Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7216
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.
  2. காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பையா !
  4. தமிழினத்தின் இணையில்லா மாவீரரின் பிறந்த நாளை நினைவு கூருகிறோம்.
  5. வாழ்த்துகள் ! சப்பாத்து அணியாமலே அவர் பயிற்சி செய்திருப்பார். அதன்படியே சப்பாத்து இல்லாமல் போட்டியிலும் கலந்து கொள்வது அவருக்கு வசதியாக இருந்திருக்கும். 1500 மீற்றரில் முதலாவதாக வந்துள்ளார். 5000 மீற்றரை விட இதுவே கடினமானது, வேக ஓட்டம். ஒருவேளை 5000 மீற்றர் ஒரே நாளில் அல்லது ஒரு நாள் இடைவெளியில் இடம்பெற்றிருக்கலாம். சரியான ஓய்வு இல்லாததால் நான்காம் இடம் கிடைத்துள்ளது.
  6. சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
  7. போலிஸ் அல்ல ரவுடி. ஒவ்வொரு கடவுளும் தாம்தான் பெரியவர் உண்மையானவர் என்றே கூறுகின்றனர். கும்பிடுபவனுக்குச் சொர்க்கம், கும்பிடாதவனுக்கு நரகத்தில் சித்திரவதை. சில மதங்கள் இன்னும் மேலே சென்று அந்த மதத்தைப் பின்பற்றாதவர் எல்லோருக்கும் நரகம் என்கிறது.
  8. இன்று உலகில் நடக்கும் மனித அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணம் மதம். மதத்தைப் புறக்கணிக்கும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் மனித ஒழுக்கமும் அதிகமாக உள்ளது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம். இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.
  9. உண்மை. ஒரே மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இரு பிரிவினர் எவ்வளவு கலத்துக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பகைத்துக் கொண்டே இருப்பது ? இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பகை நாடுகள் நட்பு நாடுகளாகி வளர்ந்துள்ளன. அணுகுண்டுகள் மூலம் அழிக்கப்பட்ட நாடு அதன் எதிரியுடன் நிரந்தரப் பகைமையைப் பேணவில்லை. வேற்றுமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இரு பிரிவினருக்கும் முரண்பாடுகள் தொடர்ந்து இருக்கும். சமயம், கலாச்சாரம் வேறுபட்டது. இந்த வேறுபாடுகளுடன் பொதுவான இணக்கப்பாடுகளை இனம்காண்பதுதான் புத்திசாலித்தனம். இதற்கு ஒரு உதாரணம்தான் மேலுள்ள செய்தி. தமிழர்களிடம் மதம் சார்ந்த ஆதரவு எதிர் நிலைப்பாடுகள் இல்லை என்பதை வலியுறுத்தியது.
  10. தகுந்த தருணத்தில் தமிழர் சார்பாக வழங்கப்பட்ட சாணக்கியனின் கருத்து சரியானது. இக் கருத்து தமிழர் அழிந்தபோது மகிழ்ச்சி அடைந்த அனைத்துத் தரப்பினரையும் நோக்கியது மட்டுமல்லாது தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் வழியமைக்கும்.
  11. யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  12. பலர் அவசரப்பட்டு அறிக்கை விட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். வீடியோக்கள் படங்கள் அனைத்தும் இது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வாகவே காண்பிக்கின்றன. இதுதான் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடமாம். 30 மீற்றர் விட்டமுள்ள வாகனத் தரிப்பிடத்தில் எவ்வாறு ஆயிரம் பேர் நிற்க முடியும் ? இதன் தரை வெறும் மண்ணின்மேல் செங்கல் அடுக்கப்படதாகும். வெடித்த இடத்திலிருந்து சில கற்கள் மாத்திரமே தூக்கி எறியப்பட்டு சிறு குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏவுகளையோ வானிலிருந்து வீசப்பட்ட குண்டோ அது விழுந்த இடத்தில் பாரிய சேதத்தை உண்டாக்கும். அருகிலுள்ள வாகனங்கள் தீயினாலேயே சேதமாயுள்ளன. எரியாத வாகனங்களின் கண்ணாடிகள் கூட முற்றாக உடையவில்லை. அருகிலுள்ள கட்டடத்தின் பணிவான கூரை ஓடுகள் அப்படியே உள்ளன. தகரக் கொட்டகை சேதமடையவில்ல... பலஸ்தீனியர்களின் எறிகணை தவறுதலாக இங்கு விழுந்து வெடித்துள்ளது என்பதே பொருத்தமானது. இதை வைத்து பலஸ்தீன் நல்லதொரு பரப்புரை போரில் வென்றுள்ளது. இதற்காக இஸ்ரேலியர்கள் அச்சாப்பிள்ளை என்று அர்த்தமல்ல.
  13. எலன் மஸ்கின் Tesla நிறுவனத்தின் நிதி அறிக்கை இன்று வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இந் நிறுவனம் பாரிய சரிவைச் சந்தித்தது. இன்று 70 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகக் கூறம்படுகிறது.
  14. இந்த நூல் பற்றி யாருக்காவது தெரியுமா ? இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் மதங்கள். புத்த மதம் உட்பட எல்லா மதங்களும் அரசியலிலிருந்து ஒதுங்கினால் நாடு உருப்படும்.
  15. ஏற்கனவே முட்டையை மாற்றிவிட்டார்களாம். எப்படி ? இதே மாதிரி கோழியையும் சைவமாக மாற்றினால் நல்லது.
  16. மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா. எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.
  17. 4 நாட்களுக்கு இலங்கைச் சிறுமி ஒருவர் பற்றிய ஒரு செய்தி பரவலாகப் பேசப்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து வந்த இச் சிறுமி குறுகிய காலத்தில் பிரெஞ்சு படித்துப் பிரெஞ்சுப் பாடத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் பிரெஞ்சு மக்களுடன் ஒன்றிப் பழகி விலங்குப் பாதுகாப்புத் தொடர்பான அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குகிறார். அண்மையில் இவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு கடிதம் அனுப்பியது. இவர் பிரான்சில் தொடர்ந்து வாழத் தகுதியானவர் என்று பிரெஞ்சு மக்களிடமிருந்து ஆதரவு கிழம்பியுள்ளது. செய்திகளில் பின்னூட்டங்களை வாசித்தபோது பிரெஞ்சு மக்களிடம் இவருக்கு எந்த அளவு ஆதரவு உள்ளதோ அதே அளவு. எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. அதில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார். 2009 இலேயே இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் இவர் போன்றவர்கள் உல்லாசப்பயண விசாவில் இங்கு வந்து இங்குள்ள எல்லா வசதிகளையும் அனுபவித்து பிரஜாவுரிமையையும் பெற்று இலங்கைக்கு உல்லாசப்பயணம் சென்று வருகிறார்கள். அரசின் முடிவை மதித்து இவர் இலங்கைக்குத் திரும்புவதே சிறந்தது. இதை எழுதியவரின் பார்வையில் மக்கள் எங்கு தமக்கேற்ற வசதிகள் உள்ளனவோ அங்கு நோக்கியே நகர்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் ஓய்வூதியம் ஒரு அடித்தளமே, இதை வைத்து வசதியாக வாழ முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒருவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருக்கும். உழைக்கும் காலத்தில் திட்டமிட்டு பிற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருப்பதே நல்லது.
  18. புனைவுக் கதைகள் மூலம் கடவுளை நிறுவ வேண்டிய வழக்கமான நிலையிலுள்ள ஆன்மீகச் சிந்தனையும் பகுத்தறிவின் உண்மைத் தேடலையும் இந்தத் திரி விளக்கி நிற்கிறது. இந்தியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட 80 லட்சம் சிறுவர்கள் வருத்தி வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இறக்கிறார்கள். இவையெல்லாம் பிள்ளையாரின் செயல் இல்லை. லட்சத்தில் ஒரு சிறுவன் எதோற்சையாகத் தப்பிப் பிழைத்தால் கடவுள் உரிமை கோருகிறார். உலகம் முழுவதும் கடவுளின் சக்தி இப்படித்தான் அளவிடப்படுகிறது.
  19. மூட்டைப்பூச்சி தொல்லை பாராளுமன்ற வாக்குவாதம் வரை சென்றுள்ளது. இன்று காலையில் மகள் படிக்கும் பாடசாலையில் மூட்டைப் பூச்சி ஒன்றைக் கண்டுபிடித்ததால் அந்த வகுப்பறையை மூடி மூட்டைப்பூச்சி வல்லுனர்களை வரவழைத்துள்ளதாக ஈமெயில் வந்துள்ளது. எங்கள் வீட்டுக்கு இன்னும் வரவில்லை. வந்தால் சுமே அக்காவிடம் ஆலோசனை கேட்க இருக்கிறேன்.
  20. ஓணாண்டி, நீங்கள் சொல்வது சரி. நீங்கள் ஓய்வூதியம் எடுப்பவராக இருந்தாலும் இதுதான் நிலமை. ஒருவர் ஆயுள் முழுவதும் சாதாரண வேலை செய்து 1200 எடுப்பார். இன்னொருவர் வேலையே செய்யாமல் 900€ வும் எடுத்து இலவச சலுகைகளையும் எடுப்பார். இந்த அரச உதவி, ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் எங்கிருந்து வருகின்றன ? பிரான்சில் ஒருவர் வேலை செய்து அவர் செலுத்தும் வரிகளூடாகவே இவை இன்னொருவருக்குப் போய்ச் சேருகின்றன. ஒருவரின் ஓய்வூதியத்திற்கு தற்சமையம் 3 பேர் வேலை செய்து கட்டும் வரி தேவைப்படுகிறது. உங்கள் சமன்பாடு தவறென்று சொல்லவில்லை. நீங்கள் தவறென்று சுட்டிக் காட்டிய சமன்பாட்டிலும் ஏதோ உள்ளபடியால்தானே வேறு பலரும் அதனைப் பின்ன்பற்றுகிறார்கள். தவிர உங்கள் சமன்பாட்டினைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரமும் சிதைந்துவிடும் அல்லவா.
  21. பிரபா சிதம்பரநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'P.S.பிரபா' என மாற்றப்பட்டுள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.