இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Content Count

  5,621
 • Joined

 • Last visited

 • Days Won

  14

இணையவன் last won the day on May 25 2018

இணையவன் had the most liked content!

Community Reputation

787 பிரகாசம்

About இணையவன்

 • Rank
  மட்டுறுத்துநர்
 • Birthday 03/19/1970

Profile Information

 • Gender
  Male
 • Location
  பிரான்ஸ்

Recent Profile Visitors

5,493 profile views
 1. இந்தப் படம் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்பாகவே வெளிவந்த படம். செய்தியில் குறிப்பிட்டது போன்று இராணுவத்தால் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்குமானால் இவ்வாறான ஆதாரங்கள் மீண்டும் வெளிவருவது வரவேற்கத்தக்கது.
 2. Omega-3 முட்டைப் பொரியல் - - - - - சிறுவயதில் சனி ஞாயிறு நாட்களில் வீட்டு வளவில் காவிளாய்ச் செடிகளுக்குக் கீழ் சருகுகளிலும் மரங்களின்கீழ் நிழலான ஒதுக்குப் புறங்களிலும் எமது கோழிகள் இட்ட முட்டைகளைத் தேடி ரோந்து போவது வழக்கம். ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் சிக்கினால் மட்டுமே வீட்டாருக்குப் போய்ச் சேரும். எப்படியும் ஒரு முட்டையாவது சிக்கும். அதனை ஊசி ஒன்றினால் ஓட்டை போட்டு அப்படியே பச்சையாக உறிஞ்சிக் குடித்த சுவை இன்னும் மறக்கவில்லை. முட்டை எந்த வடிவில் தயார் செய்தாலும் அதன் இயற்கையான சுவை மாறாமல் இருக்க வேண்டும். தேவையான பொருட்கள் 3 நாட்டுக்கோழி முட்டை (Bio - organic முட்டையாக இருந்தால் நல்லது ) 1 காளான் 1 வெங்காயம் உப்பு மிளகுதூள் மஞ்சள் rapeseed oil - organic (colza) - இல்லாதவர்கள் ஒவிவ் எண்ணையைப் பாவிக்கலாம் செய்முறை வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். காளானின் தோலை உரித்து மெல்லியதாகக் குறுக்காக வெட்டிக் கொள்ளுங்கள். உணவு ஒட்டாத தாய்ச்சியில் அல்லது மண் சட்டியில் எண்ணை விடாமல் காளான் துண்டுகளை மெல்லிய நெருப்பில் வேக விடுங்கள். வேக ஆரம்பித்ததும் அதிலிருந்து நீர் வெளியேறும். அந்த நீரிலேயே காளான் அவியும். விரும்பினால் சிறிதளவு உப்புத் தூவிக் கொள்ளலாம். வெங்காயத் துண்டுகளைக் காளானுடன் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாசத்துக்கு சீரகம் அல்லது ஏதாவது தூவிக் கொள்ளலாம். தாச்சியில் 3 முட்டைகளையும் உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மெதுவாக ஊற்றுங்கள். மெல்லிய நெருப்பில் 1 நிமிடம் வேகியதும் மஞ்சள் கருவை மெதுவாக உடைத்துவிட்டு காளைனையும் வெங்காயத்தையும் அதன்மேல் போட்டு தேவையான அளவு உப்பைத் தூவிக் கொள்ளுங்கள். அதிகம் வேக விடாமல் அரை அவியல் பதமாக ஒரு கோப்பையில் இறக்கி சில வினாடிகள் ஆற விடுங்கள். இப்போது மிளகு தூளையும் மஞ்சளையும் தூவி, 1 அல்லது 2 மேசைக் கரண்டி rapeseed எண்ணையை அதன்மேல் தெளித்து உண்ணவும். ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான்.
 3. உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒன்று, இரசாயன மருந்துகளால் பூச்சி புழுக்கள் இசைவாக்கம் அடைந்து இரசாயனங்களை எதிர்க்கும் ஆற்றல் பெற அவற்றை வெல்ல மெம்மேலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டி வரும். பூச்சி புழுக்களை விடக் கிருமிகளால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதே கடினம். இயற்கையில் கிடைக்கும் சாதாரணமான ஒரு பொருள் அல்லது வேறு பூச்சிகள் இந்தப் புழுக்களுக்கு எதிராக அமையலாம். முதலில் அவற்றைக் கண்டறிய முற்பட வேண்டும். அடுத்து, இரசாயனம் இல்லாமல் இயற்கை விவசாயத்தால் உலகிற்குச் சோறுபோட முடியாது என்பது தவறான கருத்து. இது பற்றி விளக்குவது கடினமானது. உண்மை என்னவென்றால் இரசாயனத்தால் இயற்கைத் தன்மையை (ecosystem) அழித்து விட்டோம். அதனை மீளப் பெற பல ஆண்டுகள் ஆகும். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஐரோப்பாவில் இரசாயனங்கங்களை அதிகம் பாவிக்கும் நாடுகளில் பிரான்சும் முன்னணியில் உள்ளது. சென்ற வருடமும் மருந்துகள் மூலம் பயிர்களின் நேய்களையும் பூச்சிகளையும் வென்றார்கள். ஆனால் அறுவடை குறைய ஆரம்பித்தது இருந்தது. இதற்கான காரணம் பூச்சிகளோடு தேனீக்களும் பெருமளவில் அழிந்ததுதான்.
 4. லண்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் விசா இல்லாத தமிழர்களைத் தமிழர்கள் அடிமைகள் போல் நடத்துகின்றனர். பெரியவரைப் பேச விடவில்லை. வீடியொவை ஏன் பொதுவெளியில் வெளியிட வேண்டும் ?
 5. திரு பாலகிருஷ்ணன் அவர்களின் அருமையான பேச்சு அருமையானது. மத்திய அரசு மட்டுமல்ல பொதுமக்களும் இதற்குப் பொறுப்பானவர்கள். நாம் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது. அதற்கான ஆர்வம் மக்களிடமிருந்து வர வேண்டும். பொய்யான கதைகளிலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கியிருக்கும் சமுதாயம் எந்த ஒரு விடயத்தையும் ஆய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.
 6. கட்டுரையில் குறிப்பிட்ட நேர்கோடு இதுதானா ? 79 இற்கும் 80 இற்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட 80 கிலோமீற்றர்கள். இந்த 3 தலங்களும் கிட்டத்தட்ட நேர்கோடுதான்.
 7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலைஞன்.
 8. ஆம். அண்ட வெளியில் என்னாமே அசையாமல் இருந்திருந்தால் மியாவ் சொன்ன கணக்குச் சரி. ஆனால் அண்ட வெளி பரந்து செல்லும் தற்போதைய வேகம் ஒளியின் வேகத்தை அண்டியதாக உள்ளது. ரேடியோ அலைகள் ஏறத்தாளா ஒளியின் வேகத்தை உடையவை. ரேடியோ அலைகளை உருவாக்கிய கிரகத்திலிருந்து பூமி எதிர்த் திசையில் பயணிப்பதாக எடுத்துக் கொண்டால் இந்த அலைகள் வெளிப்பட்டபோது அக் கிரகம் பூமிக்கு அருகில் இருந்திருக்க முடியும்.
 9. தலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது.
 10. விசுகு அண்ணா, எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன். இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி. இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
 11. வாழ்த்துகள் தமிழ்சிறி. வளமான கல்விச் செல்வம் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க உறுதுணையாக இருந்த நீங்கள் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளும் வாழ்வில் முக்கியமான ஒரு படியைத் தாண்டியுள்ளீர்கள். நீண்ட தேடல்களின் பின்னர் நேற்றுத்தான் எனது மூத்த மகளுக்கு எந்தத் துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவுகளை அவளுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். செல்லவேண்டிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதாக உணர முடிகிறது.
 12. புவி வெப்பமடைதலால் முதலாவதாகப் பாதிக்கப்படப் போகும் நாடு மாலைதீவு. 3 மீற்றர் கடல் நீர் உயர்ந்தால் 80 வீதமான நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும். இலங்கையும் குறிப்பாக யாழ்ப்பாணமும் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இதுவரை உலகில் வெளியிடப்படும் வெப்பத்தில் பெரும் பகுதியைக் கடலும் பனி மலைகளும் உள்வாங்குகின்றன. இவை எல்லை மீறும்போது மோசமான வேறு விளைவுகள் உண்டாகும்.
 13. வெண்பொங்கலுக்குப் பச்சை மிளகாய்ச் சம்பல் போல் எது வும் வராது.
 14. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
 15. சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.