விதுஷா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  98
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About விதுஷா

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday 04/27/2006

Profile Information

 • Gender
  Female
 • Location
  கேளுங்கள் சொல்கின்றேன்
 1. என்னாங்கோ! விபச்சாரி என்ற பதத்தை விட ஆண்மைக்குறைவு என்றது மேலானது புரிஞ்சுதுங்களா? என்ன கேவலமான வார்த்தைப் பிரயோகமா? ஹி..ஹி..
 2. அடி ஆத்தாடி இம்மட்டளவு கேள்வியா? போச்சடா போச்சு, உதுக்கெல்லாம் பதில் எதிர்பார்கிறீர்கள்? __________________________________________________________________________________________- "யாழில் மட்டுமல்ல பிற இடங்களிலும் இந்தக் கவிதை பதியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எவரும் இந்த அளவிற்கு தொப்பி சரியாகப் பொருந்தி வராததால் சூடாகவில்லை. இங்கு பலருக்கு கவிதை வரைந்த தொப்பி அளவாக வந்திருக்கிறது போலும். அதனால் சூடாகி கொதிக்கிறார்கள். அதை தணிக்க வேண்டிய பொறுப்பு கவிதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் சார்ந்திருப்பதாக நான் நினைக்கச் செய்யப்பட்டுள்ளேன்." தொப்பி அளவோ இல்லையோ செருப்பு அளவாக இருக்குமெங்கோ!
 3. என்னாங்கடா! பெண்கள் என்றால் உங்களுக்கு விளையாட்டாப் போய்ச்சா? பிச்சிடுவன் தெரிஞ்சுக்கோங்கோடா. சினிமாவிலை பார்த்தால் பெண்களை கிண்டல் அடிக்கிறது, சினிமா பாடலிலை பெண்களைப்பற்றி கேவலமான வரிகளை புகுத்திறது, கதை கவிதை.இப்படி எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள்...நீங்க உண்மையிலை கவிஞர்களா? கதாசிரியர்களா? உங்களுடைய கற்பனையிலை(மண்டையிலை) பெண்களைத்தவிர வேறொன்றும் வராதா? தெரியாமல் தான் கேட்கிறன் நெடுக்ஸ்! இது உண்மையில் உங்கள் நண்பனுக்கு நடந்த சம்பவமா? அல்லது பெண்களை சீண்டவேணும் என்று நீங்களாகவே எழுதினீர்களா? இந்த ஆண்கள் பொதுவாகவே தங்களிலை (ஆண்மையிலை) குறையை வைத்துக்கொண்டு பெண்களையே குற்றம் சுமத்துவது தான் நடைமுறையாகவே போச்சு. நான் நினைக்கிறேன் இந்த கவிதையிலும் அதுதான் நிகழ்ந்துள்ளது அதாவது இந்த கவிதையின் ஆசிரியருக்கு அல்லது நண்பருக்கு ஏதோ பாரதூரமான பிரச்சினை(அங்கே) அதாவது பெண்களையே வெறுக்கும் அளவுக்கு உள்ளது. அதுதான் தங்களையே மறந்து தேவையற்ற வார்ததைப் பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலையே பெண்களுடன் மோத வேண்டுமானால் நேரடியாகவே கருத்துக்களை வையுங்கள், அதை விட்டிட்டு கோளைகள் மாதிரி நண்பன் சொன்னார், நண்பனுக்கு நடந்தது அப்படி இப்படி என்றெல்லாம் முதுகில் குத்தாதீர்கள்.
 4. நல்ல வாழக்கையுடன் ஒத்த கதை! பாராட்டுக்கள் அன்ரி!
 5. மகிழ்ச்சிகரமான காதலர்தின வாழ்த்துகள்!!!
 6. ஆசான் அண்ணா!!! வாங்கோ, நிறைய எழுதுங்கோ.
 7. ஹாய் ரவிகுலன் அங்கிள்!!! உள்ளுக்கு வாங்கோ, அப்படி அந்த இடத்திலை குந்துங்கோ, நிறைய பேசுவோம்.
 8. அன்புக்குரிய அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் ஒரு கும்புடு போடுறேனங்க! இந்தப்பகுதி என்னுடைய அறிவுக்கும், வயதுக்கும்(நான் ஒரு சின்னப்பிள்ளை) கொஞ்சம் அதிகம் தான் இருப்பினும் உந்த துன்பங்களிலை நானும் அனுபவித்தவள் என்ற ரீதியில் சில கருத்தை சொல்ல விரும்புகிறேனெங்கோ. தாயக மக்களின் அவலம் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதினால் அவர்கள் மத்தியில் விடுதலைப்போராட்டம் பற்றிய தற்போதைய நிலைப்பாடு. உப்பிடித்தான் உந்த யாழ்ப்பாணம் போனவுடனே எல்லாரும் துள்ளிக்குதித்தவை புலிகள் கதை முடிஞ்சுது, யாழ்ப்பாண மக்களை போட்டு துவைக்கலாம் என்று. நேற்றும் ஒரு சங்கதி கேள்விப்பட்டேன் பாருங்கோ, தீவுப்பகுதி மக்களையெல்லாம் டக்களஸ் ஜயா ஏதோ வெருட்டிப்பார்த்தாராம். உதெல்லாம் எமது மக்களைப்பொறுத்தவரை அவியாது பாருங்கோ. இத்தனை வருஷமாக அந்த யாழ்ப்பாண மக்கள் திறந்த சிறைச்சாலையில் வாழ்ந்தாலும் விடுதலையுணர்வு குறைஞ்சிதோ என்றால் இன்னும் அதிகரிச்சிருக்கென்று தான் சொல்லலாம் பாருங்கோ. மற்றதாக நீங்கள் குறிப்பிட்ட கிளிநோச்சி மக்களைப் பார்த்தீங்களோ எல்லாரும் தங்கடை பிள்ளையளுக்குப் பின்னாலையே போயிட்டினமாம். இதிலையிருந்தே அவர்களுடைய உணர்வை புரியவில்லையோ? இதற்கு முன்பு கிழக்குமாகானத்திலை என்னாச்சு? இன்றும் மக்களைப்போட்டு சித்திரவதை செய்கிறாங்க ஏன்? அங்குள்ள மக்கள் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிக்கிறார்கள் அதுதான் உண்மையெங்க. விடுதலைப்புலிகளின் இந்த தொடர்ச்சியான பின்வாங்கல்கள் காரனமாக புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன அதிர்வுகள். உங்கள் சந்தேகத்திலை கொஞ்சம் உண்மை இருக்கலாம் பாருங்கோ, அதுக்காக அவர்களின்ரை செயல்பாட்டிலை தளர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. விடுதலைப்புலிகளின்ரை உந்த பின்நகர்விலை மக்களிற்கு பெரிய ஒரு எதிர்பார்ப்பு மட்டும் இருக்கெங்கோ அவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் சொல்லமுடியும். மக்களெல்லாம் இப்போ நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை பாருங்கோ, அவங்க நல்லா உசாராகியிட்டாங்க. இப்படித்தான் பாருங்கோ உந்த கிளிநோச்சி வெற்றியை கனடாவிலையும் கொண்டாடினவையாம்; அவையின்ரை நோக்கம் வெற்றியை கொண்டாடுவதில்லை பாருங்கோ, அதாவது இங்குள்ள இளைஞரை தூண்டிவிட்டு அதனால் வரும் விபரீதங்களையெல்லாம் விடுதலைப்புலிகள் தலையில் போடத்தான் திட்டமிட்டவையாம்; ஆனால் நடந்ததோ எல்லாம் தலைகீழாகத்தான் பாருங்கோ. இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் தேசியத்தலைவரின் நோக்கம் புரிந்து செயல்படுவதினால் இவர்களின் திட்டத்தை முறியடித்து விட்டார்கள். பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு நேசக்கரத்தினூடாக உதவிகள் வழங்கலாம். பலர் வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு முதல் படி தான் என்றாலும் மிக அத்தியாவசியமானதாகவே எனக்கு தென்படுகிறது. எங்களை விட யார் தான் உதவி செய்யப்போகிறார்கள் எங்களுடைய நோக்கமெல்லாம் தேசியம் நோக்கியதாக இருக்கவேண்டுமே ஒழிய சுயவிளம்பரத்திலை இருக்கக்கூடாது பாருங்கோ. அவனவன் தங்களுக்கேற்ற முறையில், தங்களது வசதிக்குத் தக்கமாதிரித்தான் பங்களிக்க விரும்புவார்கள், அதற்காக இந்த அமைப்பு மூலமாக அல்லது என் மூலமாக உதவி செய் என்று யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது பாருங்கோ. முதலாவதாக இந்த நிதி சேகரிப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம், இதிலைதான் எனது குழப்பமே ஆரம்பிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலை எமது மக்களிற்காக இரண்டுவிதமாக நிதி சேகரிக்கிறார்கள், ஒன்று போராட்டத்திற்காக, இரண்டாவதாக போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இதில் இரண்டிற்கும் பங்களிப்பு செய்யுமளவிற்கு பெரும்பான்மையினருக்கு வசதியிருக்காது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அப்படியிருக்கும்போது எனது பங்களிப்பு போராட்டத்திற்குதான், ஏனெனில் எங்களிற்கென்றோரு நாடு கிடைத்திட்டால், மக்களின் இன்னல்கள் நிரந்திரமாகவே தீர்ந்துவிடுமல்லவா? மிகுதி நாளை தொடருகின்றேன்.
 9. போராட்டத்தின் வெற்றியின் ஆரம்பம் தான் இந்த கிளிநோச்சியின் விட்டுக்கொடுப்பு. உங்கள் கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்!
 10. என்னவிருந்தாலும் முரளிமாமாவுடன் சேர்ந்து பாடும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டிட்டன்; உங்களது இந்த பதிவு, ஒன்றுகூடலிலை, நேரை வந்தமாதிரி ஒரு உணர்வைக்கொடுக்கின்றது. பாராட்டுக்கள் முரளிமாமா! தங்கையும் நல்லாத்தான் பாடி கலக்கியிருக்கா போலை, சகாராக்கா நீங்க என்ன பாட்டுப்பாடீனீங்க?
 11. 2008ஜ நினைத்தாலே ஈழமக்களின் துன்பங்களும், சோதனைகளும் தான் கண்முன் தோன்றுகின்றன. ஒருபுறம் ரானுவத்தின் கெடுபிடி, மறுபுறம் ஒட்டுக்குழு என்றழைக்கப்படும் காட்டுமிராண்டிகளின் அட்டகாசம், இதைவிட இயற்கையின் சீற்றம் இப்படி எத்தனை வேதனைகளின் மத்தியில் அவர்களது வாழ்க்கை. அடுத்ததாக மகிழ்ச்சியான விடயமாக, எத்தனை எதிர்ப்புக்கள் மத்தியில் வெற்றியுடன் நடந்தேறிய கனடிய நண்பர் வட்டத்தின் ஒன்றுகூடல் 2008ல் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. என்னனைப்பற்றி என்ன சொல்ல? நான் ஒரு சின்னப் பெண்ணாச்சே1
 12. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !