Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  6,200
 • Joined

 • Days Won

  16

Everything posted by இணையவன்

 1. இணையத்தில் தேடி வாசித்தபோது நீங்கள் சொன்ன antioxidant இன் அளவுதான் ஏனைய அரிசி வகைகளிலிருந்து வேறுபடுகிறது. வெள்ளை அரிசி தவிர ஏனைய அரிசிகள் நீரிழிவு வராமல் இருக்க ஓரளவு உதவுமே தவிர நிவாரணி அல்ல. சில அரிசி வகைகள் நீரிழிவுக்கு 'நல்லதாம்' என்ற தவறான கருத்தால் நீரிழிவு உள்ளவர்கள் இந்த அரிசி வகைகளைத் தாராளமாக உண்ணுகின்றனர். இது நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது. Glycemic Indexe இல்தான் வித்தியாசங்கள் உள்ள்ளனவே தவிர கலோரிகளின் அளவுகளில் (glucide - சீனி) மிகக் குறைவான வித்தியாசமே உள்ளது. உதாரணமாக வெள்ளை அரிசிக்கும் தீட்டாத அரிசிக்கும் உள்ள வேறுபாடு 100 கிராம் தீட்டாத அரிசி 326 KCal - வெள்ளை அரிசி 320 KCal Glycemic அளவு தீட்டாத அரிசி 50/100 - வெள்ளை அரிசி 70/100 சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.
 2. நன்ற்றி ஜஸ்ரின். நான் அறிந்த வகையில் உடலுக்குச் சக்தியை (கலோரி) வழங்கும் வழிகளில் அல்கஹோலும் ஒன்று. என்ன பிரச்சனை என்றால் அல்கஹோல் வழங்கும் சக்தியை உடல் கட்டுப்படுத்தி மேலதிகமானதைச் சேமித்து தேவையானபோது பாவிக்க முடியாது. இதை வெறுமையான கலோரிகள் என்று பிரெஞ்சில் சொல்வார்கள். இரத்தத்தில் உடனடியாகச் சேர்க்கப்படும் இச் சக்தி உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதால் இது முதன்மை பெற்று உடலின் ஏனைய சக்தி வழங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேறு விடயம். ஓட்டத்துக்கு வருவோமேயானால், எனது ஊருக்குப் பக்கத்தில் ஓட்டப் போட்டி ஒன்று ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஒவ்வொரு 3 கிலோமீற்றரிலும் தண்ணீர்ப்பந்தலில் பியர் வழங்கப்படும். குடித்துவிட்டு ஓட வேண்டும். இப்ப்படியான போட்டி பெல்ஜியத்தில் பரவலாக நடப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
 3. பியர் கான் இல்லாவிட்டால் 4, 5 பேர்கூட செட் ஆகாது என்பது சைக்கிளில் 10 கிலோமீற்றர் தூரம் ஓடிவதிலேயே தெளிவாகிறது. ஆகவே சாதகமாகத்தான் இருக்கும். எதுக்கும் ஜஸ்ரின் எழுதட்டும், மேற்கொண்டு முடிவு பண்ணுவம்.
 4. சட்டம் என்பது ஒரு நாட்டில் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். தமிழருக்கு ஒன்று சிங்களவருக்கு ஒன்று முஸ்லிமுக்கு வேறு என்ற பிரிவினைகளே நாட்டின் இனப்பிரச்சனைக்கு முக்கிய காரணம். மனித நாகரிக வளர்ச்சிக்கேற்ப மேலத்தேய நாடுகளில் மாற்றங்களுக்கு உட்பட்டு பொதுவான சட்டங்களே உள்ளன. ஒரு நாடு என்பது தனது தனித்துவமான பண்புகளையும் கொள்கைகளையும் கொண்டிருக்கும். அதற்கேற்றவாறு சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு நாட்டு மக்கள் எல்லோருக்கும் பொதுவாக அவை அமுல்படுத்தப்பட வேண்டும். ஒரே நட்டில் எனக்குச் சாதகமில்லாத ஒரு சட்டத்தை நான் மதம் மாறி அல்லது இன்னொரு கலாச்சாரத்தைப் பின்பற்றும் முழுவோடு சேர்ந்து எனக்குச் சாதகமாக மாற்றுவது என்பது கேலிக்குரியது.
 5. நான் பயிற்சி எடுக்கும் கிளப்பில் உள்ள சிலருக்கும் இந்த addiction பிரச்சனை உள்ளது. சரியான ஓய்வெடுத்து காலைக் குணப்படுத்தாமல் ஓடி மறுபடி வலியை உண்டாக்கிக் கொள்வார்கள். இந்த வருட ஆரம்பத்தில் 2 நாட்கள் தொடர்ச்சியாக முழங்காலில் நின்றபடியே வீட்டுத் திருத்த வேலை ஒன்று செய்ததால் முழங்காலில் சவ்வு சிதைவடைந்து ஓட முடியாமல் போனது. வைத்தியர் முழங்காலில் ஊசி போட்டு 15 நாளைக்கு அசையக் கூடாது என்று சொன்னார். அதன்பின் ஓடலாமா என்று கேட்டதற்கு, நிச்சயமாக ஓட வேண்டும் என்று சொன்னார். நான் நன்றாகக் குணமாகிய பின்னரும் ஒரு மாதம் மேலதிகமாக ஓய்வெடுத்து அதன்பின் ஓடினேன். trail running உங்களுக்குத் தோதாததாகப் படவில்லை. இடைக்கிடை சைக்கிள் ஓட்டம் அல்லது நீச்சல் நல்ல பலனைத் தரும். 'எப்ப பாத்தாலும் ஓட்டம்' என்று வீட்டில் யாரும் முணுமுணுக்காவிட்டால் நானும் சனி ஞாயிறில் காணாமல் போவேன் இள வட்டங்கள் இருந்தால் என்ன ? வயது என்பது வெறும் இலக்கங்களே என்று எங்கள் பாட்டில் இருப்போம். நன்றி ஈழபிரியன்.
 6. ஓடத் தொடங்கினால் 7 கிலோ மீற்றர்கள் பெரிய தூரம் இல்லை. ஆபத்து எதுவுமில்லை. ஓட்டத்தின்போது சில விதிகளைக் கடைப்ப்பிடித்தால் போதுமானது. முக்கியமானது, திடீரென வேகமாக ஓடக் கூடாது. நன்றி கிருபன். 25 கிலோமீற்றர்கள் நடப்பது என்பது மிகக் கடினமானது என்பதை ஒத்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவான ஓட்டத்தோடு நடந்து பாருங்கள். காலப் போக்கில் இலகுவாக இருக்கும். சிலர், குறிப்பாக மிக வயதானோர் மரதன் போட்டியில் பங்கு பற்றி ஓட்டமும் நடையுமாக 5 - 6 மணித்தியாலத்தில் 42 கிலோமீற்றர்களைக் கடக்கின்றனர்.
 7. நன்றி சசி. நீங்கள் லீக் தரத்தில் விளையாட்டுகளில் ஈடுபடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி. மூச்சு இரைத்துக் களைப்படைவது பற்றி மேலே விளக்கியுள்ளேன். உணவுக் கட்டுப் பாடுகள் பெரிதாக எதுவும் இல்லை. முன்னர் keto diet செய்திருந்தேன். இப்போது low carb செய்கிறேன். தவிர்க்க வேண்டியவை சோறு மா சீனி மட்டுமே. ஏனையவற்றைத் தாராளமாகச் சாப்பிடுகிறேன். உடற்பயிற்சியும் செய்வதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஐஸ்கிறீம் கேக் போன்றவற்றைச் சாப்பிடத் தயங்குவதில்லை. பியர் பற்றி ஜஸ்ரின் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி துல்பன்.
 8. நன்றி ஜஸ்ரின், நீங்களும் ஓடுகிறீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாரத்தில் 25 மைல்கள் ஓடும் நீங்கள் நிச்சயமாக மரதன் ஓட வேண்டியவர். பயிற்சியின்போது கால் வலிகள் ஏற்படுவது சாதாரணம். என்ன விதமான வலி என்பது தெரியவில்லை. ஓட முடியாது என்று உணர்ந்தால் நிறுத்தி ஓய்வு எடுக்கத் தயங்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மரதன் ஓடுவதற்கு வயது கால எல்லை தடையில்லை. விரைவில் நீங்களும் மரதன் ஓட வாழ்த்துகள். நன்ற்றி ஏராளன். அவதார் படத்தைப் பார்த்து என்னைவிட வயதானவர் என்று நினைத்திருந்தேன்.
 9. நன்றி சுவி அண்ணா. எப்போதும் தொடர்ச்சியான உங்கள் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
 10. நன்றி நிழலி. நடக்கும்போது 5ஆவது கிலோ மீற்றரில் 5 நிமிடங்கள் உங்களால் முடிந்த அளவு மெதுவாக ஓடிப் பாருங்கள். கால்களுக்குப் பிரச்சனை வரும் என்பது தவறான அபிப்பிராயம். எதுவும் அளவுக்கு மீறினாக் கூடாது. மேலே குறிப்பிட்டபடி ஓட்டம் எலும்புகளுக்கும் நார்களுக்கும் புத்துயிர் அளித்து உறுதியாக்கும். இதைத் தவிர உங்கள் இதயம் உறுதியாகும். 50 வயதின்பின் வாழ்க்கையின் இன்னொரு பகுதி ஆரம்பமாகிறது. அனுபவிக்க வேண்டும்.
 11. பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம். மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன். ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.
 12. உங்களது கோபம் விளங்குது. க்கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தே ஆகவேண்டும். ஆனாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்குப் போகக் கூடாது. எனக்கு TRUTH Social இல் கணக்கு ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை. அதன் முதலாளிதான் பிரச்சனை
 13. தத்துவங்களை மேலும் படித்தோ அவற்றைப் பின்பற்றியோ வாழ்வதாக இல்லை. சாதாரண வாழ்க்கை முறை, சுற்றியிருப்பவர்கள் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு என்னைச் சூழலுக்கேற்ப திருத்திக் கொண்டு திட்டமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ இருக்கிறேன். தியானம் மன அமைதி கட்டுப்பாடு பலருக்கும் நல்லதாக இருக்கலாம். எனது தெரிவு இவையல்ல. அணுக்கலாலும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட நான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். இறந்தபின்னும் வேறு மூலக்கூறுகளாக இதே பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுவேன். என்னை நானே புரிந்து கொண்டுள்ள விதம் தவறாக இருக்கலாம். எனக்குப் புரியாதவற்றை நானே என்மீது திணிக்க விரும்பவில்லை.
 14. ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள்
 15. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் (புரிந்துகொண்ட அளவில்) சில பிடிக்கும். செக்ஸ் சாமியார் என அழைக்கப்பட்ட ஓஷோ கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரக் கார்கள் பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்.
 16. செய்யலாம். ஆனாலும் உள்ளூர் சந்தையைப் பாதிக்கக் கூடாது.
 17. புண்ணாக்கை யாரும் இழிவுபடுத்த வேண்டாம். மாட்டுக்காக வாங்கி வைத்திருந்த எள்ளுப் புண்ணாக்கை அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ஒரு பிடி எடுத்துத் தின்று வளர்ந்த நாங்கள்.
 18. இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை. - இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை - பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர் - பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது - மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள். குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.
 19. 3 - 4 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு குற்றச்சாட்டு எழுந்தது. ஒதுக்கப்பட்ட நிதியைத் தமிழர் தரப்பினர் பவிக்கத் திட்டமிடாமையால் அந்த நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டதாக வாசித்த ஞாபகம்.
 20. ஆக, 1. இங்கிலாந்து ஒரு கைப்புள்ளையாக இருந்திருக்கு ! 2. எரிபொருள் உட்பட பல பிரச்சனைகளுக்கு பிரெக்ஸிட் முக்கிய காரணம் (தமிழர்களால் இதை நேரடியாக ஒத்துக்கொள்ள முடியாது) ! இந்த சின்னப் பிரச்சனைக்காக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?
 21. நாற்சந்தியில் திறக்கப்பட்ட 'திரி ஒன்றினை மூடுதல்' என்ற திரி மூடப்படுகிறது. இது தொடர்பான விளக்கம் இதில் குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவையானால் நிர்வாகத்திடம் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும்.
 22. அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன். இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
 23. விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ? நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.