Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  6,183
 • Joined

 • Days Won

  15

Everything posted by இணையவன்

 1. மனோ அண்ணையின் வீட்டுக்க்கு எப்போது சென்றாலும் மனோ அண்ணி மிகவும் அன்பாக விசாரித்து உபசரிப்பார். பசியோடு சென்றபோதெல்லாம் பரிமாறிய அவரது உணவின் சுவை இன்றும் மனதில் பதிந்துள்ளது. மனோ அண்ணியின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
 2. இணைய வெளியில் 23 வருடங்கள் ஒரு யுகம்.
 3. 2300 வருடங்களுக்கு முன் தமிழ் எழுத்துக்கள் இருந்தனவா ? 2700 வருடங்களுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வுகளிலேயே சைவக் கடவுள்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஊகங்களின் அடிப்படையில் சரித்திரத்தை நிறுவாமல் விஞ்ஞான சரித்திர ஆதாரங்களை முன்வைத்து இங்கு வாழ்ந்தவர்களைப் பற்றிக் கூற வேண்டும். இந்த வசதிகள் எம்மிடம் தற்போது இல்லை. ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போது சிறந்தது.
 4. நிச்சயமாக தமிழர்களின் நல்ல வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேறு கலாச்சாரங்க்ககளைத் தழுவி எமது இனம் வளர்ச்சி அடைவதிலும் தவறில்லை. ஏனென்றால் மாற்றங்களினூடாகவே எதையும் தக்கவைக்க முடியும். ஆனால் எம்மவர்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையை இறுகப் பற்றுவதும் பயனற்ற வேற்றுப் பழக்கவழக்கங்களை எமது கலாச்சாரத்தில் புகுத்துவதும் ஆரோக்கியமானது அல்ல. இன்று நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் கிடைக்காமல் போவதற்கான காரணங்களின் வேரைத் தேடிப் போனால் அது எமது சமூகக் கட்டமைப்பிலேயே முடியும்.
 5. குடும்பப் பெயரை வைத்து ஐபோப்பியர்கள் பல நூற்றாண்டு பின்னோக்கி தமது பரம்பரையைத் தேட முடியும். ஐரோப்பியர்களின் சரித்திரத்தைத் துல்லியமாக எழுத அவர்களின் குடும்பப் பெயர் உதவுகிறது. எனது நண்பன் ஒருவன் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு தேவாலையத்தின் உள் முகட்டில் உள்ள ஓவியத்தைக் காட்டி, அது தனது முப்பாட்டன் வரைந்தது என்று கூறினான்.
 6. இந்த 2 பிரெஞ்சு ஊடகங்களிலும் வெளியான செய்திகளில் அப்படி யாரும் இளையோர்கள் எதிர்வினைக் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் சிலர்தான் இவ்வாறான மோசடிப் பேர்வழிகள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் கருத்துக்களை எமுதி வருகிறார்கள். இதற்குள் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்போனால் உள்ள மரியாதையும் போய்விடும். தலைப்பில் சிங்கள பேரினவாதத்தை இழுத்தும் வெளியான பிரெஞ்சுச் செய்தியின் முழு விபரத்தை உள்ளடக்காமையையும் பார்த்தால் இந்தத் தமிழ்ச் செய்தியை வெளியிட்டவர்கள் மீதுதான் சந்தேகம் வரும்.
 7. நுணாவிற்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 8. இலங்கை அரசு இதைத் துளியும் மதிக்காது என்று தெரிந்தும் எத்தனை வருடமாக இதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் வேறு விடயங்கள் பற்றிப் பேசிவிட்டு வெளியில் இதைத்தான் வலியுறுத்தினோம் என்று சொல்லிவிட்டுப் போவதே வாடிக்கையாகி விட்டது.
 9. பிரான்சில் அதிகமான பெரிய நிறுவனங்களில் SAP தான் பாவிக்கிறார்கள். SAP வல்லுனர்கள் கடவுள் மாதிரி
 10. மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி ஈழப்பிரியன்
 11. BBC News இணையத்தளத்தாலும் இப்படி ஒரு பரபரப்பான தலைப்பை எழுத முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.
 12. அதேதான். 10 நிமிடங்களுக்குள் தூக்க நிலைக்குக் கொண்டு செல்வது கடினம். அதனால்தான் மூளையை ஏமாற்றும் தந்திரம்தான் தியானம். சிறுபிள்ளைக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பதுபோல் எமது மனதுக்குள் நாங்களே அமைதியான ஒரு விம்பத்தை ஏற்படுத்தி அதனுள் சென்று மூளையின் செயல்களை ஒடுக்கி தூக்கத்தில் அமிழ்த்துவது.
 13. இதை நானும் பழகியுள்ளேன். இங்கு இதை sophrologie என்ற தியான முறையில் கற்றுத் தந்தார்கள். முதல் 5 நிமிடம் அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாவற்றையும் புறக்கணிக்கக் கூடியவாறு சிந்தனைகளைத் துறந்து, உடல் தசைகளைத் தொய்ய விட்டு 3 - 4 நிமிடங்களுக்கு ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று திரும்புவது. இதைக் கதிரையில் இருந்தவாறு செய்யலாம். 3 நிமிடங்களுக்கு மூளை தூக்கத்தில் உடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும். விழித்து எழும்போது உடல் முழுவதும் சில மணி நேரம் தூங்கியது போன்ற உளைவு ஏற்படும். புத்துணர்ச்சி ஏற்படும். 10 - 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக் கூடாது. வேலையில் சோர்வு ஏற்படும்போது மதிய நேரத்தில் இதைச் செய்வோம். பின்னர் உற்சாகமாக வேலை செய்யலாம்.
 14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி !
 15. மாவீரர்களுக்கும் போரில் இறந்த மக்களுக்கும் வணக்கங்கள்.
 16. சுமே அக்கா உசாராக எழுதுவதால் இப்போது குணமடைந்து விட்டீர்கள் என்ன நினைக்கிறேன். மகிழ்ச்சி. தொடருங்கள்.
 17. தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின். இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.
 18. நுணாவின் தவறு இல்லை. செய்தி எழுதுபவர்களது தவறு. அவர்களது இணையத்தளத்தில் இது அப்படியே உள்ளது.
 19. இரும்பு இந்தியாவில் அறிமுகமான காலப் பகுதியில் சில தவறுகள் இருந்தாலும் கி.மு.10 ஆம் நூற்றாண்டில் தொகையான போர்க் கருவிகள் செய்யும் அளவுக்கு இரும்பு பாவமையில் இருக்கவில்லை. மகாபாரதம் மட்டுமல்ல சைவ சமய புராணங்கள் அத்தனையும் மனித வரலாற்றோடு தொடர்பு படாத கட்டுக் கதைகளே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.