Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,541
 • Joined

 • Last visited

 • Days Won

  33

Everything posted by சண்டமாருதன்

 1. நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள்.
 2. எமது அம்மா அபபா சகோதரங்கள் பிள்ளைகளுக்கு உயிராபத்து நேரும் போது உணர்வுகள் மிக கனதியாக இருக்கும். அதே கனதி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.. எதிர்கால சந்ததிகளுக்கு உறவுகளின் பிரிவு சாதராண ஒரு நிகழ்வாக இருக்கலாம். தாய் தந்தையரின் செத்தவீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் உணர்வுகளும் இயந்திரமயமான இன்றைய தொழில நூட்ப உலகில் இணைந்த வாழ்வில் உணர்வுகளின் கனதி ஒன்றாக இருக்கப்போவதில்லை.. மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்து வாழும் விலங்குகள் பறைவைகளிடம் பரிவு பாசம் பிரிவு உணர்வுகள் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றது. கால்நடையாக சென்
 3. இந்த திரி தனது மையக் கருத்தில் இருந்து மாங்குயிலின் கருத்தோடு விலகுகின்றது. //கோரோனோ வைரஸ், அடுத்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, உலகத்தில் இருந்து விடை பெறும்// நாம் இந்த திரியில் ஊரடங்கு சட்டத்தில் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன முன்னர் இலங்கை அரசு ஊரடங்கு சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தியது என திரிக்கு ஏற்ப கருத்துக்களை எழுதலாம். தனிமனித நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை வேறு ஒரு திரியை தொடங்கி எழுதுவது பொருத்தமானது. என்பதை முதலில் கூறி நீங்கள் குறிப்பிடும் தீட்டு என்பது சாதீயம் தீண்டாமை பெண்ணடிமைத்தனம் ஆணாதிக்கம் என பல வரலாறுகளுடன் பிணைந்தது . இவைகளை தற்போதைய உலகளாவிய
 4. இந்த இரண்டு நிகழ்விலும் எவ்வளவு புரிதல் இருக்கின்றது. நாட்டில் மலேரியா வந்தால் வேப்பம் பட்டையை அவிச்சு குடிப்பது வழக்கம். நீண்ட காலமாக வேம்பு மஞ்சள் போன்றவற்றை நோய்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள். அதை இங்கும் முயற்சிக்கின்றார்கள். இதனால் கட்டுப்படுத்தலாம் குணமாக்கலாம் என்பது வேறு விசயம். ஆனால் ஏதோ ஒரு முயற்சியை வெறும் மத வழிபாடு ஆராதனை போதனை என்பதை கடந்து செய்கின்றார்கள்.
 5. இந்த லட்சணத்தில இருந்தா குறைந்தது இருபது வீதம் பேருக்கு அதாவது முப்பது கோடிபேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகும் போல இருக்கு.
 6. கொரோனா ஆபத்தை விடவும் ஆலைய வழிபாடு முக்கியம் என்று கருதுவது அவரவர் உரிமை. ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கொரோனா தொற்றை வாங்கிக்கொண்டவர்களுக்கு ஆலயங்களும் சர்வதேச இந்து பேரவையும் பொறுப்பு என்று கூறும் பட்சத்தில் நோய் வந்தவுடன் அவர்களை ஆலயங்களிலேயே கொண்டுபோய் விடவேண்டியதுதான். எல்லோருக்கும் மருத்துவ வசதி சாத்தியம் இல்லை. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான் அல்லது அழைத்துக்கொள்வான்.
 7. இதுவும் ஒரு வகையில் சரிதான். எவ்வளவு காலமானாலும் தப்ப முடியாது என்ற நிலையை ஏற்படுத்துகின்றது. அதே நேரம் கொரோனா பிரச்சனையால் கைதிகளை விடுவிக்கும் நிலையும் சில நாடுகளில் ஏற்படுகின்றது. இவர்களை விடவும் முடியாது. அதே நேரம் கொரோனாவால் செத்துவிட்டாலும் மோடி ஆட்சியில் கடசிவரை தண்டனை கிடைக்கவில்லை என்ற அரசியல் சிக்கல் ஏற்பட்டுவிடும். கொரோனா பிரச்சனை ஏற்படாவிட்டால் என்னும் காலதாமதம் ஆகியிருக்கவும் வாய்ப்புள்ளது. அவர்கள் கடசிவரை தாம் தப்புவோம் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார்கள்.
 8. இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில் காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் . இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும். இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ? இருந்தும் இதை செய்கின்றார்கள் என்றால் விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள்.
 9. வாய்க்கால் ஆறுகளில் நீர் சலசலவென்று ஓடுவது பொருத்தமற்ற வர்ணணை தான். கிழை ஆறுகளில் தான் இவ்வாறான சத்தம் வரும். ஒரு ஆற்றில் இருந்து பிரிந்து சொல்லும் சிறிய நீரோடை அல்லது ஆற்றுக்கு வந்நு சேரும் சிறிய நீரோடை களுக்கு பொருத்தமான வர்ணணை. பெரும் நீர்பாசன வய்க்கால்களில் நீர் அமைதியாக ஓடும் அதிலிருந்து வயலுக்கு செல்லும் சிறிய கால்வாயில் அதிக சத்தம் வரும். நீரோடைக்கு பொருத்தமான வர்ணணை.
 10. செய்திகளைப் பார்ககும் போது சீன அரசு தன்னாலானவரை சிறப்பாகத்தான் முயற்சிக்கின்றது. ஆனாலும் அரச எந்திரத்தால் இதை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவது சாத்தியமில்லை. கோடிக்கணக்கான மக்கள் நெருக்கமாக வாழும் இடத்தில் நோய்க் கிருமி தொற்றி பதினைந்து நாளுக்கு பிறகுதான் அறிகுறி தெரியும் என்னும் போது என்ன செய்ய முடியும். அரசை விமர்சித்து என்ன பயன். இனி பெருந்தொகையான மக்களை கொல்லும் நிலை ஏற்படவும் வாய்புள்ளது இந்தியா இலங்கையில் இது பரவ தொடங்கினால் மிக பெரிய அழிவுகள் எற்படலாம்.
 11. சமூக சீர்கேடுகள், ஒடுக்குமுறைகள், சிங்கள பேரினவாத அடக்குமுறைகள் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் என தமிழ்கள் சந்திக்கும் போராட்டங்களில் பங்கெடுக்கவும் வழிநடத்தவும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு நிகரன பொறுபபு பல்கலைக்கழங்களுக்கும் இருக்கினறது. ஆனால் இங்கு பல்கலைக்கழக காவாலிகளுக்கு எதிராக மக்கள் போராடுகின்றார்கள்.
 12. எந்த ஆதார அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்? முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம் ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில்
 13. இவ்வாறான நிகழ்வுகளில் வாக்குவாதங்கள் சாதராணமானது ஆனால் இந்த வாக்குவாதம் ஏன் என்று புரியவில்லை. முகநூல் பற்றி ஏதோ பேசுகின்றார்கள், ராவணனின தோற்றம் என்கிறர் ஒருவர். கஞ:சா வக்கீல் காவாலி வக்கீல் என்கின்றார்கள். குலம் என்றால் சாதி என்கின்றார்கள். வெளியவா படிப்பிக்கிறன் என்கிறார்கள். எந்த பிரச்சனை குறித்து இந்த வாக்குவாதம் நடக்கின்றது ? கிழக்கு பிரதேசசபை வடக்கை விட முன்னேறியுள்ளது.
 14. விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் இறந்துவிட்டனர் https://www.aljazeera.com/news/2020/01/ukrainian-airliner-crashes-tehran-iranian-media-200108032720868.html
 15. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்க அடிப்படை வசதியுடைய வீடுகள் இல்லை. வீதிகள் நிர்வடிகால்கள் இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை போணக் கூடிய உணவில்லை. மலசல கூட வசதியில்லை. மலேரியா டெங்கு காய்சலால் அவதிப்படுகின்றார்கள். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை 5 ஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா ? பாதிக்கப்பட்ட மக்கள் வறுமையும் கூடவே நுண்கடனுக்குள் அகப்பட்டு அன்றாட உணவுக:கு போராடி அடிமை வாழ்க்கை வாழ்கின்றார் . 5 ஜி தொழில் நுட்பத்தை அனுமதிப்பதும் விடுவதும் விரட்டியடிப்பதும் அந்தந்த் மக்களின் வாழ்க்கை சூழுலுக்கு ஏற்ப அவர்கள் எடுக்கும் முடிவு. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வியாபாரம் லாபம் என்பவற்
 16. இப்போதெல்லாம் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் வடக்கில் நடக்கின்றது. அனுபவமான புகையிரத ஓட்டுனர்கள் இல்லைப்போலுள்ளது. வடக்கில் கார்களை மோதும் புகையிரத ஓட்டுனர்களுக்கு தகுந்த அபராதம் விதித்தால் இந் நிலமை சரியாகலாம். (இது காரை மோதிய புகையிரதம் என்ற நல்ல தலைப்புக்கு எழுதியது தவிர புகையிரதத்தில் மோதிய கார் என்பதற்கில்லை )
 17. இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்
 18. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள் நீங்கள் முன்வைக்க முற்படும் கருத்துக்களை 12 வருடங்களுக்கு முன்னர் இக்களத்தில் பதிந்துள்ளேன். சிவப்பு நிறத்தில் உள்ளவை பதிந்தவை மேற்கோள் காட்டப்பட்டவை அதற்கான ஆதராங்கள். திராவிட கருத்தியல் அது ஏற்படுத்திய நன்மைகள் என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை ஆனால் இப்போது இருக்கும் பிரச்சனைகள் வேறு. தமிழகத்தின் சமூக பொருளாதரா சாதீய மத ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை நோக்கிய திராவிட இயக்க கருத்தியல் தளத்தை தகர்த்தெறிவது சீமான் அல்ல. அதை செய்தது திராவிட அரசியல் கட்சிகள். அதற்கு எதிர்வினைதான் நாம்தமிழர். மேலும் இது கருத்தியல் தளத்தில் நடக்கும் எதிர்வினையில்லை
 19. ஆமாம் இந்த சம்பவத்திற்கு இரண்டு சாதிகள் தான் காரணம். ஆனால் அதில் பார்பன உயர்சாதி சம்மந்தப்படவில்லை. அதற்கு பல படிநிலைகள் கீழடுக்கில் உள்ள இரண்டு சாதிகள் சம்மந்தப்படுகின்றன.. திராவிடக் கொள்கையின் படி பார்பனரை ஒழிப்பதால் இந்த சாதியப் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் ? இல்ல பல சாதிகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வருமா ? 1944 ல் தொடங்கிய திராவிடக்கழகம் இன்றுவரையான நகர்வில் எந்த சாதியும் ஒழியவும் இல்லை பார்ப்பன ஆதிக்கம் வீழவும் இல்லை. மாறாக இன்றய நவீன சமூக ஊடகங்களில் சாதியம் வளர்கின்றது. அதே நேரம் திராவிடக் கழகத்தில் இருந்து தோற்றம் பெற்ற திமுக அதிமுக அரசியல்வாதிகள் அரசியலை ப
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.