Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7383
  • Joined

  • Days Won

    24

இணையவன் last won the day on July 2 2023

இணையவன் had the most liked content!

About இணையவன்

  • Birthday 03/19/1970

Profile Information

  • Gender
    Male
  • Location
    பிரான்ஸ்

Recent Profile Visitors

13195 profile views

இணையவன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

2.4k

Reputation

  1. ஒரு தடவை தமிழ் கடை ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகப் போயிருந்தேன். சரியாக வெட்டி முடிந்ததும் முடி வெட்டியவர் திடீரென என் தலையை இரு கைகளாலும் பிடித்து இடது வலது பக்கமாக மாறி மாறித் திருகினார். என்ன நடக்கிறது என்று சுதாகரிக்க முன் பின்னாலிருந்து முழங்கையை மடக்கிக் கழுத்தை நெரித்து மேலே இரண்டு தடவை தூக்கி கழுத்தில் நெட்டி முறித்தார். அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் எடுத்தது. மசாஜ் செய்தவராம். இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.
  2. இவர் சொல்வது முழுவதும் சரியான விளக்கம் கிடையாது. குறிப்பாகப் பனைமர வேர் ஆழமாகச் செல்வது நீரை ஆழத்துக்குக் கொண்டு செல்வதற்கல்ல. மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காகவே. வறண்ட நிலத்தில் பனை வேர் அதிக ஆழமாகவும் நீர்ப் பிடிப்பான நிலத்தில் ஆழம் குறைவாகவும் இருக்கும்.
  3. சிங்கள அடக்குமுறை பிடிக்காவிட்டால் எங்களைப்போல் நாட்டை விட்டு வெளியேறாமல் போராடப் போனது தவறுதான். எப்படியிருந்தாலும் சிங்களவரின் கொள்கைகளை விரும்பும் தமிழரும் இருக்கிறார்கள் தானே. அதுமட்டுமல்ல, வெளிநாடு வந்தபின் இங்குள்ள அகதிகளை விரும்பாத இனத்துவேசக் கட்சிகளை ஆதரிப்போம்.😂
  4. பனை அபிவிருத்தி பற்றிப் பல காலமாக மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். சிறுவனாக இருந்தபோது மில்க் வைற் நிறுவன உரிமையாளர் பாடசாலையில் வழங்கிய பனங்கொட்டைகளைப் பெற்று வீட்டில் முளைக்கப் போட்டது நினைவுள்ளது. பனை அபிவிருத்திச் சபை மாகண சபை போன்றவற்றை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் தாமாக உணர்ந்து பனை அபிவிருத்தியில் பங்குகொள்ள வேண்டும். இது யாருக்காவது புரிகிறதா ?
  5. ஈரான் தரப்பு வாதத்தை நம்ப முடியாது. இந்தப் பெண் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காத் துன்புறுத்தப்பட்டதால் அதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருந்தால் பாராட்டாமல் இருக்க முடியது. இவர் ஈரானிய பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தனது உடலை ஆயுதமாகக் காட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட இப் பெண்ணை மனநல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டாலும் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
  6. சுமந்திரனின் கோரிக்கை சரியானது. பிரான்சில் ஒருவர் அரசியலில் நுளைவதானால் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும். சாராயக்கடை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்லவே. அரசாங்கம் தான் அனுமதி வழங்குகிறது. இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் பகிரங்கமான உரிமையாளைர்களையே கொண்டுள்ளது. சாரக்கடை உரிமையாளரை மட்டும் ஏன் கிசுகிசு தகவல்கள் மூலம் குறிப்பிட வேண்டும் ?
  7. ஏராளன், நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. செய்தியை இணைத்தது உங்கள் தவறில்லை. இங்கு பொய்யான செய்தி என்று சுட்டிக் காட்டப்பட்டது தமிழ் செய்தி இணையத்தளங்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தவே. பொறுப்பான இணையத் தளங்கள் எதை எழுதினாலும் வாசித்துவிட்டுப் போகாமல் சரிபிழையை விவாதிப்பது ஆரோக்கியமானது. யாழிணையத்தில் உங்கள் செய்திப் பகிர்வுகளுக்கு நன்றி.
  8. நான் வாசித்த பிரெஞ்சுச் செய்த்திகளிலும் இப்படித்தான் இருந்தது. ஈரானை வன்மையாகக் கண்டிப்பதோடு இஸ்ரெயிலின் பக்கம் நிற்பதாகப் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.
  9. இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது. OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை. கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது. இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
  10. SP500 ஒரு வாரத்துக்குள் விட்ட இடத்தைத் தாண்டிவிட்டது.
  11. இதுவும் டிக்டொக்கில் வாசித்ததா ? பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜேர்மனி அதன் அடுத்த வருட பட்ஜெட்டில் செலவுகளைக் குறைக்க முயல்கிறது. இந்த வருட உக்ரெயின் உதவி 8 பில்லியன் ஈரோ. அடுத்த வருடம் இதனை 4 பில்லியனாகக் குறைக்கிறது. மீதி 4 பில்லியன்கள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து வரும் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படும். இதுவும் இறுதி முடிவு கிடையாது, பாராளுமன்றத்தில் பட்ஜெட் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
  12. ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வழிகளைத் திறக்கப் போவதாக உக்ரெய்ன் அறிவித்துள்ளது. ஒன்று ரஷ்யாவை நோக்கியது மற்றையது உக்ரெய்னை நோக்கியது. ரஷ்ய அகதிகளை உக்ரெயின் உள்வாங்கப் போகிறது. 😃 ஏற்கனவே ரஷ்ய அரசியல் அகதிகளுக்கு ஐரோப்பிய நடுகள் புகலிடம் கொடுத்துள்ளன. எந்த நாடென்று பாரபட்சம் பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.
  13. சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.