Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7240
  • Joined

  • Days Won

    24

Posts posted by இணையவன்

  1. On 12/9/2022 at 19:38, vasee said:

    எண்ணெய் வர்த்தகம் நூலிழையில் தவறிவிட்டது, எதிர்பார்ப்பு விலையினை ஏற்கனவே அடைந்ததனால் வாங்குவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது விலை 84.528 குறுங்காலத்திற்கு இறங்க வாய்ப்புள்ளது அட்கு தொடர்பான மேலதிக விபரத்தினை பின்னர் பதிவு செய்கிறேன்.

    எண்ணை, எரிவாயு ஆகியவற்றின் வர்த்தகம் சுவாரசியமானது. கடந்த பல நாட்களாக அவதானித்து வருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் தற்போது விலை வீழ்ச்சியில் உள்ளன. நேற்று ஒன்றுசேர்ந்த பல்வேறு காரணிகளால் எரிவாயுவின் விலை 6 வீதம் குறைந்தது. இது மிகப் பெரிய வீழ்ச்சி. அதோடு சேர்ந்து எண்ணையும் விலை குறைந்தது. இன்னும் விலை குறையும் என்கிறார்கள்.

  2. எரிவாயு பெற்றோலிய விலைகள் கடந்த 2 நாட்களாக சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 3 மாதங்களுக்கு முன் 100 டொலர்களாக இருந்த எண்ணை நேற்றைய வீழ்ச்சியுடன் 82 டொலர்களுக்குப் போகிறது. இன்னும் குறையும் என்கிறார்கள். எரிவாயுவுக்கும் இதே நிலைதான்.

    இதற்கான காரணம் ஐரோப்பா தனது எரிவாயு தாங்கிகளை நிரப்பியுள்ளது மற்றும் ரஷ்யாவின் பிரதான எரிபொருள் சந்தை இந்தியா சீனாவுக்கு மாறியுள்ளமை போன்றன முக்கிய காரணங்களாகக் குறிப்பிடுகிறார்கள்.

    இன்னும் 2 - 3 மாதங்களில் ஐரோப்பிய எரிபொருள் கையிருப்பு குறையும்போது விலைகள் மறுபடி ஏற ஆரம்பிக்கும். ரஷ்யாவின் பிரதான எரிபொருள் இலாபச் சந்தை ஐரோப்பாதான்.

    கந்தையா சொன்னதுபோல் ஐரோப்பாவில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும் வேறொன்று திறக்கப்படுவதும் சாதாரணம். பொதுவாக தொழில்நுட்பச் சந்தை வலுவாகவே உள்ளது.

    ஆனால் ரஷ்யாவின் நிலை தலைகீழ். போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தினால் வழக்கத்துக்கு மாறான பெரும் இலாபத்தை ஈட்டி வந்தது. இக் காலகட்டத்தில் எரிபொருள் மட்டுமே ரஷ்யாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது.  ஏனைய தொழில்நுட்ப வருமானம் பொருளாதார தடையாலும் ஐரோப்பிய தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருப்பதாலும் பெறுமளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. உதாரணமாக வாகன உற்பத்தி ஏறத்தாள நிறுத்தப்பட்டுள்ளது. எயர்பஸ் போயிங் விமானங்களைப் பெருமளவில் கொண்டுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் உதிரிப்பாகங்கள் கிடைக்காததால் நல்ல நிலையில் உள்ள சில விமானங்களைப் பிரித்து அதன் உதிரிப்பாகங்களைப் பாவிக்கவேண்டிய நிலையில் உள்ளன. 

    வெல்ல முடியாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் உள்ளது.

    • Like 2
    • Thanks 2
  3. தேவைப்படும் பட்சத்தில் பிரான்ஸ் ஜேர்மனிக்குத் தன்னிடமுள்ள மேலதிக எரிவாயுவை வினையோகிக்கும். மாற்றீடாக பிரான்சில் குளிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஜேர்மனி பிரான்சுக்கு முன்வினையோகம் செய்யும். பிரான்சில் பிரதான அணுமின் நிலையங்கள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

    • Thanks 1
  4. இரண்டு வாரங்களுக்கு முன் சிறு பங்குகளாகக் கவனமெடுத்து வாங்கி கணிசமான அளவு இலாபம் கிடைத்தது. மொத்த இருப்பு 100 டொலரைத் தாண்டியதும் palladium வெள்ளி செப்பு ஆகியவற்றில் மாறி மாறி குறுகிய கால முதலீடுகள் செய்து அதிக இலாபம் ஈட்டியிருந்தேன். பெற்றோலியத்தின் விலை அடிக்கடி கூடிக் குறைவதால் அதில் இலகுவக இலாபம் அடையலாம் போல் தோன்றியது. மொத்தக் கையிருப்பு 220 டொலர்களாக உயர்ந்தது. கடந்த செவ்வாய் பெற்றோலியத்தில் இரு பிரிவாக 200 டொலர்களை முதலீரு செய்திருந்தேன். அன்று திடீரெனெ ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் 100 டொலர்களைச் சில மணி நேரங்களில் இழந்துவிட்டேன் (Stop loss 50%). நேற்று தவறான தருணத்தில் தங்கத்தில் முதலிட்டு நட்டத்துடன் வெளியேறி வெள்ளியில் முதலிட்டேன். அதுவும் ஏறுகிற மாதிரித் தெரியவில்லை. 

    உங்களது தங்க முதலீட்டில் 1699 Stop loss மிகக் குறுகியதாகத் தெரிகிறது. தற்காலிகமான சிறு தாழ்வு ஏற்பட்டால் மூடப்பட்டு விடும் அல்லவா ? ஒருவேளை எனது இழப்புகளுக்கு தவறான Stop loss காரணமாக இருக்கலாம்.

    Stop loss - Take profit இரண்டையும் எவ்வாறு கணிப்பிடுகிறிர்கள் ? நான் முதல் நாள் அதிகபட்சமாக இருந்த அளவை Take profit ஆக எடுத்துக் கொள்கிறேன்.

    • Like 1
  5. 16 minutes ago, vasee said:

    1704.61 மீண்டும் தங்கத்தினை வாங்கியுள்ளேன் 1700.00 உளவியல் Support (1000,1100,1300 இப்படி செல்லும்) ஆக இருப்பதுடன் Bullish engulfing அறிகுறியிருந்தமையால் வாங்கியுள்ளேன், எதிர்பாரா வெளியேற்றமாக 1699.00 இட்டுள்ளேன்.

    சிறப்பான முடிவு. நான் வாங்கவில்லை. ஏற்கனவே வெள்ளி வாங்கியுள்ளதால் கையிருப்பு எதுவும் இல்லை. வெள்ளியிலிருந்து உடனே வெளியேறுவதானால் நட்டம் ஏற்படும். 

  6. 14 hours ago, vasee said:

     

    1746.45 வர்த்தகம் எதிர்பாரா வெளியேற்றம் மூலம் வேளியேற்றப்பட்டுவிட்டது (Stop loss). அடுத்த இலக்கு 1730 இரண்டாவது வர்த்தகம் நிகழ்ந்துள்ளது.

     

    இன்றும் 1740 - 1730 ற்கு உள்ளேயே தடுமாறுவதால் தற்போது முதலிடுவதாக இல்லை.

    நேற்று palladium திடீரென 6 வீதத்தை இழந்திருந்தது. என்னிடமுள்ள மொத்த இருப்பையும் திரட்டி நேற்று இரவு முதலிட்டுள்ளேன். இதில் பிரச்சனை என்னவென்றால் தங்கத்தைப் போல் அல்லாது வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பாரிய இடைவெளி உண்டு. வாங்கியவுடனேயே சுமார் 7 வீதத்தினை முதலீடு இழந்துவிடும். இந்த இழப்பையும் இலாபத்தில் உள்ளடக்க வேண்டியுள்ளதால் மிகப்பெரிய விலை ஏற்றம் வந்தால்தான் விற்க முடியும். 

    எரிவாயுவின் விலை நேற்று 7 வீதத்துக்கும் மேல் கூடியது. முதலிட்டவர்கள் அதிக இலாபம் அடைந்திருப்பார்கள்.

    இன்று தங்கம் 1730 இனை விடக் குறைந்தால் சிறு இலாபத்துடன் palladium இனை விற்று தங்கத்தில் முதலிடலம் என்று எண்ணியுள்ளேன்.

  7. 20 minutes ago, ஏராளன் said:

    10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என அவர் கூறினார்.

     

     

    பணம் இருந்தால் அருள் கிடைக்குமம்.

    • Haha 3
  8. 23 minutes ago, குமாரசாமி said:

    நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
    இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

    டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

    https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

    வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ? 3000 வருடங்களுக்கு முன் இது அவுஸ்திரேலியா முழுவதும் பரவியிருந்தது. நான் மேலே குறிப்பிட்டதுபோல் மனிதர்கள் வேட்டையாடியதும் ஒரு காரணம். அது வெள்ளைக்காரன் அல்ல. சில ஆயிரக்கணக்கானோர் வேடையாடி அழிக்க அவுஸ்திரேலிய ஒன்றும் சிறிய தீவு அல்ல.

    நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர். உங்கள் ஆதாரங்களை நன்றாக வாசித்துப் பாருங்கள். ஐரோப்பியர்கள் குடியேறியது 18 ஆம் நூற்றாண்டு இறுதியில்.

  9. 32 minutes ago, குமாரசாமி said:

    டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

    உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

     

    21 minutes ago, தமிழ் சிறி said:

    ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
    துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
    அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
    அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

     

    கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

    நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

    https://en.wikipedia.org/wiki/Thylacine

  10. மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.

  11. சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம். 

  12. இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

    நான் அறிந்த வரையில் தடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் NGO போன்ற இலாப நோக்கமற்ற அமைப்புகள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இவை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுச் சில உதவிகளை மட்டுமே செய்யலாம்.

    • Like 1
  13. மேலுள்ள கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவில்லை. இந்த 5 உறுதிமொழிகளையும் பின்பற்றினால் நிச்சயம் இந்தியா முன்னேற முடியும். ஆனால் மத்திய அரசு இவற்றைப் பின்பற்றுவதுபோல் தெரியவில்லை. குறிப்பாக இரண்டாவது உறுதிமொழியிலதான் இந்தியாவின் ஆட்சியே நடக்கிறது.

    நேற்று முந்தினம் இந்து பத்திரிகை 1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தியாவை ஏனைய நாடுகளுடன் சில ஓப்பீடுகளைச் செய்துள்ளது. இவற்றில் சனத்தொகைப் பெருக்கத்தைத் தவிர ஏனையற்றில் அநேகமான நாடுகள் இந்தியாவைப் பின்தள்ளி முன்னேறிச் செல்கின்றன.

    https://www.thehindu.com/data/data-75-years-of-independence-a-comparison-of-indias-growth-with-other-nations-across-ten-indicators/article65768693.ece

    • Like 1
  14. On 11/8/2022 at 00:05, vasee said:

    தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான  இலக்கு 1803 (1:9 R&R)

    எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.

    தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. 

    தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.

    • Thanks 1
  15. செய்தியின் தலைப்பு அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை.

    75 வீத அதிகரிப்பு சிறு நிறுவனங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே.

    பொதுமக்களுக்கு 200 வீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Quote

     

    அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

     

    அதாவது 90 அலகுகளுக்குக் குறைவாக பயன்படுத்துபவர்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதியினர். 

    கீழுள்ள பிரெஞ்சுச் செய்தியில் பொதுமக்களுக்கு 264 % வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    https://www.leparisien.fr/international/au-sri-lanka-les-tarifs-delectricite-en-hausse-de-264-09-08-2022-2HB52BJB2ZGILJC5NNHYX2BXCU.php

  16. 1 hour ago, தமிழ் சிறி said:

    சீனனும் வாறான், பாகிஸ்தான்காரனும்... போர்க் கப்பலுடன்,  வாறான்.  
    இந்தியா... உன்னிப்பாக அவதானிக்காமல், உசாராக இருக்க வேண்டும்.  

    சீனா உளவுக் கப்பல் கொண்டுவர முயற்சித்தது.
    பாகிஸ்தான் இராணுவக் கப்பலைக் கொண்டு வருது.
    ஆனால் தமிழ்நாடுதான் சோற்றுக் கப்பல் அனுப்பியது. 🙂

    • Haha 1
  17. அனைவருக்கும் வழ்த்துகள். எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடைபெற வேண்டும்.

    வீரகேசரி படங்கள் போட்டுள்ளது.

    https://www.virakesari.lk/article/133099

    முன்பே தெரிந்திருந்தால் நாங்களும் அனுசரணை செய்திருப்போம் 🙂

  18. 1 hour ago, தமிழ் சிறி said:

     மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை

    ஒரு வருட நட்டம் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனைவிட அதிகமாக இருக்குமே. செய்தியில் எழுத்துப் பிழையா ?

  19. வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.