
aaravally
கருத்துக்கள உறுப்பினர்கள்-
Content Count
41 -
Joined
-
Last visited
Community Reputation
0 NeutralAbout aaravally
-
Rank
புதிய உறுப்பினர்
-
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா இணைந்து நடித்த வானம்பாடி திரைப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதியிருந்தார். பாடலுக்கு இசை அமைத்திருந்தவர் கே.வி. மகாதேவன். பாடியவர்கள் டி.எம்.எஸ். சுசீலா, குழுவினர். ஒரு கல்லூரியில் நடைபெறும் விழா ஒன்றில் ஆண்களும் பெண்களும் ஏட்டிக்குப் போட்டியாகப் பாடுவதாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. கண்ணதாசன் ஒருவித தயக்கமும் இன்றி பாடலின் இறுதியில் காளமேகத்தின் வெண்பாவை இணைத்திருக்கிறார். அதற்கு விளக்கமும் தந்திருக்கிறார். டி.எம்.எஸ்.- கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன் த
-
காளமேகமும் கண்ணதாசனும் சந்தித்துக் கொண்டால் வானம்பாடியில் ஒரு பாட்டு அதற்குப் பதில் சொல்லும்
-
மதனராசா, கண்ணதாசனின் பல பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டன என்பது பரவலான கதை. மகாகவி காளிதாஸ் படத்தில் வரும், யார் தருவார் இந்த அரியாசனம்? புவி அரசோடு ஒரு சரியாசனம் என்ற பாடலில் கவி காளமேகம் நினைவுக்கு வருகிறார். அவரது வெண்பாவில் வரும் வரிகள் கவிஞருக்கு அன்று அடி எடுத்துக் கொடுத்திருக்கிறது. காளமேகத்தின் வெண்பா வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில ரசரோ டென்னைச் சரியா சனத்து வைத்த தாய்
-
மதனராசா, 1000 பொற்காசுகள் பேச்சிலும் எழுத்திலும் மட்டும் இல்லைத்தானே? பொருளைத் தந்திருக்கிறேன். பிழைகள் இருந்தால் பார்த்துக் குறைச்சுக் கொள்ளலாம். தோழியின் மூலமாக அனுப்பும் தூது நன்மை பயக்காது. கிளியோ தூதுப் பணியில் தூதை திறம்பட ஓதாது. தோழியின் தூதோ நாளைக் கடத்திக் கொண்டே போகும். தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் தீதாகும். ஆகவே பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என் மேல் படராது எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக.
-
ஈழத்திருமகன் நல்லதொரு பதிவு. காளமேகத்தின் கவிதைகள்; அதனூடான சிலேடைகள் பெயர் போனவை. அவரவர்கள் அறிந்ததைத் தந்தால் இப் பகுதி மேலும் சிறப்புறும். எனது பங்குக்கு ஒரு பகுதி நாகபட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்கு உணவு அருந்துவதற்காக காளமேகம் ஒரு தடைவ சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகம் அப்பொழுது உதிர்த்த கவிதை, கத்துக்கடல் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும்போதில் அரிசி வரும் - குத்தி உலையில் இட ஊர் அடங
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
aaravally replied to மோகன்'s topic in யாழ் அரிச்சுவடி
தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது? அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா? சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா? தலையைச் சுத்துது சாமி -
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
aaravally replied to மோகன்'s topic in யாழ் அரிச்சுவடி
களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது? இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா? இப்ப நான் என்ன செய்ய?