Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,541
 • Joined

 • Last visited

 • Days Won

  33

Everything posted by சண்டமாருதன்

 1. போலித் தேசீய வாதிகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் அவர்கள் போலி என்பதையும் உண்மையான தமிழ்த்தேசீயவாதிகள் யார் என்ன காரணத்தால் அவர்கள் உண்மைத் தமிழ்த்தேசீயவாதிகள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அப்போது மக்கள் உண்மையின் பக்கம் செல்வார்கள். இது உங்கள் கருத்துக்கான எதிர்க் கருத்தல்ல மாறாக இது பிழை என்று வரையறுக்கும் போது சரி எது என்பதையும் முன்வையுங்கள் என்ற வேண்டுகோளேயாகும்.
 2. 2009 ல் முள்ளிவாய்காலில் இனஅழிப்பை தலமை தாங்கி முடித்த ராணுவத்தளபதி சரத்பொன்சேகவுக்கு 2010 தேர்தலில் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த லட்சணத்தில திருமா திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு எதிர்ப்பா ? அதே நேரம் இன அழிப்புக்கு துணைபோன திமுக காங்கிரசுடன் கூட்டணி போடும் திருமாவுக்கு எதிரான கருத்தை கூறும உரிமை சம்மந்தப்பட்டவருக்கு உண்டு. அக்கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாமே தவிர காடையர்கள் சாதியவாதிகள் என்ற முத்திரையை அவர்கள் மீது குத்த முடியாது.
 3. இந்தியாவின் இந்த முயற்சியை தோல்வி என்று கருத எதுவும் இல்லை. ஆனால் இந்தியா பணவிசயத்தில் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு. அடிப்படை வசதிகளற்ற மக்கள் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கும் போது நிலவுக்கு சென்று என்னத்தை புடுங்குவது ? இந்திய வல்லரசு கனவு என்பதே ஒருவர் மீது ஒருவர் ஏறிநின்று காண்பது போன்றது. அடித்தட்டில் உள்ளவன் நசுங்கி சாகவேண்டியதுதான். இந்த முயற்சியும் அப்படியான ஒரு கனவுக்குள் தான் அடங்கும்.
 4. ஆழிக்குமரன் பெயரில் அமைத்தது சிறப்பான விசயம் ஏனெனில் அவர் ஒரு கடின முயற்சியாளர் விளையாட்டுத்துறையில் ஈழத்தில் முயற்சிக்கு அவரே முதன் முன்னுதாரணம். ஆனால் இதை மூன்று கத்திரிக்கோல் போட்டு முண்டியடித்து வெட்டும் முயற்சி ரெம்ப கேவலமா இருக்கு.
 5. என்ன இருந்தாலும் இவ்வாறான ஆடைகள் தடைசெய்யப்படவேண்டும். அதிகமாக பக்திகொண்டவர்கள் தொட்டு கும்பிட்டுவிட்டால் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகமாகிவிடும்.
 6. எல்லாம் மாற்றத்திற்கு உட்படும். அதை நோக்கியே நாம் நகர்கின்றோம். ஒரு சமூகமாக ஒரு மதமாக ஒரு இனமாக ஒரு ஊராக இருக்கும் வரைதான் இவைகள் தொடரும். ஒருவரை ஒருவர் தெரியும் வரைதான் அவரது சாதியும் உயிர்வாழமுடியும். ஏனெனில் அதற்கு பிற அங்க அடயாளம் எதுவும் கிடையாது. வேறு இனங்கள் மதங்களோடு கலந்து பிற மொழிகளை தாய்மொழியாக்கி பிறதேசங்கள் ஊர்களை வாழ்விடமாக்கி நகரும்போது சில தலமுறைகள் கடந்து யார் என்ன சாதி என்பது தெரியாது. இன்று சிங்களவர்களில் கணிசமானவர்கள் ஒருகாலத்தில் தமிழர்களே. அதேபோல் புலம்பெயர் தேசங்களில் கூட தனித்தனி தீவுகளாகி கலைந்து சிதைந்து போகும் போது இந்த சாதீயம் சில தலமுறைகளில் காணாமல் போகும். அதனா
 7. community center and cultural center இரண்டும் ஒன்றா ? தெரிந்தவர்கள் சொல்லவும். கோயில்கள் ஊர்சங்கங்கள் ஊர் ஒன்று கூடல்கள் என்பனவற்றை கடந்து தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சன சமூக நிலையம் வருவது வரவேற்கத்தக்க விசயம். இருந்தும் எமக்கான கலாச்சாரம் எது எமக்கான அடயாளம் எது என்ற குழப்பநிலையில் உள்ள சமூகமாக நாம் இருப்பதாலும் இரவல் காலாச்சாரத்துக்கு சொந்தக்காரராக இருப்பதாலும் இதன் செயற்பாடு எப்படி போகும் என்று தெரியாது. மொழி கற்பித்தல். பாதிக்கப்பட்டோருக்கு வழிகாட்டுதல், என சரியான திசையில் இதை பயன்படுத்துவார்களா இல்லை தவில் கச்சேரியும் பரதநாட்டியமும் ஆடி ஐயரை அழைத்து புரியாத ப
 8. இப்போதைய காலத்தில் மாற்றமும் புதிய தேடல்களும் இருக்கின்றது.. தேங்காய் மாங்காய் வண்டு செண்டு தண்டு என்று கண்ணில் பட்டதில் எல்லாம் பெண்ணையும் காதலையும் காமத்தையும் உணரும் தன்மைகள் மாறிவிட்டது என்பது எனது அபிப்பிராயம். காதலுக்கு ஒரு பாடல் - இது சங்க இலக்கிய குறுந்தொகை கலந்த பாடல் . கீழ் உள்ள விளக்கம் பாடல் காணொளியின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது. இவ்வாறன பாடல்களை கேட்கும் போது சங்க இலக்கியங்கள் நிறைய பாடல்களில் வரவேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.
 9. குறிப்புகளை அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றீர்களா இல்லை அவைகள் மறைந்து போகின்ற போக்கில் போகட்டும் என்று விடப்போகின்றீர்களா என்பது தெரியவில்லை. பிணங்களும் மலங்களும் கலந்த காசி கங்கையில் கங்கையில் எத்தனையோ எஞ்சினீயர் டொக்டர் என்னும் நிறைய உயர் நிலை படித்தவர்கள் தினமும் முழுகி பாவத்தைக் கழுவுகின்றர்கள். அதை புனிதம் என்று அவர்கள் அறிவு சொல்லும். சாதிகள் இல்லை என்ற பாரதியார் வள்ளலார் போன்ற பலர் பின்னாளில் அவரவர் பிறந்த சாதிகளின் அடயாளமாக முன்நிறுத்தப்பட்டனர். சாதிச் சங்கங்களில் அவர்கள் உருவம் பயன்படுத்தப்படுகின்றது தற்போதைய தகவல் தொழில்நுட்பத்திலும் சாதிகளுக்கு தனித்தனி
 10. மேலே உள்ள படத்தை தவிர மேலதிகமாக எங்கே எப்படி நடந்தது என்ற விபரம் இல்லை. இதை மத அடிப்படையில் அணுகுவதும் பொருத்தமில்லை. அவனவன் குலசாமிகள், குல வழக்கங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் என அனைத்து சாமிகளும் இந்து என்றதுக்குள் கொண்டுவருகின்றார்கள். போதாக்குறைக்கு நித்தியானந்தா சாயிபாபா பங்காரு அம்மாபகவான் என ஆயிரத்தெட்டு ஆசாமிகளும் இந்துவுக்குள் வந்துவிடும். இந்தியா என்பது பல நாடுகளை இணைத்த ஒரு நிலப்பரப்பின் பெயர் போல்தான் இந்து மதம் என்பதும். ஈழத்தமிழர்கள் இந்துக்களா இல்லை சைவர்களா எப்படி தம்மை வெளிப்படுத்துவது என்பதில் இன்னும் தெளிவில்லை. சைவர்கள் என்று தம்மை தனித்துவப்படுத்திக்கொண்டால்
 11. மதம் ஒரு ஆயுதம், அதை வைத்து இனத்தை, அரசியலை, வியாபாரத்தை என பலதை கட்டியெழுப்ப முடியும். மதத்தை பத்திசாலித்தனமாக கைளாயத் தெரியாதபோது அவற்றால் அழிவுகள் எற்படும். மிகச் சிறுபான்மை பிராமணர்கள் இந்திய அதிகாரத்தை இன்றுவரை தமது கையில் வைத்திருப்பதற்கு அன்று அவர்கள் மதத்தை புத்திசாலித்தனமாக கையாண்டார்கள். சில தலமுறைக்கு முன்பு மணியாட்டி பூசை செய்தவர்கள் தான் இன்று அரசியல் தலமைகள் நீதிபதிகள் அரச நிர்வாக தலமைகளாக இருக்கின்றார்கள். சிங்களமும் பொளத்த மதத்தை அடிப்படையாக வைத்து தேசீய இனத்தை கட்டியெழுப்பியது. மதம் மட்டுமில்லை மக்கள் சக்தி ஒருமிக்கும் அலகுகள் எல்லாம் சரியான முறையில் துரநோக்கோடு பயன்படுத்தப்
 12. இலங்கை முழுக்க இருந்த ஈச்சரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நல்லுரையும் யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் கலலாச்சார இடங்கள் என்று தமிழர்களின் வரலாற்றையும் வாழ்வையும் தமிழர்களின் தன்னினத்துக்குள் இரைதேடும் ஆதிக்க மனப்பான்மையே சுருக்கியது. ஐக்கியப்பாட்டிற்காக எந்தக்காலத்திலும் முயன்ற சரித்திரம் தமிழர்களிடம் இருந்ததில்லை. போரில் இறந்த ராணுவத்தில் கணிசமானளவு சிங்கள இராணுவத்தினர் முன்னொருகாலத்தில் தமிழர்களே. இன்றை சிங்களமக்களில் கணிசமானளவினர் முன்னர் தமிழர்களே. நீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகளில் இந்தமாற்றங்களை இப்போதும் வெளிப்படையாக காணமுடியும். தமிழர்களின் அழிவு தொன்றுதொட்டு தமிழர்களின் தன்னினத்துக்
 13. மகிழ்ச்சியான நிகழ்வு வாழ்த்துக்கள்.. ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்க!
 14. தலைப்பே மிக அபத்தமானது. ஈழத்தில் இருந்து ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றால் உடனே இனத்தை தூக்கிக்கொண்டு வந்து அடயாளப்படுத்தி உளறிக்கொட்டுவது ? ஈழத்தமிழருக்கு சாதி அவசியமா? மதம் அவசியமா இல்ல பிரதேசவாதம் அவசியமா . புலம் பெயர் நாட்டில ஆளாளுக்கு குத்துப்பட்டு இஸ்டத்துக்கு மாவீரர் தினம் வைக்கிறது அவசியமா என்று இனத்துக்காக கேட்கவேண்டிய நிறைய இருக்கே !! இவங்க யு ரியுப் சனல் என்ன சமுக சேவையா செய்யுது ? இதப் பற்றி காணொளி போட்டு அதிலயும் காசு பாக்கிறது தானே ? காணொளியில் பேசும் போது எதுக்கு மூன்று சொல்லை முப்பது சொல்லாக இழுக்கின்றார்கள் என்று புரியவில்லை விடைகொடு எங்கள் நாடே என்
 15. நீஙகள் சொல்வதற்கும் இங்கே படத்தில் இணைத்திருப்பதற்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட இவ்விடத்தில் மருதங்கேணியர் சொன்னது போல் அழிப்பதற்கென்று காடுகள் எதுவும் இல்லை. ஆற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இருபக்கமும் உள்ள மரம் புதர் புற்படுக்கைகளை அழித்து தமது நிலமாக்கியுள்ளார்கள். 1950 களில் இவ்விடங்கள் நெற்செய்கை நிலங்களாக வழங்கப்பட்டபோதே ஆற்றில் இருந்து கணிசமான தூரம் பாதுகாக்கப்பட்டே வழங்கப்பட்டது. புலிகளின் காலம் வரையில் கூட யாரும் இவற்றை அழித்ததில்லை. நீர்வளத்தை அழித்துவிட்டு எத்தனை காலம் விவசாயம் செய்ய முடியும் !! நெற்செய்கையை பொறுத்தவரைக்கும் தொழில்வாய்பென்று எதுவும் இல்லை. முன்புபோல் நிறைய தொழி
 16. இவைகள் காடுகளை அழிப்பதை விட மோசமான காரியம் ஏனெனில் பாலியாற்றின் இருபக்கமும் நூறு இருநூறு சில இடங்களில் அதற்கும் கூடுதலான மீற்றர்களுக்கு காடுகளும் பற்றைகளும் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாத அளவுக்கு உயிர்ப்புடன் வைத்திருந்தது. இப்போது ஜே சி பி இயந்தித்தை பயன்படுத்தி அனைத்து மரங்களையும் புடுங்கியெறிந்து வயலை ஆற்றின் விழிம்பு வரைக்கும் நீட்டிவிட்டார்கள். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் செய்யவில்லை மாறாக ஆற்றை அண்டி வயல் வைத்திருந்த அனைவரும் காணியை நீட்டிவிட்டார்கள் சிலருக்கு மூன்று ஏக்கர் பத்து ஏக்கராகிவிட்டது சில ருக்கு பதினைந்து ஏக்கராகிவிட்டது. எதிர்காலத்தில் பெரும் வெள்ளங்கள் ஏற்படும் போது
 17. சீமானும் விஜயகாந்தும் முன்னெடுப்பது ஒரே கருத்தியல் இல்லை. நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் சாதிமதத்தை கடந்த இன ஒற்றுமை , திராவிடம் ஆரியம் என்பதை கடந்த தமிழ் இனம் என்ற அடயாம். இந்துதுவாவுக்கு எதிரான சைவம் வீரத்தமிழர் முன்னணி என்ற புதிய அணுகுமுறை. தமிழ் நாட்டை தமிழர் ஆழவேண்டும். தமிழ் நாட்டின் வளங்கள் சுரண்டுவதற்கு எதிரான அரசியல். இதற்கும் விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம் ? நீங்கள் சீமான் தொகுதியில் வெல்வதும் கட்டுப்பணம் இழப்பதும் பற்றியே கவலைப்படுகின்றீர்கள் ஆனால் இந்த கருத்தியல் ஒரு வீதத்தில் இருந்து மேல் நோக்கி வளர்ந்துள்ளது என்பதுதான் முக்கியமானது தவிர தொகுதி வெற்றியும் கட்டுப்பணமும் அல்ல.
 18. ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே. ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்
 19. இவ்வாறான வாட்சப் பதிவை நீங்கள் இங்கு இணைத்து மேற்கோள் காட்டுவதுதான் நம்ப முடியாமல் உள்ளது. புலம்பெயர் தமிழர் வாழ்வாதராத்துக்காக பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்கு கூட பணம் அனுப்ப மறுக்கும் நிலையில் சீமானுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால் அதை நம்புறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு என்றால் இதை எல்லம் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை.
 20. நடமுறைக்கு சாத்தியமற்றபோதும் இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகமுடியுமோ அவ்வாறு அணுக முற்படுகின்றீர்கள். மாற்றம் ஏற்படாத பட்சத்திலும் மனத் திருப்தியாவது கிடைக்கும். மதத்தால் பிழவு படுகின்றபோதும் சரி பிரதேசத்தால் பிழவு படுகின்ற போதும் சரி இனத்தின் அழிவு விரைவுபடுத்தப்படுகின்றது. இவ் அழிவுக்குள் இஸ்லாமியத் தமிழர்களும் அடங்குவர் ஏனைய மத தமிழர்களும் அடங்குவர். இருந்தும் மதத்தை கடந்து செல்ல முடியாத அல்லது மத உணர்வை சரியான முறையில் பயன்படுத்த முடியாத மக்கள் கூட்டத்தின் அழிவு தவிர்க்க முடியாதது. சிங்கள பெரும்பான்மை இனத்திற்க முன் சிறுபான்மை இனம் ஐக்கியப்பட்டு நிற்காமல் சிதைகின்ற போது அது ஆபத்து என்பத
 21. Washington Post special correspondent Kamran Khan contributed to this article. https://www.washingtonpost.com/archive/politics/1994/03/07/cia-falters-in-recovery-of-missiles/73a9a4d7-2952-4077-9746-46bd2e5b81ca/?utm_term=.df05e163b18 மிட்டாய்கள் கொடுப்பது போல் ஏழு குறுப்புகளுக்கு இந்த ஏவுகணைகளை கொடுத்தார்கள் என்பதை அவர்களே பின்னாளில் தெரிவித்துள்ளனர். முஜாகுதீன் அமைப்பு ஒரு தலமையின் கீழ் முழுவதுமாக கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பாக இருந்ததில்லை. இவர்களில் சில பிரிவினரே பின்னர் தலிபான்களாக உருவெடுத்தனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகள். இதை விட ஆப்கானிஸ்த
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.