• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உமை

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,745
 • Joined

 • Last visited

 • Days Won

  2

உமை last won the day on June 21 2011

உமை had the most liked content!

Community Reputation

0 Neutral

About உமை

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  புலம்பெயர் தேசம்
 1. உங்கள் கல்லறைத்தொட்டில்களே காலியாகி விட்டன. ஒத்தி எடுத்தாயிற்று “ஈழத்துத் திருப்பதிகள்” இருந்ததாய் ஒற்றைத்தடயமும் இங்கு இல்லை விளக்கேற்றும் மேடையையுமா? விழுங்கியது பூதம் நிலத்தைப்பிளந்து நீறாக்கி குளத்திலா கொட்டினார்கள் திருவிடங்களையே திருடிப் போயிற்றா காற்று திசைகூடத் தென்படாத வாறு திரை போட்டுவிட்டதா மேகம் அனுங்காமல்…சினுங்காமல் எங்குள்ளீர்கள் எம் செல்வங்களே நிரையாக இருப்பீர்களே நிலாப்போல சிரிப்பீர்களே என்ன ஆனீர்கள்? நேற்றிருந்து உம் நினைவுகளை நெஞ்சுக்குள் பொத்தினோம் காற்றில் எழும் உம் குரல்களைக் காதுக்குள் தேக்கினோம் நினைவின் ஆறுதலுக்காய் இருந்த நீர் அணிந்த ஒற்றைச் செருப்பும் இப்போ எம்மிடம் இல்லை கை தவறி விட்டது கடைசி வழியில் நினைவுப் படங்களையும் நிலம் கீறி விதைத்து விட்டோம். என் செய்வோம் இனி பெற்ற பிள்ளைகளுக்குப் பிதிர்க்கடன் செய்யக்கூட பலனற்ற பாவியராகினோம் ஒற்றைத்திரி ஏற்றி ஒரு நிமிடம் அஞ்சலிக்ககூட காற்றையும் நம்பமுடியாத காலம் பேர் சொல்லி அழவும் திராணிஅற்று பெருமூச்செறிகின்றோம் யார்க்குத்தெரியும் எம் அவஸ்த்தை கவிஞர் சீராளனின் வரியில் இருந்து
 2. ஆம் அது பெரிய மடுவில் ஓர் வலிந்த தாக்குதல்.. உள்ளுக்கு இறங்கும் சண்டை அணிக்கு அடுத்த அணியில் சிட்டு பங்குபற்றி இருந்தார். சண்டக்கு எல்லோரும் தயாரான நேரத்தில் அந்த கும் இருட்டில் .. மெதுவாக இந்த பாடலை அவர் பாடினார்.. சாவினைத்தோழ் மீது தாங்கிய என்ற அந்தப்பாடல்.. அந்த சண்டையில் தான் செத்துவிடுவேன் என்று அவர் முன்னதாகவே சொன்னார் அதனால் தான் என்னவோ இந்த பாடலைப்பாடினார். சண்டை ரீம் நகர்ந்தது. ஒரு மணித்தியாலம் அளவில் காயப்பட்ட போராளிகளைக்கொண்டு வந்தார்கள். அதில் சிட்டுவும் ஒருவர் தலையில் பலத்தகாயம். உயிர் இருந்தது ஆனால் உணர்வு இல்லை. கள முதலுதவி அளிக்கபப்பட்டு பிந்தளத்திற்கு அனுப்ப வாகனத்தை பார்த்திருந்த வேளை எதிரியின் மூன்று நான்கு செல்கள் அந்த பகுதியில் வந்து வெடித்தன. அதில் சிட்டு உட்பட மேலும் மூவர் வீரச்சாவடைந்தனர். சிட்டு 1988 ஆன் ஆண்டு இந்திய இராணுவ காலம் அது.. கணிசமானவர்கள் வெளி நாட்டிற்கும் கொழும்பிற்கும் சென்று கொண்டிருந்தனர். சிட்டுவைப்பொறுத்தவரை ஒரு பொறுப்பும் இல்லை. குடும்பத்தில் பலர் வெளி நாட்டில். அவனையும் வெளினாடு போக கொழும்பிற்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் அப்படியே இயக்கத்திற்கு போய்விட்டார். 1990 இல் காட்டிற்குள் இருந்து வரும்போதே பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் வந்தார். யாழ் மாவட்ட படையணியில் இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார். 1991 இல் யாழ் மாவட்ட கலை பண்பாட்டு கழக பொறுப்பாளராக இருந்தார். 1993 இல் புலிகளின் குரல் பொறுப்பாக சில காலம் இருந்தார். தனது பணிக்கு இயக்கத்திடம் காசோ அல்லது வாகனமோ கேட்கமாட்டார். வீட்டில் போய் ஆக்கினை கொடுத்து எல்லாம் வாங்குவார். ஏன் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் கூட வீட்டுக்காரரிடம் தான் வாங்கினார். . 1993 இல் கைதடியில் விபத்துக்குள்ளானார். அது ஒரு முஸ்பாத்தி... இவரிம் மோட்டார் சைக்கிளுக்கு லைட் பிரச்சினை ஒரு குறிப்பில் ஓடிக்கொண்டு இருந்தார். உழவு இயந்திரம் ஒன்று ஒற்றை லைட்டுடப் வந்து கொண்டு இருந்தது, இவர் வேகமாக சென்று கொண்டிருந்தார், மோட்டார் சைக்கிளாக்கும் என்று சாதுவாக வெட்டி கொண்டு சென்று பெட்டியில் மோதினார். . நல்ல பாடகன், கவிஞன், முஸ்பாத்திக்காரன் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். . தன் மனதளவில் இரு சிறிய காதலும் இருந்தது. ஆனால் அதுபற்றி தெரியப்படுத்தவில்லை என்பதால் சிலரால் நச்சரிக்கப்பட்டார். அதனால் உண்மையில் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தானாகவே சண்டைக்கு போகப்போறேன் என்று கேட்டுச்சென்றார். விடாப்பிடியாக நின்றதனால் ஒரு ஆறுமாதம் போய்விட்டு வா என்று கூறி வட்டக்கச்சி பண்ணையில் வைத்து சண்டைக்கு நீற்பண்ணி அனுப்பப்பட்டார். சிட்டு வீட்டில் கடைக்குட்டி. சரியான செல்லம் , சிட்டுவின் அப்பா கோவில் பூசகர் ...அப்பாவிற்கும் மகனிற்கும் நடக்கும் பகிடியும் , சண்டைகளும் தாங்க முடியாது அப்படி ஒரு குளப்படி, குறும்புக்காரன். படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவருக்கும் குவாட்டஸ்ஸில் இருக்கும் போது செய்கின்ற அனியாயம் கொஞ்சமல்ல. எல்லாமே இப்ப மாதிரி இருக்கு... ( சக போராளியிடம் இருந்து சிட்டு பற்றி கேட்ட கதை... நன்றி) உமை
 3. Dear, Akootha,

  My friend is going to do email campaign for refugees in Alesia ship. He wrote a sample letter as follows, can you correct or rewrite this letter and send to me.

  Rt Hon John Key

  Parliament Office

  Private Bag 18888

  Parliament Buildings

  Wellington 6160

  Dear Prime Minster

  I am writing to you to express my co...

 4. கடன் உதவித்திட்டத்தில் எனது அனுபவங்களை வைத்து கூறவேண்டுமானால் எம் மக்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் வீதம் மிக குறைவு கடந்த 30 வருட ஆய்வு. . இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மட்டுமே ( இலங்கை மற்றும் வடக்கு கிழக்கில்) கடன் மீழ் அறவீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது. . அதே வேளை தற்போதைய சூழலில் எல்லோம் பெருமளவு தொகையினை உதவியாக நீண்ட நாளைக்கு கொடுக்கவும் மாட்டார்கள். அடுத்தது சுய முயற்சிக்கு கடன் கொடுத்தால்தான் பொறுப்புணர்வு வரும் இல்லாவிட்டால் செலவழித்து விடுவார்கள். . கடனை மீழ் அறவீடு செய்வதற்கு சரியான பொறிமுறை இருக்க வேண்டும். உணர்வு ரீதியான நம்பிக்கை அறவீட்டிற்கு உதவாது. . சுழற்சி முறை, கூட்டு நம்பிக்கை பொறுப்பு பொறிமுறை எமது பிரதேசங்களுக்கு பொருத்தமானவையாக இருக்கும். . இதனைத்தான் இறுதியாக சர்வதேச ஸ்தாபனங்கள், பொருண்மியம், புனர்வாழ்வு ஆகியன செய்து வந்தன. இதில் 60-70 விழுக்காடு மீழ் அறவீடு பதிவாகியது.
 5. நேற்றையதற்க்காக இன்றயதை இழக்காதே, இன்றைய நெருக்கடிக்காக நாளையதை ஒத்திப்போடாதே.

  1. உமை

   உமை

   எல்லாத் துன்பங்களௌம் தீர மூன்று வழிகள்; 1. காலம், 2. அமைதி, 3 மாற்று நடவடிக்கை. சூழலிற்கேற்ப மூன்றினையும் பயன்படுத்து

 6. வெள்ளிக்கிழமை, மே 13, 2011 அபிராம் என்கின்ற எட்டு வயது சிறுவன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தான். நெதர்லாந்தில் தன் தாயுடன் அகதியாக வந்து சேர்ந்தான். ஆனால் அவனுக்கும் தாயாருக்கும் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது. என்றாலும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அபிராமும் பாடசாலை சென்று கொண்டிருந்தான். அம்மாவை திருப்பி அனுப்பி விடுவார்களா? அப்படி அனுப்பினால் பான் என்ன செய்வது? எனக்கு சாவு வரும் போது அம்மாவின் மடியில் சாகவேண்டும் என தன் பாடசாலையில் ஆசிரியர்களிடம் கூறிக்கொள்வான். அபிராமின் தாய்க்கு அகதிகள் நீதிமன்றம் வதிவிட உரிமையினை வழங்கியுள்ளது. அபிராம் தன் பாடசாலையில் ஆசிரியர்களுடன் துள்ளிக்குதித்து தன் தாய்க்கு வதிவிட உரிமை கிடைத்ததனை கொண்டாடினான். தன் ஆசை நிறைவேறும் எனவும் கூறினான். ஆம் தற்போது அவன் உயிர் பிரிந்துவிட்டது தன் தாயின் மடியில். ( மேற்கண்டவாறு கூறியவர் அபிராமின் பாடசாலை ஆசிரியர் ) http://www.eelanatham.net/story/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
 7. இந்த தளத்தில் நேரடி ஒளிபரப்பை காணலாம் http://tamilvoice.tv/ ஆறாம் நாளில் ஜேர்மன் நாட்டில்
 8. கனடாவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது. இத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார். கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது. பசுமைக் கட்சி 1 ஆசனத்தையும் தக்க வைத்துள்ளன. ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் 17200 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியை மேற்படி தொகுதியில் கணிசமாக அதிகரிக்க வைத்து இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 4900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தது. இதர பல தொகுதிகளிலும் புதிய ஜனநாயகக் கட்சி, கன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி ஆகியன மிக நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், நூற்றுக்கணக்கான வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன. இதேவேளை கன்சவேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி 11,039 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவாகியுள்ளது. இதன் பிரகாரம் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவை. கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைப்பது அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும் கடுமையான சட்டங்களை கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் கருத்தாகவுள்ளது. லிபரல் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவரை ராதிகா போட்டியிட்ட தொகுதியில் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் வாக்குப் பிரிந்து கன்சவேட்டிவ் கட்சியே இத் தொகுதியைக் கைப்பற்றி தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாவதை இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களின் முயற்சி இவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் தவிர்த்தது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை புதிய ஜனநாயகக் கட்சியே பெருமளவிலான வாக்குகளைக் கவர்ந்துள்ளது. 70 ஆசனங்களை மேலதிகமாக பாராளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. அதுபோன்றே பசுமைக் கட்சியும் முதன்முறையாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. http://eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
 9. தப்புத்தன் இப்படி போட்டது ஏனென்றால் கலைஞன் அவர்களே யாழ் இனையம் விற்பனைக்கு விலை யூரோ 99999.00 என்றுதான் போடப்பட்டு இருந்தது ஒரு சதத்தினை கூட போட்டதற்கு மன்னிக்கவும். பொறுப்பானவரின் ஸ்கைப் ஐடி இல் display mesaage இல் மேற்கண்டவாறு உள்ளதாக நேற்று ஒரு நண்பர் கூறினார் அதைத்தான் இங்கு இட்டுப்பார்த்தேன் அவ்வளவுதான். உங்கள் கருத்தைப்பார்த்தால் என்னை கடிப்பது போல உள்ளதே
 10. அகூதா என்ன தேவைக்கு என தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுபற்றி தெரியும். நான் அங்கு சென்றிருக்கின்றேன். மட்டுமல்ல இதில் பங்கு தந்தையாக இருந்தவர் அருட்தந்தை ஞானராஜ் இப்போ அவுஸ்ரேலியாவில் உள்ளார். அருட்தந்தை ரெஜினோல்ட் அவர்களுக்கும் தெரியும் அவர் நோர்வே நாட்டில் உள்ளார். அவர்களினென் தொடர்பில் உள்ளார்கள்

 11. யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
 12. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவிலும் இருக்க வேண்டும் என்பதே எனது அவாவும்.. இவற்றை சீரழிக்கும் வகையில், குளப்பும் வகையில் அல்லது சீரளிப்பவர், குளப்ப வாதிகளுக்கு யாழ் ஒரு களமாக அமையக்கூடாது என்பதும் எனது வேண்டுதல். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் நடக்கும் களுத்தறுப்புக்களையும் காட்டிக்கொடுப்புக்களையும் யாழ் அனுமதிக்க கூடாது.
 13. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 பேர் 103 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்களும் பொது அமைப்புகளும் செய்து வருகின்றன. ஈழ நாதம்
 14. சிறையில் இருந்து வந்த பின்னர் எரிமலை வெடித்தமாதிரி அண்ணர் இருக்கின்றார். தேர்தலில் போட்டியிடும் போதும் தேர்தல் முடிந்த பின்னரும் தான் தெரியும் ..... நம்பி நம்பியே கொள்ளைபோனவர் தமிழர்கள்..