Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7216
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல். மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.
  2. சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ? தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂
  3. பையன், எனது கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதிய பதிலிலிருந்து நீங்கள் இக் காணொளியைச் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. சீமான் ஏற்கனவே பத்திரிகையாளர்களைக் காக்க வைத்து போலீஸ் நிலையத்துக்கு வருவதாகக் கூறி இரண்டு தடவை வரவில்லை. 18 ஆம் திகதியும் வந்திருப்பார் என்று எந்த நிச்சயமும் இல்லை.
  4. இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை. - சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார். - வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார் - விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்). - இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார் - விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.
  5. இல்லை. யாழ்ப்பாணம் போன்ற நெருக்கமான இடங்களைத் தவிர்த்து எமது குடியிருப்புகளை பரவல் படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் எழுதியது.
  6. 2000 ஆண்ட்டுப் பகுதி என்று நினைக்கிறேன். அம்பாறையின் தெற்குப் பகுதிக் கிராமங்கள் இராணுவ வசமாகிக் கொண்டிருந்தது. அப்போது திருக்கோவில் பகுதியில் தமிழர் ஒருவர் என்ன நடந்தாலும் தான் தனது வீட்டையும் காணியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். புலிகளின் ஆதரவாளரான அவர் அதுவே தமிழீழத்தின் கடைசி எல்லை என்று பிடிவாதமாக இருந்ததாகக் கேள்விப் பட்டேன். சில ஆண்டுகளின் பின்னர் அவர் பிள்ளையான்/கருணா குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிந்தேன். அவரது பெயர் ஞாபகம் இல்லை. இப்போது முன்பிருந்த அளவு உயிர் அச்சுறுத்தல் இல்லை. வசதியானவர்கள் வன்னிப் பகுதியில் பரவலாகக் குடியேறி நிலங்களைத் தக்கவைப்பதே நாம் இப்போது செய்யக்கூடியது.
  7. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல்கள். 15 வருடங்களுக்கு முன்னர் மராக்கேச்சின் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். இங்கு அதிகமான வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை. விரைவில் மீளமைத்துக் கொள்ளலாம்.
  8. இந்தத் தடவையும் சீமான் தன்னைப் பல ஆண்டுகளாக அவமானப்படுத்தி வரும் விஜயலட்சுமியுடன் எந்த ஒரு சமரசத்துக்கும் போகாமல் வழக்கில் எதிர்த்து வெல்ல வேண்டும். அத்துடன் விஜயலட்சுமியால் ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காக அவர்மீது மானநட்ட வழக்குத் தொடர்ந்து எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும். 😎
  9. இவ்வாறான நிகழ்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒரு படம்கூட எடுக்க முடியாமலா செய்தி எழுதுகிறார்கள் ?
  10. ஜஸ்ரின் சொன்னதுபோல் சமாந்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். நாளை நான் இலங்கையில் குடியேற முயன்றால் என்னை அங்கு தக்கவைக்கவும் பாதுகாக்கவும் எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் போவது எனது தனிப்பட்ட பொருளாதாரப் பலம் மட்டுமே. ஒவ்வொரு கல்லாக நகர்த்துவோம்.
  11. ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?
  12. இத் திரியில் உள்ள செய்திகளின் படி இரண்டு விதமாக பௌத்த ஆக்கிரமிப்பை முன்னெடுத்துள்ளனர். முதலாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சட்ட ரீதியாக உரிமை கொண்டாட முயல்கிறார்கள். இதனைச் சட்ட ரீரியாகவே முறியடிக்க வேண்டியது தமிழர் தரப்பு நிர்வாக/அரசியல் வாதிகளின் கடமை. இதன் மூலம் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பினை முளையிலேயே கிள்ள முடியும். இரண்டாவது புத்தர் சிலை வைத்தல். இது பிக்குகளுக்கு சட்டங்களுக்கு மேலான உரிமை உண்டு என்ற இறுமாப்பில் செய்யும் அராஜகம். இலங்கை அரசியல் அமைப்பில் இந்த அதியுயர் உரிமை பிக்குகளுக்கு இருக்கலாம். சட்டங்களில் எங்காவது இது உள்ளதா ? ஒவ்வொரு சட்ட வரைபுகளிலும் பிக்குகளுக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதா ? இதனையும் சட்ட ரீதியாக அணுகினால் பிக்குகளை வெளியேற்ற அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அதே காவல்துறையை நிர்ப்பந்திக்கலாம் அல்லவா ?
  13. உறுதிப்படுத்தப் படாத செய்தி. கிரிமியா பாலம் உள்ள பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பாரிய வெடிச்சத்தமும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  14. மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் அரை மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
  15. மருத்துவ விநியோகப் பிரிவில் ஏற்கனவே இன்சுலின் தீர்ந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://english.newsfirst.lk/2023/8/4/sri-lanka-running-low-on-insulin முற்றாகத் தீர்ந்திராது என்று நினைக்கிறேன்.
  16. பொது வெளியில் மதம் புகுந்தால் பிரச்சனைகளையே உருவாக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம். அரசியல் கல்வி மற்றும் ஏனைய பொதுக் கட்டுமானங்களிலிருந்து மதம் ஒதுக்கப்படும் வரை இலங்கைக்கு விமோசனம் கிடையாது. இலங்கை மட்டுமல்ல உலகின் எல்லா நடுகளுக்கும் இது பொருந்தும். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் போன்று மத அடையாளங்களையோ கருத்துக்களையோ பொது வெளியில் தடை செய்யப்பட வேண்டும். தனியார் கத்தோலிக்க பாடசலைகளில்கூட மதக் கல்வியையும் பிரார்த்தனைகளையும் மதத்தை ஏற்காதவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுக்கியே வைத்துள்ளனர். அவரவர் தங்கள் மதங்களைப் பாதுகாப்பதுதான் முக்கிய கருமமாகக் கருதும்வரை வேறு எதிலும் முன்னேற்றம் ஏற்படாது.
  17. சிறந்த முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் ஜஸ்ரின். நன்றி.
  18. பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் வரும் வெள்ளி அன்று இலங்கை வருகிறார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இருநாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எதிர்கொள்ளும் பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் பற்றி இலங்கை அதிபருடன் கலந்துரையாடப்படும் எனறும் தெரிவிக்கப்படுகிறது. https://www.francetvinfo.fr/politique/emmanuel-macron/info-franceinfo-emmanuel-macron-se-rendra-au-sri-lanka-pour-une-visite-historique_5973293.html
  19. உங்கள் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து சிங்கத்தையும் தவறாக எடை போட்டுள்ளீர்கள்.
  20. உங்கள் முயற்சிக்கும் ஆக்கத்துக்கும் நன்றி நன்னிச்சோழன்.
  21. மூவாயிரம் மில்லியன் என்பதை 3 பில்லியன் என்று சொல்லலாம். 🙂 அண்ணளவாக 9 மில்லியன் டொலர்கள்.
  22. இன்று தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய அந்தத் தமிழர்கள் யார் ? சர்வதேசத்தை நாட வேண்டாம் என்று கூறும் ஐயாத்துரை, தமிழ்க் கட்சிகள் 13 இனைப் பெற்றுத் தருவதற்கு இந்தியாவை வேண்டி கடிதம் கொடுத்ததை வரவேற்றுள்ளதையும் கவனியுங்கள்.
  23. தற்காலிகமாக Update செய்துள்ளேன். எதனால் பிழை என்று பார்க்க வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.