Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7240
  • Joined

  • Days Won

    24

Posts posted by இணையவன்

  1. 4 minutes ago, யாயினி said:

    இதே மாதிரியான ஒரு திரி ஏற்கனவே பல பக்கங்களோடு இருந்ததே அது எங்கே..இந்த திரி கடந்த வருடம் நவம்பறில் அல்வா ஆரம்பிக்கப் பட்டு இருக்கிறது...🤔

    இது மிகவும் ஆழமாக இலக்கண பிரெஞ்சு மொழியைப் படிப்பதற்கு நல்லதொரு திரி.

    ஆனால் இங்கு சுவி அண்ணா இங்கு குறிப்பிட்டதுபோல் மிக இலகுவாகக் கற்பது கடினம் போல் தோன்றியது

    • Like 1
  2. வெறும் கண்டனங்களைப் பதிவு செய்வதுடன் நிறுத்தாமல் செயலில் இறங்கிய தென்னாபிரிக்கா பாராட்டப்பட வேண்டியது. தாக்குதல்களைச் சர்வதேச நீதிமன்றத்தால் நிறுத்த முடியாவிட்டாலும் அதன் தீர்ப்பு ஒரு தடைக்கல்லாக இருக்கும். 

    • Thanks 2
  3. Just now, பாலபத்ர ஓணாண்டி said:

    என்ன இணையவன் அண்ணா இன்னும் பிரெஞ்சு படிக்கிறியளா..?😮

    🙂 எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் 30 வருடங்களாக பிரான்ஸில் இருந்தும் ஒரு வசனம்கூட பிரெஞ்சில் சரியாகக் கதைக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இப்போது பிரான்சில் இருப்பிட அனுமதி பெற வேண்டுமாயின் மொழிப் பரீட்சையில் தேற வேண்டும் என்பதால் புதிதாக வந்தவர்களும் மொழி படிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    • Like 2
  4. On 25/12/2023 at 07:35, சுப.சோமசுந்தரம் said:

    இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது !
              எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் -  வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன்.
            தம் சீடன் ஒருவன் தாம் காட்டிய வழியில் எழுதிய நூலொன்றை வெளிக்கொணர்வதை விட ஒரு ஆசானுக்கான சிறந்த நினைவேந்தல் வேறு என்னவாக இருக்க முடியும் !

     

    https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mMW5ESc8ubZvGyR1EgjGymKrN67rms1E6k87TmCLZyuD7dV5Mkr6bcXpv9YcK5ctl&id=100083780391980&mibextid=Nif5oz

    வாழ்த்துகள். உங்களது நூலை இணையத்தில் வாங்க முடியுமா ?

    • Thanks 1
  5. On 15/11/2023 at 11:59, suvy said:

    https://www.frenchclassintamil.com/  

    மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......!  💐

    சுவி அண்ணா நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை.

  6. 2 hours ago, குமாரசாமி said:

     

    ஹிட்லர் அப்படி செய்திருக்கா விட்டால் இன்று ஜேர்மனி யூத தேசமாக மாறியிருக்கும் என்று பல ஜேர்மனியர்கள் இன்றும் சொல்வார்கள்.

    இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மூன்றாம் உலக நாடுகளில் செய்த இனக்கொலைகளை தாங்கள் மறந்து விடுவீர்கள் போலும்.....

    சிங்களவர்களும் இதையேதான் கூறுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் அனைவரையும் கொன்றதாலேயே மகிந்தா இலங்கையின் இறைமையைக் காப்பாற்றினார். ஆகவே அதை அவர்கள் சரி என்றே கருதுகிறார்கள்.

    • Like 1
  7. இத் திரியில் கருத்து எழுதியவர்கள் வழக்கம்போல் கட்டுரையை வாசிக்காமல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டுக் கருத்து எழுதியுள்ளனர் போலுள்ளது. 🙂

  8. On 17/1/2024 at 20:48, குமாரசாமி said:

     இஸ்ரேலியர்கள் இன்று காசாவில் செய்வதற்கும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்தற்கும் என்ன வித்தியாசம் என நான் கேட்டால்.....? வரலாறு தெரியாதவன் என்பர் 

    இதுதான் ஹிட்லர் கீழானவர் இல்லை என்று காட்ட முயற்சிக்கும் சமன்பாடு.

  9. 5 hours ago, குமாரசாமி said:

     இவர்கள் குணம் அறிந்துதான் ஹிட்லர் செய்யவேண்டியதை செய்தது போல் எண்ணத் தோன்றுகின்றது.

    நம்புகிறோம் 🤣

  10. இதேபோன்று வேறொரு திரியிலும் ஹிட்லருக்கும் வெள்ளையடிகும் முயற்சி நடந்தது. அதுவும் இனப்படுகொலை நாள் பற்றிப் பேசப்படும் திரியில். யார் செய்தாலும் இனப்படுகொலைதான். இதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடையாது. இவனை விட அவன் திறம் என்பதுபோல் எழுதுபவர் மனித நேயம் பற்றியும் எழுதுவது இரட்டை வேடம்.

  11. அருமையான கட்டுரை.

    முன்னர் தலைப்பை மோடி மையவாதம் என்று விளங்கிக் கொண்டு கடந்து சென்ற்விட்டேன்.

    இன்னொரு தடவை ஆறுதலாக வாசிக்கத் தூண்டுகிறது.

    கிருபன் தனியே வெட்டி ஒட்டாமல் முழுமையாக வாசித்துள்ளீர்கள் என்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது😁

  12. மனிந நேயத்துக்கு எதிரானது மரண தண்டலை. உலகம் முழுவதும் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடி வந்தாலும் சில நாடுகளில் அதனை முற்றாக ஒழிக்க முடியாமல் உள்ளது. பைடன் சென்ற தேர்தலில் 3 மானிலங்களில் இதனை நீக்குவதாக உறுதி அளித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகத் தெரிகிறது.

    ட்றம்ப் போட்டியிடும் மாநிலங்களில் மரண தண்டனைக்கு ஆதரவு இருப்பதால் அவர் ஆட்சிக்கு வந்தால்  மரண தண்டனைகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    • Like 1
  13. 15 minutes ago, குமாரசாமி said:

    உங்களுக்கு ஜஷ்ரின் ஆஸ்தான குரு. இருக்கட்டும். இருந்து விட்டு போகட்டும். நான் தடையில்லை. ஆனால் எனக்கு எது உண்மை எது பொய் என கிரகிக்கும் பக்குவமுண்டு.
    ஜஷ்ரின் தனக்கு தெரிந்ததை எழுதட்டும். எழுதிக்கொண்டே இருக்கட்டும்.யாரும் குறுக்கே நிற்கவும் இல்லை என நினைக்கின்றேன்.

     

    1 minute ago, குமாரசாமி said:

    இது...இது தான்....
    அதெப்படி நான் எழுதிய கருத்துக்களுள் அதை மட்டும் பிரித்து எடுத்து குறை கண்டீர்கள். பலே ஆள் நீங்கள். 🤣

    ஏனென்றால் இதற்கு ஏற்கனவே பதில் எழுதியும் நீங்கள் வாசிக்கவில்லை.

    👇

    36 minutes ago, இணையவன் said:

    இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂

     

  14. 2 minutes ago, குமாரசாமி said:

    அதைத்தானே இங்கே  BIO  என சொல்லி அறா விலைக்கு விற்கின்றார்கள்

    Ist-Bio-gesu%CC%88nder-Titelbild-hero.jp

    BIO என்பது மருந்து பாவிக்காமல் விளைவிக்கப்படும் மரக்கறிகளா ? 🤣

    நான் இவற்றை அதிகம் வாங்குவதில்லை.

  15. 5 minutes ago, குமாரசாமி said:

    குமாரசாமி ஆகிய நான் தென்னங்குத்தி குறுக்கே போட்டு வழி மறிக்கவுமில்லை.

    நல்லது. அறிவியலுக்குச் சற்றும் தொடர்பற்ற நேர்மறைக் கருத்துக்களையும் அரட்டைக் கருத்துக்களையும் பொழுதுபோக்குத் திரிகளில் எழுதுவதுதான் யாழுக்கும் நல்லது.

  16. 3 minutes ago, Kandiah57 said:

    ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை   அப்படி நடந்து கண்டு பிடித்தால்   உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்   

    பிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.

    • Thanks 2
  17. 2 minutes ago, குமாரசாமி said:

    இன்று உலகச்சந்தைகளில் விற்கும் உணவுப்பொருட்களின் தராதரம் அறியாமல்  கருத்து எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.

    எனது அறிவுக்கு எட்டியபடி நாள்தோறும் எனக்குத் தேவையான விற்றமின்கள் கனியுப்புகள் புரதம் கொழுப்பு சீனி நார்ப்பொருள் போன்றவற்றைத் தரும் சாதாரண மரக்கறி பழங்கள் மீன் இறைச்சி எண்ணை போன்றவற்றைத் தேடி வாங்கி உண்க்கிறேன். உங்களைப் போல் உலகச் சந்தை பற்றி அதிகம் தெரியாது 🙂

  18. 2 minutes ago, குமாரசாமி said:

    பில் கிளிண்டனின் Whitewater   விவகாரம் பற்றி தெரியாதவர்கள் காகம் கறுப்பு என அலறுகின்றார்கள் 🤣

    உங்களுக்கான பதில் ஏற்கனவே உள்ளது 😂

    1 hour ago, இணையவன் said:

    புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. 

     

  19. 12 minutes ago, குமாரசாமி said:

    மனிதனின் அத்தியாவசிய உணவுகளின் விலை சாதாரண மக்களால் சமாளிக்க முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் டாக்குத்தர் எஞ்சினியர் கனவில் அலையும் சமூகத்தை உழவார வேலைக்கு அடித்து கலைப்பதில் தப்பில்லை. :cool:

    அத்தியாவசிய உணவுகளை வாங்குவதற்கு ஒவ்வொருவரும் பணக்காரர்களாகவோ அறிவியல் மேதைகளாகவோ  இருக்க வேண்டியதில்லை. சாதாரணமான பகுத்தறியும் திறன் இருந்தால் போதுமானது.

  20. 17 minutes ago, குமாரசாமி said:

    ஆனால் அந்த வைத்தியர்களோ  எம் முன்னோர்களைப்போல் உணவு விடயங்களில் ஏழையாக இருங்கள் என்றுதான் புத்திமதி சொல்கின்றார்கள்.

    ஏழை பணக்காரராக இருந்தாலும் தாம் உண்ணும் உணவில் என்ன உள்ளது என்ற அறிவியல் அறிவு இருந்தாலே போதுமானது. மேலை நாடுகளில் பொதுவாக இந்த அறிவியல் இல்லாத ஏழை மக்களே அதிக கொழுப்பும் சீனியும் உப்பும் உள்ள உணவுகளை அதிகமாக உண்ணுகிறார்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப ஆரோக்கியமான உணவை உண்ண முடியும்.

    இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂

  21. Just now, குமாரசாமி said:

    இன்றைய மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றார்களா? இல்லையே:

    விகிதாசரப்படி முன்னேறிய நாடுகளில் நிச்சயமாக.

    சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.

  22. On 20/1/2024 at 03:20, Justin said:

    பல ஆண்டு காலமாக நிரூபணமான ஆரோக்கிய விடயங்களும், பிடிக்காதவன் சொன்னால் "கக்கா" என்றால் நிச்சயம் அது "வெற்றிப் பாதை" தான்😎!

    நிரூபணமான அறிவியல் விடயங்களே இப்படு படும்போது அரசியல் திரிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

    On 20/1/2024 at 23:58, குமாரசாமி said:

    மூலைக்கு மூலை ஆஸ்பத்திரிகளையும் சந்திக்கு சந்தி பெட்டிக்கடை மாதிரி தனியார் டாக்குத்தர்மாரும் முழத்துக்கு முழம் மருந்துக்கடையளையும் வைச்சுக்கொண்டு நாங்கள் ஆரோக்கியமாக வாழுறம் எண்டு ஒரு கும்பல் கூச்சல் போடுது. 🤣

    அஸ்பத்திரிகளை இடித்து விட்டு டாக்குத்தருக்குப் படிக்கும் பெடியளின் படிப்பை நிறுத்தி வயல் வேலைக்கு அனுப்புவோமா ? 😂

    (வயல் வேலையை இகழ்வதற்காக எழுதவில்லை)

    On 20/1/2024 at 00:42, குமாரசாமி said:

    இணையவரே 90.100 வயது வரைக்கும் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகின்றீர்கள்? உலகிற்கும் பாரம்.நாட்டிற்கும் பாரம். வீட்டிற்கும் பாரம். பிள்ளைகளுக்கும் பாரம்.ஏன் சில இடங்களில் பேரப்பிள்ளைகளுக்கும் பாரம்? 

    இதுதான் மிகப் பெரிய தத்துவம். 😂

    90 வயது தேவையில்லை. அன்றைய பொற்காலத்தில் மக்கள் 55 - 60 வயதுவரைதான் வாழ்ந்தார்கள். 😂

  23. On 22/1/2024 at 22:27, குமாரசாமி said:

    அன்றைய காலங்களில் அரச உத்தியோகத்தர்களும்(கொழும்பு தவிர) ஏதாவது ஒரு வழியில் உடம்பு களைக்க வேலை செய்தவர்கள். சில பலர் தங்கள் சுய தேவைகளுக்காக தோட்டம் கூட செய்தனர்.வயல் வேலைகளும் செய்தனர். நடந்து திரிந்தனர். சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். நோய் நொடிகளும் குறைவாகவே இருந்தது.

    ஆனால் இன்று மரக்கறி விலை ஏறிவிட்டது என புலம்பிக்கொண்டு சகல நோய்களையும் சுமந்து  அவதிப்படுகின்றனர். 😂

    அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.