை கூறியது. :D சட்டை அழகாக இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று. :D அதே நீங்கள் தான் "சைவ சமயம்" என்ற சட்டை போட்டவர்கள் பற்றி தூற்றி எழுதுகிறீர்கள். :D

    உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று புரியவில்லை.

    இந்துமதமோ சைவமோ அவ்மததில் உள்ளவர்கள் அம்மதத்தல் எவருக்கும் சமமானதில்லை. இதே மதங்கள் தான் இன்ன சாதிதான் கோயிலுக்குள் வரலாம் பூசை செய்யலாம் இன்மொழியில் தான் பூசை செய்யலாம் அதற்கும் மேலாக தீண்டத்தகாத கடவுள்கள் என்று கோயிலுக்கு வெளியே மனிதர்களை மட்டுமல்ல கடவுள்களையும் வைத்துள்ளது. இந் நிலையில் யாருக்காக மதம் மற்றுவது சரி அல்லது பிழை என்று கருத்துச் சொல்லவேண்டும்? இந்து என்றாலே அதன் கீழ் யாரும் சமமாக இருக்கமுடியாது இந்நிலையில் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டுபோய் மதம் மாற்றுவது சரி பிழை என்று சொல்வது? சுத்த கூறுகெட்ட தனமா இருக்கு உங்கள் கேள்விகள்.

    நீங்களும் நானும் ஒரு மொழிபேசுவதால் தமிழர் எனலாம் இல்லை ஒரு பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு இடத்துக்குரியவர் எனலாம் ஆனால் நீங்களும் நானும் அல்லது எவரும் நாங்கள் இந்த அல்லது சைவம் என்ற பொதுப்படைக்கு கீழே வரமுடியாது அதை புரிந்துகொள்ளுங்கள். அங்கே சாதிகள் எற்றதாழ்வுகள் வந்து தடுத்துக்கொள்ளும். இந்நிலையில் மதம் மாற்றுவது பிழை என்று யாருக்காக சொல்லவேண்டும் உங்களுக்காகவா இல்லை வேறு யாருக்காகவுமா?

    மானுட நேயத்தை சமத்துவத்தை விரும்பும் எவனும் இந்துமதத்தில் இருந்து என்னுமாரு மதத்துக்கு ஒருவன் செல்வதை தடுக்கமாட்டான்.

    இந்து மதமே எம்மை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கும் நிலையில் அடுத்தவனைப்போய் நீ செய்வது பிழை என்பதற்கு என்ன அடிப்படை யோக்கியம் இருக்கு?

    மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை ஏனெனில் நான் பிறப்பால் சைவசமயம் சார்ந்தவன். தூரதிஸ்டவசமாக மானுட விரோத மததில் பிறந்துவிட்டதால் எந்தவிதத்திலும் என்னுமொருவர் மீது குற்றம் காணும் தகுதி எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் மதம் மாற்றுவது பிழை என்று ஆரம்பித்த சண்டையை இழுத்து இரண்டு தரப்பும் அங்கு அடிபட்டு சாக இங்க இருந்து புலிக்கு முதல் விசில் அடித்தது போல் விசிலடியுங்கள்.

    • Like 2
  14. இந்துத்துவம் என்டால் என்ன? தெளிவான விளக்கம் தேவை சுகன்

     

    சிங்களவன் பெளத்தவனாக[மதம்] இருந்து கொண்டு ஆட்சியில் இருக்கலாம்

    தமிழ்/சிங்களம் பேசும் முஸ்லீம்[மதம்] ஆட்சியில் இருக்கலாம்

    ஏன் தமிழன் இந்துவாக இருந்து கொண்டு ஆட்சியில் இருக்க இயலாது?

     

    இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழ்ர் அரசாள வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் ஏன் அப்படி ஆட்சியமைக்க முடியாது என்று சொல்கிறீர்கள்? மத ரீதியான பாகுபாடுகள் இல்லாமல் எல்லா இனத்தவரையும் சமமாக பாவித்தால் போச்சு.அங்கே பாகுபாட்டுக்கே இடமில்லைத் தானே!

     

    நீங்கள் முதலில் இந்துக்கள் மட்டும் தான் ஏதோ சாதி பார்ப்பதாக எழுதுனீர்கள்.இப்ப அதைப் பற்றி கதைக்காமல் இந்துத்துவம் அது,இது என்று எழுதுகிறீர்கள்.

     

    ஒரு கதைக்கு இந்தியாவை தற்போது முஸ்லீம்கள் ஆண்டு கொண்டு இருந்தால் எமக்கு நாட்டை தூக்கி தந்து விடுவினமா? எமது பிரச்சனைக்கும் இந்தியா இந்துத்துவத்திற்கும் என்ன சம்மந்தம்?....இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் இந்தியா அப்படித் தான் இருக்கப் போகுது.அதற்கும் இந்துத்துவத்திற்கு ஒரு சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து.

     

    தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை.தலைவரால் கூட அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாமல் போய் விட்டது.அதற்குள் சாதி,இந்துத்துவம் எங்கே வந்தது? எமது தோல்விக்கு காரணம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட சுயநலம்.அது தான் மு.வாய்க்கால் தோல்விக்கும்,ஈழம் எடுப்பதற்கும் தடையாக இருந்தது/இருக்குமே வழிய வேறு காரணம் இல்லை

     

    உங்களைத் தவிர ஒருத்தரும் இங்கு மதவாதத்தை தூக்கி பிடிக்கவில்லை.நாங்கள் எங்கட மதத்தில் இருக்கிறோம் பகிரங்கமாக மற்றவரை மதம் மாத்த வேண்டாம் என்றே கேட்கிறார்கள்.அப்படி கேட்பது தப்பா?...அதில் எங்கே இந்துத்துவம் இருக்கிறது ^_^

     

    முதலில் சாதியை தூக்கிப் பிடித்தீர்கள்.தற்போது இந்துத்துவம் கதைக்கிறீர்கள்.இனி மேல் என்ன கதைக்கப் போறீர்களோ :unsure:

     

    நான் சிவசேனாவை பின்பற்ற சொல்லி சொல்லவில்லை.அதற்கான தேவையும் இல்லை.யாழில் இருப்போர் பிற மதங்களை தாக்குகிறார்கள் என சொல்லும் நீங்கள் இந்துக்களை தாக்குவது எவ் விதத்தில் நியாயம்?

     

    இது உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்து மதத்துள் ஒரு தேசிய இனம் உருவானால் அது இந்துத்துவத்திற்கு பெருமை தானே! அது ஏன் இந்துத்துவம் அமைய விடாது என சொல்லி உள்ளீர்கள் :unsure:

    இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம்.

    ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு கோயிலுக்குப் போன்றார்கள் தமது ஆத்ம சாந்திக்கு வழிபடுகின்றார்கள். இது ஆன்மீகம் அல்லது இறை நம்பிக்கை. அதில் நம்பிக்கை உடையவராக நீங்கள் இருக்கலாம்.

    இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.

    இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது. வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது.

    இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல். - இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது. எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம்.

    இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம்.

    இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது.

    ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது?

    நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

    சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது.

    அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது.

    நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான்.

    • Like 2
  15. அதே போல்,

     

    கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை.

     

    ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை.

     

    இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை.

     

    எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம்.

     

    மதம் என்பது எம்முடைய அடையாளம். 

     

    மதம் எமது வாழ்க்கை முறை.

     

    மதம் எமது வரலாறு.

     

    மதம் எமது கலாச்சாரம்.

     

    மதமே எமது மொழியின் ஊற்று. 

     

    இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது.

     

    இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை  (யேசுவை) வணங்க முடியாது.

     

    என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது.

     

    ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது.

     

    இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால‌ பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு.

     

    கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு... புண்ணாக்கு அல்ல.

     

    நாம் நாமாக இருப்போம். நீங்கள் நீங்களாக இருங்கள்.  

     

     

     

    .

    மதமே மொழியின் ஊற்று என்றால் சமணத்தையும் பௌத்தததையும் தான் ஆதரிக்கவேண்டுமே தவிர தமிழை நீச பாசை என்று தீட்டு நீக்கும் முறை கொண்ட இந்துத்துவத்தை எப்படி ஆதரிப்பது?

    மதமே எமது கலாச்சாரம் என்பதால் அதற்குள் சாதீயமும் ஏற்றதாழ்வுகளும் தக்கவைக்கப்படுகின்றது. அது இருக்கும் வரை ஒருவனை ஒருவன் ஏற்றும் ஜனநாயகப் பண்பு வராவே வராது. இவை சாத்தியப்படாத போத இன ஒற்றுமை என்பத எக்காலத்திலும் சாத்தியம் இல்லை.

    என்று ஒருவனுக்கு தான் வாழ்ந்த நிலத்தை விட மதம் தேசீய அடயாளமாகின்றதோ அதன் பிறகு அவனுக்கு நாடு அவசியம் இல்லை. மதத்தை காவிக்கொண்டு உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வாழமுடியும். புலம்பெயர் தமிழர்களின் கோயில்களும் தேசீயமும் இதே வழிகாட்டலில் தான் நாடக்கின்றது. அவனுக்கு தேசம் நாலம் பட்சம்.

    ஆன்மீகம் வேறு மதம் வேறு. நீங்கள் ஆன்மீகத்தை தொலைக்கும் மதவாதிகளா உருவெடுத்துள்ளீர்கள். அதற்கு விலையாக தேசம் தேசீயம் நாடு என்பதை கொடுகின்றீர்கள்.

  16. சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு....

    அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...

    இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை.

    இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம்.

    இந்துத்தவம் ஒரு விசம். மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்? இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது.

    இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்?

    தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது.

    பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா? ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று. ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர்.

    இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

    (அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)

    • Like 1
  17. ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

    இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

    இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

    சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

    பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

    இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

    இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

  18. யுவன் மதம் மாறுவது தொடர்பில் நான் இதுவரை கருத்து வைக்கவில்லை. ஆனால் கருத்து வைப்பவர்களை இந்திய இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவானவர்கள் என நீங்கள் கூற முடியாது. இந்திய இந்துத்துவ கொள்கையிலிருந்து இந்திய தமிழர்களும் தான் விலகி நிற்க விரும்புகிறார்கள். பா.ஜ.க போன்ற கட்சியை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபற்றி கதைத்து நீங்கள் திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் தம்மை இந்து என கூறிக்கொண்டாலும் அவர்கள் தம்மை இந்திய இந்துத்துவ கொள்கையாளராக காண்பிக்கவில்லை.

    நீங்கள் இங்கு சாதிக்கதை கதைப்பதை நிறுத்துங்கள். :) அடுத்த வினாடி கூட எதிர்காலம் தான். நாளை கூட எதிர்காலம் தான். :)

     

    சைவ சமயத்தில் சாதி, சாக்கடை இருக்கு என்பதால் தான் மற்ற மதத்துக்கு மாறுகிறார்கள் என்று உங்களை போன்றோர் சொல்வதால் தான் மற்ற மதத்தில் சாதி, சாக்கடை இல்லையா என இங்கு கேட்கிறார்களே தவிர சைவ சமயத்தில் இல்லை என்று இங்கு யாரும் கூறவில்லையே?? இங்கு அடுத்தவன் முதுகை சொரிவது நீங்கள் தான். :)

     

    யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? எனது கத்தோலிக்க நண்பர்களே தமக்கு யஹோவாவை பிடிக்காது என கூறுவார்கள்.

     

    உங்களிடம் நல்ல சட்டை உள்ளது என்றால் "உங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவர்களெல்லாம் கடவுளில்லை" அல்லது "உங்கள் மதம் தான் மதம் மற்ற மதங்கள் ஒன்றும் மதமில்லை" என்று மறைமுகமாக நீங்களும் கூற வெளிக்கிட்டிட்டீர்கள்.  :D சட்டை அழகாக இருந்தால் நாங்கள் வாங்கி அணியலாம் என்றால் வாங்கு வாங்கு என கட்டாயப்படுத்தி எதற்காக அணிய வைக்கிறார்கள்? அப்படியானால் உங்கள் சட்டை நல்லதில்லை என கூற வருகிறீர்களா? :D

     

    நீங்கள் இங்கு எதற்காக சைவ சமயத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் சட்டையை நீங்கள் போட்டுள்ளீர்கள். அதில் சைவ சமயத்தவர் குறுக்கீடு செய்கிறார்களா? ஆனால் சைவ சமயத்தவரை இந்த சட்டையை போடு என மற்றைய மதத்தவர்கள் குறுக்கீடு செய்தால் நாம் அதுபற்றி குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. எனக்கு மதம் மாறவும் பிடிக்காது. ஆனால் அடுத்தவன் தானே என்னை மாறு என கேட்கிறான். இங்கே மூக்கை நுழைப்பது நானா இல்லை அவர்களா? :D

     

    உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள் முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்று. :lol:

    முரண்பாட்டை வளர்ப்பது நீங்கள். நான் ஆடுத்த மதத்தில் குறை கண்டுபிடிக்கவோ மூக்கை நுழைக்கவோ எந்தக் கருத்திலும் செய்யவில்லை. என் சார்ந்த மதத்தில் என்ன பிழையோ அதிலேயே எனது விமர்சனம் நிற்கின்றது. வேறு மதங்களில் உள்ள பிரச்சனை பற்றி கதைக்கவேண்டியது அவர்கள் தவிர நானில்லை. அவ்வாறு நான் கதைத்தால்தான் அது மதப்பிரச்சனை. மத முரண்பாட்டை வளர்பதில் கங்கணம் கட்டி நிற்பது நீங்கள். எங்காவது நான் கிருத்துவத்தில் அந்தப் பிழை இருக்கின்றது இஸ்லாத்தில் இந்தப் பிழை இருக்கின்றது என்று சொல்லியுள்னோ? சொன்னால் அது மதப்பிரச்சனை. அதை நீங்கள் எப்படித்தான் தூண்டினாலும் நான் செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் மத முரண்பாட்டிற்று எதிரானவன்.

    சைவம் இந்துத்துவம் தனது சாதீய மத வெறியால் தமிழர்கள் வாழ்வை சுடுகாடாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. இன்னும் வகித்துக்கொண்டிருக்கின்றது. அது சார்ந்த விமர்சனத்தை நான் எப்போதும் செய்வேன். பிழை இருக்கும் வரை அதை திருத்த மறுக்கும் உங்கள் போன்றோர் இருக்கும் வரை விமர்சனம் என்பது இருக்கும் தவிர மத வேற்றுமைகளை வளர்க்கும் உங்கள் எண்ணம் எனது கருத்தில் இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்பட்ட அழிவுகள் வெளிப்படையானது.

    எனது எல்லை இந்து சைவம் போன்றவற்றுக்குள்ளானது என்பதில் நான் தெளிவாய் இருக்கின்றேன். இங்கு சிலர் என்னை கிருத்துவத்தில் கொண்டுபேய் செருகினாலும் சரி இஸ்லாத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி இல்லை பௌத்தத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி நான் யார் என்பதில் எனக்குத் போதிய தெளிவுண்டு.

    எக்காலத்திலும் சொந்த மதத்தில் உள்ள குறைகளை கழைய மறுக்கும் உங்களுக்கு அடுத்த மதத்திலும் அப்படித்தான் அங்கேயும் இப்படித்தான் இங்கேயும் இப்படித்தான் என்ற சாக்குப் போக்கும் விரோதமும் அவசியம் தவிர எனக்கில்லை.

    • Like 1
  19. நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

    ஆடறுக்க முதல்..

    யாழ்பாணத்தில் இருந்து ஒரே நாளில் அகதியாக்கியதுபோல சுருக்கமாக இஸ்லாமியத் தமிழர்களை நாட்டைவிடடேவெளியேற்றுவோம் என்கின்றீர்கள். அல்லது அவர்களை அடிமைகளாக வைத்திருப்போம் என்கின்றீர்கள்.

    இதை புலம்பெயர்ந்த நாட்டில் இருந்த வீரவேல் வெற்றிவேல் ரேஞ்சுக்கு அறிவித்துள்ளீர்கள்.

    ஏற்கனவே இஸ்லாமியத்தமிழர்களை பிளவுபடுத்தி இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதம் என்று மாற்றினோம் என்பதை உங்கள் தேசீயத் திருவாயால் மலந்தருளியுள்ளீர்கள். இவற்றை வெளிக்கொண்டுவருவதற்காகவே இங்கெ மினைக்கெடுகின்றறேன். நன்றி

    உங்கள் தூரநோக்கு விழைவு என்ன? தமிழீழம் கிடத்தால் இஸ்லாமியத்தமிழர்கள் வாழ்வு அழிக்கப்படும் என்பதை இப்போதே பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைவதை மதவாரியக தடைசெய்கின்றீர்கள்.

    இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடி பெரும்பான்மை நிலையை எட்டிக்கொண்டிருப்பவர்களும் பெருளாதராத்தில் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பவர்களுமான இஸ்லாமியத்தமிழர்களை அச்சுறுத்தப்பார்கின்றீர்கள். இதனால் எதர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை ஏனெனில் நீங்கள் பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கிவிட்டீர்கள். இவ்வாறன கருத்து விதைப்பிற்கு அறுவடையாவது மீளவும் தாயகத்தில் வறுமைப்பட்ட மக்களே !

    இந்த முட்டாள்த்தனத்தையும் அறிவிலிநிலையையும் தான் மையவாதத் தளம் என்கின்றோம். இத்தளத்திலேயே போராட்டம் அழிந்து சிதைந்து போனது.

    புலிகள் கூட இறுதிக்காலத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். இவ்வாறு நாடுகடத்தும் நிலையை அவர்கள் இறுதியில் கொண்டிருக்கவில்லை.

    இரணைமடு பிரச்சனையில் எனது கருத்து

     

    நடுகடந்த அரசு என்று அர்த்தமற்று அடயாளம் தேடும் அமைப்புகள் அவற்றை கலைத்து தொண்டு நிறுவனமாக தம்மை மாற்றி புலம்பெயர் தமிழர்கள் உதவியுடன் விக்கி சம்மந்தனுடன் இணைந்து சிங்கள அரசுடன் இணைந்து இவ்வாறான திட்டங்களை செய்ய முற்பட்டால் இவைகள் சாதராணமாக சாத்தியம். போரால் பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கான நிதியில் நீச்சல்குளத்தை யாழில் கட்டியதுதான் போகட்டும் இப்படியான வழங்கள் இருக்க எதற்கு விவசாய நீரில் கைவைக்கவேணும்? பறங்கியாற்றை திசைதிருப்பி வவுனிக்குளத்தில் இணைக்கும் திட்டம் புலிகளால் தொடங்கப்பட்டு இடையில் கைவிடப்பட்டுள்ளது. அவற்றை செய்து விவசாய வளத்தை பலப்படுத்தலாம். இது தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைபோல் வன்னிக்கும் யாழ்பாணத்துக்குமான பிரச்சனையாக மாற்றும் நோக்கே மறைமுகமாக உள்ளது. இந்து இஸ்லாம் என்ற பிரிவினை பிறகு வடக்கு கிழக்கு என்ற பிரிவினை இப்போது வன்னி யாழ்பாணம் என்று எதோ ஒன்று ஆரம்பிக்கின்றது.

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2
  20. இலங்கையிலுள்ள சைவ சமயத்தவர்களை (இந்து என கூறிக்கொண்டாலும்) இந்திய இந்துத்துவத்துடன் எதற்காக ஒப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. அத்துடன் சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சாய்பாபா போன்று கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை எதற்காக புகுத்துகிறீர்கள்? இவர்களை எமக்கு தலைவர் என நாம் கூறினோமா? நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த போது கூட இப்படியானவர்களை நம்பியதில்லை. கிறிஸ்தவ மத தலைவர்களாக பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் விட்ட பிழைகளையும் கூற முடியும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையே கேவலப்படுத்துகிறோமா?

    மதத்தின் பெயரில் பிழைப்புவாதம் நடத்துவோர் அனைத்து மதத்திலும் உள்ளார்கள். ஒவ்வொரு மதத்திலும் சரி, பிழை பார்க்க போனால் அனைத்து மதங்களும் தம்மை திருத்திக்கொள்ள வேண்டியவையே.

     

    சாதிப்பிரிவுகள் நிச்சயம் எதிர்காலத்தில் களையப்பட வேண்டும். அதற்காக மதம் மாறினால் ஏனைய மதங்களில் இவ்வாறான பிரிவுகள் இல்லை என்பது போல் நீங்கள் வாதிடுவது நகைச்சுவையானது. இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவர்களும் சாதி பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

     

    கிறிஸ்தவத்தில் எத்தனை மதப்பிரிவுகள் உள்ளன? யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? :unsure:

    நீங்கள் மதத்தை சட்டையுடன் ஒப்பிடுவதற்கு மதம் ஒன்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை அணியக்கூடியது போன்றது அல்ல. ஆனாலும் உங்கள் பாசையில் சொல்லப்போனால் நீங்கள் எந்த சட்டை வேண்டுமானாலும் போடுங்கள். அதற்காக என்னை (அல்லது என்னை போன்றவர்களை) இந்த சட்டையை போடு என நீங்கள் கூற முடியாது. பிரான்ஸ் வந்ததிலிருந்து பலர் என்னை மதம் மாற கேட்டு விட்டார்கள். எனக்கு விருப்பமானால் நான் மாறுவது வேறு. என்னை மாற சொல்லி இவர்கள் கேட்பது நியாயமா? <_<

     

    தானாக மதம் மாறுவதை விடுத்து மாறு என கேட்டு மதம் மாற்றுபவர்கள் பற்றி ஏன் உங்களால் ஒரு வார்த்தை கூட கதைக்க முடியவில்லை? :unsure:

     

    உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள்ள முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டுள்ள மாதிரி உள்ளது. :o

    இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

    நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

    இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

    ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

    எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

    எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

    மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

    எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

    இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

    உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.