Jump to content

உமை

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2745
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by உமை

  1. உங்கள் கல்லறைத்தொட்டில்களே காலியாகி விட்டன. ஒத்தி எடுத்தாயிற்று “ஈழத்துத் திருப்பதிகள்” இருந்ததாய் ஒற்றைத்தடயமும் இங்கு இல்லை விளக்கேற்றும் மேடையையுமா? விழுங்கியது பூதம் நிலத்தைப்பிளந்து நீறாக்கி குளத்திலா கொட்டினார்கள் திருவிடங்களையே திருடிப் போயிற்றா காற்று திசைகூடத் தென்படாத வாறு திரை போட்டுவிட்டதா மேகம் அனுங்காமல்…சினுங்காமல் எங்குள்ளீர்கள் எம் செல்வங்களே நிரையாக இருப்பீர்களே நிலாப்போல சிரிப்பீர்களே என்ன ஆனீர்கள்? நேற்றிருந்து உம் நினைவுகளை நெஞ்சுக்குள் பொத்தினோம் காற்றில் எழும் உம் குரல்களைக் காதுக்குள் தேக்கினோம் நினைவின் ஆறுதலுக்காய் இருந்த நீர் அணிந்த ஒற்றைச் செருப்பும் இப்போ எம்மிடம் இல்லை கை தவறி விட்டது கடைசி வழியில் நினைவுப் படங்களையும் நிலம் கீறி விதைத்து விட்டோம். என் செய்வோம் இனி பெற்ற பிள்ளைகளுக்குப் பிதிர்க்கடன் செய்யக்கூட பலனற்ற பாவியராகினோம் ஒற்றைத்திரி ஏற்றி ஒரு நிமிடம் அஞ்சலிக்ககூட காற்றையும் நம்பமுடியாத காலம் பேர் சொல்லி அழவும் திராணிஅற்று பெருமூச்செறிகின்றோம் யார்க்குத்தெரியும் எம் அவஸ்த்தை கவிஞர் சீராளனின் வரியில் இருந்து
  2. ஆம் அது பெரிய மடுவில் ஓர் வலிந்த தாக்குதல்.. உள்ளுக்கு இறங்கும் சண்டை அணிக்கு அடுத்த அணியில் சிட்டு பங்குபற்றி இருந்தார். சண்டக்கு எல்லோரும் தயாரான நேரத்தில் அந்த கும் இருட்டில் .. மெதுவாக இந்த பாடலை அவர் பாடினார்.. சாவினைத்தோழ் மீது தாங்கிய என்ற அந்தப்பாடல்.. அந்த சண்டையில் தான் செத்துவிடுவேன் என்று அவர் முன்னதாகவே சொன்னார் அதனால் தான் என்னவோ இந்த பாடலைப்பாடினார். சண்டை ரீம் நகர்ந்தது. ஒரு மணித்தியாலம் அளவில் காயப்பட்ட போராளிகளைக்கொண்டு வந்தார்கள். அதில் சிட்டுவும் ஒருவர் தலையில் பலத்தகாயம். உயிர் இருந்தது ஆனால் உணர்வு இல்லை. கள முதலுதவி அளிக்கபப்பட்டு பிந்தளத்திற்கு அனுப்ப வாகனத்தை பார்த்திருந்த வேளை எதிரியின் மூன்று நான்கு செல்கள் அந்த பகுதியில் வந்து வெடித்தன. அதில் சிட்டு உட்பட மேலும் மூவர் வீரச்சாவடைந்தனர். சிட்டு 1988 ஆன் ஆண்டு இந்திய இராணுவ காலம் அது.. கணிசமானவர்கள் வெளி நாட்டிற்கும் கொழும்பிற்கும் சென்று கொண்டிருந்தனர். சிட்டுவைப்பொறுத்தவரை ஒரு பொறுப்பும் இல்லை. குடும்பத்தில் பலர் வெளி நாட்டில். அவனையும் வெளினாடு போக கொழும்பிற்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் அப்படியே இயக்கத்திற்கு போய்விட்டார். 1990 இல் காட்டிற்குள் இருந்து வரும்போதே பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் வந்தார். யாழ் மாவட்ட படையணியில் இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார். 1991 இல் யாழ் மாவட்ட கலை பண்பாட்டு கழக பொறுப்பாளராக இருந்தார். 1993 இல் புலிகளின் குரல் பொறுப்பாக சில காலம் இருந்தார். தனது பணிக்கு இயக்கத்திடம் காசோ அல்லது வாகனமோ கேட்கமாட்டார். வீட்டில் போய் ஆக்கினை கொடுத்து எல்லாம் வாங்குவார். ஏன் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் கூட வீட்டுக்காரரிடம் தான் வாங்கினார். . 1993 இல் கைதடியில் விபத்துக்குள்ளானார். அது ஒரு முஸ்பாத்தி... இவரிம் மோட்டார் சைக்கிளுக்கு லைட் பிரச்சினை ஒரு குறிப்பில் ஓடிக்கொண்டு இருந்தார். உழவு இயந்திரம் ஒன்று ஒற்றை லைட்டுடப் வந்து கொண்டு இருந்தது, இவர் வேகமாக சென்று கொண்டிருந்தார், மோட்டார் சைக்கிளாக்கும் என்று சாதுவாக வெட்டி கொண்டு சென்று பெட்டியில் மோதினார். . நல்ல பாடகன், கவிஞன், முஸ்பாத்திக்காரன் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். . தன் மனதளவில் இரு சிறிய காதலும் இருந்தது. ஆனால் அதுபற்றி தெரியப்படுத்தவில்லை என்பதால் சிலரால் நச்சரிக்கப்பட்டார். அதனால் உண்மையில் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தானாகவே சண்டைக்கு போகப்போறேன் என்று கேட்டுச்சென்றார். விடாப்பிடியாக நின்றதனால் ஒரு ஆறுமாதம் போய்விட்டு வா என்று கூறி வட்டக்கச்சி பண்ணையில் வைத்து சண்டைக்கு நீற்பண்ணி அனுப்பப்பட்டார். சிட்டு வீட்டில் கடைக்குட்டி. சரியான செல்லம் , சிட்டுவின் அப்பா கோவில் பூசகர் ...அப்பாவிற்கும் மகனிற்கும் நடக்கும் பகிடியும் , சண்டைகளும் தாங்க முடியாது அப்படி ஒரு குளப்படி, குறும்புக்காரன். படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவருக்கும் குவாட்டஸ்ஸில் இருக்கும் போது செய்கின்ற அனியாயம் கொஞ்சமல்ல. எல்லாமே இப்ப மாதிரி இருக்கு... ( சக போராளியிடம் இருந்து சிட்டு பற்றி கேட்ட கதை... நன்றி) உமை
  3. Dear, Akootha,

    My friend is going to do email campaign for refugees in Alesia ship. He wrote a sample letter as follows, can you correct or rewrite this letter and send to me.

    Rt Hon John Key

    Parliament Office

    Private Bag 18888

    Parliament Buildings

    Wellington 6160

    Dear Prime Minster

    I am writing to you to express my co...

  4. நேற்றையதற்க்காக இன்றயதை இழக்காதே, இன்றைய நெருக்கடிக்காக நாளையதை ஒத்திப்போடாதே.

    1. உமை

      உமை

      எல்லாத் துன்பங்களௌம் தீர மூன்று வழிகள்; 1. காலம், 2. அமைதி, 3 மாற்று நடவடிக்கை. சூழலிற்கேற்ப மூன்றினையும் பயன்படுத்து

  5. அகூதா என்ன தேவைக்கு என தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுபற்றி தெரியும். நான் அங்கு சென்றிருக்கின்றேன். மட்டுமல்ல இதில் பங்கு தந்தையாக இருந்தவர் அருட்தந்தை ஞானராஜ் இப்போ அவுஸ்ரேலியாவில் உள்ளார். அருட்தந்தை ரெஜினோல்ட் அவர்களுக்கும் தெரியும் அவர் நோர்வே நாட்டில் உள்ளார். அவர்களினென் தொடர்பில் உள்ளார்கள்

  6. பிரிட்டிஸ் அரசின் இராஜதந்திரமும் - பிரிட்டிஸ் தமிழர்களும் என்ற கட்டுரை ஈழ நாதம் இணையத்தில் வந்த ஓர் உப ஆசிரியர் தலையங்கம். நீங்கள் மேனகத்தில் போடும்போது ஓர் நன்றி போடுவது நல்லது. கூடவே நேற்று யாழிலும் இணைக்கப்பட்டது. செய்திகள் கட்டுரைகள் கொப்பி போடுவதில் தவறில்லை ஆனால் ஆசிரியர் பத்திக்கு நன்றி போடுவது அல்லது மேற்கோள் காட்டுவது நல்லது அல்லவா விடியல். நன்றி உமை

  7. பிஞ்சுமனம் என்ற தாயகப்படத்தில் வரும் 'பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கிறது' பாடலை தர முடியுமா?. Audio பாடல் இருந்தாலும் இனைத்துவிடவும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.