Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  6489
 • Joined

 • Days Won

  16

Posts posted by இணையவன்

 1. மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.

 2. சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம். 

 3. இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

  நான் அறிந்த வரையில் தடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் NGO போன்ற இலாப நோக்கமற்ற அமைப்புகள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இவை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுச் சில உதவிகளை மட்டுமே செய்யலாம்.

 4. மேலுள்ள கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவில்லை. இந்த 5 உறுதிமொழிகளையும் பின்பற்றினால் நிச்சயம் இந்தியா முன்னேற முடியும். ஆனால் மத்திய அரசு இவற்றைப் பின்பற்றுவதுபோல் தெரியவில்லை. குறிப்பாக இரண்டாவது உறுதிமொழியிலதான் இந்தியாவின் ஆட்சியே நடக்கிறது.

  நேற்று முந்தினம் இந்து பத்திரிகை 1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தியாவை ஏனைய நாடுகளுடன் சில ஓப்பீடுகளைச் செய்துள்ளது. இவற்றில் சனத்தொகைப் பெருக்கத்தைத் தவிர ஏனையற்றில் அநேகமான நாடுகள் இந்தியாவைப் பின்தள்ளி முன்னேறிச் செல்கின்றன.

  https://www.thehindu.com/data/data-75-years-of-independence-a-comparison-of-indias-growth-with-other-nations-across-ten-indicators/article65768693.ece

 5. On 11/8/2022 at 00:05, vasee said:

  தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான  இலக்கு 1803 (1:9 R&R)

  எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.

  தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. 

  தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.

  • Thanks 1
 6. செய்தியின் தலைப்பு அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை.

  75 வீத அதிகரிப்பு சிறு நிறுவனங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே.

  பொதுமக்களுக்கு 200 வீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  Quote

   

  அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

  மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

   

  அதாவது 90 அலகுகளுக்குக் குறைவாக பயன்படுத்துபவர்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதியினர். 

  கீழுள்ள பிரெஞ்சுச் செய்தியில் பொதுமக்களுக்கு 264 % வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  https://www.leparisien.fr/international/au-sri-lanka-les-tarifs-delectricite-en-hausse-de-264-09-08-2022-2HB52BJB2ZGILJC5NNHYX2BXCU.php

 7. 1 hour ago, தமிழ் சிறி said:

  சீனனும் வாறான், பாகிஸ்தான்காரனும்... போர்க் கப்பலுடன்,  வாறான்.  
  இந்தியா... உன்னிப்பாக அவதானிக்காமல், உசாராக இருக்க வேண்டும்.  

  சீனா உளவுக் கப்பல் கொண்டுவர முயற்சித்தது.
  பாகிஸ்தான் இராணுவக் கப்பலைக் கொண்டு வருது.
  ஆனால் தமிழ்நாடுதான் சோற்றுக் கப்பல் அனுப்பியது. 🙂

  • Haha 1
 8. அனைவருக்கும் வழ்த்துகள். எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடைபெற வேண்டும்.

  வீரகேசரி படங்கள் போட்டுள்ளது.

  https://www.virakesari.lk/article/133099

  முன்பே தெரிந்திருந்தால் நாங்களும் அனுசரணை செய்திருப்போம் 🙂

 9. 1 hour ago, தமிழ் சிறி said:

   மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை

  ஒரு வருட நட்டம் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனைவிட அதிகமாக இருக்குமே. செய்தியில் எழுத்துப் பிழையா ?

 10. வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

 11. பரந்தூரில் இருந்து சென்னை வர 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இது மிக அதிகம். பரந்தூரிலிருந்து சென்னைக்கு அதிவேக வாகனப் பாதை அல்லது நேரடி அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டால் நல்லது.

 12. nef.jpg

  இது சிரியாவில் 2017 இல் நடத்தப்பட்ட தாக்குதல். 2 ஏவுகணைகள் வாகனத்தின் உறுதியான இரும்பையும் கத்தியால் வெட்டிக்கொண்டு உள்நுளைந்துள்ளன. வாகனத்தின் உள்ளே இருக்கைகள் வெட்டப்பட்டுள்ளனவே தவிர வேறு பாரிய சேதங்கள் இல்லை.

 13. 18 minutes ago, ராசவன்னியன் said:

  அதில் தமிழ் நாட்டின் சிறப்பு பற்றிய வண்ணப் படங்களுடனான புத்தகம் மிக அருமை.

   

  காணொளியில் 03:26 வினாடியிலிருந்து பாருங்கள் புரியும். 👌

  இந்தப் புத்தகத்தை எங்கவது வாங்க முடியுமா ?

 14. 20 minutes ago, vasee said:

  மேலும் கள உறவுகளே, தங்க முதலீடு பற்றிய உங்கள் கருத்தினை அறிய ஆவல்.

  இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல

  தங்கத்தின் மதிப்பீடு அரம்பத்திலிருந்தே உங்கள் கணிப்பு சரியக இருந்துள்ளது. 1700 களுக்கு இறங்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது முதலீட்டை ஏறத்தாள முற்றாக் இழந்தேன். 1720 இல் கடைசியான இருப்பை முதலீடு செய்து 1735 இல் விற்று சிறிய இலாபம் பெற்றுக் கொண்டேன். ஆனால் தொடர்ந்தும் முதலிட்டிருந்தால் தற்போதைய 1770 வரை அதிக இலாபம் ஈட்டியிருக்கலாம். நான் 1735 இற்குப் பின்னர் இறங்கும் எனறு ஒரு வாரமாகப் பார்க்கிறேன், ஏறிக்கொண்டே போகிறது. அதிக முதலீடு இல்லாதபடியால் இருக்கும் சொற்பத்தையும் இழக்க விருப்பம் இல்லை. 

  சென்ற வாரம் 70 ஈரோவிலிருந்து ஆரம்பத்தில் நான் செய்ததுபோல் ETF முதலீடு செய்கிறேன்.

 15. 31 minutes ago, குமாரசாமி said:

  இப்ப தெரியுதா????
  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்த துருக்கியை ஜேர்மனி ஏன் முளையிலையே கிள்ளி விட்டதென.....? 

  யேர்மனி மட்டுமல்ல பிரான்ஸ் உட்பட ஏனைய பல ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மறுத்தன. அதற்கான கரணம் துருக்கியில் மனித நேயம், மனித உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றை மதிக்கும் ஐரோப்பிய பொதுவான சட்டங்களை இம்மியளவும் அமுல்படுத்த முடியாது என்பதாகும். துருக்கி இதற்காகத் தன்னை ஒருநாள் மாற்றிக் கொள்ளும் என்று நம்பவில்லை. முற்போக்கான ஒரு சமுதாயம் அங்கு இருந்தாலும் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை மீறி வர முடியாது.

  • Thanks 1
 16. 21 minutes ago, Nathamuni said:

  கூழைக் கவுத்து ஊத்தியவர்கள், முதலே செய்யாமல், ஆளை தூக்கி வெளில விட்டுட்டு, கூழைக் குடிக்காம் எண்டு நிணைச்சினம் போல கிடக்குது....

  கொஞ்ச நேரம் அவரின் காலைப் பிடித்துச் சுழட்டி கூழோடு அவரை காச்சியுள்ளனர். போதாக்குறைக்கு கறுப்புச் சட்டைக்காரர் அவரின் தலைமுடியைப் பிச்சு எறிஞ்சுபோட்டுப் போகிறார்.

 17. 14 minutes ago, goshan_che said:

  https://www.news18.com/amp/news/world/us-drone-to-kill-zawahiri-used-pak-airspace-flew-from-a-middle-eastern-country-source-exclusive-5673163.html

  டிரோன்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கிளம்பி, பாகிஸ்தான் முன் அனுமதி பெற்று பாக் வான்பரப்பினுடு ஆப்கானிஸ்தானில் நுழைந்ததாக கூறுகிறது இந்த இந்திய தளம்.

   

  கோத்துவிடுவதாயும் இருக்கலாம்.

  கபூல் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிமீ தூரத்துக்குக் குறைவக உள்ளது. சில நிமிடங்கள் போதும் இலக்கை எட்டுவதற்கு.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருவதானால் குறைந்தது ஒன்றரை மணித்தியாலமாவது தேவை. அத்துடன் டிரோன் திரும்பிப் போகவும் வேண்டும்.

 18.  

  Hellfire R9X என்ற வெடிபொருள் இல்லாத ஏவுகணை இத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 18 சென்ரிமீற்றர் விட்டமுள்ள இந்த ஏவுகணை லேசர் மூலம் துல்லியமாக இலக்கினை அடைய முன் சுற்றியுள்ள 6 கூர்மையான கத்திகளை விரிக்கும். இதனாலேயே கட்டடத்துக்குப் பாதிப்புகள் இல்லை. சக்திவாய்ந்த தொழில்நுட்பம். 2017 இல் முதல் தடவையாகப் பாவிக்கப்பட்டுள்ளது

  Lockheed_Martin_Longbow_Hellfire.jpg

  • Like 1
  • Thanks 1
 19. 1 hour ago, தமிழ் சிறி said:

   

  கமல்ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்த கலை நிகழ்ச்சி | Chess Olympiad 2022 

   

   

  கமல்ஹாசனின் குரலில் தயாரிக்கப்பட்ட சிறந்த முயற்சி, பாராட்டுக்கள்.
  நேரம் கிடைத்தால் முழுமையாகப் பாருங்கள்.
  (மோடி இரசிப்பதுபோல் தெரியவில்லை. இதில் அயோத்தி, ராமர், அனுமன், கிருஷ்ணர் போன்றவற்றைக் காணாமல் வெறுப்படைந்திருப்பார்)

 20. 3 hours ago, பிழம்பு said:

  FYC18DXX0AQXr3b__2_.png

  போட்டோவுக்குக் கூட எழுந்து நிற்க முடியாத தலைமை தமிழ் மக்களுக்கு தேவையா ?

  • Like 1
 21. Quote

  போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் சந்திப்பின்போது மனோகணேசன் “இந்நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மூலகாரணம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை தான். அதற்குப் பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு தேட முடியாது” எனத் தெளிவாகக் கூறியிருந்தார். சுமந்திரனோ ஜனாதிபதி நியமனம் பற்றிய அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போராட்டக்காறர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் விவகாரம் பற்றி வாயயே திறக்கவில்லை.

  தற்போதுள்ள தலைவர்களில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் மனோ கணேசன் மட்டுமே.

 22. மனோ கணேசனின் முகப்புத்தகத்திலிருந்து :

   

  <#புலிகளை" பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம் என காலிமுக போராட்ட குரலொன்று கூறுகிறது..!> 

  1)பாராளுமன்றத்தையும் ஆக்கிரமித்து, அரசியலமைப்பு மூலமாக எமக்கு தீர்வு தரும் கடைசி அமைப்பையும் அழிக்க வேண்டாம் என்கிறார்.

  2)ஏற்கனவே போராட்டக்காரர்கள், ஆக்கிரமிக்க வேண்டிய ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களை ஆக்கிரமித்து விட்டோம். அவ்வேளைகளில் ஒரு உயிர் சேதமும் ஏற்பட வில்லை. அதாவது அவ்வேளைகளில்  இராணுவம் சுடவில்லை. அதாவது உயிர்கொல்லி தோட்டாக்கள்/live ammunition இராணுவத்தால் இதுவரை  பயன்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இப்போது சுடலாம் என்கிறார். 

  3)பெதும் கேர்னர் (Pathum Kerner) என்ற நபர் காலி முக போராட்டத்தில் நுழைந்து இத்தகைய  "பாராளுமன்றத்தை பிடி" என்ற தவறான வழிகாட்டலை தருவதாக சொல்கிறார்.

  4)இதன்மூலம் போராட்டத்தில் பிளவு வருகிறது. "புலிகளை" பிளந்த ரணிலுக்கு இந்த போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என்கிறார்.  

  5)பாராளுமன்றத்தில், சபாநாயகர் இல்லத்தில், கை வைத்தால் உலகமும் எம்மை நிராகரிக்கும். ஏற்கனவே எமக்கு ஆதரவாக இருந்த  "சட்டத்தரணிகள்" சங்கமும் இப்போது எம்மை விமர்சிக்கிறது என்கிறார்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.