Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,541
 • Joined

 • Last visited

 • Days Won

  33

Everything posted by சண்டமாருதன்

 1. தமிழகத்தின் பிரச்சனைகளின் மூலத்தை தேடுவதின் விழைவாகவே திராவிட அரசியலுக்கு மாற்று அரசியலும் தமிழரல்லாதோர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும் உங்கள் சொல்லாடல்கள் எல்லாம் தனியே கருத்தியல் ரீதியான எதிர்வினையாக இல்லை. போராட்ட காலத்தில் தேனீ இணையம் தமிழரங்கம் இரயாகரன் சிறிரங்கன் யுரிஎச் ஆர் போன்றவர்கள் பாசிசப் புலிகள் என்று கத்தினதையே நினைவுபடுத்துகின்றது. போராட்டம் முடிந்தவடன் அவர்கள் சத்தமும் நின்றவிட்டது. தமிழர்களின் அரசியலை சூனியத்தை நோக்கி நகர்த்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. அதுவும் நடந்தது. அவர்களிடம் இருந்த மேலாதிக்க வக்கிரத்தை அறிவை பயன்படுத்தி ஜனநாயகவாதிகள்
 2. இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல் இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது. நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாத
 3. // முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம் வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை. இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். // உங்கள் கருத்துக்கு நன்றிகள். ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்த
 4. இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர்
 5. அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீ
 6. இது ஒரு வழமையான சாமியர் சேட்டை என்றுதான் தோன்றும் ஆனால் நித்தியின் திட்டமிடல்கள் நகர்வுகள் எல்லாம் வேறு லெவலில் உள்ளது. அதன் பின்னரே மத்திய அரசும் உளவுத்துறையும் நித்தி சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாகவும் மீட்டு தரும்படியும் சிறுமிகளின் பெற்றோரை கொண்டு வழக்குகளை பதிவுசெய்கின்றது. சிலரை கைது செய்கின்றது. சர்வதேச காவல்துறையை நாடுகின்றது. தற்போது நித்தியை சர்வதேச அளவில் குற்றவாளியாக்கவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 7. “எல்லா சாதியும் சொந்தம் தான்... இனி இப்படி பண்ண மாட்டேன்... படிக்க ஆசைப்படுறேன்!” - முத்து
 8. தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது. முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில் ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம் பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும். இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங
 9. மகாவம்ச கதைகளும் சரி துட்டகைமுனு வரலாறும் சரி சிங்கள இனத்தை ஒரு பாதையில் வழிநடத்த உதவுகின்றது. ஒரு விகாரையை கட்டினாலும் சரி அரசமரத்தை நட்டாலும் சரி வரலாற்றை திரித்தாலும் சரி அவைகள் அந்தப் பாதையின் அடயாளங்களாகின்றன. இறுதிப்போர்க் காலத்தில் விலைவாசி ஏற்றம் பொருளாதார நெருக்கடிகளை அனுசரித்து சிங்கள மக்கள் போரை ஒரு அணியில் நின்று ஆதரித்தார்கள். தேவாலயம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பின் கோட்டபாயவை தேர்ந்தெடுத்திருக்கின்றது சிங்கள இனம். கோட்டபாய தனது பதவிப்பிரமாணத்துக்கு தேர்ந்தெடுத்த இடத்தின் ஊடாக தமது இனம் நடந்து செல்லும் வழித்தடத்தில் மீளவும் ஒரு அடயாளத்தை ஏற்படுத்தி வரலாற்றை எதிர்க
 10. துறவிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ? இவர்களால் நீங்கள் குறிப்பிடும் துறவிகளுக்கு எப்படி அவப்பெயர் ஏற்படும் ?
 11. அமரிக்கா பிரிட்டன் வெள்ளையள் மூன்றாம் உலக நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டு அந்த நாடுகளில் கைதுசெய்யப்பட்டால் அந்த நாட்டு அதிகாரங்கள் முதலில் சொல்வது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுதான். அதேபோல் தான் உள்ளது நீங்கள் மேலே கூறுவது. போராட்ட காலத்துக்கு முன்னரும் சரி போரின் முடிவுக்கு பின்னரும் சரி தற்கொலை செய்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மட்டும் தான் இந்த ஈனத்தனங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சாதிய பிரதேசவாத வர்க்க ஏற்றதாழ்வுகளின் சமநிலை நோக்கிய ஓட்டப்பந்தயம் நடக்கும் இறுதி குத்துச் சண்டை மைதானங்கள் இரண்டு. ஒன்று பல்கலைக்கழக
 12. பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்துப் பாரக்கவேணும் என்பதை உணர்ச்சிவசமாக அணுகுவது எம்மில் பலரிடம் காண முடியும்.. நடமுறையில் அது சாத்தியம் இல்லாத போது அது அறம் தவறிய செயலாகாது. நாம் எப்படி குழநதைகளை அதற்கான பராமரிப்பு இடங்களில் கொண்டுபோய் விட்டு வேலைக்கு சென்று மாலையில் வீடு கூட்டி வருகின்றோமோ அதே போல் முதியவர்களை அவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் வைத்து பராமரிப்பதே ஆரோக்கியமானது. குழந்தையானாலும் சரி முதியவரானாலும் சரி என்னுமொருவரை சார்ந்து இருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள சந்தரப்பம் அமையவேண்டும். இந்த இயந்திர உலகில் வேலை வீடு என்று தன்னையே பராமரிக்க முடியாத ந
 13. இப்படியான புராணக்கதைகள் பெருங் கதைகள் இருந்தும் சிலதை சுட்டிக்காட்டுகின்றேன் - குருவின் அதாவது வியாழனின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் விரும்பி ஏற்பட்ட உறவில் பிறந்த கிரகமே புதன் - அதற்கு முற்பட்ட கதையில் குருவின் மனைவி சந்திரன், சந்திரனுக்கும் புதனுக்கும் ஏற்பட்ட கள்ள உறவால் குருவால் புதன் கிரகம் ஆணும் பெண்ணுமற்ற அலியாகக் கடவது என்று சபிக்கப்பட்டது. இந்த இரண்டு கதையாலும் ஏற்படும் குழுப்பங்கள் சில இந்திய சோதிடத்தில் குருவும் சந்திரனும் இணையும் இடங்கள் பார்கும் இடங்களால் யோகம் ஏற்படுகின்றது. அதே போல் சந்திரனின் கடக வீட்டில் குரு உச்ச பலம் பெறுகின்றார் இதனால் நல்ல பலன்க
 14. கடவுள் இல்லை கடவுளை நம்பிக்கை மூட நம்பிக்கை என்ற வாதத்திற்காக ஆயிரமாயிரம் வருடம் பழமையான கோயில்களை இடிக்க முடியாது ஏனெனில் அவைகள் வரலாற்று அடயாளமாக நிற்கின்றது. அதேபோல் தேவராம் திருமுறை திருவாசகங்களை அழிக்கவும் முடியாது அவை தமிழையும் இலக்கியங்களையும் தாங்கி நிற்கின்றது. வானியல் சோதிடம் பல்லாயிரம் வருடங்களாக மானுடத்துடன் பயணிக்கின்றது. உண்மை பொய் முட்டாள்த்தனம் என்ற வாதங்களுடன் அது தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். இது சரி இது பிழை, இது முட்டாள்தனம் இது புத்திசாலித்தனம் என்ற வரைவிலக்கணங்களுக்குள் நாம் அணுகும் பல விசயங்கள் வராது. அதில் வானியல் சோதிடமும் அடங்கும்.
 15. இவ்வாறான சிந்தனைகள் காலாகாலமாக இருந்துவருகின்றது. சிங்களம் ஒரு நாட்டுடன் ஐக்கியமாகப்போனால் அதற்கு எதிரான நாடு தமிழர்களுக்கு உதவி செய்யும் என்ற கணக்கு. காலாகாலமாக இவ்வாறான கணக்குகளுக்கு மரண அடி விழுந்துகொண்டுதான் இருக்கின்றது இருந்தும் பலவீனமான இனத்தின் இயலாமையின் வெளிப்பாடாக இதை எடுத்துக்கொள்ளலாம். பேரினவாதிகள் யார் வென்றாலும் தமிழர்களுக்கு ஒன்றுதான். கோத்த வென்றால் தமிழர்கள் சார்பாக ஒரு வெள்ளை வானை கடந்த கால ஞாபகர்த்தமாக பரிசளிக்கலாம். . அதை விட வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.
 16. இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.
 17. இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதை முதலில் உறுதிப்படுத்த முடியாது. சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாது. பதிந்தவர் யார் என்பதும் வெளிப்படையாக தெரியாது. 19 வயது பெண்ணை சின்னப் பெண் என்று சட்டம் ஏற்கவும் மாட்டாது. இவ்வாறான பதிவுகளால் யாருக்கு என்ன நன்மை என்பதும் தெரியாது. பகிரங்கப்படுத்தவும் சமூகம் தடுக்கின்றது. கர்பத்தை எப்படி மறைப்பது ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும் என்ற கேள்வி எழுகின்றது. எமது சமூகத்தை புரிந்துகொள்ள இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம். இதே கதியில்தான் எமது சமூகம் உள்ளது. இவ
 18. இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம். குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம். அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில் இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது.
 19. ஆணுக்கு தாலி கட்டுவது ஒரு கட்டத்தில ஆணால் வரவேற்கத் தக்க விசயமாக மாறும். ஆணின் வயது ஏத்தனையோ அத்தனை பவுணில் தாலிகட்டுதல் அவசியம். அதற்கான செலவு பெண்வீட்டாருடையது. விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் ஆணிடம் இருந்து திரும்பப் தாலியை பெறக் கூடாது. இவ்வாறான விதிகளோடு இவை வரவேற்கப்படும். இந்த ஆரம்பங்கள் எல்லாம் நாளை பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதையாக மாறும். சம உரிமை என்ற பெயரில் பெண்ணையும் பெண் வீட்டாரையும் நெருக்கடிக்குள் தள்ளும். தாலி வரதட்சணை எல்லாம் ஆணாதிக்கத்தின் சுரண்டல். இது அதுக்கு போனஸ் போன்றது.
 20. https://www.cp24.com/news/toronto-man-charged-with-first-degree-murder-after-woman-killed-in-machete-attack-1.4590462 Tharshika Jeganathan, 27, is pictured. (Facebook) Sasikaran Thanapalasingam is pictured in this undated image. (Facebook) விருப்பம் இருந்தா சேர்ந்து வாழலாம் விருப்பம் இல்லாதபோது பிரிந்து செல்லலாம். இரண்டு சிறந்த வழி இருக்கும் போது எதுக்கு உயிரை எடுக்கவேணும் ? குடும்ப வன்முறைகள் உச்சத்தை தொட முன் பிரிந்து செல்வதே சிறந்தவழி ஆனால் இங்கு பிரிந்து செல்ல மு
 21. வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடக்குமுறைக்கு எதிரான கொள்கைகளும் போராட்டங்களும் எந்தெந்த காரணிகளால் ஒடுக்கப்படுகின்றார்களோ அதற்கு எதிராக தோன்றிக்கொண்டே இருக்கின்றது. பெரியாரின் காலத்திற்கு முன்னரான காலத்தில் வருணாசிரம தர்மம் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் என்னுமொரு பரிணாமம் தான் பெரியாரின் முயற்சிகள். இன்று பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வந்த திராவிட அரசியல் கட்சிகள் மிகப்பெரும் சுரண்டலில் ஈடுபட்டு புதியதொரு ஒடுக்குமுறையை செய்யும் போது அதற்கெதிராக போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். விமர்சனங்கள் மாற்றுக் கருத்துக்கள் எழுவது இயல்பு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.