• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Paranee

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,495
 • Joined

 • Last visited

Community Reputation

24 Neutral

About Paranee

 • Rank
  தமிழ் மகன்
 • Birthday 05/11/1978

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  Norway

Recent Profile Visitors

3,569 profile views
 1. அட 21 வருடம் ஆகிவிட்டதா. 20 வருடங்கள் எனக்கும் யாழிற்குமான உறவு... வாழ்த்துக்கள்.
 2. பட்சி பொய் சொல்லாது. சரி சரி நாங்க கடந்த வருடம் பல சாறிகள் வாங்கினாங்க, ஒன்றுகூட மாற்றவில்லை. அப்படி அவர்கள் செய்தால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துவிடும். ஜெயச்சந்திரன்ல மறந்து விட்டு வந்த சாறியையே எடுத்து வைத்து தந்தவங்க. போத்தீஸ் சென்னை சில்க்ஸ் உலக தரம் வாய்ந்த நிறுவனம். (நேற்றுக்கூட ஒன்லைன்ல போத்தீஸ் சாறி வாங்கியிருந்தனாங்க)
 3. வாழ்த்துக்கள் மறக்காமல் புத்தகத்தை பார்சல் போட்டு வையுங்க.வாற நேரம் வாங்கிறன்
 4. இரண்டுவாரம் முதல் இந்தியாவிலை கண்டதாக பட்சி சொல்லிச்சுது அப்ப கடையிலை போய் நேர கேட்டிருக்கலாமே.
 5. உயிர் மெய்யெழுத்தால் உனை கோர்க்க நினைக்கின்றேன் என் உயிரே கரைகிறது ஓலமிட்டழுகிறது கோர்த்துவைத்த மணிமாலையின் முத்தொன்று தனித்து கழன்று தன்னை தொலைக்கிறது அண்ணா எம்மை மாலையாக்கி மகிழ்ந்தவனே உனை ஓசையின்றி ஔியுமின்றி மறைத்து சென்றதும் ஏனோ வெற்று காகிதம் என்னுள்ளே வெளிச்ச ரேகைகளை விசிறிக்காட்டியவன் நீ வேர்விட விளைநிலம் காட்டினாய் நீர் விட்டு நிதம் நின்றாய் ஊர்விட்டு வந்த எமக்கு உன் எழுத்துக்களால் உயிர் தந்தாய் வெற்றுக்கூடாக்கி விரைந்து எங்கே பறந்தாய் நினைவால் கொல்கின்றாய் நெஞ்சினுள் கனக்கின்றாய் உன்தன் ஆசிக்காய் உயிர்க்கும் எங்கள் எழுத்துக்கள்
 6. யாழ் இணையத்தின் ஆரம்பகால உறுப்பினன் என்ற வகையில் சோழியன் அண்ணா என்ற பெயர் அன்றைய காலங்களில் பலரை ஊக்குவித்த மருந்து என்பதை என்னால் கூறமுடியும். ஒரு சிலரே உலாவிய யாழ் இணையத்தை பலர் கூடி பார்க்க வைத்த அவரின் எழுத்துக்கள் யாராலும் மறக்க முடியாது. எனக்கும் அவரிற்குமான உறவானது துரோணருக்கும் ஏகலைவனுக்குமான உறவு. நேரில் சந்திக்காமலேயே அவரின் எழுத்துக்களால் அவரின் திருத்தங்களால் வளர்ந்தவன் நான். தன் வலைப்பதிவூடாக என்னை விளம்பரப்படுத்தியவர்.
 7. பார்வை புணர்ச்சியில் பட்டாம்பூச்சியின் இறகசைப்பாகியது காதல் கைகோர்க்கும் கனவினில் கால் தேய நடந்தோம் வள்ளுவக்குறளாய் ஈரடி பேசி ஈராயிரம் நொடி கடந்தோம் முதுமையின் அயணத்தில் முழுதாய் பருகிட கனவின் இறக்கைகளை இறக்கிவைத்தோம் காலச்சுழற்சியில் நீ மனைவியாயும் நான் கணவனாயும் வெவ்வேறாய் பிரியாது தவிக்கிறது காதல்
 8. எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா. என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன். வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை. எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. ஆழ்ந்த அனுதாபஙகள் என்றும் உங்கள் ஆசியோடு கரவை பரணீ
 9. அகவைகளால் மட்டுமல்ல தன்னால் வளர்க்கப்பட்ட எழுத்தாளர்களாலும் பெருமை தாங்கி நிற்கும் யாழிற்கு எனது வாழ்த்துக்கள் கிட்டத்தட்ட 14ஆண்டுகள் யாழுடன் இணைந்து இருக்கின்றேன் என்பதைவிட என்னையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது யாழ் என்பதில் பெருமையடைகி்றேன
 10. ரகு உங்கள் காதல் என் காதலாய் இருந்தது ஆச்சரியமாக இருக்கின்றது.♪அதே வயது அதே பிரிவு சற்று வித்தியாசமாய் ஆண்டுகள் கடந்து தம்பதிகளாய் கண்ணுற்று அக்மகிழ்ந்தேன், காலன் கொடியவன் கடந்தமாதம் அவள் மாங்கலயம் பறித்தான், என்னைத்தொலைத்த காதல் தன்னையும் தொலைத்து நின்றது இன்றுவரை வேதனைதான், காதல் வென்றால் அது வாழ்க்கை. தோற்றால் அது காவியம்.
 11. வணக்கம்.. வாழ்த்துக்கள் ....... நான் வளர்ந்த, என்னை என் கவியாற்றலை வளர்த்த yarl.com க்கு.... இன்றுடன் நான் இணையத்தில் தமிழ் எழுத தொடங்கி 12 வருடங்கள் ஓடி விட்டது. ஆம் முதன் முதலாக இணையத்தில் எழுதியது இங்குதான்..கரவை பரணி என்ற பெயரில் எழுதினேன்...
 12. இன்று அதிகாலையிலேயே அனுபவித்து விட்டேன். வேலைக்கு போகும்போது வழுக்கி விழுந்து..
 13. எல்லாரும் ஒருதரம் மனநல வைத்தியரை பார்ப்பது நல்லது. ஆடுகளம் திரைப்படம் பார்த்து பெருமைப்பட்டவன் நான், இன்று இப்படியும் ஈனத் தமிழன் இருக்கின்றான் என்று வெட்கி தலை குனிகின்றேன். மனசாட்சி உள்ள அனைவரும் துளசியின் இந்த கருத்துக்கு வரவேற்புதான் கொடுப்பார்கள்.
 14. பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....